Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 20

வசியின் உயரத்திற்கு வெகுநேரம் எம்ப முடியாமல் சின்ன பொண்ணுவின் கால்கள் தொய்ந்து விட, அதை உணர்ந்தவன் அவளின் இடையை பற்றி தன் உயரத்திற்கு தூக்கி கொண்டு தன் செய்கையை தொடர்ந்தான்.
“மாமு” அவன் இதழ்களுக்குள் முனகினாள்


Advertisement

“ம்”

Advertisement

“மூச்சு விட முடியல” என்றாள் திணறலோடு

Advertisement

சட்டென அவளிலிருந்து தன் இதழ்களை பிரித்தெடுத்தவன் அவளை வேறு பார்வை பார்க்க திணறலோடு தலையை கவிழ்த்து கொண்டாள்.

Advertisement

அவளை மீண்டும் அவன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டே நடந்தவன் அங்கே இருந்த முட்டான் எனப்படும் கைப்பிடி இல்லாத சின்னதான இருக்கையில் அவளை நிற்க வைத்தான்.
“என் பொண்ணு சீக்கிரம் வளர்ந்துடுவானு உன் அப்பா சொன்னாரு. ஆனா இன்னும் சின்னுவாவே இருக்கே” என்று அலுத்துக் கொண்டே அவன் அவளை மீண்டும் நெருங்க இதழ்களுக்கு இடையே கைநீட்டி தடை விதித்திருந்தாள் அவன் சின்னு
“ஏன்டி”
“இன்னும் சில விஷயம் தெரியணும்”
“எல்லாம் சொல்லிட்டேனே”
“நான் காலேஜ்ல சேர்றதுக்கு காரணம் நீங்க தான்னும், பீஸ் கூட நீங்க தான் கட்டியிருக்கீங்கனு செல்வி சொன்னா. நான் இந்த வீட்டை விட்டு போன மறுநாளே எனக்காக ஹாஸ்டல்ல ஸ்காலர்ஷிப் அப்ரூவ் ஆகியிருக்குனு நோட்டீஸ் போர்ட் போட்டிருந்துச்சு. அதுக்கு பிரன்சிபாலுக்கு நன்றி சொல்ல நான் அவர் கால்ல விழுந்து எழுந்தப்போ அவர் கண்ணுல பின்னாடி நின்னுட்டிருந்த உங்களோட உருவத்தை பார்த்தேன். அப்பவே இது உங்களோட ஏற்பாடா இருக்கும்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு. செல்வி நேத்து நைட் என்கிட்ட பேசினப்புறம் அதுவும் உங்களோட வேலை தான்னு கன்பார்மா தெரிஞ்சு போச்சு”
“இல்ல சின்னு, நான் எதுவும் பண்ணலடி” என்றான்
“உண்மைய சொன்னா தான், இல்லனா”
“இல்லனா?” குறும்புடன் பார்த்தான்
“நான் கீழே ஹாலுக்கு போறேன்”
“என்னை மீறி போயிடுவியா நீ?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க
நெற்றியில் ஒற்றை விரலால் தட்டியபடி யோசித்தவள், “கஷ்டம் தான். நீங்க கொடுத்த மாதிரியே எனக்கும் உங்களுக்கு முகம் பூரா முத்தம் கொடுக்கணும்னு தோணுது”
“தோணினா அப்பவே கொடுத்துடணும் சின்னு, சீக்கிரம் கொடு” என்றான் ஆசையாக
“நீங்க எல்லாத்தையும் மறைக்காம சொன்னா தான் கொடுப்பேன்” என்று பேரம் பேசினாள்.
“என்கிட்டயே டீல் பேசறீயா? மொத்தமா வசூலிக்காம விட மாட்டேன் சின்னு” என்று அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.
“உன் அப்பா இறந்தத கேட்டு நான் ஷாக் ஆகி அப்படியே நின்னுட்டு இருக்கறத பாத்து ‘சார் என்னாச்சுனு’ செல்வி கத்தினா”
“மாமாவோட பொண்ணு, அதான் உங்க பிரெண்டு இப்போ எங்கே இருக்காங்க?” வசீகரன் செல்வியிடம் கேட்க
