Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 17

அத்தியாயம் – 17

 

கிட்சன் வாயில் கைகட்டி நின்ற ஜோஷ்வாவை கண்டதும் ஜென்சி எதுவும் பேசாமல் அவனை முறைத்து திரும்பிவிட,

“அது ஒரு வேண்டுதல்.. நிறைவேறும் வரை வெளியே சொல்ல கூடாது..”



Advertisement

என அவன் கேள்விக்கு சமாளிப்பாய் பதில் கூறினார் ரெமிஜியஸ்.

“அப்படி வேற இருக்கா..? சரி.. யாரோட வேண்டுதல்.. உங்களோடதா.. இல்லை ஜென்சியோடதா..”

என்று அவளையும் பேச்சில் இழுக்க முயன்றான். ஆனால் அவள் கண்டுக்கொள்ளாமல் இருக்க இருவரையும் கவனித்து,

Advertisement

“ம்ம்ம் என்னோடது தான்.. நடக்கணும்னு முடிஞ்சா நீயும் ப்ரே பண்ணுடா..” என்று சொன்னவர்,

Advertisement

“நீ சமையல் கட்டுல உருட்டவும் தான் போனை கட் பண்ணிட்டு வந்தேன்.. நான் மறுபடியும் கால் பண்ணுவேன்னு அந்த மேனேஜர் காத்துட்டு இருப்பான்.. நான் பேசிட்டு வரேன்..”

என்று காரணம் கூறி சென்றுவிட அவன்,அவள், மௌனம் மட்டுமே அங்கு..!!!

‘எழுந்து சென்றுவிடலாமா..’ என யோசித்த ஜென்சி பின் வேண்டாம் என அப்படியே அமர்ந்திருக்க அவளையே பார்த்திருந்தவன்,

Advertisement

“கோபமோ ஜென்சிக்கு..”

என்றான் மென்மையாக.. மிக மென்மையாக…

எத்தனை இறுகிய மனதையும் இளக செய்யும் அந்த குரலில் என்ன மாயம் வைத்திருக்கிறானோ தெரியவில்லை. அவளின் உள்ளத்திலும் சற்று முன் இருந்த எரிச்சலை எல்லாம் காணாமல் போக செய்திருந்தது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நான் ஏன் கோபப்படணும்…? வாய திறந்தாலே பொய் மட்டும் பேசுற மனுஷன்ட்ட பேச பிடிக்கல.. அவ்வளவு தான்..” பட்டென்று பேச,

‘நான் என்ன பொய் சொன்னேன்..’ என்று அவன் கேட்க விழையவில்லை. காரணம் தான் அவனுக்கே தெரியுமே..!!

 ‘அது பொய் என அவள் ஆணிதரமாய் நம்புகிறாள்’ எண்ணிய அவன் நெஞ்சில் மாமழை தான்..!!

அவளை நோக்கி வந்தவன் டேபிளில் அவளுக்கு நேர் எதிரில் கையூன்றி குனிந்து, 

“உனக்கு ஒரு வாக்கு தரேன் ஜென்சி.. இனி எப்பவும் எந்த சூழ்நிலையிலும் நீ என்ன கேட்டாலும் சரி.. என் வாய்ல இருந்து உண்மையான பதில் மட்டும் தான் வரும்… நோ மோர் லைஸ்.. ஆனால் நான் பேசுறதை கேட்டு நீ திண்டாடாம இருந்தால் சரி..”

என்று சொல்ல அவன் அருகில் வந்து பேசும் வரை அவன் கண்களை இமைக்காமல் பார்த்திருந்தாள் ஜென்சி.

அதில் தெரிந்த மெய்மையில் அவளுக்கு சந்தேகிக்கவே தோன்றவில்லை.

பதிலின்றி தன்னையே பார்க்கின்றவளிடம்,

“அதான் சரண்டர் ஆகிட்டேன்ல.. கொஞ்சம் ஸ்மைல் பண்ணலாம்ல..”

என்று அவன் கேட்க அதனை பொருட்படுத்தாது,

“கிட்சன்ல ஏதோ தீயிற ஸ்மெல் வருதுல..”

