Skip to content
Post Views: 3,197
இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்ற முனைப்புடன் எனக்கு டைமாச்சு… என்னை கொண்டு போய் ரூமில் விடுங்க என்றாள்.
போகலாம்… நம்ம விஷயத்துக்கு ஒரு முடிவை எடுத்துட்டு போகலாம்.
நம்ம விஷயமா? உங்க அர்த்தமற்ற பிடிவாதத்துக்கு என்னை ஏன் இப்படி ஆட்டி படைக்கிறீங்க?
பிடிவாதம் தான்… ரொம்ப!
Advertisement
நாளைக்கு ராஜஸ்தனை எவ்வளவு சுத்த முடியுமோ சுத்தி பார்த்துக்கோ…! நாளை மறுநாள் ஈவினிங் கிளம்புறோம்.
நான் இவ்வளவு தூரம் பிடிக்கலைன்னு சொல்றேன்.. கூட்டிட்டு வந்து மிரட்டிட்டு இருக்கீங்க… ஆவேசம் கொண்டவளாய் டீபா மீதிருந்த பிளவர்வாஸை எடுத்து வீசினாள்.
ஏய் குலாபி எதுக்குரா ரகளை பண்ற?
Advertisement
நான் பண்றது ரகளைன்னா நீங்க பண்றது?
Advertisement
பிடிக்கலைன்னு ஓப்பனா சொல்லிட்டேன் திரும்ப திரும்ப பேசி பேசி கடுப்படிக்கிறீங்க.
ஏன் பிடிக்கலைன்னு சொல்லு?
பிடிக்கலைனா பிடிக்கலை… இதுக்கு என்ன டீட்டெயில் எக்ஸ்பிளனேஷன் கொடுக்க?
Advertisement
நிஜமா என்னை பிடிக்கல….? நெருங்கி வந்தான்…
ஆமா பிடிக்கல… நெஞ்சம் நிமிர்த்தி நின்றாள்.
நிஜமா..?
இன்னும் நெருங்கினான்….
உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ஸ்டெடியாக நின்றாள்.
அவளின் வியர்த்த முகமும் துடிக்கும் உதடுகளும் மெல்ல விதிர் விதிர்த்த அவள் தேகமும் அழகிய மரபுக் கவிதையாய் தோன்றவே இன்னும் நெருங்கி ஊசி நுழையவும் இடைவெளி இல்லாமல் முட்டி நின்றான்.
சார்… ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ணாதீங்க!
அவன் பேசவில்லை…ஆனால் அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் ஊர்ந்து ஏதேதோ பேசியது.
தள்ளி போங்க…! ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து இப்படி தான் நடந்துக்குவாங்களா? தள்ளிவிட முயன்றாள்.
அவள் மென் கரங்கள் அவன் மார்பில் பட சொக்கிதான் போனான்.
பூவை அவளால் மில்லி மீட்டர் கூட அசைக்க முடியவில்லை. அவன் எஃகு என்று தெரிந்தும் மோதிப் பார்க்கும் வல்லமை அவன் குலாபிக்கு மட்டுமே உண்டு.
நெற்றியில் ஒன்றிரண்டாய் ஒதுங்கி தொங்கிய கார்குழலை அழகாய் ஊதினான்.
குலாபி நம்ம குடும்பத்துல கருப்பு பொட்டு வைக்க கூடாதுரா. சிவப்பு பொட்டு வை! கடுகளவு மச்சம் போல் இருந்த கருப்பு பொட்டு இரு வில்லுக்கு நடுவே முட்டும் புள்ளியாய் இருந்த அழகை கவிஞனாய் ரசித்தான்.
இது பொறுக்கி பிஹேவியவர்… மூச்சு முட்டியது அவளுக்கு.
அவள் பேசிய வார்த்தை குண்டூர் மிளகாயை விட அதிகம் காரம் ஏற்றியது.
அடுத்து பேச அவன் அவகாசம் கொடுக்கவில்லை. இழுத்து அணைத்துக்கொண்டான்.
அசையாது அவளை அளவற்ற ஆனந்தத்துடன் பார்த்து நின்றான
தொங்கிலிஞ்சு(திருடி ) உன்னை தெரியும்டி… கொதித்துக் கொண்டிருந்தவளை சொடுக்கி இழுத்து மீண்டும் மார்போடு அணைத்துக்கொண்டான்.
ச்சீ விடுங்க! உதறினாள்.
மெல்லிதாய் ஒரு சிரிப்பு அவன் உதட்டோரம் வந்து போனது.
இனி என்னை டிஸ்டர்ப் பண்ணீங்க அவ்வளவு தான்… விரல் நீட்டி எச்சரித்து விட்டு கதவை திறக்க சென்றாள்.
