Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையேUncategorized

பாறையில் மலர்ந்த தாமரையே! 19

மாலை மங்கத் தொடங்கி மெல்ல இருள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த பிரபலமான கிளினிக்கின் வரவேற்பில் மீனாட்சியும் சந்தான லஷ்மியும் தீப்தியோடு அமர்ந்திருந்தனர்.

குழந்தைகள் மருத்துவர் இன்னும் வந்திருக்காத நிலையில்.. சின்னஞ்சிறு குழந்தைகளையும் வளர்ந்த பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் டோக்கன் வாங்கியபடி வரிசையில் சலிப்போடு காத்திருக்க.. தங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் கூட்டத்தைக் கண்டு பெருமூச்சு விட்டு மலைத்தாள் லஷ்மி.

“நல்லவேளை நமக்கு இரண்டாவது டோக்கன்தான்.. சீக்கிரமா பார்த்துட்டு போயிடலாம்..! இவங்கலாம் பாவம்.! எப்ப டாக்டர பாத்து எப்ப வீடு போய் சேருவார்களோ.. ப்பாஆஆ.. எவ்வளவு கூட்டம்..!” என தனக்கு சம்பந்தமில்லாதவர்களை பற்றி கூட கவலைப்பட்டு பேசினாள் அவள்.

“கிளைமேட்டிக் கண்டிஷன் மாறும் போது இப்படி குழந்தைகளுக்கு காய்ச்சல் சளின்னு வந்துடுது. அதுவும் ஸ்கூல் படிக்கற பிள்ளைங்கன்னா இன்னும் கஷ்டம். ஒரு குழந்தைக்கு வந்தா போதும்.. தன்னோட படிக்கற எல்லாத்துக்கும் வரிசையா தொத்தி விட்டுடும். இந்த நோய்களுக்கெல்லாம் குழந்தைகளை பீடிக்கிறதுன்னா அவ்வளவு சந்தோஷம் போல. பெத்தவங்க பாடு திண்டாட்டம் தான்.!” என்றாள் மீனாட்சி அலுப்போடு.



Advertisement

“வளர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.. அப்படியும் கூட நம்மளால காய்ச்சல் தலைவலி சளின்னு வந்தா தாங்க முடியறதில்ல.. குழந்தைகளுக்கு இப்பதானே இம்யூன் கண்டிஷன் டெவலப் ஆகற ஸ்டேஜ். அதுலயும் நம்ம தீப்தி குட்டி பாப்பால்ல.. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் தேவை!” என்று குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சலோடு சொல்ல.. அதுவோ லஷ்மியிடம் மிரண்டு தாயின் மார்போடு பதுங்கிக் கொண்டது.

மீனாட்சி லஷ்மியின் கையைப் பற்றிக் கொண்டாள். “தேங்க்ஸ் அக்கா நீங்க மட்டும் கண்டிச்சு சொல்லலைன்னா நிச்சயமா தீப்தியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன். நீங்க எங்க மேல ரொம்ப அக்கறை எடுத்துக்கறீங்க.. காலையில கேட்டவுடனே பணம் கொடுத்தீங்க.. இப்ப சாயங்காலம் மனசு கேட்காம தீப்தியை வந்து பார்த்துட்டு ஹாஸ்பிடல் போகணும்னு பிடிவாதமா நின்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க..! உங்க அளவுக்கு யாரும் எங்க மேல கரிசனத்தோடு நடந்துக்கிட்டதே இல்லை.. எங்க சொந்தக்காரங்க கூட..!” என உணர்ச்சி வசப்பட்டாள்

“அதெல்லாம் எதுக்கு இப்போ..! இதெல்லாம் மனுஷனுக்கு மனுஷன் செய்யற சாதாரண உதவி.. ஆனாலும் உன் மேல எனக்கு ரொம்ப கோபம் மீனாட்சி! குழந்தைக்கு காய்ச்சல் கொதியா கொதிக்குது.. நீயும் கொஞ்சங்கூட அக்கறையே இல்லாம ஆபீஸ் போயிட்ட..! உன் ஹஸ்பண்ட் என்னடான்னா எப்படா உங்க ரெண்டு பிள்ளைங்க வருவாங்கன்னு காத்திருந்து அவங்க பொறுப்புல தீப்தியை விட்டுட்டு வெளியே கிளம்பி போயிட்டார்.! வளர்க்க முடியலைன்னா எதுக்கு குழந்தைகளை பெத்துக்கறீங்க..!” அவசரப்பட்டு கேட்டுவிட்டு தன் வாய் துடுக்கை எண்ணி நொந்து கொண்டு. “சாரி..! மன்னிச்சிடு.. ஏதோ ஒரு கோவத்துல அப்படி கேட்டுட்டேன்..” என குரலை தாழ்த்தினாள்.