என்று சந்தேகமாய் சொல்ல அனிச்சையாய் மூச்சு இழுத்து வாசனையை முகர்ந்தவன் அவள் வேண்டும் என்றே சொல்கிறாள் என புரிந்து,

“நக்கலா..? நீ சிரிக்கிற வரை நகர மாட்டேன்.. என்ன பண்ணுவ..”

என்று சவாலாய் கூற சரியாய் அச்சமயம் குக்கர் வீசில் அடித்து வாரியது.

கன்னத்தில் அதக்கிய புன்னகையோடு,

“போ.. உன் குக்கர் அழைகிறது..”

என்று சொல்ல மீண்டும் வார்த்தையாட முடியாமல் வீசில் தொடர்ந்து அடிக்கவும் வேறு வழியின்றி வேகமாய் உள்ளே செல்ல வாய்விட்டு சிரித்தவள் தானும் எழுந்து கிட்சனிற்கு வந்தாள்.

குக்கர் மூடியை திறந்து கரண்டியால் கிளர உள்ளே நுழைந்ததுமே ஜீரா சாதத்தின் வாசனை அவளை சென்றடைந்தது.

“நைஸ் அரோமா..”

என்று அவன் அருகில் செல்ல புன்னகைத்தவன்,

“ஏற்கெனவே லேட் ஆகிடுச்சு இல்லையா.. அதான் க்விக்கா ஒரு ஜீரா சாதம்…”

என்றபடி சாதம் சரியான பதத்தில் இருந்ததால் ஸ்டவ்வில் இருந்து இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்க,

“வேற என்ன செய்ய போற… நான் எதாவது ஹெல்ப் பண்ணவா..”

என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கே தயாராக வைத்திருந்த பதார்த்தங்களை பார்வையிட்டாள்.

“மலாய் குஃப்தா.. எக் கரி.. அப்புறம் ரெய்ட்டா.. அவ்வளவு தான்.. நீ எதுவும் செய்ய வேண்டாம்..நானே செஞ்சுடுவேன்..”

மற்றும் ஒரு கடாயை ஸ்டவில் வைத்து குஃப்தா வறுப்பதற்கு போதிய எண்ணையை ஊற்றியவன் எண்ணை காய்ந்ததும் உருட்டி வைத்திருந்த குஃப்தா உருண்டைகளை வறுத்து எடுத்தான்.

“ஏன் எதுவும் செய்ய வேணாம்.. எனக்கு சமைக்க தெரியாதுனு நக்கலா சொல்றீயா..”

“நான் அப்படி நினைக்கவே இல்ல ஜென்சி.. சமைக்க தெரியலைனாலும் தட்ஸ் நாட்ட பிக் டீல்.. இதுல நக்கல் பண்ண என்ன இருக்கு..”

என்று தோள் குலுக்கியவன் எண்ணை கடாயில் கண்வைத்தபடி,

“நீ இங்க கெஸ்ட் இல்லையா.. உன்னை வேலை வாங்குனா விருந்தோம்பலுக்கு அழகா சொல்லு..”

“அப்போ… நீ இங்க கெஸ்ட் மட்டும் தான்.. உன் லிமிட்ல இருனு சொல்ல வர..” என புருவம் உயர்த்தினாள்.

‘அவனுக்கு மட்டும் தான் வேணும்னே வம்பிழுக்க தெரியுமா..’ மைண்ட் வாய்ஸ் சிலிர்த்து கொண்டது.

“நீ வேணா சண்டைக்கு வாடான்ற’ மோட்ல இருக்கன்னு நல்லா தெரியுது… ஆனா நான் சிக்க மாட்டேனே..” என அவளிடம் திரும்பி சொல்லியபடி,

“இதுல வெங்காயம்,தக்காளி வதக்கியது இருக்கு..சூடு ஆறட்டும்னு வைச்சு இருந்தேன்.. இதை மிக்ஸில நல்லா அரைச்சு அப்புறம் ஃபில்டர் பண்ணி கொடு..”

என்று ஒரு பாத்திரத்தை கொடுக்க சிரிப்போடு வாங்கினாள்.

