Skip to content
Post Views: 10,536
அத்தியாயம் 24
ஏழாம் மாத வளைகாப்பு நிகழ்வு வெகு எளிதாய் மனதிற்கு நிறைவாய் அரங்கேறி இருந்தது விவேக்கின் வீட்டில்.
Advertisement
“நம்ம வீட்டுக்கு வர்றியா அனு? அது தானே வழக்கம்? வளையல் போட்டு அங்க தானே வரணும்? நான் பார்த்துக்கவா?” அர்ஜுன் கேட்டவன்,
“ப்ச்! எதுவும்னா இங்க கலை அத்தை பார்த்துப்பாங்க! அங்க யார் இருக்காங்க இல்ல?” என்றும் கேட்க, அன்னை நினைவில் இருவருக்குமே முகம் கலங்கியது
Advertisement
Advertisement
“ஏன் நான் வர கூடாதா அர்ஜுன்?” விவேக் கேட்க,
“மாமா!”
Advertisement
“நாங்க ரெண்டு பேருமே வந்து அப்பப்போ தங்குறோம்! ஓகே தானே?” என்றான் விவேக் சமாதானமாய்.
நெருங்கிய சொந்தங்கள் என சிலரை மட்டுமே அழைத்திருந்தனார். அனன்யா தாய்மாமாவிற்கும் அதில் அழைப்பு இருந்தது. தீபக் அர்ஜுனோடு வந்து அவனுமே அவர்களோடு தான் இருந்தான்.
எங்கே அவளும் வந்துவிடுவாளோ என்ற ப்ரணித்தா பற்றிய எண்ணத்தில் தான் இருந்தாள் அனன்யா. ஆனால் வரவில்லை என்றதோடு தாய்மாமாவும் அத்தனை வருத்தம் அவளைக் குறித்து தெரிவிக்க, இவளை திருத்தவெல்லாம் முடியாது. எப்படியோ போகட்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள் அனன்யா.
அர்ஜுன் தாய்மாமாவிடம் சென்று பேசியதை எல்லாம் சொல்லி இருக்கவே இல்லை அனன்யாவிடம்.
“என்ன தீபக்! ரொம்ப நாளா ஆளைப் பார்க்கவே முடியல? ஊர்ல தான் இருக்கியா?” என்று தீபக் தோளில் கை போட்டு விவேக் கேட்க,
“சார்! சார்! வலிக்குது சார்! கையை கொஞ்சம் எடுங்க!” என அலறினான் தீபக்.
“சும்மா தான டா கை வச்சேன்! அவ்ளோ வீக்கா நீ?” விவேக் கேட்க, அர்ஜுன் சிரித்தபடி நின்றான்.
“டேய் காப்பாத்து டா! ஒரு பொண்ணோட வாழ்க்கை!” தீபக் சொல்ல,
“மாமா! தீபக்கு மேரேஜ்! இன்விடேஷன் கூட கொண்டு வந்திருக்கான் உங்களுக்கு!” என்றான் அர்ஜுன்.
“இவனுக்கு கல்யாணமா? பொண்ணு யாரு டா குடுக்குறது? நான் பார்க்கணுமே அவங்களை!” விவேக் சொல்ல,
“பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்ல சார்!” சட்டென தீபக் சொல்லவும் வாய்விட்டு சிரித்தான் அர்ஜுன்.
“டேய்! பொய் தான?” விவேக் கேட்க,
“இப்ப அதுவா சார் முக்கியம்? அக்காக்கு வளையல் போட கூப்பிடுறாங்க பாருங்க! நீங்க போங்க!” தீபக் அனுப்பிவிட பார்க்க,
“எனக்கு இன்விடேஷன் தரலயே டா நீ?” என நகர மறுத்தான் விவேக்.
