Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -14

ராஜகுமாரன் சென்றபிறகு நேரே அடுப்படி சென்றுவிட்டாள் கனகம் அனைத்தையும் பிரித்துக் கொட்டி எடுத்துவைக்கவே இன்றையபொழுது போய்விடுமே,  அங்கேயே கால் நீட்டி அமர்ந்துவிட்டாள் சில நொடிகள்.

 

 



Advertisement

மிக்ஸி மட்டுமே தற்போது வாங்கியிருந்தனர் பிரிட்ஜ் ஒன்றும் வாங்கவில்லை மாவு அரைப்பதானால் ஒரு நாளைக்கு மட்டுமே அரைக்க வேண்டும்,  எப்படியும் வேண்டுமே முதலில் அரிசி உழுந்தை ஊற போட்டுவிட்டாள்.

 

Advertisement

 

Advertisement

வாங்கிவந்த டப்பிகளை கழுகி காயவைத்துவிட்டு அமர்ந்திருக்க “கனகம்…” என்ற அழையோடு வந்துவிட்டார் யசோதா மருமகளோடு.

 

Advertisement

 

 

“வாங்கம்மா” என்றாள் கனகம்.

 

 

“காலைல சாப்டீங்களா” என்றார் அவர்.

 

 

“ஹ்ம்ம்… இன்னைக்கு எதுவும் சமைக்கல அவர் வாங்கிட்டு வந்தார்” என்றாள் அதற்குள் பெண்ணிற்கு கன்னங்கள் துடுத்தது, மருமகளும் மாமியாரும் சிரித்துக்கொண்டனர்.

 

 

“அதுக்கென்ன கொஞ்ச நாள் அப்படி இப்படி தான் இருக்கும்” என்றவர் “சரோ என்ன வேடிக்கை பாக்குறவ கொண்டுபோய் உள்ள வை” என்றார் சரோஜாவின் கையில் ஒரு தூக்குவாலி.

 

 

“என்னமா இது” என்றாள் கனகம்.

 

 

“இன்னைக்கு நம்ம வீட்டில கறிக்குழம்பு உங்களுக்கும் இருக்கு மதியத்துக்கு எதுவும் செய்யாத சாதம் மட்டும் வெச்சுக்கோ, ராத்திரிக்கு பிள்ளைக்கும் குடு” என்றார்.

 

 

என்ன சொல்ல என்றே அவளுக்குத் தெரியவில்லை நன்றி சொல்லி அவரைத் தள்ளி வைக்க விரும்பாமல் “சரிம்மா” என்று புன்னகைத்துக்கொண்டாள்.

 

 

“நீ போய்ச் சாதத்துக்கு வெச்சிட்டுவா நாம வேலையைப் பாக்கலாம்” என்றார், அவள் உலைக்கு வைத்துவிட்டு மூன்று காப்பியை போட்டுக்கொண்டு வந்து அவர்களுக்கும் கொடுத்தாள் மூன்று  பெண்களுமாகச் சேர்ந்து பொருட்களை அடுக்கி வைத்தனர் அப்படியே பேசிக்கொண்டிருக்க செந்தில் வந்துவிட்டான்.

 

 

 

“என்னம்மா எல்லாம் சரியா இருக்கா ஒன்னும் பிரச்னையில்லயே? எதுவும் வேணும்னா என்கிட்டே கேளு வாங்கிக்குடுக்குறேன் உன் புருஷன் வரவரைக்கும்லாம் காத்திருக்க வேண்டாம்” என்றான்.

 

 

“ஒன்னும் பிரச்சனையில்லன்னா, கண்டிப்பா சொல்றேன்” என்றாள் கனகம்.

 

 

“சரிம்மா” என்றவன் “மா சாப்பிட்டு ஜெயன்கொண்டம் போகணும் வாங்க” என்க.

 

 

“அதுக்குதானே ஒருத்தியை கட்டி வெச்சிருக்கேன் எதுக்குடா என்கிட்டயே கேக்குற, இந்தாடி போ உன் புருஷனை கவனி நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்” என்றார் அவர், தங்களுக்கு தனிமை கொடுக்கிறார் என்று தெரியும் அவர்களுக்கு.

 

 

அவர் எபோழுதும் அப்படித்தான் மதியம் வரை வீட்டிலிருப்பவர் மகன் உண்ண  வந்தால் உடனே ஏதாவது காரணம் சொல்லிப் பக்கத்து வீடு எதிர் வீடு என்று சென்றுவிடுவார்,  உண்டுமுடிந்து செந்தில் திரும்பிவரும்வரை கனகத்துக்கு உதவிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

 

 

 

“அம்மா என் கிட்ட போன் இல்ல இனிமேதான் வாங்கணும் உங்களுது குடுக்குறீங்களா அக்காகிட்ட பேசிட்டு தரேன்” என்றாள் கனகம்.

