Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமனவீணையின் புதுராகமே

‘ ராகம் ‘ – 5.2

“ஏய் என்னடி இது நிஜமாவே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட நான் கூட அம்மா கேட்டதுக்கு விளையாட்டுக்கு சொன்னேன்னு நினச்சேன் ஆனா நீ இவ்ளோ சீரியஸா இருக்க.., அப்பா கிட்ட நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லிட்ட..”

அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் ‘உனக்கு ஒன்னு தெரியுமா விஷ்ணு..??’ என்றாள் சாப்பிட்டு கொண்டிருந்த வேர்க்கடலையை அவனுக்கும் பகிர்ந்து கொடுத்தவாறு,

‘என்னது..??’ 

‘விஷ்ணு அப்பா எவ்ளோ கோபப்பட்டார் என்னல்லாம் பேசினார் நீயும்  பார்த்ததானே..??’



Advertisement

‘ஆமா அதுக்கும் உன் பதிலுக்கும் என்னடி சம்பந்தம்’

‘இருக்குடா பொறுமையா கேளு, டேய் விஷ்ணு ஒரு பொண்ணுக்கு  கல்யாணத்துக்கு அப்புறம் தான் நிஜமான சுதந்திரமே கிடைக்குமாம் அப்பா அம்மா கூட இருக்க வரை இப்படி தான் நம்மோட கனவு லட்சியம் எதையும் செய்ய விடாம தடுத்துட்டே இருப்பாங்களாம்.

‘அப்படியா..?? இது யார் சொன்னா..??’

Advertisement

‘டேய் இந்த **** குக்கிங் சேனல்ல வருவாங்களே ஒரு அக்கா அவங்க தான்டா ஒரு வ்லாக்ல சொன்னாங்க… அவங்களுக்கும்  கல்யாணத்துக்கு முன்னாடி என்னை மாதிரியே நிறைய ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருந்ததாம் ஆனா அவர் ஹஸ்பன்ட் புல் ப்ரீடம் கொடுத்தாங்களாம் என்ன வேணுமோ செய்துக்கோன்னு சொல்லி.., அவங்க மட்டும் இல்ல பேஸ்புக்ல ஒரு அண்ணா டெயிலி நைட் போஸ்ட் போடுவாரே  அவர் கூட அவரோட வைப்பை எப்படி எல்லாம் தாங்குவேன்னு ஒரு இன்டர்வியூல சொல்லி இருந்தாங்க அப்புறம் இன்ஸ்ட்டால நம்ம பேவேரெட்  கூட இதே தான் சொன்னாங்க..’

Advertisement

‘அதனால இந்த முடிவா..??’

‘ஆமாடா நான் இங்க இருக்க வரைக்கும் என்னோட யூடியுபர் கனவு நிறைவேறாது.., அப்பாவும் அம்மாவும் என்னை எதையும் செய்ய விடாம தடுத்துட்டே இருப்பாங்க ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அதே என் ஹஸ்பண்ட் அப்படி பண்ண மாட்டார் இல்ல அதான் ஒத்துக்கிட்டேன், அதே சமயம்  வாழ்க்கைக்காக லட்சியத்தை இழக்க முடியாது பாரு’  என்று கெத்தாக தம்பியை பார்க்க, 

‘அப்போ இங்க இருந்து தப்பிக்க, யூடியூபர் கனவை நிறைவேத்த தான் கல்யாணம் பண்ணிக்கிறியா..??உன்னோட பியூச்சர் ஹஸ்பண்ட் பத்தி  உனக்கு எந்த கனவும் இல்லையா..??’

Advertisement

‘ஏன் இல்லாம..??’

‘அப்போ இருக்கா..??’