பாத்திரத்தில் இருந்ததை மிக்ஸி ஜாரில் மாற்றியவள் மூடியை அழுத்தபிடித்து கொண்டு பட்டனை திருக ப்ளண்டர் வேகமாய் சுழன்றது. சில நிமிடங்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தவள் மசிய அரைந்து உள்ளதா என்று பார்ப்பதற்கு நிறுத்தி மூடியை திறக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை.

மறுபடியும் திறக்க பார்த்தவள் பின்பு மிக்ஸியில் இருந்து ஜாரினை கழட்டி மூடியை திறக்க முயல அது நன்றாக இறுகி வரமாட்டேன் என நிற்கவும்,

‘இதென்னடா.. சோதனை..’ என்று வந்தது அவளுக்கு..

குஃப்தா பொறிப்பதில் மும்முரமாய் இருந்த ஜோஷ் அவள் மிக்ஸியோடு போராடுவதை சற்று நேரம் சென்று தான் கவனித்தான்.

கடைசி ஈடையும் எடுத்து முடித்ததால் அடுப்பை அணைத்துவிட்டு,

“ஹே.. என்ன திறக்க முடியலயா.. இங்க கொடு..”

என அருகில் வந்தவன் மிக்ஸி பிடியை பிடிக்க  மூடியை பிடித்திருந்தவளோ கடைசியாய் ஒருமுறை முயற்சிப்போம் என அதனை இழுத்து பார்க்க மூடி அவள் கையோடு வந்தது. கூடவே அதில் ஒட்டியிருந்தவை ஜோஷ்வாவின் சட்டையில் பசக் என்று தெளித்தது.

அனிச்சையாய் இரண்டடி அவன் பின்னால் போக மூடியை கையில் வைத்து கொண்டு,

“அச்சோ.. சாரி.. சாரி..” என்று நாக்கை கடிக்க,

கரை படிந்த இடத்தை பார்த்து

“சிறப்பு..” என்றவன் பாவமாய் விழித்தவளிடம் புன்னகைத்து, “நோ ப்ராப்ளம்..” என 

மிக்ஸியை மீண்டும் அவள் கையிலே கொடுத்தான்.

“நீ இதை ஃபில்டர் பண்ணு…”

என சொல்லிவிட்டு  சிங்க் அருகில் தண்ணீரை கையில் எடுத்து அதனை துடைக்க முற்பட்டவன் அது இன்னும் படரவும், “ம்ச்..” என்று கடகடவென சட்டை பொத்தனை அவிழ்த்தான்.

மிக்ஸியில் இருந்தவற்றை வடியில் ஊற்றி அதன் சாறு மட்டும் எடுத்து அவனிடம் கொடுக்க திரும்பியவள் அவன் சட்டை 

 பொத்தனை கழட்டுவதை கண்டு,

“ஹே.. ஹே.. என்ன பண்ற..” என்றாள் பதட்டமாய்..!!

அவள் பாவனையில்,

“ஹலோ மேடம்.. என் சட்டையை கழட்ட நான் தான் பதறனும்.. எங்களுக்கும் கூச்சம் நாச்சம் எல்லாம் இருக்கு..” என்றவன்,

“உள்ள டெங்க் டாப் போட்டு தான் இருக்கோம்…” என்று தகவலாய் சொல்லி சட்டையை கழட்டிவிட இத்தனை நாள் மறைந்தும் மறையாமலும் போக்கு காட்டிய அவனின் டாட்டூ பளீச்சென்று அவள் பார்வையில் விழுந்தது.

அது ஒரு சிங்கத்தின் முக வடிவம்..!! அவன் புஜத்தை அடைத்தாற்போல் பெரிதாக இருந்தது. அதுவும் பிடரி முடி இல்லாததால் அது பெண் சிங்கம் என்று புரிந்தது. அதன் கண்கள் உண்மையிலே ஆழ்ந்து பார்ப்பது போல் தத்ரூபமாய் இருக்க,

“லயனஸ் ஆ..”

