Skip to content
Post Views: 212
ஓம் நமச்சிவாய.
மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை.
Advertisement
அத்தியாயம் 01.
தை மாதம் அடை மழை பெய்தது. மழை அதன் அதிகபடியான கோபத்தை கண்ணீராக பூமித்தாயின் மீது பொழிந்தது.. நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி.. கொட்டும் அந்த மழை கூட அவனையோ அவனது மனதையோ குளிர்விக்கவில்லை.. அவனது மனதின் வெம்மை நீங்காமல் அப்படியே இருந்தது…
Advertisement
Advertisement
அவனோ பிரதான சாலையில் லிப்ட் கேட்பது போன்று மாறுவேடத்தில் நின்றிருந்தான்… ஆனால் அவன் யாரை எதிர்பார்த்து இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தானோ. அவர்களோ ஆடிக்காரில் போதையில் ஆடியபடி அரைமணி நேரம் கழித்து வந்தார்கள்..
அவனும் கை போட்டு நிறுத்த முயன்றான். ஆனால் முடியவில்லை. அந்த கார் சாலையில் அத்து மீறி கன்ரோல் இல்லாமல் சென்றது. இந்த கொட்டும் மழையில் எதிரில் வாகனம் வந்தால் விபத்து நடப்பது நிச்சயம் என புரிந்துகொண்டவன்.. அவனது நீண்ட நாள் ஓட்டபயிற்சி தற்போது கை கொடுத்தது..
Advertisement
காற்று மழையையும் தாண்டி மூச்சை பிடித்து வேகமாக ஓடி அந்த காரை திசை மாற்றி அருகில் இருந்த மரத்தில் மோதவைத்தான்..
டிரைவர் சீட்டில் இருந்தவன் ஸ்டெயரிங்கில் தலை சாய்த்து இரத்தம் சொட்ட மயங்கினான். அருகில் இருந்தவனுக்கு காயங்கள்.. பின்னால் இருந்தவனில் ஒருவனுக்கு அவன் ஓடி வந்தபோது மழையில் நனைந்ததால் அவனின் வேசம் கலைந்ததை பார்த்தவன்.. அவனை அடையாளம் கண்டு கொண்டு மறுபக்கம் இருந்த கதவை திறந்து இறங்கி ஓடப்பார்த்தான்.. ஏனென்றால் அவனிடம் மாட்டினால் அடுத்து என்ன நடக்கும் என அவன் பலமுறை செய்து காட்டி உள்ளான்… அதை நன்கு அறிந்து கொண்டும் அவனின் கையில் சிக்க இவன் முட்டாள் இல்லை என்று நிருபிப்பதற்காக ஓடினான்.. இவனோ ஓரே பாச்சலில் அவனை பிடித்துவிட்டான்..
” அடேய் தறுதலை நாய்களா உங்களை பிடிக்க சென்னை போலீஸ் வலை வீசி தேடல். அப்படினு நியூஸ் பேப்பர்ல வருதே. நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா?.. வழிபறி நாய்களா? உங்களை பிடிக்க என்னை டெல்லியில இருந்து அனுப்பியிருக்காங்களே. என்ன காமெடி.. என்கிட்ட உங்க பாட்ச்சா எதுவும் பலிக்காது. வாழ்ந்த தடம் தெரியாம உயிரோட புதைச்சிடுவேன். வாங்க என் கஸ்டடிக்கு உங்க அம்மாகிட்ட குடிச்ச பாலை கக்க வைக்கிறேன்.. இடியட்ஸ் பெலோ.. ” என்று கத்தினான்.. மழை சத்தத்தையும் தாண்டி கேட்டது அவனது கர்ஜனை..
அவனது கட்டளையால் சற்று தள்ளி நின்ற அவனது டீமிற்கு அவனது கர்ஜனை வெற்றியின் ஒலியாக கேட்டதோ. அவன் அழைக்காமலே அருகில் வந்தார்கள் மூவர்..
இன்ஸ்பெக்டர் மூர்த்தியை அருகில் அழைத்து ” ஆம்புலன்ஸ் ரெடியா..” என்றான்..
