Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம் -5.2

வேம்புவிற்கு தெரியாமல், எந்தவொரு காரியமும் அபி செய்ய மாட்டாள். அவரும் எந்த இடத்தில் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கணுமோ, அங்கே மட்டும் தான் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார்.

காலத்திற்கேற்றார் போல சிலதை ஏற்றுக்கொள்ளவும் செய்வார்!

அபி, என்ன செய்து கொண்டு இருந்தாலும் அது வேம்புவுக்கு தெரிந்தே இருக்கும்! தப்பு செய்து விட்டாலும் பாட்டியிடம் சொல்லி விடுவாள்!.

இன்னுமும் கூட semester  ஆரம்பித்தவுடன் full portion னும் வாங்கி வைத்துக்கொண்டு அவள் படித்து விட்டாளா என்று follow up செய்வார்.



Advertisement

அபியும் எதுவரை படித்து இருக்காளோ அதை உண்மையாக சொல்லிவிடுவாள்.

படிக்க நேரம் இல்லாதவற்றை வேம்பு படித்து summarize செய்து, வாய்ஸ் ரெகார்ட் பண்ணி அனுப்பிவிடுவார். அபி அதைக் கேட்டு மனதில் வாங்கி எக்ஸாம் எழுதியதும் உண்டு.

எக்ஸாம் முடிந்தவுடன், question பேப்பர் ஐ whatsappபில் அனுப்ப சொல்லி எதெல்லாம் ஒழுங்கா எழுதியிருக்கா என்று செக் செய்வார்.

Advertisement

இந்த மாதிரி micro management செய்வதில் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது!

Advertisement

எல்லாம் அவள் அப்பா விசயத்தில் கோட்டை விட்டதால்  வந்த அனுபவம்!

தவறு என்றும் சொல்ல முடியாது!

ஆனால் இப்போதெல்லாம் எக்ஸாம் முடிந்தவுடன் வேம்புவுக்கு முன்னதாக சிஜூ செக் செய்கிறான்!.

Advertisement

அவன் நண்பர்கள் கூட கிண்டல் அடிப்பார்கள்.

“ இப்படி நீ படித்து இருந்தால் இந்நேரம் கோல்ட் மெடல் வாங்கியிருப்ப! என்று!

இப்படியாக, அபியும் பிரனிதாவும் அவனுக்கு சிஸ்டர் மாதிரி என்பது, ஒருவாறு, கல்லூரி முழுக்கவே பரவலாக தெரிந்து விட்டது!

அதன் பின்னர் தான் ,  வேண்டுமென்றே ப்ரநிதாவை வம்பு செய்துக் கொண்டிருந்த, ஒரு பேராசிரியர், இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார்.

ஒருமுறை வெறும் cake வெட்டிக் கொண்டாடுகிற birthday party  என்று ஒரு நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர் அவர்களது கல்லூரி பட்டாளம்.

உண்மையில் அன்று ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, உண்மையை சொன்னால் வர மாட்டார்கள் என்று பொய் சொல்லி கூட்டிசென்று விட்டனர்.

இவர்களும் போய் விட்டனர்.

சிஜுவுக்கு இதைப் பற்றி கொஞ்சம் லேட் ஆக தெரியவர, உடனே ஒரு கேப் புக் பண்ணிக்கொண்டு வந்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்து விட்டான்.

வரும் வழியில் எல்லாம் ஒரே டோஸ் மழை!

“why blood! same blood!” என்கிற மாதிரி கேட்டுக்கொண்டு வந்தார்கள் அபியும் பிரனிதாவும்.

அதுவும் ப்ரநிதாவுக்கு கொஞ்சம் add on ஆக  டோஸ் கிடைத்தது !

“நெட்ட கொக்கு மாதிரி வளர்ந்து இருந்தா மட்டும் போதாது கொஞ்சம் அறிவும் வளரனும்! அது தான் சின்ன பிள்ளை தெரியாது உனக்கெங்க போச்சு அறிவு!” என்று சரமாரியாக திட்டித் தீர்த்தான்!.

