Skip to content
Post Views: 11,885
இன்று அவள் திரும்பிச் செல்லவேண்டிய நாள் எடப்பள்ளி வந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது இதோடு நான்கு முறை வந்து சென்றுவிட்டான் இடையில் பெண்பார்க்கும் சடங்கிற்கு அனைவரையும் இங்கேயே அழைத்துவந்துவிட்டான்.
ஸ்வேதா வந்தே ஆக வேண்டும் என்று கரணம் பூஜாவும் பிடிவாதமாக நின்று வரவைத்தனர் அவள் திருமணத்திற்காக நான் இத்தனை தூரம் வரவேண்டுமா என்று வாதம் செய்தாள்.
“தேவை என்றால் வா இல்லையேல் போ” என்று விட்டுவிட்டான் கரண் “இவ பேர்ல சொத்து இருக்குனு என்னை இப்படி டார்ச்சர் பண்றா உனக்கு இருக்கு டி” என்று மனதில் மகளை வறுத்துக்கொண்டிருந்த ஸ்வேதாவிற்கு தெரியவில்லை அவளுக்கு எண்ணெய் சட்டியோடு ஒருவன் காத்திருக்கிறான் என்று
பெண் பார்ப்பதை குடும்ப வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றாள் ஸ்வேதா அவள் சொல்லும் எதையும் செய்வதில்லை என்ற முடிவோடு இருந்தவன் “திலோவிற்கு வேலை இருக்கிறது அங்கேயே சென்று பார்த்துக் கொள்ளலாம், பெண் பார்க்கும் சடங்கே என் குடும்பத்திற்க்காகத்தான் அவர்களே ஒன்றும் சொல்லாமல் வருகிறார்கள் பின் உங்களுக்கு என்ன” என்றான்.
Advertisement
“அப்படினா நீங்க எல்லாரும் போய்ப் பாத்துட்டு வாங்க எனக்கு ட்ராவல் செய்ய முடியல” என்றாள் ஸ்வேதா.
“அப்போ சரி எப்போ போகமுடியுமோ அப்போ போகலாம்” என்றவன் அதோடு கிளம்பி எடப்பள்ளி சென்றுவிட்டான்.
நான்கு நாட்கள் கரணும் ஸ்வேதாவும் கெஞ்சியபிறகு சரி வாங்க என்றான், மிக எளிமையாகவே தயாராகியிருந்தாள் திலோத்தமா, கீர்த்தனாவும் வந்திருந்தாள்.
Advertisement
சேனாவின் குடும்பத்தோடு இணக்கமாகப் பேசவும் பழகவும் அவளால் ஆனால் ஸ்வேதாவை பார்க்கக்கூட அவள் விரும்பவில்லை, சேனாவின் வீட்டினருக்கு இப்பொழுதே மகன் தாலி கட்டினால் கூடச் சம்மதமே திலோவும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த பெண் தானே, என்றால் சேனா மறுத்துவிட்டான் அனைத்து சடங்குகளும் முறைப்படி நடக்க வேண்டும் ஒன்று கூட விடக் கூடாது என்று.
Advertisement
“என்னால அதிக நாள் இங்க நிக்க முடியாது ஊருக்குப் போனும் ரெண்டு பேருமே மேஜர்… பிடிச்சுருக்கு அப்புறம் ஏன் வெய்ட் பண்ணனும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம்” என்ற ஸ்வேதாவை அனைவரும் வெறுப்போடு பார்க்க.
“ஏன்மா உண்மையிலே நீ பெத்தவ தானா!” என்றார் பூபதி பாண்டியன், சேனாவின் விழிகள் தன்னவளின் மீது படிந்தது தலை குனிந்து நின்றிருந்தவள் விழியிலிருந்து ஒருதுளி சிதறி விழுந்தது.
அவன் முகம் இறுக “மா நல்ல நாள் பாருங்க” என்றான்
Advertisement
வெண்மதி இன்னும் பத்து தினங்களில் நல்ல முகூர்த்த நாள் வருவதாகக் கூறினார் “அன்னைக்கு நிச்சயம் வெச்சுக்கலாம்” என்றான் அவன்.
“என்ன நிச்சயமா? அதுக்கெல்லாம் நேரமில்லை கல்யாணத்தை அன்னைக்கு வெச்சுக்கலாம்” என்ற ஸ்வேதாவை திரும்பியும் பார்க்காதவன் கரனின் பக்கம் திரும்பி “உங்க மனைவிக்கு நேரம் இல்லயாம் அதனால இன்னும் பத்து நாள்ல நிச்சயம், ஏற்பாடெல்லாம் தரமா இருக்கணும் எங்களுக்கு ஏதாவது பிடிக்கலைன்னா அடுத்த முகூர்த்தத்துல நிச்சயம் மூணு மாசம் கழிச்சு கல்யாணம்” என்றவன்.
