Skip to content
Post Views: 7,255
மெதுவாகவே தன்னுடைய டி.வி.எஸ்சை ஓட்டிக்கொண்டிருந்தார் பழனிசாமி, கணவனனின் பின்னில் அமர்ந்திருந்த செல்லியம்மா சேலை தலைப்பால் விழிகளைத் துடைத்துக்கொண்டே இருந்தார், இருவருக்கும் இடையில் பேச்சுக்களே இல்லை.
Advertisement
பழஞ்சநல்லூரிலிருந்து காட்டுமன்னார்குடி வெறும் பத்து நிமிடம் எப்படி ஆமை வேகத்தில் போனாலும் அரைமணி நேரம் வீட்டை அடைந்துவிட்டனர், கதவைத் திறந்த செல்லியம்மா அப்படியே வாயிலில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
Advertisement
Advertisement
இன்னும் அழுகை நிற்கவில்லை உள்ளே சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார் பழனிசாமி “என்ன செல்லி எதுக்கு இப்போ இப்படி அழுக்குற இப்போ என்னாச்சி” என்றார் மனைவியின் அருகில் அமர்ந்துகொண்டு.
Advertisement
“நாம செஞ்சது தப்பாங்க… கட்டிக்குடுக்குற எல்லா பொண்ணுங்களுக்கும் இதையேதானே காலம் காலமா சொல்லி அனுப்புறாங்க, போற வீட்ல என்னவானாலும் அடங்கிப் போகணும் வாய் பேசக் கூடாது, மாமியார் மாமனாரை மதிக்கணும் அவங்க எதுவும் பேசினாலும் கேட்டுக்கணும்”.
“ஏன் எங்க அம்மாலாம் புருஷன் ரெண்டு அடிச்சாலும் வாங்கிக்கோ எதிர்த்துப் பேசக்கூடாதுன்னு சொன்னாங்க, அதோடவா விட்டாங்க மாமியார் உன்னை என்ன செஞ்சாலும் உன் புருஷன்கிட்ட சொல்லக் கூடாது குடும்பத்தைப் பிரிச்சுடாதான்னு எல்லாம் சொல்லி அனுப்புனாங்க”.
“அதேயேதான் நான் என் பிள்ளைகளுக்கும் சொல்லி அனுப்புனேன் கல்யாணம் செஞ்சிட்டு போன பொண்ணுங்க அங்க ஏதாவது துடுக்குத்தனமா செஞ்சிட்டா இந்த ஊர் வாயை மூட முடியுமா, இவங்க இடைலதானே வாழுறோம் பொட்டப்பிள்ளையை ஒழுங்கா வளக்க தெரியலன்னு நம்மள வாழவே விடமாட்டாங்க”.
“ரெண்டு பேர ஒரே வீட்டில குடுத்திருக்கோம் ஒருத்தி பண்றது இன்னொருத்தி வாழ்க்கையை பாதிக்கும் பொம்பளையா பிறந்துட்டா எல்லாருக்கும் அடிபணிஞ்சு போற வாழ்க்கைதானே இதுல நான் என்னத்த மாத்த”.
“நீ உன் புகுந்த வீட்டில எப்படி வேணா பேசு நடந்துக்கோ எவ கேள்வி கேப்பா, கேட்டானா பொட்டியை கட்டிட்டு வந்திடுன்னு சொல்லனுமா… சொல்லிட்டா பொண்ணுங்க வாழ்ந்திடுமா? கட்டிக்கிட்டவன் பொண்ணுக்கு துணையா நிக்கலைனா அவளால அந்த வீட்டில வாழமுடியுமா”.
“வாயைத் துறந்து யாரையாவது பேசிட்டு அங்க இருந்திடமுடியுமா அவங்களால, வாழாவெட்டியா போன மாதிரியே திரும்ப வரவேண்டியதுதான் பொம்பளையா பொறந்தாலும் எல்லார்கிட்டயும் ஏச்சு வாங்கணும் பொம்பளை பிள்ளைகளைப் பெத்திட்டாலும் எல்லார்கிட்டயும் ஏச்சு வாங்கணும்” என்று கண்ணீர் சிந்தினார்.
