Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 8 3

“பேசுவேன், அவனுக்காக பேச ஆளில்லைன்னு தானே இந்த ஆட்டம் ஆடுறீங்க.. ஏற்கனவே கட்டுன வீட்டுக்கு ஆறு வருசமா ஓடிட்டான். இப்போ மகளுக்கு மாடி வீடு கட்டிருக்கேன்னு கேள்வி பட்டேன். எப்படியும் பத்து பதினைஞ்சு லட்சமாவது ஆகி இருக்கும்ல..” என கேள்வி எழுப்ப

“அது கமலியோட நகை தாண்டா” வசந்தா அது மகனின் சுமையில்லை என்பது போல் பேச

“ஓ.. நகை தன்னாலயே இரண்டு வருஷம் கழிச்சு வீடு வந்து சேர்ந்திருமா? எனக்கு தெரியாம போச்சே” என நக்கலடித்தான் ராம். நற நறவென பற்கள் கடிபட்டது கிரிக்கு.

வசந்தாவிடம் பதிலில்லை.



Advertisement

“இன்னும் பத்து வருஷத்துக்கு இவன் இங்கே தான். ஊர்பக்கம் நினைச்சாலும் வர முடியாது, வரவும் மாட்டான். அம்மாவும் மகளும் இன்னும் எப்படிலாம் கடன் வாங்கலாம், அதை எப்படி இவன் தலையில் கட்டலாம்னு யோசிச்சு வைங்க”

“உன் மக, மக குடும்பம் சந்தோஷமா வாழனும்னு தானே இவனை வாழ விடாம பண்ணிட்ட.. நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்க.” என்றதோடு இவன் நிறுத்த

அதுவரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்த ராஜி “போதும் நிறுத்திறியா?அண்ணன்னு பாக்கேன்.. இல்ல நல்லா கேப்பேன். உன் தங்கச்சி கல்யாணத்துக்கு வேண்டியமட்டும் எல்லாம் செஞ்சு அனுப்பின தானே. எனக்கு கிரி செய்யலை நானா எடுத்துகிட்டேன்” ராஜி வாயை விட, அவ்வளவு தான் கிரிக்கு இருந்த பொறுமையெல்லாம் பறந்திட

Advertisement

“கௌரிய பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு. அவளுக்கு சமமா நீ.. அண்ணன் கஷ்டம் தெரிஞ்சவ அவ.. சீர் வாங்கினதோட சரி, அனாவசிய செலவை இழுத்து வச்சு எதுக்கும் அவனை போட்டு பாடா படுத்தினதில்லை.

Advertisement

ஆனா நீ.. எவ்ளோ வாங்கிருக்க, ஆனால் ஒன்னும் செய்யலைனு இப்போ வரை அசிங்க படுத்திட்டு இருக்க.. என்ன சொன்ன?  சீர் செய்யலியா.. பங்குனி பொங்கல், தைப்பொங்கல், தீபாவளினு மூனு வருஷமா  சீர் வாங்கிட்டு போனியே, ஒவ்வொரு சீருக்கும் ஐம்பாதாயிரம் குறையாமல் கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்கம்மாவா செஞ்சாங்க?” கிரியின் குரல் கேட்டதில் தாய் மகள் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து கொண்டனர்.

“இரண்டு குழந்தை பெத்த, சீ்செக்‌ஷன் தானே பில் மட்டும் முதல் குழந்தைக்கு ஏழுபதாயிரம், இரண்டாவது குழந்தைக்கு எண்பதாயிரம், இரண்டு புள்ளைக்கும் மூனு, மூனு பவுன் தங்கம், கொடி, கொலுசுனு ஒவ்வொருத்தருக்கும் இரண்டரை, இரண்டரைனு ஐந்து லட்சம் செஞ்சிருக்கேன்.. அதுலாம் என்ன உன் புருஷன் செஞ்சானா?” நாக்கை பிடிங்கும்படி தான் கேட்டான் கிரி.

நல்லா கேளு என ராமும் திரும்பி நின்று கொண்டான்.

Advertisement

“நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல, கோவிட் டைமில் உன் புருஷனுக்கு கொரணா மாதிரி இருக்குனு பெரிய ஹாஸ்பிடலா பார்த்து ஐசியுல அட்மிட் பண்ணிட்ட, இங்க நாயா, பேயா அலைஞ்சு கடன உடன வாங்கி முழுசா ஆறு லட்சும் கொடுத்து டிஸ்சார்ஜ் பண்ணதே நான் தான். அய்யோ மகனாச்சேன்னு உன் மாமியார் மாமனார் கொடுத்தாங்களா?

இது பத்தாதுன்னு மாச மாசம் அம்மாக்கு இருபத்தஞ்சாயிரம் கொடுக்கேன், அதில் உனக்கு எவ்ளோ போகுதுன்னு, உன் அக்கவுண்ட எடுத்து பாரு தெரியும்.

