Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)

அத்தியாயம் 26

முன்நெற்றியில் உள்ளங்கையை வைத்து மஞ்சத்தில் கையூன்றி கிட்டத்தட்ட அரை மணி நேரமாய் தன் மனைவியின் முகத்தை பார்த்திருந்தவன் கைகள் என்னவோ அவளைத் தழுவ தான் எண்ணியது.



Advertisement

ஆழ்ந்த உறக்கம் விஜயலக்ஷ்மிக்கு. உறங்கி இரண்டு மூன்று மணி நேரம் இருக்குமா! என நினைக்கும் போதே கண்களை மூடி வெட்கப் புன்னகையை ஆண்மகன் கொடுக்க, லேசான அசைவோடு அவன்புறம் திரும்பிப் படுத்தவள் தானாய் அவனோடு ஒன்றி அடைக்கலம் தேடும் குழந்தையாய் ஒட்டிக் கொண்டு உறக்கத்தை தொடர, அர்ஜுனிடம் மொத்தமாய் பறிபோனது தூக்கத்தின் சுவடுகள் கூட.

“எவ்ளோ சாஃட் நீ!” என தன்னையும் மீறி அவளை அணைத்துக் கொண்டவன் எண்ணமெல்லாம் இரவு அழைத்த அவளின் அழைப்பின் வார்த்தைகளில் தான். இப்போது நினைக்கையில் இன்னுமே அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள நெஞ்சம் கெஞ்ச,

Advertisement

Advertisement

“அர்ஜுன்!” அவன் நெஞ்சின் ஓசை அவள் உறக்கத்தையுமே கலைத்திருந்தது.

“குட் மார்னிங் விஜிமா!” என்று அவள் முகத்தில் சிறு சிறு முத்தம் வைத்து தொடர,

Advertisement

“ச்சோ! காலைலே!” என்றவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

“இதுக்கெல்லாமா டைமிங் பாக்குறது?” என்றவன் முகத்திலிருந்து முத்தம் வைக்க இடம் தாவிட,

“அர்ஜுன்!” என சிணுங்கியவள் அவனை அசையாவிடாமல் கட்டிக் கொள்ள, அங்குமே அவனுக்கு இடம் கிடைத்திருந்தது.

“எவ்ளோ ரிலாக்ஸான மார்னிங் இல்ல டா? ஐ லவ்டு இட்!” அர்ஜுன் அவள் தலை கோதி ரசனையாய் சொல்லவும் கிண்டல் செய்கிறானோ என விழி திறந்து விஜயலக்ஷ்மி பார்க்க, அவன் உணர்ந்து சொல்வதாய் கூறியது அவனின் முகம்.

“ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு ஹாப்பி மார்னிங்! தனியாவே இந்த வீட்டுல இருந்து மார்னிங் எல்லாம் ரொம்ப போரிங் அண்ட் ஒரு மாதிரி வெறுப்பா தான் இருக்கும். தீபக்கும் இல்லனா ஸ்ட்ரெஸ் ஆகி இருப்பேன் போல!” அர்ஜுன் சொல்லி சிறு புன்னகையை கொடுத்து அப்போது தான் அவள் முகம் பார்க்க, கலங்கி தவித்து ஏங்கிப் பார்த்தவளை,

“ஹே! என்ன டா!” என அழைக்கும் முன் அவன் நெஞ்சத்தில் புதைந்து கொண்டவள் கொடுத்த முத்தங்கள் அவனை குளிர்வூட்டியது.

இன்பமாய் அதிர்ந்தாலும் “ஓய்! இதென்ன கண்ணீரோட?” என்று கேட்டு அவள் கண்களில் இதழ் பதிக்க,

“எல்லாம் என்னால!” என்றாள் மீண்டும் கலங்கும் கண்களோடு.

“ஹ்ம்! ஆமா உன்னால தான்! நீ கிடைச்சதனால தான் இவ்ளோ பிளெஸ்ஸிங்கா ஒரு மார்னிங்!” என்று புன்னகைத்தவன்,

“சரி இப்ப சொல்லு!” என்று பேச்சை மாற்றினான்.

“என்ன சொல்லணும்?” என்றவளுக்கு புரிவது போல தான் இருந்தது.

“ஹே! சீட்டிங் விஜி! இப்ப சொல்லாம எழுந்துக்க முடியாது நீ!”

