Skip to content
Post Views: 764
“ஐயோ அம்மா என்னால முடியல. அண்ணி டாக்டர கூப்புடுங்க.ஐய்யோ என் கண்ணுக்கு செத்து போன என் தாத்தா,பாட்டி, மாமனார், மாமியார் எல்லாரும் தெரிறாங்களே. அண்ணி நான் சாக போறேன் அண்ணி” என வசுந்தரா அந்த ராத்திரி வேளையில் ஹாஸ்பிடல் ரூமில் படுத்துக்கொண்டு கத்தி கொண்டு இருக்க அவளை சுற்றி ரவி, ராஜலிங்கம் கமலா மற்றும் அவளின் மகன் ரமேஷ் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
அவளின் அருகே நின்றிருந்த கமலா என்ன செய்வது என்று தெரியாது திருட்டு முழியுடன் மற்றவர்களை பார்க்க அவளின் கணவன் ராஜலிங்கம் அவளை முறைத்துக் கொண்டு வெளியே சென்றான். அவரின் பின்னே ரவியும் சென்றார்.
“அத்த உங்க அண்ணிக்கிட்ட சொல்லுங்க அவங்க ரில் அந்து போச்சினு”என்று சொன்னவன் வெளியே வந்து இருக்கையில் தலையில் கை வைத்து கண்ணை மூடி அமர அப்போது ஒரு மெல்லிய கரம் அவன் தலைமுடியை வருடியது.
அந்தத் தீண்டலில் கண் முழித்து பார்த்த ரமேஷ் தனது பக்கத்தில் அமர்ந்தவரை பார்த்து மென்புன்னகை செய்தான்.
Advertisement
“ ஏன் ராசா இப்படி கோபப்படுற. கொஞ்ச நேரம் அமைதியா கண்ண மூடி தூங்கு ராசா” என்றார் சரோஜா பாட்டி.
“ ஏன் பாட்டி அம்மா எப்படி இருக்காங்க. அவங்க தங்கச்சி தான இந்திரா சித்தி அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு போகக்கூடாதுனு எப்படி எல்லாம் டிராமா பண்றாங்க பாருங்க பாட்டி. பாவம் பாட்டி சித்தி தனியான நின்னு எப்படி கல்யாணத்தை நடத்துவாங்க பணம் தான் கொடுக்க விடமாட்டாங்க. அட்லீஸ்ட் நாங்க இருக்கோம்னு போய் ஒரு துணைக்கு கூட நிற்க விடாம எப்படியெல்லாம் பண்றாங்க பாட்டி. ஏன் பாட்டி சித்தி மேல இப்படி பொறாமை பிடிக்காங்க. இவங்களுக்கு கடவுள் எல்லாத்தையும் குடுத்து இருக்காங்க தான. இவங்களுக்கு ஏதாவது ஒரு குறை இருக்கா அப்படி இருந்தும் ஏன் பாட்டி சித்தி கூட போட்டி போடுறாங்க” என்றான் வேதனையுடன் ரமேஷ்.
“என்ன சொல்லணும்னு எனக்கு தெரியல ராசா. நான் எல்லா குழந்தையும் ஒண்ணா தான் வளர்த்தேன் ஏன் இப்படி மாறினாங்கனு எனக்கு ஒன்னுமே புரியல. ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுவேன் உங்க அம்மா இப்படி ஆனதுக்கு காரணம் உங்க தாத்தா தான். பொம்பள பிள்ளைக்கு அதிகம் செல்ல கொடுத்து வளர்க்காதீங்கனு சொன்னா கேட்காம அவ்வளவு செல்லம் கொடுத்தாங்க. சின்ன வயசுலயே அவ சொன்ன சொல்லு நடக்கணும்னு எல்லாத்தையும் பண்ணுவா. அதுதான் இப்போம் அவ பேச்சை எல்லாரும் கேட்கணும் என்கிற ஒரு மனப்பான்மை கொண்டு வந்திருக்கு”
Advertisement
“ அதுக்காக இப்படியா பாட்டி காலையில என் தங்கச்சி கல்யாணத்துக்கு போகலாம்னு ஆசையா கிளம்பினேன். ஆனா உங்க பொண்ணு சாதாரண அஜீரண கோளாற ஏதோ ஹார்ட் அட்டாக் மாதிரி எல்லாரையும் பயங்காட்டி கடைசில வந்து இங்க படுத்து கிடக்காங்க. எவ்ளோ அலச்சல் நான் எவ்வளவு பயந்தேனு தெரியுமா பாட்டி. காலையிலிருந்து பச்ச தண்ணி பல்ல படாம அங்க இங்கன்னு அலைஞ்சி எல்லா டெஸ்ட் எடுத்து டாக்டர் கிட்ட காட்டினா. அவர் அசால்டா சொல்றாரு அஜீரண கோளாறு உங்க அம்மாவுக்கே தெரிஞ்சிருக்குமே இருந்தும் ஏன் இப்படி ஏதோ பெரிய வியாதி வந்த மாதிரி பண்றாங்கன்னு என்ன கேக்குறாங்க பாட்டி. இப்படி நடிச்சு என்னத்த சாதிக்க போறாங்க பாட்டி. இவங்க இங்க வந்து படுத்து கிடக்கிறதுனால அங்க என்ன கல்யாணம் நடக்காமையா போச்சு” என்றான் ஆதங்கமாக.
