Skip to content
Post Views: 2,015
“ஆன்டி ஹீரோ ஆகுற மூஞ்சிய பாரு?
உங்கள யாரு என்னை கேக்காம இப்படி எல்லாம் பேச சொன்னது?
ஒரு வேளை என் அக்கா ரிவர்ஸ் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க?
கொஞ்சம் கூட சொல் பேச்சு கேக்காம உங்க இஷ்டத்துக்கு இப்படி தான் பண்றதா?
Advertisement
அப்புறம் இந்த லக்கிக்கு என்ன மரியாதை?” என்று கன்னா பின்னாவென்று திட்டிக் கொண்டே ரேவந்த்தின் தலை முடியைக் கொத்தாக பிடித்து ஆட்டினாள் லக்கி!
“ஹேய்.. வலிக்குதுடி விடு..
எப்பா .. ஆண்கள் சமூகமே..
Advertisement
நீங்க யாராச்சும் லவ் கிவ் பண்றதா இருந்தா இப்படி ரவுடி மச்சினிச்சி இல்லாத வீடா பார்த்து லவ் பண்ணுங்க.
Advertisement
ஏய்.. லக்கி.. நான் ஒரு பெரிய கம்பெனிக்கு ஓனர்.
என்கிட்ட எத்தனை ஆயிரம் பேர் வேலை செய்றாங்க தெரியுமா?
சொசைட்டில எனக்கு எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா?
Advertisement
போயும் போயும் ஒரு பொடிசுகிட்ட இப்படி அடி வாங்கனுமா நான்?
கொஞ்சம் கன்சிடர் பண்ணுடி செல்லம்!” என்று லக்கியின் செல்ல அடிகளை ரசித்தபடியே வாங்கிக் கொண்டு பொய்யாக புலம்பி, அவளிடம் கெஞ்சினான் ரேவந்த்!
“ம்ம். சொல்ல மாட்டீங்க..
அன்னிக்கு உங்க லவுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டப்போ, என்கிட்ட ஐடியா சொல்ல சொல்லி கேட்டப்போ எல்லாம் இந்த ஞானோதயம் வரலையா உங்களுக்கு?
நாட்டுக்கே ராஜான்னாலும் வீட்டுக்கு டம்மி தான்!
டாடிஸ் லிட்டில் பிரின்ஸ் மாதிரி நான் அத்தானின் குட்டி பிரின்சஸ்!
நான் சொன்னா சொன்னத செய்ய வேண்டியது தானே!”
“இப்ப என்னடி.. நீ சொன்ன மாதிரி தானே நானும் உன்னை ரேஷ்மா ஆபிஸ்க்கு கூட்டிட்டு போனேன்.
நீ சொன்ன மாதிரியே தானே எல்லாமும் பண்ணினேன்!
என்ன.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டு கொஞ்சம் சேர்த்து போட்டுட்டேன்! அதுக்குன்னு இப்படியா?”
“அந்த எக்ஸ்ட்ரா பிட்டு தான் தப்பு! எங்கக்காவே ஒரு சாமியாரிணி!
அவளை அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க முடியாதுன்னு தானே நான் என்னை வச்சு ப்ளாக் மெயில் பண்ண சொன்னேன்!”
“அதை தானே நானும் பண்ணினேன்!”
“நான் சொன்னேனா? அவளை உங்க கிட்ட ப்ரூப் கேக்க சொல்லி?”
“அது.. காதல்.. அந்த நேரம் அவளை ஹக் பண்ணி கிஸ் பண்ணனும்னு தோணுச்சு!
அதான் நீ சொல்றத நான் நம்ப மாட்டேன். ப்ரூப் பண்ணுன்னு சொன்னேன்.
ஆனா சும்மா சொல்ல கூடாது உங்கக்கா நல்லா ப்ரூவ் பண்ணினா!” சொல்லி சிரித்தான் ரேவந்த்!
“உங்களை தவிர வேறு யாராச்சும் அவ கிட்ட இப்படி நடந்துகிட்டா இந்நேரம் அவன் கதை கந்தலாகி இருக்கும்!
உங்க கிட்ட மட்டும் தான் அக்கா இப்படி பம்முறா! அத நீங்க அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கிட்டீங்க இல்ல!
அதுவும்.. அடச்சே.. என் கிட்ட பேசுற பேச்சா இது? கொஞ்சமாச்சும் உங்களுக்கு வெக்கம் இருக்கா உங்களுக்கு?”