“ஷ்ஷ்! மூச்!”

“நோ! இப்ப சொல்றியா இல்லையா!” என்றவன் சேட்டையில்,

“அய்யோ த்தான்!” என்று அவனுள்ளேயே மீண்டும் சென்று முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவளின் ஆசையான வார்த்தை! தானாய் தோன்றியதும் கூட. எத்தனையோ முறை அவனிடம் கூற, அவனை அழைக்க என நினைத்தும் வெட்கம் தடுத்திருக்க, நேற்றைய இரவு அவளையும் மீறி அத்தான் என பல நூறு முறையாய் அழைக்க வைத்திருந்தது இரவின் நீளங்கள்.

“போச்சு! நான் காலி டா!” என்றவன் தனக்குள் சேர்ந்து கொண்டவளை தன்னோடு மட்டும் என இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி இருந்தான்.

இத்தனை அழகான விடியல் என நினைத்து நினைத்து ரசித்து ஒவ்வொரு நொடியையும் சேமித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அத்தனை அத்தனை விளையாட்டு, சீண்டல்கள், கிண்டல், கேலி, அதையும் விட அதிகமாய் அணைப்பு, முத்தம் அதன் ஆரம்பமாய் தீரா காதல் என விடிந்து பல மணி நேரம் தங்களுக்கான பொக்கிஷத் தருணங்கள் தான்.

“அண்ணா அண்ணி வருவாங்களா? இல்ல நாம போகணுமா?” பத்து மணி முப்பது நிமிடங்களில் குளித்து முடித்து இலகுவாய் மாடியில் இருந்து இறங்கியபடி அர்ஜுனிடம் விஜயலக்ஷ்மி கேட்க,

“அவங்களும் வர்ல. நாமளும் போகல!” என்றவனை படிகளில் நின்று விஜயலக்ஷ்மி முறைக்க,

“நிஜம் டா! நேத்தே சொல்லி தான் அனுப்பிவிட்ருக்கேன் வீட்டுப் பக்கம் வராதீங்கன்னு!” என்று அர்ஜுன் சொல்ல,

“என்ன அர்ஜுன்!” என்றவள் சிணுங்களில் அவள் தோளில் கையிட்டுக் கொண்டவன்,

“வந்தாலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க தான்! என்னவோ இந்த ஸ்பெஷல் மொமெண்ட் நமக்கானதா மட்டுமா இருக்கட்டுமேன்னு ஒரு தாட்!” என்று சொல்லியவன் நெஞ்சத்தின் சுவடுகள் அறிந்தவள் அவனை அவன் சார்ந்த முடிவில் என தானும் துணை நின்றாள்.

“இப்ப பாரு! நீ நீயா இருக்க முடியுது இல்ல? இதுவே அனு இருந்தா ஓடி ஒளிஞ்சு கண்ணாமூச்சி ஆடி இருப்ப தானே?” என்றவன் சொல்லில்,

“ஓஹ் அர்ஜுன்!” என கண்களை மூடித் திறந்தவள்,

“ரொம்ப ரொம்ப பேசுறீங்க!” என்று சொல்லி அவன் கைகளை தோளில் இருந்து எடுக்க,

“அர்ஜுன் நல்லாவே இல்லை. நீ வச்ச பேரு தான் எனக்கு வேணும்!” என்று அடம் செய்பவனை சமாளிக்கவே போதும் போதும் என்றானது விஜயலக்ஷ்மிக்கு.

அர்ஜுனின் அலைபேசி சத்தம் கேட்கவும், “கரடி!” என்று மொபைலைப் பார்த்து அர்ஜுன் சொல்ல, தீபக் என்ற அழைப்பை பார்த்த விஜயலக்ஷ்மியும், “ஹப்பா!” என்று மூச்சுவிட்டாள்.

“டூ மினிட்ஸ் தான்! அதுவே இவனுக்கு அதிகம்!” என்று சொல்லி அழைப்பை ஏற்று ஹாலுக்கு அவன் செல்ல, சமையலறை சென்றாள் விஜயலக்ஷ்மி.

