Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மாய பூ இவள் 7.2

இரண்டு நாட்கள் சென்று இருக்கும், இரண்டு நாட்களும் டிசைன் டிசைனாக திட்டம் போட்டு அவள் அம்மாவிடம் பேசி விட்டாள். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.இனியாவிற்கு அவள் அம்மாவிடம் இதற்கு மேல் பேசி புரிய வைக்க முடியாது என்று புரிந்து விட, வரவேற்பு அறையில் அமர்ந்து நகத்தைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது தான் அவள் தந்தை கட்சி வேலையாக டெல்லி சென்று இருந்தவர், வீட்டிற்குள் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் ஏன் இவரிடம் கேட்க கூடாது என்று நினைத்து , அவர் அலுவலக அறைக்குள் இரவு தான் செல்வார், அதனால் அதற்குள் அவரிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் எழுதி வைத்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஏனென்றால் இனியா அவள் தந்தையிடம் இலகுவாக பேசியதாக சரித்திரமே கிடையாது. அவள் அண்ணனை அவர் அடித்தே பார்த்து இருந்ததால் அவளுக்கு அவரை பார்த்தாலே டெரர் ஃபீலிங் . ஆசை ஆசையாக பெற்ற மகள் தன்னை பார்த்து பயந்திட, அந்த பயத்தை கலைக்க முயல அவர் மனைவியோ, அடுத்த வீட்டிற்கு செல்லும் மகளிடம் அதிகம் செல்லம் கொஞ்சாதீர்கள் என்றிட , அவரும் தன் மகள் தானே தன்னை ஒரு நாள் புரிந்து கொள்வாள் என்று நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் மனிதர். ஆனால் இனியாவிற்கு அவள் பயம் மட்டும் போகவே இல்லை. பயம் போய் பாசம் வரும் நேரம் என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்குமோ , ஆண்டவனுக்கே வெளிச்சம். 

                 என்னவெல்லாம் சொல்ல வேண்டும், அவர் எவ்வாறு எல்லாம் கேள்வி கேட்க கூடும் அதற்கு எவ்வாறு தனக்கு சாதகமாக பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாம் யோசித்து மனப்பாடம் செய்து விட்டாள். அவர் அலுவலக அறைக்குள் சென்ற சற்று நேரத்தில், இவளும் கதவை தட்டி விட்டு தலையை அறையின் உள்ளே விட்டு எட்டிப் பார்த்தாள். அவர் மூக்கு கண்ணாடியை ஏற்றியவாறு பார்த்த ஒற்றை பார்வையில் அவள் மனப்பாடம் செய்து வைத்ததில் பாதி மறந்து விட்டாள். அதற்கு பிறகு அவர் கேட்ட கேள்வியில் அனைத்தையும் மறந்து விட்டாள். ” வா, மா. என்னாச்சு தூக்கம் வரலையா. ” என்று கேட்டார். 

“அது வந்து பா” என்று கூறி விட்டு ‘ஐயோ இப்பனு பார்த்து பேச வரலையே, காத்து தான் வருது’என்று அவள் யோசிக்க . அவள் யோசித்துக் கொண்டு கதவின் அருகிலேயே நிற்பதை பார்த்த அவள் தந்தை பார்த்து கொண்டு இருந்த வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து இவரும் பக்கத்தில் அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 



Advertisement

                 அவருக்கும் அவர் மனைவிக்கும் வெளி வேலைகள் அதிகம் உள்ளதால் வீட்டில் அனைத்திற்கும் ஆட்கள் உண்டு. அதனால் வீட்டில் என்ன நடந்தாலும் அவருக்கு தெரிந்து விடும். மனைவிக்கும் மகளுக்கும் ஏதோ பிரச்சினை என்று தெரிய , என்னவென்று மனைவியிடமே கேட்டு தெரிந்து கொண்டார்.

