Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 23 2

மனம் மீண்டும் மீண்டும் நடந்த நிகிழ்வுகளை நினைத்து பார்த்து கவலை கொண்டது. மீண்டு வர முயற்சித்தான். முடிவு என்னவோ ஜீரோ தான்.

ஆனாலும் கமலியை விட்டுகொடுக்க முடியாமல், ஒரு முடிவுடன் கமலிக்கு போன் செய்ய, அது நாட் ரீச்சபிளில் இருந்தது. “ப்ச் இவ போன் தான் தொலைஞ்சிடுச்சே” என போனாலேயே லேசாய் தலையில் தட்டி கொண்டு, கர்ணாவிற்கு அழைத்து, கமலியிடம் கொடுக்கும்படி சொன்னான். அவனும் கொடுத்திட, இவன் பேச துவங்கும் முன் “சொல்லுங்க” என்றாள் கமலி விட்டேற்றியாய்.

“என்ன இன்னும் கோவமா இருக்கியா.. நியாயத்துக்கு நான் தான்டி கோப படனும், உன்னை சமாதானபடுத்தலாமேன்னு கால் பண்ணா, அதென்ன ரோட்டில் போற வரவண்ட பேசுற மாதிரி பேசுறது.. நான் உனக்கு புருஷன் நியாபகம் இருக்கா இல்லையா?”

“ப்ச்..” சலித்து கொண்டவள் “எதுக்கு போன் பண்ணீங்க.. சொல்றீங்களா இல்லை வைக்கவா?” என்றாள் இன்னும் கடுப்பாய்.



Advertisement

“ஹா.. உன்னை சமாதான படுத்துறதுக்கு  எங்கெயாவது சன்யாசியா போயிடலாம்” இவன் அதை விட அதிகமாய் கடுப்படிக்க

“இப்போ மட்டும் அப்படியே மன்மதனா வாழ்றதா நினைப்போ?” போனிலேயே இவனுக்கு ஓங்கி ஒரு குட்டு வைக்க,

கிரி உனக்கு ஆகனும்டா..! இவகிட்ட இனி பேசுவ…? என மனம் அலறியது. முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன், “ப்ரியா.. எதுவும் வேலை இருக்கா..?” என நேரடியாய் கேட்டான்

Advertisement

“ப்ரி.. தான்.. ஏன்” கல்லை தின்றது போல் பேசினாள் கமலி.

Advertisement

பல்லை கடித்தவன் “அப்போ கிளம்பி இருக்கியா.. வந்து கூப்பிட்டுக்கிறேன்” என

“எங்கே!” என முகம் சுருக்கியவள் “நான் தான் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்ல”

“ஓ.. வீட்டுக்கு வந்தா பாய்ஞ்சிடுவேன்னு பயமா..” என கேட்டு “வீட்டுக்கு இல்லை.. வேற ஒரு இடத்துக்கு போகனும்” என சொல்லிய பின்பும் இவள் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்திட “கமலி.. வர்றியா இல்லையா பதிலை சொல்லு” என பொறுமை இழந்தான்.

Advertisement

“எங்கன்னு நீங்க முதலில் சொல்லுங்க” விடாது பேசினாள் இவளும்.

“அப்போ, எங்கேன்னு சொல்லாமல் வரமாட்ட” என கேட்டவன் “புருஷன் மேல நல்ல நம்பிக்கை.. இன்னும் வரலைல்ல.. என் மேல நம்பிக்கை” என அழுந்த ஒரு கொட்டு வைக்க, இவளோ வாயை இறுக மூடி நின்றிருந்தாள்.

பின் அவனே “ராமும், நானும் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். சித்தப்பா அதுக்காக இடமெல்லாம் பார்த்து கன்ஸ்ரக்‌ஷன் ஒர்க்லாம் முடிஞ்சது. அதை பார்க்க தான் உன்னை கூப்பிடுறேன்” என்றான் கிரி.