“இந்த வீட்ல அவள மட்டும் தனியா விட முடியாதுனு அவ அக்கா ஜமுனா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. நானும் அவளும் சென்னைல போய் படிக்கலாம்னு ஆசையா இருந்தோம். எல்லாம் மண்ணா போயிடுச்சு. துணைக்கு சென்னைல படிக்கறதுக்கு ஆளில்லாம என்னையும் இப்போ வீட்ல அனுப்ப மாட்டேங்கிறாங்க”
“ஏன், அவங்க படிக்கலயா?”
“அவள படிக்க விடணுமே, ரெண்டு அக்காங்களும் அவளுங்க சொந்தக்காரனுங்கு கட்டி வைக்க பாக்கறாளுங்க. வெளியூர்க்கு படிக்க அனுப்பலனா கூட பரவால்ல, உள்ளூர்ல கூட படிக்க அனுப்பாம வீட்டு வேலை காட்டு வேலைனு அவளை பிழிஞ்சு எடுத்துட்டு இருக்காளுங்க. இந்த முத்துமாணிக்கம் மாமா அவளுக்கு ஒரு வழிய காட்டிட்டு போவாம இப்படி பொசுக்குனு போயிட்டாரு, பாவம் அவ கிடந்து அல்லாடறா” என்று செல்வி தோழிக்காக வருத்தப்பட்டாள்.
“அவங்க அக்காங்கள எதிர்த்து காலேஜ்க்கு போய் படிக்கலாமில்ல”
“அவ அடங்கி போயே பழகிட்டா. அதுமட்டுமில்ல காலேஜ்ல சேர்றதுக்கு பணம் வேணுமே, அதுக்கு அவ என்ன பண்ணுவா?”
“நான் பணம் கொடுக்கறேன், நீங்க போய் அவங்ககிட்ட கொடுக்கறீங்களா?”
“அப்படியெல்லாம் யார் பணம் கொடுத்தாலும் அவ வாங்க மாட்டா. அது சரி நீங்க யாரு? நீங்க ஏன் அவளுக்கு பணம் கொடுக்கறீங்க?”
“நான் வேண்டாவுக்கு பேசன மாப்பிள்ளை, அவளோட மாமா”
“அப்போ சரி, என்கூட வாங்க, நான் அவ அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவளை உங்களோடவே கூட்டிட்டு போயிடுங்க”
வசீகரன் யோசித்தான், இது சரிவருமா? அவனுக்கும் அவளுக்குமான முதல் சந்திப்பு எப்படியெல்லாம் இருக்கும் என்று அவன் பலவகையில் கனவு கண்டான். ஆனால் இப்படியொரு சூழ்நிலையில் அவளை சந்திக்க வேண்டி வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
“அவ இந்த வருஷம் தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கா, சின்ன பொண்ணா வேற இருக்கா. அவளும் படிக்கணும். இப்போ தான் படிப்பை முடிச்சிட்டு வந்த நானும் எந்த வேலையிலயும் சேராம தொழிலையும் தொடங்காம உடனே கல்யாணம்ங்கிற பெரிய முடிவை எடுக்க முடியாது. அது மட்டுமில்லாம அந்த பொண்ணு மனசுல எனக்கான இடம் எதுனு இன்னும் தெரியல. 
நான் தூரத்து சொந்தம். எனக்கு முத்துமாணிக்கம் மாமாவை தவிர அவரோட பொண்ணுங்களை தெரியாது, அதே மாதிரி அவங்க யாருக்குமே என்னையும் தெரிஞ்சிருக்காது, முத்துமாணிக்கம் மாமா என்கிட்ட பேசினவரைக்கும் அவளோட அக்காங்க பேராசைக்காரிங்கனு நல்லாவே தெரியுது.  அவர் தன் பொண்ணுக்கு என்னை சம்மந்தம் பேசினது இதுவரைக்கும் அவங்க கிட்ட சொல்லியிருக்க மாட்டாருனு தான் நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது அவங்க கிட்ட போய் என்னனு என்னை அறிமுகம் செஞ்சிக்கறது?” 