என்று தன்னை மீறி வாய்விட்டே ஆச்சரியமாய் கேட்டாள். முதலில் என்ன கேட்கிறாள் என புரியாமல் அவள் முகத்தை பார்த்தவன் அவள் பார்வை தன் புஜத்தில் இருப்பதை கண்டு,

“ஹோ இதுவா…” என டாட்டூவை வருடி,

“ஆமா..மை லயனஸ்..” என குறுநகையோடு கூறிவிட்டு க்ரேவி செய்யும் வேலையில் அவன் கவனமாகிவிட்டான்.

கையில் வைத்திருந்த கிண்ணதை அவன் அருகில் வைத்தவள்,

“பொதுவா ‘மென்’ ஓட இருக்க சிங்கம் தான் அட்ரெக்டிவா இருக்கும்னு டாட்டூ போட்டுபாங்க.. டு சிம்போலைஸ் கிங்..!! ஆனால் ஏன் லயனஸ்..?”

என்று கேட்டவளிடம் அறிந்து கொள்ளும் ஆர்வம் நிரம்பி இருந்தது.

“எனக்கு லயனஸ் தான் ரொம்ப அட்ரெக்டிவ்வா இருக்கு… மோர் ஓவர்… பெரிசா எந்த ரீசனும் இல்ல.. என் கேர்ள் ஃப்ரெண்ட் நியாபகமா இந்த டாட்டூ போட்டு கிட்டேன்..” அவன் அசால்ட்டாய் சொல்ல,

“கேர்ள் ஃப்ரெண்டா..?” 

என்றாள் அப்பட்டமான அதிர்ச்சியோடு..!!

“ஏன் இவ்வளவு ஷாக்.. எனக்கு எல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்க கூடாதா என்ன..”

அவன் குறும்பாய் புருவம் உயர்த்த,

“அ..அப்படி இல்ல.. நீ இதுக்கு முன்னாடி சொன்னது இல்லையே.. அதான்..”என்றாள்.

டாட்டூ குறித்து சற்றுமுன் இருந்த ஆர்வம் எல்லாம் எங்கோ ஓடிவிட்டது.

“நீயும் கேட்டது இல்லையே..!! ம்ஹீம்… ஷீ இஸ் லவ் ஆஃப் மை லைஃப்.. அவ என்னை விட்டு தூரமா இருந்தபோதும்… இந்த டாட்டூ.. அவ என்னோட எப்பவும் இருக்கா மாதிரி ஒரு ஃபீல் கொடுக்கும்..”

ஜோஷ்வா அனுபவித்து சொன்ன விததில் அது கடந்த காலமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை என்பது புரிய அந்த உண்மை அவளை காரணமின்றி வதைத்தது.

‘அவன் யாரை லவ் பண்ணினால் என்ன..? உனக்கு அவன் மேல ஃபீலிங்க்ஸ் வராதுனு ஜோசஃப்ட்ட ஜம்பமா சொன்னேல..!! அப்போ இருந்த உறுதி… இப்போ எங்க போச்சு..சில உண்மைகள் தெரிஞ்சதால மட்டும் உன் லைஃப்ல எந்த மாற்றமும் வந்திட போறதில்ல.. செஞ்ச தப்பையே திரும்ப செய்யாத ஜென்சி.. மறுபடியும் ஹீல் ஆகி வரும் அளவு உன் மனசுல தெம்பு இல்ல…’

அடிப்பட்ட உள்ளமோ உணர்ச்சிகள் பிடியில் சிக்காமலிருக்க எச்சரிக்கை விடுக்க முள்ளாய் தைத்த வலிகளை வீம்பாய் உதறி தள்ளினாள். அவள் முகம் சுரதேயின்றி இருக்கவும்,

“என்னமோ உளருறான்னு நினைக்கிற தானே..”

என சிரிக்க அதற்கு மறுத்து தலையசைத்தாள்.

‘யாரு லயனஸ்..? எங்க இருக்கா..?நு எதாவது கேளு ஜென்சி.. உண்மையை மட்டும் தான் பேசுவேன் ஃப்ராமிஸ் எல்லாம் கொடுத்து இருக்கேன்.. நீ கேட்டா போதும் எல்லாத்தையும் சொல்ல நான் தயார்..”

