Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-11 (1)

11(1)

“சரா, எதுக்குடி என்னோட புத்தகத்தை கிழிச்ச?” சுப்ரியா வேண்டுமென்றே சத்தமிட்டாள்.



Advertisement

புத்தகத்தை நான் கிழிச்சேனா?

“நடிச்சி தொலைடி” சுப்ரியா அவளை பிடித்து இழுக்க, இருவரும் பொத்தென கீழே விழுந்தனர்.

Advertisement

Advertisement

“ஆமாடி, நீ எதுக்குடி என்னோட பர்ஃயூமை எடுத்த? அதான்டி கிழிச்சேன்” இருவரும் கட்டிக் கொண்டு உருள, “மாமா சத்தம் போடுங்க. எங்கள திட்டுங்க” சுப்ரியா சொல்ல, இளந்திரையனுக்கு சட்டென பேச்சே வரவில்லை.

வைஷ்ணவி இளந்திரையனிடம் கண்ணை காட்டி விட்டு இளவேலன் அறைக்கதவை படபடவென தட்டினாள்.

Advertisement

“எதுக்கு இப்படி சண்ட போடுறீங்க? குட்டிம்மா உனக்கு புத்தகம் நான் வாங்கித் தாரேன்” என்று இவர்கள் நடிப்பை பார்த்து தலையில் கை வைத்தான்.

அடிப்பாவிகளா! “நீங்க அக்கா தங்கச்சி இல்லை. நடிகர் திலகத்தை விடவும் மிஞ்சீட்டாங்களே!” மாறன் சிந்தனை சென்றது.

இளவேலன் கதவை திறக்கவும் இளந்திரையன், “சித்தப்பூ பாரு. சின்ன பொருளுக்கெல்லாம் எப்படி சண்டை போடுறாங்கன்னு”.

சுபாமா, சரா..எழுந்திருங்க அவர் சத்தமிட, “என்னோடத அவ எடுத்துட்டா. என்னோடத அவ கிழிச்சிட்டா” இருவரும் நிஜமாகவே அடித்துக் கொண்டனர்.

“என்னலேய் வேடிக்கை பாக்குற தீரா? புள்ளைங்கள பிரிச்சு விடு” என்று அவர் உள்ளே வந்து இருவரையும் விலக்கினார்.

“ஐய்யோ! என்னோட லக்கி பிரேஸ்லேட் உடைஞ்சு போச்சு” சுப்ரியா நிஜமாகவே அழுதாள். இருவரின் தலையும் களைந்து இருந்தது.

அங்கிள், “இவள பாருங்க” சுப்ரியாவின் கொஞ்சல் சத்தம் அழகாக இருக்க, வீல்லென்ற சத்தத்தில் அனைவரும் பதறிப் போயினர்.

தவண்டு வெளியே வந்த நிகிதா தான் இவர்களை பார்த்து பயந்து கத்தி அழுதாள்.

வைஷ்ணவி பாப்பாவை தூக்க, இளவேலனும் இளந்திரையனும் இவர்களை அமர வைத்து பேசினார்கள். சுப்ரியா அவளது பிரேஸ்லெட்டை சரி செய்வதிலே இருந்தாள்.

“உனக்கு புதுசா வாங்கித் தாரேன்ம்மா” இளவேலன் சொல்ல, இது அம்மா எனக்கு வாங்கித் தந்தது அங்கிள் என்று தேம்பி தேம்பி அழுதாள்.

“இவள் நடிக்கிறாளா? அழுகிறாளா?” மாறன் கீழே இறங்கி வந்தான்.

“அங்கிள்..எனக்கு நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம். வாங்கி தந்துட்டு நீங்க விட்டு போயிருவீங்கல்ல அம்மா மாதிரி” அவளை மீறியும் வார்த்தை வந்து விட்டது.

“போகலைடா. ஆனால் இதற்கு மேல் நான் இங்கேயே இருந்தால் அவங்கள பார்க்கணும்மா” சுப்ரியா தலையை தடவினார்.

அங்கிள், உங்களுக்கும் என் மேல பாசமேயில்லை அக்சரா அவரருகே வந்து அமர்ந்தாள்.

