மெய்யறிவாயோ மெல்லினமே 1
அத்தியாயம் 1
கணநாயகாய கணதைவதாய
கணத்யக்ஷய தீமஹி
Advertisement
குண சரிராய… குண மண்டிதாய
குணேஷனாய தீமஹி…
குணாதீதாய குணாதீஷாய
Advertisement
குண ப்ரவிஷ்டாய தீமஹி.
Advertisement
காதை நிறைத்த அற்புத காணத்தை மெல்லிய முனகலுடன் பாடிக் கொண்டே பல்லைக் விலக்கி கொண்டிருந்தாள் அவள்.
Advertisement
“எழுந்ததும் பாத்ரூம் போனவ தான் இன்னும் வெளிய வரல…” என முனங்கிக் கொண்டே
“இன்னும் அங்க என்னடி பண்ணிட்டு இருக்க, பாத்ரூம்ல போனை எடுத்துட்டு போனதுமில்லாம பல்லை விலக்கிட்டே விநாயகரை கூப்பிட்டுட்டு இருக்கியா டி கோட்டிக்கழுதை…” என சத்தமாக கேட்டார் அவளின் தாய் பானுமதி.
தாயின் சத்தம் கேட்டதும் வாயிலிருந்த எச்சிலை துப்பிவிட்டு ‘வாட் மம்மி…’ எனக் கேட்டாள். அதற்கு அவளின் தாய் பதில் கூறாமல் போக வாயை கழுவிவிட்டு வெளியில் வந்தவள் நேராக தாயை தேடிச் சென்றாள்.
குளியலறையிலிருந்து வெளிவந்த மகளை நேரடியாகவே முறைத்தார் பானுமதி..
தாயின் முறைப்பை குறும்பு சிரிப்போடுப் பார்த்தவள் “என்னங்க மம்மி, காலையிலேயே ரொமான்டிக்கா பார்க்குறீங்க? வாக்கிங் போன டாடி இன்னும் வரலையா?…” என கண்ணடித்து கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் மகளை கண்டனப் பார்வையுடன் கீழிருந்து மேலாக அளந்தார் அவளின் தாய்…
ஏற்றி கட்டிய நைட்டி, முட்டி வரை நனைந்த கால்களில் நீர் வழிந்த வண்ணம் இருந்தது… சற்றே கண்களை மேலேற்றி பார்த்தாள் கழுத்திலிருந்த வழிந்த நீர் கழுத்திற்கு கீழ் இருந்த ஆடையை முழுவதுமாக நனைத்திருந்தது அதை கண்டதும் பல்லைக் கடித்துக்கொண்டு மகளின் முகத்தை கண்டார்.
கலைந்து போன கூந்தல், காதோர கன்னத்தில் வளர்ந்திருந்த பூனை முடி நீரில் நனைந்து கன்னத்தை முத்தமிட்டு கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில் விழித்ததின் விளைவோ இல்லை இரவு முழுக்க விழித்து இருந்ததின் விளைவோ? ஏதோ ஒன்று மங்கையின் கண்களை செம்மை நிறத்தில் காட்டியது. கண்கள் மட்டுமா சிவந்திருந்தது? அதுதான் இல்லை பாவையின் நுனி மூக்கும், செவியும் காரிகையின் விழிகளுடன் போட்டி போட்டு சிவந்திருந்தது.
மகளின் சிவந்திருந்த முகத்தை பார்த்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு “கோட்டிக் கழுதை, நேத்து நைட்டும் தூங்கலையா நீ?” என பானு கேட்கவும் திருதிருவென விழித்தாள். அவளின் திருட்டு முழியே கூறியது நேற்று அவள் தூங்கவில்லை என்று…
“எத்தனை தடவை சொல்றது, நான் சொல்ற பேச்சைக் கேட்க கூடாதுன்னே இருக்கியா? விடிய விடிய உட்கார்ந்து போனைப் பார்க்க வேண்டியது.. விடிய காலையில எழுந்து பாட்டை போட்டு எழுப்பி விட வேண்டியது. இன்னைக்கு குறவனுக்கு, மறவனுக்கு விடுதலை கொடுக்கலன்னா என் பேரை மாத்தி வைச்சு இருக்கேன்… வயசு பிள்ளையை அடிக்க கூடாதுன்னு பார்த்தா ஒன்னும் வேலைக்கு ஆகறது இல்லை, கை வைக்கலன்னா நீ அடங்கவே மாட்ட…” எனக் கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் எதையோ தேடிட, அதற்குள் குளியலறைக்குள் ஓடியிருந்தாள் அவள்.
