Skip to content
Post Views: 2,598
யாதுமாகி #15
அப்பா குழந்தைக்கு அன்னப்பிரசன்னம் பண்ணனும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு சப்பும் அதன் விரல்களை தட்டி விட்டபடியே தந்தையிடம் பேசினான் விஷ்ணு.
பாட்டி சொன்னாங்க விஷ்ணு.இந்த வாரம் புதன்கிழமை மேல் நோக்கு நாள்,அமிர்த யோகம் கொண்ட நாளும் கூட….
அன்னைக்கு நம்ம குலதெய்வம் பச்சைவாழி அம்மன் கோயிலில் பண்ணிடுவோம்!என்றார் வேணு.
Advertisement
நாங்க நாளைக்கு நேத்ரா வீட்டில் சொல்லிட்டு வறோம்.
சம்பந்தி வீட்டுக்கு கண்டிப்பா சொல்லணும் விஷ்ணு. அதுதான் முறை! மகனுக்கு ஆமோதிப்பாய் பேசினார்.
போனவாரம் பண்ணி இருந்தா வினியும் இருந்திருப்பால்ல….உனக்கு எங்கே தாய்,தங்கச்சி பாசம் எல்லாம் இருக்கு? எப்படி இருந்த நீ இப்படி தலைகீழ மாறி கிடக்க… நீண்ட மூச்சை இழுத்து விட்டார் ஜோதி.
Advertisement
சுந்தரகாண்டம் படித்துக் கொண்டிருந்த அன்னம் அதை தலைகீழாய் மூடி வைத்துவிட்டு அம்மாடி ஜோதி குழந்தைக்கு ஆறாம் மாசம் சாப்பாடு கொடுக்கக் கூடாது.
Advertisement
ஒற்றைப்படை மாசத்தில் தான் பண்ணனும்! சம்பந்தம் பண்ணி ரெண்டு பேரக்குழந்தைகளும் பார்த்துட்ட….எந்த ஐதீகமும் தெரியறதில்லை. அவ்வப்போது காட்டும் மாமியார் கெத்தை காட்டினார் அன்னம்.
செம்ம காண்டாய் அவர் மாமியாரை முறைக்க… என்ன பார்க்கிற? நாளையோட தான் ஆறாம் மாசம் முடிந்து ஏழாம் மாசம் தொடங்குது உன் பேரனுக்கு. அழுத்தி சொன்னார் அன்னம்.
அவன் மாமனார் வீட்டுக்கு சொல்லனும்னா நம்ப வினிக்கும் தான் சொல்லணும்! மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
Advertisement
இது சிம்பிளா பண்ண போற விசேஷம். நம்ம குடும்பத்தோட பண்ணிடலாம் என்று எழுந்து கொண்டான் விஷ்ணு.
இவன் மாமனார் எப்போ நம்ம குடும்பத்தில் வந்தார்? வினயமாய் சிரித்தார் ஜோதி.
என் மாமனார் எப்போ இந்த குடும்பத்தை விட்டுப் போனார்? எகத்தாளமாய் கேட்டபடியே எழுந்து போனான் விஷ்ணு.
உங்க அருமை பேரன் என்ன பேசுறான்னு கேட்டீங்களா?அன்னத்திடம் பாய்ந்தார் ஜோதி.
அவன் என்ன தப்பா சொல்லிட்டான்? முகவாயில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டார் அன்னம்.
இந்த வீட்ல பொறந்த என் பொண்ணு இந்த குடும்பத்தில் இல்ல,ஆனா பொண்ணு கொடுத்த மாமனார் இந்த குடும்பத்தில் இருக்காரா? புசுபுசு என்று மூச்சு முட்டியது.
அவன் தங்கச்சியை வேண்டாம் என்று சொல்லலையே… ஒரு சின்ன விசேஷத்திற்காக இப்போதுதான் வந்து போன பிள்ளையை எதுக்காக இவ்வளவு தூரம் கூப்பிட்டு அலைகழிக்கணும்?அந்த எண்ணத்தில் சொல்றான். அசராமல் பேசி அசரடித்தார் அன்னம்.
இந்த வீட்டு மனுஷங்களுக்கு பேச சொல்லியா கொடுக்கணும்? வெட்டும் பார்வையுடன் தனது அறைக்குப் போனார் ஜோதி.