‘ஆமாடா அதெல்லாம் நிறையவே இருக்கு’ என்றவள் தன் கைபேசியை எடுத்து குறிப்பிட்ட அப்ளிகேஷனை திறந்து தம்பியிடம் காட்டி, 

‘இதோ பார் ஒரு ஹஸ்பண்ட் எப்படி இருக்கனும்ன்னு இதுல தெளிவா கொடுத்திருக்காங்க.., இந்த க்ரைட்டீரியால வர மாப்பிள்ளை யாரா இருந்தாலும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணலாமாம்டா’

அவனும் சில நொடிகள் அதை பார்த்தவன் அவளிடம், “என்னென்ன க்ரைட்டீரியாடி(criteria) சொல்லு யாழி நாளைக்கு எனக்கும் யூஸ் ஆகும்” என்று விஷ்ணு கேட்க, 

‘முதல்ல மாப்பிள்ளை  நல்லா ஹைட்டா இருக்கணும்’

‘ஏன்..?? அது என்னடி நல்ல ஹைட் ஏன் என்னை மாதிரி நார்மலா இருந்தா ஆகாதா…??’

‘அப்படி இல்லடா.., இப்போ எல்லாம் டால் பாய் ஷார்ட் கேர்ள் தான் விஷ்ணு ட்ரெண்ட்’ 

‘அட ஆமால்ல மறந்தே போயிட்டேன்.., சரி அடுத்து’

‘பியர்ட் வச்சி இருக்கணும்’

‘எதுக்குடி..??’

‘என்னடா கேள்வி இது..?? அப்பதான் ஹாண்ட்ஸ்ஸமா மேன்லியா இருப்பாங்க நாங்க ரெண்டு பெரும் போட்டோ எடுத்து ஷார்ட்ஸ்.., இன்ஸ்ட்டா ஸ்டோரி fb போஸ்ட் போடறப்போ  கெத்தா மேட் பார் ஈச் அதரா இருக்கும்’ என்று விழிகள் மின்ன கூற, 

‘ஆமாடி சரியா சொன்ன இப்போல்லாம் கோஹ்லி, தோனி, நம்ம தளபதி எல்லாம் கூட தாடி வச்சி இருக்காங்க என்று நிறுத்தியவன்,  ஏன் யாழி அப்போ நானும் தாடி வைக்கணுமா..?’ என்று கவலையுடன் கேட்க, 

‘என்னடா இப்படி கேட்கிற..?? கண்டிப்பா வைக்கணும் இல்ல உனக்கு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் தம்பி’

‘யாழி இன்னும் மீசையே ஒழுங்கா வளரலையே தாடிக்கு நான் என்ன பண்ண..??’

‘தம்பி கூகுள் எதுக்கு இருக்கு..?? நம்ம கூகுலாண்டவரை  கேளு எப்படி வேகமா மீசை தாடி வளரணும்னு அவரே சொல்லுவாரு’ என்றாள்.

‘ஹ்ம்ம் நான் பார்க்கிறேன்’ என்றவன் போனை பார்த்தவாறே,

‘அப்புறம் வேற என்ன ஆசை இருக்கு’

‘நல்லா சம்பாதிக்கிறவனா இருக்கணும், கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கணும், தினமும் அவுட்டிங் கூட்டிட்டு போகணும், மன்த்லி ஒன்ஸ் வெக்கேஷன் போகணும், இயர்லி ஒன்ஸ் அப்ராட் கூட்டிட்டு போகணும் மொத்ததுல லைப்பை என்ஜாய் பண்ண தெரிஞ்சவனா இரு…’

‘ஏய் இரு இரு என்னடி லிஸ்ட் பெருசா போகுது’

‘இல்லடா அவ்ளோ தான், கடைசியா ஒன்னே ஒன்னு அதோட முடிஞ்சது..’

‘என்னது அது..??’

‘கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம் கூட்டிட்டு போகணும்’

‘அடிப்பாவி ஏன்டி..??’

