Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முழுமை பெற்ற காதல் என்றால் 10

நுரையீரலில்  தொற்று இருக்கிறதா, இருந்தால், அது எவ்வளவு தூரம் அவள் நுரையீரலை பாதித்து இருக்கிறது, என்பதை, எக்ஸ்ரேயை   விட, துல்லியமாய் காட்டும் ‘ சி டி ‘ என்பதால் தான் அதை  இது போன்ற நெருக்கடியான சமயங்களில் டாக்டர்கள் நாடுவது.

அதன்படி எடுத்த ‘ சி டி ‘ மிகுந்த குழப்பத்தையே  அளித்தது டாக்டர்ஸ்க்கு!

   அவளது இரண்டு நுரையீரலில் ஒன்றில் தொற்றும், ஒன்று கிளீன் ஆக எந்த தொற்றும் இன்றி இருந்தது!

   பொதுவாக இரண்டிலும், ஒரே அளவிலோ, அல்லது  சற்று ஏறக்குறைய இருக்குமே அன்றி இது போல்  ஒன்று, துடைத்து  வைத்த ஸ்லேட்  போல் இருப்பது தான் டாக்டர்ஸ்க்கு குழப்பதை கொடுத்தது.



Advertisement

    அடுத்து அந்த ஒன்றில் இருக்கும் தொற்று, கோவிட் என்று கொண்டால், அது ஏன் இன்னும் மட்டுப்படாமல் இருக்கிறது, இந்த ஒரு வார  மருந்துக்கும் பிறகும்  இப்போது கிளைத்து எழுகிறது,

 அப்படி கோவிட் இல்லை என்றால் வேறு என்ன என்பதும், அதற்கு வேறு மருந்து கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால், ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தனர்.

   இதை சோதித்து அறிவது எப்படி என்று முடிவு எடுக்கும் முன் அவளுக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அதிகம் ஆனது..

Advertisement

  அதற்காக மறுபடி ‘ சி டி ‘ எடுத்து பார்க்க, இப்போது அடுத்த நுரையீரலில்  லேசான தொற்றின்  அறிகுறி தென்பட்டது,

Advertisement

 இரண்டும் வேறு வேறா, அல்லது ஒன்றே தானா, என்பதை, வெறும்  சி டி பார்த்து மட்டும் முடிவு செய்ய முடியாமல் குழப்பியது.

 இரண்டுக்கும் மிக மெல்லிய வித்யாசம்  இருப்பது, பல முறை, டாக்டர்ஸ் குரூப் அலசி கண்டு பிடிக்க, அதன் பின்னணியில் மகன் முக்கிய காரணமாக இருக்க….
நுரையீரளுக்கு ப்ரோன்கோ, தொற்றுக்கு இன்பெக்ஷன் ஸ்பெஷலிஸ்ட் ,  வழக்கமான நெப்ரோ யூனிட்,  ஐ சி யூ டாக்டர், மற்றும் அவள் கணவர், மகன், டாக்டர் கணேஷ் கொண்ட குழு, முழுமையாக கூடி நிலைமையை, அதற்கான வைத்தியத்தை, அதன், சாதக, பாதகத்தை, அலசியது!

  இப்போது அடுத்த சிக்கல் ஆரம்பித்தது..

Advertisement

   இரண்டும் இரு வேறு, இன்பிக்ஷன் என்று கொண்டால், இரு வேறு மருந்து கொடுக்க முடியாது.

   ஒரு மருந்து ஒரு வியாதியை கட்டுப்படுத்தினால், அடுத்த ஒன்று கிளைக்கும் அபாயமும், ஒரு மருந்து இன்னொரு இன்னபிக்ஷன் ஒவ்வாமல், போய் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்ற நிலையும் இருந்தது.

  இதற்கு இடையில், அவளுக்கு, மூச்சு தினரலும், ஆக்ஸிஜன் தேவையும் அதிகபட, அவர்கள் மருந்து விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க அதிக அவகாசம் இல்லை என்ற நிலையை அடைந்தது.

