Skip to content
Post Views: 2,309
அத்தியாயம் – 4
அரியக்குடியில்..
உச்சி வெயிலின் தாக்கம் வீட்டின் உள்ளும் காந்தியது போலும்.சாலாவிடம் அத்தனை அனல் அடித்தது.அன்று காரைக்குடியில் இருந்து வந்தது தான் சாலா யாரிடமும் பேசவில்லை.கண்ணாத்தாளும் வீடு வந்து சேர்ந்தும் வள்ளியப்பனிடம் அதனைப் பற்றிப் பேசவில்லை.மனைவியும்,மகளும் பேசவில்லை என்பதால் அவரும் அமைதியாகவே இருந்து கொண்டார்.
Advertisement
அன்றைய தினம் லட்சு கேட்டதற்கு வள்ளியப்பன் சொன்ன பதிலில் மீனாட்சியே அதிர்ந்து நிற்க.சில பல நிமிடங்கள் அனைவரும் மௌனம் கொண்டனர் .அதுவும் மீனாளின் மௌனம் இன்னும் என்னவோ போல் இருந்தது.
அதன்பின் ஒருவாறு தங்களைச் சமாளித்துக் கொண்டு வள்ளியப்பனும்,கண்ணாத்தாளும் உடனே கிளம்பி விடைபெற்று சென்றனர்.அப்போதும் மீனா மௌனமாகவே இருக்க.லட்சுமணன் தான் அவர்களை வழியனுப்பி வைத்தான்.
Advertisement
Advertisement
சாலாவின் முகம் இறுகி இருக்க. லட்சுமணன் பார்வை முழுவதும் வள்ளியப்பன்,கண்ணாத்தாள் மேல் மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்தது.மறந்தும் ஒரு ஆர்வமாக லட்சுமணன் சாலாவை பார்க்கவில்லை. அவளும் லட்சுமணனை பார்க்கவே இல்லை.
அன்று பிடித்த சூடு இன்றும் தணியாமல் இருந்த மகளைப் பார்த்தும் பாராமல் பார்த்திருந்தார் வள்ளியப்பன்.தக்காளி வத்தலை தரம் பிரித்து அதனைப் பையில் அடைத்து கொண்டிருந்தாள் சாலா.கோபத்தின் அளவு அவள் செய்யும் வேலையில் தெரிந்தது.அவள் பையைத் தூக்கி வீசிய அழகை பொறுத்து, பொறுத்து பார்த்த கண்ணாத்தாள் அதற்கு மேல் முடியாமல்.
Advertisement
“சாலா!” கொஞ்சம் கண்டிப்பு கலந்த குரலில் அழைக்க.
“ஹ்ம்ம்!” என்றாலே தவிர நிமிரவில்லை கை வேலையையும் நிறுத்தவில்லை.அவளது செயலில் கோபம் வர.வேகமாக வந்து அவள் கையில் இருந்த வத்தல் பையை வெடுக்கெனப் பிடுங்கிய கண்ணாத்தாள்.
“அது என்ன அப்படி ஒரு கோபம் வருது உனக்கு? இந்த லட்சணத்துல நீ வத்தல் போட்டா நாளை பின்னுக்கு ஒரு பைய வாங்க மாட்டான். சாலா தூக்கி வீசிய தினுசில் நொறுங்கி இருந்த பாக்கெட்டுகளைத் தூக்கி கண்ணாத்தாள் காட்ட.
அப்போது தான் அவள் செய்யும் அபத்தம் புரிந்தது போலும் ப்ச்! சலித்துத் தலையைப் பிடித்துக் கொண்டாள்.அதுவரை மனைவி, மகளைப் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியப்பன் பேச்சை தொடங்கினார்.அங்கிருந்து வந்த நாட்களாக அவரும் பேச முயற்சிக்கத் தக்க தருணம் பார்த்து அமைதி காத்தவர்.பெண்ணின் மனநிலையை அறிய வேண்டி இதோ பேச்சு கொடுத்தார்.