அவருக்கு ஆறவேயில்லை மருமகன் நல்ல பெற்றோராக நடந்துகொள்ளவில்லை என்று சொல்லியது, இவர் என்னமோ புதிதாக யோசிக்கிறார் எல்லோரும் அப்படியா இருக்கிறார்கள் ஏன் இவருடைய அண்ணனே அப்படி இல்லையே இதே கனகத்தின் இடத்தல் செவ்வந்தி இருந்திருந்தால் இப்பொழுது அவளின் நிலை என்ன இனி அந்த வீட்டில் அவள் வாழ முடியுமா என்றுதான் அவர் சிந்தனை.
“அங்கதான் நீ மாப்பிளையை தப்பா புரிஞ்சிகிட்ட” என்றார் பழனிசாமி.
“என்ன” என்று பார்த்தார் மனைவி.
அவர் அந்த அர்த்தத்துல சொல்லல இவ்ளோ வருஷம் வளர்த்த உங்களுக்கு உங்க பொண்ணை பத்தி தெரியாதான்னு கேக்குறார், அவகிட்ட தப்பே இருந்தாலும் அந்த இடத்துல அவகிட்ட நாம ஒருவார்த்தை ஆறுதலா பேசியிருக்கணும்னு சொல்லறாரு”.
“மாப்பிள்ளைன்னு எனக்கு இவ்ளோ மரியாதையும் என் மேல இவ்ளோ நம்பிக்கையும் வெக்குற நீங்க ஏன் உங்க பொண்ணு மேல அதை வைக்கலன்னு கேக்குறாரு, கிறுக்கச்சி இப்போவும் அவர் நம்ம பெண்ணுக்காக நம்மகிட்ட சண்டைக்கு நிக்குறாருடி”.
“பொண்டாட்டியை இப்படி தாங்குற மாப்பிளை கிடச்சத நினச்சு சாமிக்கு நன்றி சொல்லவியா உக்காந்து ஒப்பாரி வெக்குறா போ இன்னைக்கு விட்டுரு நாளைக்கு காலைலே பிள்ளைக்குப் போனைப்போட்டு நல்லதா நாலு வார்த்தை பேசு” என்க.
செல்லியம்மா முகம் கொஞ்சம் தெளிந்தது “ஆமாங்க அவர் பேசினதிலயே நின்னுட்டேன் இப்போவே பேசவா அவகிட்ட” என்க.
“வேண்டாம் இப்போ தொந்தரவு செய்யாத இன்னைக்கு விட்று நாளைக்கு பேசலாம் அப்புறம் நாலு நாளைக்கு அந்தப் பக்கமே போக வேண்டாம்” என்றும் சொல்லிக்கொண்டவர் “நான் கடைக்குப் போய்ட்டுவரேன் கண்டதையும் யோசிக்காத” என்று சொல்லிச்சென்றார்.
“என்ன மாப்ள” என்று தம்பதியர் தயங்கி நிற்கக் கனகம் கணவனை முறைத்தாள் என் அப்பா அம்மாவை என்ன கேட்கப் போகிறாய் என்று.
“ஒண்ணுமில்ல மாமா உக்காருங்க” என்றான் இருவரையும், அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி அவனும் அமர்ந்துகொண்டான்.
“ஏன் உங்க மகக்கூட ரெண்டு நாளா பேசல” என்றான் அவர்களை நேரே பார்த்து.
“அது மாப்ள…” என்று பழனிசாமி தடுமாற.
“அவளுக்கு வாய்துடுக்கு, தேவையில்லாம இவ்ளோ பிரச்சனையும் இப்போ வந்திருக்காது இவ கொஞ்சம் வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்கலாம்ல, நீங்க என்னதான் உங்களுக்கும் சம்மந்தியம்மாவுக்கும் பிரச்சனைன்னு சொன்னாலும் அவங்களுக்கு உங்கமேல கோவம் இல்லை மாப்ள”.