“கோட்டிக் கழுதை வெளிய வாடி உனக்கு இருக்கு…” என கத்தினார்
“வரவே மாட்டேன் போடி…” என்றாள் பானுவின் மகள்.
வெறும் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு தான் அது. ஒரு படுக்கையறையில் அட்டேச் பாத்ரூமும், ஹாலை ஒட்டிய அறையில் காமன் பாத்ரூமும் இருந்தது. தாயை வெறுப்பேற்றவே அடிக்கடி ஹாலை ஒட்டிய காமன் பாத்ரூமில் நுழைந்து கொள்வாள். இன்றும் அதை தான் செய்தாள், ஆனால் என்ன அவள் மாட்டிக் கொள்வாள் என்று நினைத்திருந்தால் வெளியிலேயே வந்திருக்க மாட்டாள்.
கால் மணி நேரத்தில் குளியலறையிலிருந்து வந்தவள் அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகி வெளிவந்தாள்.
“ம்மா, டைம் ஆயிடுச்சு பாய்…” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
” நில்லு, நில்லு கொஞ்சம் சாப்பிட்டு போ, அடியே இரு வரேன், இப்ப நிக்க போறயா இல்லையா?…” என பானுமதி கத்திய கத்தெல்லாம் காற்றில் தான் கலந்தது…
அவள் நவினா, இருபத்தி ஐந்து வயதான மங்கை, ஐந்தடி உயரம், ஒரு முறையேனும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு இல்லையென்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கும் அழகு… இதயா
இன்ப்ரா ஸ்க்டசரில் தான் கடந்த மூன்று வருடங்களாக புராஜக்ட் டிசைனராக பணிபுரிந்து வருகிறாள்.
*********
‘நான் அம்மாட்ட போகணும். என்னை விடு… என்னை விடு…’ சுவரோடு சுவராக ஒட்டி நின்று கத்தினான் சிறுவன்.
சாம்பல் நிற இருட்டில் நீல நிறம் சாயம் பூசிய உருவம் போல் அச்சிறுவன் தெரிய… அவனுக்கு மிக அருகிலேயே இல்லைக் கிட்டதட்ட அவனை ஒட்டியே நீல நிறம் சாயம் பூசியது போல் இன்னொரு உருவமும் தெரிந்தது…
அந்த உருவத்தின் பேச்சும், செயலும் சிறுவனின் உடலை நடுங்க செய்தது…
அச்சமயம் திடீரென சிறுவன், பெரியவனாக தோற்றமளித்தான் அவனது கைகள் முழுக்க இரத்தம். எதிரில் நின்ற கருநீல நிற உருவத்தின் முகம் இரண்டாக பிளக்கபட்டிந்தது. அதைக் கண்டவன் முகம் பழி வெறியில் இன்னும் மின்னியது. மேலும் உருவத்தை வெறி தீரக்கத்தியால் குத்தினான்.
மறவோன் குத்த குத்த கருநீல உருவம் முகம் முழுக்க குருதி வழிய கண்களை உருட்டி தன் வெள்ளை நிற பற்களைக்களில் இரத்தம் வழிய சிரித்தது…
அக்கணம் “ஆஆ…” என வெளியே கேட்காத குரலில் அலறியபடி உடல் முழுவதும் வியர்த்து வடிய எழுந்து அமர்ந்தான் வாசுதேவன்.
சில நிமிடங்கள் தேவைப் பட்டது மறவோன் நடப்பிற்கு வர… மெல்ல நிதானத்திற்கு வந்தவன் வியர்த்திருந்த முகத்தை அழுத்தித் துடைத்தான்.
எத்தனை துடைத்தாலும் கனவின் தாக்கம் அவனுள் இருந்து கொண்டே இருந்தது…அவன் கண்ட கனவு நிஜ வாழ்க்கையில் நடந்த கோர தாண்டவத்தின் மிச்சம் அல்லவா? அதுதான் கனவாய் மாறி இவனை துரத்திக் கொண்டிருக்கிறது.
இனி அவனுக்கு உறக்கம் வருமா என்பது கேள்விக்குறியே… லேம்ப் வெளிச்சத்தில் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டான். சற்று நேரம் அறையின் இருட்டிற்கு கண்களை பழக விட்டவன் பால்கனியை நோக்கி நடந்தான்.
