Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மயில் தோகையாய் பல கனவுகள் 5

அத்தியாயம் 5

கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

********
வயநாடு…

பசுமை நிறைந்த இயற்கையும், உடலை வருடி செல்லும் இதமான தென்றலும் தன்னை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை என்னும் படியான மனோநிலையில், தன் அலுவல் அறையில் வீற்றிருந்தான் மாதவ்.



Advertisement

எப்போதும் இப்படியான மனநிலையில் அவன் இருந்ததில்லை. அவனின் தாயின் மரணத்திற்கு பின், தந்தையை விட்டு தாய் வழி பாட்டியிடம் தமிழகத்தில் வளர்ந்த போது, அவனின் மனதில் அது பெரிதான பாதிப்பை கொடுக்கவில்லை.

பின் படிப்பை முடித்து மீண்டும் இங்கே, அவனின் தந்தை தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் தொழிலில் முனைப்போடு தன்னை ஈடுபடுத்தி, தங்களின் ஒரு ஹோட்டலை இன்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக செயல்பட செய்த இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட இது போன்ற மனநிலை அவனை ஆட்கொள்ள வில்லை…

இதனை சரி செய்வதற்கான வழி அவனுக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரிந்த போதும், அதை செயல்படுத்தும் நேரம் இதுவல்ல என்று தள்ளி வைத்தது பிழையோ என்ற எண்ணம் மட்டுமே இப்போது அவனை ஆட்டுவித்து கொண்டிருந்தது….

Advertisement

யாழினி அருகே இருந்த வரை கூட அவளிடம் தான் இந்த அளவு நேசம் கொண்டிருக்கிறோமா என்பதை உணராதவனுக்கு அவளின் பிரிவு நன்கு உணர்த்திவிட்டது, அவனுக்கு அவனின் மனதை…

Advertisement

இனியும் எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்காமல், உடனடியாக யாழினி வந்த உடன் பேசி, இதற்கு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மனதால் ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகே, சிறிது தனது அலுவலை கவனிக்க முடிந்தது அவனால்….

ஆனால் நினைப்பது எதுவானாலும் அது மட்டுமே அவர்கள் கையில்… செயல்படுத்துவதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் நம் கண்ணுக்கே அகப்படாத அந்த விதியின் வசம் என்பதை மாதவ் உணரவே இல்லை….

மகனின் முகம் பார்த்தே அவனின் நிலை உணரும் கிருஷ்ணனும், தன் உறவுமுறை ஒருவரின் மகள் திருமண விழாவிற்காக வெளியூர் சென்றிருக்க, அது மாதவிற்கு சாதகமாகி போனது.. இல்லாவிட்டால் அவனால் தந்தை கேட்ட பின் மறைக்க முடியாது எந்த விசயத்தையும்….

Advertisement

ஒருவேளை அவன் சொல்லியிருக்க வேண்டுமோ…?! அவன் வெளிப்படுத்தாது விட்டதன் பலனை, அவர் திரும்பி வரும் போது, அவர் செய்த செயலில், அனைத்தும் தலைகீழாகி போகுமென்பது அறியாது போனானே….

[the_ad id=”6605″]

வெளியூரில் இருந்து இரவு தான் திரும்பியிருந்த கிருஷ்ணன், காலை ஓய்வுக்கு பின், மாதவ் பேலஸ் வந்தவர் நேராக சென்றது மாதவிடம் தான்…

அவரின் திடீர் வருகையே அதிர்ச்சி எனில், அவர் கேட்ட கேள்வியில் அதீத குழப்பத்திற்கு ஆளானான் மாதவ்…

“மாதவ் கண்ணா, நம்ம காட்டேஜ்ல விஐபீ’ஸ் தங்குற பகுதிக்கு இன்சார்ஜ் இதுவரை ஜான் தானே இருக்கான்….?!” என்றிட,

“ஆமாம் அப்பா, பட் எதுக்கு இப்ப திடீர்ன்னு வந்து அதை கேட்கறீங்க..?! எதாவது முக்கியமான விசயமா..?! இல்ல எதாவது கம்ப்ளைன்ட் வந்திருக்கா?! எனக்கு அப்படி எதுவும் வரலையே… எல்லாமே சரியா தான் போயிட்டு இருக்கு.. அப்புறம் எதுக்கு இப்படி..?!” என்று ‘தனக்கே தெரியாது எதாவது தவறு நடந்துவிட்டதோ?! தான் இருந்த மனகுழப்பதில், கடமையை சரியாக செய்யாது விட்டுவிட்டோமோ?!’ என்று பதட்டத்தோடு கேட்க,

“இல்லப்பா, ஒரு சின்ன சேன்ஜ்.. இனி யாழினியை அந்த பகுதி முழுவதுக்கும் இன்சார்ஜரா அப்பாயிண்ட் பண்ணிடு….