” எஸ் சார்..” என்றான் மூர்த்தி பவ்வியமாக..
” ம் தட்ஸ் குட்.. சீக்கிரம் அதுல இவங்களை ஏத்திவிட்டு ஜி எச் கொண்டு போங்க.. நீங்க பாலோவ் பண்ணிப்போங்க.. அவங்க கண் முழிச்சதும் வாக்குமூலம் வாங்க பாருங்க” என்றான் தோள் தட்டி..
அவனிடம் பிடிபட்ட குற்றவாளிகள் எவ்வாறு தப்பிக்கமுடியாதோ. தப்பிக்க நினைத்தால் எவ்வாறு அதற்கும் மேல் தண்டனை கொடுப்பானோ.. அதே போன்று வேலை செய்பவர்களை பாராட்டுவதே மரியாதை என்று நினைப்பவன்… அது அவனது அனுபவத்தில் கிடைத்த பாடம்..
” ஓகே சார்..” என்று கூறிவிட்டு. ” ஏன் இந்த ஆள் இங்க வந்தானோ தெரியலயே. இதோட திரும்ப போய்டுவானா? இல்ல இருப்பானான்னு தெரியலயே.. இங்க எத்தனை பேரை சுட்டு தள்ள போறானோ… இவன் இருக்குற வரை கை நீட்டி பணம் வாங்க முடியது.. தினமும் பணம் இல்லாம போனா அந்த காட்டேரி வேற நொய் நொய் னு கத்துவாளே. தொல்லைங்க இரண்டும்..” மனதில் மேலதிகாரியையும் மனைவியையும் தாளித்தபடி ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தான் இன்ஸ்பெக்டர் மூர்த்தி..
ஒரு மணி நேரத்தில் அந்த இடமே சுத்தமாகியது..
அவனிடம்” பத்து நாள் டைம் சென்னை டிரான்ஸ்பர் நீ போய் உன் சொந்த ஊரை சுத்தம் பண்ணு வாழ்த்துக்கள் மை பாய்.. ” என்று முதல் கேஸாக இந்த வழிபறி கூட்டத்தை பிடிக்கும் கேஸை கொடுத்து அனுப்பிவைத்தார் டெல்லி டி ஜி பி.
அவனும் அங்கிருந்தே அவனின் நம்பிக்கையான ஆட்களை வைத்து இந்த பத்து நாட்களில் அனைத்து தகவல்களையும் கையில் எடுத்துவிட்டான்..
இதோ நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை மீனாம்பாக்கம் விமானநிலைத்தில் ஒன்பது மணிக்கு இறங்கி வெளியே வந்து அங்கிருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் முதல் வேலையை முடிக்கும் வெறியோடு வந்து இதோ அவர்களை பிடித்து பாதி வேலையை முடித்துவிட்டான்…
அவனின் டிரான்ஸ்பர் அவன் சொல்லாமல் வெளியே தெரியவேண்டாம் தெரிந்தால் குற்றவாளி தப்பித்துவிடுவான் என கேட்டுக்கொண்டதால் அது யாருக்கும் தெரியாமல் போனது…
அங்கிருந்து அவனிற்கென ஒதுக்கியிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றான்..
டிரைவரிடம். ” நான் சென்னை வந்த விசயம் நம்ம நாளு பேரை தவிற வேற யாருக்கும் தெரியவேணாம் இதுக்கு பின்னுக்கு யார் இருக்கிறானு கண்டுபிடிக்கணும்..” என்று அவரிடம் எச்சரித்தான்..
அவரும் ” இனியாவது இந்த சென்னை பொண்ணுகள் நிம்மதியா கழுத்தில தாலி . நகை போட்டு போனா அதுக்கு ஆபத்து இல்லனு ஆகிடுச்சினா எனக்கு ரொம்ப சந்தோசம் ஸார்…” என்றார் அந்த பெரியவர்..
அவரை பார்த்து ” அதுக்குதானே வந்திருக்கேன் ஜமாச்சிடுவோம்..” என்று கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தான்..