 மகன் இந்த தகவலை    தன் தம்பியுடன் பகிர அவன், உடனே கிளம்பி வந்து சேர்ந்தான்.

 அவன் இது போல், கவலைப்பட்டு, உடனே வருவான், என்று தான், அவனுக்கு இப்போது எதுவும் தெரிய வேண்டாம், சரியான பின், சொல்லிக்கொள்ளலாம், என்று அவள் தடுத்து வைத்திருக்க…

  இப்போது மகன் அவளையும் மீறி, தம்பியை வரவைத்திருப்பது,அவளுக்கு ஒரு குறியீடாகப்பட்டது!

  அப்போது கிட்டத்தட்ட, அவளுக்கு வியாதி ஆரம்பித்து, மூன்று மாதம் கடந்து  இருக்க, கிட்டத்தட்ட அந்த வருட கடைசியில் இருந்தனர்.

  அடுத்த வருடம் மலர்வதை பார்க்க, தன் இரண்டு மகன்களின், வாரிசுகளை கையில் ஏந்தி, கொஞ்ச,  தனக்கு இறைவனின் கருணை இருக்குமா என்ற சஞ்சலமும்…

    போனாபோகுது, இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது, மனைவி குழந்தை, வேலை என்று அவர்கள் காலம் ஓடி விடும்… குறைந்தபட்சம்அவர்களை ஆளாக்கி, கல்யாணமும் செய்து, அந்த  பொறுப்புகள் நிறைவேற்றி விட்டோம் என்ற நிறைவு வரும்போதே, இன்னொரு ஜீவனின் ஞாபகம் வந்தது!

     அந்த ஜீவனிடம் இப்போது பெருத்த மாற்றம்!

    காலையில்  வந்து அவளுடன் சில வினாடிகள் , மட்டும் நிற்கும்போது, அதற்கு மட்டுமே அனுமதி என்பதால், பார்க்க ரொம்ப பாவமாக தான் இருந்தது.

   அவரிடன் இருந்து தொற்று வராமல் இருக்க ( இன்னும் என்ன பாக்கி இருக்கிறது என்ற போதும்) அவரும் முக கவசம், ஒன்றுக்கு இரண்டாக அணித்திருக்க, அதற்கு மேல் அவர் கண்கள் மட்டுமே தெரிந்தது. அதில் சொல்லொனா சோகம்!

   சற்று தள்ளியே நின்றபடி அவளை பார்த்துவிட்டு, அதிகம் பேசாமல், அங்கிருந்து அகலும் அவர்  வீட்டுக்கு போவதில்லை என்பதை அவள் அறிவாள்!

  அவளை இங்கு தனியே, விட்டு போக மனசில்லாமலும், அவளுக்கு உதவி என்று எதாவது தேவை என்றால், செய்வதற்கு தயாராய், வெளியே விசிட்டர்ஸ்  அமரும் இடத்தில், காலையில் இருந்து, மாலை வரை  இருப்பது அவர் வழக்கம் ஆனது.

    உணவு, ஒய்வு, எல்லாம் அங்கே இருந்தபடியே…
இவளை பார்க்க வரும் டாக்டர் வேலையுதம், உன் கணவர் அங்கே வெளியில் தான் அமர்த்திருக்கிறார், பேசினாயா அவரோடு என்று கேட்க தவறுவதில்லை!

    சில நாட்களுக்கு முன்னே தான் ‘ டிட் யூ கிளப் (club) ஹிம் நைஸ்லி’ என்று கேட்டதில் இருந்து,  இன்று இந்த நிலைமை என்று அவளுக்கு தோணும் போது சிரிப்பு வரும், கூடவே அவரை பார்க்க பாவமாக இருக்கும்,

   அவருக்கும் இந்த வயதில் பாவம் மனுஷனுக்கு இந்த நிலை வர வேண்டாம் என்று தோன்றும் போல, நின்று அவருடனும், இரண்டு வார்த்தை, அவள் நிலைமையை பற்றி பேசாமல் சென்றதில்லை அந்த முதிய உள்ளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!