Advertisement

‘வலிய‌ வந்து உதவி செஞ்சிட்டு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க’ என மீனாட்சி எண்ணிவிடக் கூடாதே என்ற சங்கடம்.

Advertisement

“பரவாயில்லை அக்கா நீங்க பேசுனதை நான் தப்பா எடுத்துக்கல..! தீப்தியை வேணும்னு பெத்துக்கல.. எப்படியோ கரு உண்டாகிடுச்சு. மாசமா இருக்கேன்னு தெரிஞ்சுக்கறதுக்குள்ள நாள் கடந்து போச்சு. அப்படியும் அபார்ட் பண்ணிடலாம்னு நினைச்சேன். இவங்கப்பாதான் வேண்டாம். இதுவும் இருந்துட்டு போகட்டும்.. அதான் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்க பாத்துக்குவாங்க.. நாள் கட கடன்னு போயிடும் குழந்தை சீக்கிரமா வளந்திடும்னு என்னென்னவோ சொல்லி என்னை பிரைன் வாஷ் பண்ணிட்டார். ஆனா அவர் சொன்ன மாதிரி எதுவுமே அவ்வளவு ஈஸியா இல்ல. முதல் ரெண்டு பிள்ளைங்களுக்கே பொறுப்பில்ல.. அவங்களையே ஒரு ஆள் பார்த்துக்கணும்.. இதுல அதுங்க எங்கருந்து இந்த குழந்தையை பார்த்துக்க போகுதுங்க.. சொல்றதெல்லாம் ஈசி நடைமுறையில் எல்லாம் எவ்வளவு கஷ்டம்னு உணர்ந்து இப்ப நான் மட்டுந்தான் அவஸ்தை படறேன்.. அவருக்கென்ன.. சொல்லிட்டு இப்பவும் ஜாலியாத்தான் இருக்கார். பிள்ளைகளை பத்தியும் கவலை இல்லை பொண்டாட்டி மேலயும் அக்கறை இல்ல.” என பெருமூச்சோடு நொந்து கொண்டவளை
அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.

“உன் நிலைமை எனக்கு புரியுது மீனாட்சி. ஆனாலும் நீ பேசறது ரொம்ப தப்பு.. தீப்தி என்னமோ உனக்கு பாரமாயிட்டாள்ன்னு சொல்ற மாதிரி இருக்கு உன் பேச்செல்லாம்.”

“என் நிலமை அப்படி.. சொன்னா உங்களுக்கு புரியாது.! குழந்தையை வச்சுக்கிட்டு வேலைக்கு போயிட்டு வர்றது எவ்வளவு கஷ்டம். எனக்கு அப்பா அம்மா இல்லை.. அவரோட அப்பா அம்மா.. பேரன் பேத்தியை பார்த்துக்க தயாரா இல்லை.. இந்த குடும்பத்துக்காக உழைச்சு.. குழந்தைகளை பாத்துக்கிட்டு‌ ப்பாஆஆ.. முடியல.. என் சத்தெல்லாம் வத்தி போச்சு. சாப்பாடு தூக்கமில்லாம ஓடிக்கிட்டே இருக்கேன். மெஷின் லைஃப் மாதிரி இருக்கு அக்கா..!” சோர்ந்த குரலோடு கண்கலங்கினாள் மீனாட்சி.

Advertisement

லஷ்மிக்கு அவளைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. வாத்சா சொன்னது போல்.. குழந்தை இல்லாத தங்களுக்குத்தான் ஏகப்பட்ட துயரங்கள் என்றால் ஒன்றுக்கு மூன்று குழந்தைகளை பெற்று வைத்திருக்கும் இவர்களுக்கும் ஏராளமான சஞ்சலங்கள். “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கு லஷ்மி..! இந்த உலகத்துல நாம மட்டுமே கஷ்டப்படல..!” வாத்சல்யனின் வார்த்தைகள் மனக்கண் முன் வந்து போயின.