“ஓ.. எப்போ போட்ட பிளான் இது” அவளின் உள்குத்து தெரியாத அவனும்

“மூனு நாழு மாசத்துக்கு முன்னாடி, ஐடியாவை சொன்னேன், ராமும், சித்தப்பாவும் உடனே ஓகே சொல்லிட்டாங்க, அதுக்கான வேலையையும் அப்போவே ஆரம்பிச்சுட்டாங்க கமலி. முக்கால் வாசி வேலை முடிச்சாச்சு, இனி ஸ்டாக் இறக்கிட்டா கடையை ஓபன் பண்ணிட வேண்டியது தான், நல்லா நாள் கூட பார்த்தாச்சு கமலி..” என அவள் மீதான கோபத்தை பின் தள்ளி இவனது திட்டங்களை, ஆசையாசையாய்  பேசிக்கொண்டே செல்ல

“இதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க.?” என கமலி கேட்ட கேள்வியில், அப்படியே நிறுத்திவிட்டான் தன் பேச்சை.

“நல்ல நாள் வரை பார்த்தாச்சு, இன்னும் என்ன? ஏன் கடையை திறந்து வைக்க ஆளில்லையா? அதையும் உங்க சித்தப்பாவை வச்சே ஓப்பன் பண்ணிடுங்களேன்” என்றாள் காட்டமாக

காதிலிருந்த போனை எடுத்து அதை பார்த்து ‘கிரி உனக்கு இந்த ஜென்மத்தில் சந்தோஷம்னு ஒன்னு கிடையாவே கிடையாது.. நினைத்துவிட்டு, மீண்டும் போனை காதிற்கு கொடுத்து “நீ சொன்னாலும் சொல்லைன்னாலும் கடையை திறந்து வைக்க போறது சித்தப்பா தான். நீ இப்போ கடைக்கு வர்றியா? வரலையா? அதை சொல்லு முதலில்” என்றான் அவளை விட காட்டமாய்.

“ஊருக்கு வரதையும் சொல்லல, பிஸ்னஸ்லயே இறங்கிட்டீங்க.. அதையும் சொல்லல? அப்போ எதை தான் என்கிட்ட சொல்வீங்க! அந்தளவுக்கா வேண்டாதவளா போயிட்டேன்” இவள் கேட்ட வார்த்தைகளில்

“கமலி உன்னை சர்பிரைஸ் பண்றதுக்காக தான் சொல்லாமல் விட்டேன். இப்போ கூட நான் உன்னை அழைச்சிட்டு போய் நேரிலேயே காட்டலாம்னு தான் நினைச்சிருந்தேன். நீ்தான்.. எங்கே? எங்கே? னு கேட்டு… ப்ச்” என அழுத்தமாய் பிடறியை கோதிக்கொள்ள

“நீங்க போயிட்டு வாங்க கிரி.. நான் வரலை” என்றுவிட

“கமலி.. நம்ப கடைடி அது” என இவன் அடிக்குரலில் உறும

“வான்னா வரனும், போன்னா போகனுமா..? என்னால் முடியாது.. நான் வரலை”  கிரியின் பதிலை எதிர்பாராது இவள்பேசிவிட, போனை கட் செய்துவிட்டு தூக்கி எறியாத குறையாய் போட்டவன், தலையை சுவற்றில் சாய்த்து அமர்ந்துவிட்டான்.

அந்நேரம் பால் பாக்கெட்டுடன் உள்ளே வந்தார் வசந்தா. “என்னடா இவ்ளோ நேரம் தூங்கிட்ட, உடம்பு கிடம்பு முடியலையா?” நெருங்கி வந்து இவன் கன்னம், கழுத்தை தொட்டு பார்க்க, லேசாக சூடாக இருந்தது இவன் தேகம்.