 

 

“அட அதுக்கு எதுக்கு இவ்ளோ விளக்கம்” என்றவர்  தன்னுடைய பட்டன் போனை எடுத்துக் கொடுத்தார், செவ்வந்திக்கு உடனே அழைத்துவிட்டாள் கனகம்.

 

 

தெரியாத எண் என்றதும் செவ்வந்தி எடுக்க யோசித்தாள் மீண்டும் மீண்டும் அழைப்பு  வர இதுஎன்ன என்று எடுத்துவிட்டாள், என்றாலும் அவள் பேசவில்லை அவர்களே பேசட்டும் என்றிருக்க “அக்கா ஏன் போனை எடுக்கமாட்டற” என்று இரைந்தாள் கனகாம்பரம்.

 

 

“ஏய் கனகம் நீயாடி நான் யாரோன்னு நினச்சு எடுக்கல, எப்படிடி இருக்க ஒன்னும் பிரச்னையில்லயே தம்பி உன்கிட்ட கோவப்பட்டாரா, சாப்டீங்களா…” என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

 

“அம்மா தாயே கொஞ்சம் என்னய பேசவிடு” என்ற கனகம் “நீ எப்படி இருக்க அதைச் சொல்லு முதல்ல, மாமா உன்னை எதுவும் சொன்னாரா அத்த… அவங்க எதுவும் திட்டினாங்களா”  என்றாள்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நேத்து அங்க வாரத்துக்குக் கேட்டேன் இவர் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாரு, என்னால வரமுடியல நீ தப்பா எடுத்துக்காத புள்ள” என்றாள்.

 

 

“ஐயோ அக்கா எனக்குத் தெரியாதா… அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்ல இங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது, வீடு நல்லா இருக்கு உன் மச்சினருக்கு எண் மேல கோவம்லாம் இல்ல நான் நல்லா இருக்கேன்,  நேத்து அம்மா அப்பா கூட வந்திருந்தாங்க போகும்போது சமாதானம் ஆயிட்டாங்க என்கிட்டே பேசிட்டுதான் போனாங்க” என்று நீளமாகச் சொல்லி முடித்தாள்.

 

 

“ரொம்ப சந்தோஷமா இருக்குடி நேத்து காலைல மாமா பால் காய்ச்ச போறதை பத்தி அத்தைகிட்ட கேட்டாங்க அவங்க ஒண்ணுமே பேசல, நான் போயிட்டு வரட்டுமான்னு மாமா கேட்டாங்க அது உங்க இஷ்டம்னு அத்தை சொல்லிட்டாங்க”.

 

 

“அங்கேயிருந்து வந்த அப்புறமும்  மாமா எதுமே சொல்லல ஏதோ யோசனையிலே இருந்தாங்க, அம்மாகூட எனக்கு இன்னும் கூப்பிடல நேத்து போன் போட்டேன் அவங்க எடுக்கல” என்றாள் வருத்தத்தோடு.

 

 

“இன்னைக்கு பேசுவாங்க” என்றாள் கனகம் சிரித்துக்கொண்டே.

 

 

“நீ சீக்கிரமா ஒரு போனை வாங்கு புள்ள” என்றாள் செவ்வந்தி.

 

 

“ஹ்ம்ம்… வாங்கனுக்கா” என்றவள் “உனக்கு அங்க நெறையா வேலையா கஷ்டமா இருக்கா… உடம்பு பரவாயில்லையா” என்றாள் கனகம்.

 

 

“ஹ்ம்ம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்ல, நீ இல்லாமதான் கஷ்டமா இருக்கு கனகம், நீ கூட இருந்தா அந்தப் பலமே வேற” என்றாள் செவ்வந்தி.

 

 

கனகத்திற்கு வருத்தமானது ஒருவருக்கொருவர் ஆறுதல் என்ற எண்ணத்தில்தான் ஒரே வீட்டிற்கு வந்தது இப்பொழுது தன்னால் தானோ எல்லாருக்கும் சங்கடம் என்ற எண்ணம் வராமலில்லை.

 

 

“சரியாயிடும்க்கா திரும்பி அங்கதானே வருவோம் இவரால அப்படிலாம் குடும்பத்தை விட்டு இருக்க முடியாது” என்றவள் “சரிக்கா பத்திரமா இரு போனை வாங்கிட்டு கூப்பிடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்

 

 

தன்னோடு அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த யசோதாவிடம் “இங்கேயே சாப்பிடுங்கம்மா” என்றாள் கனகம்.

