முழுமை பெற்ற காதல் என்றால் 4
கால் வலியின் அடுத்த கட்டமாக, கால் மரத்து போவது, அதாவது நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்திருந்த பின் எழுந்து நடந்தால், சற்று மரத்தாப் போல் இருப்பதும், அடி எடுத்து வைக்க வைக்க சரியாவதும், கொஞ்ச நாட்களாகவே இருப்பதால், அதையும் இயல்பாகவே கடந்தாள்!
ஆனால் இப்போதோ கால் மரமரப்பு சரியாகவே சற்று நேரம் கூடவே எடுத்தது.
மகன் வந்து அழைக்கவும், வழக்கம் போல் எழுந்து ஓடி போய் கதவு திறக்க நினைத்தால், கால் ஒத்து உழைக்கவில்லை.
இருந்தும் சற்று விந்தியப்படி கதவை திறந்தவளை கண்டு அதிர்ந்து நின்றான் மைந்தன்!
Advertisement
” என்னாச்சு மா, ஏன் இப்படி நடக்கற, எவளோ நாளா இப்படி இருக்கு, ஏன் என்கிட்டே சொல்லல முன்னாடியே… ” என்று கேள்விகளை கவலையுடன் அடுக்கினான்.
” ஒன்னும் இல்லடா, கொஞ்சம் கால் வலி இருக்கு, வாக் போன நாளேர்ந்தே இப்படித்தான் இருக்கு, இன்னைக்கு சரி ஆயிடும், நாளைக்கு சரி ஆயிடும்ன்னு பார்க்கிறேன், ஆகல, ஒரு வாரம் வலி மாத்திரையும் சாப்பிட்டாச்சு, பிரையோசனம் இருக்காப்புல தெரியலை ” என்றாள்.
” நேரா ஹாஸ்பிடலேர்ந்து வரியா, டீ போடவா, இல்ல சாப்பிடுறியா ” என்றாள்.
Advertisement
” டீ சாப்பிட்டுதான் வந்தேன், அது இருக்கட்டும், இத சொல்லு ” என்று மறுபடி எல்லாம் கேட்டு, அவள் கை, கால், மடக்கி நீட்டி, அவன் கைகளை எதிர்த்து அழுத்த சொல்லி, அவைகளின் ஸ்ட்ரென்த் டெஸ்ட் பண்ணபின், எல்லாம் நன்றாகவே இருக்க கண்டான்.
Advertisement
” அர்த்தரிட்டீஸ் மாதிரி தெரியலமா, சோ இது வெறும் கால் வலி தான் போல, அதற்கு இப்போ கொஞ்சம் லேட்டஸ்ட் என்ச்யம் மாத்திரை இருக்கு, எழுதி தரேன், போட்டு பாரு, ஒரு மூணு நாளைக்கு ” என்றான்.
அவளுக்கு அதுவே பெரிய சந்தோசமாக இருந்தது!
இப்போதுதான் ஸ்கூல் சேர்த்து இட்லி ஊட்டி கிளப்பி அனுப்பியது போல இருக்க, காலம் வேகமாக சுழன்று, மகன் வளர்ந்து தனக்கு வைத்தியம் பார்ப்பது பெருமையாக இருந்தது.
Advertisement
அதற்குள் அப்பாவும் வந்துவிட, இருவரும் சற்று நேரம் இதை பற்றி பேச, அவள் டின்னெர் ரெடி செய்ய அகன்றாள், எழுந்து சற்று நடந்தால், கால் மரமரப்பு குறைந்துவிட, மகனுக்கு தோசை வார்த்து போட்டாள்.
ஆனால் மகன் கொடுத்த மருந்துக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை, இன்னும் கொஞ்சம் வலி கூடி, மாலை ஆக ஆக அவள் கால்களை நகர்த் துவதே பெரிய போராட்டம் ஆனது, அதை எதிர்கொள்ள அவள் ஒரு வழி கண்டு பிடித்தாள்.
மாலை ஆகி இரவு வரும்போதுதான் வலி பின்னி எடுத்தது.
இரவு தூங்கி காலை எழுந்தால், அவ்வளவு வலி இல்லாததால், அவள் காலை வேளைகளில், தன் வழக்கமான பணிகளை செவ்வனே செய்தாள், ஆனால் இரவு நெருங்க நெருங்க உடம்பின் சக்தி வடிந்தது போல் ஆகியது, பாத்ரூம் வாசப்படி தடுப்பை தாண்டி கால் தூக்கி வைக்கவே பெரும் பாடு ஆனது, அதுவே காலை வேளைகளில், துணி கொண்டு தொடைத்தார்ப்போல் வலி இல்லாமல் இருக்க, இயல்பாக இருக்க முடிந்தது. காலை வேளைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க, அவள் கணவருக்கு ஏதும் வித்யாசமாக தெரிய வில்லை . இரவு அவள் வலி காரணமாக கொண்டு வந்த மாற்றத்தை தான் அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை.