“நான் என்னிக்கு உன்கிட்ட என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டேனோ அன்னிக்கே நோ வெக்கம். நோ சூடு.. நோ சொரணை!
சரி.. ஆனது ஆகிடுச்சு. இப்ப என்ன பண்ணனும் அத சொல்லு!”
“ம்ம். ஓகே. நடந்தத ஒண்ணும் பண்ண முடியாது! இனியாச்சும் நான் சொல்றத கரெக்டா பண்ணனும்!
முதல்ல எங்க அக்காவோட அப்பியரன்ஸ மாத்தணும்!
அந்த ஆண்டி டைப் மொரட்டு காட்டன் சாரியெல்லாம் தூக்கி போட்டுட்டு, அவ வயசு பொண்ணுங்க போட்டுக்கிற மாதிரி டிரஸ் பண்ண வைக்கணும்!
அப்புறம் முதல்ல அந்த கண்ணாடிய தூக்கிப் போட வைக்கணும்!
ஆனா அதெல்லாம் நீங்க சொன்னவுடனே செஞ்சுட மாட்டா!
இந்நேரம் கொஞ்சம் உஷாரானாலும் கூட ஆகி இருப்பா!
ஆனா அவளை பயத்தோடே வச்சுக்க வேண்டியது என்னோட வேலை!
உங்க கிட்ட வர்ற அக்கா கிட்ட பேசி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது உங்க வேலை!
டீல் ஓகேயா?
அப்புறம் எதாச்சும் எக்ஸ்ட்ரா பிட்டு போடுறதா இருந்தா என் கிட்ட சொல்லாம பண்ணக் கூடாது ஓகேயா!”
“ம்ம். ஓகே சொல்லுங்க குருவே! நம்மோட அடுத்த ஆபரேசன் என்ன?”
“அதான் சொன்னேனே அவள் டிரெஸ்ஸிங் ஸ்டைலை மாத்தணும்!
அதுக்கு இப்ப நான் சொல்ற ஸ்ட்ரேட்டர்ஜிய ஃபாலோ பண்ணனும்!
இது ஏற்கனவே நான் செஞ்சு சக்சஸ் ஆனா ஒரு ஃபார்முலா!
இப்ப அவ கிட்ட நமக்கு ஒரு காரியம் ஆகணும்னா அந்த ஒரு காரியத்த மட்டும் எடுத்துட்டு போனா, உடனே நோ சொல்லி ரிஜெக்ட் பண்ணிடுவா!
அதுக்கு நாம என்ன பண்ணனும்னா, அவளால பண்ணவே முடியாத, ஒரு நாளும் அவ ஒத்துக்கவே ஒத்துக்க மாட்டான்ற மாதிரி ஒரு விஷயத்தை அவ கிட்ட ஃபர்ஸ்ட் கொண்டு போகனும்.
அப்புறம் நாம கேக்க நினச்ச விசயத்த ரெண்டாவதா கொண்டு போகணும்!
நாம கெஸ் பண்ணின மாதிரியே அவ அந்த ஃபர்ஸ்ட் விசயத்துக்கு ஒத்துக்க மாட்டா..
ஆனா நாமளும் உடனே விட்டுட கூடாது. அதையே கேட்டு ரொம்ப அடம் பண்ணனும்!
அப்புறமா.. கொஞ்ச நேரம் கழிச்சு, அவ கிட்ட காம்ப்ரமைஸ் ஆகுற மாதிரி,
சரி.. நீ ஒண்ணும் இதுக்கு ஓகே சொல்ல வேணாம்!
ஆனா இதையாச்சும் செய்யேன் என்று நாம ஒரிஜினலா கேக்க வேண்டிய மேட்டரை ஓபன் பண்ணனும்!
அவளும் சரி போனா போகுதுன்னு ஒத்துக்குவா.
நான் இப்படி தான் ஸ்போர்ட்ஸ் அகேடமியில பார்ட் டைமா வேலை பார்க்க பெர்மிசன் வாங்கினேன்!
முதல்ல, நான் டோர்னமென்ட்டுக்கு வெளியூர் போகணும், அதர் ஸ்டேட் எல்லாம் போய் விளையாடனும்னு பர்மிசன் கேட்டு அடம் பிடிச்சேன் ஒரு வாரத்துக்கு!