“சாலா!”
“சொல்லுக ஐயா!”
“என்ன கோபம் ஐயா கிட்ட சொல்லுக” என்றதும் கண்ணில் நீர் முட்டி கொண்டு வந்தது.
“எதுக்கு அழுகை நான் செஞ்சதை தப்புனு எண்ணி வைக்கிறீகளா?” மகளது மனநிலை தான் என்னவென்று தெரியவில்லை,ஆனால் அவளது கோபத்திற்கு உண்டான காரணம் தான் என்பதை அறிந்திருந்தார் போலும்.
“பின்ன இல்லையா?” மகளிடம் கேட்டதற்குக் கண்ணாத்தாள் பதில் சொன்னாள்.
“கண்ணு?”
“உங்க மனசுல இப்படி ஒரு எண்ணமிருக்குன்னு நான் எண்ணி பார்த்ததே இல்லை, சாலா தம்புடுவை விட மூப்பு”
“ப்ச்! இதெல்லாம் ஒரு காரணமா? மாசத்தைக் கணக்குல வைக்காத கண்ணு”
“அதை மட்டும் கணக்குல வைக்கல சாலாப்பா! மீனா என்ன எண்ணி வைப்பா? நன்றிக்கு கைம்மாறு செய்யுன்னு சொல்ற மாதிரி இருக்கு. காரணம் கொண்டு காரியம் சாதிக்கிறோம்னு எண்ணி வைப்பாங்க.முன்னுக்கு போல வசதி வாய்ப்பிருந்தாலும் தைரியமா பேசலாம் சாலாப்பா இப்போ நம்ப நிலைமை என்ன?
தம்புடு மருத்துவர் அவரைக் கொண்டு மீனாவுக்கு நல்ல இடம் பிடிக்க ஆசை இருக்கும் தானே.நம்பப் போயி வழிவிக்கப் பேசி நிக்கிறது நல்லவா இருக்கு சொல்லுக? நாளைக்கு அவங்க சொந்தமே பழி பேசும் சாலாப்பா.அதெல்லாம் தாங்குற சக்தி எனக்கில்லை. விரலுக்கு தக்கன வீக்கத்தை வாங்கி நிப்போம் சாலாப்பா!..
எந்த விதமான பேச்சுக்கு ஆளாகி நிக்க வேணாம்.இத்தினி வருஷம் வள்ளியப்பன் செட்டியாருன்னா ஒரு பெயர் இருக்கு அதை ஏன் நம்பலே கெடுத்து வைக்கனும்.கொடுத்தே பழக்கப்பட்ட கை ஏந்தி நிக்க வேணாம் சாலாப்பா”
கண்ணாத்தாள் வாதம் மிக சரியாகத் தான் இருந்தது.அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் கூறியது. அவள் வரையில் நடப்பை தாண்டி ஒரு வாழ்க்கையை அதில் இருக்கும் ஏற்ற, இறக்கத்தைத் தான் பெரிதாகப் பார்த்தால்,ஆனால் வள்ளியப்பன் பார்வை லட்சு சாலா என்று மட்டுமே வட்டமிட்டது.
“இது போல ஒரு பையன் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம் கண்ணு”
“வாஸ்தவம் தான் தம்புடு மாதிரி ஒரு பிள்ளை கிடைக்கத் தவம் தான் கிடைக்கனும் அதே அளவு நம்பளும் இருக்கனும் சாலாப்பா” என்றதும் கோபம் சுர்ரென ஏறியது சாலாவுக்கு அது என்ன தங்களை மட்டம் போல் ஒரு பேச்சு?
“இப்போ என்ன பேசுறீக? அப்போ எனக்குத் தகுதி இல்லை அப்படித்தானே நான் வேலை போகலையா உங்களுக்கு? அத்தினி கஷ்டமா இருந்தா சொல்லுக நான் எங்கனையாவது கிளம்பிப் போயிடுறேன்” என்றதும் இருவரும் பதறி விட்டனர்.