யாரு சொன்னா? பாசம் இல்லாமல் இருக்குமாம்மா?

அங்கிள், “நீங்க போக வேண்டாம்” அக்சரா கூற, “இல்லம்மா” அவர் மறுக்க மாறன் முகம் மாறியது.

“உங்களுக்கு அவங்க தான சித்தப்பூ முக்கியம்?” மாறன் பட்டென கேட்டான்.

அவரும் “ஆமா” என்று விட்டார்.

தீரா,..

அவர் வாயை கையால் அடைத்து ஒரே ஒரு வாரம் மட்டும் எங்களோட இருந்துட்டு மேம் வீட்டுக்கு போங்க.

உனக்கு அவள் பாடம் எடுக்கிறாளா?

ஆமா, எங்களுக்கு..

ஓ! மாறனை பார்த்தார்.

அவளும், சத்யாவும் என்னை ஏத்துக்க மாட்டாங்கடா.. எனக்கான தண்டனையை நானே கொடுத்துக்கணும்..

வைஷ்ணவி பாப்பாவை அவர் மடியில் வைத்து விட்டு, “உங்க மேல தப்பில்லை அங்கிள்” என்றாள்.

“என்ன இருந்தாலும் அவங்கள தனியா விட்டது தவறு தானம்மா? அவங்க நான் இல்லாமல் இந்த உலகில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க?” கண்ணீருடன் பேசினார்.

அங்கிள், “நீங்க போங்க. ஆனால் ஒரே ஒரு வாரம் இருந்துட்டு போங்க. உங்க பசங்க சின்ன வயசுல இருந்தே உங்களுடன் தான இருக்காங்க. அவங்கள இப்படி தனியா விட்டு போயிட்டா கஷ்டப்படுவாங்கல்ல” வைஷ்ணவி இளந்திரையனை பார்த்தாள்.

“சரிம்மா, ஒரு வாரத்தின் பின் சென்று விடுவேன்” அவர் சொல்லி விட்டு, குழந்தையை பார்த்தார்.

தீரா, அவங்களும் என்னோட குடும்பம் தான். அவங்களையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. யாருக்கு இதில் விருப்பமில்லையோ? அவங்க குடும்பம் போல நானும் செத்துட்டேன்னு நினைச்சுக்கட்டும்..

“சித்தப்பூ” மாறன் சத்தமிட்டான்.

அவனை பார்த்த அவர், நான் உன்னோட சித்தப்பா இல்லைன்னு உன்னோட பள்ளியில் சொல்லி உன்னோட மானத்தை காப்பாத்திக்கோ..

சித்தப்பூ…

தீரா, “நான் அறைக்கு போகிறேன்” என்று எழுந்தார்.

பின் சுப்ரியாவிடம் வந்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு, “உன்னோட அம்மா கொடுத்த பிரேஸ்லெட் உடையலாம். ஆனால் அவங்க இருந்தாலும் இறந்தாலும் பாசம் மாறாதும்மா” அவர் சென்று விட்டார்.

சுப்ரியா பிரேஸ்லெட்டை கையில் வைத்தவாறு இருக்க, அதை வாங்கிய அக்சரா, சாரி சுபா. நான் கொஞ்சம் அதிகமா சண்டை போட்டுட்டேன்னு நினைக்கிறேன் சாரி..

“இந்த உலகில் நமக்கென எதுவும் நிரந்தரமில்லை. சிலது தேடி வரும். சிலது நம்மை விட்டு மொத்தமாக சென்று விடும்” இளந்திரையன் தோளில் சாய்ந்து அழுதாள் சுப்ரியா.

“குட்டிம்மா..அழாத..நான் இருக்கேன்ல்ல” இளந்திரையன் சொல்ல, மாமா..சீக்கிரம் அவங்கள இங்க அழைச்சிட்டு வந்துருங்க..

கிடைத்தவர்களை இழக்க ரொம்ப பயமா இருக்கு அழுதாள். வைஷ்ணவியும் அக்சராவும் கண்ணீருடன் அவளை பார்த்தனர். மாறன் சிந்தனையுடன் அவனறைக்கு சென்றான். தீரனுக்கு மாறன் மீது கடுஞ்சினம் ஏற்பட்டு விட்டது. அதை காட்ட முடியாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான்.

