Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 6 1

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 6 


அவன் யோசனையில் இருக்கும் போதே வீடும் வந்திருக்க…. பத்மா ஒரு முடிவுடன் காரில் இருந்து இறங்கினார். அவரைத் தொடர்ந்து இறங்கிய கயல்விழியின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது


இருவரும் மெதுவாக வீட்டை நோக்கி செல்லஅவர்களைப் பார்த்ததும், ஆத்திரமாகக் கத்த வந்த அன்பரசு, அவர்களின் பின்னே வந்த நந்தகுமாரை பார்த்ததும், அதிர்ச்சியில் திகைத்து போய்ப் பேச மறந்தார்



Advertisement


வேறு வழியில்லாமல் வந்தவனைப் பார்த்து,வாங்கஎன அவர் அழைக்க…. அதற்குள் பத்மாவும், கயல்விழியும் அறைக்குள் சென்று இருந்தனர்


அவர்கள் இருவரும் உள்ளே செல்லும் போது, கீதாவும், விக்னேஷும் அவர்களை இளக்காரமாகப் பார்த்து நகைத்தனர்


நான் இப்ப கொஞ்சம் வெளிய போகணும், நாம பிறகு பேசலாமா?” அன்பரசு நந்தாவிடம் கேட்க

Advertisement

உங்ககிட்ட கண்டிப்பா நான் பேசணும். நான்தான் அவங்களைக் கோவில்ல இருந்து கூடிட்டு வந்தேன்.” என நந்தா சொல்லவும்தான், அவரது மனைவியையும், மகளையும் அழைத்து வந்தது அவன்தான் என அன்பரசுவுக்குத் தெரிந்தது

Advertisement


அவர் தன் மகன்கள்தான் அவர்களை அழைத்து வந்திருந்தனர் என நினைத்து இருந்தார்


ஐயோ  இப்ப இவனுக்கும் விஷயம் தெரிந்து விட்டதாதன்னைப் பற்றிக் கேவலமாக நினைப்பானே…” என நினைத்தபடி நந்தாவுக்கு ஒரு இருக்கையைக் காட்டிவிட்டு, தானும் அவன் எதிரில் அமர்ந்தார்


கொஞ்சம் தண்ணீர் கொடுங்க.” நந்தா கேட்ககீதா உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்

Advertisement


அவன் அதைப் பருகிக்கொண்டு இருக்கும் போதே…. கிருஷ்ணாவும் வாசும் வந்துவிட்டனர். நந்தா காரை மெதுவாகத்தான் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான்


இவர்கள் சென்று கோவில் பூசாரியிடம் விசாரித்து விட்டு வந்திருந்தனர். ஆக்ரோஷமாக வீட்டிற்குள் நுழைந்த இருவரும், நந்தாவை பார்த்ததும் தயங்கி நின்றனர்

இவர்கள் இருவரிடமும் மாட்டினால் கயல்விழியின் நிலை என்ன ஆகும் என நினைத்த நந்தா, தான் நினைத்ததைப் பேசி விடுவது என முடிவு செய்து கொண்டான்


இதுக்கு முன்னாடி உங்க பொண்ணு வாழ்க்கையில என்ன வேணா நடந்திருக்கலாம். எனக்கு அதைப் பத்தி எல்லாம் அக்கறை இல்லை. எனக்கு வருங்காலம் தான் முக்கியம்.” 


உங்க பெண்ணைப் பார்த்த அன்னைக்கே எனக்குப் பிடிச்சிருந்தது. உங்க பெண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி தருவீங்களா?” எனக் கேட்டே விட்டான்


தனக்கு எதோ அறிவுரை வழங்குவான் என நினைத்தாரே தவிர, இப்படி அவன் பெண் கேட்பான் என அன்பரசு நினைக்கவே இல்லை

நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.” 