“உன்னையெல்லாம்….” அர்ஜுன் ஆரம்பிக்கும் முன்பே,

“ஏதாச்சும் சொல்லிராத டா நல்லவனே! காலையிலேயே என் வீட்டம்மா அர்ஜுன் அண்ணாக்கு குடுத்துட்டு வாங்கனு சொல்லி டிபன் செஞ்சு குடுத்து விட்டா! கதவு முன்னாடி வச்சுட்டு திரும்பிப் பார்க்காம வந்துட்டேன். வச்சு அரை மணி நேரம் ஆகுது. காலிங் பெல் அடிச்சு உன்கிட்ட அடி வாங்க எல்லாம் தெம்பில்ல. நீயே கதவை திறந்து எடுத்துக்கோ!” என்று சொல்ல,

“டேய்!” என்று சிரித்துவிட்டான் அர்ஜுன்.

“அர்ஜுன் அண்ணா உங்களுக்காக எவ்வளவு பண்ணிருக்காங்கனு காலைலேயே பாசமழை பொழியுறா டா!” தீபக் சொல்ல, மென் புன்னகை அர்ஜுனிற்கு.

“ரைட்டு! அனு அக்கா நாளைக்கு என்னையும் விருந்துக்கு கூப்பிட்டுச்சு! உன் மாமா இல்லைனா தான் வருவேன்! சரியா! இனி டிஸ்டர்ப் பண்ணல! ஹாப்பி மார்னிங்!” என்று அவனே பேசி அவனே வைத்துவிட, இவர்களின் அன்பில் உருகியவன் தீபக் வைத்து சென்றிருந்ததை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு சமையலறை செல்ல, எதையோ தேடிக் கொண்டிருந்தாள் விஜயலக்ஷ்மி.

“கொஞ்சம் இங்க வா விஜி!” என அழைத்து வந்து அன்னை முன் நிறுத்தி இருந்தான் அவளை.

“ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ம்மா! விஜியும் தான்! உங்களுக்கும் ஹாப்பி தானே?” என அன்னையின் புகைப்படம் பார்த்து கேட்க, மனதிலிருக்கும் இந்த ஒரு பாரம் மட்டும் அகலவே இல்லை விஜயலக்ஷ்மிக்கு.

அவள் கொஞ்சம் முகம் வடுவதாய் தெரிய, கண்டிப்புடன் தலையசைத்தவன், “ஆசிர்வாதம் வாங்கிக்க தான் கூட்டிட்டு வந்தேன்!”  என்று சொல்லவும் இருவருமாய் தொட்டு வணங்கி வந்தனர்.

“சர்க்கரை எப்பவும் இங்க தான் இருக்கும்!” சமையலறை சென்றதும் அவளுக்கு பின் நின்று மேலே திறந்து சக்கரையை எடுத்து அர்ஜுன் வைக்க,

“காபி தானே உங்களுக்கு?” என்று கேட்டு அவள் தயார் செய்ய, அருகே கைகட்டி நின்று ஒவ்வொன்றையும் கவனித்து என அர்ஜுன் அவனாய் இல்லை.

இருவருக்கும் எடுத்துக் கொண்டு வெளியே வர, “தீபக் தான் வெளிலவே வச்சுட்டு போயிருக்கான்!” என்றான் அங்கிருந்ததை காண்பித்து.

“எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கீங்களா வர கூடாதுன்னு? பிச்! என்ன நினைப்பாங்க?”

“நான் லைட்டா தான் சொன்னேன்! அவங்கவங்க அவங்கவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி புரிஞ்சிகிட்டு எனக்கான ஸ்பேஸ் குடுத்துருக்காங்க!”

“ஆஹ்! இந்த லுக்!” என அவனைப் பார்த்துவிட்டு அவள் திரும்பிக் கொள்ள, சத்தமாய் சிரித்துவிட்டான் அர்ஜுன்.

“நீ ஏன் பாக்குற?” என்றபடி.

“சாப்பிடலாமா? எடுத்து வைக்கவா?” விஜயலக்ஷ்மி கேட்க,

“ஹ்ம் வைக்கலாமே!” என்றவன் சென்று பிளேட் தண்ணீர் என எடுத்து வர, இவள் பரிமாறினாள்.

இருவருமாய் சேர்ந்து சாப்பிட்டு முடிக்க, என்னவோ இன்னமும் அர்ஜுன் முகம் பார்க்க வெட்கமும், பார்க்காமல் இருக்க முடியாமலும் என அவஸ்தையாய் தான் நின்றிருந்தாள் விஜயலக்ஷ்மி.