“லேசா சுட்ற மாதிரி இருக்குடா.. ஊரில் இருந்து வரும் போதே காச்சலோட வந்துட்டியா?” வாய் வளர்த்த வசந்தாவை இவன் வேண்டுமட்டும் முறைத்து வைக்க “சரிடா முறைக்காத.. நிஜமாவே சுடுது.. வர்றியா, ஹாஸ்பிடல் எதாவது போயிட்டு வருவோம்” என வசந்தா அழைக்க

“அதெல்லாம் வேண்டாம்மா.. கனச்சூடா இருக்கும், சரியா போகும்” என்றுவிட்டு “குழந்தைங்கள காணோம், ராஜியும் இல்ல எங்க?” என கேட்க

“செந்தில் வர சொன்னானு, புள்ளைகளோட போயிருக்கா..  வந்திடுவாடா” என வழக்கமாய் நடப்பதை இவர் சொல்ல

“செந்தில் கூட சண்டை போட்டு தானே இங்க இருக்கா..? நீ சாதாரணமா சொல்றதை பார்த்தா அப்படி தெரியலை?” என கேட்டு வைத்தான் கிரி.

“அதெல்லாம், இரண்டு பேரும் ராசியாகி ரொம்ப நாள் ஆச்சு கிரி” என்றவர், வழக்கமான அவர்களது சந்திப்பையும், செந்தில் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதையும் கூறிவிட, நிதானமாய் கேட்டுக்கொண்டான் கிரி.

பின் “சூப்பர் மார்க்கெட் போடலாம்னு இருக்கோம்மா.. நானும் ராமும். கட்டிட வேலையெல்லாம் முடிஞ்சது. வர்றியா பார்த்துட்டு வரலாம்” என கேட்டான் தாயின் முகம் பார்த்து.

வசந்தாவிற்கோ என்ன சொல்கிறான் இவன்? என்பது போல பார்த்து வைக்க, சூப்பர்மார்க்கெட் ஆரம்பிக்க போவதை, அது இருக்கும் இடத்தை, துவங்கபடும் நாளையும் மேலோட்டமாய் கிரி் கூற, சந்திரமுகியாய் மாற துவங்கினார் வசந்தா.

எதிர்பார்த்தேன் என்பது போல் பார்த்து “என்னம்மா கடையை பார்க்க வர்றியா வரலையா?” இவன் அழுத்தமாய் கேட்டான்.

இதுவரை அந்த கடை ராமிற்காக என நினைத்திருந்த வசந்தாவிற்கு, இது பேரதிர்ச்சியாய் இருந்தது.

“அப்போ அந்த கடை உன் பேர்லையும் இருக்கா” என வினவ

“ம் நானும் ராமும் சரி சமமான பார்ட்னர்ஸ் மா. இரண்டு பேரோட பேரிலையும் ரெஜிஸ்டர் பண்ணிட்டார் சித்தப்பா” என்றான் உறுதியாய்.

“எனக்கு நம்பிக்கை இல்லைடா.. அவ்வளவு பெரிய கடையை கட்டி மகனும்,  கல்லாப்பெட்டியை இந்த மோகனும் எடுத்துகிட்டு, உன்னை கடைக்கு எடுபுடி வேலை பார்க்க விட போறானுக பாரு” வன்மத்தை வசந்தா முழுதாய் கெட்ட

“ம்.. அப்போ உன் மருமகனை கல்லா பெட்டியில் உக்கார வச்சிடட்டுமா” என எகத்தாளமாய் கேட்டான் கிரி.

ஆங்காரமாய் மாறிப்போனார் வசந்தா “நீ பேசுவடா.. இப்போ தெரியாது.. அவனுக குணமெல்லாம். அப்பனும் மகனும் உன்னை, உன் ரத்தத்தை அட்டை பூச்சி மாதிரி உறிஞ்சிடுவானுங்க!” என நிறுத்தி “இவனுகளை நம்பி கடைக்கு எவ்ளோடா பங்கு கொடுத்த? சரிசமம்னு சொல்ற! கால் கோடி கொடுத்திருப்பியா!” என கேள்வி கேட்டு கொண்டே சென்றார் வசந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!