Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 10

அத்தியாயம் – 10
இளம் மாலை பொழுதில் அந்த பொது மருத்துமனையில் உள்ளே உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார் வள்ளியப்பன்.அவருக்கு அருகில் தலையை பிடித்து கொண்டு கண்ணாத்தாள் அமர்ந்திருக்க, மடியில் சாலா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.


Advertisement

உச்சி பொழுதில் அத்தனை தர்க்கம் முடிந்த பின் மீனாள் மயங்கி சரிய அவளை அள்ளி கொண்டு இங்கு வந்து சேர்த்து விட்டான் லட்சுமணன்.ஆதீத உழைப்பால் எலும்புகள் தேய்மானம் கொண்டு விட்டது.அதன் விளைவால் தான் அவருக்கு பக்கவாதம் வந்தது.இப்போது மன சோர்வும் சேர மயங்கி விட்டாள் மீனா.அவளின் உடல்நிலையின் நிலைப்பாட்டை முன்னே அறிந்தமையால் வெகு பொறுமையாக கையாண்டான் லட்சுமணன்.
மனதுக்குள் தாயின் உடல் நிலை கொண்டு நிறைய கவலைகள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளவில்லை. தனி ஆளாக இருந்து அவளை பார்த்து கொண்டான்.தற்போது மருந்தின் தாக்கத்தில் நன்கு உறங்கி கொண்டிருந்தாள் மீனாள்.

Advertisement

Advertisement

அண்ணாமலை தளர்ந்து போயி அமர்ந்திருந்தார்.எத்தனை நியாயங்களை முன் வைத்தாலும் இன்னும் பேரனை விட்டு கொடுக்க முடியவில்லை போலும்.
முடிந்தளவு தர்க்கம் செய்தவர். இப்போது மருமகளின் நிலையை கண்டு அப்படியே அடங்கி விட்டார்.காதில் மட்டுமே மீனாளை பற்றிய செய்திகள் சேகரிப்பவருக்கு.நடப்பில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தெரியாதல்லவா.