இவர்களே இப்படி என்றால், பொய் சொல்லி கூட்டி சென்றவர்கள் நிலையையோ சொல்வதிற்கில்லை!

இப்போது அவன் pass out ஆகி சென்று இருந்தாலும் அவனது ஜூனியர் friends, ஒரு ஸ்லீப்பர்செல் போல இவர்களை பார்த்துகொண்டு தான் இருக்காங்க!

அதனால் அபியும் ப்ரநிதாவும் ரொம்ப சௌகரியமாக படித்துக்கொண்டிருந்தனர்!

நினைவுகளை அசைபோட்டு கொண்டிருந்த ப்ரனிதா, அப்படியே உறங்கிப் போனாள்!

மறுநாள் காலை.

“ப்ரநிக்கா, எனக்கு ஒரு சி டைப் சார்ஜர் வேணும். இந்த போனில் இருக்கிற பழைய போடோக்களை லேப்டாப்பில் ஏற்ற வேண்டும். போன் switch off ஆகி கிடக்கு.”

குளிப்பதற்கு ரெடி ஆகி கொண்டிருந்த ப்ரனிதா,

“அது பிரபு அண்ணன் கிட்ட இருக்கும். நீ போய் வாங்கிட்டு வா”

மறுபடியும் அவன் அறைக்கா! அஞ்சினாள் அபி.

“நான் அங்கெல்லாம் போக மாட்டேன். ப்ளீஸ்  நீ போய் எடுத்துட்டு வா ப்ரநிக்கா”

“நீ போ நான் போன் பண்ணி சொல்றேன்” என்றவள், போனில் அவனை அழைத்துப் பேசினாள்.

“அவனும் இப்ப குளிக்கப் போய்கொண்டுருக்கானாம். ரொம்ப அவசரமானா, அங்கே plug point டில் தான் இருக்காம் எடுத்துக்க சொன்னான்.” சொல்லிவிட்டு அவள் குளிக்க சென்று விட்டாள்.

அபி சரி போவோம். அவன் குளித்துவிட்டு வருவதற்குள் ஓடிப் போய் எடுத்து வந்து விடலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றாள்.

அங்கே சென்று சார்ஜரை எடுத்துக் கொண்டு திரும்புகையில், அந்த அறையில் இருந்த fish tank கண்ணில் பட்டது.

போன முறையே அவள் அதை பார்த்தாள் தான்!

ஆனா,  பிரபு செயின தராமல் வம்பு செய்ததில் நின்று அதை  பார்க்க முடியவில்லை.

இன்றோ அவன் தான் குளித்துக் கொண்டு இருக்கான். கொஞ்சநேரம் அதைப் பார்த்துட்டு அப்புறம் போலாம் என்று நினைத்து அதனருகே சென்றாள்.

நல்ல சிவப்பு வண்ணத்தில், தலையில் கொண்டை போன்ற அமைப்போடு,

இங்குமங்கும் ஓடி நீந்திக்கொண்டு கொண்டிருந்தது அந்த flower horn fish!

அழகான அந்த மீன் தொட்டியில் பல்வேறு நிறங்களில் அடுக்கபட்டிருந்த கூழாங்கற்கள் கண்ணைக் கவர்ந்தன!

நன்கு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அபியை, இதழில் குறும்பு புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான், குளித்து முடித்தவிட்டு வந்திருந்த பிரபு!

மீனை ரசித்துப் பார்த்து கொண்டிருந்த அபி, சட்டென்று அந்த மீனை தொட எண்ணி, தொட்டிக்குள் கையை விட , நறுக்கென்று தன் கூரிய பற்களால் அபியின் விரலைப் பதம் பார்த்தது அந்த மீன்!

“அய்யோ”  என்று கையை வெளியில் எடுத்தாள் அவள்!

‘அறிவிருக்காடி உனக்கு, அதைப் போய் ஏன் கையால் தொட ட்ரை பண்ணுன? என்று பதறியபடியே, அவள் கையைப் பார்த்தான் பிரபு.