“என்ன தீம் எப்படி வேணும் எல்லாத்தயும் நாளைக்கு வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்” என்றான் கரனின் கோபம் மொத்தமாக ஸ்வேதாவின் மீது திரும்பியது “வாயை வெச்சுகிட்டு சும்மா இருந்திருந்தா அவன் பாட்டுக்குப் போயிருப்பான்” என்று.
நிச்சயத்திற்கு வைர மோதிரம் வேண்டும் என்று நின்றான் மாப்பிள்ளை காண்பித்த எதுவுமே பிடிக்கவில்லை என்று நான்கு கடை ஏறி இறங்க வைத்தான் ஷெர்வானி டிசைன் செய்தே வேண்டும் என்று பிரபலமான டிசைனரை பிடித்தான், திலோவிற்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் உள்ளடக்கிய புபட் ஏற்பாடாகியது
அவளுக்கு பிடித்த நிறத்தில் பிடித்தமான வகையில் நிச்சயப்பட்டு டிசைன் செய்யப்பட்டது.
நிச்சயத்தை நடத்தி முடிப்பதற்குள் விழி பிதுங்கியது கரணுக்கு, பூஜா ஸ்வேதா இடையே சண்டை வெடித்தது “உனக்கும் சேர்த்து நாங்க வேலை செய்யணுமா பணம் கிடைச்சா வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவியா, உன் பங்கைச் சரியா கணக்கு சொல்லி வாங்கிட்டுதானே போவ ஒழுங்கா நீயும் சேர்ந்து செய் நாங்க மட்டும் ஏன் செலவு செய்யணும்”.
“பாதி பணம் நாங்க மீதி பணம் நீ குடு அவனோட எங்களால அலைய முடியல உன் வாயால தான் இவ்ளோ பிரச்சனை” என்று பூஜா அவளை வைத்து வாங்கினாள்.
மகளின் திருமணம் நடந்துவிட்டால் சொத்தில் ஒரு நல்ல பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஸ்வேதாவின் கணவன் அவளை இந்தியா அனுப்பியது, இப்பொழுது பணம் கேட்டால் ஏற்கனவே புகைந்துகொண்டு இருக்கும் உறவு மொத்தமாக முறிந்துவிடலாம்.
இப்பொழுதெல்லாம் அவள் அந்த உறவில் இருந்தும் வெளியில் வந்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் தான் இருக்கிறாள், சொத்து எப்படியும் கோடிகளைத் தொடும் அதை வைத்துக்கொண்டு தனியாகவே பிள்ளைகளுடன் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணமே.
“இப்போ என்கிட்டே காசு இல்ல நீங்கக் குடுங்க பணம் கைக்கு வந்ததும் என் பங்கு பணத்தை நான் கொடுக்குறேன்” என்றாள் கரண் மற்றும் பூஜாவிடம்.
இன்னும் திருமணத்துக்கு என்ன என்ன கூத்து நடக்குமோ என்ற பயம் இப்பொழுதே பிடித்து ஆட்டியது கரணை திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்க ஸ்வேதா ஊருக்குச் சென்றுவிட்டாள்.
எடப்பள்ளியிலிருந்து நேரே குன்னூரில் இருக்கும் அவர்களின் வீட்டிற்கு செல்வதாகவே முடிவு செய்யப்பட்டது தோட்டத்தில் வேலை நடப்பதால் அது முடிந்த பிறகு ஊருக்குச் செல்வதாகத் திட்டம்.
‘ மாலை வந்துவிடுவேன்’ என்று சொல்லியிருந்தான் வேலை கொஞ்சம் அதிகம் இருந்ததால் இப்பொழுதுதான் புறப்பட்டதாகவும் வருவதற்கு எப்படியும் இரவு ஆகிவிடும் என்று கூற பாண்டியம்மா பக்கத்தில் சென்று இருவருக்கும் உணவு வாங்கி வந்துவிட்டார்.
திருமணம் முடிவானதால் இனி இங்கிருக்க போவதில்லை என்று அங்கு இருப்பவர்களிடம் கூறிவிட்டாள், இப்பொழுது மூன்று நாட்களாக வைத்தியம் பார்க்க யாரும் வருவதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள் சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டாள்.
மருந்துகளை மட்டும் அட்டைப்பெட்டிகளில் எடுத்து வைத்திருந்தாள் வீட்டை, இன்றோடு காலி செய்வதாகக் கூறி அனைத்தையும் முடித்தாயிற்று.
சேனாபதி வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது அதோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தவளுக்கு மனதில் பயம் சூழ்ந்தது எப்படி வருவான் இந்தக் காற்றிலும் மழையிலும் என்று.