“இவதான் இடைல ஏதோ பேசிட்டா அந்தக் கோபம்தான் அவங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் கேக்குறதில்ல வாயை அடக்குறாளா” என்றார் செல்லியம்மா, அதுதான் என்பதாகப் பழனிசாமியும் அமைதியாகவே இருந்தார்.
“அப்போ எனக்கும் எங்க அம்மாவுக்கும் தான் பிரச்சனைன்னு நான் சொன்னதை நீங்க நம்பள, உங்கள பொறுத்தவரைக்கும் நான் தப்பு பண்ணியிருக்கமாட்டேன் உங்க பொண்ணுதான் பண்ணியிருப்பா எவ்ளோ நம்பிக்கை என்மேல” என்றவன் குரலில் என்னமுயன்றும் சிறிய வேதனை.
“எனக்காக என் பொண்டாட்டி எங்கயும் பேசக்கூடாதுன்னு சொல்றீங்களா அத்த” என்றான்.
“அது அப்படியில்ல மாப்ள… அங்க அவ பேசியிருக்க வேண்டாம்” என்க.
“அவளால பேசாம இருக்க முடியாது அத்த ஏன்னா அவ கோவப்பட்டது எனக்காக இல்லை அவ அப்பாவுக்காக” என்க, தம்பதியர் இருவரும் அதிர்ந்து பார்த்தனர் அவனை.
“அவ முன்னாடியே அவ அப்பாவைப் பத்தி ஒரு பேச்சு அதை அவளால தாங்கிக்க முடியல, எனக்கு என் பெத்தவங்க மரியாதை எப்படி முக்கியம்னு நான் நினைக்குறேனோ அதே மாதிரி உங்க மரியாதையை நினச்சு கவலைப்படவும் கேள்வி கேட்கவும் அவளுக்கு உரிமை இருக்கு”.
“அதைத்தான் அங்க அவ செஞ்சா, சிலது எனக்குப் பிடிக்கல கோவம் வந்தது என் கோபத்தையும் ஆதங்கத்தையும் அவ கிட்ட காட்டிட்டேன் சொல்லிட்டேன் முடிஞ்சிடுச்சு, அதுக்காக அவ பேசின எல்லாமே தப்புனு அவளைத் தள்ளி வைக்க என்னால முடியாது, அவ கேட்டது சரி அவளோட கோபமும் சரி ஆனா அதைக் கட்டின விதம் தப்பு அவ்ளோதான்”.
“அவ எனக்காகப் பேசியிருந்தாலும் உங்களுக்காகப் பேசியிருந்தாலும் உங்களுக்கு அவளோட நியாயங்கள் புரிஞ்சிருக்கணும், இத்தனை வர்ஷம் வளர்த்த உங்களுக்கே புரியல்னா வேற யாரு புரிஞ்சுப்பாங்கன்னு நீங்க எதிர் பார்க்கறீங்க நானா…” என்றான் அவன்.
“என்னை எவ்ளோ நாளா தெரியும் அவளுக்கு இல்லை அவளைப்பத்தி என்னதான் தெரியும் எனக்கு, பரஸ்பர புரிதலோடு கடந்துபோற காலம்தான் நாங்க வாழ்ந்துட்டோமா”.
“இல்லை ஒரு சராசரி ஆணா என் அம்மா என்னவேனா பேசுவாங்க நீயாருடி இடைல பேசன்னு அவளை ஒரு அரை விட்டுக் கன்னத்தைப் பழுக்க வெச்சிருந்தா உங்களுக்கு நிம்மதியா இருந்திருக்குமா? வாயை அடக்கல அதான் புருஷன்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டான்னு பெருமை படுவீங்களா”.
“நேத்து நானும் என் அம்மாவும் சொன்னது மட்டும்தான் உங்களுக்குத் தெரிஞ்சது, உங்க மககிட்ட என்ன நடந்ததுன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா அத்த, சரி… உங்க சின்னப் பொண்ணுமேலதான கோபம் அண்ணி இருந்தாங்களே அவங்ககிட்ட கேட்டிங்களா உண்மையா என்னதான் நடந்ததுன்னு”.