“—————-”
நேத்ரா நாளைக்கு உங்க வீட்டுக்கு போய் வருவோம் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தான்.
ம்ம்ம்ம் என்றாள் பின்னிக் கொண்டிருந்த ஸ்வெட்டரை அப்படியே சோஃபாவில் வைத்துவிட்டு.
மார்னிங் உன்னை விட்டுட்டு போறேன், ஈவினிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.
நாளைக்கு சன்டே தானே? அப்படி என்ன நெட்டி தள்ளுற வேலை…
நாளைக்கு சன்டே தான் இன்னைக்கு “சண்டை” டே ஆக்கிடாதம்மா…அவன் குரலில் உஷ்ணம் தெறித்தது.
சரி… நாம நேரில் போய் அழைக்க வேண்டாம், போனில் சொல்லிக்கலாம்.அவனைவிட அதிகம் உஷ்ணம் தெறித்தது அவள் குரலில்.
எல்லாத்துக்கும் ஏட்டிக்கு போட்டி தானா? நரநரத்தது அவன் பற்கள்.
பேசாம இருந்தா ஏட்டிக்கு போட்டியே இருக்காது. பேசாம இருக்க விட்டா தானே…? எதையாவது பேசி என் வாயை கிளற வேண்டியது.. நான் பதில் சொன்னால் சாருக்கு கோபம் பொத்துக்க வேண்டியது… பதிலுக்கு பதில் கொடுத்துவிட்டு பால்கனி ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
ஊஞ்சலின் சங்கிலி மரமரவென சத்தம் எழுப்பியது அவள் ஆடிய ஆக்ரோஷத்தில்.ஊஞ்சலே அச்சத்தில் ஊசலாடியது.
கோபமாய் வந்த விஷ்ணு ஆடி அலறும் ஊஞ்சலை அப்படியே இழுத்து பிடித்து நிறுத்தினான்.
என்ன என்பது போல் எழுந்து நின்று புருவத்தை நெறித்து விழியை அசைத்து கேட்டாள்.
லூசு, உங்க வீட்டுக்கு நேரில் போய் தான் சொல்லணும். எதுக்கும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.
நியாயமா எங்க அம்மா, அப்பா தான் போய் சம்மந்தியை அழைக்கணும். அம்மாவை பற்றி உனக்கு தெரியாதா? அதுதான் நாம போய் கூப்பிடலாம்னு சொல்றேன்.
ம்க்கும்…. இங்கே எல்லாம் முறையோட தான் நடக்குதாக்கும்? முகத்தை அஷ்ட கோணலாய் முறுக்கி கொண்டாள்.
இடையில் கை கொடுத்து இழுத்து கொண்டு போய் சுவற்றில் சாய்த்தான்.
இப்போ என்ன முறையா நடக்கல?அவள் இதழை இரு விரல்களால் பிடித்து திருகினான்.
கண்ணகி போல் அவனை முறைத்தாள்.
என்னடி எரித்து பஸ்பமாக்க போறியா?
உங்க அப்பனுக்கு என்னை கண்டாலே கத்தரி வெயில் போல் சூடு கிளம்பும்.உங்க அம்மா பாரதிராஜா படத்தில் வரும் மாமியார் போல் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு தயங்கி தயங்கி கிச்சனுக்குள்ள புகுந்துக்குவாங்க.
நான் உன் வீட்டில் அப்படியே கிளுகிளுன்னு உறவாடி, விருந்தாடி,என்ஜாய் பண்ணிட்டாலும்… கேலியாய் அவள் கன்னத்தில் விரல்களால் ஓவியம் தீட்டினான்.
எங்க அம்மா பாரதிராஜா மாமியார் பரவாயில்ல. உங்க அம்மா? படையப்பா நீலாம்பரி, அதுக்கு மேல…அந்த காலத்து MN ராஜம் தொடங்கி Ck சரஸ்வதியிலிருந்து தூள் சொர்ணம் அக்கா வரைக்கும்.
அவள் சொன்ன உதாரணத்தில் அவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது.
என்ன இளிப்பு? நான் மட்டும் உங்க வீட்டு மனுஷங்களோட சந்தோஷமா கிளுகிளுன்னு கொஞ்சி, குளவி குடும்பம் பண்றேனா?