‘டேய் லூசு என்னா பேசுற கும்பலா இருந்தா நம்மளோட தனித்துவமே தெரியாது, நம்மளை சிந்திக்கவே விடாம சமையல் ரூமோட முடக்கி வச்சிடுவாங்க’

“பொண்ணுங்களுக்கு செல்ப் ஐடெண்ட்டிட்டி ரொம்ப முக்கியம் தம்பி”

‘ஏய் என்னடி என்னென்னமோ பேசுற..?? என் கூடவே சுத்திட்டு இருக்க நீ எப்போ இதெல்லாம் கத்துகிட்ட..??’ என்று விஷ்ணு அவளை புரியாமல் பார்க்க,

“டேய் அதான் இன்ஸ்ட்டால ஒரு மேமை நான் பாலோ பண்றேன்னு சொல்லுவேனே அவங்க அடிக்கடி இதை தான் சொல்லிட்டே இருப்பாங்க…, அதோட இப்போ எல்லாம் நியூக்ளியர் பாமிலி  தான்டா ட்ரென்ட், நீ பார்த்தது இல்ல.. எத்தனை ஹஸ்பன்ட் வைப் தனியா இருக்கிறதால தான் அவங்க ப்ரபெஷன்ல அச்சீவ் பண்ண முடியுதுன்னு சொல்லி ஸ்டோரீஸ் போடுறாங்க நீ பார்த்தது இல்ல’ என்று கேட்க,

‘ஆமா ஆமா பார்த்திருக்கேன்’ என்று அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே சென்றது.

**********************************

பெங்களூரில் தன் அறையின் பால்கனியில் ஒற்றை காலை சுவரில் பதித்து கைகளை தலைக்கு பின் கோர்த்து கொண்டு நின்றிருந்த அதிர்துடியனின் பார்வை வானில் மின்னிக்கொண்டு இருந்த ஒற்றை நட்சத்திரத்தின் மீது பதிந்திருந்தது.

இருண்ட வானில் தோன்றிய ஒற்றை ஒளிக்கீற்று அன்று யாழியின் முகத்தில் அந்தி சூரியனின் ஜூவாலையில்  முக்குளித்ததில்  மின்னி ஒளிர்ந்த  மூக்குத்தியை நினைவு படுத்தி  அவனை பாடாய் படுத்தி எடுத்தது.

மீண்டும் மீண்டும் அவள் முகமும் சிரிப்பும், கன்னகுழியும், மூக்குத்தியும் அவனை அவன் மனதை,  அவன் சிந்தையை,அவனனுமதி இன்றி ஆக்கிரமிக்க தொடங்கி இருந்தது.

முதல் பார்வையிலேயே யார்..?? என்னவென்றே தெரியாத பெண்ணவள் மீது காதல் கொண்டு இத்தனை தவித்து தத்தளிப்போம் என்று அதிர்துடியன் நேற்று வரை கனவிலும் நினைத்ததில்லை, திருவண்ணாமலையில் குடும்பத்தாரை தம்பியுடன் முதலில் அனுப்பிவிட்டவன் அவன் மட்டும் தாமதாகவே கிளம்பி இருந்தான்.., 

கிரிவலப்பாதையில், கோவிலில், நடைபாதையில், கடைகளில் எங்கேனும் யாழி தென்படுகிறாளா என்று அவளை தேடி கலைத்து வீடு வந்து சேர்ந்தவன் காலையில் இருந்து வேலையில் மும்முரமாக ஈடுபட்டு மனதை கட்டுபடுத்த முனைந்த போதும் பெயர் கூட தெரியாத பெண்ணவளின் நினைவுகள்  வேலை நேரத்திலும் துரத்தி வதைத்து ஆடவனை தடுமாற செய்தது.

வேலை நேரத்திலேயே கட்டுபாடின்றி அவனை ஆட்டிபடைக்கும் பெண்ணின் நினைவுகள் இப்போது அவன் அறையில் தனிமையில் சொல்லவும் வேண்டுமா..??

முகத்தில் புன்னகை தவழ, ‘யார் நீ..?? என் மூக்குத்தி அழகி’ என்று வானை வெறித்தவாறு ஒற்றை நட்சத்திரத்திடம் பேச தொடங்கி இருந்தவன் இறுதியில் மூச்சை ஆழ்ந்து எடுத்து விட்டு வலக்கரம் கொண்டு நெஞ்சை நீவிவிட்டுக்கொள்ள அப்போதும் விடாமல் சுழற்றி அடித்து கொண்டிருந்தாள் யாழி.