அவள் இரவு சாப்பாட்டை முன்னேரத்திலே முடித்து கொள்ளுவதை இப்போது கொஞ்ச நாட்களாக வழக்கமாக வைத்து இருந்தாள், இன்டெர்மிட்டன்ட் பாஸ்டிங் முறையை கடைப்பிடிக்கலாம் என்று நினைத்து எடுத்த முதல் அடி, அதாவது ஏழு மணிக்குள் உணவை முடித்தால், மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் சாப்பாடு அல்லது காபி. இடையில் தண்ணீர் குடிக்கலாம். அவளுக்கு இதை கடைபிடிப்பதில் ஏதும் சிரமமில்லை.
காலை அவசரமாக எழுந்து பரபரப்பாக வேலை செய்த பொழுதுகளில் அவள் ரெண்டு மூணு காபி சாப்பிட்டதுண்டு, முதல் காபி எங்கே சென்று விழுந்தது என்று கூட யோசிக்கும் அளவுக்கு வேலையும் பசியும் இருந்த காலகட்டம் போய், இப்போது பழக்கத்தின் காரணமாக எடுக்கும் காபியை தள்ளி போட முடிந்தது.
ஆக அவள் உணவு ஏழு மணிக்கு முடிந்தாலும், அவனுக்கு காத்திருந்து, ஒன்பது அல்லது பத்து மணிக்கு சுட சுட தோசை சுட்டு போடுவாள், இருவரும் சேர்ந்து சாப்பிட முடியாது, அவனுக்கு கல்லில் இருந்து நேராக வாய்க்குள் போக வேண்டும், அவ்வளவு சூடு வேண்டும், அதே போல் அவளுக்கு சுட்டு போடும் பழக்கமும் அவனுக்கு இல்லை, பழகியதும் இல்லை, அவள் பழக்கப்படுத்தவும் இல்லை, அதை அவனிடம் எதிர்பார்த்ததும் இல்லை, ஆனால் ஹேமா டங்கன் கணவர் தனக்கு சூடாக சுட்டு போடுவார் என கூற கேட்கும்போது லேசாய் பொறாமை எழும், சரி நமக்கு அமைந்தது அவ்வளவுதான் என்று நினைப்பதுவுடன் சரி.
இப்போது அதில் சிறு மாற்றமாக அவருடைய தோசையையும் ஏழு மணிக்கே சுட்டு அடுக்கி விட்டு, கால் வலி எடுக்கும் முன்னே அவள் படுக்கையில் சுருண்டு விட , அவருக்கு சற்றே எரிச்சலாய் இருந்தது.
அவர்களுக்குள் சின்ன மனஸ்தாபம் ஏற்பட முதல் வித்தானது!
இதுவரை அவள் பெரிதாக ஒன்றும் உடம்புக்கு கேடு வந்து படுத்ததில்லை.
இன்னும் கேட்டால், மகன்கள் டெலிவரி தவிர வேறு ஹாஸ்பிடல் வாசம் கிடையாது, அதுதான் ஹாஸ்பிடலே கதி என்று கிடக்க கணவரும், இப்போது மகனும் இருக்கிறார்களே!
அதனால் அப்படி அபூர்வமாக முடியவில்லை என்று சொல்லும் அவளை, உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டாம், இந்த சிறு சிறு, லைப் ஸ்டைல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் கூடவா முடியாது, என்ற கோவம் அவளுக்கு இருக்க,
அவள் ஒன்றும் இல்லாத கற்பனையில் தன் உடம்பை வரு த்திக்கொண்டு அவனையும் வருத்துகிறாள் என்பது அவர் எண்ணம்.
இதுவும் டாக்டர்களை கல்யாணம் செய்துகொள்வதில் வரும் சைடு பெனிபிட்ஸ், அவர்களுக்கு டெஸ்ட் ரிசல்ட் எதுவும் தப்பாக தெரியவில்லை என்றால், அது மனம் சம்மந்தப்பட்டதே!
அதிலும் உயிர் வாழ போராட்டங்களை தினசரி கண்டு கடப்பதால், ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிது படுத்தி, படுத்துகிறாள் என்ற நினைப்பு!
இதற்கு இடையில் மகன் கொடுத்த மூன்று நாட்கள் கெடுவும் கடந்து விட, நேரில் வந்து இவள் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று பார்த்தவனுக்கு கவலை வந்தது.
” பிளட் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டியது தான் மா, ஆனால் நூத்துகணக்கான டெஸ்ட்ஸ் இருக்குமா, கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான், வலி தவிர உனக்கு மற்ற அறிகுறிகள், அதாவது ஜுரம், மூட்டு வலி, இல்லை என்பதால் எங்கே ஆரம்பிப்பது, எதை செய்வது என்று முடிவு எடுப்பது கொஞ்சம் கஷ்டம் ” என
அவளுக்கு இது சற்று ஆறுதலாக இருந்தது.