“இல்ல சார்! நான் சும்மா ஃபார்மாலிட்டிக்கு குடுக்க வந்தேன்! அங்க ரொம்ப சின்ன மண்டபம்! நானும் பொண்ணும் மட்டும் தான் இருப்போம்! உங்களுக்கு அவ்வளவு வசதியா இருக்காது! நீங்க வேணா அம்மா அப்பாவை அர்ஜுன் கூட அனுப்பி விடுங்க! அப்படியே நம்ம குள்ள…. ச்சீ! தங்கச்சி விஜியையும் அவன் கூட அனுப்பி விடுங்க! நான் சிறப்பா கவனிக்குறேன்!” என அத்தனை பம்மினான் தீபக்.
“வாய்! வாய்! குறையுதா பாரேன்!வராதன்னு எவ்வளவு இன்டேரக்டா சொல்ற நீ? நான் வருவேன் டா!” விவேக் சொல்ல,
“டேய்! கூப்பிட வந்துட்டு என்ன விளையாட்டு உனக்கு?” என்றான் அர்ஜுனும் தீபக்கிடம்.
“விளையாடுறேனா? உன் மாமா என் கையை சும்மா பிடிச்சிருக்கார் நினைச்சியா? உள்ள எத்தனை எலும்பு நொறுங்கி இருக்கோ! தாலிகட்ட கை முக்கியம் டா! அவர் வரவே வேணாம்! என்னைய உயிரோட விட்டா போதும்!” என்றான் தீபக் மெதுவாய் விவேக்கிற்கு கேட்காதபடிக்கு.
“நீ மட்டும் விஜியை இப்பவர என்ன சொல்ற?” அர்ஜுன் கேட்க,
“அதுக்கு உன் மாமா என் உயிரோட விளையாடுவாரா?” என தீபக் எகிற,
“என்ன டா அங்க சத்தம்?” என்ற விவேக்கிடம்,
“சும்மா பேசிட்டு இருந்தேன் மாமா!” என்ற தீபக்கை திருத்தவே முடியாது என அங்கிருந்து அர்ஜுன் நகர,
“டேய் டேய் விட்டுட்டு போகாத டா! கையை தர சொல்லு உன் மாமாவை!” என கதறி நின்றான் தீபக்.
அடுத்து ஒவ்வொருவரும் ஆசீர்வதித்து வளையல் அணிவித்து என வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு கிளம்பத் தயாராக, அர்ஜுன் மட்டும் அவர்கள் குடும்பத்தோடு தான் அமர்ந்திருந்தான்.
“கண்டிப்பா எல்லாரும் கல்யாணத்துக்கு வரணும் அக்கா!” என தீபக் அனன்யாவிடம் சொல்ல,
“வர முடியாத நேரமா கல்யாணத்தை வச்சிருக்க? ஒரு ஆறு மாசம் தள்ளி வையேன்!” என்றாள் அனன்யா.
“புருசனும் பொண்டாட்டியும் இதுல நல்ல ஒத்துமை தான்! என்னை குடும்பஸ்தன் ஆகவே விட மாட்டேன்னா எப்படி?” என்று சொல்லியவன்,
“நல்லவேளை வேற வீடு பார்த்து அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டேன்! இவங்களுக்கு மத்தில குடும்பம் நடத்த முடியுமா? கல்யாணத்துக்கு முன்னயே டிவோர்ஸ் வாங்கி குடுக்குற மாதிரி பேசுதுங்க பாரு!” என்ற குமுறலோடு தான் அனுப்பி வைத்தனர் அவனை.
அனைவரும் சென்ற பின் தான் தன் பரிசினை அர்ஜுன் விஜயலக்ஷ்மியை அருகில் வைத்துக் கொண்டு விவேக் அனன்யாவிடம் கொடுக்க,
“இப்ப தான் தருவியா நீ? சபைல தந்திருக்கலாம்ல?” அனன்யா முறைக்க,
“சபைல தர்றதுக்கு நான் என்ன வேற யாரோவா?” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு அனன்யா விவேக்கை மோதிரங்கள் மாற்றிக் கொள்ள வைத்தான் அர்ஜுன்.
