“என்னடா நீ நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயும் இப்படி பேசிட்டு இருக்க” எல்லோரின் மனசாட்சியையும் பிரதிபலித்தார் மீனாட்சி.
கிரியும் ,மீனாட்சியும் ஏதோ சொல்ல வருவதற்குள்,
“அத்தை நீங்க எதுவும் பேசவேணாம்.. எனக்காக அத்த” என மீனாட்சியிடம் வேண்டுகோள் வைத்த மல்லிகா, கிரியிடம் திரும்பி “இதுக்கு மேல பிரச்சனை வேணாம், தம்பி. நீங்க கிளம்புங்க” என மல்லி கூறியதில் “நீங்களும் என்னை புரிந்து கொள்ளவில்லையே” என கிரியின் முகமே மாறிப்போனது.
அது போதாது என “கமலி, போய் காரில் ஏறு.. நம்ப வீட்டுக்கு போகலாம்” எப்போதும் பேசாத செல்வம் இன்று மகளுக்காக பேசிட, கமலி தன்னாலேயே கிரியை தான் பார்த்தாள்.
Advertisement
நிலைமை கை மீறி போவதை உணர்ந்த கிரி “மாமா, அவளை பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. பிரச்சனையை நான் பார்த்துகிறேன், என்கிட்ட விட்டுடுங்க. அம்மாகிட்ட பேசி நான் சரி பண்றேன்” என்றிட
மல்லிகாவோ “நீங்க பாரின் கிளம்பி போனதில் இருந்து, இது நாள் வரை, கமலி எங்க இருக்கா? எப்படி இருக்கா?னு அவளை பத்தி எதுவுமே பேசினதில்லை உங்கம்மா.
உங்களோட அவளை சேர்த்து வைக்கனும், ஒன்னா வாழ வைக்கனும்னுன்ற எண்ணமும் அவங்களுக்கு இல்லை, உங்கக்காவும் சரி உங்கம்மாவும் சரி ‘கமலியை நல்ல நாள் பாத்து எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிறோம், அனுப்பி வைங்கனு’ இப்போ வரை எதுவுமே சொல்ல மாட்றாங்க.
Advertisement
என் பொண்ணை இத்தனை தூரம் பாரமா பார்க்குறவங்க வீட்டுக்கு நாங்க எப்படி அனுப்பி வைக்கிறது” இத்தனை நாளாய் மனததை அரித்து கொண்டிருந்ததை மல்லிகாவும் கேட்டிட
Advertisement
தன் குடும்பத்தை நினைத்து வெறுத்தே போனான் கிரி.
“நீங்க வீடு பார்க்குறீங்களா, இல்லை நான் பார்க்கவா மாப்பிள்ளை” தனி வீட்டிற்கு தான் உன்னோடு என் மகளை அனுப்புவேன் என்ற மறைமுக செய்தி அதிலிருந்தது.
“இன்னைக்கு இத்தனை பேசுறவங்க, அன்னைக்கு பத்திரிக்கை வைக்க வந்தப்போ கூட எதுவுமே பேசலையே” வசந்தா கேட்க
Advertisement
“கிரிக்காக மட்டும் தான் நாங்க அமைதியா இருந்தோம்! தவிர பொண்ணு வீடுன்னாலே பொறுத்து தான் போகனும்கிறது இங்க எழுதபடாத சட்டமாச்சே!” என பேசிய செல்வம்
“என் மக பிரச்சனைனு வந்து நின்னப்போலாம், கிரி உங்களுக்காக மட்டும் தான் அமைதியா இருந்தோம். என்னைக்கா இருந்தாலும், அவ வாழப்போற வீடுன்னு, அவளையும் அமைதியா தான் இருக்க சொல்லி இருக்கேன். இப்போ என் மகளோட அமைதியே கேள்வி குறியா நிக்கும்போது நாங்க யாருக்காகவும் பார்க்கனும்னு அவசியமில்லையே” பேசியது மல்லிகாவே தான்.
“நீங்களும் பாரினில் இருந்து வந்து ஒரு வாரம் தான் ஆகுது. உங்களுக்கும் டைம் கொடுக்கனுமேனு தான் கமலியை எங்க வீட்டிலேயே வச்சுக்கிட்டதே” மல்லிகா ஆதங்கமாய் பேசிக்கொண்டிருக்க
எல்லா பேச்சையும் டீலில் விட்டவர் “அதை தானே நானும் சொல்றேன். உம் மகளை இங்க யாரும் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கலை. உன் வீட்டிலையே வச்சுக்க” கிரியிடம் பேசிக்கொண்டிருந்த மல்லிகாவிற்கு, வசந்தா பதில் கொடுத்திட
வசந்நாவை வேண்டுமட்டும் முறைத்து தள்ளியவர் “கமலி.. இதுக்கு மேலயும் நீ இங்க நிக்கிறது எனக்கு அசிங்கமா இருக்கு” மல்லி பேசிட, கமலி ‘ஏதாவது செய்யேன் கிரி’ என கிரியை தான் பார்த்து வைத்தாள்.
கிரி அவளுக்கும் மேல் அவளை பார்த்து வைத்தான்.