“நாங்க சொன்னதை மட்டுமே நம்பி எப்படி போனீங்க மாமா” என்றான்.
இப்பொழுதுதான் பழனிச்சாமி மகளை திரும்பிப் பார்த்தார் அவள் நிமிரவேயில்லை இறுகிப்போய் நின்றிருந்தாள்.
“நீங்க எதுவும் கேட்டிருக்கக்கூட வேண்டாம் அத்த அவளை திட்டிட்டே கூட அவ பக்கத்துல போய் அந்த கையை பிடிச்சு ஆறுதலா நின்னுருந்தாகூட போதும், நேத்து முழுசும் அவ பட்ட வேதனை கொஞ்சம் குறைஞ்சிருக்கும்”.
“காலைல எங்க அம்மாவுக்காக அவளை திட்டி சண்டைபோட்டு போனேன், நான் உங்க மகளை என் அம்மாவுக்காக திட்டினேன் அப்படிப்பட்ட என்னை நீங்க எந்த கேள்வியும் கேக்கல, உங்களுக்காக எங்ககிட்ட நியாயம் கேட்ட அவளை கேள்வி கேக்குறீங்க திட்டுறீங்க தள்ளி வைக்குறீங்க”.
“நீங்க செஞ்சது தப்பு… என் பொண்டாட்டி உங்கள மன்னிச்சாத்தான் நான் இனிமே அந்த வீட்டுக்கு வருவேன் என் பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை” என்றான் மிதப்பாக.
செல்லியம்மா அவனை அதிர்ந்து பார்த்தவர், மகளை நோக்கி போக “அத்த ஒருநிமிஷம்” என்றான் அவன்.
“இன்னும் என்னடா” என்றுதான் கணவனை பார்த்தாள் அவள்.
“நான் இப்போ இவ்ளோ பேசினதுக்காக நீங்க அவகிட்ட பேசினா என் பொண்டாட்டிக்கு அது கவுரவ குறைச்சல் நீங்க வீட்டில போய் நல்லா யோசிச்சு நாலு நாளுக்கு அப்பறம் வரதுன்னா வாங்க” என்றவன் “நாலு நாளைக்கு யாரையும் வீட்டுக்குள்ளவே விடக்கூடாது” என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டான்.
பழனிசாமிக்கு புரிந்துவிட்டது மருமகனின் மனநிலை “கனகம் மனுசுல ஒன்னும் வெச்சுக்காத நாங்க அப்பறமா வரோம் நீ மாப்பிளையை கவனி” என்று சொல்லி மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அவர்கள் புறப்பட்டதும் வாயிற்கதவின் ஒரு பக்கத்தை தாழிட்டவன் மறுபக்கத்தை கொஞ்சம் அடைத்துவைத்தான் கனகத்தின் விழிகள் அவனையே வட்டமிட்டது, ஒரு இலையை மட்டும் எடுத்தவன் உணவை அதில் எடுத்துவைத்தான்.
அதற்குள் கனகம் அவன் அவள் அருகில் வந்து இன்னொரு இலையை எடுக்க அவள் கைப்பிடித்துத் தடுத்தவன் “இது போதும்” என்றதோடு அவளை அருகில் பிடித்து அமர்த்திக்கொண்டு “ஊட்டிவிடு” என்றான்.
அவள் என்னவென்று விழிக்க “பசிக்குதுடி காலைல எழுந்தது, நேத்தும் ராத்திரி மட்டும்தான் சாப்பிட்டேன்” என்றான் பாவமாக, அதற்குமேல் தாமதிக்காமல் அவனுக்கு ஊட்டத் தொடங்கினாள், ஒருவாய் வாங்கிக்கொண்டவன் அடுத்ததை அவள் பக்கமே திருப்பினான்.
“ஒண்ணு எனக்கு ஒண்ணு உனக்கு” என்று கணக்கு வேறு, அவளிலிருந்து விழிகளை அகற்றாமல் அவன் உண்டுகொண்டிருக்க கணவனின் வயிற்றை நிறைக்க அவளும் கணக்கு இல்லாமல் கொடுத்துக்கொண்டிருந்தாள் இருவருமாக அதிகமாகவே உண்டிருந்தனர்.