“ஆனாலும் அர்ஜுன் டிஃபரண்ட் தான் இல்ல? எங்கேஜ்மென்ட்ல தான் ரிங் மாத்திப்பாங்க. இங்க குழந்தை பிறக்குற நேரம் மாத்திக்க வச்சுட்டான்!” விவேக் சொல்ல,
“பார்த்துக்கோ! அர்ஜுன் டிஃபரெண்ட்டா தான் ஹண்ட்ல் பண்ணுவானாம்!” அனன்யா விஜயலக்ஷ்மியிடம் சொல்ல,
“அண்ணி!” என சிணுங்கியவளை ஆசையாய் பார்த்து வைத்தான் அர்ஜுன்.
அன்று பரிசு வாங்க ப்ரணித்தாவும் வந்ததை விஜயலக்ஷ்மி அனன்யாவிடம் அர்ஜுன் இருக்கும் நேரம் பார்த்து சொல்ல,
“அவளை ஏன் டா கூப்பிட்ட? நீயா வம்பை விலைக்கு வாங்குறியா?” என்று அதட்டினாள் அர்ஜுனை அனன்யா.
“நல்லவேளைக்கு நம்ம மாமாகிட்ட நீ சொல்லிட்ட அவளை. இல்லைனா மாமாவை பார்க்கும் போது நானே சொல்லனும்னு தான் இருந்தேன் தெரியுமா? இன்னும் திருந்தாம ரூம்குள்ள தான் இருக்கிறாளாம். மாமா பீல் பன்றாங்க என்ன பண்ண போறோமோனு! தனக்கு பிள்ளைங்க இல்லையேனு கூட அவங்க கவலைப்பட்டது இல்ல. இவளால அவங்களுக்கும் தான் கஷ்டம்!” என்றாள்.
“எனக்கும் வேற வழி தெரியல அனு! மாமாகிட்ட சொல்லிடறது தான் பெட்டர்! பின்ன அதை வச்சே மிரட்ட ஆரம்பிக்கவும் தயங்கமாட்டா அந்த ப்ரணித்தா!” என்ற அர்ஜுன்,
“நான் சொன்னது என்னவோ எனக்கு பயம் இல்லைனு தான். ஆனா பயமா இருக்கு அனு! அது தான் நிஜம். ரொம்ப எதிர்பார்க்குறேன் எங்க மேரேஜ் அண்ட் மேரேஜ் லைஃப்னு. ப்ரணித்தா என்ன பண்ணிட முடியும்னு ஈஸியா சொல்லிடலாம்! ஆனா எதாவது பண்ணிட்டா என்னை விட விஜி ரொம்ப உடைஞ்சு போய்டுவா! அதனால தான் மாமாகிட்ட கூட அவளை சொல்லிட்டேன்!” என்ற அர்ஜுனை,
“இப்ப என்ன? அவ பிரச்சனை பண்ணுவான்றியா?” அனன்யா கேட்க,
“வாய்ப்பில்ல! மாமாவோட கண்காணிப்புல தான் ப்ரணித்தா இருக்குறா!”
“டேய்! அவளை எல்லாம் ஒரு ஆள்னு மதிச்சு ஃபோர்ஸ் வேற ரெடி பண்ற? எதாவது பண்ணட்டும்! அப்புறம் தெரியும் அவளுக்கு இந்த அனு யாருன்னு!” என்று கோபமாய் அனு சொல்ல, ஏழு மாத நிறைவில் அவள் கூறும் இத்தகைய டயலாக்கை கேட்டு சிரித்துவிட்டான் அர்ஜுன்.
“முதல்ல உன்னை கவனி! இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்ல! அதை சொல்ல தான் அன்னைக்கு அவளை கூப்பிட்டேனே!” என்றான் அர்ஜுன்.