 

 

“வேண்டாம் புள்ள… புருஷனுக்கு சாப்பாடு போட்டாலும் என் மருமவ சாப்பிட மாட்டா என்கூடதான் சாப்பிடுவா பாரு  இப்போ அந்தப் பய என்னைய கூப்பிட வருவான்” என்றார் அவர்.

 

 

சொன்னதுபோலவே செந்தில் வந்துவிட்டான் “அம்மா வா உன்னைய வீட்டில விட்டுட்டு போறேன்  அப்புறம் வெயில்ல அலைஞ்சுக்கிட்டு கிடப்ப” என்றான்.

 

 

“பாத்தியா…” என்று அவளைப் பார்த்துச் சிரித்தவர் “நீயும் சாப்பிடு” என்று சொல்லிக்கொண்டு சென்றார், அவர்களைப் பார்க்கவே அத்தனை நிறைவாய் இருந்தது மாமியார் மாமியாராக மட்டும் இல்லாமலும் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

காலை மகளுக்கு அழைக்க வேண்டும் என்று எண்ணிய செல்லியம்மாவுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது கனகத்திடம்  அலைபேசி இல்லை என்பது, தமக்கைகள் இருவருக்கும் சேர்த்து ஒரே அலைபேசிதானே அதுவும் இபோழுது செவ்வந்தியின் கையில் தானே இருக்கும் என்று யோசனை ஓடியது.

 

 

கணவனிடம் சொல்லவும் செய்தார் “சரிதான் மாப்ள நாலு நாளைக்கு கனகத்துக்கு போனும் வாங்கி கொடுக்கமாட்டார்” என்றவர் புன்னகையோடே கிளம்பி சென்றுவிட்டார்.

 

 

விடிந்தும் விடியாமலே மனைவியோடு வந்து நின்றிருந்தான் மாணிக்கம்,  வண்டி சத்தம் கேட்டு ராக்காயி வாசலுக்கு வரச் செவந்த்தியும் வந்து கதவின் பின்னில் நின்றுகொண்டாள்.

 

 

வாசலில் அமர்ந்திருந்த மாமனாரை பார்த்தவன் “என்ன மாமனாரே மவனையும் மருமவளயும் தனிக்குடித்தனம் அனுப்பிட்டு நிறைவா உக்காந்திருக்கீங்க போல” என்றான் வெளியிலே நின்றுகொண்டு.

 

 

“உள்ள வாங்க மாப்ள, ராஜி உள்ள வா” என்றார் ராக்காயி.

 

 

“உள்ள நுழைஞ்சிடுவாளா உங்க மவ வாசப்படியை மிதிச்சா இன்னைக்கு உன் விலா எலும்பை உருவிடுவேன்” என்றான் மனைவியிடம்.

 

 

அவள் வாசலுக்குக் கூட வரவில்லை தெருவிலே நின்றாள் கணவனைப் பயத்தோடு பார்த்துக்கொண்டு.

 

 

“மாமான்னு ஆசையா கூப்பிட்டு நல்லதா பேசுறவன் இந்த வீட்டிலேயே அவன் ஒருத்தன் தான் அவனையும் அனுப்பிட்டு இங்க என்ன கும்மி அடிக்கிறீங்களா, அவன் இல்லாத இந்த வீட்டுக்குள்ள மனுஷன் நுழைவானா”.

 

 

“என்னைக்கு என் மாப்ள வாசல்ல நின்னு வாய் நிறைய வாங்க மாமான்னு கூப்பிடுறானோ அன்னைக்குதான் இந்த வீட்டுக்குள்ள நான் வருவேன் அதுவரைக்கும் உங்க பொண்ணும் இதுக்குள்ள வரமாட்டா” என்றவன் மனைவியைத் திரும்பிப் பார்த்து “என்னடி” என்க.

 

 

“ஆமாங்க” என்றாள் அவள்.

 

 

“ஹ்ம்ம்… அப்புறம் தங்கச்சிங்க போட்டுட்டுவந்த நகை போலியான்னு கண்டுபிடிக்க உரசி பாக்க சொன்னாயில்ல உங்க பொண்ணு அதான் நானும் உரசி பாத்துடலாம்னு இருக்கேன்”.

 

 

“உங்க மகளுக்கு நீங்கக் குடுத்த நகை எல்லாத்தயும் படம் புடிச்சு போஸ்டர் அடிச்சு ஊருக்குள்ள ஓட்டப்போறேன், எல்லாம் நீங்கப் புதுசா வாங்கினதா இல்ல அடகு வெச்சவங்களை ஏமாத்தி எடுத்ததான்னு தெரியுனும்ல”.