எனக்கொரு உதவி மட்டும் பண்ணுங்க, நான் கொடுக்கற பணத்தை யாரோட பணம்னு சொல்லாம வேண்டா கிட்ட கொடுங்க. சென்னையில என் அண்ணன் புரபசரா வேலை செய்யற காலேஜ் அப்ளிகேஷன் லிங்க் உங்களுக்கு அனுப்பறேன். அவங்கள காலேஜ்க்கு அப்ளை பண்ண சொல்லி, பணம் கட்டி அங்கே சேர்ந்துட சொல்லுங்க. நான் பிசினஸ்ல கொஞ்சம் ஸ்டடி ஆகிட்டு என்னை பத்தி அவங்க கிட்ட பேசிக்கறேன். அதுவரைக்கும் நான் உங்க கிட்ட பேசினத பத்தி எதுவும் அவங்ககிட்ட சொல்லாதீங்க. ஏன்னா எங்க வீட்ல வேற பிரச்சனை போயிட்டு இருக்கு, உடனே எங்க கல்யாணம் நடக்கறதுக்கு வாய்ப்பில்ல. படிக்கற எண்ணத்துல இருக்கற அந்த பொண்ணோட மனச இப்போ நான் கெடுக்க விரும்பல” என்று நீளமாக பேசி முடித்தான்.
“நீங்க சொல்றது புரியுது சார், ஆனா அவ நான் பணம் கொடுத்தா கூட வாங்க மாட்டாளே. ஸ்கூல்ல எக்ஸாம் பீஸ் கட்றதுக்கு கடைசி நாள், இன்னும் பணம் கட்டலனு அவளை வெளிய நிக்க வச்சுட்டாங்க.  நான் கொடுத்த பணத்தை அவ வாங்கவே இல்ல. என் அப்பா, யார்கிட்டயும் கைநீட்டக்கூடாதுனு சொல்லியிருக்காருனு சொல்லி அவ அப்பா ஸ்கூல் முடியற சமயம் வந்து பணம் கட்ற வரைக்கும் வெளியிலேயே நின்னுட்டு இருந்தா. நான் கோவிச்சுக்கிட்டு பேசாம தான் இருந்தேன். 
அவ அப்பா இறந்தப்புறம் தான் அவளோட ரிசல்ட்டை நானே பார்த்துட்டு போய் சொன்னேன். இப்போ நீங்க காலேஜ்க்கு சேர்றதுக்கு கொடுக்கற பணத்தை நான் கொடுத்தா உன்கிட்ட ஏது இவ்வளவு பணம்னு கேள்வி கேப்பா, அதுமட்டுமில்ல, அவ அக்காங்க கண்ணுல பட்டுட்டா இத்தையும் புடுங்கி வச்சுப்பாளுங்க, பணத்தை பாத்தா போதும் பொணம் மாதிரி வாய பொளப்பாளுங்க”
வசீகரன் யோசித்தான். “சரி, நான் சொல்ற மாதிரி உங்க பிரெண்ட் கிட்ட பேசி காலேஜ் அப்ளிகேஷனை பில்அப் பண்ண வையுங்க, சில ஸ்காலர்ஷிப் எக்ஸாம் லிங்க் அனுப்பறேன். காலேஜ்க்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கு அதுல செலக்ட் ஆனா பீஸ் குறையும். எல்லாத்துலயும் அவங்கள எழுத வையுங்க”
“அவளே அவங்கப்பா இறந்த துக்கத்துல இருக்கா, சரியா எழுதாம ஒரு வேளை அவ செலக்ட் ஆகலனா?” செல்வி சந்தேகம் கேட்க
“அவ எப்படி எழுதனாலும், காலேஜ்ல சீட் கிடைச்சிட்டதா தான் அவளுக்கு மெயில் வரும். அதை நான் பாத்துக்கறேன். முடிஞ்சா நீங்களும் அவங்க கூடவே அதே காலேஜ்ல சேர்ந்துடுங்க. ரெண்டு பேருக்கும் அட்மிஷனை நான் பாத்துக்கறேன். ரெண்டும் பேரும் ஒண்ணா இருந்தா ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்பீங்கல்ல”
“அவளோட பெரிய பிரச்சனைய சிம்பிளா முடிச்சிட்டீங்களே சார். இதுல எனக்கும் உதவி செய்யறதா சொல்றீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல சார்”
“எனக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சீங்கனா, நான் செய்யற இந்த உதவியை நீங்களா எப்பவும் உங்க பிரெண்ட் கிட்ட சொல்லக்கூடாது. தேவைப்பட்டா நானே சொல்லிப்பேன்”
“சரிங்க சார், என்னோட போன் நம்பர் சொல்றேன். நீங்க காலேஜ் டீடெய்ல்ஸ் எல்லாம் அனுப்புங்க. காலேஜ் சேர்ந்ததும் உங்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன். நீங்க சொன்ன மாதிரி நானா உங்களப்பத்தி எதுவும் வேண்டாகிட்ட சொல்ல மாட்டேன்”