“என்னவோ சொல்ற! நாங்க வேற யாரையும் நம்பியும் இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ண போறதில்ல. யாருக்கும் கல்யாணத்தை நினைச்சு பயந்துட்டும் இருக்க போறதில்ல! உங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான் நாங்க!” என தெளிவாய் சொல்லி அகன்றுவிட்டாள் அனன்யா.
“போட்டுக் குடுக்குற வேலையெல்லாம் ஆரம்பிச்சுட்ட போல?” அனன்யா சென்றதும் அர்ஜுன் விஜயலக்ஷ்மியிடம் கேட்க,
“சும்மா!” என்றவள் எழுந்து கொள்ளப் பார்க்க,
“அத்தையும் மாமாவும் தூங்குறாங்க! பேசாம உக்காரு!” என்றான் அவள் கைப்பிடித்து அமர வைத்து.
“அண்ணா அண்ணியை எல்லாம் ஹ்யூமென் லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டிங்களா என்ன?” விஜயலக்ஷ்மி கேட்க,
“அவங்களுக்கும் டீசென்சி தெரியும்! கண்டுக்க மாட்டாங்க!” என்றான் கண் சிமிட்டி!
“ஹ்ம்ம்! தைரியம் ஜாஸ்தி ஆகிடுச்சு இல்ல!”
“பேசுறதுக்கெல்லாம் தைரியம் வேணுமா? என்ன ஸ்டேஜ்ல வச்சிருக்க இல்ல நீ என்னை?” என்று முறைத்தவன்,
“மேரேஜ் முடியட்டும்!” என்றும் சொல்ல,
“அதை அப்ப பாக்கலாம்! ஆமா அண்ணிகிட்ட என்னவோ பயம்னு சொல்லிட்டு இருந்திங்க?” என்று கேட்கவும் அர்ஜுன் அமைதியாகிவிட,
“எனக்கு பயமெல்லாம் இல்ல! நிச்சயம் நம்ம கல்யாணம் எல்லாரோட ஆசீர்வாதத்துல சந்தோசமா நடக்க தான் போகுது பாருங்க! யார் அவ? ஒருமுறை தவறினா திரும்ப அங்க தவறிடுவோமா? எத்தனை ப்ரணித்தா வரட்டும்! நான் தான் மிஸ்ஸஸ் அர்ஜுன்!” என்று சொல்லியவள் எப்படி என்று புருவம் உயர்த்த, உதடு குவித்து முத்தத்தை அனுப்பி வைத்தவன் செயலில் அசைய மறந்து அவள் அமர்ந்துவிட, சட்டென எழுந்து நகர்ந்து சென்றுவிட்டான் அர்ஜுன் அவளை நெருங்கிவிடுவோமோ என்ற எண்ணத்தில்.
நாட்கள் வேகமாய் பறந்தோட, தீபக் திருமணத்திருக்கு என முந்தைய நாள் இரவே காரில் கிளம்பிவிட்டான் அர்ஜுன். அடுத்த நாள் திருமணம் முடியவும் மீண்டுமாய் உடனே ஊருக்கும் திரும்பிவிட்டான்.
“மாமா வரலையா டா?” தீபக் கேட்க,
“வரணும்னு தான் இருந்தாங்க! கம்பெனில ஒரு இஸ்ஸு! அதான் வர முடியல! தப்பா எடுத்துக்காத டா!” என்றான் அர்ஜுன்.
தீபக் அன்னையும் நலம் விசாரித்தவர் அனன்யாவிற்கு என தனியாய் பலகாரங்களையும் கொடுத்துவிட்டார்.
******************************************
அனன்யாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கும் இங்குமாய் ஓரிடத்தில் நில்லாமல் படபடப்போடு நடந்து கொண்டிருந்தான் விவேக்.
ஒரு மணி நேரம் தாண்டிவிட்டது. இடையில் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி கையெழுத்தும் வாங்கி சென்றுவிட்டனர்.