Advertisement

                 இனியாவை இப்போது தான் குழந்தையாக கையில் வாங்கியது போல் ஞாபகம் அதற்குள் பெரிய பெண்ணாக வளர்ந்து கல்லூரி செல்ல போகிறாள், இன்னும் சில ஆண்டுகளில் வேறு வீட்டிற்கும் சென்று விடுவாள் என்று நினைக்கும் போதே விவரிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வு மனதிற்குள் சூழ்ந்தது. அவள் தலையை வருடியவாறே 

Advertisement

” அப்பா கிட்ட எதாவது சொல்லனுமா,மா “என்று கேட்டார்.

Advertisement

அவருக்கு தெரியும் மகள் எதற்காக தடுமாறுகிறாள் என்று. ஆனாலும் மகளே கூறட்டும் என்று காத்து இருந்தார் மனிதர் . முதல் முறை அவள் ஒரு விஷயத்திற்காக அடம் பிடிக்கிறாள் அதுவும் எதற்காக கல்விக்காக தானே, செய்தால் தான் என்ன என்று யோசனைக்கு வந்துவிட்டார். அது தெரியாமல் இனியாவும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள். 

 

“பா, எனக்கு என்ஜினீயரிங் பிடிச்சு இருக்கு. ஆனா அம்மாக்கு நான் ஆர்ட்ஸ் எடுக்கனும் சொல்றாங்க. நீங்க பேசுங்க பா, அம்மா கிட்ட..”

“ஏன் உனக்கு என்ஜினீயரிங் எடுக்கனும். உன் அண்ணன பார்த்தல எத்தன அரியர் வச்சு இருக்கானு. அவனும் இப்படி தான் ஒத்த காலு நின்னு சேர்ந்தான் இப்ப பாரு வெட்டியா ஊர சுத்திட்டு இருக்கான் “. 

“பா, முதல் விஷயம் நான் தமிழ் இல்லை. என்னை அவன வெச்சு ஜட்ஜ் பண்ணாதீங்க. இரண்டாவது, எனக்கு என்ஜினீயரிங் தான் சரியா இருக்கும் என்று தோன்றுது. அதனால நீங்க அம்மா கிட்ட பேசுங்க. வேணும்னா பாருங்க நாலு வருஷம் முடிச்சதும் நல்ல வேலைக்கு போய் காட்டுறேன்.” என்று ஏதோ ஒரு உந்துதலில் சொல்லி விட்டாள். 

ஆனால் சொன்ன பிறகுதான் அதன் அர்த்தம் புரிய இரண்டு அடி தள்ளி சென்று இருந்த பயம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது. அவள் பயத்துடன் அவள் அப்பாவை ஏறிட்டு பார்க்க. அவள் தந்தையோ சிறு புன்னகையுடன் அமர்ந்து இருந்தார். 

” அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் பேசலாம் சொல்லி தர தேவை இல்லை. ஆனா சொன்னதை செயலில் காட்டிடா நல்லா இருக்கும். அதை செய்யமா தான் உன் அண்ணன் தோலுக்கு மேல் வளர்ந்த அப்புறமும் அடி வாங்கி கிட்டு இருக்கான். நீயாவது சொன்னதை செய். ஆணோ, பெண்ணோ சொந்த காலில் நின்றால் எல்லாருக்கும் நல்லது.” என்று கூறி விட்டு 

” அம்மா கிட்ட நான் பேசுறேன். ஆனால் எங்கேயும் எங்க மானத்திற்கும் மரியாதைக்கும் எந்த பாதிப்பும் வந்துட கூடாது புரியுதா? வேற எதாவது என்கிட்ட கேட்கனுமா” என்று கேட்டார்.

இனியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை . இல்லை என்று மந்திரித்து விட்ட ஆடு போல் தலை ஆட்டிவிட்டு, அறைக்குள் வந்துவிட்டாள். வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் புரிய காற்றில் மிதக்காதது ஒன்றே குறை. வாழ்வில் முதல் முறை அவள் தனக்கு என்று நினைத்த விஷயம் நடக்க போகிறது. அதே மகிழ்ச்சியுடன் தூங்கினால், கல்லூரியின் முதல் நாளை எதிர்பார்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!