Skip to content
Post Views: 2,380

சூரியன் உதிக்காத அந்த வைகறை பொழுதில் ஒருத்தி தன்னுடைய வீட்டின் பின்புறம் அமர்ந்து வானத்தை வெறித்தவாறு அமர்ந்து இருந்தாள்…
Advertisement
அவளின் கண்கள் வெறுமையை தாங்கியவாரு இருந்தது…. கண்களில் இருந்து கண்ணீர் வற்றிப்போய் இருந்தது…
அவளின் மனமோ கதறியவாறு எதையோ நினைத்து அழுதுக்கொண்டு இருந்தது…
Advertisement
Advertisement
இன்று அவளின் உயிரானவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்… இத்தனை வருட காதலின் தோல்வி அவளை நிலைக்குலைய வைத்து இருந்தது…
“அம்மா அப்பா என்னை ஏன் தனிய விட்டுட்டு போனீங்க.. என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல….” என்று காலம் சென்ற தன்னுடைய பெற்றவர்களிடம் மானசீகமாக உரையாடி கொண்டு இருந்தாள்…
Advertisement
பிறகு என்ன நினைத்தாளோ அங்கு இருக்கும் கிணற்றை நோக்கி சென்றாள்…. அவள் வானதி தேவி…
***********************************************
அதே வேளையில் அங்கு ஒரு மண்டபத்தில் வாயிலில் அருள்மொழி வெட்ஸ் தேவிகா என்று பேனர் வைத்து அலங்கரித்து இருந்தது…
மணமகளின் குடும்பத்தினர் தான் அங்கும் இங்கும் ஓடியாடி திருமண வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்…
மணமகனின் சகோதரர்களும் சகோதரியும் அவளின் கணவனும் யாருக்கு கல்யாணம் என்ற ரீதியில் அமர்ந்து இருந்தனர்…
மணமகனோ இவர்களின் நடவடிக்கையை பார்த்தாவாரு யோசனையுடன் கல்யாணத்திற்கு தயாராகி இருந்தான்….
மணமகளோ ஒருவித பயத்துடனே தயாராகி அமர்ந்து இருந்தாள்….
இந்த கல்யாணம் நடைபெறுமா???? வானதியின் உயிருக்கு ஆபத்து நேருமா?????
error: Content is protected !!