ஏனோ அவளின் நெருக்கம், அந்த கோப சிவப்பு அவனை சூடேற்றியது.உதட்டை அழுந்த கடித்தவன், அவள் கன்னம் பற்றி தன் முகத்தோடு அழுத்தி சிவந்த அவள் இதழ்களை சேதாரம் செய்தான்.
வலியால் அவள் திமிரி துடிக்க அவன் இம்மி அளவும் அசையவில்லை.
கல்லு, புல்லு டயலாக் எல்லாம் செட் ஆகாது என்ற நினைவில் அவன் பிடரி முடியை பிடித்து இறுக்கினாள்.
ஸ்…ஆ… வலிக்குதடி! அவள் இதழுக்கு உடனடி விடுதலை அளித்தான்.
எனக்கும் அப்படித்தான் வலிக்குது.கன்றி சிவந்த உதட்டை ஆட்காட்டி விரலால் தொட்டு தொட்டு பார்த்தாள்.
திஸ் இஸ் லவ் பைட்ஸ்! கண் சிமிட்டியவன்,மீண்டும் அவளை இழுத்து அணைத்து மென்மையாய் முத்தமிட்டான்.
“All roads lead to Rome”என்பது போல சந்தோஷமோ,
சண்டையோ,ரொமான்சோ… அவன் அவளை பிரிந்ததே இல்லை.
அவன் பாஷையில் எல்லாத்துக்கும் முடிவு கொஞ்சலே… இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று கோபமாய் அவள் கேட்டால்… அவளை எலும்பு நொறுங்கும் அளவிற்கு இழுத்தணைத்து,கோபப்படுறதெல்லாம் வேற டிபார்ட்மென்ட் கொஞ்சல்ஸ் வேற டிபார்ட்மென்ட் என்பான்.
அவனது அணுகுமுறையே அவளை இந்த வீட்டில் உயிர் வாழ வைத்திருக்கிறது.
அவள் மனக்கயத்திற்கு இதமாய்,மயிலிறகால் வருடுவது போல் அவன் கொஞ்சலும் சீண்டலும் அவளை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.
ஒவ்வொரு தருணத்திலும் அவன் காதலே அவளை சகித்துக் கொள்ள செய்கிறது.
அவன் எவ்வளவு கோபக்காரனோ,அதைவிட பெரிய அளவில் பாசக்காரன்.
குழந்தை சிணுங்க…அவன் தலையில் கொட்டி விட்டு பொய்யாய் முறைத்தபடியே குடுகுடுவென ஓடினாள்.
டேய் மகனே… உங்க ஆத்தாளை மாதிரியே இருக்கியேடா… எப்போ பாரு சிணுங்கிகிட்டே…அவனும் பின்னோடு சென்றான்.
இங்கே ஏன் வந்தீங்க? குழந்தைக்கு பால் புகட்ட இயலாது முறைத்தாள்.
ஹே போடி ”நான்பார்க்காத….”அவன் கிறக்கமாய் பார்க்க.
அவள் பல்லை கடித்து முறைக்க….நான் பார்க்காத பிகரா நீ? சாவகாசமாய் கண் சிமிட்டி அவள் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.
“——————-”
காலையில் டிபன் முடிச்சிட்டு கிளம்பலாம்.இரவு உடைக்கு மாறிக்கொண்டே பேசினான்.
பதில் கூறாது புரண்டு படுத்தாள்.
ஏய் செவிடி…உன்னை தான்டி! உங்க அப்பன் வீட்டுக்கு கிளம்பலாமாம்னு சொன்னேன். அவளை சீண்டிவிட்டான்.
அப்பன் கிப்பன்னு பேசினா அவ்வளவுதான் சொல்லிட்டேன். ஆக்ரோஷமாய் எழுந்து அவிழ்ந்து கூந்தலை கொண்டை ஆக்கிக் கொண்டாள்.
என் பொண்டாட்டிக்கு அருள் வந்துடுச்சு… அழகாய் சிரித்தான்.
ஆளையும் மூஞ்சியையும் பாரு! பேரு தான் பெத்த பேரு விஷ்ணு MA MA BL,Diploma in criminal Law, Diploma in corporate Law. பேச்செல்லாம் தரை லோக்கல்.
அம்மாடி நேத்து,நாங்க மைசூர் மகாராஜா வம்சம் இல்லை, திப்பு சுல்தான் வம்சாவழியில் வந்தவங்களும் இல்லை. கரைமேடு பொன்னுசாமி கவுண்டன் பேரன் இப்படித்தான் பேசுவான்.