உனக்கு சீர் செய்யனும்  உனக்கு நகை எடுக்கனும்னு நான் பணம் சேர்த்து வைக்கிறப்போலாம் ஏதாவது காரணம் காட்டி லட்ச லட்சமா வாங்கிட்டு போனியே, எப்படி செய்வேன்? எங்க இருந்து செய்வேன்? நோட்டா அச்சடிக்கேன்” கிரி ஆடிய ஆட்டத்தில் ராஜி கூட அமைதியாய் நின்றாள்.

“அன்னைக்கு டவுரிலாம் வேணாம்னு சிலிப்பிட்டு நின்னான், உன் புருஷன். பணம், வீடு தான் வேணும்னா, உன்னை ஏன் கல்யாணம் பண்ணான்? அப்படி வேணும்னா லட்ச லட்சமா நான் குடுக்கும் போது, இதெல்லாம் வேணாம், ராஜிக்கான சீரை மட்டும் செய்னு சொல்லிருக்கனும்.

இவ்வளவு பண்ணிருக்கேன், நீங்களே அதை மறக்கும் போது, செந்தில் வீட்டில் நானா போய் சொல்லிட்டு இருக்க முடியுமா? என்னை அசிங்க படுத்துறது பத்தாதுன்னு கமலி வீட்டிலையும் என் பேரை கெடுக்க முடிவு பண்ணீடிங்கல்ல”

“இனி உயிர் ஒன்னு தான் இருக்கு அவன் கிட்ட, ஓரேடியா புடுங்கிட்டு விட்ருங்க.. நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்” என கிரி விரக்தியின் உச்சத்தில் பேச

“அய்யோ கிரி அப்படி சொல்லாதடா” என வசந்தா கத்த

ராஜி கடுக்கடுவென நின்றாள்.

“உன் உடம்புல ஓடுற அதே இரத்தம் திமிரு தான் என் உடம்புலயும் ஓடுது. நான் செய்யறத தான் செய்வேன்னு ஆடுனல்ல. இனி நான் ஆடுறேன். நீ வேடிக்கை பாரு” என போனை கட் செய்துவிட்டான்.

“ண்ணே, எனக்கு ஒன்னு தோணுது?” என விளக்கமாய் சொல்லி, செய்யவா என அனுமதி கேளாமல் “செய்யப்போறேன்” என உறுதியாய் நின்றான்.

“செய்டா, பாத்துகலாம், நான் அப்பாகிட்ட சொல்லி வைக்கேன். செந்திலுக்கும் அறிவு வரணும்ல, எல்லாத்தையும் நீயே பார்த்துட்டு இருந்தா, அந்த நாய் எதுக்கு இருக்கும்?” ராமும் உறுதியாய் நின்றுவிட்டான்.

அடுத்து ராம் தன் தாய்க்கு போன் செய்து “கிரிக்கு, நீங்களாவது சொல்லி அலர்ட் பண்ணிருக்க கூடாது, உங்களுக்கும் எங்க போச்சு அறிவு?” என அவருக்கும் மண்டகப்படி கொடுக்க “டேய் நான். கேட்டதுக்கு, ‘கிரிக்கு பிடிச்சிருக்கு நீ தலையிடாதனு சொல்லிட்டா’ உன் பெரிம்மாகிட்ட எவ்வளவோ சொன்னேன்டா.. வேற வரண் பாப்போம்னு! ஆத்தாளும் மகளும் எங்கடா கேட்டாளுங்க.. ஆட்டமா ஆடுறாக.. கிரி பயல பாடா படுத்தி எடுக்குறாளுக. உன் பெரியப்பா இருந்திருந்தா இரண்டு பேரும் பண்ற அக்ரமத்துக்கெல்லாம் கொன்னு புதைச்சிருப்பாரு, என்னை என்னடா பண்ண சொல்ற” வைதேகி புலம்ப

“ப்ச்” சலித்து கொண்டு போனை வைத்துவிட்டான் ராம்.

இங்கே கிரியோ, மோகனுக்கு போன் செய்து, செய்ய வேண்டிவை எல்லாவற்றையும் சொல்ல “கிரி, எனக்கென்னவோ சரியா படலை” என மோகன் தடை போட, “இல்லை எனக்காக இதை பண்ணுங்க, அம்மாவும் ராஜியும் சரியில்ல சித்தப்பா, சரி பண்ண முடியாது! ஆனால் இனி இது போல் பண்ண கூடாதில” எனவும், உன் இஷ்டம் டா பார்த்துக்க என வைத்துவிட்டார் மோகன்.

கமலிக்கு போன் செய்தான், வழக்கம் போல் ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுத்த பாடில்லை.