அதோட ஜானை இங்கே மெயின் இன்சார்ஜர் போஸ்ட்ல மாத்திடு….” என்று சொல்லி மாதவின் தலையில் அலுங்காமல் பெரிய இடியை இறக்கினார் கிருஷ்ணன்.

ஏனெனில் அந்த பகுதிக்கு யாழினி சென்றால், அவளின் அனைத்து ரிப்போர்ட்டும் நேரடியாக கிருஷ்ணன் பார்வைக்கு மட்டுமே செல்லும், அப்புறம் அவளை பார்ப்பது எப்படி?! என்று யோசித்து, ஒரு நொடி ஜர்க்கானவன்,

“எதுக்காக ஜானை இங்க மாத்தனுமின்னு சொல்றீங்க… அப்பா. ஜான் அங்கே எல்லாத்தையும் சரியா தானே செய்யறார். அதோட அவருக்கு எக்ஸ்பீரியஸ் அதிகம்… பட் யாழினி…..???” என்று தந்தையின் மனதை அறிய கேட்க,

“கண்ணா, நீ சொல்றது உண்மை தான். நான் ஜானை குறை சொல்லலை.. பட்,
யாழினி ரொம்ப ஹார்ப் அண்ட் பார்பெக்ஷனிஸ்ட்… சோ அவ அங்க இருந்தா இன்னுமே நல்லா இருக்குமின்னு ஒரு தாட் அதான்…

அதோட அவளுக்கும் ப்ரமோஷன் வேணாமா… அப்புறம் யாழினி லீவ் முடுஞ்சு வந்தாச்சா….?!” என்று அடுத்த கேள்வியை கேட்க,

‘மாதவ்.. எப்படியும் யாழினி வந்தா நீ அவகிட்ட பேசி அவளோட சம்மதத்தை வாங்க போற.. அவ உன் லவ்வை அக்சப்ட் பண்ணிட்ட உடனே, நீ அப்பாகிட்ட பேசிட்டா போதும், அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சிடுவாரு அப்பா.. அப்புறம் உன் மனைவியா ப்ரமோஷன் கொடுத்து உன் கூடவே வச்சுக்க போற…. சோ, இப்ப அவரு சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டு..’ என்ற மனசாட்சியின் வார்த்தைக்கு மதிப்பளித்தவன்,

தந்தை இறுதியாய் கேட்ட கேள்விக்கு விடையாய், “நோ ப்பா.. லீவ் எக்ஸ்டென்ட் பண்ணியிருக்கா.. ஐ திங் நெக்ஸ் வீக் வந்திடுவான்னு நினைக்கிறேன்… வந்ததும் அவளை அந்த சைட் மாத்திடுறேன்….” என்று படபடவென சொல்லியவன், தந்தையின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில், பெண்கள் எல்லாரையும் மரியாதை பன்மையில் மட்டுமே சொல்லும் தான், இப்போது தந்தை முன் யாழினியை உரிமையோடு ஒருமையில் பேசியிருப்பது புரிய, அவரை அதை பற்றி மேலும் சிந்திக்க விடக்கூடாது என்ற முடிவோடு,

“அப்பா, நீங்க இல்லாத போது… ” என்று ஆரம்பித்தவன், அங்கே நடந்த மாற்றம் குறித்தும், மற்ற கிளை களில் இருந்து வந்திருக்கும் பீட்பேக் பற்றியும் பேசி, அவரின் சிந்தனையை திசை திருப்பிய பின், அவரை வெளியே அனுப்பிவிட்டு, நிம்மதி பெருமூச்சை வெளியிட்டான்.