“கிரி, இவ உனக்கு வேணாம்.. அதையும் மீறி கூட்டிட்டு வந்தன்ன.. உனக்கு அம்மா இல்லைன்னு நினைச்சுக்கோ. அப்பா இல்லாமல் உன்னை தனியா வளர்க்க.. நான் எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா? துணி கடைக்கெல்லாம் வேலைக்கு போனவடா நான்” வசந்தா மூக்குறிஞ்ச,
“எனக்காகனு சொல்லாதம்மா.. உனக்காக, உன் மகளுக்காகனு சொல்லு ஒத்துகிறேன்” கிரியும் எத்தனை பொறுப்பான்? அவனுமே பேசிட, வசந்தாவிற்கு பேச்சு அப்படியே நின்று போனது.
“ஏண்டா அப்போ எனக்கு உன் மேல பாசமில்லைனு சொல்றியா” வசந்தாவிற்கு கிரியின் பேச்சுகளை ஏற்கவே முடியவில்லை.
“ஹ.. ரொம்ப பாசம் தான், அதான் காய்ச்சல், வாந்தினு கிடந்தப்போ, கூடவே இருந்து என்ன வேணும், ஏது வேணும்னு பார்த்துகிட்டியா!” இன்னுமே கிரி பேச,
நல்லா பேசு எனும் விதமாக நின்றிருந்தான் செந்தில்.
“பார்த்தியா.. பார்த்தியா உன்னையவே இவ எப்படி மாத்தி வச்சிருக்கா பாரு” கண்ணீர் வடிக்க
“அவ தான்மா எனக்காக எவ்வளவோ மாறி இருக்கா. எனக்காக எவ்ளோ விட்டுகுடுத்து போயிருக்கா. இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை” வசந்தாவின் கண்ணீரை கண்டு இவன் பொறுமையாய் பேசிட
“தெரிய வேண்டாம் கிரி, தெரிஞ்சுக்கவும் நான் தயாரில்லை. இப்போ நான் வீட்டுக்கு போகனும். அவளை இங்கேயே வீட்டுட்டு நீயும் என் கூட வர!” பிடிவாதமாய் நின்றிருந்தார் வசந்தா.
“தனி வீடு பார்க்காமல் என மகளை உங்களோட அனுப்ப மாட்டேன்” செல்வம் உறுதியாய் நின்றிருக்க
இறுதியாய் கமலியை பார்த்தான் கிரி. “கமலி.. வா” என செல்வமும் அழைத்திட, அதற்கு மேல் முடியாமல், கமலியின் கையை பிடித்து இருந்தவன் மெதுவாய் பிரித்துவிட்டு “போ..” என செல்வத்திடம் இவளை நகர்த்திவிட, பேரதிர்ச்சியோடு பார்த்தாள் கிரியை.
அவனோ கமலியை ஆழ்ந்து பார்த்து, அழுத்தமாய் கண்களை மூடி திறக்க, “நான் இருக்கேன்டி உனக்கு” என்ற அர்த்தம் ஒளிந்திருக்க, அமைதியாய் அவளை பார்த்த வண்ணமே நின்றுவிட்டாள் கமலி. “பார்த்துகோங்க மாமா” அவரிடம் மெதுவாய் தலையசைத்துவிட்டு,
“செந்தில் ஆட்டோ ஏதாவது பிடிச்சு அம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடு” என சொல்லி விட்டு, அங்கே நிற்க முடியாமல் வேகமாய் செல்ல..
“டேய்.. நில்ரா..” என கத்தி கொண்டிருந்த செந்திலையோ, “கிரி.. நில்லுடா” என கத்தி கொண்டிருந்த ராஜியையோ சிறிதும் கண்டு கொள்ளாமல் வெளியே சென்றே விட்டான் கிரி.
வசந்தாவோ.. ‘வெற்றி வெற்றி’ என மார்தட்டி கொள்ளவில்லை அவ்வளவு தான். ஆனால் முகம், கண்கள், உடல் மொழி என அத்தனையிலும் மகிழ்ச்சியை விரவி பரவ விட்டார்.
“என் பிள்ளையே சொல்லிட்டான் அம்மா தான் முக்கியம்னு” அதிர்ந்து நின்றிருந்த கமலியை ஒரு மார்க்கமாய் பார்த்துவிட்டு “வாடி ராஜி.. போகலாம்” என்றிட, எதுவுமே செய்ய முடியாமல் ராஜி குழந்தைகளோடு, செந்திலும் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.
“அத்தை நீங்க பிரபாவை அழைச்சிட்டு கிளம்புங்க நல்ல நேரம் முடியபோகுது. இந்த பிரச்சனையை நம்ப அப்புறம் பார்த்துக்கலாம்” என மல்லிகா சொல்ல, சரியென அவரும் விலகிவிட்டார், அதன் பின் பிரபாவை காரில் அனுப்பிவைக்கும் வேலைகள் துரிதபடுத்தபட, அதில் கவனமாகினர்.
பத்து பதினைந்து நிமிடங்களிலேயே பிரபா குடும்பமும் அங்கிருந்து கிளம்பிட, நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அங்கே இருந்தனர்.
கிரி, கமலியை எப்படி விட்டு சென்றானோ அப்படியே நின்றிருந்தாள் கமலி. பார்வை ஓரிடத்தில் இருக்க, நினைவுகள் வேறெங்கோ இருந்தது. எங்கெங்கோ சுற்றிய எண்ணங்கள் இறுதியில் தன்னிடமே வந்து இளைப்பாறும் கிரியிடம் வந்து நின்றது.