கருஞ்சாம்பல் நிறத்தைப் பூசிய வானத்தை அண்ணார்ந்துப் பார்த்தான். அவ்விருளை போல தோன்றியது இவனின் வாழ்க்கை. கண்களை இறுக மூடினான். தன்னை சுற்றி சுற்றி வரும் கொடூர நினைவுகளின் தாக்கத்திலிருந்து வெளிவரத் திணறினான்.
பட்டென கண்களை திறந்தவன் தன்னை சமன்படுத்த முயன்றான். அறையினுள் சென்று அலைபேசியை கையில் எடுத்தவன் சமூக வலைத்தளங்களிலும் தேவையானது தேவை இல்லாதது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் சற்று நேரத்தில் பகலவன் வந்துவிடுவான் என்று அவன் கையிலிருந்த அலைபேசியும், சுவற்று கடிகாரமும் கூறியது… ஃபோனை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தவனை கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் நித்திரை தழுவ மறுத்தது…
புரண்டு புரண்டுப் படுத்தவனின் மீது துளியும் இரக்கம் கொள்ளவில்லை நித்தரா தேவி… அவனை விட்டு விலகியே நின்றாள். நீ விலகி நின்றால் என்ன என்பதை போல் கண்களை இறுக மூடி உறங்க முயற்சித்தவன் அதில் வெற்றியும் கண்டான்.
விடிந்து வெகுநேரமாகியும் உறங்கிக் கொண்டிருந்த மகனின் அறைக்கு வந்தார் ஜானகி.. எப்போதும் கதவை தாழ் போட்டு உறங்கியது இல்லை என்பதால் வெறுமென சாத்தி வைக்கப்பட்ட கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்த ஜானகி, கதவினைத் திறந்ததும் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகன் பட்டான்.
மெல்லிய புன்னகையுடன் மகனின் அருகில் சென்றவர் “வாசு…” என்று மகனின் கன்னத்தை தட்டினார். தாயின் தொடுதலில் தூக்கத்தில் இருந்து வெளிவந்தவன் பட்டென கண்களைத் திறந்து “அம்மா…” என்றான்.
“என்னமா? இப்படி கண்ணு செவந்து இருக்கு…” எனக் கேட்டவர் படுக்கையில் அமர்ந்து மகனின் தலையை தன் மடிக்கு மாற்றிக் கொண்டார். ” இடையில முழிப்பு வந்துருச்சும்மா அதுக்கு அப்பறம் தூக்கமே இல்லை… விடிய காலையில தான் தூக்கமே வந்துச்சு…” என்றவன் தாயின் மடியில் சௌகரியாக படுத்துக் கொண்டான்.
மகனின் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே “சுதன் கால் பண்ணாரு தம்பி…நீ போன் எடுக்கலன்னதும் எனக்கு கூப்பிட்டார்…” என கூறியது தான் தாமதம் அடித்துப் பிடித்து எழுந்தவன்
“ஐயோ இதயாவைக் கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருந்தேன் ம்மா, சுத்தமா மறந்துட்டேன்…” எனக் கூறிக் கொண்டே குளியலறைக்குள் ஓடினான்.
ஓடும் மகனையே சிறு சிரிப்போடு பார்த்தவர் மகனிற்கு காலை உணவை எடுத்து வைக்க கீழே சென்றார்.
அடுத்த அரைமணி நேரத்தில் தாய் கொடுத்த உணவை உண்டுவிட்டு இதயாவின் வீட்டை நோக்கி பயணப்பட்டான் வாசுதேவன்.
வாசுதேவன் இருபத்தி எட்டு வயதின் தொடக்கத்தில் இருப்பவன். சில வருடங்களாக அரசு தேர்விற்கு முயற்சித்து தற்பொழுது அதை வென்று இருக்கிறான்… தற்பொழுது இன்டர்வியூவும் முடிந்திருக்க, அதன் முடிவிற்காக காத்திருக்கிறான். பார்ப்போம் காலம் இவனுக்கு என்ன வைத்திருக்கிறது என்று… மேலும் இவனைப் பற்றி கதையின் போக்கில் அறிந்துக் கொள்வோம்..