பாய்ந்து சென்றவன் கதவில் சாய்ந்து குறுக்கே நின்றான்.
நீ என்னை டிஸ்டர்ப் பண்றியே அதுக்கு என்ன பண்ணலாம்? குறும்புடன் கேட்டான்.
பாயிசன் இருந்தா சாப்பிட்டு படுங்க… எந்த டிஸ்டர்பன்சும் இருக்காது.
ரியலி… அவள் கண் இமையை வருடினான்.
தட்டி விட்டாள்…
ஷ் ஷ்….நீ தானே பாயிசன் சாப்பிட சொன்ன? சாப்பிடவாரா பங்காரம்…? யுவர் ஐஸ் ஆர் பவர்ஃபுல் ஸ்லோ பாயிசன்… அவ்வளவு அழகாய் கசிந்துருகி ரசித்தான் மருண்டு கிடந்த அவள் நீள விழிகளை.
குலாபி… ஏன்ரா புரிஞ்சுக்க மாட்டேங்கிற… சீக்கிரம் எஸ் சொல்லிடு ப்ளீஸ்… கெஞ்சினான் கொஞ்சினான் மிஞ்சினான்.
இடியட்… அவனை இழுத்து தள்ளிவிட்டு கதவை திறந்து வெளியேறினாள்.
ஏய் தனியா போகாதே பவி… பின்னோடு ஓடிவந்தவன் டாக்சிக்கு அழைத்தான்.
அவள் ரிசப்ஷனை கடந்து வெளியில் செல்ல… ஏய் குலாபி நில்லு!
நான் கொண்டு வந்து விடறேன்.
நானே போயிக்கிறேன்.
அறிவிருக்கா உனக்கு ஒன்பது மணி ஆகுது… தனியா போறாளாம்…
நான் தானே கூட்டிட்டு வந்தேன்… நானே கூட்டிட்டு போய் விடறேன்.
டாக்ஸி வந்ததும் அவளை அழைத்து சென்றான்.
அமைதி… பேரமைதி… பற்பல யோசனை அவள் மண்டைக்குள் உருண்டு கொண்டிருக்க…அவன் புறம் திரும்புவதாய் இல்லை.
அவளை நெருங்கி மெல்ல அவள் தோளில் கை போட்டவன் குலாபி என்ன சோப் யூஸ் பண்ற? இழுத்து மோப்பம் பிடித்தான்.
ம்ம்ம்ம்… மண்ணாங்கட்டி… வெடுக்கென்று பதில் கொடுத்து அவன் கரத்தை தட்டி விட்டாள்.
நியூ பிராண்டா குலாபி? சிரிக்காமல் கேட்டு அவளுக்கு BP ஐ ஏற்றினான்.
நல்லா சாப்பிட்டு உடம்பை தேற்றுமா… சின்னபிள்ளை மாதிரி இருக்க… காது மடல் உரசினான்.
நான் சின்ன பொண்ணு தான்…!
ஓ…. சிரித்தான்… வெகு அழகாய் வியப்பு கூ(கா)ட்டி
என்ன ஓ…? எனக்கு இருபத்து நாலு தான் ஆகுது… நொடித்துக் கொண்டாள்.
எனக்கொன்னும் அறுபது ஆகலரா அம்மாயி.
முப்பது தாண்டிடுச்சு…!
அது தான் உன் கவலையா?
அவள் பதில் பேசவில்லை.
என்னை பார்த்தால் முப்பது மாதிரியா தெரியுது…? வேண்டுமென்றே அவள் தோள் வளைவில் ஒய்யாரமாய் சரிந்தபடி கேட்டான்.
அவள் பதில் பேசவில்லை… உடல் தளர்ந்து எங்கேயும் சதை தொங்காது…. சரியான உடற்பயிற்சி செய்து அளவான சாப்பாடு உண்டு டீன் ஏஜ் இளைஞன் போல் கட்டுக்கோப்பாய் இருந்தான்.
என்ன பதில் சொன்னாலும் தவறாகிவிடும் என்ற யோசனையில் மௌனமாய் இருந்து விட்டாள்.
அவள் தங்கி இருக்கும் அறை வந்து விட்டது.
அவள் இறங்கி சென்றுவிடுவாளே என்ற எண்ணம் அடிமனம் வரை கசந்தது.
குலாபி என்னோடவே வந்துடு…! அவள் வளைகரம் பற்றினான்.
ரொம்ப பண்ணாதீங்க! பல்லை கடித்தாள்.
நீ இல்லாம இனி ரொம்ப கஷ்டம்…! கார் சீட்டை குத்தினான்.