கொடுத்திருந்த நாளுக்கு இருபது நாளுக்கு முன்பேவே சேர்க்க வேண்டிய நிலை. காலைவேளையில் எப்போதும் போல அனன்யா தோட்டத்தில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்து அமர்ந்தவளுக்கு என்னவோ இருப்பு கொள்ளவில்லை.
அது வலியும் கூட இல்லை. குறுகுறுவென என்னவோ செய்ய, விவேக் சாப்பிட வரும் நேரம் என்பதால் காலை டிபனை தயாராய் வைத்துவிட்டு அனன்யாவை சாப்பிட அழைத்தார் கலையரசி.
“அத்தை! என்னவோ மாதிரி இருக்கு!” என்றவளுக்கு சொல்ல தெரியவில்லை.
“என்ன டி செய்யுது?” என்று கலையரசி கேட்க,
“தெரியல! ஆனா முடியல!” என்றவளுக்கு வியர்த்துக் கொட்ட, விவேக், விஜயலக்ஷ்மி இருவரையும் சத்தமிட்டு அழைத்தார் அன்னை.
விஜயலக்ஷ்மி வந்து பார்த்து பரிசோதித்தவள், “ம்மா! பனிக்குடம் உடைஞ்சிருச்சு போல! டென்ஷன் ஆனா பீபி ரைஸ் ஆகிடும்.. ஹாஸ்பிடல் போய்டலாம்!” என்று சொல்லி உடனே கிளம்பி மருத்துவமனைக்கு அழைத்து விவரம் சொல்லி ஏற்பாடாகி அனன்யாவை சேர்த்துவிட்டு வெளியில் காத்திருந்தனர் குடும்பத்தினர்.
வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே அர்ஜுனுக்கும் விஜயலக்ஷ்மி அழைத்து சொல்லிவிட, அவனுமே உடனே அவர்கள் வந்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்துவிட்டான்.
“இவ்ளோ நேரம் ஆகுமா?” ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் அனன்யா நிலை தெரியாமல் அர்ஜுன் விஜயலக்ஷ்மியிடம் கேட்க,
“ஹ்ம் ஆகும்!” என்றாள்.
“இன்னும் டைம் இருக்குல்ல? அப்புறம் எப்படி இப்பவே?” அர்ஜுன் கேட்டான்.
“இதுவும் நார்மல் தான் அர்ஜுன். ஒரு வாரம் ரெண்டு வாரம் முன்னபின்ன ஆகும் தான். பயப்பட ஒண்ணுமில்ல!” என்றாள்.
மனதெல்லாம் பலமாய் அடித்துக் கொண்டது அர்ஜுனிற்கு. அனன்யாவை சிரித்தபடி பார்த்தால் மட்டுமே மனம் நிம்மதி கொள்ளும் போல இருந்தது.
“பொண்ணு பிறந்திருக்காங்க! டைம் குறிச்சிக்கோங்க!” என வந்து மருத்துவர் சொல்லி செல்லவும் கலையரசி அதைக் கேட்டுக் கொள்ள,
“அனு?” என்று விவேக் கேட்டு முன்வந்து நிற்க,
“அவங்களை ரூம்க்கு மாத்தினதும் பார்க்கலாம். குழந்தையை இப்ப கொண்டு வருவாங்க!” என்று சொல்லி சென்றார்.
“கங்க்ரட்ஸ் ண்ணா!” என விஜயலக்ஷ்மி வாழ்த்துக்கள் சொல்ல, அர்ஜுன் அணைத்துக் கொண்டான் விவேக்கை.
“மகா லட்சுமி டா! வீடு இனிமே நிறைஞ்சுடும் நமக்கு!” சந்தானம் சொல்ல,
“நான் பையன் தான் வேணும்னு சும்மா பேச்சுக்கு சொல்லிட்டாலும் அந்த குதி குதிப்பா! சொல்லி சொல்லியே நினச்சா மாதிரி பொண்ணை பெத்துட்டா பாரேன்!” கலையரசி மகிழ்ச்சியோடு சொல்ல, விவேக் அனன்யாவை காணும் வரையில் ஒரு நிலையில் இல்லை.