அவரை போல் அவள் கற்பனை செய்கிறாள் வியாதியை என்று முடிக்காமல், அதற்கு தீர்வு காண முயல்கிறான் என்று!
தன் மாமியாரின் மகனை விட தன் மகனுக்கு அறிவு நிறையவே இருக்கிறது, பரிவும் இருக்கிறது, குட் நன்றாக வளர்த்திருக்கிறாய் மகனை என்று மனதிற்குள் பாராட்டிக்கொண்டாள்!
அப்பாவுடன் கலந்து ஆலோசித்து, முதல் கட்டமாக, ரெகுலர் டைபேட்டீஸ், பிபி, பிளட், யூரின் டெஸ்டுடன் வேறு சில பரமீட்டர்ஸ் நார்மல்சி யும் டெஸ்ட் செய்யவும் முடிவு செய்தார்கள்
மறுநாள் அந்த டெஸ்ட்கள் அனைத்தும் எடுக்க பட, ரெண்டு மூணு நாட்களில் அவை எல்லாம் நார்மல் என்று வர, பார்த்தியா என்றது அவள் கணவன் பார்வை!
அடுத்து காஷ்மீர் செல்வது சந்தோசமாகவே இருந்தது, அதற்கு மேல் அதை பற்றியே எந்த விவரமும் அவளுக்கு தெரியவில்லை.
இப்போது போல் விரல் நுனியில் உலகம் இல்லை, அதே போல், பயமும் அச்சமும் இப்போது போல் இல்லை, பனி மலைகள், ஆப்பிள், முதுகில் கூடை சுமந்த வெகு அழகான பெண்கள் கொண்ட இடம் என்ற அளவில் இருந்தது அவள் அறிவு!
தங்கும் இடம், அதற்கான ஏற்பாடு எல்லாம் அவன் பொறுப்பு, அத்துடன் அது பற்றி அவன் ஏதும் பேசுவதாய் இல்லை, அவளுமே ஹனிமூன் பற்றி ஹபியுடன் டிஸ்கஸ் செய்யும் இன்றைய ஜென் ஆல்பா இல்லையே, அப்போது அதை பற்றி பேசுவதற்கு கூச்சமாய் இருந்த கால கட்டம்.
ஆக எந்த ஐடியாவும் இல்லாமல் அங்கு போய் இறங்கியவளை அவன் தங்க என்று கூட்டி சென்றது டால் லேகிற்கு!
ஆம் அந்த பரந்த நிர்மலமான நீர்ப்பரப்பின் நடுவே ஒரு பெரிய வட்டத்தில் அருகருகே, நின்று கொண்டு இருந்தது படகு வீடுகள்.
மிக ரம்யமான இடம் தான் அது, தேன் நிலவிற்கு ஏற்ற ஏகாந்தமான இடமும் கூட, ஆனால் அவளுக்கு பயம் வந்து அப்பியது!
பொதுவாக சற்று சம தளமாய் இல்லாமல் நொடிக்கும் பலகை போன்றவற்றில் கால் வைக்க தயங்குபவள், போட் என்றால் கேட்கவும் வேண்டுமோ.
ஏரியின் கரையில் இருந்து நடு மத்தியில் இருந்த ஹவுஸ்போட்டிற்கு அவர்களை அழைத்து செல்ல சிக்காரா என்ற ரக சின்ன போட்கள் தயாராய் நின்றன.
அதில் ஒன்றில் ஏற அவளை முன்னே விட்டு அவன் தொடர, அவள் சற்றே தள்ளாடிக்கொண்டு இருக்கும் அதில் எப்படி ஏற என்று தயங்க,
கொஞ்சம் தாமதமாய் அவள் தயக்கத்தை புரிந்து கொண்டு அவன் தாவி ஏறி, அவளுக்கு கை நீட்டினான்.
ஒரு வழியாய், தாண்டி தவ்வி, ஏறி அமர்ந்தபின், அவளுக்கு அய்யோ அங்கே போய் எப்படி இறங்க என்று இருந்தது.
அதற்குள் சற்றே இவள் புறம் சாய்ந்து, “இதுக்கு என்ன பயம் ” என்றான்
நல்லா கேட்டே போ இப்போ வந்து என்று இருந்தது அவளுக்கு, அவனிடன் அப்பட்டமாய் அவள் பயத்தை ஒத்துக்கொள்ளவும் தயக்கமாய் இருந்தது,
“இல்ல ஆடுது இல்ல அதான் ” என்றாள் மெல்ல
“அது ஒன்னும் ஆகாது, பயப்படாதே” என்றான் மெல்ல இன்னும் அவன் கைக்குள் இருந்த அவள் கைகளை தட்டி கொடுத்தபடி.