******
சாம்பல் நிற வானத்தை போல ஆழியின் நிறமும் சாம்பலை பூசிக் கொண்டிருந்ததை போல் ஓர் மாயை.. சாம்பலின் நிறத்தின் தன்மையை குறைக்க முயன்று கொண்டிருந்தது அரைவட்ட வடிவில் காட்சியளித்த நிலவு…
அம்மூன்றாம் பிறை இரவில் நடு கடலில் தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்த படகில் ஒரு பாவை மட்டுமே அமர்ந்திருந்தாள்…
இடை தாண்டிய கேசம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தது. அக்கணம் குளிர் நிறைந்த உப்பு காற்று சின்ன சத்தத்தோடு அவளின் தேகத்தை தீண்டிச் செல்ல, அதுபட்ட இடம் முழுவதும் தீயாய் எரிந்தது…
கனலாக தகித்த இடங்களை பார்த்தாள் காமகொடுரன் கைகளாலும், இதழ்களாலும் தீண்டிய இடங்கள் அவையென்று சட்டென்று புரிந்தது…
அதன் தாக்கம் முழுவதும் அவளை சூழ “அம்மா…” என்று கத்தினாள். அந்த கணம் அவளின் நாசி ஓர் ஆணின் வாசத்தை உணர்ந்தது. மங்கையின் இதழ்கள் தன்னாலேயே “சுதன்…” என்ற பெயரை உச்சரித்தது.
ஆடவனின் பெயரை இவள் இதழ்கள் உச்சரித்த நேரம் “நிலவே…” என்று காரிகையின் தோள் தொட்டான் இதயாநிலாவின் ஹரிஹரசுதன். சட்டென பின்னால் திரும்பி ஆடவணை அணைத்து கொண்டு அழுதாள் அந்த பாவை.
“நிலவே, இதயமே, நிலாடா…” என்று பல செல்ல பெயர்கள் கொண்டு அழைத்தான் ஆடவன். அவன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் அவனுள் ஆழமாய் புதைந்ததாள் மங்கை…
“எனக்கு பயமா இருக்கு…” என்று நடுங்கிய குரலில் கூறினாள்..
“ஒன்னுமில்லை டா, என்னை பாரு” என அவளின் முகத்தை நிமிர்த்தியவன் கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்து விட்டபடி ‘அங்க பாரு…’ என்றான் நிலவைக் காட்டி..
சற்று முன் வளர்பிறையாய் சிரித்த சந்திரன் முழு மதியாய் தோன்றி நுண்ணிடையாளின் கண்களை நிறைத்தது… விழிகள் விரிய அதனை பார்த்தவள் பின்னால் திரும்பி ஆடவனை பார்த்தாள். மெல்ல இதழ் பிரித்து சிரித்தவன் தன் நிலவை அணைத்தபடி அந்த நிலவை கண்டான்.
பௌர்ணமி அலைகள் சதிராட, உப்பு காற்றின் மென்மை அவளை முழுவதும் தீண்ட, கடல் மீன்களும் துள்ளிக் குதிக்க அதனை ரசித்தபடி மன்னவனின் கையணைப்பில் நின்றவளை பார்த்து பொறாமை கொண்டதோ கருமேக கூட்டங்களும் சட்டென வெண்ணிற துளிகளை அவள் மீது தெளித்தது..
“ஸ்…” என்று மன்னனின் மார்ப்பில் முகத்தை புதைத்து அந்த வெண்ணிற துளிகளை துடைக்க முற்பட்ட வேளை தான் அது நடந்தது.
மெல்லிய துளிகளாக விழுந்த மழை துளிகள் அனைத்தும் பெரு மழையாக அவளை நனைத்திருந்தது “ஹஆஆ…” என்றபடி எழுந்தாள் இதயநிலா.
கனவில் பெய்த மழையில் நிஜத்தில் தொப்பலாக நனைந்து விட்டோமோ என நினைத்தப்படி நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை வட்டத்தில் கையில் தண்ணீர் குவளையோடு நின்றிருந்த வாசுதேவன் பட்டான்…
நிமிடத்தில் நடந்த அனைத்தும் கனவு தானென்று புரிந்து விட “அடே வாயு மண்டை உன்னை…” என்று படுக்கையில் இருந்து இறங்கியவள் வாசுதேவனை அடிக்க நெருங்க அவளை ஒற்றைக் கையில் பிடித்தவன்,
“இதயாமா, வெளிய போகணும் எனக்கு நேரமில்லை, சீக்கிரம் ரெடியாகிட்டு வா…” என்றபடி இதயாவை குளியலறைக்குள் தள்ளினான்.
“மிருகமே, வர வர அரக்கன் ஆயிட்டு வரடா டைனோசர்…” என குளியலறையிலிருந்து அவள் கத்த, அதை கேட்க தான் அவன் அங்கில்லை.