நீங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் கரைத்துக் குடித்த பிரிட்டிஷ் பீப்பிள் சரமாரியாய் கலாய்த்து தள்ளினான்.
உங்க கூட மனுஷி பேசுவாளா? முறைத்தபடி போர்வையால் முகத்தை மூடிக்கொண்டாள்.
மனுஷி பேச வேண்டாம். என் பொண்டாட்டி பேசினா போதும்! சிரித்துக்கொண்டே போர்வைக்குள் புகுந்தான்.
என்ன? கடுப்பாய் முறைத்தாள்.
என்ன? அவள் தொணியிலேயே திருப்பிக் கேட்டான்.
ஏன் டார்ச்சர் பண்றீங்க?
செல்லம்… இன்னைக்கு என்னவோ ஒரு ஃபீல்.சரசமாய் அவள் கரம் பற்றி தன்மார்பில் வைத்துக் கொண்டான்.
அவள் பொடு பொடு என முறைக்க… நிஜமாடி பட்டு இன்னைக்கு என் ஆங்கிரி பேர்ட் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப டிஸ்டர்ப் பண்றடி செல்லம்.நான் என்ன பண்ணட்டும்? அவளை இழுத்து வாகாய் மார்பில் சாய்த்து கொண்டான்.
அவள் கொலை பார்வை பார்க்க…இதோ பாருடி செல்லம் அடிக்கடி சொல்ற ஒரே டயலாக் தான் இப்பவும் சொல்றேன், சண்டைபாட்டுக்கும் அது ஒரு பக்கம் நடந்தாலும் ரொமான்ஸ் ஒரு பக்கம் நடந்து கிட்டு தான் இருக்கும். ஏன்னா ரெண்டும் வேற வேற டிபார்ட்மென்ட். முத்தமழை பொழிந்தவனிடம் மொத்தமாய் சரணடைந்தாள்.
“——————”
காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
இங்கே பாருங்க… உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்லல. கொஞ்ச நேரம் எங்க வீட்ல இருங்க ப்ளீஸ்! உறுதியாய் சொன்னாள்.
பதில் ஏதும் கூறாமல் சாலையில் கவனமாக காரை செலுத்தினான்.
ஒரே ஒரு நாள் எங்க வீட்ல உங்களால் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது… உங்களுக்காக காலம் முழுக்க உங்க வீட்டில் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா? வெகுண்டெழுந்தாள்.
லாயர் பொண்டாட்டின்னா சும்மாவா… பிச்சி உதறுற.. உதட்டை பிதுக்கி புருவத்தை தூக்கி மெச்சிக் கொண்டான்.
அவன் நக்கலில் இன்னும் காண்டாகி போனவள் “இதுக்குத்தான் எங்க அப்பா உங்களை வேண்டாம் என்று சொன்னார்” இயல்பாக பேச்சு வாக்கில் சொல்லிவிட்டாள்.
வேண்டாங்கிறவ என்ன டேஷ்க்கு சுத்து சுத்தி வந்து சும்மா கிடந்தவனை சொரிந்துவிட்ட? எதுக்குடி கை நரம்பை கட் பண்ணிக்கிட்டு டிராமா போட்ட? உங்க அப்பனுக்கு பிடித்தவனா, பிக்கல் பிடுங்கல் இல்லாதவனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போயிருக்க வேண்டியதுதானே….?
நானாடி உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணி உன் லைஃபை ஸ்பாயில் பண்ணினேன்? பொறிந்து தள்ளினான்,வெடித்து சிதறினான் இன்னும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
தன்னைத்தானே நொந்து கொண்டவளுக்கு கண்ணீர் அருவி பெருக்கெடுத்தது.
ஏய்..இப்போ எதுக்குடி அழுது வழியுற?அவளை இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.
ஏற்கனவே உங்கப்பனுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். “என் மேல அம்புட்டு லவ்” இதுல நீ வேற சிவந்த கன்னும் சிந்தின மூக்குமாய் வந்தா அந்தாளு என்னை கண்ணாலே அறுத்து கூறு போட்டுருவாரு! அவன் ஆவேசம் தனியாமல் திட்டி தீர்த்தான்.
error: Content is protected !!