அவ எப்படியும் சம்மதிக்க மாட்டான்னு தெரிஞ்சே!
அப்புறம் எனக்கும் கூட என் அக்காவ டென்சன்ல வச்சுக்கிட்டு அப்படி எல்லாம் போய் விளையாட ஆசையும் இல்ல தான்!
ஆனாலும் அடம் பிடிச்சேன்! அப்ப தானே ஸ்போர்ட்ஸ் அகேடமியில வேலை பார்க்க பர்மிசன் கிடைக்கும்!
ஸோ.. நீங்களும் இப்ப பண்றீங்க.. அக்கா ஒரு காலத்திலும் சம்மதிக்க மாட்டாத, ரொம்ப அல்ட்ரா மாடர்ன் வெஸ்டர்ன் ட்ரெஸ் கேட்லாகை எல்லாம் கொண்டு வந்து காட்டி, அவளை போட்டே ஆகணும்னு சொல்லுங்க.
கண்டிப்பா அவ மாட்டேன்னு தான் சொல்லுவா.
நீங்களும் கொஞ்ச நேரம் பிடிவாதம் பிடிச்சுட்டு, அப்புறமா நாம ப்ளான் பண்ணி வாங்கி வச்சுருக்க டிரெஸ்ஸை எல்லாம் போட வைங்க!” என்று ப்ளான் போட்டு கொடுத்தாள் அந்த குட்டி குரு ரேவந்திற்கு!
அதை அப்படியே அவன் நடத்திக் காட்டி, மதுராவின் உடைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து விட்டான் முதலில்!
“சூப்பர்! அடுத்து நான் நம்ம அடுத்த ஆபரேசன் என்னனு டெக்ஸ்ட் பண்ணுறேன்” என்று சொல்லி சென்றாள் லக்கி!
—-
“சூப்பரா இருக்குக்கா இந்த குர்தி உனக்கு!” என்று சொல்லியவாறு கட்டிலில் இருந்து எழுந்தாள் லக்கி!
அன்று சனிக் கிழமை அவளுக்கு கல்லூரி விடுமுறை!
எனவே மெதுவாக தான் எழுந்தாள்.
மதுரா வழக்கம் போல எழுந்து சமையல் உள்ளிட்ட வேலைகளை முடித்து விட்டு ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருந்தாள்!
“ம்ம்..” என்று சொல்லிவாறே தலையை வாரி ஒரு கிளிப் போட்டுக் கொண்டவள்,
“லீவுன்னு தூங்கிட்டே இருக்காதே. வாஷிங் மெசின்ல துணி போட்டிருக்கேன்.
அது துவைச்சு முடிச்சவுடனே எடுத்து காயப் போட்டுடு.
பால் காய்ச்சி வச்சுருக்கேன்.
குடிச்சுட்டு மீதிய பிரிட்ஜில் வச்சுடு.
பாத்திரம் நான் வந்து கழுவிக்கிறேன். செமெஸ்டர் நெருங்குது. நீ ஒழுங்கா படிக்க ஆரம்பி. வெளியே சுத்தாதே!”
“அக்கா.. அதெல்லாம் நான் படிச்சுக்குவேன் அக்கா. ரேவ் டுயுட் கூட இந்த வாரம் மட்டும் அவுட்டிங் போக பர்மிசன் கொடேன்.
அவர் முன்னாடியே ஒரு நாள் ஷாப்பிங் மால் கூட்டிட்டு போறேன்னு சொன்னாருக்கா! எனக்கு தான் போக முடியல!
இந்த வாரம் விட்டா அப்புறம் எனக்கு டைம் இருக்காதுக்கா!
சும்மா சுத்தி பார்த்துட்டு காபி மட்டும் தான் குடிச்சுட்டி செல்பி எடுத்துட்டு வந்துடுவேன்!
என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வீக் என்ட் இப்படி எங்கியாச்சும் போய் செல்பி எடுத்து ரீல்ஸ் போட்டு பீத்திக்கிறாங்க!
எனக்கும் அப்படி ஆசை இருக்காதாக்கா!
நீயும் வர மாட்டே! ஆபிசைக் கட்டிக்கிட்டு அழுவ!
என்னையாச்சும் இப்படி கூட்டிட்டு போறவங்க கூட அனுப்பேன்க்கா ப்ளீஸ்..” மதுராவின் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள் லக்கி!