பாண்டியம்மா வாங்கிவந்த உணவை உண்டுவிட்டு இருவரும் படுத்துவிட்டனர் பாதி இரவுக்கு மேல் நல்ல மழை பிடித்துக்கொண்டது இரண்டு நாட்களாக விட்டு விட்டுப் பெய்த மழை இன்று அடித்துப் பெய்தது பலமான காற்றும் அடிக்கச் சத்தத்தில் விழித்துக்கொண்டாள் திலோத்தமா.
அவர் புறப்பட்டிருப்பாரே இந்த மழையில் எப்படி வருவார் என்ற பயம் சூழ அவனுக்கு உடனே அழைக்க முயன்றாள் எந்த அழைப்பும் போகவில்லை பாண்டியம்மாவும் எழுந்துவிட்டார்.
“என்ன பாப்பா இப்படி மழை பெய்யுது தம்பி எப்படி வரும்” என்றவர் ஜன்னலின் அருகில் சென்று பார்க்க வெளியில் கதவைத் தட்டும் ஓசை ‘வந்துவிட்டானா’ என்ற பரபரப்போடு ஓடிச் சென்று கதவைத் திறக்கக் கையில் ஒரு நங்கையை ஏந்தி நின்றிருந்தான் ஆடவன் ஒருவன்.
அவன் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் “என்னாச்சு” என்றவள் வழிவிட உள்ளே நுழைந்தவன் அங்கு விரிக்கப்பட்டிருந்த பாயில் அவளைப் படுக்கவைத்தான்.
“நீங்க டாக்ட்டர் தானே?” என்றவனை பார்த்தவள் “ஆமா… ஆனா நான் ஹோமியோ டாக்ட்டர்…” என்க.
“பரவாயில்ல கொஞ்சம் பாருங்களேன் பிவேர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ரொம்ப நேரமா கண்ணே முழிக்கல ப்ளீஸ்” என்க, அவசரமாகத் தன்னுடைய ஸ்டெதாஸ்கோப் தேடி எடுத்தவள் அவளைப் பரிசோத்தித்துவிட்டு “ஹாஸ்ப்பிட்டல் போயிருக்கலாமே” என்ற கேள்வியோடு அட்டைப்பெட்டியிலிருந்து மருந்தைத் தேடி எடுத்தாள்.
கொஞ்சம் ஹை டோஸ் மருந்தை எடுத்தாள், கடுகு போன்று சிறிதாக இருந்த மருந்தில் ஆறு உருண்டைகளை எடுத்தவள் அந்தப் பெண்ணின் கன்னத்தைத் தட்டி விழிக்கச் செய்து மருந்தை அவள் வாயில் இட்டாள்.
“கொஞ்சம் நேரம் ஆகும் பிவேர் குறைய” என்றவள் “மா பெட்ஷீட் எடுங்க அவங்களுக்கு போத்தி விடணும்” என்றாள், அவனுடைய கவனம் எல்லாம் அவன் மனைவிமீது மட்டுமே அவள் கையைப் பற்றிக்கொண்டு அருகிலே அமர்ந்திருந்தான்.
“அழகி பாருடி…” என்றவன் குரல் இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தது அரைமணி நேரம் சென்று மீண்டும் மருந்தைக் கொடுத்தாள், சிறிது நேரத்திற்கு பிறகு மெல்ல விழிகளைத் திறந்தாள் அவள், அருகில் அமர்ந்திருந்தவனை பார்த்தவள் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிந்தது ஒன்றும் பேசாமல் அவள் கையைத் தன்னுடைய கன்னத்தில் அழுத்தமாகப் பதித்துக்கொண்டான்.
“எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்லா இருக்கேன் வேந்தரே” என்றவள் நெற்றியில் இதழ் பதித்தவன் திலோவை திரும்பிப் பார்த்து “தேங்க்யூ தேங்க்யூ சோ மச்… சாரி கொஞ்சம் டென்சன் அதான் உங்க கேள்விக்குப் பதில் சொல்லல ஹாஸ்ப்பிட்டல் போகத்தான் கிளம்பினேன், மழைல இதுக்குமேல போகமுடியல, கெஸ்ட் ஹவுஸ் மெய்ட் சொன்னாங்க இங்க டாக்ட்டர் இருக்கிறதா” என்க.
“பரவாயில்ல என்னால புரிஞ்சுக்க முடியுது” என்றாள் திலோ, மீண்டும் மனைவியைப் பார்த்தவன் “ரொம்ப பயந்துட்டேன் அழகி” என்றவனை தன் அருகில் இழுத்து முத்தம் வைத்தாள்.
அவர்களைப் பார்த்திருந்த திலோவிற்கு தன்னவனின் நினைவு… அவர்களுக்கு இடையேயான அந்த அன்பையும் காதலையும் காணவே அத்தனை நிறைவாய் இருந்தது வருடங்கள் கடந்தாலும் இதே போன்ற காதலோடும் அன்போடும் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டது மனது.
