உங்க கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடி தான் இவளுக்கு கல்யாணம் ஆச்சு”. என்றார் கமலா.
Advertisement
“ம்ம். தெரியும். அமமாச்சி.. உங்க மகன் சொல்லி இருக்கார்.
நான் இவங்கள எல்லாம் அவர் போனில் இருக்கும் போட்டோக்களில் பார்த்து இருக்கேன்” என்றாள் மகி.
“என்ன.. நீங்க? நீங்களும் என் அம்மாச்சியை அத்தைன்னு கூப்பிடாமல், அம்மாச்சின்னு கூப்பிடறீங்க?” செல்லம் கொஞ்சினாள் அந்த ஐஸ்வர்யா.
Advertisement
“அவளும் எனக்கு பேத்தி மாதிரி தான்!”
Advertisement
“ம்ம்.பேத்தி மாதிரி தான்! நான் தான் உன்னோட ஒரிஜினல் சொந்த பேத்தி!”
“ஓ.. அதுவும் சரி தான். ஆனா இந்த சொந்த பேத்தி, அவளோட அம்மாச்சிய அவ கல்யாணத்துக்கு கூட கூப்பிடவே இல்லை!” என்று சொல்லி அவளுக்கும் ஒரு குட்டு வைத்தார் கமலா.
“அம்மா.. விடுங்களேன்மா. பெரியவங்க செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா!
“பணம் தானே இருங்க.. நான் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அவள் பர்சில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து வந்து கமலா அம்மாவிடம் கொடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுக்க சொன்னாள் மகி!
ஐஸ்வர்யாவின் முகம் சின்னதாக போய் விட்டிருந்தது!
பின்னே! அவள் எதிர்பார்த்தது, தான் மாசமாக இருப்பதால்,
ராஜு மாமா அப்படியே மகாராஜா போல தன் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் முழுவதையும் எண்ணாமல் கூட அவள் கையில் அள்ளிக்கொண்டு வந்து திணிப்பான் என்றே!
இப்படி அவன் பொண்டாட்டி கிள்ளிக் கொடுப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்க வில்லை!
“என்ன பார்க்கிற? ஐஸு.. இப்ப இங்க மகி தான் கணக்கு வழக்கு எல்லாம்! உங்க மாமா கிட்ட பர்ஸ் கூட கிடையாது!
கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கிட்டு போறான்!
அதுக்கும் ராத்திரி வந்து கணக்கு சொல்லணும் அவன்!” என்றார் கமலா சிரித்துக் கொண்டே!
“ஏன் அம்மாச்சி.. நீங்க இத எல்லாம் கேக்கவே மாட்டீங்களா?
இப்பவே இப்படியா? “என்றாள் அடக்கிக் கொண்ட கோபத்துடன் ஐஸ்வர்யா!
“ம்.க்கும்..நீ வேற ஐஸு.. நல்ல ஆளைப் பார்த்து கேட்ட போ..
மகிக்கு இப்படி பண்ண சொல்லி சொல்லிக் கொடுத்ததே உன் அம்மாச்சி தான்!
நீ அவங்க கிட்டவே போய் நியாயம் கேட்டுட்டு இருக்கே?” என்று சிரித்தான் ராஜு!
“ஏன்.. மாமா.. உங்களுக்கும் கோபம் வரலியா?”
“கோபப்பட்டு.. அப்புறம்.. புவாவுக்கு என்ன பண்ணுவான்?
உங்க வீட்டுக்கு வந்தா உன் அம்மா போடுவாளா?
இல்ல உன் பெரிய மாமன் தான் போடுவானா? அவனுக்கு வேற வழியில்ல!” என்றார் கமலா!
அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை ஐஸ்வர்யாவால்.
“சரி.. அம்மாச்சி..நான் கிளம்புறேன். மாமா என்னை வீட்டில் கொண்டு போய் விடறீங்களா?”
“அவர் இன்னுமும் சாப்பிடல ஐஸு. இப்ப தான் மறுபடியும் குக்கர் வச்சுருக்கேன்!
உன்னை சந்துரு அண்ணா கொண்டு போய் விட்டு விட்டு வருவார்” என்று மகி சொல்லி விட,
ராஜுவை எப்படியாவது அவர்கள் வீட்டுக்கு உள்ளே அழைத்து போகும் திட்டத்திலும் மண்!
….
“ம்ம். இப்படி எத்தனை வாட்டிடி, இந்த ஏரியாவை சுத்தி சுத்தி வருவ?” என்றான் ராஜு,
அவனுடன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து இருக்கும் மகியிடம்!
மகேந்திரனுக்கு அவன் முதலாளி வேறு ஒரு புதிய பைக் வாங்கி தந்திருக்க,
அவனது பழைய ஸ்பெலன்டர் வண்டியை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டான்!
ராஜு வேறு ஒரு புதிய பைக் வாங்காமல் தடுத்து இருந்தாள் மகி!
“புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி ஒரு லாங் டிரைவ் போனா கூட பரவாயில்ல!
ஆனா சும்மா சும்மா இந்த ஏரியாவ ஏண்டி சுத்தி சுத்தி பார்த்திட்டு இருக்க? எனக்கு போரடிக்குது!
உன் கிட்ட ஏண்டா இந்த பிளாட் இருக்கிற இடத்த காண்பிச்சோம்னு இருக்கு!”