“நீ தான் பார்த்தே இல்லை! எவ்வளவு நைஸ் பர்சன் ரேவ் டுயூட்!
உங்க ரேஷ்மா மேம்மோட அண்ணன் தானே அவரு! அவர் ஒண்ணும் வெளியாள் இல்லை! அனுப்பேன்க்கா ப்ளீஸ்.
இந்த ஒரு தரம் மட்டும் அலவ் பண்ணேன்!”
“உன்னைக் கூட்டிட்டு போறதுக்கு எல்லாம் அவருக்கு டைம் இருக்காது லக்கிமா.. இப்படி வீணா அவர டிஸ்டர்ப் பண்ணக் கூடாது!
அவரெல்லாம் பிஸியான பிசினெஸ் மேன்! அவர் ரேஷ்மா மேமோட பேசவே நேரம் இல்லாத ஆள்.!
இப்ப அவங்க கம்பெனியோட சேர்த்து ரேஷ்மா மேம் கம்பெனியையும் பார்த்துக்கிற வேலை வேற இருக்கு அவருக்கு! மேம் வர வர்ற வரைக்கும்!
அதனால அவரை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது!
போய் படிக்கிற வேலைய மட்டும் பாரு. நாம இன்னொரு நாள் போகலாம் அங்க” என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு ஆபிஸ் கிளம்பி விட்டாள் மதுரா!
அவள் கிளம்பியதும்,
“அக்கா.. லைட் ப்ளூ குர்தி போட்டுட்டு வர்றா. நீங்களும் அதே கலர் சர்ட் போட்டுட்டு போங்க” என்று ரேவந்திற்கு டெக்ஸ்ட் பண்ணி விட்டு மீண்டும் படுத்துக் கொண்டு விட்டாள் லக்கி!
—
“ஹாய்.. சேம் பின்ச்” என்று மதுராவின் கன்னம் கிள்ளினான் ரேவந்த்!
அவர்கள் இருவரும் ரேஷ்மாவின் அறையில் இருந்து வேலைப் பார்த்தார்கள்!
ரேவந்திற்கு ரேஷ்மாவின் கம்பெனி வேலை சம்மந்தமாக அடிக்கடி “டவுட்கள்” வந்ததால், அவன் மதுராவை அவன் அறையிலேயே இருக்க வைத்துக் கொண்டான்!
“ஆமா உங்க கிட்ட முன்னாடியே கேக்கணும்னு நினைச்சேன். நீங்க ரொம்ப பிஸி, ரேஷ்மா மேம் கூட பேச நேரமில்லாம அலைஞ்ச ஆள் இல்ல நீங்க?
இப்ப மட்டும் எப்படி உங்களுக்கு இங்கேயே இருக்க நேரம் இருக்கு!
திருப்பூர்ல வேலை இல்லையா?” என்றாள் முதன் முறையாக அவனிடம் வாயைத் திறந்து!
அடிப்பாவி.. என்னை ஊருக்கு பேக் பண்ண ப்ளான் பண்றியா? அது நடக்காது டார்லிங்! என்று மனதுள் நினைத்தவன்,
“அங்க நவீன்னு ஒரு மேனேஜர் இருக்கான். இங்க ரேஷ்மாவுக்கு நீ எப்படியோ அங்க அவன் எனக்கு!
ரொம்ப லாயலா இருக்கும் பையன்!
அதுவில்லாம நான் இங்க இருந்தே மானிட்டர் பண்ணிட்டு தான் இருக்கேன்!
நான் எங்க இருந்தாலும் எல்லாமே ஸ்மூத்தா நடக்கிற மாதிரி செட்டப் பண்ணியாச்சு!
அத செய்ய தான் எனக்கு கொஞ்சம் வருசங்கள் ஆகிடுச்சு!
இப்ப நான் ஃப்ரீ தான்!
நாளைக்கு கூட சண்டே ப்ரீ தான்!
ஷாப்பிங் போலாமா இல்லை அப்படியே ஒரு லாங் டிரைவ் போலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!” என்று சொல்லியபடி அவள் முகத்தை ஆராய்ந்தான் ரேவந்த்.
மதுராவுக்குள் ஜெர்க் அடித்தது!
ஏது? லக்கி கூட ஏதோ ஷாப்பிங் மட்டும் தான் சொன்னா! இவன் என்ன லாங் டிரைவ் ப்ளான் பண்ணிட்டு இருக்கான்!