மானசீகமாய் எண்ணியவன் கண்கள் மின்ன அவள் ஏதோ சொல்ல வரவும் ஒருவித எதிர்பார்ப்போடு அவளை பார்த்திருக்க,

“முட்டை வேக வைச்சாச்சா..?? இல்ல வைக்கவா..?” 

என்று அவள் சமந்தமே இல்லாமல் வேறு  விஷயத்திற்கு தாவவும் எல்லாம் சொத்தென்று ஆனது.

“இப்ப அது ரொம்ப முக்கியம்..” எரிச்சலை மறைக்கவில்லை அவன்.

“ஏன்..?? நீ தான எக் கரி செய்ய போறேன்னு சொன்ன..??”

என்று அவள் கேட்கவும் அவள் வேண்டுமென்றே தவிர்கிறாள் என்பது புரிந்து அவனும் அத்தோடு விட்டுவிட்டான்.

சற்று நேரத்தில் வேறு பேச்சுகள் எதுவுமின்றி ஜென்சியின் உதவியோடு சமையலை முடிக்க  ரெமிஜியஸூம் வந்ததும் மூவரும் சேர்ந்தே மதிய உணவை உண்டு முடித்தனர்.

அதன்பின் அன்றைய பொழுது அவளுக்கு ஒருவித அலைபுறுதலோடே கழிய மனதை திசை திருப்ப ஷாப்பிங் செல்வதற்கு முடிவெடுத்தாள்.

ஜோஷ்வாவை உடன் வர சொல்கிறேன் என்ற தாத்தாவிடம் திட்டவட்டமாய் மறுத்தவள் வழியை மட்டும் விசாரித்து கொண்டு தான் மட்டுமாய் கிளம்பினாள்.

வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருந்து லிசாவிற்கும் எஸ்தருக்கும் எதாவது வாங்கி வருவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..!! ஆதலால் அவர்களுக்கு விருப்பமான வகையில் உடைகள் தேர்வு செய்வதிலும் அங்கே பிரசித்தம் பெற்ற கைவிணை பொருட்களை வாங்குவதிலும் மேலும் சுற்றுலா பயணிகளுக்கு என்றே பிரத்யோகமாய் அமைக்கபட்டிருந்த பஜார் கடைவீதிகளிலும் உலா வந்ததில் மற்றைய சிந்தனைகள் மறைந்து இயல்பாய் அவள் மனம் உற்சாகமடைந்தது.

கைக்கொள்ளா பைகளோடும் லேசான மனத்தோடும் தன் காரை நோக்கி வந்தவள் அங்கே நின்ற ஜோஷ்வாவை கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

பனி புகை சூழ்ந்த பின்ணனியில் அவனைபோலவே படியாத சிகையும் கண்களில் கூலர்ஸூம் சாம்பல் நிற ஜெக்கெட்டும் என என்றும் இல்லாமல் இன்று அவன் தோற்றத்தில் கவனம் சென்றது.

காரின் பக்கவாட்டில் சாய்ந்து ஒரு கையூன்றி மறுக்கையில் கேஷ்வலாய் அலைபேசியை பார்த்து நின்றனை இரசிக்கிறோம் என்று உணராமலே,

‘பெரிய மாடல்னு நினைப்பு.. போஸ் கொடுக்கிறார்..’ என உதட்டை சுளித்தவள் அவன் அருகில் நடந்து வர அவளை அப்பொழுது தான் கவனித்தவன் கையசைத்து அழகாய் புன்னகைத்தான்.

“உன்னை எனக்கு பாடிகார்ட்டா வேலை பார்க்க சொல்லி கேட்டதா ஞாபகமே இல்லையே..”

அழுத்தமான பார்வையோடு அவள் பேச,

“நானும் இங்க பாடிகார்ட்டா இருக்கவெல்லாம் வரல..!! உன் ப்ரைவெஸில எங்கயாவது டிஸ்டர்ப் பண்ணேனா.. சொல்லு..”