அடை மழை தற்போது தூறலாக மாறியது சிலு சிலு வென வீசிய குளிர் காற்று அப்பொழுதான் அவனின் மனதை குளிர்வித்தது..
அடுத்து அவன் சென்னை வந்த மற்றுமொரு காரணமும் உள்ளது..
அந்த ஜீப் சீட்டில் தலை சாய்த்த படி
” நான் சொல்லுற இடத்துல நிப்பாட்டுங்க. நாளைக்கு உங்களுக்கு அழைக்கும் போது வந்தால் போதும்..” என்று கூறிவிட்டு தலைக்கு மேல் கைவைத்து சாய்ந்தான்..
அவனின் அந்த அமைதியான மனநிலை கெடுக்கும் படி அவனது கை பேசி அழைத்தது.. அதில் வந்த பெயரை பார்த்துவிட்டு அவனின் முகத்தில் சிறிய அளவு கீற்று புன்னகை வந்து அதே நொடியில் மறைந்தது..
அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்து
” ஹலோ அச்சுமா ஹவ் ஆர் யூ?..” என்றான்..
அந்த பக்கம் அர்ச்சனாவோ ” டேய் கண்ணா எப்படி பா இருக்கிற நீ.? அம்மா ரொம்ப நேரமாக கூப்புடுறேன் லைன் கிடைக்கல. இப்பதான் கிடைச்சிது.. நாளைக்கு மறக்காம வந்துடுவதானே கண்ணா?..” என்றார் மகன் வரவேண்டும் என்ற தவிப்புடன் இல்லை என்றால் யார் கணவனிடமும் நாத்தனாரிடமும் பேச்சுக்கேட்பது என்ற பயம் அந்த பேதை தாய்க்கு..
” ஐயோ அச்சுமா எனக்கு எதுவும் மறக்கல நான் கண்டிப்பா வந்துடுவேன். நீ இப்ப எதையும் போட்டு மனதை குழப்பாம தூங்கு அச்சுமா..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்..
அழைப்பு போகவில்லை எங்கு நாளை ஏதாவது வேலை என கூறி வராமல் விட்டுவிடுவானோ என்ற அவரது தவிப்பு மகனிடம் பேசியதும் தான் அடங்கியது..
” ஏய் யாரோட டி நான் தூங்கினதும் இந்த நேரத்துல கொஞ்சி பேசுற?.. ” என்று கத்தியபடி கைபேசியை வாங்கி பார்த்தார்.. அதில் மகனின் கைபேசி எண்ணை பார்த்ததும். மகனிடம் பேசியதை சந்தேகப்பட்டுவிட்டோமே என நினைத்தாலும். அதற்கு மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் அவர் ராதாகிருஸ்ணன் இல்லையே..
” ஏய் என்னவாம்? உன் பிள்ளை. நாளை விடிஞ்சதும் அவன் இங்க இருக்கணும்.. இல்ல உனக்குதான் பொங்கல் கிடைக்கும். அதனால உன் பிள்ளையை எப்படியாவது வர வை. அவன் வராம அந்த சபையில நான் நாளைக்கு தலை குனிஞ்சேன்னு வை நீயும் உன் பிள்ளையும் தொலைஞ்சிங்க..” என்று கத்தினார்..
சீட்டில் தலை சாய்த்தபடி அவனது தாய் அர்ச்சனாவை நினைத்தான். இந்த நேரம் அவனின் தாய் அவரது கணவனிடம் திட்டு வாங்குவார் என அவனுக்கு நன்கு தெரியும்..
அவன் சென்னை வந்ததும் இனி அதற்கு என்ன பண்ணவேண்டும் என தீர்மானித்துவிட்டான்..
மகாலிங்கம் சென்னையில் பிரபலமான பிசினஸ் மேன். அவரது காதல் மனைவி மகளை பெற்றுவிட்டு இறந்துபோனார்..
அதன் பின் லிங்கம் வேறு திருமணம் பண்ணாமல் மகள் தொழில் இவை இரண்டுமே உலகம் என வாழ்ந்தார்.. தொழிலில் காட்டும் கவனத்தை விட அதிக கவனம் மகளிடம் காட்டினார்..