அர்ஜுன் அப்படியெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை. அவனை தடுக்கவும் யாருமில்லை. பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டே, தன்னவள் என எண்ணிக் கொண்டே தான் இருந்தான்.

அனன்யா அவர்களுக்கு தொந்தரவாய் இருக்க கூடாதே என எண்ணி சாப்பாடு அனுப்பவா என செய்தி மட்டும் அனுப்பி வைக்க, தீபக் கொடுத்ததாய் பதிலனுப்பி வைத்தாள் விஜயலக்ஷ்மி.

“நெக்ஸ்ட்?” விஜயலக்ஷ்மி கேட்க,

“ரெஸ்ட்?” என்றவனை விஜி முறைக்க,

“நோ நோ! நிஜமான ரெஸ்ட்!” என்றான் புரிந்து.

அன்றைய பொழுது முழுதும் அவர்களுக்கானது மட்டுமாய். சில வார்த்தைகள், பல மௌனங்கள், கொஞ்சமாய் பனிப்போர் என இருவருவருக்குமான நெருக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது.

நேரமும் இருவரின் அண்மையில் இதமாய் இதம் சேர்க்க, தேன்நிலவு பற்றி கேட்டாள் விஜயலக்ஷ்மியே!

“ஹ்ம் போலாமே! பிளேஸ்?” அர்ஜுன் கேட்க,

“நீங்க சூஸ் பண்ணுங்க!”

“உனக்கு புடிச்ச பிளேஸ் இல்ல போகணும்னு நினைச்ச பிளேஸ்?” 

“உங்களுக்குன்னு யோசிக்கவே மாட்டிங்களா?” விஜயலக்ஷ்மி முறைக்க,

“உனக்கு புடிச்சதெல்லாம் எனக்கு புடிக்காம போகுமா என்ன?” என்றான் புருவம் உயர்த்தி.

“எனக்கு இந்த ஒன் மன்ந்த் லீவ் மாதிரி எப்பவும் கிடைக்குமா தெரியல!” விஜயலக்ஷ்மி சொல்ல,

“சோ? இப்பவே கிளம்பலாம்ன்றியா?”

“ப்ச்! சீரியஸ் அர்ஜுன்! எமெர்ஜெண்சினா எந்நேரமா இருந்தாலும் போக வேண்டியதிருக்கும்!” 

“ஹே! இதென்ன புதுசா சொல்லிட்டு இருக்க! எனக்கு தான் தெரியுமே!”

“ஹ்ம் தெரியும் தான்! ஆனா எனக்கு ஷிப்ட் இருக்கும். நீங்க வீட்டுல இருக்கும் போது நான் ஹாஸ்பிடல் போற மாதிரி கூட இருக்கும்!” என்றதும்,

“ஹ்ம்!” என்றான்.

“மிட்நைட் ஒர்க்ஸ் எல்லாம்…” என்று சொல்லும் முன் அருகே வந்து அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.

“எந்நேரமும் என்னோடவே இருக்க முடியாதுன்னு சொல்றியா?” என்றான் அமைதியான புன்னகையுடன்.

“பக்கத்துல இருந்துட்டே இருந்தா தானா? உணர்வுகள் எல்லாம் விசித்திரமானது விஜி. நீ என் நினைப்போட நான் உன் நினைப்போடனு இருந்தா காலம் முழுக்க கூட தனியா வாழ முடியும். பக்கத்துல இருந்து இப்படி சாய்ஞ்சுக்கும் போது கிடைக்குற அதே சந்தோஷம், நீ குட்டியா சாப்டியான்னு எனக்கு அனுப்புற மெசேஜ்ல கூட எனக்கு கிடைச்சிடும்!”

“என் மனைவி மிஸஸ் அர்ஜுன்றப்ப எல்லாத்தையும் நாம சேர்ந்து கடந்து, சேர்ந்து சந்தோசப்பட்டு சேர்ந்து அனுபவிச்சு சேர்ந்து தான் கடைசி வரை பயணிக்க போறோம்! அந்த பயணத்துல அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும். அதையும் சேர்ந்தே பார்த்துப்போம்!” என்று அவள் நெற்றி முட்டி கூற, புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள் அவன் வார்த்தைகளை.