இல்லை, எனக்கு இப்பவே முடிவு தெரியனும். நான் உங்களை நம்பி கயல்விழியை இங்க விட்டுட்டு போக மாட்டேன். நீங்க பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னாலும், எனக்கு அவளை இங்க இருந்து எப்படிக் கொண்டு போறதுன்னு தெரியும்.” நந்தா நிமிர்வாகச் சொல்ல…. 


ஹே யாரு வீட்டுக்கு வந்து யாரை மிரட்டுற?” எனக் கிருஷ்ணாவும், வாசுவும் எகிற..


வர்ற வழியில் போலீஸ் ஸ்டேஷன்னுக்குத் தகவல் கொடுத்திட்டு தான் வந்தேன். உங்க கோடவுன்ல ரைட் போகச் சொல்லி…” 


நாங்களே கஞ்சாவை அங்க வச்சிட்டு, எடுக்கிறது போல எடுத்து, உங்க எல்லாரையும் உள்ள தள்ளிட்டு, நாளைக்கே அவ கழுத்துல தாலி கட்டி காட்டட்டுமா…” எனப் பதிலுக்கு நந்தாவும் எகிற, அன்பரசு இரு தரப்பையும் அடக்கினார்


எனக்கு என்ன குறை அன்பரசு? உங்க பெண்ணைக் கொடுக்கிறதுல என்ன தயக்கம்? நான் அவளை நல்லா பார்த்துப்பேன்.” 


அன்பரசுவும் அதேதான் யோசித்துக் கொண்டு இருந்தார். இதே அவர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, நந்தா மாதிரி ஒருவன் மாப்பிள்ளையாக வந்தால், அவர் வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டார்

இப்போது மட்டும் ஏன் தயங்க வேண்டும் என நினைத்தவர், எழுந்து தன் மனைவி இருந்த அறைக்குள் சென்றார்


அவரைப் பார்த்ததும் வேகமாக எழுந்து வந்த பத்மா, “அவளை எதுவும் செஞ்சுடாதீங்க. அவ ரொம்பப் பயப்படுறா.” 


நானே என்ன பண்ணணுமோ பண்ணிக்கிறேன். நாளைக்குக் காலையில நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டோம்.” 


பொண்ணுக்கு வயிற்று வலிஅந்த வேதனை தாங்காம அவளும், அவளோட அவங்க அம்மாவும் சேர்ந்து செத்துட்டாங்கன்னு சொல்லுங்க.” ஆத்திரமாகச் சொன்ன பத்மாவின் குரல் நடுங்க, அன்பரசு மகளைப் பார்க்க, அவள் இழுத்து மூடி படுத்திருந்தாள்


அவருக்குத் தெரியும், அவளுக்கு இந்நேரம் காய்ச்சல் வந்திருக்கும் என்று. மகள் மேல் பாசம் இல்லாதவர் இல்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் முன் அவரது கௌரவம் தான் பெரியது


இல்லை நான் வேற சொல்ல வந்தேன். உங்களைக் கூடிட்டு வந்தாரே, அவர் நம்ம கயலை பொண்ணு கேட்கிறார்.” என்றதும், பத்மா அவர் காலில் விழுந்தே விட்டார்


நல்லபடியா கொடுத்திடுங்க. என் பொண்ணு இந்த உலகத்தில் எந்த மூலையிலாவது உயிரோட இருந்தா, எனக்கு அதே போதும்.” என்றார் கதறியபடி


தன் காதில் விழுந்ததை நம்ப முடியாமல், கயல் போர்வையை விலக்கி பார்த்துக் கொண்டு இருந்தாள்


அன்பரசு அறையில் இருந்து வெளியே வந்தவர், நந்தாவிடம் திருமணதிற்குச் சம்மதம் சொல்லமொத்த வீடும் ஹா எனப் பார்த்துக் கொண்டிருந்தது


என்னங்க, மாமாதான் புரியாம பேசுறாருன்னா, நீங்களும் பார்த்திட்டு பேசாம இருக்கீங்க. என் தம்பிக்கு தானே உங்க தங்கையைக் கொடுக்கிறதா பேச்சு.” கீதா சட்டென்று மாற்றிப் பேசினாள்


நீ தானே உன் தம்பி கயலை கட்டிக்க மாட்டான்னு சொன்ன.”