எரிச்சலானவன், கர்ணன் எண்ணுக்கு அழைக்கலாம் என எண்ணினான். ஆனால் இருக்கும் நிலையில் கர்ணனிடம் பேச பொறுமை இல்லை.

“ண்ணே, உன் போன் தா” என வாங்கியவன் கமலி எண்ணை டைப் செய்து அவளுக்கு அழைக்க, இரண்டே ரிங்கில் எடுக்க, இன்னும் எகிறியது இவன் கோபம்.

“என் போனில் இருந்து கூப்டா எடுக்க கூட மாட்டியா.. எத்தனை தடவை ட்ரை பன்றது, அறிவில்லை” ஏகமாய் திட்ட வைக்க

யாரா இது? இப்படி திட்றது?, என வாய்விட்டு கேட்க வந்தவள் கிரியின் குரலில் ஷாக் அடித்தார்ப்போல் நின்றுவிட்டாள்.

“கமல்லி…” இவன் கத்த

“நீங்க கூட தான் மூனு மாசமா நான் கூப்பிட்டா எடுக்க மாட்றீங்க, ஆனால் நல்ல பிள்ளை மாதிரி வேஷம் போட்டு, எங்கம்மா, அப்பா, கர்ணானு எல்லாம் கூடவும் பேசிட்டு இருக்கீங்க, நான் ஏதாவது கேட்டனா?” இவளும் கத்தினாள்.

ஆம் எடுக்காதது என் தப்பு தானே! இதில் எங்கிருந்து இவளை குறை கூற! இருவரிடையேயும் பெரும் அமைதி நிலவ “குளிச்சிட்டு இருந்தேன், அதான் எடுக்கலை” கமலி அவனுக்கு பதில் கூற, இவனோ இன்னும் அமைதியானான்.

‘எப்படி தான் ஈசியா கோபத்தை மறக்கிறாளோ’ இவன். யோசிக்கையிலேயே

அவன் அமைதி பொறுக்காமல் “எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா? எதுவும் பிரச்சனையில்லையே!” என கேட்க

‘கமலி கேட்கா.. உனக்கு கேட்க தோணுதா’ தூ .. என துப்பி கொண்டான். அதற்குள் “ஹலோ.. ஹலோ” என இவள் இருமுறை அழைக்க

“யாரை கேட்டு நகையை கொடுத்த? வீடு எடுக்குற விசயத்தை நீ கூட சொல்லைல?” அழுத்தமான அவன் குரலில்

“நான் போன் பண்ணினேன், நீங்க தான் எடுக்கல. உங்கம்மாவும், ‘நான் கிரி கிட்ட பேசிட்டேன். அவன் சரினுட்டான்’ அப்படினு நீங்க சொன்னதா சொன்னாங்க. அதான் கொடுத்தேன்”

“உங்க வீட்டுக்கு தெரியுமா? அந்த வீடு நமக்கில்லை, அது ராஜிக்குனு! தெரியுமா? அத்த மாமா ஒன்னும் சொல்லலையா?”

“தெரியும், ஒன்னும் சொல்லலையே!”  இதுவரை அமைதியாய் பேசியவள், தடுமாறி பேசினாள்.

“நிஜமா தான் சொல்றியா?” இவனும் அழுத்தி கேட்க

“வேணும்னா, அம்மாகிட்ட தாரேன் பேசுறீங்களா?” என இவள் கேட்க

“இல்லை வேணாம்” என்றவன் “இனி எப்போனாலும் கூப்பிடு, போன் எடுப்பேன்” என இவன் கூற

“ம்” என்றாள் இவளும்.

“வேற எதுவும் சொல்லனுமா?” இவன் கேட்க

“சொல்ல வேண்டியது எதுவும் இல்லை.. கேட்கனும்”

“என்ன கேட்கனும்?” இவன் நெற்றி சுருங்கியது.

“டென்சனா இருக்கீங்களா?”

“ஆமா, அதுக்கென்ன இப்போ” பேச்சிலேயே டென்சன் தெரிந்தது.

“ஓகே, கூல்.. கூல்.. கூல்.. நோ டென்சன். என்ன பிரச்சனையா இருந்தாலும், எல்லாமே சரியாகிடும். டென்சன் ஆகறதுல ஒன்றும் ஆகாபோறதில்லை” என இவள் சிறு பையனுக்கு பாடம் எடுக்க

“பிரச்சனை என்னனு தெரியாம வந்துட்டா, அட்வைஸ் பண்ண.. வைடி போனை” முழு எரிச்சலில் இவன் கத்த

“சரியான ஸ்ட்ரெஸ் மேக்கர்*  இவள் முனு முனுக்க

“என்ன?” இவன் எகிற

“ஒன்னுமில்லை” என வைத்து பட்டென வைத்து விட்டாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!