Advertisement

இதோ மீனா மருத்துவமனையில் சேர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் பாதி காரைக்குடி மக்கள் மருத்துவமனையில் கூடி விட்டனர்.மீனாள் வாழ்ந்த நெறி வாழ்க்கைக்கு இதுவே சாட்சி.ஒவ்வொரு பெண்களும் அவளை உழைப்பாளி,அமைதி,நல்ல பண்பு உள்ளவள்,சேவை மனப்பான்மை கொண்டவள்,அவள் செய்யும் உதவிகள் என்று அவளது நற்குணங்களை அடுக்க.அதனையெல்லாம் காதில் கேட்டு மனதுக்குள் புதைத்து கொண்டார் அண்ணாமலை.
சிலருக்கு வரமாக வந்தவற்றை காப்பாற்றி கொள்ள தெரியாது.அந்நிலையில் இருந்தார் அண்ணாமலை. அவர் அலட்சியம் என்று வீசிய சிறு கல் இன்று மண்ணில் புதைந்து பெரும் மதிப்புடன் வைரமாகி நிற்பதை எண்ணி குற்ற உணர்ச்சில் தவித்து போனார்.
“சாலாப்பா!”
“சொல்லுக”
“ஒரு மனுஷன் எப்படி சாலாப்பா இப்படி இருக்க முடியும்?”
“யாரை சொல்றீக சோமுவையா?”
“அவுகதேன் கண்ணுக்கு நிறைவான பிள்ளைய இத்தினி வருஷம் கண்டு பாக்குற சந்தோசமே அவுக கிட்ட இல்லை சாலாப்பா வைரம் கணக்கா பிள்ளை அதுவும் மருத்துவம் படிச்சிருக்காக.
சண்டை கட்ட வந்தவுக கிட்ட கூட எத்தினி பாங்கா பேசி வச்சாக. இப்பேர் பட்ட பிள்ளைய கண்ணுல கூட நிறைச்சு வைக்கலையே அவுக. மனசே ஆறலை சாலாப்பா” கண்ணாத்தாள் மனம் தாங்காமல் புலம்பி கொண்டே இருக்க.
ஒரு பெருமூச்சுடன் கேட்டு கொண்டிருந்தார் வள்ளியப்பன்.அவருக்கும் சோமுவின் செயல் அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது.முன்னால் மனைவி என்றாலும் ஒரு பெண்,அவன் பிள்ளைக்கு தாய் என்று கூட சோமு பார்க்கவில்லை.
மீனாள் மயங்கி விழுந்ததும் மருத்துவமனைக்கு அனைவரும் அவளை தூக்கி செல்ல.சோமு மட்டும் தனது மனைவியை அழைத்து கொண்டு அங்கிருந்தே கிளம்பி விட்டான்.அதனை எண்ணி தான் கண்ணாத்தாள் புலம்பி கொண்டிருந்தார்.
“என்ன சாலாப்பா நான் பேசிக்கிட்டே கிடக்கேன்”
“என்ன சொல்ல சொல்றீக? சிலர் என்ன வகைன்னு கண்டே புடிக்க முடியாது.அந்த மாதிரி ஒரு வகை போல அந்த மனுஷன்”
“புடிக்காத பிள்ளையை கட்டும் போதே வேணான்னு சொல்லிருக்க வேண்டியது தானே அது என்ன கல்யாணம் பண்ணி புள்ளைய குடுத்து நடு வீதில விட்டுட்டு போறது”
“வுடுக அவுக பேச்சு எதுக்கு? ஆனா ஒன்னு கண்ணு இந்த மாதிரி மக்க மனுசாள் கூட மீனா பொழைச்சு வந்திருக்க முடியாது.அதை கொண்டுதேன் மீனா வெளில வந்தாக போல இல்லனா விதியை நொந்து அனுசரிச்சு போயிருக்கும்”
“பிள்ளையாரப்பா நல்லவேளை முடியல சாமி” புலம்பியவர் தனது மடியில் அசையும் மகளை குனிந்து பார்க்க வள்ளியப்பனும் பேச்சை விடுத்து ஒரு சிரிப்புடன் மகளை தான் பார்த்திருந்தார்.
“கண்ணு புள்ளைய எழுப்புக எதாவது சூடா குடிக்கட்டும் ஒன்னும் சாப்பிடல”
“ஹ்ம்ம்! என்ற கண்ணாத்தாள் மகளின் தலை கோதி அம்மாடி சாலா முழிச்சுக்க கண்ணு” மெதுவாக சாலாவின் கன்னம் தட்ட.பட்டென எழுந்து அமர்ந்தவள் வள்ளியப்பனை கண்டு  ஒரு நொடி முழித்து வைத்தாள்.
“ஐயா!”
“வாக வயித்துக்கு எதையாவது போட்டுட்டு வருவோம்”என்றதும் எழுந்து கொண்டவள் பெரும் தயக்கமாக,
“அவுக?”
“லட்சு மீனா அறைக்குள்ள இருக்காக பார்த்துபுட்டே போவோம் வாக” என்றதும் உடையையும், தலையும் சரி செய்து கொண்டு தகப்பன்,தாயோடு மீனாள் அறையை நோக்கி நடக்க.
அங்கே அறைக்கு வெளியில் பேரனின் கைகளை பற்றி கண்ணில் ஒத்தி கொண்டு நின்றார் அண்ணாமலை.உண்ணாமலையை லட்சுமணன் அனைத்திருந்தான்.ஏனோ அவர்களை பார்த்த கணத்தில் சாலாவுக்கு அப்படி ஒரு பயம் வர தன்னையும் அறியாமல் தகப்பன் கையை பிடித்து கொள்ள.
மகளின் செயலில் அப்படியே நின்று விட்டார் வள்ளியப்பன்,”என்னம்மா”