ஐயோ.. லக்கிய எப்படி அப்படி எல்லாம் அனுப்ப முடியும்? என்று பதறியவள்,
“யார் கூட போவீங்க?”
“ஏன் கேக்குற?”
“இல்ல சும்மா தான்! “
“யார் கூடயும் இல்ல!
லக்கி தான் ஒரு ஆள் அவுட்டிங் கூட்டிட்டு போக சொல்லி கேட்டுட்டு இருந்தா!
நாளைக்கு அவளுக்கு லீவ் தானே! அப்ப அவளைக் கூட்டிட்டு போக வேண்டியது தான்!”
“இல்ல.. வேணாம்.. அவளுக்கு படிக்கிற வேலை இருக்கு!”
“ச்.. அதெல்லாம் நான் கூப்பிட்டா வருவா!”
“இல்ல.. கூப்பிட வேண்டாமே! ப்ளீஸ்!”
“அப்புறம் யார் என் கூட வருவா?”
“நான்.. நான் வர்றேன் உங்களோட.. அவ வேண்டாம்!”
“நீயா? ம்ம்.” யோசிப்பது மாதிரி கொஞ்சம் நடித்தவன்,
“ ஓகே.. ஆனா அங்க வந்தா நான் சொல்றபடி நீ நடந்துக்கணும்! மாட்டேன்னு எல்லாம் சொல்ல கூடாது! ஓகேயா!”
மதுராவுக்குள் உள்ளே கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தாலும், லக்கியை அனுப்புவதை விட, தான் செல்வது உத்தமம்! ரொம்பவும் அத்து மீறினால் பார்த்துக் கொள்ளலாம்!
என்ன பார்ப்பே? உன்னாலே முடியுமா அதெல்லாம்!
யோசிச்சு செய்! என்ற மனதின் எச்சரிக்கையை மீறி, சரி என்று சொல்லி விட்டாள் அவள்!
லாங் டிரைவ் என்று அவளை அவுட்டிங் மகாபலிபுரம் வரை அழைத்து சென்று,
ரெசார்ட் பீச்சில் விளையாட விட்டு,
ரொம்ப வருடங்களுக்கு பிறகு அவளின் எல்லா மன இறுக்கங்களையும் விட்டு விட்டு,
அதே ஸ்ரீரங்கத்து சின்னப் பெண் ஸ்வீட்டியை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்தான் ஸ்வீட்டியின் ஊட்டி!
—
அடுத்த நாள். காலை நேரம்.
அவசரம் அவசரமாக காலேஜுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள் லக்கி.
காலிங் பெல் அடிக்க, மதுரா போய் கதவைத் திறந்தவள் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
உள்ளே வந்தவன் ரேவந்த் தான்! ஜாகிங் போய் விட்டு அப்படியே இங்கு வந்து விட்டான் போல!
“வாங்க..” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன்,
“ஹாய் லக்கி.. என்ன ப்ரேக் ஃபாஸ்டா?”
“ம்ம்.. பொங்கல். நத்திங் பட் தூக்கமருந்து! அக்கா வீக் ஸ்டார்டிங்கே தூங்கி வழிய வழி பண்ணிட்டா!
நேத்து ஏதோ ஆபிஸ்ல “முக்கியமான இவன்ட்டாம்”.
நேத்தும் ஆபிஸ் போய்ட்டா! மாவு அரைக்கவே இல்லை! அதான் பொங்கல் சாம்பார்!
நீங்க சாப்பிடுறீங்களா?”
“என்ன கேள்வி இது? நானே பயங்கர பசியில இருக்கேன்!” என்று கேட்டவன்,
அவனே அருகில் இருந்த ஒரு பிளேட்டை எடுத்து பொங்கலை வைத்துக் கொண்டான்.
மதுரா அவனையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள், வேகமாக உள்ளே சென்று சூடாக சாம்பார் எடுத்து வந்து அவன் தட்டில் ஊற்றினாள்.
“ம்ம்.. இதையும் வச்சுக்கங்க” என்று லக்கி தேங்காய் சட்னி எடுத்து ஊற்ற,
“நான் பார்த்துக்கிறேன். நீ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு! சாருக்கும் வேலை இருக்கும்.
அவரும் சாப்பிட்டுட்டு கிளம்பிடுவாரு” என்று அவனுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க,
“அப்ப.. சீக்கிரம் சாப்பிடுங்க டுயுட்.