“சரி விடு மீனாட்சி.. எல்லாம் பாப்பா கொஞ்சம் வளர்ற வரைக்கும் தான்.. அப்புறம் உன் பெரிய பிள்ளைங்க மாதிரி தன்னோட வேலையை தானே பார்த்துக்க ஆரம்பிச்சுட்டா உனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.. அதுவரைக்கும் வேணும்னா பேசாம இந்த செல்ல குட்டியை என்கிட்டயே கொடுத்துடு..! நானே வளர்த்துக்கறேன்.” தன்னை மறந்து தீப்தியை அள்ளிக் கொள்ள கையை நீட்ட அதுவோ கை காலை உதறி கொண்டு மீண்டும் தன் அன்னையிடம் அழுத்தமாக ஒட்டிக்கொள்ள.. லஷ்மியின் முகம் வாடிப்போனது.

“இதெல்லாம் பேச்சுக்கு வேணா நல்லா இருக்கும்..! நடைமுறைக்கு ஒத்து வராதே..! அவங்கவங்க குழந்தையை அவங்கவங்கதான் வளர்க்கணும். அதுதான் சரி வரும்.!” சாதாரண வார்த்தைகளாக தோன்றினாலும் அதன் உட்கருத்தை லஷ்மியால் புரிந்து கொள்ள முடிந்தது.

பெற்றவளிடம்தான் குழந்தை வளர வேண்டும்.. வேறு யாரும் உரிமை கொண்டாட தேவையில்லை.. என சொல்லாமல் சொல்கிறாளோ..!

அடிச்சாலும் புடிச்சாலும் நான் பெத்த குழந்தையை நான் தான் வளர்ப்பேன்.. என்ற பெற்ற தாயின் சபதமெல்லாம் சரிதான். ஆனாலும் கூட.. என்னதான் குழந்தையை தன்னோடு அணைத்து வைத்திருந்தாலும்.. தீப்தியை கையாளும் போதெல்லாம் மீனாட்சியிடம் தெரியும் அந்த சிடுசிடுப்பும் இனம் புரியாத வெறுப்பும் லஷ்மிக்கு பிடிக்கவில்லை.

பாவம் அவள் சொல்வது போல் வேலைப்பளு குடும்பச் சுமை.. கடன் பிரச்சனை.. கணவனின் பொறுப்பின்மை எல்லாம் சேர்த்து அழுத்தும் போது ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளிடம் அனைத்தையும் மறந்து கனிவை மட்டுமே காட்ட முடியும்.! போகப்போக எல்லாம் சரியாகும்.. என மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறாள் லஷ்மி.

மருத்துவர் வந்துவிட்டார்.. குழந்தையை அவரிடம் காட்டி ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் எழுதி வாங்கி.. மருத்துவக் கட்டணத்தோடு சேர்த்து.. மருந்து மாத்திரைகளுக்கும் சேர்த்து லஷ்மியே பொறுப்பேற்றுக்கொள்ள..

‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்கறேன்.!’ என்ன பாட்டு பாடாத குறையாக தன் நன்றி உணர்ச்சியை.. வார்த்தைகளாக கொட்டி தீர்த்து விட்டாள்‌.

“அம்மு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத..!” வாத்சல்யன் இப்படி ஆரம்பித்தாலே சண்டை வரும்படியான விவகாரமான ஏதோ ஒன்றுக்கு வித்திடுகிறான். அல்லது தன் கோபத்தை தணித்துக் கொள்ள.. சாந்தமாக இருப்பதாக காட்டிக் கொள்ள இந்த கொஞ்சல் அழைப்பு என்று பொருள்.

என்னவாக இருக்குமோ என உள்ளுக்குள் மூண்ட கலவரத்தோடு.. “என்ன கொஞ்சல் எல்லாம் பலமா இருக்கு..!” என்றபடியே கணவனை நெருங்கியவள் அவன் புஜத்தினுள் தலை வைத்து படுத்துக்கொண்டாள் லஷ்மி.

கணவனின் கோபமோ.. வருத்தமோ மலையளவு இருப்பினும் அதை.. தரையளவு பூஜ்ஜியமாக குறைத்து விடும் வித்தையை அவள் அறிவாளே!