நாட்கள் அதன் பின் வேகமாய் கடக்க, மாதவ் ஆர்வமாய் காத்திருந்த நாளும் வந்தது… ஆனால் அன்றைய தினம் அவனுக்கான நாளாய் இல்லாது போகும் என்பது மட்டும் அவனுக்கு தெரியவே இல்லை….

*****

[the_ad id=”6605″]

கோவை.

யாழினி கோவைக்கு செல்லும் போது, பதினைந்து நாட்கள் என்று சென்றவளின் சூழல், மேலும் ஒரு மாதம் வரை, அவளை அங்கேயே இருத்தி வைக்க, போனில் கூட பேசாது, மெயில் மூலம் மீண்டும் விடுப்புக்கு விண்ணப்பத்த யாழினிக்கோ, ஒவ்வொரு நாளும் நிமிடத்தில் கடந்த உணர்வு..

குழந்தையும், சிவாவும் நார்மல் ரூமிற்கு வரும் வரையில் இருந்த தவிப்பிற்கு நேர்மாறாக, அவர்கள் இருவரையும் சேர்ந்து ஒன்றாக கவனிக்கும் போது, யாழினியின் நேரம் கற்பூரமாய் கரைந்து போனது.

இதில் அவளால் நேரடியாக மாதவிற்கு அழைத்து பேச நேரம் இல்லாதது ஒரு புறம் எனில், எங்கே தன் விடுப்பு ஏற்காமல், மறுக்கப்பட்டு விடுமோ?! என்ற பயமும் இருக்க, அவனை தொடர்பு கொள்வதை அறவே தவிர்த்து விட்டாள்.

குழந்தையையும், சிவாவையும் விட்டு வர மனமில்லாத போதும், அங்கேயே நிரந்தரமாக இருப்பதும் சரிவராது என்பதை உணராமலும் இல்லை. அதனால் ஓரளவிற்கு சிவா தேறி குழந்தையை பார்த்துக்கொள்ள ஆரம்பித்த உடனே அவள் வயநாடு செல்வதற்காக ஆயத்தமாக…

“யாழினிம்மா, இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாமே…சிவாவுக்கும் துணையா இருக்கும்…” என்றவரின் வார்த்தைக்கு,

“நல்லா சொல்லுங்க மாமா.. நானும் சொல்லிட்டே தான் இருக்கேன்… அங்கே பார்க்கற வேலைய இங்கையே பார்த்தா ஆகாதா…?! அங்க யாருமே இல்லாத இடத்துல போய் தனியா இருந்து தான் பார்க்கணுமா…?! அதே வேலையை இங்க பார்த்தா நம்ம கூடவே இருந்து போயிட்டு வரலாமே.. !!” என்று ரவியும் ஒத்து ஊத, யாழினிக்கோ மிகவும் தர்மசங்கடமாகி போனது.

யாருமற்று தன்னந்தனிமையில் நின்றவளுக்கு அடைக்களம் தந்ததோடு, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் ஏற்று இன்று வரையிலும் பாகுபாடு காட்டாத அந்த குடும்பத்தின் மீது மரியாதையும், பாசமும் கொண்டு அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவள் தான் யாழினி.. இருந்தாலும் கொஞ்சம் விலகலோடு இருப்பது என்றைக்கும் நல்லது என்ற மனநிலை மட்டும் மாறவே இல்லை அவளுக்கு… அதனால்….

“மாமா புரிஞ்சுக்கோங்க, ப்ளீஸ் தனிமைக்காக இல்லை, எனக்கு அங்கே தான் நல்லா செட் ஆகியிருக்கு.. என் மனசுல நிம்மதி அங்கே இருக்கும் போது தான் கிடைக்குது…எனக்கும் பாப்பாவை விட்டுட்டு போறது கஷ்டம் தான், ஆனா வேற வழியில்ல. நான் போய் தான் ஆகணும். ஏற்கனவே ரொம்ப லீவ் போட்டாச்சு… சிவா நீயாச்சும் சொல்லு….” என்று என்னை புரிந்து கொள்ளேன் என்ற பார்வையை சிவாவை நோக்கி வீச,
சிவாங்கினியோ அமைதியை மட்டுமே காட்டி அமர்ந்திருந்தாள்.