வள்ளியப்பன் வெடுக்கென எழுந்து மகளை நெருங்கி,”என்ன பேச்சு இது சாலா? நீக எம்மூட்டு லட்சுமி இது என்ன பேச்சு? என் மகளைக் கொண்டு சுயம் இருக்கப் போயித்தேன் லட்சுவை எடுக்க எண்ணி வச்சேன்” உன்னை எண்ணி மட்டுமே, உன் நாள் வாழ்வுக்காக மட்டுமே.அவனிடம் நீ இருந்தால் இன்னும் உன் வாழ்வு சிறக்கும் அதுக்கு மட்டுமே நான் ஆசை கொண்டேன்.இது ஒரு வகைச் சுயநலம் தான் என்பதை வள்ளியப்பன் சொல்லாமல் சொல்ல.
அதனையெல்லாம் கேட்கும் நிலையில் சாலா இல்லை,”ஐயா! இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க சிறுசுலையே லட்சுக்கு என்னைப் பிடிக்காது.இப்போதும் விலகித்தேன் நிப்பாக.எனக்கும் அவுக மேல அந்த மாதிரி எண்ணமெல்லாம் கிடையாது ஐயா.இந்த பேச்சை இதோட முடிச்சுக்கலாம்” ஒரே போடாகப் போட்டுவிட்டு சாலா உள்ளே சென்று விட.
அதற்கு மேல் வள்ளியப்பனால் என்ன சொல்லிவிட முடியும் முகம் வாடி போயி மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் அவரது வாட்டம் கண்டு மனம் தாளாமல்.
“சாலாப்பா!”
“ஹ்ம்ம்!”
“நான் சொல்றதை கொஞ்சம் எண்ணி பாருக சரியா பட்டா கேளுக, இல்லையா உங்க எண்ணப்படியே பண்ணிடலாம் என்ன?” கணவனின் மனமறிந்து அவர் போக்கிலே பேச்சை விட்டாள் கண்ணாத்தாள்.இந்த பேரிளம் பெண் இல்லையென்றால் பல சறுக்கலை வள்ளியப்பனால் கையாண்டு கடந்து வந்திருக்க முடியுமா என்ன?
“சொல்லு கண்ணு?”
“நீக மீ உங்க எண்ணத்தை சொன்னப்ப னா முகத்தைப் பார்க்கல. உங்க எண்ணம் சொன்ன நொடி திகைச்சுப் போயிட்டா.நம்பக் கிளம்பும் பொதுக் கூட அவ முகம் சரியில்லை.நம்ப எண்ணம் வச்சா போதுமா? அவ வரையில் பிள்ளையைப் பத்தி சில கனவு இருக்கும் சாலாப்பா.
நீக கேட்டு அவ மறுத்தா எத்தினி வலி. உங்களைக் கொண்டு எனக்கு அது இறக்கம் தானே சாலாப்பா.மீனா பேசாம இருந்ததே எனக்குச் சங்கடமா போச்சு” மனைவி சொன்னதும் தான் அன்று மீனாவின் மௌனம் அவருக்கு உரைத்தது.
இந்த கோணத்தில் அவர் எண்ணவே இல்லை அல்லவா,”நான் இதை எண்ணியே வைக்கல கண்ணு.பிள்ளைகளைப் பத்திதேன் எண்ணம் போச்சு.. ப்ச்! இப்போ என்ன கண்ணு பண்ண?”
“அப்படியே பேச்சை நிறுத்திக்குவோம் சாலாப்பா. இந்த தடவை சறுக்கு கொடுக்க நீக மட்டும் காரைக்குடி போயிட்டு வாக.மீனா பேச்சு கொடுத்தா மனசுல பட்டத்தைக் கேட்டேன்னு சொல்லி வைங்க முக்கியமா எனக்கும் சாலாக்கும் உங்க எண்ணம் தெரியாதுன்னு சொல்லிடுக.என்னைக் கொண்டு பிள்ளையைக் கொண்டு அவ எதுவும் தப்ப எண்ணி வைக்காம”என்றதும் சிறு புன்னகை கொண்டு.