அம்மா, “தீரன் அண்ணா வந்துருக்காங்க” சத்யா வெளியே கண்ணை காட்டினான். தீரன் உள்ளே வர தயங்கி நின்று கொண்டிருந்தான்.

“தீரா வா” ராதிகா அழைத்தார்.

“நான் உங்களை சித்தின்னு அழைக்கலாமா?”

ம்ம்..அதான முறை.

“எப்ப வீட்டுக்கு வர்றீங்க சித்தி?”

உங்க வீடுக்கு வரும் அளவிற்கு நாங்க வசதியானவங்க இல்லை.

சித்தி, “தாத்தா செய்ததற்கு நீங்க எங்களை பழி வாங்குறீங்க?”

“பழி வாங்குறோமா அண்ணா? அவரை விடுங்க. உங்க சித்தப்பா என் அம்மாவை ஒரு முறை கூட தேடி மதுரையை தாண்டியதில்லை. ஏன் செத்துட்டாங்கன்னு நினைச்சுட்டாரா?” சீற்றமுடன் வார்த்தைகள் வந்து விழுந்தது.

“என்னோட ராது எங்கிருந்தாலும் நலமாக இருக்கணும்ன்னு தான் இப்பொழுது வரை வேண்டிக் கொண்டிருக்கிறேன்” இளவேலன் வீட்டிற்குள் வந்தார்.

“வெளிய போங்க” சத்யா பல்லை கடித்தான்.

போக முடியாதுய்யா. உன்னோட கோபம் எனக்கு புரியுது. என்னோட ராது என்னை போல இல்லை. எனக்கு எதிர்ப்பதம். யாரையும் அதிர்ந்து கூட ஒரு பேச்சு பேச மாட்டா. அதனால தான் அவ மதுரையை விட்டு போயிருக்க மாட்டான்னு நம்பி இங்கேயே தேடிட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில் என்னோட அண்ணன் பசங்களின் நிலை என் கண்ணுக்கு முன் வந்தது. தீரா தான் அவன் தம்பிகளை சமாளித்து வந்தான். அவனும் பத்து வயது சிறுவன். சொத்து இருக்கு. இதை வைத்து யாராவது அவங்களையும் கொன்றுவாங்களோன்னு பயம்.

அவங்களுக்காக உழைக்க ஆரம்பித்தேன். இன்று வரை உழைத்து சொத்து நிறைய சேர்த்து வச்சிருக்கேன். ஆனால் ஒரு நாள் கூட நிம்மதியான உறக்கம் இல்லை. மாலையிலிருந்து இரவு முழுவதும் என்னோட ராது நினைவுகள் தான்.

காதலுக்கு உடனிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய நினைவுகள் போதுமே! இளவேலன் சொல்லவும், சத்யா ராதிகாவை பார்த்தான்.

“ஏதாவது சொல்லி அழைச்சிட்டு போக நான் சிறுவன் இல்லை” சத்யா சினமுடன் பேசினான்.

ராது, நான் உன்னை ஏமாற்றவில்லை. அதை நீ நம்புற தான?

ம்ம்..

வா ராது. நம்ம வீட்டுக்கு போகலாம்.

அழைக்கும் நேரத்தை பாரு. யாருமில்லா நேரத்தில் வந்து அழைக்கிறீங்க? இதே போல தான யாருமில்லா…என்று சத்யா பேசும் முன், “இளா” சத்தமிட்டார் ராதிகா.

பரவாயில்லை ராது. பேசட்டும். என்ன சொன்னாலும் உங்களது காயத்திற்கு மருந்திட என்னால முடியாது. ஆனால் இனி காயமாகாமல் நான் பார்த்துப்பேன்.

“நீங்க எதையும் பார்க்க வேண்டாம்” சத்யா சினமுடன் கூறினான்.

இளவேலன் ஏதும் சொல்லாமல், “இதுவரை உன்னை எண்ணியே வாழ்ந்து கொண்டிருந்தேன். இனி உனக்காகவும் என் மகனுக்காகவும் என் இறுதி மூச்சிருக்கும் வரை காத்திருப்பேன்” என்று ராதிகாவின் முன் ஒரு கவரை வைத்தார்.