“போதும்” என்றான் கணவன், கைக்கழுகி வந்தவள் அனைத்தையும் ஒதுக்கி வைத்தாள், பெரிய பாத்திரங்களைக் கொஞ்சம் தண்ணீரில் கழுகி கதவின் அருகில் வைத்தான் ராஜகுமாரன் கடையில் கொண்டுசென்று கொடுக்கவேணுமே.
கனகம் விளக்கில் எண்ணெய் சரிபார்த்து ஊற்றிவிட்டு வந்தாள் “ஏன் அப்படி பேசுனீங்க அவங்க வருத்தப்படுவாங்க” என்றாள் ஆதங்கமாக.
அவளைப் பிடித்துச் சுவற்றின் ஓரம் அமர்த்தியவன் அவள் மடியில் படுத்துக்கொண்டான் “என்ன சொன்னேன் அவங்க உன்கிட்ட பேசல தானே அதான் கேட்டேன்” என்றான்.
“நீங்களும்தான் என்னய திட்டுனீங்க”.
“ஆமாம் திட்டினேன் இனிமேலும் அப்படி பேசினா திட்டுவேன், மத்தவங்க நம்மகிட்ட எப்படினு தெரியல ஆனா நான் எப்போவும் எல்லாருக்குமான மரியாதையை குடுப்பேன், கோபம் இருந்தாலும் அவங்க வயசுக்குனு ஒரு மரியாதை இருக்கு அவங்க தப்பா இருந்திட்டு போகட்டும் நாம சரியா இருப்போம்”.
“அதுல ஒன்னும் தப்பில்லையே அதுக்காக எல்லா இடத்திலேயும் அடங்கி ஒடுங்கி போகணும்னு அவசியம் இல்ல, சொல்லவேண்டியதை சரியான முறைல கூடச் சொல்லலாம் இது என்னோட தனிப்பட்ட கொள்கை உன்னால முடிஞ்சா நீயும் பாலோ பண்ணு இல்ல விட்டுடு, எப்போவும் போல நானே எல்லா பக்கமும் அடிவாங்கிக்குறேன்” என்றான் புன்னகையோடு.
அவள் கையை எடுத்துத் தன் தலையில் வைத்தவன் அவளை ஏறிட்டு பார்த்தான், மெல்ல அவள் விரல்கள் அவன் சிகைக்குள் ஊடுருவியது.
“உங்களுக்கு எப்படி இப்படி சுருட்டை முடி, அத்த மாமாக்கு இல்லையே” என்றாள் அவள்.
“ஹ்ம்ம்… என் பாட்டிக்குச் சுருட்டை முடி” என்றான்.
அவள் விரல்கள் தயங்கி தயங்கி அவன் நெற்றியை வருடி மூடியிருந்த விழிகளையும் வருடியது “ஒய் பொண்டாட்டி என்ன சைட் அடிக்கிறியா” என்றான் சட்டென்று விழிகளைத் திறந்துகொண்டு.
வெட்க புன்னகை சிந்தியவள் “இல்ல அன்னைக்கு பஸ்ல இந்தக் கண்ணைமட்டும் தான் பார்த்தேன், அப்புறம் இந்த ஸ்ப்ரிங்ல கொஞ்சம் வெளில எட்டி பாத்துச்சு” என்றாள்.
“அடிங்க என் முடி உனக்கு ஸ்பிரிங்கா” என்றவன் அவள் இடையில் கிள்ளி வைத்தான்.
“ஐயோ…” என்றவள் துள்ள “ஆடாத” என்றவன் “ஆனா நான் பார்த்தேன் இந்த முகத்தை முழுசா, அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் இந்த இடுப்புகூட” என்று மீண்டும் கிள்ளினான்.
“என்ன செய்றீங்க வலிக்குது” என்றாள் அவள்.
“நைட் ஒத்தடம் குடுக்குறேன்” என்றவன் “என்னய கட்டிக்க உனக்கு இஷ்டம் இல்லதான” என்றான் அவள் விரல்களோடு விரல் கோர்த்து.