“சரி” என்றவர் புன்னகை கொண்ட காரணம் உணர்ந்து.
“எங்களை நல்லவங்களா காட்டிக்க வேண்டி சொல்லல சாலப்பா பழகுனா பழக்கம் பழி சொல்லி நிக்கக் கூடாது அதேன் சொல்றேன் “
“புரியுது கண்ணு நான் உன்னை மாதிரி ஆழம் போயி நிக்கல அதை எண்ணி…” என்றவர் மீண்டும் புன்னகை செய்ய வெகு வருடங்கள் சென்று சிறு மயக்கம் கொண்டாள் கண்ணாத்தாள்.
அது என்னவோ தப்பை சுட்டி காட்டி நின்றால் தாழ்ந்து வந்து ஒப்புக்கொள்ளும் இந்த முதுமகன் மீதும் என்றும் தீரா காதல் தான் வந்தது ஆச்சிக்கு.எண்ணம் போல் வாழ்க்கை என்பார்களே அதற்குச் சான்று தருகிறேன் இதோ இந்தத் தம்பதிகளை.
இங்கு கதை இப்படி முடிய..
காரைக்குடியில்!…
இன்னும் ஒரு பரிட்சை என்ற நிலையில் காலையில் இருந்து படித்துக் கொண்டிருந்தவன்.இப்போது தான் புத்தகத்தைக் கீழே வைத்தான்.இடையில் சிறு உணவாக அப்பம் எடுத்து கொண்டான்.அது தான் இன்றைக்கு முழுமையும் அவனுக்கு.
கொஞ்சமாகக் கலைத்திருந்தவனைப் பார்த்தவாறு இருந்த மீனா.அங்கே வேலை செய்யும் விசாலாட்சியை அழைத்து, ” ஆச்சி தம்பியை வர சொல்லுக”
“இதோ ஆச்சி” என்றவர் முற்றத்தை தாண்டி உள் அறைக்குச் சென்று, “தம்பி ஆத்தா உங்களைக் கூப்புடுறாக”
“இதோ வரேன் ஆச்சி”என்றவன் கழுத்தை தேய்த்துக் கொண்டே வந்து மீனாவின் அருகில் அமர.அவனது சோர்ந்த முகத்தைப் பார்த்து அவனது கையுடன் தனது கையைக் கோர்த்துக் கொண்டார் மீனா இவர்களுக்குள் இது வழமை.
“ஆத்தா!”
“பரிட்சை எப்படி எழுதுனீக”
“சிரமம் இல்ல ஆத்தா நல்லா எழுதிருக்கேன்” சில நொடிகள் விட்டு.
“அண்ணாமலை அண்ணே எதோ வாய்ப்பு சொன்னாரே”துரத்து உறவு முறையில் உள்ளவர்.
“இந்த ஊரை தாண்டி போற எண்ணமில்லையே ஆத்தா சாதிக்கனும், ஆனா வேர் தாண்டி போகும் எண்ணமில்லை”என்றவன் மனநிலையை உள் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் மீனாள்.
“லட்சு!”
“ஆத்தா!”
“உங்ககுக்குள்ள சாலாவை கேட்க எண்ணம் எதைக் கொண்டு.அண்ணனுக்கு வேண்டியா?” என்றவர் மகனை ஆழம் பார்த்தார்.ஒருவாரம் பரிட்சை என்பதால் மீனா இதனைப் பற்றிப் பேசவில்லை.