பணம் கொடுத்து சரி செய்ய பாக்குறீங்களா? சத்யா சீறினான்.

இளவேலன் தன் மகனின் கடுமையான பேச்சை தாங்க முடியாமல் கண்ணீருடன் வெளியேறினார்.

சித்தி..கொஞ்சம் யோசித்து பாருங்க.

ம்ம்ம்ம்….

சத்யா உனக்காக நாங்க எல்லாரும் காத்திருக்கோம். சராவும் உன்னை பார்க்க வரணும்ன்னு சொன்னா. ஆனால் இந்த நேரத்துல வேண்டாம்ன்னு தான் அவளை விட்டு வந்துட்டோம்.

அவர் தப்பு செய்யல சத்யா. தவறு செய்துட்டார். அறியாமல் நடந்த விசயம். அதுக்காக தான் இத்தனை வருடம் உன் அம்மாவையும், உன்னையும் பிரிந்து வாழ்ந்துட்டார். அவர் சந்தோசமா இருந்ததில்லை. எப்போதும் உன் அம்மா நினைவுடன் தான் இருந்தார்.

ஒரு முறை அவர் அறைக்கு வந்து பார்த்து விட்டு எதையும் பேசு. வாயிருக்குன்னு கண்டபடி பேசாத. அவர் உன் அம்மாவுக்கு உண்மையாக இருந்ததால் தான் இங்க வந்து நிக்கிறார் இல்லைன்னா அவருக்குன்னு குடும்பம் ஏற்படுத்தி இருந்திருப்பார். அவர் பணத்துக்கு வராத பொண்ணுங்களே இல்லை.

ராதிகா கண்ணீருடன் கண்ணை மூடி கையிலிருந்த கவரை அழுத்தினார்.

கண்ணை திறந்தார். தீரன் அங்கு இல்லை. வெளியே பக்கத்து வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

ராதிகா அதை பிரித்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.

கவரில் தாலிச்செயின் இருந்தது. திருமாங்கல்யத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருந்தனர். செயினின் ஊடே இருந்த இதய வடிவிலான தங்கத்தில் காய்ந்த சறுகு ஒன்று தெரிந்தது.

அதை மென்மையாக தடவியவருக்கு அழுகை கரை புரண்ட வெள்ளம் போல வரத் தொடங்கியது. அழுதார். வெளியே இருந்த இருவருக்கும் கேட்டது..

“தீரா வா போகலாம்” இளவேலன் இளந்திரையனை அழைத்தார்.

சித்தப்பூ..சித்தி அழுறாங்க..

ம்ம்..அவ இன்னும் என்னோட ராது தான். வருவா தீரா. எனக்கு நம்பிக்கை இருக்கு என்று அவர் நகர, அவர் அருகே பைக்கை நிறுத்தினான். இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

“அம்மா, அழுகையை நிறுத்துறீங்களா? நம்மை கஷ்டப்படுத்திய அவருக்காக அழுறீங்க? என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியலை”.

ஆமாடா, அவர் நம்மை கஷ்டப்படுத்தினார்டா. ஆனால் அவர் இன்னும் அதே இளா தான். என்னோட இளா தான் அதனை கட்டிக் கொண்டு அழுதார்.

அம்மா, “போகணும்ன்னா போங்க” சத்யா சொல்ல, அவனை வெறித்து பார்த்தார்.

இது உன்னோட அப்பாவிடம் நான் என் காதலை கூறிய போது கொடுத்த மலர். இத்தனை வருடமா இதை பாதுகாத்து வைத்திருக்கார். அதுவும் நான் விளையாட்டாக கூறியதை அப்படியே செய்திருக்கார்.

நாங்க அந்த சொக்கர் மீனாட்சியாக வாழணும்ன்னு அவரிடம் தாலி டிசைன் இப்படி இருந்தால் தான் கட்டிப்பேன்னு விளையாட்டாக சொன்னேன். அவர் அவங்க குலப்படி செய்யாமல் நான் கேட்டது போல செய்து அதில் அவர் காதலையும் செதுக்கி வச்சிருக்கார்டா. இதை பாரு. இதுல பில் இருக்கு என்று அந்த கவரை நீட்டினார் ராதிகா.