அவள் கார் கதவை திறக்க முனைய…
அவள் கரம் பற்றி முத்தமிட்டு…. ஒற்றை வளையல் போடக் கூடாது செல்லம்… நிறைய வளையல் போடு… சிவப்பு வளையல் போடு! என் அம்மா தங்க வளையல் போட்டாலும் கூடவே கண்ணாடி வளையல் போடுவாங்க.அவன் குரலின் அக்கறையும் ஏக்கமும் அது உணர்த்திய சாராம்சமும் அவளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.
பவிம்மா நாளை மறுநாள் கிளம்பணும்! அவள் கரத்தை இறுக பற்றி மனமின்றி விடுவித்தான்.
“—————“
அக்கா நான் பவி பேசறேன்.
பவி என்னம்மா சொல்லாம கொள்ளாம ராஜஸ்தான் போயிருக்க? அவ்வளவு வருத்தம் சௌமியாக்கு.
சாரிக்கா… சூழ்நிலை சரியில்லாம தான் இங்கே வந்தேன்.
ஏம்மா…?
அக்கா உங்க பிரண்ட் நல்லவராவே இருக்கட்டும். எனக்கு விருப்பம் இல்லைனா விட்டுடணும் தானே அது தானே மேனர்ஸ்?
நான் விலகி வந்தா அவர் விரட்டிட்டு வரணுமா?
நீ ஹரியை புரிஞ்சுக்கல பவி.
அய்யோ அக்கா யாருமே நீங்க என்னை புரிஞ்சுக்கல…. மனமுடைந்து போனாள்.
ஃபீல் பண்ணாதம்மா…!
எப்படிக்கா கவலை படாம இருக்க முடியும்? ஏன் என்னை சுற்றியே என்னை மையமா வைத்தே இவ்வளவு பிரச்னை வரணும்?
ஹரிக்கு என்ன அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? அவருக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா… என்னை விட்டுட சொல்லுங்க!
நீங்க சொல்லி கேட்க மாட்டாருன்னா அவங்க அம்மா நம்பர் எனக்கு சென்ட் பண்ணுங்க நான் பேசறேன்!
என்னை கம்பெல் பண்ணி ஆந்திராக்கு வர சொல்றார்… இதெல்லாம் முறையா? வற்புறுத்தி வாழ்க்கை நடத்துறது கதைகளில் தான் ஓகே… நிஜத்தில் இது நியாயமா?
சௌமியால் எதுவும் பேச முடியவில்லை.
அவங்க அம்மாட்ட நான் பேசறேன்… நீ வருத்தப்படாதம்மா.
சரிங்கக்கா… குட்டீஸ் நல்லா இருக்காங்களா?ரொம்ப மிஸ் பண்றேன்.
ம்ம்ம்ம் என்றாள் சௌமி.
ஹரியின் அளப்பரிய அன்பை இந்த பெண் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலை.
விருப்பம் இல்லை என்று சொல்லும் பெண்ணை ஹரி விடாப்பிடியாய் துரத்துகிறானே என்ற கவலை.
சற்று யோசித்தவள் தான் பேசி ஹரி கேட்டுவிட போவதில்லை.
இவன் கொடுக்கும் மனஉளைச்சலில் அந்த பெண் ஏதாவது செய்து கொண்டால்? அந்த பழி பாவம் நமக்கெதற்கு…
ஹரி அந்த பெண்ணிடம் இன்னும் மூர்க்கமாய் நடந்து கொண்டால்…? ரொம்பவே யோசித்தவள் விஜயதாரிணியின் மொபைல் நம்பரை பவித்ராவிற்கு அனுப்பி விட்டாள்.
“——————–“
பவி மடியில் விழும் அதிர்ஷ்ட தேவதையை உதறிட்டு இருக்க… சந்தியா தோழிக்கு புரிய வைக்க முயன்றாள்.
சந்தியா டிப்ளமோ நர்சிங் படிக்கும் போது கிடைத்த அருமையான தோழி.
அவள் வேலை கிடைத்து ராஜஸ்தான் வந்திருந்தாள். தான் பணிபுரியும் Dream மருத்துவமனையில் அடுத்த மாதம் ஒரு செவிலியர் பணியிடம் காலியாக இருக்கிறது. உனக்கு அந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாள். பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், அங்கு நல்ல சம்பளமும் கூட.
அதற்குள் தனக்கு வேலை வேண்டும் என்று இவள் நெருக்கடி கொடுக்க… ஒன்னு செய்வோம் எங்க ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் டாக்டர் அபிஜித் கிராமத்தில் ஒரு கிளினிக் வச்சிருக்கார் அங்கே ஈவினிங் வேலை பார்க்க நர்ஸ் வேணும்னு தேடிட்டு இருக்கார். நீ வேணா வந்து ஜாயின் பண்ணிக்கோ! சம்பளம் கம்மியா தான் கிடைக்கும்.இந்த மந்த் எப்படியோ அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ! ரூம் தேடி சிரமப்பட வேண்டாம். இங்கே என்னோட ரூம் இருக்கு நாலு பேர் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம். எனக்கு தனி ரூம் இருக்கு. நீ என்னோட ஷேர் பண்ணிக்கோ! இப்படியாய் சந்தியா தயவில் தான் பவித்ரா ராஜஸ்தான் வந்து சேர்ந்தாள்.