“அங்கன வேணாக ஐயா அவுக போவட்டும்” என்றதும் சிறு கண்டிப்புடன் மகளை குனிந்து பார்த்தவர்.
“தப்பு எதுக்கு நீக பயந்து வைக்கிறீக? உங்க உரிமையை விட கூடாது நேருக்கு நேர் நில்லுக. நம்ப மேல தப்பிருந்தாலும், இல்லாட்டியும் எதிரில் நின்னு பேசிப்புடனும்.இப்படி ஒதுங்கி நிற்க கூடாது பார்த்துக்கிடுங்க” என்றதும் சரியென்று மௌனமாக தலையசைத்து கொண்டாளே ஒழிய பயந்து கொண்டே தான் அவர்களை நெருங்கினாள்.
இவர்கள் நெருங்கவும் அவர்கள் விடைபெறவும் சரியாக இருந்தது.அண்ணாமலை வள்ளியப்பனை கண்டு சுருங்கிய முகத்துடன் கை கூப்ப.வள்ளியப்பனும் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டுக் கை கூப்ப.
அடுத்த நொடி அண்ணாமலை விறு விறுவென வெளியில் நடந்து விட்டார்.உண்ணா ஆச்சி தான் சற்று தேங்கி சாலாவின் மோவாயை கிள்ளி ஆசையாக முத்தம் வைத்து.”எங்க ஐயாவை பார்த்துக்கிடுங்க” என்று சொல்ல.மெதுவாகத் தலையசைத்தாள் சாலா மனமே இல்லாமல் பேரனை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு அவரும் வெளியில் நடந்து விட்டாள்.
லட்சுமணன் வள்ளியப்பனை பார்த்து புன்னகை செய்ய.பெரும் அயர்ச்சியாக நின்றவனைக் கண்டு,”லட்சு வூட்டுக்கு போயி வரீகளா?”
“ஆமா மாமா செத்த சாஞ்சு கொடுக்கனும். நீங்களும், அயித்தையும் இங்கன பார்த்துக்கிடுங்க ஆத்தா முழிக்க இன்னும் நேரம் புடிக்கும்”
“சரிக” என்றதும் கண்ணாத்தாள் சாவியை லட்சுவிடம் கொடுக்க.
“வா சாலா!” வெகு இயல்பாக அழைத்தவனைப் பெண்கள் இருவரும் அதிர்ந்து பார்க்க.சிறு புன்னகையை ஒழித்து மீனாள் அறைக்குள் நுழைந்து கொண்டார் வள்ளியப்பன்.
கண்ணாத்தாள் போகும் கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்பு தயங்கி,”சாலா இங்கன இருக்கட்டும் தம்புடு!”
“பசிக்குது அயித்த இங்கன அவுக இருந்தா சரி வராது ராவுக்கு இதில் சுட்டு எடுத்துட்டு வரோம்” என்றதும் அதற்கு மேல் தர்க்கம் செய்யாமல் மகளின் கைகளைப் பற்றித் தனது அருகில் வைத்துக் கொண்டு.
“சரி இதோ அனுப்பி வைக்கிறேன்” என்றதும் லட்சுமணன் எதுவும் பேசாமல் முன்னே செல்ல, சில அடிகள் தூரம் அவனைக் கடக்க விட்டு.
“சாலா இருட்டி வைக்ககுள்ள தம்புடுவை அனுப்பி வச்சிட்டு நீக வர வேணாம். நானும் ஐயாவும் அங்கன வந்திருவோம் என்ன?” என்றதும் தலையைச் சரி என்பது போல ஆட்ட.
“சரி போயிவாகச் சூதானம்” என்றவருக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.பல மணி நேரத்துக்கு முன் அண்ணாமலை பேசிய பேச்சை இன்னும் ஜீரணம் செய்ய முடியவில்லை கண்ணாத்தாளுக்கு என்ன தான் திருமண உறுதி செய்தாலும் உள்ளுக்குள் உறுத்தியது.
இந்த திருமணப் பேச்சுக்கு முதலில் அவள் மறுப்பு சொல்ல அடுக்கிய கரணங்கள்.இன்று மெய்ப்பட்டு நிற்க. அவளால் எப்படித் தாங்கி கொள்ள முடியும்.நல்ல குணம் கொண்டவனுக்காக எதையும் செய்யலாம் என்பது வள்ளியப்பன் கூற்று.அதற்காக சுயம் தொலைத்து பேச்சு வாங்கி நிற்க வேண்டுமா? என்பது கண்ணாத்தாள் வாதம்.ஒருபுறம் இந்தத் திருமணம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஒருபுறம் அவளும் பயந்து கொண்டு தான் இருந்தாள்.
கல் அடியை விடச் சொல் அடி அதிகக் காயத்தைக் கொடுக்கும் என்பது அவளது எண்ணம் அது உண்மையும் கூட அல்லவா.
அரைமணி நேரத்துக்குள் அரியக்குடியை அடைந்தார்கள் சாலாவும் ,லட்சுவும்.வீட்டுக்குள் நுழைந்தவுடன் தங்களது அறைக்குச் சென்று துணிகளை வைத்தவன்.அடுத்த இருபது நிமிடத்தில் குளித்து முடித்து வர.