அவனின் சத்தம் கேட்காது போக, “நீயெல்லாம் மனுசனே இல்லைடா வாயு மண்டை. குளிச்சிட்டு வரேன் இரு…” எனக் கத்தினாலும் அவன் கூறியபடி அடுத்த சில நிமிடங்களில் தன் அறையிலிருந்து தயாராகி வெளிவந்திருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் இதயாவை சுதன் கூறிய இடத்திற்கு அழைத்து வந்திருந்தான் வாசுதேவன்.
“எங்க போறோம்.. எங்க போறோம்…” என வழியெங்கும் கேட்டுக் கொண்டே வந்தவளுக்கு பதில் சொல்லவே இல்லை…
“கொஞ்ச நேரம் அமைதியா வா இதயா…” பெரியதாக அதட்டினான் வாசு… முகத்தை தூக்கி வைத்தப்படி அமர்ந்து விட்டாள்.
அது கூட நிமிடமே “யாரை பார்க்க போறோம் சொல்லு…” என்றாள் மீண்டும்.
அவளது நச்சரிப்பு தாங்க முடியாமல்
“ஹரி அண்ணாவை தான் பார்க்க போறோம் கொஞ்சம் அமைதியா வா…” என்றான் கடுப்பாக..
அக்கணம் முதல் மங்கையிடம் ஆழ்ந்த அமைதி. அவனைப் பார்க்க போகிறோம் என்ற ஆர்ப்பரிப்பும்,படபடப்பும் மனதின் ஓரத்தில் எழுந்த வண்ணமே இருந்தது… அதை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.
அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளின் காதலைப் பற்றி அறிந்தவன் அல்லவா அவன்…
ஆம் காதல் தான்…கடந்த சில வருடங்களாக அவளில் அவளுக்கே தெரியாமல் எழுந்த காதலை பாவையின் காதலன் உணர்ந்தானோ இல்லையோ அவனின் நண்பன் உணர்ந்தே இருந்தான்… அது தற்பொழுது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது என்பதை அறிந்தவன் பாவைக்கே தெரியாமல் அவளின் காதலை அவளிடம் ஒப்படைக்க ஏற்பாடும் செய்து விட்டான்…
அவள் இதயநிலா… இருபத்தி எழு வயதின் தொடக்கத்தில் இருப்பவள்… ஒரு பக்கம் வாசுவோடு சேர்ந்து அரசு தேர்வு எழுதுகிறேன் என்றும் இன்னொரு பக்கம் தந்தையின் தொழிலை கவனிக்கிறேன் என்றும் சுற்றி கொண்டிருக்கிறாள்…மேலும் இவளை பற்றி கதையின் போக்கில் அறிந்து கொள்வோம்..
*******
அதீத வேகமும் அல்லாமல் மிதமான வேகமும் அல்லாமல் சீரான வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது அந்த நான்கு சக்கர வாகனம்…
ஸ்டீயரிங் வீலில் தாளம் தப்பிக் கொண்டே வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவன் நினைவு வந்தவனாக அலைபேசியை எடுத்தான்… ஒற்றை கையில் வாகனத்தை இயக்கி கொண்டே அலைபேசியில் மேனஜர் என பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அழைத்தவன் காதில் ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டான்.
“அண்ணே, பெருந்துறை பிரெஞ்ச்ல பருப்பு மூட்டை லோட் வந்திருச்சான்னு கேட்டீங்களா?…” காதில் வைத்திருந்த ப்ளூடூத்தை சரி செய்தபடியே கேட்டான் அவன்.
“என்ன அண்ணா பதில் இல்லை… லோட் போச்சா இல்லையா…” அழுத்தமான குரலில் கேட்டான். அவரின் அமைதியே இல்லை என்ற பதிலை கொடுத்தது. பெருமூச்சுடன் “அவங்களுக்கு கால் பண்ணி என்னாச்சுன்னு கேளுங்க…” என்றவன் மற்ற வேலைகளை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அதற்கு பிறகு சீரான வேகத்தில் பயணித்த அவனது வாகனம் வேகத்தின் எல்லையை தொட்டிருந்தது… குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாடியே ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு சென்றிருந்தான் அவனும், அவனுடன் ஒட்டுபுல்லாக வந்தவளும்.
அவன் ஹரிஹரசுதன் முப்பத்தியொரு வயதின் முடிவில்
இருப்பவன் ஆர்க்கிடெக்சர் முடித்துவிட்டு தந்தையின் தொழிலான சூப்பர் மார்கெட் தொழிலையும், தனது படிப்பிற்கான வேலையையும் ஒரு சேர பார்த்துக் கொண்டிருப்பவன்.
**
அடுத்த அத்தியாயம் புதன் கிழமை காலை வரும்… உங்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்❤️