“நீ செய்யறதெல்லாம் சரின்னு உனக்கே தோணுதா.!” என்றபடி அவள் பக்கம் திரும்பினான்.. ‌

“என்னாச்சு பேபி ஏன் இவ்வளவு கோபம்..?” வாத்சல்யனின் மீசையை செல்லமாக திருகினாள்.

அந்த பேபி என்ற அழைப்பில் தணிந்து வந்தான்

“அந்த குழந்தை நமக்கு வேண்டாம்னு சொன்னது நீதான்..! அப்புறம் எதுக்காக தேவையில்லாம அடிக்கடி அந்த வீட்டுக்கு போய்.. அந்த பாப்பாவ கண்ணால பாத்து மனச கஷ்டப்படுத்திக்கற..! வேண்டாம்னு சொல்லிட்டா அவாய்ட் பண்ணிட்டு அடுத்த வேலையை பாக்கணும்.!” என்றான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.

“நானா போகல..! போக வேண்டிய அவசியம் வந்துச்சு..! உதவின்னு கேட்கும்போது தள்ளி நின்னு முடியாதுன்னு சொல்ல மனசு வரமாட்டேங்குது.”

“எதுவானாலும் அளவோடு வைச்சுக்க சந்தா! அல்ப சந்தோஷத்துக்காக உரிமை இல்லாத பொருள் மேல ஆசை வச்சு மனசை கெடுத்துக்கிட்டா அப்புறம் நீதான் அவஸ்தைப்படணும். தேவையில்லாத எமோஷன்ஸ் வேண்டாமே சந்தா!” என்றபடி அவள் தலையை வருடி கொடுத்தான்.

“அந்த பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைங்க..!” சொல்லி முடிக்கும் முன்.. “அச்சச்சோ..!” என நெஞ்சம் பதறி கண்கள் விரித்தவனை.. இமை சிமிட்டாமல் பார்த்தாள் லஷ்மி.

“யாரோ தேவையில்லாத எமோஷன்ஸ் வேண்டாம்னு சொன்னதான் ஞாபகம்.!” அவள் கேலியாய் சொல்லி சிரிக்க வாத்சா விழித்தான்.

அந்த குழந்தைக்காக தன்னையுமறியாமல் பதறிப் போனதை இன்னும் உணரவில்லை அவன்.

“பாப்பாவுக்கு என்ன ஆச்சு..?” கேலி செய்வதை பொருட்படுத்தாமல் குழந்தை மீதான கரிசனத்தோடு விட்ட இடத்திலிருந்து அவன் தொடங்க..

“காய்ச்சல் சளி..! உடம்பு சரியில்லாத குழந்தையை கூட கவனிக்க நேரமில்லாம ஏதோ பழைய மருந்தை கொடுத்து அப்படியே போட்டு படுக்க வச்சிருக்காங்க..! மனசு கேக்கல வாத்சா! அதான் சாயங்காலம் பர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்து மீனாட்சியை கட்டாயப்படுத்தி அழைச்சுக்கிட்டு குழந்தையோட ஹாஸ்பிடல் போயிட்டு வந்தேன்.” என்றாள் இவள்.

“நல்ல வேலை செஞ்ச.. பாப்பா இப்போ ஓகே தானே..?” அந்த குழந்தைக்கான வாத்சல்யனின் பரபரப்பையும் ஆர்வத்தையும் புதிதாக பார்க்கிறாள் லஷ்மி.

“அந்த பாப்பா பத்தி பேசினாலே கோபப்படுவீங்க..! என்ன திடீர்னு அக்கறை.?”

“குழந்தை மேல எப்பவுமே எனக்கு அக்கறை உண்டு பாசம் உண்டு..! பாப்பாவோட நல்லதுக்காகத்தான் அவ நம்ம வாழ்க்கையில வரக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவளைப் பற்றி பேச்செடுக்க வேண்டாம்னு சொன்னேன்.!”

“குழந்தை நமக்கு வேண்டாம் லக்ஷ்மி..” என ஒவ்வொரு முறை அவன் பிடிவாதமாக மறுத்து சொல்லும் போதும்.. மனிதாபிமான அடிப்படையில் ஒரு உயிருக்காக போராடுகிறான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்றுதான் அந்த சின்ன உயிரின் மீதான தனிப்பட்ட அன்பை கண்கூடாக பார்க்கிறாள்.