சாப்பிட்டுட்டு நீங்களே என்னை டிராப் பண்ணிடுங்க!” என்றாள் லக்கி ரேவந்த்தைப் பார்த்து ரகசியமாய் சிரித்துக் கொண்டே!
“ம்.ம் அதெல்லாம் வேண்டாம். சார் பொறுமையா சாப்பிடட்டும்!
நீ தொண்டையை பிடிக்கிற மாதிரி அவ்சரப்படுத்தாதே!
நீங்க பொறுமையாவே சாப்பிடுங்க. காபி குடிக்கிறீங்களா?
பில்டர் காபி?”
“ம்ம்.. கண்டிப்பா” என்று சொன்னவாறே இன்னொரு கரண்டி பொங்கலை எடுத்து வைத்துக் கொண்டான் ரேவந்த்!
“அப்ப.. சரி,.. பை அக்கா.. பை டியுட்! எனக்கு லேட்டாகிடுச்சு” என்று கல்லூரிக்கு கிளம்பினாள் லக்கி! ரேவந்துக்கு தம்ஸ் அப் காட்டியபடி!
அவன் தட்டில் இன்னும் கொஞ்சம் பொங்கல் வைக்க போன மதுராவைத் தடுத்து,
போதும் என்று என்று சைகையில் சொல்லிக் கொண்டே அடித்துக் கொண்டிருந்த அவன் போனை எடுத்துப் பேசினான்!
பேசிக் கொண்டிருந்தவன், பேச்சு மும்முரத்தில் அப்படியே எழுந்து அந்த ஃபிளாட்டின் பால்கனி பக்கம் போய் பேசினான்.
பத்து நிமிடங்கள் ஆகியும் அவன் பேசி முடிக்கவில்லை!
அவன் தட்டில் கொஞ்சமே கொஞ்சம் பொங்கல் மிச்சம் இருக்க, அதுவும் காய்ந்து கொண்டிருந்தது!
மதுரா அவனுக்காக காத்துக் கொண்டிருந்தவள், அவன் இனி வந்து மீண்டும் இதை சாப்பிட மாட்டான் என்று நினைத்தவள்,
அந்த பிளேட்டை எடுத்து சென்று சிங்கில் கழுவப் போட போனவள், கொஞ்சம் திரும்பி அவனைப் பார்த்தாள்!
அவன் இன்னமும் இவளை கவனியாது போன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள்,
டக்கென்று அவன் மிச்சம் வைத்த அந்த பொங்கலை வழித்து வாயில் போட்டுக் கொண்டாள்!
சரியாக அவள் அப்படி செய்யும் போது அதைப் பார்த்து விட்டான் ரேவந்த்!
முகத்தில் குறும்பு கொப்பளிக்க, அவளை நோக்கி வந்தவன், அவள் பின்னால் நின்று கொண்டு,
“எங்கே என் ப்ளேட்? நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கல!”
வாயில் பொங்கலை வைத்துக் கொண்டே மதுரா பேசினாள் மதுரா.
“அது.. இப்ப தான் கழுவ போட்டுட்டேன்! உங்களுக்கு இன்னும் வேணுமா?
இருங்க” என்று இன்னொரு தட்டை எடுக்கப் போனவளின் கையைப் பிடித்துக்கொண்டு,
“எனக்கு என் ப்ளேட்டில் இருந்த பொங்கல் தான் வேணும்!”
“அது இப்ப இல்லயே.. உங்களுக்கு வேற தரேன்” என்று சொல்லியவளை, அருகில் இழுத்து, கை வளைவில் கொண்டு வந்து,
“எனக்கு என்னோட ப்ளேட் பொங்கல் தான் வேணும்!
அது இப்ப இங்க இருக்கு!” என்று சொல்லி அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான்!
அப்புறம் அவன் வாயிற்கு வந்து விட்டது பொங்கல்!
அப்புறம்..
பார்த்திபன் ஸ்டைலில் ஒரு குட்டிக் கவிதையும்(?!) கூட!
“ஒரு வெண்பொங்கல்
இப்போது
சர்க்கரை பொங்கல்
ஆகி விட்டதே!”
அடடே கவிதே! என்றான் ஊட்டி உல்லாசமாய்!
வெட்கத்தில் தலை குனிந்தாள் அவனின் ஸ்வீட்டி!
error: Content is protected !!