“கலவரம் நடப்பதற்கு முன்னே இதனை செய்து வாங்கி இருக்கார். என்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்திருக்கார். நான் தான் அவரிடம் சொல்லாமல் அவர் அப்பா பேச்சை கேட்டு அவரை தனியே தவிக்க விட்டு சென்றிருக்கேன்” சொல்லிக் கொண்டே வெளியே சென்று பார்த்தார். அவர்கள் இல்லை என்றதும் ராதிகாவிற்கு அழுகை கூடியது.

“அம்மா” சத்யா அவரை அணைக்க, “அவனை தள்ளி விட்டு அவரை என்ன பேச்சு பேசிட்ட?” என்று அழுது கொண்டே மீண்டும் உள்ளே சென்று அவரறைக் கதவை பூட்டிக் கொண்டார்.

“அம்மா” சத்யா அழைத்தான்.

ராதிகாவிடம் பதிலில்லை. தலையில் கை வைத்து அமர்ந்தான் சத்யா.

அவன் ராதிகா கதவை திறக்க காத்திருந்தான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த ராதிகா, படுத்துக்கோ என்று ஏதும் நடவாதது போல சத்யாவிடம் சொல்லி தண்ணீரை எடுத்துக் கொண்டு அவரறைக்கு சென்றார்.

சத்யாவிற்கு இளவேலன், தீரன், ராதிகா பேசியது ஓடிக் கொண்டே இருந்தது. நிம்மதியற்று விடைகாண முடியாமல் உறங்காமல் இருந்தான்.

காலை பொழுது புலர்ந்து மங்கலகரமாக விடியலாக ஜொலித்தது. பளிச்சென சூரிய கதிர்கள் மாறன் முகத்தை தாக்க விழித்து அமர்ந்தான். அருகே காஃபி தயாராக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை.

பெட் காஃபியை அருந்தி விட்டு குளியலறை சென்று தன் வேலைகளை முடித்து தயாராகி வந்தான்.

அவனது படுக்கையில் புத்தகம் ஒன்று இருந்தது. அப்போதும் யாருமில்லை… புத்தகத்தை விரித்து பார்த்தான். அதில் கேள்விக்கான விடைகள் குறித்து இருந்தது.

“ம்ம்! நான் என்று இப்படி குறித்து வைத்திருக்கேன்?” சிந்தனையுடன் பார்த்தான். அவனது மேசையில் “குறித்ததை படிக்கவும்” காகிதத்தில் எழுதி இருந்தது.

சுப்ரியா, “இது உன்னோட வேலையா? எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட அறைக்கே வருவ?” சினமுடன் அவளறைக்கு சென்றான். அவள் குளித்து ஈரத்தலையில் துவாலையை கட்டிக் கொண்டு கண்ணாடி முன் அமர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

வேகமாக கதவை திறந்து மாறன் உள்ளே வந்தான். சுப்ரியா எழுந்தாள். முட்டி வரையிலான பள்ளிச்சீருடை டாப்பை மட்டும் அணிந்திருந்தாள்.

கோர்ட் பேண்ட்டு எதுவும் போடாமல் அவள் நிற்பதை பார்த்து மாறன் திரும்பிக் கொண்டான். அவளுக்கு இது சாதாரணம் தான?

மாறா, “எதுக்கு வந்த?” துவாலையை தலையிலிருந்து எடுத்தாள். ஷாம்புவின் நறுமணம் குப்பென்று வீசியது..

நான்..தடுமாறினான் மாறன்.

முதல்ல ஆடையை போடு..

ஆடையா? ஹேய்..போட்டு தான இருக்கேன்?

ஐய்யோ..பேண்ட்டு கோர்ட்டு இல்லாமல் இருக்க? பல்லை கடித்தான்.

ஆமா, இது என்னோட வீடில்லைல்ல. மறந்துட்டேன்..இழுத்தவாறு பேண்ட்டை போட்டாள்.

திரும்பு…ரொம்ப தான்..