அதே நேரம் மேஜையில் இருந்த அவன் கைபேசி ஒலிக்க,

‘சொல்லுங்கப்பா’ என்றான். 

‘எவ்ளோ நேரம் உனக்கு ட்ரை பண்றது அதி லைனே கிடைக்கலை’

‘அது இன்டீரியர் பிளேஸ் அதான் டவர் கிடைக்கலை போல ஆனா டிரைவ் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்கு மெசேஜ் பண்ணி இருந்தேனே’

‘பார்த்தேன்ப்பா ஆனா நீ தான் டிரைவிங்ல மொபைல் சைலென்ட்ல போட்டுடுவியே, எங்கயாவது ப்ரேக் எடுத்து நீயா கூப்பிடுவன்னு காத்திருந்தேன்’

‘இல்லப்பா, இங்க ரீச் ஆனதும் கிளைன்ட்ஸ் எல்லாரும் காத்திருக்கவும் என்னால கூப்பிட முடியலை சரி என்ன விஷயம் சொல்லுங்க’ என்றான் மீண்டும் ஒற்றை நட்சத்திரத்தை பார்த்தவாறே,

‘அதி உனக்கு ஒரு பொண்ணோட போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு’

‘ப்பா என்னப்பா இது எப்பப்பாரு என்று சலித்து கொண்டவன் கொஞ்சம் உங்க பெண் பார்க்கும் படலத்துக்கு ப்ரேக் விடுங்க, இப்போ எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்றீங்க எதுவா இருந்தாலும் நான் வந்த பிற…’ என்று அவன் பேசிக்கொண்டே செல்ல ,

‘நீதானேபா உன் கல்யாண பொறுப்பை எங்க கிட்ட கொடுத்து எங்களுக்கு பிடிச்ச பெண்ணை காட்டினா கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்ன..??’ என்று கேட்க ,

வாஸ்த்தவம் தான் ஆனால் அது யாழி அவன் மனதில் நுழையும் முன் இப்போது அப்படி இல்லையே..!

‘ஆமாப்பா… ஆனா இப்போ எனக்கு..’

‘என்ன சொல்லபோற நீ..?? திரும்பவும் இன்ட்ரெஸ்ட் இல்ல அதானே..?? இரு இரு எதுவா இருந்தாலும்  நான் சொல்றதை முழுசா கேளு அப்புறம் பேசு’ என்றார்.

‘சரி சொல்லுங்க’

‘இப்போ நான் அனுப்பி இருக்கிறது நம்ம மகேஷ்வரனோட பொண்ணு  கிரிவலத்துல ஒரு பெண்ணை பார்த்ததா உங்க அம்மா சொல்லிட்டு இருந்தா பாரு அது இந்த பொண்ணு தான் பேரு யாழி..,’

‘ப்பா யாரா இருந்தா எனக்கென்ன..?? இப்போ எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல கொஞ்ச நாள் டைம் கொடுங்க நான் உங்ககிட்ட நேர்ல வந்து பேசுறேன்’

‘அதி இது என்ன பேச்சு.., உங்க அம்மா அந்த பெண்ணை மருமகளாக்கனும்ன்னு ரொம்ப ஆசைப்படறா , எனக்காக ஒரே ஒரு முறை பாரு உனக்கும் பிடிக்கும்’ 

மனமெங்கும் யாழி நிறைந்து கிடக்க இப்போது தந்தைக்கு சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால் பேச்சை வளர்க்காமல்  ‘சரிப்பா’ என்று கைபேசியை அணைத்தான்.

 ஆனால் வைத்து விட்டவனுக்கு, ‘மிஸ்டர் மகேஷ்க்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்கா..??’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் இப்போது  அது பற்றிய ஆராய்ச்சியில் இறங்க அவன் தயாராக இல்லை நெஞ்சில் பதித்த கரத்தை கொண்டு மீண்டும் வருடிவிட்டு கொண்டே  வானில் மின்னிய நட்சத்திரத்தில் பார்வையை நிலைக்க விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!