“ஆமாம் இப்படி சொல்லிட்டு போ.. ஆனா இங்கே வரவே வராத.. போன்ல பேசியே சமாளிப்ப… ஏதோ இப்ப எமர்ஜென்சி ன்னு ஓடி வந்திருக்க…இல்லாட்டி இப்படி வந்திருப்பியா…அங்க போன நாள்ல இருந்து இந்த மூனு வருஷத்துல மொத்தமா மூனு தடவை தான் வந்திருக்க நியாபகம் இருக்கா உனக்கு….” என்று சிவாவிற்கு பதிலாக ரவியே சத்தம் போட,

எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டு, எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாது இறுகி போய் இருந்த
சிவாவை நெருங்கி, அவளின் கரத்தையும், அவள் மடியில் இருந்த குழந்தையின் கரத்தையும், தன் இரு கரங்களால் பற்றியவள்,

“சிவா, கண்டிப்பா இனி அடிக்கடி லீவ் கிடைக்கும் போது இங்கே வந்திடுறேன். இதுக்கும் முன்னாடி செஞ்ச மாதிரி ஓரே அடியா அங்கே இருக்க மாட்டேன். எனக்குன்னு இந்த உலகத்துல உறவா இருக்கறது நீங்க மட்டும் தானே..?! நல்லதோ, கெட்டதோ எனக்கு எதுவானாலும் இங்கே தான் வந்து நிற்பேன்.. நீயே சொல்லு நான் போகவா வேணாமா… நீ எது சொன்னாலும் அதுக்கு நான் கட்டுப்படறேன்..” என்று நா தளுதளுக்க கேட்ட யாழினியின் கரத்தை மெல்ல தன்னிடமிருந்து விலக்கிய சிவாங்கினி,

[the_ad id=”6605″]

“யாழினி, நீ வயநாட்டிற்கு போ… உடம்பை பார்த்துக்கோ.. எனக்கு உன்னை பார்க்கணுமுன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா நானே வர்றேன்…

அப்பா யாழினி கிளம்ப எல்லா ஏற்பாடும் செய்யுங்க. பத்திரமா பார்த்து போ” என்றிட,

அவள் சொன்ன வார்த்தையின் உட்பொருள், ‘இனி இங்கே வராதே!’ என்பதாய் இருக்க, ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள் யாழினி.

“சிவா, நீ என்ன சொன்னேன்னு தெரிஞ்சு தான் சொன்னையா…?! இல்ல, நீ சொன்ன விசயம் எனக்கு சரியா புரியலையா…?!” என்று மழலையாய் மாறி, முகம் பார்த்து கேட்பவளிடம், தன்னிலை விளக்கம் சொல்ல விரும்பாத சிவாங்கினி,

“அப்பா, யாழினிய கூட்டிட்டு போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வாங்க…” என்றதோடு, தன் அறைக்கு குழந்தையோடு சென்று, கதவை அடைத்துக்கொண்டாள்.

அடித்து சாத்தப்பட்ட கதவையே பார்த்தபடி, விக்கித்து நின்ற யாழினிடம் வந்த ரவி, “யாழினி அவளுக்கு இப்ப இருக்கற உடல்நிலையில அவ எதையும் உணர்ந்து பேசல…ஏதோ குழப்பத்தோடு பேசறா.. நீ மனசுல எதையும் வச்சுக்காம கிளம்பு.. கூடிய சீக்கிரமே அவளே போன் பண்ணி உன்னை வான்னு கூப்பிடுவா.. அதுக்கு நான் பொறுப்பு…

மாமா, நீங்க கூட்டிட்டு போங்க.. பத்திரமா போயிட்டு போன் பண்ணு யாழினி…” என்றவனின் வார்த்தை கொடுத்த நம்பிக்கையை மட்டுமே சுமந்து கொண்டு, வரும் போது இருந்ததை விட அதிகமான மனவருத்தத்தோடு வயநாட்டிற்கு பயணமானாள் யாழினி.