ஏய், எதுக்கு…என்றவன் நிறுத்தி அவளை பார்த்தான்.

இங்க பாரு நான் கிளம்பும் போது கோர்ட்டு போட்டுக்கிறேன். நீ நெக்ஸ்ட் வைசுவா இருப்ப போல?

மாறன் முறைப்புடன், “எனக்கு நீ எதுக்கு காஃபி எடுத்துட்டு வந்த? என்னோட புத்தகத்தில் கேள்விக்கான பதிலை குறிச்சு வைச்சிருக்க? என்னோட அறைக்கே வந்திருக்க?”

என்னது நானா? முகத்தை அஷ்டக் கோணலாக்கினாள் சுப்ரியா.

நீயில்லாமல் யாராக இருக்க போகுது?

மாறா, “நான் தான்” வைஷ்ணவி உள்ளே வந்தாள்.

நீங்களா? அவன் இருவரையும் பார்த்தான். சுப்ரியா கையை கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள்.

நேற்றிரவு உன் புத்தகத்தை நான் தான் எடுத்தேன். சுபாவுடையதை எப்போதும் சரி பார்ப்பேன். உனக்கும் பார்த்தேன். குறிக்காமல் இருந்தது. அதான் குறித்து வைத்தேன். காலை வேலையாக இருந்ததால் காஃபியை வைத்து விட்டு சென்றேன்.

உன்னிடம் புத்தகத்தை கொடுக்க தான் உன்னறைக்கு வந்தேன். ஆனால் நீ குளியலறையில் இருந்த?

ஓ! சுப்ரியாவை பார்த்தான்.

நீ செய்ததற்கு என்னை திட்டுறான்க்கா?

தெரியாததால் தான திட்டினான்? மாறா படிச்சியா?

“இல்லை” அவன் தலையசைத்தான்.

வைஷ்ணவி உள்ளே சென்று கொண்டே படிக்க விருப்பம் தானாக வராது மாறா. நாம தான் இந்த உலகத்தை பற்றி தெரிஞ்சுக்கணும்? நமக்கு முன் வாழ்ந்தவர்…. தற்பொழுது நடக்கும் விசயம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும்..

சுபா..தயாரா?

ஆல்ரெட் ரெடி சிட்டு….சுப்ரியா தன் அக்காவை கொஞ்சினாள்.

நீயுமா? என்று சிரித்த வைஷ்ணவி, துவாலையை அவளிடமிருந்து வாங்கி கண்ணாடி முன் அவளை அமர வைத்து தலையை துவட்டினாள்.

“லெட்ஸ் கோ” சுப்ரியா கையை விரித்தாள்.

மாறன் புரியாமல் இருவரையும் பார்த்தான்.

பாரிஸ் வார் எக்ஸ்பிளைன்? வைஷ்ணவி வினாவை எழுப்பி தலையை துவட்டிக் கொண்டிருந்தாள். கண்ணாடியை பார்த்தவாறு சுப்ரியா விடையை தெரிவிக்க, அவள் தவறு செய்வதை வைசு திருத்தினாள்.

ஆங்கில இலக்கணத்தை கேட்டாள் வைஷ்ணவி. பட்டு பட்டென பதிலை தெறிக்க விட்டாள் சுப்ரியா. மாறன் இருவரையும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

இடையே பாப்பா அழும் சத்தம் கேட்டு வைஷ்ணவி வெளியே ஓடி வந்தாள்.

வைஷ்ணவிக்கு முன் செழியன் நிகிதாவை தூக்கினான். பாப்பா எல்லார் முகம் பார்த்த பின் எல்லாரிடமும் சென்றாள்.

மாறா, நீயும் சுபாவுடன் படிக்கலாம்ல்ல? வைஷ்ணவி கேட்டாள்.

நானா? இவளுடனா?

அக்கா, வேண்டமே வேண்டாம். என்னை விட்ரு. இவன் முறைத்தே என்னை சாவடிச்சிருவான். தேவையா எனக்கு? நான் படிச்சுப்பேன்.

மாறன் அவனறைக்கு சென்று தயாராகி வந்தான்.