“ஆமா என்ன சொன்ன இந்த ஒன் மன்ந்த் மாதிரி லீவ் இருக்காதா?” என்று கேட்கவும் அவள் ஆம் என்று தலையசைக்க,

“அப்போ ஒரு நைன் மன்ந்த்ஸ் வருமே! அப்ப என்ன செய்யலாம் விஜி?” என்று கேட்கவும் சில நொடிகளுக்கு பிறகே புரிந்தது அவளுக்கு.

“ச்ச்சோ அர்ஜுன்!” என செவ்வானமாய் சிவந்த முகத்தோடு மடியில் கிடந்தவன் மேல் தாராளமாய் அடிகளை வைக்க, சிரமமின்றி வாங்கிக் கொண்டான் நிறைந்த மனதுடன்.

******************************************

“விவேக்! கேக் இன்னும் வர்ல!” அனன்யா சொல்ல,

“அர்ஜுன் தான் ஃபால்லோவ் பன்றான் அனு! நாம பார்ட்டி ஹால்க்கு போய்டலாம். அங்க வர்ற மாதிரி அர்ஜுன்க்கு கால் பண்ணி சொல்லிடுவோம்!” என்று சொல்லி விவேக் தன் மகளைப் பார்க்க, சோஃபாவைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவள் தந்தையைப் பார்த்ததும் வேகமாய் இரண்டடி வைத்துவிட, அடுத்த அடி வைக்கும் முன் தூக்கிக் கொண்டான் விவேக்.

“நடக்க விடுங்க அவளை!” அனு சொல்ல,

“விழப் பார்த்தா அனு! இல்ல அம்மு?” என குழந்தையிடம் கேட்க,

“மா..மா!” என்றது தனது பொக்கை வாயோடு.

“இப்ப தான் நடக்க ஸ்டார்ட் பன்றா! விழுந்தா தானே எழுந்து நடக்கனும்னு தெரியும்?” என்ற அனன்யா,

“இவ ஒருத்தி! மாமா தவிர ஒன்னும் தெரியாது!” என மகளை முறைக்க,

“ஒரு வயசு பிள்ளைட்ட மல்லுக்கு நிக்குறா பாரு! ரெடினா போய் கார்ல ஏறுங்க! அப்பா கேட்டரிங்கிட்ட பேசிட்டு இருக்காங்க! அவரையும் கூப்பிடு!” என்று சொல்லி சென்றார் கலையரசி.

இன்று கயல்விழியின் முதல் பிறந்தநாள். கலையரசிக்குமே பேத்தி பிறந்தநாளை சிறப்பாய் செய்ய ஆசை. அனன்யாவும் சேர்ந்து திட்டமிட, அனைத்து ஏற்பாடும் மண்டபம், ஈவென்ட் மேனேஜ்மெண்ட் எல்லாவற்றிற்கும் பொறுப்பு அர்ஜுன் ஏற்றுக் கொண்டான்.

“கயல் பாப்பா வந்தாச்சு!” என தீபக் மண்டபத்தின் வாசலில் கயல்விழியைத் தூக்கிக் கொள்ள, அவன் கன்னத்தில் பலமாய் கிள்ளி வைத்தாள் கயல்விழி.

“உன்னை மாதிரியே ரவுடியா வளத்து வச்சுருக்கியே க்கா!” என்றான் அனன்யாவிடம் தீபக்.

“என்ன டா சொன்ன?” என விவேக் அவன் அருகில் வர,

“ஏஞ்சல் இவ்வளவு அழகா இருக்காங்களே! அப்படியே விவேக் சார் மாதிரினு அனு அக்காகிட்ட சொல்லிட்டு இருந்தேன் சார்!” என உடனே தீபக் பேச்சை மாத்த,

“கொஞ்சம் கூட வெக்கம் இல்லைல? என் பொண்ணு ரவுடியா? பிரசவத்துக்கு ஊருக்கு அனுப்பி இருக்கல்ல உன் பொண்டாட்டியை? உன் வீட்டுல வேறொரு பொண்ணோட செருப்பு கிடக்குதுன்னு போன் பண்ணவா?” என்று அனன்யா கேட்க,

“க்கா! இப்போ நான் குடும்பஸ்தன்! என்னை விட்ரு! இனி உங்க பொண்ணை பொண்ணுன்னு கூட சொல்ல மாட்டேன். என் குலசாமி இவ!” என கயல்விழியை அனன்யா கைகளில் கொடுத்தவன்,

“குடும்பமா இது? இதுக்கு தான் லேட்டா வர்றேன்னு சொன்னேன்! என்னை வர சொல்லிட்டு இவன் எங்க போனான்?” என்று அனன்யாவை விட்டு வெகு தூரம் வந்து புலம்பி அர்ஜுனிற்கு அழைத்தான் தீபக்.