“கொஞ்சம் பொறுமையா இருங்க.. எல்லாம் காரணமா தான்” என்றவள் அடுத்து அழைத்து சென்றது, அந்த பிசினஸ் கன்சல்டிங் ஆபிசுக்கு!
“என்னம்மா.. நான் சொன்ன படி ரிசெர்ச் பண்ணிட்டீங்களா?”
“ம்ம் சார். பண்ணிட்டேன்.
எங்க பிளாட்டை சுத்தி ஒரு அஞ்சு கிலோ மீட்டர் சுற்றளவில் நிறைய அப்பார்ட்மென்ட்கள், கேட்டட் கம்யுனிட்டிஸ், அப்புறம் புதுசா ஒரு டவுன்ஷிப்பே இருக்கு!
நிறைய ஃபிளாட்கள், கார்பரேட் ஆபிஸ்கள்!
முக்காவாசி பேர் சொந்த அப்பார்ட்மென்ட்வாசிகள் தான்!
எல்லோரும் அப்பர் மிடில் கிளாஸ் இல்லன்னா பணக்காரங்களா தான் இருக்காங்க.
எல்லோர் வீட்டுலயும் கார்கள் இருக்கு! பைக்கும் இருக்கு! அதுவும் எல்லாமே லக்சரி மாடல் வண்டிகள்!
நிச்சயமா எங்க இடத்தில் கார் ஸ்பா ஆரம்பிச்சா நல்லா ஓடும் சார்!
அப்புறம் நீங்க பார்க்க சொன்ன வாட்டர் சோரசும், டிரைனேஜ் வசதிகளும் இருக்கான்னு செக் பண்ணிட்டேன்!
நமக்கு அங்க வாட்டர் இன்லெட் அவுட்லெட் வசதி எல்லாம் பக்கவா கிடைக்கும் சார்!” என்றாள் மகி!
இத தான் சுத்தி சுத்தி வந்து பார்த்தாளா என்று மனதுள் என்னை வியந்தான் ராஜு!
“பிளாட் உங்க ஹஸ்பன்ட் பேர்ல தானே இருக்கு! எந்த வில்லங்கமும் இல்லையே?”
“இல்ல சார்! பக்காவா இருக்கு அதுவும்!”
“ஏன் கேக்குறேன்னா, அத தான் கொலாட்ரலா காண்பிச்சு லோன் வாங்க போறோம்!
அப்புறம் ப்ராஜெக்ட் வேல்யூல ஒரு டென் பர்சன்ட் நாம ரெடி பண்ணனும்!
ரெடி பண்ணிட்டீங்களா?”
“பண்ணிட்டோம் சார். அப்படியே பத்தலன்னாலும் ஜுவல்ஸ் இருக்கு! மேனேஜ் பண்ணிக்கலாம்!” என்றாள் மகி.
“உங்களுக்கு புரியுதா சார்? நான் மகி கிட்ட கேட்ட தகவலுக்கு பேர் கஸ்டமர் டெமோகிராஃபிக் அனாலிசிஸ்!(Customer Demographic Analysis).
நீங்க உங்க கார் ஆரம்பிக்க போற இடத்துல வசிக்கும் மக்களின் வாங்கும் திறன், பண வசதி, அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், இப்படியான தகவல்கள்!
கூடவே உங்க இடம் இருக்கிற இடத்தில் தண்ணீர் வசதி டிரைனேஜ் வசதி எல்லாம் எப்படி இருக்குன்னு தான் பார்த்திட்டு வர சொல்லி இருந்தேன்!
நீங்க உங்க கார் ஸ்பா ஆரம்பிக்க நினைக்கிற உங்களோட அந்த இடம்
லொக்கேசன் அட்வான்டேஜும் இருக்கு! நீங்க தாராளமா அந்த இடத்தில உங்க கார் ஸபாவை ஆரம்பிக்கலாம்!
அடுத்து உங்க பிசினெஸ்க்கு தேவையான ரெஜிஸ்ரேசன்ஸ், அப்ரூவல்ஸ், அப்புறம் பாங்க் லோனுக்கு தேவையான ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எல்லாம் நாங்க ரெடி பண்ணி தந்திடுவோம்!” என்றார் அவர்.
அவரிடம் நன்றி சொல்லி விடைப் பெற்றனர் இருவரும்!
“ஏன் மகி.. பேசாம.. அந்த இன்னொரு பிளாட்டை வித்துட்டு நம்ம காசுலேயே லோன் எதுவும் போடாம ஆரம்பிக்கலாமே?” என்றான் ராஜு.
“இல்லங்க. லோன் போட்டு பிசினெஸ் பண்ணினா தான் நமக்கு கமிட்மென்ட் இருக்கும்.
அதோட நிறைய அரசாங்க சலுகைகள் கிடைக்கும்!
அதுவும் அவர் சொன்னாருல்ல.. விமன் லெட் பிசினஸ்களுக்கு(Women Lead Business) அரசாங்க சலுகைகள் நிறைய!
இப்போ நீங்களும் நானும் இந்த தொழிலில் பார்ட்னர்ஸ்!
என்னோடது அதிக சதவீதம் அறுபது பர்சன்ட்!
உங்களோடது நாப்பது! பெண்கள் தொழில்முனைவோருக்கு கிடைக்கும் அதிக சலுகைகள பெற!
அதுவும் இல்லாம இது அம்மாச்சியோட ஆசையும் கூட!
தனியா உங்க பேர்ல மட்டும் இருந்தா, உங்க உடன் பிறப்புகளால உங்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்று!”