ஒரு துளி ரத்தம் எட்டிபார்த்தது அவள் பிஞ்சு விரல்களில்!

உடனே அதை நிறுத்த எண்ணி, தன் வாய்க்கு கொண்டு போன ப்ரபுவிடம் இருந்து கையை உருவிக்கொண்ட அவள், அவனை முறைத்த படியே,

“நீங்க வேணுமின்னுதான் கடிக்க train பண்ணி வச்சுருக்கீங்க” என்று அநியாயமாக குற்றம் சொன்னாள்!

‘யாராவது அப்படி செய்வார்களா? நம்மால் ஆபத்து என்று நினைத்து , அது தன்னை காத்துக் கொள்ள, நம்மைக் கடிக்கிறது!”

“வேணுமின்னா பார், நான் கையை விட்டா, என்னையும் தான் கடிக்கும், பார்க்கிறாயா?” என்றவாறே தன் கையை தொட்டியில் விட முயற்சிக்க, சட்டென, அவன் கையைப் பிடித்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் அபி!

“வே.. வேணாம் கடிச்சுடும்!”

தன் கையைப் பிடித்துக்கொண்டு இருக்கும் அபியை, காதலுடன் பார்த்தான் பிரபு!

“கடிச்சா கடிச்சுட்டு போகட்டும், உனக்கு தான் என்னைப் பிடிக்காதே!”

“அப்படியெல்லாம் இல்ல”

“அப்ப..  பிடிக்கும் தானே?”

“நீங்க கொஞ்சம் நல்லவர் தான். ப்ரநிக்கா கூட சொல்லியிருக்கா. நீங்க நிறையப் பேர்க்கு படிக்க ஹெல்ப் பண்ணுறீங்கன்னு.”

“ஆனா, என்கிட்ட மட்டும் தான், அதுவும் அந்த செயின் விசயத்துல bad boy ஆக இருக்கீங்க!.”

திடீரென்று நினைவு வந்தவளாய், “ஆமா , இப்ப கொஞ்சம் முன்னாடி என்னை டீ போட்டு பேசுனீங்க தானே?”

“அது.. ஒரு பதட்டத்தில், ஒரு flow வில் சொல்லியிருப்பேன்” என்றவன்,

“ flow வில் உன்னை ஏண்டி பொண்டாட்டின்னு கூட சொன்னாலும் சொல்லுவேன்” என்றான் கொஞ்சம் மெதுவா..

அபிக்கு சரியா கேட்க வில்லை.

“என்ன?’ என்றாள்.

“அது  மனதின் “வலி” வேற department.!”

“ஒரு கல்யாணம் ஆகாத ஒரு youth ஐ பார்த்து, உன்ன மாதிரி ஒரு பொண்ணு அங்கிள் ன்னு கூப்பிட்டா வர்ற pain!’  மீண்டும் அளந்து விடத் தொடங்கினான் பிரபு!

‘அது தான் நான் சாரி கேட்டுட்டேனே!”

“நான் சொன்ன மாதிரி கேட்கலையே!”

“இப்ப கூட சாரி மாமான்னு சொல்லு, செயின கையோடு வாங்கிட்டு போ” அவனும் விடாப்பிடியாக அதிலேயே நின்றான்!

அவள் உடனே “சரி இப்ப  கேட்கிறேன், ஆனா உங்க காதிலே தான் சொல்லுவேன், கொஞ்சம் குனிங்க!” என்றாள்!

உடனே பிரபு குனிய, அவன் தலையில் நச்சென்று ஒரு குட்டு குட்டினாள் அபி!

குட்டி விட்டு, “அந்த pain உடன் இந்த pain ஐயும் சேர்த்து அனுபவிங்க!” என்று சிரித்து விட்டு ஓடிவிட்டாள்!

அய்யோ, அபி உன் crime rate ஏறிக்கொண்டே போகிறது!

பிரபுவோ, இதை சற்றும் எதிர்பார்க்காதலால்,

“இவள் என்ன design என்றே தெரிலயே!”  என்றவாறே தலையைத் தேய்த்து விட்டுகொண்டான் பிரபு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!