காரை ஒட்டிக் கொண்டிருந்த அர்ஜுன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரும்பி மனைவியைப் பார்க்கவும் ரோட்டைப் பார்க்கவுமாய் இருந்தவன், தாடையை நீவியபடி புன்னகைக்க, 

“த்தான்!” என்றவள் முகம் சிவந்தது அவன் பார்வைக்கு.

தீபக் அழைக்கவும் பக்கத்தில் வந்துவிட்டதாய் சொல்லி வைத்தவன்,

“கேக் கட் பண்ணட்டும்! அப்புறமா கயலம்மாவோட சேர்ந்து சொல்லலாம்!” அர்ஜுன் சொல்ல,

“ஹ்ம்!” என்றாள் விஜயலக்ஷ்மி.

“இப்ப ஓகே தானே டா நீ?” என மனைவியிடம் கேட்கவும் தவறவில்லை.

“எங்க டா போன? வீட்டுக்கு வர வேண்டாமா நீ? யாரோ மாதிரி இவ்வளவு லேட்டா வர்ற?” அனன்யா வாசலிலேயே பிடித்துக் கொண்டாள்.

“க்கா! சொல்றேன் வா! எங்க கயலம்மா? டைம் ஆச்சே! கேக் வந்துடுச்சா?” என கேட்டபடி விஜயலக்ஷ்மி கைகளையும் பிடித்தபடி உள்ளே வர,

“இன்னைக்கும் ஹாஸ்பிடல் போனியா? லீவ் போட சொன்னேன்ல உன்னை?” என விஜயலக்ஷ்மியைப் பிடித்துக் கொண்டாள் அனன்யா.

“மா.. மா!” என அதிகபட்ச உற்சாகத்தோடு அர்ஜுன் கைகளுக்கு விவேக்கிடம் இருந்து கயல்விழி தாவ, “அம்மு!” என வாங்கி கொஞ்சி முத்தமிட்டவன்,

“உனக்கொரு குட் நியூஸ்! கேக் கட் பண்ணலாம் ஃபர்ஸ்ட்!” என அவளுடன் ரகசியம் பேச,

“இதுங்க தொல்லை தாங்கல ப்பா!” என சந்தோசமாய் அலுத்துக் கொண்டாள் அனன்யா.

அழைப்பின் பேரில் அனைவரும் வந்துவிட, குழந்தையை விவேக்கிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அருகில் விஜயலக்ஷ்மியுடன் அர்ஜுன் நிற்க, கூடவே கலையரசி சந்தானமும் இருந்தனர்.

விவேக் அனன்யா குழந்தை கைப்பிடித்து கேக்கை வெட்டி முதலில் அவளுக்கு கொடுத்து பின் அனன்யா விவேக் பாட்டி தாத்தா என கொடுத்து பரிசுகளையும் வாங்கி மக் கொண்டு அடுத்து அர்ஜுனுக்கு கொடுக்க சொல்லி அனன்யா குழந்தையோடு அவனருகில் வர,

“முதல்ல விஜி அத்தைக்கு குடுங்க கயலம்மா! அவங்க தான் உனக்கு ஸ்வீட்டோட ஸர்ப்ரைஸ் அண்ட் குட் நியூஸ்னு நிறைய வச்சிருக்காங்க!” என்று அர்ஜுன் சொல்லவுமே அனன்யாவிற்கு மணியடிக்க, உடன் அர்ஜுன் கைகளில் ஸ்வீட் பாக்ஸ்ஸில் பாதுஷா வேறு அப்போது தான் தெரிந்தது.

“டேய்!” என்ற அனன்யா கண்கள் மின்ன, ஆம் என்பதாய் விஜயலக்ஷ்மி தலையசைக்க,

“மார்னிங் தான் கன்ஃபார்ம் ஆச்சு அனு! ஹாஸ்பிடல்ல செக் பண்ணனும் சொன்னா! அதான் லேட்!” அர்ஜுன் கூறினான்.

“விஜி!” என குழந்தையோடு அவளையும் அனன்யா அணைத்துக் கொள்ள, அனைவரின் வாழ்த்துக்களும் கயல்விழியோடு விஜயலக்ஷ்மிக்கும் குவிந்தது.