அதற்குள் அவளது அடுத்த கட்ட பயம் நெருங்கியது, ஆனால் இப்போது அவ்வளவு ஆட்டம் இல்லாமல், சிக்காரா , போட் ஹவுஸ் சுற்றி இருந்த அழகிய, மரத் தாலான நடை மேடையில், கிட்டத்தட்ட நம் வீட்டு வராண்டா போன்ற அமைப்பில் இருந்த இடத்தில் போய், நெருங்கி நிற்க,
மனைவியின் பயத்தை சற்றே உணர்ந்து இருந்த புது கணவன், அந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல், முதலில் அசால்ட்டாக தாவி சென்று அவளுக்கு கை நீட்டினான்.
இங்கே, வராண்டா சுற்றி பிடித்து கொள்ள வசதியாய் மரத்தால் வேலி போன்ற அமைப்பும் இருக்க, ரொம்ப ஆடாமல் போட்டும் நிற்க, அவன் உதவி இன்றி கூட ஏறி இருக்க முடியும், போனா போகுது பயபுள்ள என்று நீட்டிய கைகளை பற்றிக்கொண்டு,ஒரு மாதிரி, தன் டெஸ்டினேஷன் ஹனிமூன் இடத்தை அடைந்தாள்.
ஆனால் அதன் பின்னே நடந்தது எல்லாம் பசுமையாக அவள் நெஞ்சில் நின்றது.
நீள வராண்டா போன்றதை கடந்தபின், வரவேற்பு, அங்கு சாவியை பெற்று கொண்டால், நீண்ட காரிடோர் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வரிசையாய், ரூம்கள் இருந்தது.
ஒவ்வொன்றும் ஒரு குட்டி வீடு போல் அமைப்பில் இருக்க, அவர்களுக்கு தேவையான தனிமை கிடைக்க, வெகு இனிமையாய் கழிந்தது பொழுது.
சாப்பாடும் அங்கே கிடைக்க, என்ன சாப்பிட்டார்கள், என்ன பேசினார்கள், அண்ட் முக்கியமாக என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியாதபடி நேரம் றெக்கை கட்டி பறந்தது.மாலை வேளைகளில் கை கோர்த்து அந்த வராண்டாவில் சுற்றி வந்தார்கள்.
செல்ல சீண்டல்களுக்கு நடுவே, இவன் இவ்வளவு பேசுவானா என்று மலைக்கும் அளவு பேசி கொஞ்சி தீர்த்தான்.
மறுநாள் அவர்கள் பெகல் காம் காண சென்றனர்.
பனிமலை சூழ்ந்த பசும்புல்வெளி காண கண் கோடி வேண்டும், ஆனால் அதற்கு சென்று சேர ஒரு வழி பாதை மறுபடி அவளுக்கு திகிலை கொடுத்தது.
மட்ட குதிரை எனப்படும் சற்றே உயரம் குறைந்த குதிரை, மேலே அமர, ஒரு குதிரை ஒரு ஆள் மட்டுமே சுமக்கும் என்பதால், கணவன் வேறு குதிரையில் தொடர, அதை வழி நடந்துபவன் பின்னே நடக்க,
அவன் கட்டளைக்கு மட்டுமே கீழ்படியும் அதன் மேல் அமர்ந்து, ஒருவர் மட்டுமே போகும் அள விலான குறுகிய பாதையில், ஒரு பக்கம் உயர்ந்த மலையும், மறுபக்கம் அதல பாதாளம், என்று உயிரை கையில் பிடித்து கடந்தால், சற்றென்று சமவெளி, அதுவும் அகண்ட பசும் புல்வெளியும், தூரத்தில் தெரியும் மஜெஸ்டிக் பனிமலை என்று போஸ்ட்கார்ட்டில் பார்க்கும் காட்சிகள் நேரில் விரிய அசந்து போனாள்.
மறுநாள் சென்ற குல் மார்க் சற்றே ஆசுவாசம் தந்தது, அங்கே பெரிய குதிரையில், இருவரும் ஒரு குதிரையில் அமர்ந்து சுற்றி வர, ஜென்மம் சாபல்யம் அடைந்தது.
காஷ்மீர் கென்றே பேர் போன கும்குமபூவும், அதுவும் அது அவர்கள் தங்கி இருந்த டால் லேக்கில், சிக்காரா நிறைய கும்குமப்பூ நிரப்பி விற்க என்று எடுத்து வருவதை,காண வெகு அழகாய் இருக்க,அதையும், மாமிக்கும், மம்மிக்கும், காஷ்மீர் சில்க் சாரிகளும், சால்வைகளும் வாங்கிக்கொண்டு, திவ்வியமாய் சென்னை வந்து சேர்ந்தார்கள்!