“ஹாஸ்பிடல் போய் ஊசி போட்ட பிறகு இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. ஜுரம் இறங்கி இருக்கறதா மீனாட்சி ஃபோன் பண்ணி சொன்னா.. அதனால நீங்க குழந்தையை பத்தி கவலைப்படறத விட்டுட்டு என்னை கொஞ்சம் கவனிங்க வாத்து!” என்றவள் கணவனின் பிடரியை தன் பக்கம் இழுத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு.. அவனை மொத்தமாக தன் வசப்படுத்தி உலகத்தை மறக்கச் செய்தாள்.

பத்து வருடங்கள் கழிந்த பின்னும்.. முதல் முறை இணைவது போல் ஒவ்வொரு முறையும் அவர்களுக்குள் தொற்றிக் கொள்ளும் புத்தம் புது ஆர்வமும்.. இணை மீது கொண்ட அதீத மோகமும்.. இந்த சம்சார பயணத்தை சலிப்படையாமல் ஜரூராக நகர்த்தி செல்கிறது.

புவனா தன் அக்காவின் வளைகாப்பிற்கு தன்னை அழைக்கவில்லை என்ற கோபத்தில் அவளோடு முகம் கொடுத்து பேசுவதில்லை ‌லஷ்மி! இதற்கு மாமியாரும் உடந்தைதானே என்ற கோபம் மங்கையிடமும் பாய.. தேவையில்லாமல் அவர்களிடம் போய் நிற்பதில்லை. முன்பே அளவுப் பேச்சுதான். இப்போது அதுவும் இல்லை.

வீட்டு வேலைகளை கூட அவர்கள் இல்லாத நேரத்தில் போய் செய்து முடித்துவிட்டு வேகமாக வந்து தன் அறைக்குள் புகுந்து கொள்கிறாள்.

ஏற்கனவே புகுந்த வீட்டோடு தன் உறவு நூலறுந்த பட்டமாக அந்தரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில்.. புவனாவின் அக்கா நிறைமாத வயிற்றோடு இங்கு வந்து தங்கிய நேரத்தில்.. வெடித்த பூகம்பத்தில்.. லஷ்மியின் வாழ்க்கை அடுத்த கட்ட சோதனைகளை சந்திக்க தொடங்கியது.

தொடரும்.

4 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 19

  • Purithal…….athanea ellammmmm…

    elarum venumnu ninaikiravangala tha kadavul neraiya sothipar pola……

    Intha bhuvana vera enathu iluthu vechuruko…. valaikappu ku mattum kupdamatom apuram ena _________ ku antha amma va inga vantha thanga veikiringa…..Yaratha ethathu suma iruka enga santhu va ethathu solunga apuram iruku ungaluku

    10yrs sa antha veetula thana Vat-Sa (Vatsa+Santhu) irukanga intha mamiyar ean ipidi iruku… Ipidi irukathuku avungala thaniya poga soliralam.
    unmailayea intha Magal ilatha mamiyar elam olunga tha irukuthunga…. Magal irunthalea oru type pa Mental ayeruthuga

    Reply
  • Revathy Dhanda

    அடப்பாவிங்களே என்ன பண்ணி தொலைச்சிசிங்க என்ன பிரச்சனை னு தெரியலயே பாவம் லக்ஷ்மி 🤧🤧🤧.
    அவளும் எவ்ளோ தா கஷ்டப்படுவா

    Reply
  • Divyalakshmi Sugumar

    Purushan thunai
    Irukkarava varai yendha oru sogamum manasu allavula veli varadhu
    Aana adhaiyum nondi killaravae indha bhuvana pola aatkalai yennanu sollaradhu
    Thalli irundhallum wanted ah vandhu needhan idhuku karanam naa
    Santha yennadhan seiva ah 😟😟😟😟😟

    Reply
  • Krishnaveni

    அய்யய்யோ நடந்தது எல்லாம் மறக்க முயற்சி பண்ணி கொஞ்சமா இப்போ தான் சந்தோஷமா இருக்காங்க அதுக்குள்ள இந்த புவனா ஏன் இங்க வந்து தங்கனும் 😤😤😤
    பாவம் லஷ்மி என்ன பண்ண போறாங்களோ 😔😔😔

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!