என்றவன் மேலே பார்த்து,

“மழை வரும் போல இருக்கு… இருட்டிடுச்சு… தெரியாத ஊருல எங்கயாவது மாட்டிக்கிட்டேனா…?”

என முடிக்காமல் நிறுத்த போலியாய் கண்களை விரித்து,

“ரொம்ப அக்கறை தான்..” என்று சொல்லும்போது சிரிப்பும் வந்தது அவளுக்கு..!!

“ஆமா.. அக்கறை தான்… கீயை கொடு..”

என அவள் கையில் இருந்து சாவியை வாங்கியவன்,

“யம்மாடி.. இது போதுமா..”

நிறைய பேக்ஸ் இருப்பதை காட்டி கிண்டலாய் கேட்க,

“பத்தல தான்.. ஆனால் தூக்கிட்டு வர கைல இடம் இல்லாம போயிடுச்சு.. வாட் டு டூ..” என்றாள் அவளும் சளைக்காமல்..!! 

சிரிப்போடு பின் கதவை திறந்து ஷாப்பிங் பேக்ஸை உள்ளே வைக்க உதவ,

“இந்த பேக்கை கையிலே வைச்சுகிறேன்.. உள்ளே வாட்ச் இருக்கு..” என்றவள் “தாத்தாவிற்கு என்னோட கிஃப்ட்..” என தானே கூறினாள்.

எல்லாம் வைத்ததும் அவன் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துவிட மறுபக்கம் அவள் ஏறியமர்ந்ததும்,

“எனக்கெல்லாம் கிஃப்ட் கிடையாதா..?” என வம்பிழுக்க,

“உனக்கு எதுக்கு மேன் நான் வாங்கணும்..”

என்று கேட்கவும்,

“அதானே..!!” என வேண்டுமென்றே சலிப்பாய் கூறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஆனால் வீட்டிற்கு வந்ததும் பேக்ஸை தன் அறையில் வைத்துவிட்டு நிஜமாகவே ஒரு பாக்ஸை அவனிடம் நீட்டவும்,

“ஹே.. ஜென்சி.. என்ன..!!!” என ஆச்சரியமாய் பார்த்தான்.

“கிஃப்ட்… திறந்து பார்..” என அவள் புன்னகைக்கவும் பாக்ஸை திறக்க உள்ளே இருந்தது சின்னதாய் ஒரு தங்க நிற கூண்டும் அதனுள் வெள்ளைநிற பொம்மை கிளியும்..!!!

சட்டென நிமிர்ந்து அவள் விழிகளை நோக்க கண்ணாடி பின்  அசைந்தாடும் கருவிழியிலிருந்து  ஒன்னும் பிடிபடவில்லை.

“என்னதிது.. பொம்மை வைச்சு விளையாட.. நான் என்ன குழந்தையா..?”

“அதுக்கில்ல.. இது பார்க்க ட்வீட்டி மாதிரியே இருந்ததா.. அதான் பார்த்ததும் வாங்க தோணுச்சு..” என்று லயிப்போடு சொல்லி,

“உனக்கு ஜோ வைச்சுருந்த ட்விட்டி தெரியும் தானே..”

என சந்தேகமாய் கேட்க, ‘தெரியும்..’ என்பதாய் மெல்ல  தலையசைத்தவன்,

“ஆனா.. எனக்கு ஏன் ஜென்சி..? நான் சும்மா விளையாட்டுக்கு தான் கிஃப்ட் கேட்டேன்.. இந்தா..”

என்று மீண்டும் கொடுக்க முனைந்தவனை தடுத்து,

“கொடுத்த கிஃப்ட்லாம் திரும்ப தரகூடாது ஜோஷ்.. கீப் இட்..” 

என புன்னகையோடு கூறி அவள் சென்றுவிட அருகில் இருந்த கௌவுச்சில் அமர்ந்தவன் வண்ண வண்ண மணிகளால் கோர்த்த ஊஞ்சலில் அமர்ந்திருந்த அந்த குட்டி கிளியை லேசாய் தள்ளிவிடவும் அது மெல்ல ஆட அவன் முகத்தில் ஆழமாய் ஒரு புன்னகை  அழகாய் பூத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!