******

கோழிக்கோட்டில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வந்திறங்கிய விஸ்வாவிற்கு, தன்னவள் இருக்கும் இடம் வந்தது ஒரு விதத்தில் நிம்மதி எனில், ‘அவள் தன்னிடம் எப்படி நடந்து கொள்வாள்?! தான் செய்த செயலுக்கு அவளிடம் என்ன மாதிரியான எதிர்வினை இருக்கும்?!’ என்பதில் பதட்டமும் அவனை ஆட்கொண்டிருந்தது.

விமானநிலையத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யாராவது கண்ணில் தான் பட்டால், வந்த காரியம் ஜெயமாக முடியாது.. அதோடு, தனது அந்தரங்கம் அம்பலமாக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்ததால், தன்னை அடையாளம் தெரியாத படியாக, ஒட்டிய தாடி, முகம் மறைக்கும் கூலர், தொப்பி என வந்தவன், வெளியே தனக்காக தயாராக காத்திருந்த வாகனத்தில் ஏறி வயநாட்டை நோக்கி செல்ல துவங்கினான்.

வயநாட்டை நெருங்க நெருங்க அதன் இயற்கை சூழல் கொஞ்சம் ஆசுவாசபடுத்தினாலும், முதல் முறை கொடூம் ஐந்து வருடத்திற்கு பின்பான தங்கள் சந்திப்பு எப்படி இருக்கும்?! என்ற எண்ணம் அவனை விட்டு நீங்குவாய் இல்லை..

அவனின் பயண தூரம் நூறு கிலோமீட்டரையும் விட்டால், ஒரு நொடியில் தாண்டி சென்று அவளை பார்த்துவிட மனம் துடித்தாலும், அதை செய்ய, தான்.. ‘சூப்பர்மேன் இல்லை!’ என்ற எதார்த்தம் புரிந்து, படபடத்த மனதோடு காத்திருக்கலானான், அந்த தருணத்திற்காக….

அன்று காலையே கிருஷ்ணனுக்கு அழைத்த விஸ்வா தான் இன்று வரும் முடிவை சொல்லியிருந்தான். அதனால், மாதவை தொடர்பு கொண்ட கிருஷ்ணன்,

“மாதவ் கண்ணா, நம்ம காட்டேஜ்ல, தி பெஸ்ட் எதுவோ, அதை ஏ வி ங்கற நேம்ல புக் பண்ணிடு.. அதோட அக்கவுண்ட் டீட்டெல்ஸ், அண்ட் பர்ஷனல் டீட்டெல்ஸ் எல்லாமே கான்பிடன்ஷியல்… சோ, அதை என்கிட்ட விட்டுடு… அப்புறம் யாழினி வந்தாச்சா..?” என்றிட,

சில முக்கியமான பிரமுகர்களின் விசயத்தில், இது போன்ற செயல்முறைகள் வழக்கம் என்பதால் வரப்போகும் நபர் பற்றி பெரிதாக விசாரிக்காமல், கிருஷ்ணனின் உத்தரவு படி செய்ய ஆரம்பித்தவன், அவரின் கேள்விக்கு விடையாக,

“யாழினி இன்னைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கறதா நேத்தே மெயில் பண்ணிட்டாங்க அப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. வந்ததும் அவங்க வேலை மாற்றம் சம்மந்தமான லெட்டரை கொடுத்து, அங்கே அனுப்பி வைக்கிறேன்…” என்று சொன்னவன், பரபரப்போடு அவளை சந்திக்கும் தருணத்திற்கு காத்திருந்தான், நடக்க போகும் விபரீதம் புரியாது….

விஸ்வா, மாதவ் பேலஸ் வந்திறங்கிய நேரம், வேறு வாயில் வழியாக யாழினி
உள்ளே செல்ல, அவனால் அவளை பார்க்க இயலவில்லை.

அவன் வந்ததும் ரிஷப்ஷனில் சென்று தான், ஏ வி என்று முன்பே புக் செய்திருப்பதாக தெரிவிக்க,

“சார், நீங்க நேரா எம் டி ரூமுக்கு போங்க.. உங்க பார்மாலிட்டீஸ் எல்லாமே சார்கிட்ட தான்.. சோ.. லிப்ல நாலாவது ப்ளோர்ல ரைட் சைட் பஸ்ட் ரூம்…” என்று இன்முகமாய் பதிலுரைக்க…