“அர்ஜுன்!” என அணைத்துக் கொண்ட தீபக்,

“கங்ரட்ஸ் டா!” என்று சொல்ல, கண் சிமிட்டினான் அவன்.

“விஜி! ரொம்ப சந்தோசம் டா! நல்லாருக்கணும்!” சந்தானம் சொல்லவும் 

“இனி ரொம்ப கவனமா இருக்கனும் விஜி!” என பாடமெடுக்க ஆரம்பித்துவிட்டார் கலையரசி.

விழா முடிந்து அர்ஜுன் விஜயலக்ஷ்மியும் விவேக் வீட்டிற்கு வர, அவர்களோடு அனன்யா, விவேக், கயல்விழி என அனைவரையும் ஒன்றாய் வாசலில் நிற்க வைத்து அனைவருக்குமாய் சுற்றிப் போட்டபின் தான் உள்ளே அழைத்து வந்தார் கலையரசி.

வீட்டிற்குள் வந்ததும் நகைப்பெட்டியை அர்ஜுன் விஜயலக்ஷ்மியுடன் சேர்ந்து திறந்து கயல்விழி முன் நீட்ட, குழந்தையின் அன்னைக்கு கொடுத்தது போலவே குட்டியாய் அழகாய் ஒரு தங்கத் தோடு அதில் ஜோலித்ததைப் பார்த்து சிரித்தது குழந்தை.

“இவன் இதை மட்டும் திருத்திக்க மாட்டான்!” அனன்யா சொல்ல,

“விடு! அவன் விருப்பப்படி இருக்கட்டும்!” என்றுவிட்டான் விவேக்.

கலையரசி சந்தானமும் பார்த்துவிட்டு நன்றாய் இருப்பதாய் கூறிவிட,

“மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு டா! உங்களை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? வார்த்தையால எல்லாம் சொல்ல முடியல!” என்றாள் அனன்யா.

“அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க! அவங்க ஆசிர்வாதம் நமக்கு எப்பவும் இருக்கும்!” என்று அனன்யா கண்கள் கலங்க,

“அனு!” என அர்ஜுன் கண்டிக்க,

“போதும் போதும்! அவங்கவங்க ரூம்ல போய் தூங்குங்க! கயல் பாப்பா! பாட்டி கூட தூங்கலாமா?” என கயல்விழியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றார் கலையரசி.

விஜயலக்ஷ்மி அறைக்குள் நுழைந்தான் அர்ஜுன். அவள் பால் எடுத்து வரவும் அர்ஜுன் பார்த்து பார்த்து ரசித்து சிரிக்க,

“ச்சோ! இந்த லுக்!” என பாலை கீழே வைத்துவிட்டு அவன் கண்களை மூடினாள் கைகளால்.

“ஹே விஜிமா!” என அணைத்துக் கொண்டவன் அணைப்பில் அத்தனை மென்மை.

“இனி பார்த்து பார்த்து ஹாண்ட்ல் பண்ணணுமே!” என்று அவள் முகம் பார்த்து புன்னகைக்க,

“ப்ச்! எல்லாம் உங்களால!” விஜயலக்ஷ்மி ஒரு வேகத்தில் சொல்லிவிட,

“ஆமாமா! என்னால தான்!” என்றவன் கள்ளப்புன்னகையோடு பாவனை புரிந்து,

“அய்யோ நான் அதை சொல்ல த்தான்!” என அவன் நெஞ்சில் சாய்ந்தவளை பாந்தமாய் அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

“எதுவா இருந்தாலும் என்னால தான்! எனக்கு உன்னால தான்! ” என்றவன் சில நிமிடங்கள் அவளோடு அந்த அமைதியில் தன்னை கலந்தவன்,

“அப்பா! நான்!” என்று சொல்லி அந்த உணர்வில் மெய் சிலிர்த்து நிற்க, அது அவளையுமே அடைந்தது.

பேரன்பின் நேசங்கள் எல்லாம் ஓரிடத்தில் முற்றுகையிட்டு இதோ அர்ஜுன் விஜயலக்ஷ்மி இவர்களுக்கு வந்து கை சேர்ந்திருக்க, ஆனந்த கூச்சல்கள் மட்டுமே இனி அவர்களோடு!

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!