அவர் ஷிட்டியில் நேர்மையான பிசினஸ் மேன் அதனால் மகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என பயம்..
அதனால் கைக்குள் பொத்தி வைத்து வளர்த்தார். அவரின் மகள் அர்ச்சனாவிற்கு வெளி உலகம். வெளி மனிதர்கள் எப்படி என்று எதுவும் தெரியாமல் போனது தான் விந்தை..
படிப்பும் அவ்வளவாக ஓடவில்லை அதனால் +2 வுடன் நிறுத்தி தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி தையல் சமையல் என கற்க ஆசைபட்டார் அர்ச்சனா.
ஆசை மகள் கேட்கவும் தட்டமுடியாமல் வீட்டிற்கே அதற்குரிய ஆட்களை வரவழைத்து பயிற்சி கொடுத்தார் லிங்கம்..
இவ்வாரே நாட்கள் சென்றது. அர்ச்சனாவிற்கு இருபத்தி இரண்டு வயதாகியது.. லிங்கத்தின் நண்பர் மூலம் தான் மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது என உணர்ந்தார் லிங்கம்..
அதன் பின் மகளின் சம்மதத்துடன் நண்பரின் மேல் வைத்த நம்பிக்கையிலும். அவர் காட்டிய ராதாகிருஸ்ணனை பற்றி எதுவும் விசாரிக்காமல் அவனுக்கு பெற்றோர் யாரும் இல்லை வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார் என நம்பி மகளுக்கு அந்த கேடுகெட்ட மாப்பிள்ளையை திருமணம் பண்ணிவைத்தார் லிங்கம்..
ராதாவின் தங்கை விமலராணியும் அங்கே வந்து தங்கிவிட்டாள். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை..
திருமணம் முடித்து வைத்ததும் மருமகனை அவரது ஆபிஸ் அழைத்து சென்றார் லிங்கம்..
அங்கு சென்ற பின்தான் அவர்களின் சொத்து மதிப்பே அவருக்கு தெரிந்தது.. அப்பொழுது இருந்து கூடிய சீக்கிரம் அதை அவர் கைபற்றுவதற்கான திட்டம் போட்டார்.. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் காலமே மாரடைப்பினால் லிங்கத்தை விதி முடித்து காலம் எடுத்துக்கொண்டது…
அன்பான தந்தையின் இறப்பை கூட உணரமுடியாமல் மயங்கி விழுந்தார் அர்ச்சனா..
அதன் பின் அந்த வீட்டில் எல்லாம் தலைகீழானது…
அப்பொழுது இருந்து அர்ச்சனா முதல் கொண்டு பிசினஸ் வீடு வரை ராதாவின் கையில் வந்தது.. மகாலிங்கம் சொத்தால் அவரின் காலத்திற்கு பின் மகளுக்கு ஆபத்து என நினைத்து முட்டாள் தனமாக மருமகனை நம்பி அனைத்தையும் ராதாவின் பெயரில் எழுதிவைத்தார்…
அதுவே ராதாவிற்கு மிகுந்த பலமாக போனது.. மனைவியின் பெயரில் சொத்து இருந்தால் அதை அவரின் பெயரில் மாற்றி வாங்குவதற்கு நல்லவர் போன்று நடிக்கலாம்.. ஆனால் அதற்கு எவ்வித அவசியமும் இல்லாமல் நேரடியாக சொத்தை அவரின் பெயரில் எழுதியதால் அவருக்கு நல்ல கணவனாக நடிக்கவேண்டிய எவ்வித தேவையும் இல்லை…
அர்ச்சனாவின் குழந்தை தனம் கொண்ட அபரிவிதமான அழகு அவரை சந்தேகப்படவைத்தது.. ராதா விமலா என இரண்டு பருந்துகளிடம் எவ்வித ஆதரவும் இன்றி சிக்கிக்கொண்டார் அர்ச்சனா…
error: Content is protected !!