சிறு புன்னகையையும், தலை அசைப்பையும் பதிலாக்கியவன், அங்கிருக்கும் லிப்ட்டை நோக்கி நடந்தான். அவனின் புன்னகையில் அங்கிருந்த பெண்கள் எல்லாம் மயங்கி நிற்க, அப்போது அங்கு வந்த யாழினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் விழித்தவர்களை பார்த்து, “ஹேய்… என்ன ஆச்சு.. எல்லாரும் ப்ரீஸ் ஆகி நிக்கறீங்க?!” என்று தனக்கு தெரிந்த கொச்சை மலையாளத்தில் கேட்க,

அங்கு இருந்தவர்களிலேயே தமிழால் வந்த நெருக்கமோ, அல்லது யாழினியின் கடந்தகாலம் பற்றிய பேச்சை எடுக்காததால் வந்த நெருக்கமோ ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமாக உணரும் சந்திரா, “யாழினி ஜஸ்ட் மிஸ்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தா செம பிகரை மீட் பண்ணியிருக்கலாம். ச்ச, நல்ல சான்சை மிஸ் பண்ணிட்ட… எப்படியும் வி ஐ பி ஏரியா வா தான் இருக்கும்.. ஏன்னா பார்மாலிட்டீஸ் எம் டி கிட்ட போகுது… எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, அந்த ஹோன்ஷம் கூட ஒரு செல்பியாச்சு எடுத்திடணும்..” என்று கண்ணில் கனவோடு சொல்லிட,

ஏற்கனவே மனஉளைச்சலில் வந்தவள், முடிந்த வரை தன் மனதில் இருக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்தாது இருக்க முயற்சிக்க, இங்கோ யாரோ ஒருவனை வைத்து சந்திரா பேசியதில்,
காண்டான யாழினி, என்றுமில்லா திருநாளாய் தனது கோபத்தை வெளிபடுத்தியிருந்தாள், தன் வார்த்தைகளால்….

“சந்திரா, வாட் ஆர் யூ டூயிங்… கொஞ்சம் அடக்கி வாசி, வந்திருக்கறது நம்ம ஹோட்டல் கஸ்டமர்… நீ இங்கே சாதாரண வொர்க்கர்.. இதை எப்பவும் மறக்க கூடாது. நம்ம கடமையை மட்டும் தான் செய்யணும். வந்திருக்கறவங்களுக்கு தொந்தரவு தர்ற மாதிரியான பிகேவியர்ஸ் எதுவானாலும் கிருஷ்ணன் சார் காதுக்கு போனா வேலைய விட்டே தூக்கிடுவாரு.. ஜாக்கிரதை…” என்றிட,

யாழினியை அதிர்ச்சியோடும், ஆராய்ச்சியோடும் பார்த்த சந்திரா, வழக்கம் போல அவளின் பாணியிலேயே,
“அம்மா சின்சியர் சிகாமணி, உன்னைய மாதிரி ஆளை இதுவரைக்கும் பார்த்ததே இல்லடீ.. சும்மா ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்படியா லெக்சர் அடிப்பே.. நீ தான் சாமியாரா சுத்தி, சன்னியாசம் வாங்க போறன்னா, நானுமா அப்படி இருக்கணும்.. இது வாலிப வயசு… இதுல இப்படி தான் நாலு பிகரை சைட் அடிப்பேன்.. முடுஞ்சா என்னை ஃபாலோ பண்ணு, இல்லையா இடத்த காலி பண்ணு…” என்றவள், அசராமல்….

அவளின் நக்கலான பதிலில் கோபம் கொண்டு முறைத்த யாழினியை சிரிப்போடு பார்த்தவள், “கூல் யாழினி.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்… யாரையும் பார்க்கறதோ, அவங்கள ரசிக்கறதோ தப்பே கிடையாது.. ஆனா பார்க்கற எல்லாரையும் எனக்கே எனக்கா வேணுமின்னு நினைக்கறது தான் ரொம்ப தப்பு…” என்றவளுக்கு, அப்போது தான் மாதவ் சொல்லியிருந்த விசயம் நியாபகத்தில் எழ, அவசரமாக..