“ரொம்ப தேங்க்ஸ்மா” என்றவன் செல்வி சொன்ன எண்ணிற்கு தகவல்களை அனுப்பி விட்டு அங்கிருந்து கிளம்பினான். அதற்கடுத்தும் அவன் இந்தியா வந்திருப்பதை வீட்டிற்கு தகவல் சொல்லவில்லை. சென்னைக்கு செல்லாமல் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். அவன் உயிராய் நினைத்த அன்னை அலமேலுவின் செய்கை அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.
அவரின் வாக்கு தவறியதால் இங்கே ஒருவர் உயிரையே விட்டிருக்கிறார். அதனால் அவருடைய பெண் அநாதையாக ஆதரவற்று நிற்கிறாள். வெளிநாட்டில் இருப்பதை போலவே காட்டிக் கொண்டு பேசினான். அலமேலு முத்துமாணிக்கம் இறந்த செய்தியை கூட அவனிடம் சொல்லவில்லை. ஆரம்பத்தில் ஏன் எதற்கு என்ற காரணமும் புரியவில்லை. உடனே காரணம் கேட்டு சண்டை போடுவதால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் அவன் வேண்டாவை இப்போதே திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை. அதே நேரம் தாய்க்கு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்திருந்தான்.
வசீகரன் சொன்னது போலவே செல்வி சின்னபொண்ணுவிடம் என்னென்னவோ பேசி அவளை கல்லூரிக்கு விண்ணப்பிக்க செய்ததோடு அவளை அழைத்துக் கொண்டு சென்னைக்கும் வந்துவிட்டாள். கல்லூரி அட்மிஷன் முடிந்ததும் செல்வி அவனுக்கு போன் செய்து தகவல் சொன்னாள். அதற்குபின்பே வசீகரன் சென்னைக்கு செல்ல முடிவெடுத்து காரில் கிளம்பினான்.
“சரவணனுக்கு தெரியாம கல்லூரி ஹாஸ்டல் வார்டன்கிட்ட நீ வந்ததும் பணம் கட்ட சொல்லி, அதுவும் ஸ்காலர்ஷிப்னு சொல்ல சொல்லியிருந்தேன். ஆனா அவர் சொந்த ஊர்ல ஏதாே பிரச்சனைனு லீவு போட்டு போயிருக்காரு, என்கிட்ட அதை பத்தி அவர் சொல்லவேயில்ல. அவர் பணம் கட்டியிருப்பாருனு நானும் இருந்துட்டேன். ஆனா அவர் பணம் கட்டலனு லேட்டா தான் தெரிஞ்சது. அதனால தான் உனக்கு காலேஜ் ஹாஸ்டல்ல மேனேஜ்மென்ட் இடம் தரல. செல்வி உனக்கு தெரியாம பலமுறை எனக்கு போன் செஞ்சிருக்கா. ஆனா அன்னைக்கு நான் இருந்த குழப்பத்துல சார்ஜ் போட மறந்துட்டேன், போன் சுவிட்ச் ஆப் ஆனது கூட எனக்கு தெரியல.
என்னை பொருத்தவரைக்கும் நீ சரவணன் வேலை பார்க்கற காலேஜ்ல சேர்ந்துட்டே. அவன் இருக்கற இடத்துல உனக்கு பாதுகாப்பு இருக்கும்னு தெரியும். ஒரு நல்ல சந்தர்ப்பத்துல உன்னை மீட் பண்ணி மனசு விட்டு பேசலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். 
அப்போதைக்கு அம்மா செஞ்ச துரோகம் தான் மனச அறுத்துட்டு இருந்துச்சு. அவங்க தப்பை எடுத்து சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்களா? இதை பொறுமையா டீல் பண்றதா, இல்லை சண்டை போடறதா? அப்படியே சண்ட போட்டா அதுல யூஸ் இருக்கா? அவங்க செஞ்சது தப்புனு புரிஞ்சுப்பாங்களா? இப்படி பல யோசனைல வந்தவன் போன்ல  சார்ஜ் இல்லாதத கவனிக்கல.