அதுவும் இல்லாமல் அவளுக்குச் சிறு அதிர்வு இருந்தது.வள்ளியப்பன் எண்ணம் கண்டு அவளுக்கு மகிழ்ச்சி தான்,ஆனால் அந்நேரம் அவளது உணர்வுகள் செயல் படவிடவில்லை, சரியாக சிந்திக்க முடியவில்லை இது தான் மெய்.அவளது மௌனம் கண்டு இப்போது எண்ணி வருந்தினாள்.கண்ணாத்தாள் என்ன எண்ணி வைப்பார்? என்ற எண்ணம் இப்போது தான் வந்தது.
தாயின் கேள்வியில் சிறு புன்னகை புரிந்தவன் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டு, “அவளை ரொம்பப் புடிக்கும் படிப்பு முடிய யோசிச்சேன்” என்றவனை ஆச்சிரியமாகப் பார்த்தவர் கண்ணில் அத்தனை கேள்வி கணை.
“அவ பக்கமே இருக்க மாட்ட தானே. புள்ள ஆசையா வந்தா கூட முகத்தை முந்நூறு முழம் வச்சு பிள்ளையை விரட்டுவ.நீ ஆர்வமா பார்த்து கூடப் பார்க்கல தம்பி.உங்க உறவு இப்படிருக்கத் திடுதிப்புனு கட்டிக்கக் கேட்டா நான் என்ன எண்ணி வைக்க சொல்லுக”
“அதெல்லாம் இல்ல ஆத்தா, எப்படி சொல்ல… கொஞ்சமாக தடுமாறி இந்தப் பிடித்தம் பத்தி சொல்ல தெரியல, ஆனா ரொம்பப் புடிக்கும்” என்றவனைப் புன்னகையாகப் பார்த்த மீனா அவன் கன்னம் வருடி.
“அண்ணே வரட்டும் பேசுறேன்” தாயின் பேச்சுக்கு மறுப்பாக தலையை அசைத்தவன்.
“இப்போ வேணாம் இன்னும் ஒரு மாசம் போகட்டும் இந்த முறை சரக்கு வாங்க நானே அரியக்குடி போறேன்” என்றவன் மனதை படித்தவர் போல.
“போயிட்டு வாக”
“ஹ்ம்ம்! நீக இப்படியே இருக்கறதா எண்ணமா நடக்க முயற்சி பண்ணுக”
“இடுப்பு இழுக்குது தம்பி மெல்ல, மெல்ல நடக்க முயற்சி பண்ணுறேன்”
“பண்ணிடுக மருமக எடுக்கப் போறீக அவளைச் சுத்தி, சுத்தி வேலை வாங்க வேணாமா” என்றவன் பேச்சில் ஆச்சிரியம் கூட.
“தம்பிக்கு இப்படியெல்லாம் பேச வருமா?” சிறு குறும்பாகக் கேட்டு வைத்தாள் மீனா.பருவம் முழுதும் உழைப்புப் படிப்பில் கழிய.அதற்குள் தோள் தாண்டி வளர்ந்து நின்ற மகனை படிக்க விட்டுவிட்டால் போலும்.
தாயின் பேச்சில் இன்னும் குறும்பு மின்ன, “மீனா ஆச்சி பையனுக்குப் பேச்சுக் கம்மித்தேன்,ஆனா சாலா புருசனுக்குப் பேச்சு வரும்” என்றவன் பேச்சில் கண்ணைப் பெரிதாக விரித்தவர் எட்டி அவன் காதை பிடித்துத் திருகினார்.
“படவா”
“ஸ்ஸ்! போலியாக அலறியவன் உண்மையதேன் சொல்லுதேன்.அவ கிட்ட பேசலானா பொழைக்க முடியாது ஆத்தா. சாலா ஆச்சி பொல்லாத வாயாடி” என்றவன் பேச்சில் தன்னை மறந்து கல கலவெனச் சிரித்தார் மீனாள்.
லட்சுவின் பிடித்தம் காதலா என்று தெரியவில்லை,ஆனால் அவனது இந்த பிடித்தம் குடும்ப வாழ்வில் சிறு காவியத்தை படைக்கும் என்பதில் ஐய்யமில்லை.
error: Content is protected !!