“அச்சோ, சொல்ல மறந்துட்டேன் பாரு… உன்னை வந்ததும் மாதவ் சார் அவரோட ரூமுக்கு உடனே வரச்சொன்னாரு… பிகரை பார்த்த குளிர்ச்சில மூளை ப்ரீஸ் ஆகிடுச்சு.. அதான் மறந்திட்டேன்… ஹீ..” என்றாள்.

“லூசு வந்ததும் கேட்டேனே, எதாவது சொன்னாங்களான்னு.. அப்ப சொல்லாம பிகரு, சுகருன்னு இவ்வளவு நேரம் மொக்க போட்டுட்டு, இவ்வளவு லேட்டா சொல்ற… இரு அவரை பார்த்துட்டு வந்து வச்சுக்கறேன்..” என்று திட்டியபடி வேகமாய் மாதவின் அறையை நோக்கி சென்றாள்.

மாதவ் அறையை அடைந்த யாழினி, ஒரு நொடி தன்னை நிலை படுத்திக்கொண்டு, அனுமதிக்காக கதவை மெல்ல தட்ட, அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றாள்.

யாழினி சென்றதும் நேராக மாதவிடம், “சார் நீங்க வர சொன்னதா ரிஷப்ஷன்ல சொன்னாங்க.. என்ன விசயம் சார்..?!” என்றவளுக்கு, அந்த அறையில் இருந்த மற்றொருவனின் பக்கம் பார்வை செல்லவே இல்லை.

‘காரியம் ஒன்றே கண்ணாக இருப்பவள் அவள்’ என்பது அவனுக்கு தான் நன்கு தெரியுமே.. அதனால் அவளின் கவனம் தன் பக்கம் திரும்பும் நேரத்திற்காக காத்திருந்தான் சிறிது படபடப்போடு…

[the_ad id=”6605″]

“எஸ் யாழினி, உன்னை நம்ம விஐபி காட்டேஜ் இன்சார்ஜரா ப்ரமோட் பண்ணியிருக்காங்க அப்பா.. சோ, இன்னைக்கி இருந்து நீ அங்க தான் வொர்க் பண்ண போற… சம்பளம் அலவன்ஸ் பத்தின டீட்டெயில்ஸ் எல்லாமே இதுல இருக்கு.. படுச்சு பார்த்துக்கோ…. ஆல் தி பெஸ்ட்..” என்று சொல்லி தனது கரத்தை வாழ்த்துவதற்காக மாதவ் நீட்ட,

மாதவ் சொன்னவற்றை முழுவதும் கிரகித்தவளுக்கு, நிச்சயம் இது ஆச்சரியம் தான்.. ஏனெனில் தன்னை விட அதிக முன் அனுபவம் உள்ளவர்கள் இங்கிருக்க, தன்னை தேர்ந்தெடுப்பது அதுவும் கிருஷ்ணன் சாரே அதற்கு பரிந்துரைத்திருப்பது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்க,

லேசாக கரகரப்பு குரலில் தட்ட, “தேங்க்யூ வெரி மச் சார்…” என்றபடி மாதவின் கரத்தை நோக்கி தன் கரத்தை நீட்டியவளின் கரத்தை, வேகமாய் பற்றிய வேறு ஒரு கையை பார்த்தவள், அதிர்ந்து நிமிர… அங்கே சிரித்த முகமாய் நின்றிருந்தவனை, முதலில் புரியாது பார்த்தவள், அவன் யாரென புரிந்த நொடி,

“மரியாதையா நான் கட்டின தாலிய கழட்டு போட்டுட்டு போயிடு…!!!”

“எப்ப உன் கழுத்துல இந்த தாலிய கட்டுனேனோ, அப்பவே என் நிம்மதி எல்லாமே போச்சு…!!!!”

“என் கண் முன்னாடி நிக்காத..!!!”

என்ற குரல் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அது தந்த தாக்கம், அவளின் மூளையை செயல் இழக்க வைக்க, அடுத்த நொடி தன் சுயநினைவை இழந்து மயங்கி சரிந்தாள்…. “அர்வீ….!” என்ற மெல்லிய அழைப்போடு…

“பெல்லீ…..!” என்றபடி, அவளை மடி தாங்கியவனை, ‘என்னடா நடக்குது இங்கே…..?!’ என்ற குழப்பத்தோடு பார்த்திருந்தான் மாதவ் கிருஷ்ணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!