ஹரிசரண் என்ற கேரக்டர் அப்போது சந்தியாவிற்கு தெரியாது. அவனுக்கு பயந்து தான் தோழி ஓடிவருகிறாள் என்றெல்லாம் தெரியாது.
இப்போது ஹரியை பார்த்து பேசியிருந்தபடியால் ஹரியின் உண்மை காதலும் அவன் உறுதியும் அறிந்த பின்னே வலுவாய் அவனுக்கு சப்போர்ட் செய்கிறாள்.
நீ என்ன அந்த ஹரி நரிக்கு சப்போர்ட்டா? எரிந்து விழுந்தாள்.
ஏய் லூசு…. உனக்கு ஹரி கிடைக்குறது ஜாக்ப்பாட். தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவை ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஆளு அசத்தலா இருக்காரு. உனக்கு அவரை அக்சப்ட் பண்ண கசக்குதோ?
அடி எரும… எனக்கு எவனும் வேண்டாம்! முகம் சுழித்தாள்.
ஹரி என்னை சூஸ் பண்ணி இருந்தா எப்போவோ சரண்டர் ஆகியிருப்பேன் பெருமூச்சு விடுத்த தோழியை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“—————–“
இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தாள். நாளை பொழுது தனக்கு என்ன வைத்திருக்கிறதோ என்ற படபடப்பு அவள் இதயத்திற்குள் உருட்டியது.
சும்மாவே தோசைகல்லை தூக்கி சூடு வைத்த தாயின் நினைவு அவளுக்குள் இன்னும் பயத்தை விதைத்தது.
என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் திக் திக் என்ற மனநிலையில் உறக்கம் தான் வருமா? எப்படி யோசித்தும் ஒரு நூல் முனை அளவும் அவளுக்கு யோசனை எதுவும் பிடிப்படவில்லை.
யோசித்து புலம்பி அழுது கரைந்து அயர்ந்து அவளை அறியாமல் கிறங்கி அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள் பவித்ரா.
அவளை எழுப்ப மனமின்றி காலை டிபனும் மதியம் லஞ்சும் செய்து விட்டாள் சந்தியா. தான் உண்டுவிட்டு மதியத்திற்கு பேக் செய்து கொண்டு தோழிக்கு ஹாட் பேக்கில் எடுத்து வைத்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
பவி நான் கிளம்புறேன்…. டிபன் லன்ச் எல்லாம் முடிச்சுட்டேன். மறக்காம சாப்பிடு! ஈவினிங் ஹரி உன்னைத் தேடி கிளினிக்கிருக்கு வந்தார்னா ஓகே சொல்லிடு! தோழிக்கு ஐடியா கொடுத்து விட்டு புறப்பட்டு விட்டாள் சந்தியா.
உருண்டு புரண்டு கண்கள் சிவந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தாள்.
அய்யயோ ஒன்பது மணி ஆச்சா விழுந்தடித்து எழுந்தமர்ந்தாள்.
தூக்கம் கெட்டு விட்டால் அவளுக்கு தலைவலி வந்துவிடும். அவள் செவிலி பயிற்சியில் கூட இரவுப்பணி பார்த்ததில்லை.
அவளுக்கு ஒரு நாள் தூக்கம் தொலைந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த பாதிப்பு இருக்கும்.
மெல்ல எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று காலைக் கடன் முடித்து வெளியில் வந்தவளுக்கு அவ்வளவு அசதி.
காபி போட்டு குடிக்கலாம் என்று கிச்சனுக்குள் நுழைந்து ஏற்கனவே சந்தியா காய்ச்சி வைத்திருந்த பாலை சூடுபண்ண அடுப்பில் ஏற்றி வைத்தாள்.
கதவு பட படவென்று தட்டப்பட்டது…
யாரா இருக்கும்…?சந்தியா வந்துட்டாளா? யோசனையுடன் சென்று கதவை திறந்தாள்.
ருத்ரனாய் கண்கள் சிவக்க உள்ளே நுழைந்த ஹரி அவள் முடியை பிடித்து இழுத்து போய் அறைக்குள் இருந்த கட்டிலில் தள்ளினான்.
எங்கம்மாட்ட என்னடி பேசுன? சொல்லு என்ன பேசின?
உச்ச ஸ்தாயியில் அவன் கர்ஜிக்க அவளுக்கு முதுகு தண்டு சில்லிட்டது.
———-தொடரும் ———
error: Content is protected !!