அதற்குள் சுட, சுட வெள்ளை பண்ணியராம் செய்து அவனுக்குப் பிடித்துக் கார சட்டினியை கொடுக்க.தலையை நிமிராமல் கண் மூடி ரசித்து உண்டான்.காலையில் சாப்பிட்ட இட்டிலி.சுப நிகழ்வு என்றாலே களிப்பில் உணவு கூட இறங்காது என்பது எத்தகைய உண்மை.
உண்டு முடித்தவன் அவளைப் பார்க்காமலே “சீக்கரம் சாப்பிட்டு வாக” என்றுவிட்டு செல்ல.அவளுக்கும் நல்ல பசி என்பதால் உண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்து வர.அதற்குள் வீட்டுக்குள் இரண்டு நடை ,நடந்தவன் சாலா வரவை உணர்ந்து அவளது அறைக்குள் புகுந்து கொண்டான்.
“எங்கன போனாக?” என்று முனகி அவளது அறைக்குள் நுழைய. அங்கே பாய் விரித்து ஒய்யாரமாகப் படுத்து கொண்டவன் சிறுதும் சங்கடம் கொள்ளாமல் இரு கையை நீட்டி , “வாக” என்று அழைக்கப் பெரிதாகி அதிர்ந்தாள் சாலா.
“ப்ச்! சாலா!”
“என்ன விளையாட்டு பண்ணிக்கிட்டு கிடகீக” என்றவள் அவனை முறைத்து விட்டு வெளியில் செல்ல போக.
“செத்த நேரம் வாக சமத்தா மடியில படுத்துக் கிடப்பேன்”
” என்னது! அதெல்லாம் முடியாது” கண்டிப்பாக சொன்னவள் பதறி வெளில செல்ல பார்க்க.
“ப்ச்! தகப்பன் இல்லாத புள்ளங்க உடம்பும், மனசும் அலண்டு கிடக்கு. செத்த நேரம் உங்களை விட்டு கொடுங்களேன் இந்தப் போக்கத்தவன் கொஞ்சமா இளைப்பாறி கிட்டு போறேன்” பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு பேச அவனை கடிந்து கொள்ள முடியாமல்.
“என்ன? என்னன்னமோ பேசி வைக்கிறீக” என்றவள் அவனை நெருங்கி தலைமாட்டில் கால் நீட்டி அமர.அவளது மடியில் தஞ்சம் கொண்டவன் கண் மூடி படுத்துக் கொள்ள தவித்துப் போனாள் சாலா.
அவளது தவிப்பை உணர்ந்தவன் போல, “என்ன இது? என்கிட்டே என்னக பயம் இயல்பா இருக” என்றதும் பயம் போயி எரிச்சல் வர.
“நல்லா மடியில படுத்துகிட்டு ஜம்பம் பேசுக”
கண்களை மூடி கொண்டே, “உரிமை வாங்கி வச்சிருக்கேன் இனி யாரும் எதுவும் சொல்ல முடியாது. உங்கள பெத்துவுக முதற்கொண்டு” என்றதும் கண்களைப் பெரிதாக விரித்து அவனை குனிந்து பார்க்க.
“சாலா ஆச்சி உங்க லட்சு உண்மைக்கும் பாவம். நான் நல்ல மனநிலையில இல்ல, உங்கள கொண்டு அத்தினி தவிப்பையும் தனுச்சுக்க தேன் கூட்டிட்டு வந்தேன்.பயந்து வைக்காம, அடம் செய்யாம சொல் பேச்சு கேளுக” என்றவன் அவள் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி,
இனி தனியா எதையும் சுமக்க முடியாதுங்க சாலா ஆச்சி” அவனது பேச்சில் அதுவரை கோபமாக இருந்தவள்.அவனது பேச்சில் நெகிழ்ச்சி கொண்டு சிறு புன்னகையைக் கொடுத்து.அவன் கையின் மீது தனது கையை வைக்க அதனை இறுக்க பற்றியவள்.
“இப்போ கொஞ்சமா என் தவிப்பை தனிச்சுக்கலாம் என்ன சொல்றீக” என்றவனைப் புரியாமல் பார்த்தவள் தலையை வளைத்து தனது இதழ் கொண்டு சாலாவின் இதழ்களை மூட இதனை எதிர்பாராதவள் தவித்துத் தான் போனாள்.முடிந்த மட்டும் அவனது தவிப்பை தனித்தவன் மெல்லமாக அவளை விடுதலை செய்ய.சாலாவின் இரு உதடுகளும் எரிந்தது.
“ஸ்!..ஸ்!.. என்றவளை படுத்துக் கொண்டே பார்த்தவன் மிளகா குறைச்சு  வைக சாலா ஆச்சி பாருக உதடு காந்தி வைக்குது” என்றவனைப் படப் படவென அடித்து வைத்தாள் சாலா.அடித்தவளை தடுத்தவன் மீண்டும் அவளை வளைத்து இதழ் பதிக்க.இம்முறை பலமாக எதிர்த்தாள் சாலா.கோபமும்,ஆசையும் சரி விகிதம் அவளை வாட்ட பெரும் கோபத்தில் லட்சுவின் இதழில் பல் பதித்து விட்டாள் சாலா.
இத்தனை நாள் கண்ணியம் காத்தவன் உறுதி கொண்ட உரிமை கிடைக்கவும் பல வருடங்கள் சுமந்த வலியை பகிர ஆள் கிட்டவும் அவனுக்கு பிடித்த வகையில் பகிர தொடங்கி விட்டான் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!