 

 

“நகையைப் பறிகொடுத்தவன் சாபம் எனக்கு எதுக்கு, போட்டோவைப் பார்த்தா அவங்களுக்கு தெரிஞ்சிடுமே அவங்க நகை அதில இருக்கான்னு… எவனாவது ஒருத்தன் வந்து சொல்லட்டும் இது அவங்க நகைன்னு அன்னைக்கு இருக்கு உங்களுக்குக் கச்சேரி” என்றவனை அதிர்ந்து பார்த்தார் ராக்காயி.

 

 

கொடுத்த முப்பது  பவனில் பதிமூன்று பவனும் அடகுக்கு வந்த நகையே, மகள் விழிகளில் அப்பட்டமான பயம் அவள் கைகள் கூட நடுங்கிக்கொண்டிருந்தது.

 

 

“அதெல்லாம் வேண்டாம் மாப்ள” என்றார் குரலே எழும்பாமல் ராக்காயி.

 

 

“அப்போ…” என்றவன் விழிகள் அவரை அழுத்தமாகப் பார்க்க.

 

 

“அதுல அடகு வெச்ச நகையும் இருக்கு” என்றார் மெல்ல, செவ்வந்தி அதிர்ந்து போய்ப் பார்த்தாள் மாமியாரை.

 

 

“அப்படி வாங்க வழிக்கு” என்றவன் “நீங்க என்ன பண்றீங்க உங்க காசுல புதுசா நகை வாங்கி எனக்குக் குடுத்துட்டு இந்தப் பழைய நகை எல்லாத்தயும் வாங்கிக்கிறீங்க,  அதுவரைக்கும் உங்க பொண்ணு உங்களுக்குப் போன்  கூடப் பேசமாட்டா, என்னடி…” என்றான் மீண்டும் மனைவியைப் பார்த்து.

 

 

“ஹ்ம்ம் ஆமாங்க” என்றாள் மீண்டும் “அப்போ எல்லா விஷயமும் புரிஞ்சிடுச்சுல்ல” என்றவன் வண்டியை எடுக்கப் பரிதாபமாக அம்மாவைப் பார்த்துக்கொண்டே வண்டியில் ஏறினாள் ராஜலட்சுமி.

 

 

மாலை கணவன் வீட்டிற்கு வரும்முன் மாவை அரைத்து வைத்துவிட்டு வடைக்கு ஊற போட்டிருந்ததையும் அரைத்து வைத்துவிட்டு முகம் கழுகி தலை பின்னித் தலைநிறய மல்லிப்பூ சூடிக்கொண்டாள் கனகம், வாயிலிலே அவனுக்காகக் காத்திருக்க அவளின் மலர்ந்த முகமே அவனுக்கு அப்படியொரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

 

 

“அம்சமா நிக்குறீங்களே சண்டைக்கோழி” என்றவன் அவளை இடையோடு அனைத்துக்கொண்டே உள்ளே சென்றான், சில பல நிமிடங்களில் அவளைச் சிவக்கவைத்துவிட்டு குளிக்கச் சென்றான்.

 

 

இருவர் மட்டுமே அவர் உலகில் “நான் வீட்டில இருக்கும்போது என்கூட இரு” என்று அவளைத் தன்னோடு பிணைத்துக்கொள்வான், அவன் வேலைக்குச் செல்லும் நேரம் மட்டுமே அவளால் வேலைகள் செய்ய முடிந்தது.

 

 

 

அலைபேசி வாங்க வேண்டும் என்பதுகூட அவன் இல்லாத நேரம் மட்டுமே நினைவில் நிழலாடியது மொத்தமாக அவளைத் தன் நினைவிலே சுற்றவைத்தான் அந்தக் கள்வன்.

 

 

கறி விருந்து செலவெல்லாம் யோகனும் ராஜாவும் சேர்ந்தே செய்தனர், அண்ணனும் தம்பியும் பேசிக்கொள்வதால் பெரிதாக இழுபறி இல்லாமல் வேலைகள் நடந்தது.

 

 

பிரச்சனை நடந்த காரணத்தால் ராஜகுமாரன் வரமாட்டான் என்று அனைவரும் நினைத்திருக்க பட்டு வேட்டி அரக்கு நிற சட்டை அணிந்து அவனும் அதே நிறத்தில் பட்டுப் புடவை உடுத்தி அவளும் அம்சமான ஜோடியாக வந்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!