கீழே இளவேலன் டைனிங் டேபிளுக்கு வந்தார். அமைதியாக இருந்த சுப்ரியா வேண்டுமென்றே துள்ளி குதித்துக் கொண்டு அவரிடம் ஓடினாள்.

“அங்கிள்” சுப்ரியா அவரருகே உணவுண்ண அமர்ந்தாள்.

என்னம்மா? பள்ளிக்கு கிளம்பியாச்சா?

எஸ் அங்கிள்…

நேற்று என்ன செம்ம சைட்டா அங்கிள்? ஆன்ட்டி சூப்பர் தான். ஆனால் என்ன கொஞ்சம் ஸ்ட்ரிட்டோ?

இல்லையே! அவ சின்ன பசங்களிடம் அப்படி நடந்துக்க மாட்டாளே! பொறுமையா தான இருப்பா..

ஆமா..மறந்துட்டேன் அங்கிள்..கேலியுடன் நகைத்தாள்.

சரி..உங்க ஆளுக்கு சாப்பிட என்ன பிடிக்கும்?

நீ எதுக்கு கேக்குறம்மா?

உங்கள் சார்பா நான் வாங்கித் தாரேன். இப்ப எல்லாம் பொண்ணுங்க சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலே போதும் கரெக்ட் ஆகிடுவாங்க..

இல்லம்மா, அவ அப்படியெல்லாம் இல்லை. மென்மையான மனம் இருந்தால் போதும்..

இளந்திரையன் இருவரின் உரையாடலை கேட்டவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து நின்றான்.

திடீரென திரும்பி அவனை பார்த்த சுப்ரியா, வைஷ்ணவி அலைபேசியை எடுத்து “மாமா..ஸ்மைல்” என்றாள். அவனும் அழகாகவும் கம்பீரமாகவும் நின்றான். அதனை கிளிக் செய்து “கிளிக் கிளிக்” புன்னகைத்தாள்.

அங்கிள், உங்க ஆளு மென்மையான குணம் தான். நம்ம ஊரு பசங்க தான் மோசம் இளவேலன் அருகே அமர்ந்த மாறனை பார்த்தாள்.

ஏன் குட்டிம்மா? எவனும் எதுவும் சேட்டை பண்றானா? மாறனை இளந்திரையனும் பார்த்துக் கொண்டே, சேட்ட பண்ணா பேசாதம்மா .கையால அவனுக்கு உன் கோபத்தை காட்டிரு. எவனாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.

மாறன் முகம் மாறியது.

மாமா, என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது. ஒட்ட நறுக்கிடுவேன்..

வைஷ்ணவி அவர்களுக்கு உணவை தட்டில் எடுத்து வைத்து இளந்திரையனை பார்த்தான்.

“ஊகூம்.. சாப்பிட மாட்டேன்” தலையசைத்து, “குட்டிம்மாவை நீ அழைச்சிட்டு போகப் போறீயா இல்லை வேற ஆளை ஏற்பாடு செய்யணுமா?” இளந்திரையன் பட்டும் படாமலும் தன் தமையனை பார்த்தான்.

நானே அழைச்சிட்டு போறேன் அண்ணா..

பத்திரம். குட்டிம்மா உன் பொறுப்பு. மறந்துறாத..

குட்டிம்மா, “நாம இரவு சந்திக்கலாம்” என்று வைஷ்ணவியை பார்த்து இளந்திரையன் தலையசைக்க, அவள் விழித்து பார்த்தாள்.

அவன் புன்னகையுடன் செழியா, “சீக்கிரம் வா..மீட்டிங் இருக்கு. குரு ஏற்பாட்டை முடிக்கும் முன் வந்திரு” சொல்லி சென்றான் இளந்திரையன்.

“இதோ வந்துடுறேன் அண்ணா” சத்தம் கொடுக்க, பாப்பா அவன் கையை இழுத்து அவன் விரலை வாயில் வைத்தது.

அவன் பாப்பாவை கொஞ்ச, அக்சரா நிகிதாவை வாங்கி “நீங்க சாப்பிட்டு கிளம்புங்க மாமா” மடியில் போட்டாள்.

வாயில் எச்சில் ஊற்ற..ஊஊஊஊஊஊ…மழலை சத்தம் ஒலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!