குழந்தையுடன் மருத்துவர் வர கண்ட விவேக்கின் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! ஐந்து வருடப் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து அல்லவா தன்னிடம் வருகிறாள் தன் தேவதை.
“நீ வாங்குறியா டா?” கலையரசி கேட்கவும் உடனே சம்மதம் சொல்லி கைகளில் வாங்கியவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
“ம்மா! எவ்ளோ க்யூட்ல?” என்றவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
கலையரசி கைகளில் அவளை தருவதற்குள் அத்தனை பயம் எங்கே தன் கைகள் நடுக்கத்தில் விட்டுவிடுமோ என்று.
“அம்மும்மா!” என வாங்கி கலையரசி செல்லம் கொஞ்ச, அர்ஜுன் குழந்தையிடம் இருந்து கண்களை திருப்பவே இல்லை.
“என்ன! அம்மா வந்தாச்சா?” விஜயலக்ஷ்மி அர்ஜுன் அருகே வந்து கேட்க,
“விஜி!” என அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் உணர்ச்சிவசப்படிருந்தான்.
“ஓகே அர்ஜுன்!” விஜயலக்ஷ்மி சொல்லவும் தலையை மட்டும் ஆட்டியவன் அருகே சந்தானம் குழந்தையோடு வர, மறுப்பாய் தலையை ஆட்டியவனுக்கு அத்தனை பயம் குழந்தையை கைகளில் வாங்கிட.
“வாங்குங்களேன்!” என்ற விஜயலக்ஷ்மி எப்படி பிடிக்க வேண்டும் என்றும் சொல்லித்தர, கொள்ளை ஆசையோடு கைகளில் வாங்கிக் கொண்டவன்,
“ம்மா!” என்று குழந்தையை அர்ஜுன் அழைக்க, அனைவருமே புன்னகையோடு தான் பார்த்தனர் அவனை.
அனன்யாவை தனி அறைக்கு மாற்றி இரண்டு மணி நேரங்களுக்கு பின்பே விழி திறந்தாள் அவள். வலியோடு கண்களை திறந்தவள் முன் விவேக் குழந்தையோடு அமர்ந்திருக்க, ஆசையாய் இருவரையும் பார்த்தவள் வலியில் சோர்வாய் கண்களை மூடினாள்.
குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் கடந்திருந்தது. இன்னும் குழந்தையின் பெயரை அர்ஜுனிடம் தெரிவித்திருக்கவில்லை. அர்ஜுனும் அன்னையின் பெயரை வைக்க எல்லாம் எண்ணவில்லை.
எந்த பெயராய் இருந்தால் என்ன! என் அன்னை இவள் என கையில் வைத்து ஆசை தீர பார்த்து அமர்ந்திருப்பான்.
இதில் குழந்தையோடு ஒரு வாரம் அர்ஜுன் வீட்டில் சென்று தங்கிவிட்டு தான் வந்தனர் விவேக் அனன்யா.
அப்படி அர்ஜுன் வீட்டில் அனன்யா குழந்தையுடன் இருக்கும் நேரம் விஜயலக்ஷ்மி ஒருமுறை பார்க்க வந்திருந்தவள்,
“நானும் இங்கேயே இருக்கவா?” என விளையாட்டாய் அர்ஜுனிடம் கேட்க,
“நம்ம ரூம் மேல ஃபர்ஸ்ட் ரைட் சைட்!” அர்ஜுன் சொல்லவும் வாயை மூடிக் கொண்டு செல்பவளை அடக்கப்பட்ட புன்னகையோடு பார்த்து நின்றான் அர்ஜுன்.
அடுத்து விவேக் வீட்டிற்கு தினமும் ஒரு முறையேனும் அனன்யா மகளைப் பார்க்க சென்றுவிடுவான் அர்ஜுன்.