 
அது எதோ கோபத்தில் சொன்னேன் மாமா.” 


விருப்பம் இல்லாத உன் தம்பிக்கு முடிப்பதை விட, அவளை விருப்பப்பட்டுக் கேட்கிற இடத்தில் செஞ்சிட்டு போறேன்.” 


நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் அது இதுன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன்.” என அவர் விக்னேஷை சொல்வது போல், நந்தாவையும் எச்சரித்தார். அது புரியாதவனா அவன்


கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.” நந்தா கேட்க, அன்பரசு யோசித்தார்


கல்யாணத்தைத் தள்ளி போடும் உத்தேசம் எல்லாம் நந்தாவுக்கு இல்லை. இந்தப் பக்கம் அவனிடம் சரி என்று சொல்லிவிட்டு, அந்தப் பக்கம் கயல்விழியை எதாவது செய்து விட்டால், “உடனே வச்சிட்டா நல்லா இருக்கும்.” என்றான்

அன்பரசுவுக்கும் நிறையப் பேரை அழைக்கும் எண்ணம் இல்லை. கயல்விழி விஷயம் அரசல் புரசலாக இந்நேரம் வெளிவந்திருக்கும். தன்னிடம் இருக்கும் பயம் காரணமாகவே யாரும் பேசவில்லை என்று தெரியும்


மேலும் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டால்யாராவது கலைக்கப் பார்ப்பார்கள். ஏன் கீதாவின் குடும்பமே அந்த முயற்சிகளை செய்யும். எதற்கு இதெல்லம் என்றுதான் அவரும் கல்யாணத்தை உடனே முடித்து விடுவது என்று நினைத்தார்


சரி நம்ம பூசாரியை இப்பவே வர வச்சு நாள் குறிச்சிடலாம். வாசு நீ போய் நம்ம வண்டியிலேயே அவரைக் கூடிட்டு வா.” தந்தை சொன்னதும், வாசுவும் உடனே சென்றான்


முகத்தைக் கழுவி துடைத்துக் கொண்டு மலர்ந்த முகமாக வெளியே வந்த பத்மா, “நான் உங்களுக்குச் சாப்பாடு ரெடி பண்றேன்.” எனச் சமையல் அறைக்குச் சென்றார்


அவர் பின்னே கீதாவும் உள்ளே வர, “இத்தனை நான் இல்லாம இன்னைக்கு என்ன? நானே பார்த்துகிறேன்.” எனப் பத்மா நறுக்கென்று சொல்லி விட்டார். கீதா முகத்தை நொடித்தபடி அங்கிருந்து சென்றாள்


நான் போன் பண்ணனும். இங்க போன் எங்க இருக்கு.” நந்தா கேட்டதும், வருங்கால மருமகன் அல்லவாஅன்பரசு தனது அறைக்கே அழைத்துச் சென்றார்


அவனை அறைக்குள் விட்டு, அவர் வெளியே வர…. “அப்பா நீங்க ரொம்ப அவசரப்படற மாதிரி எனக்குத் தோணுது. எதுக்குப்பா இவனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க.” கிருஷ்ணன் மெதுவான குரலில் கேட்க.. 

டேய்  அவன் என்ன நமக்குப் பரம விரோதியா…. அவன் வேலைக்காக நம்மை எதிர்த்தான். நம்ம மினிஸ்டர்ட்ட சொல்லி வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் பண்ண வச்சிடுவோம். நம்ம மாப்பிள்ளை பெரிய போலீஸ் ஆபிசர்ன்னு சொல்லிக்கிறது நமக்கும் கவுரவம் தானே.” 


தந்தை சொல்வது சரி என்றுதான் கிருஷ்ணனுக்குப் பட்டது. ஆனால் தன் மனைவியைத்தான் எப்படிச் சமாளிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!