“ஹாய் இப்போ ஒகே வா” என்று அருகில் வந்தவளை பார்த்தவள் எழமுயல, கைபிடித்து அவளை எழுப்பித் தன் மார்பில் சாய்த்து அமர்த்தினான் அவன்.
“ஹ்ம்… நல்லா இருக்கேன் சாரி உங்களைக் கஷ்டப்படுத்திட்டோம்” என்றாள் அவள்.
“அச்சோ அப்படிலாம் இல்ல வீட்டைக் காலி பண்றேன் அதனால மருந்தை எல்லாம் எடுத்துவெச்ட்டேன் வேற ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவள்.
“நீங்க இந்த ஊரா நான் பாத்ததில்லையே” என்றாள் திலோ.
“இல்ல நாங்க சென்னை சும்மா ஒரு வாரம் தங்க வந்தோம் திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு, கூடப் பிரென்ட் பாமிலியும் வந்திருக்காங்க சோப்பசங்க அவங்க கூட இருக்காங்க” என்றவள்.
“சாரி உங்க பேர் கூடக் கேக்கல” என்க.
“திலோத்தமா…” என்றாள் இவள் “அழகான பேர்” என்றவள் “இவர் என் கணவர் பாரி வேந்தன் நான் இவரோட அழகி” என்றவள் “என் பேர் அலக்நந்தா பாரிவேந்தன்” என்றாள் கணவனைப் பார்த்துக்கொண்டே அந்தப் பேரைச் சொல்வதில்கூட அத்தனை பெருமை அவளிடம்.
மழை கொஞ்சம் விட்டிருக்க சில மருந்துகளை அவர்களின் கையில் கொடுத்தவள் “ரெண்டு நாள் சாப்பிடுங்க போதும்” என்றாள்.
“எவ்ளோ ஆச்சு” என்று பாரிவேந்தன் பணம் எடுக்க “ப்ளீஸ் அதெல்லாம் வேண்டாம் நான் இதைக் காசுக்காகச் செய்யல” என்றவள் வாயிலில் கேட்ட சத்தத்தில் வேகமாகக் கதவை நோக்கி ஓடினாள்.
மழையில் நனைந்துகொண்டே படியேறியவனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் திலோத்தமா “ஏய் ஒண்ணுமில்லடா பத்திரமா வந்துட்டேன்” என்றவன் அவளைத் தன்னோடு சேர்த்தனைக்க, வேந்தரும் அவன் அழகியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர்.
“பயந்துட்டேன்” என்றவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் இதழில் முத்தமிட்டு “தெரியும் அதான் வேகமா வந்துட்டேன்” என்றவனின் அணைப்பில் தன்னை பொருத்திக்கொண்டாள்.
“அந்தப் பொண்ணு எவ்ளோ குட்டியா இருக்கா அவர் பக்கத்துல இல்லங்க!” என்ற மனைவியைப் பின்னிலிருந்து அனைத்துக்கொண்டவன்.
“ஹ்ம்ம்… அது காதல் அழகி எந்தச் சட்டதிட்டங்களும் இல்லை எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காது” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அப்பொழுதுதான் சேனாபதி அவர்களைக் கவனித்தான் “திலோ இவங்க” என்க.
“அச்சோ! உங்கள பாத்ததும் எல்லாம் மறந்துட்டேன் இவங்க” என்று அறிமுகம் செய்ய வர “ஐ ஆம் பாரிவேந்தன் இவங்க என் மனைவி அலக்நந்தா” என்றான் பாரி.
இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர் அலக்நந்தாவை மீண்டும் ஒருமுறை பரிசோதித்தவள் “இப்போ அவங்க ஒகே தலைக்குக் குளிக்க வேண்டாம் ஒரு ரெண்டு நாள் இந்த மருந்தை எடுத்தா போதும்” என்றவள் அவர்களைத் தயக்கமாகப் பார்த்து “இல்ல உங்களுக்கு விருப்பம் இருந்தா எடுத்தா போதும்” என்க.
அவள் கையைப் பிடித்த அலக்நந்தா “கண்டிப்பா உங்க மருந்தைத்தான் எடுப்பேன், என் குழந்தைகளைக்கூட கண்ணு தொறந்து பாக்க முடியாம இருந்தேன் இப்போ இவ்ளோ திடமா இருக்கேன் தேங்க்யூ” என்றாள் உளமார.
அனைவருக்கும் சூடாகப் பிளாக் டி கொண்டுவந்தார் பாண்டியம்மா, அந்த மழை இரவுக்கு இதமாக அதைக் குடித்து இவர்களிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றனர் வேந்தனும் அவன் அழகியும்.
error: Content is protected !!