“பார்த்தியா! உங்க கல்யாணம் முடிவான பின்னாடி இப்படி தினமும் உன்னை பார்க்க வந்தானா இவன்? என் பொண்ணைப் பார்க்க தான் தினமும் வர்றான்! உன்னை விட இவ தான் அர்ஜுனுக்கு முக்கியம்!” அனன்யா சொல்ல,
“உங்க பொண்ணை பார்க்க வர்ல அவங்க அம்மா அதாவது என் மாமியாரை பார்க்க தான் வர்றாங்க! அவங்க அம்மாவை பார்த்துட்டு அப்படியே போய்ட்டா தான் தப்பு!” விஜயலக்ஷ்மி சொல்ல,
“அப்போ உன்னை தனியா கவனிக்குறானோ இவன்?” என்றாள் சந்தேகமாய் அனன்யா.
“ஹே அனு!” என அர்ஜுன் முறைக்க,
“ஏன் ஆமான்னு சொல்ல என்ன உங்களுக்கு? சொல்லுங்க! இப்ப சொல்லுங்க! நான் ஸ்பெஷல் தானே?” என விஜயலக்ஷ்மி அர்ஜுனைப் பிடித்துக் கொள்ள,
“பத்தவச்சுட்டியா?” என அனன்யாவை முறைத்தவன்,
“போய் அம்முவை தூங்க வை!” என அவள் கைகளில் கொடுத்து அனுப்பியவன்,
“வார்த்தையால எல்லாம் சொல்ல முடியாது!” என்று அங்கும் இங்கும் பார்த்து எழுந்தபடிக்கு அர்ஜுன் விஜயலக்ஷ்மியிடம் சொல்லவுமே புரிந்து கொண்டவள் குடுகுடுவென ஓடிவிட்டாள்.
“ஹ்ம்! பேச்சு மட்டும் தான்!” அவளுக்கு கேட்கும் விதமாய் சத்தமாய் சொல்லி சிரித்து வைத்தான் அர்ஜுன்.
கூறியதை போலவே பெயர் சூட்டும் விழாவிற்கு என ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டிவிட்டாள் அனன்யா.
இன்னும் இருபது நாட்களில் அர்ஜுன் விஜயலக்ஷ்மி திருமணம். அதற்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற, அனன்யா ஆசைக்காக பெயர் சூட்டும் வைபவமும் வீடு நிறைந்த ஆட்களுடன் சிறப்பாய் நடைபெற்றது.
“தாய்மாமா தான் முதல்ல குழந்தை பேரை சொல்லணும்!” என்று கூறவும் அர்ஜுன் குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டு அனன்யா விவேக்கைப் பார்க்க,
“நீ சொல்ற பேர் தான்! சொல்லு!” என்றுவிட்டான் விவேக்.
“மாமா!” என அதிர்ந்தவன்,
“நீ சொல்லு க்கா!” என்று அனன்யாவிடம் கேட்க,
“ம்ம்ஹும்ம்! உன்னோட சாய்ஸ் தான்! எனக்கு தெரியும்! நீயே சொல்லு!” என்றுவிட்டாள் அனன்யா கூட. அடுத்து கலையரசி சந்தானம் என பார்வை அவர்களிடம் அர்ஜுனுக்கு செல்ல,
“காதுல மூணு முறை சொல்லு பா!” என்றார் சந்தானமும்.
“சொல்லுங்க அர்ஜுன்!” விஜயலக்ஷ்மியும் கண்ணசைக்க,
“கயல்விழி… கயல்விழி… கயல்விழி! என் கயலம்மா!” என்றவன் உச்சி முகர்ந்து, தான் வாங்கி வைத்திருந்த கழுத்துச் சங்கிலியை குழந்தைக்கு அணிவித்தான்.
வேறு பெயர் தான் நியாபகத்தில் உடனே தோன்றி விடுமா என்ன?
விவேக்கின் மேல் இருந்த மதிப்பு இன்னுமாய் கூடியது அர்ஜுனுள்.
தொடரும்..
error: Content is protected !!