Advertisement
“விடு ராசா எல்லாம் சீக்கிரம் சரியாகும். உங்க அம்மா கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் புரிஞ்சிக்குவா. நீ வருத்தப்படாத ராசா” என்றார் ஆறுதலாக
@@@@@@@@@@@@
Advertisement
அறையில் உள்ள எல்லோரும் சென்றதும் கண்ணை திறந்த வசுந்தரா பக்கத்தில் நின்ற அண்ணியை பார்த்து, “எப்படி அண்ணி என்னோட நடிப்பு. உங்ககிட்ட சொன்ன மாதிரியே யாரையும் அந்த கல்யாணத்துக்கு போக விடாம பண்ணிட்டேன் பார்த்தீங்களா” என்றாள் அசால்டாக எழுந்து அமர்ந்து.
“ ஆமா பெரிய நடிப்பு உள்ள சேர்த்து அஞ்சாவது நிமிஷம் எனக்கு தெரிஞ்சு போச்சு நீ நடிக்கனு. ஆனா இந்த வீட்ல உள்ள கூமுட்டைகள் கண்டுபிடிக்க நைட்டாகி இருக்கு” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “ஐயோ அண்ணி நீங்க வேற லெவல் போங்க. உங்களோட நடிப்ப யாராலயும் கண்டுபிடிக்கவே முடியல அவ்வளவு அருமையா இருந்துச்சு. நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது அண்ணி” என்று வெளியில் புகழ்ந்தாள்.
அவளின் வஞ்சப்புகழ்ச்சியினை பெரிய பாராட்டாக எடுத்துக் கொண்ட வசுந்தரா, “அப்புறம் வசுந்தரானா சும்மாவா. நான் ஆசைப்படறது நடக்க என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றாள் ஒரு வித வெறியுடன்
“ஆமா நீ இப்படி பஞ்ச் டயலாக் பேசுறதுக்கு மட்டும்தான் லாயக்கி. வேற ஒன்னும் உன்னால செய்ய முடியாது. இந்தக் கல்யாணத்தை நடக்க விடாம பண்றேன்னு ஏதோ பில்டப்புட்டா இப்ப அந்த கல்யாணமும் நடந்துறீச்சி இவங்க என்னவோ பெரிய மினிஸ்டர் மாதிரி இவ போகலனா இந்த கல்யாணம் நிக்கிற மாதிரி இங்க வந்து படுத்து கிடக்கா. என்னத்த சொல்ல இவ விட்றதெல்லாம் டம்மி பட்டாசுனு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே, “ஆமா அண்ணி நீங்க நெனச்சா அது நடக்காம இருக்குமா” என்று பொய்யாக வெளியே சிரித்தாள் கமலா.
@@@@@@@@@@@@@
“சார் சாரி சார் இன்னைக்கு உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நாள் எனக்கு தெரியும் இருந்தாலும் இது கொஞ்சம் கிரிட்டிகல்-ளான கேஸ் மாதிரி எனக்கு தெரியுது. அதனாலதான் உங்கள வர சொன்னேன்” என்று சொல்லிய சுப்புராஜ் அவனுக்கு சல்யூட் அடித்தார்.
“விடுங்க சுப்பு போலீஸ்காரன் வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல சரி சொல்லுங்க என்ன கேஸ் இது” என்றான் திரு.
“சார் சூசைட் கேஸ். இங்க வாங்க சார் இங்க தான் பாடி இருக்கு” என்று சொல்லி ஒரு ஓட்டு வீட்டினுள் கூட்டிச் சென்றான்.