“அப்படியில்ல என்னமோ ஒரு பயம் இருந்துச்சு, உண்மையாவே வேலை இருக்கா இல்ல திருட்டுதான் உங்க வேலையான்னு” என்றாள்.
“அப்புறம் ஏன் ஒத்துக்கிட்ட”.
“இதை நான் யார்கிட்ட சொல்லுவேன் அன்னைக்கு நீங்கச் சொன்ன மாதிரி யாரும் நம்ப கூட மாட்டாங்க, அதோட அக்காவுக்குச் சம்மந்தம் எதுவும் கூடிவரல இது உண்மையா இல்லையான்னு கூட எனக்குத் தெரியல, உங்க கண்ணை மட்டும்தான் பார்த்தேன் அது நீங்காதானான்னு கூட என்னால உறுதியா சொல்ல முடியல, ஏகப்பட்ட குழப்பம் அதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடுச்சு” என்றாள்.
“நாம தனியா வந்தது உனக்கு வருத்தமா” என்று கேட்டான்.
“எனக்குத் தெரியல” என்றாள் கனகம், உண்மைக்குமே அவளுக்குத் தெரியவில்லை.
“அக்காவை நினைச்சாதான் கவலையா இருக்கு” என்றவள் தயங்கி “நான் ஒண்ணு கேட்கட்டுமா” என்க.
“ஹ்ம்ம்” என்றான்.
“மாமா ஏன் இப்படி… அக்காவை அவர் ரொம்ப… இதை யார்கிட்ட சொல்லன்னு கூடத் தெரியல, அக்கா எப்போவும் எதையும் சொல்லாது வீட்டில, அப்படியே சொன்னாலும் இதெல்லாம் சாதாரணம் அப்படித்தான் இருக்கும் பொறுத்து போன்னுதானே சொல்லுவாங்க” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றவன் “இதையெல்லாம் நாம அவன்கிட்ட பேச முடியாது கனகம், இது அவங்க அந்தரங்கம் அப்படியே ஒரு ஆதங்கத்துல நாம பேசினாலும் அதை அவன் அவமானமா உணருவான், இதையெல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டாங்கன்னு அண்ணிமேலேயும் கோபம் வரும் கணவன் மனைவிக்குள்ள விருப்பு வெறுப்பை அவங்கதான் பேசித் தீர்க்கணும் பாக்கலாம் இல்லனா யோசிக்கலாம்” என்றான்.
அவளும் அமைதியாகிவிட்டாள் அவள் மடியிலிருந்து தள்ளிப் படுத்தவன் அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான்.
“அச்சூ என்ன பண்றீங்க” என்றாள் கனகம்.
“ஒண்ணுமே பன்னலடி அப்படியே கொஞ்சம் நேரம் படு” என்றவன் சில நொடிகளில் உறங்கிவிட்டான், அவனையே பார்த்திருந்தவள் சிறிது நேரத்தில் அவளும் உறங்கிப்போனாள், செல்வத்தின் அழைப்பே அவர்களை எழுப்பியது.
“மாப்ள சாப்பிட வாங்க எல்லாம் ரெடி” என்றான் அவன் இருவரும் கிளப்பி சென்று உணவருந்தி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
“டேய் நாங்க மீன்சுருட்டி வரைக்கும் போயிட்டு வரோம் கொஞ்சமாவது இப்போ தேவைக்குப் பொருள் வேணுமே, ராத்திரி வெளில பாத்துக்குறோம்” என்றான் ராஜா.
“சரிடா” என்றான் செந்தில்.
அங்கிருந்தே கணவனும் மனைவியும் பொருட்கள் வாங்க சென்றனர் பாய், தலகானி போர்வை அதோடு மளிகை பொருட்கள் கொஞ்சம், மீனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டுமா கனகத்தின் கைகள் சட் சட்டென்று தேவையான பொருட்களை அளவு பார்த்து எடுத்துக்கொண்டது.
அதற்க்கு தக்க சின்ன சின்ன டப்பிகளையும் வாங்கிக்கொண்டாள், இரவுணவை முடித்துவிட்டு அனைத்தையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டனர், வந்து சேரவே நேரம் பத்தை நெருங்கிக்கொண்டிருந்ததது.
அவளானால் அப்படியே அடுப்படியில் எதை எதை எடுத்து வைப்பது என்று பொருட்களைப் பிரித்துக்கொண்டிருந்தாள், முன்வாசலை அடைத்துத் தாழிட்டவன் பாயை விரித்துவிட்டு அப்படியே பின்வாசலையும் அடைத்து அடுப்படி விளக்கை அணைத்துவிட்டு அவள் இடையோடு கைக்கொடுத்துத் தூக்கிக்கொண்டான்.
“என்னங்க விடுங்க நாளைக்கு உங்களுக்கு ஆபீஸ் போனுமே என்ன சமைக்க தெரியல எடுத்துவைக்கணும்” என்று சொல்லிக்கொண்டிருக்க.
“எப்போப்பாத்தாலும் சமையல் தானாடி உனக்கு நீ சமைக்கவே வேண்டாம்” என்றவன் அவளோடு பாயில் சரிந்தான்.
“நாளைக்கு நீங்க என்ன கொண்டு…” என்றவள் வார்த்தைகள் அதோடு அவன் இதழுக்குள் சென்று மறைந்தது, நாளை என்ற நினைவே இல்லாமல் அந்த நொடி அவனுள் புதைந்துகொண்டிருந்தாள் கனகாம்பரம்.
காலை முதலில் விழித்துக்கொண்டது அவனே அலைபேசியை தேடியெடுத்து நேரம் பார்க்க அது எட்டை நெருங்கியது, அவன் முகத்தில் கள்ளப்புன்னகை தன்னை கட்டிக்கொண்டு அயர்வாய் உறங்கும் மனைவியைப் பார்த்தான்.
அவளை மெல்ல விலக்கிவிட்டு வேகமாகச் சென்று குளித்துத் தயாராகிவந்தவன் அதன் பிறகே அவளை எழுப்பினான் “ஹ்ம்ம்…” என்று திரும்பிப் படுத்தாள்.
“ஒய் சண்டைக்கோழி எனக்குப் பசிக்குது சாப்பாடு எங்க ஆபிஸ் போகணும்” என்றதும் அடித்துபிடித்து எழுந்தமர்ந்தாள், அவன் கிளம்பி நிற்க அவனை அதிர்வாய் பார்த்தாள்.
அவள் அருகில் அமர்ந்து கன்னத்தை வருடியவன் “நான் போய்ப் பாலும் சாப்பாடும் வாங்கிட்டுவரேன் நீ குளி” என்றுவிட்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவன் வருவதற்குள் வேகமாகக் குளித்துவிட்டு வந்தாள் கனகம், உணவு வாங்கிவந்தவன் அதை அப்படியே வைத்துவிட்டு மனைவியை இடையோடு சேர்த்தணைத்து கழுத்துவளைவில் முகம் புதைத்து அவள் வாசத்தை உள் வாங்கினான்.
எப்பொழுதும்போலக் கஸ்தூரிமஞ்சள் வாசம்… அவன் அணைப்பின் இறுக்கம் கூடியது “ஸ்ஸ்” என்றாள் கனகம் வலியில், மெல்ல அவளை விலக்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “வாச்சாப்பிடலாம்” என்றான்.
“நீங்கச் சாப்பிடுங்க நான் டீப்போட்டுட்டு வரேன்” என்றவள் வேகமாகத் தேநீர் வைத்து இருவருக்கும் கொண்டுவந்தாள்.
“நான் கேன்டீன்ல பாத்துக்குறேன் நீ பொறுமையா ஏதாவது செஞ்சுக்கோ ரெஸ்ட் எடு” என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே, நிமிர்ந்து பார்க்கவில்லையே அவனை.
“பாக்கமாட்டற இரு இன்னைக்கு ராத்திரி இருக்கு உனக்கு” என்றவன் ஆயிரம் பாத்திரம் சொல்லி வேலைக்குக் கிளம்பினான்.
error: Content is protected !!