“என்ன சுப்பு இது இந்த பாட்டிக்கு எப்படியும் ஒரு 60 வயசு இருக்கும் இவங்க சூசைட் பண்ணிக்கிட்டாங்களா நம்ம முடியல என்ன நடந்துச்சி சொல்லு” என்றான் 60 வயது பாட்டி சாப்பாட்டில் பூச்சி மருந்தை கலந்து தின்று உயிரை மாய்த்துக் கொண்டதை நம்ப முடியாமல்
“ அது வந்து சார் இந்த பாட்டியோட பேரு கனகா. இவங்களுக்கு ஹஸ்பண்ட் கிடையாது ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் அந்த பொண்ணோட புருஷனுக்கு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஆக்சிடென்ட் ஆயிருக்கு. அதுல கால்ல ரொம்ப அடி போல. அதனால டாக்டர் அவருக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி இருக்காரு. அதுக்கான காசு பாட்டிகிட்ட அந்த பொண்ணு கேட்டு இருப்பாங்க போல உடனே அந்த பாட்டி லோன் எடுத்து கொடுத்திருக்காங்க சார்”
“பாட்டிக்கு தான் 60 வயசு ஆயிட்டேன் எப்படி லோன் குடுத்தாங்க”
“சார் அது வந்து பாட்டியோட ஒரிஜினல் ஏஜ் 62 ஆனா இப்ப சமீபத்துல பாட்டியோட ஆதார் கார்டுல ஏஜ் சேன்ஜ் பண்ணி இருக்காங்க”
“ஓ ஓகே” என்றால் யோசனையுடன்
“பாட்டிவோட ஏஜ் சேஞ்ச் பண்ணிட்டு லோன் எடுத்து இருக்காங்க. 3 மந்த் கரெக்டா இன்ஸ்டாமெண்ட் காட்டுன பாட்டி கடைசி 3மந்த் கட்ட முடியல.அதனால லோன் ஏஜென்ட் அசிங்கமா பேசிட்டு போய் இருக்கான். அந்த அவமானம் தாங்க முடியாம பாட்டி இந்த முடிவுக்கு வந்து இருக்காங்க” என்றான் இதுவரை தான் விசாரித்ததை
“ஓ சரி ஓகே இது சின்ன மேட்டர் தான நீங்களே ஹேண்டில் பண்ணியிருக்கலாமே. என்ன ஏதுக்கு வர சொன்னீங்க அது சொல்லுங்க ஃபர்ஸ்ட்” என்றான் அவர் சொன்ன கேஸ் டீடைலை கேட்டு கடுப்புடன்.
“இல்ல சார் இது நம்ம ஏரியாவுல நடக்குற மூணாவது சம்பவம் அதான் சார் எனக்கு டவுட்டா இருக்கு”
“ ஓ நீங்க சொன்னத பாத்தா கேஸ் வேற மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏன் டவுட் வந்துச்சி அத சொல்லுங்க”
“இல்ல சார் செத்து போனவங்க எல்லாமே கேக்குறதுக்கு பெருசா ஆள் இல்லாதவங்க அதோட அவங்க ரிலேஷன் கிட்ட கேட்டா ஒன் லேக், டு லேக்ஸ் அமௌன்ட் எடுத்தாங்கன்னு சொல்றாங்க. ஆனா அந்த ஏஜென்சி போய் கேட்டா அவங்க பேர்ல எல்லாம் 5 லேக்ஸ் அமௌன்ட் இருக்கு. அதோட எப்.டி (fixed deposit) அமௌன்ட் அதுவும் அவங்க பேமிலிக்கு போய் சேரல. இத பத்தி கேட்டா அந்த ஏஜென்சி அவங்க கொடுத்த பணத்துக்கு பதிலா எடுத்துட்டாங்கன்னு சொல்றாங்க. இது எல்லாம் தான் சார் எனக்கு டவுட் டா இருக்கு” என்றான் சுப்புராஜ்.
“சுப்பு நீங்க சொல்றத பாத்தா இது ஏதோ பெரிய ஸ்கீம் மாதிரி தெரியுது. நம்ம விசாரிப்போம்”என்றவன் ஏதோ யோசனையுடன், “ஆமா அந்த ஏஜென்சி பெயர் என்ன?” என்றான் திரு.
“அது சார் அது பேரு ஏதோ முருகன் பேர் தான் வரும். ஆங்.. கந்தன் ஏஜென்சி சார்”
“இந்தப் பாட்டி இறந்ததுக்கும் அந்த ஏஜென்சில உள்ள ஆள் தானே காரணம்”
“ஆமா சார் அங்க உள்ள ஆள் தான் காரணம்”
“ஓ.. மார்னிங் ஒரு பத்து மணி போல அந்த ஏஜென்சி போய் விசாரிப்போம். இப்ப நான் ஸ்டேஷன் போறேன். இங்க நீங்க பாத்துக்கோங்க சுப்பு” என்று சொல்லி தனது வாகனத்தில் ஸ்டேஷன் நோக்கி சென்றான் திருகுமரன்.
இது ஏதோ சிறிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த திருவுக்கு தெரியவில்லை இதனால் தனது உயிரானவளை கூட இழக்கும் நிலை வரும் என்று…..
error: Content is protected !!