நல்லவேளையா நீயும் செல்வியும் திருதிருனு முழிச்சிட்டு இருக்கறத பார்த்து சரவணன் உங்ககிட்ட விசாரிச்சு உதவி பண்ண நினைச்சிருக்கான். நீ அவன் கொடுக்கறதா சொன்ன பணத்தை வேணாம்னு சொல்லி வேலை கேட்டிருக்க, அவனும் உன்னை  கேர்டேக்கரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்.
இது தெரியாம நான், சரவணன் அண்ணி குழந்தையோட வீட்டுக்கு போக போறதா சொல்லவும் நானும் சர்ப்ரைஸ்னு போய் அப்போ தான் இந்தியா வந்த மாதிரி கார்ல வந்து நின்னேன்
“நீ முதன்முதலா நம்ம வீட்டுக்கு சரவணனனோட கார்ல வந்திறங்கினதும் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சு. எனக்கு தெரிஞ்ச மாதிரி சரவணனுக்கு விஷயம் தெரிஞ்சு உன்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டானானு யோசிட்டு இருந்தேன். தெரியாத மாதிரி என் அம்மாகிட்ட உன்னை காட்டி யார்னு கேட்டேன், அவங்க உன்னை வேலை பாக்கற பொண்ணுனு சொன்னதும் ஷாக் ஆயிட்டேன். நீயும் எதுவும் மறுத்து பேசாம வீட்டுக்குள்ள போயிட்டே.
என்னால எல்லார்முன்னாடியும் உன்கிட்ட பேச முடியல. அதே சமயம் என் அம்மா எதுக்கு சம்மந்தம் பேசின சொந்தக்கார பொண்ணை வேலைக்காரினு சொல்லணும்? அப்படியே அவங்க சொன்னாலும் நீயேன் அமைதியா இருக்கணும்னு கேள்வி இருந்துச்சு. உன்னை வெளியில பாக்கவே முடியல. நீ இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்தது எனக்கு கொஞ்சமும் விருப்பமில்ல. உன்கிட்ட காலேஜ் ஹாஸ்டலுக்கு போயிடுனு சொல்லணும்னு தோணுச்சு
நான் உன்னையே தான் கவனிச்சிட்டு இருந்தேன். ஆனா நீ என்னை திரும்பி கூட பாக்கல. சரி எல்லாரும் இருக்கறதால என்னை அவாய்ட் பண்றேன்னு அன்னைக்கு வெளியே போயிட்டு வேணும்னே வீட்டுக்கு லேட்டா வந்தேன். நான் நினைச்ச மாதிரி வீட்ல எல்லாரும் தூங்க போயிட்டு இருந்தாங்க. எனக்கு பசியாவும் இருந்துச்சு. உன்னை கூப்பிட்டு சாப்பாடு எதாச்சும் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டு நீ சமைக்கிற கேப்ல உன்கிட்ட உன் அப்பா விசயமா பேசலாம்னு நினைச்சு உன் ரூம் கதவ தட்டினேன். ஆனா நீ கதவ தொறந்து என்னை பாத்ததும் பேயை பாத்த மாதிரி முழிச்சிட்டு உடனே பட்டுனு கதவ சாத்திட்டே. 
எனக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சு. உன் அப்பா உன்கிட்ட கொடுத்த போட்டோவை நீ பாத்திருப்பே தானே, அப்புறம் ஏன் என்னை பாத்ததும் கதவ சாத்தணும், அப்படியே என்னைய பிடிக்கலனா கூட சொல்லியிருக்கலாமே, அதுக்கு ஏன் கதவ சாத்தணும்? ஒருவேளை நடுராத்திரியில கதவ தட்டினதால என்னை வேற மாதிரி நினைச்சிட்டியோனு என்னென்னவோ தோணுச்சு
சரி சின்னபொண்ணு தானே பயப்படறானு நினைச்சேன். அப்புறம் எத்தனை முறை உன்கிட்ட நான் பேச முயற்சி பண்ணாலும் நீ ஓடி ஒளிஞ்சிட்டே இருந்தே. அதனால தான் நான் உன்னை சீண்டிட்டே இருந்தேன். 
என்னை பாக்கும் போதேல்லாம் உன் முகத்துல ஒரு பதட்டமும் பயமும் இருந்துச்சே தவிர வெறுப்பில்லனு தெரிஞ்சுக்கிட்டேன். அன்னைக்கு சாப்பிடறப்போ உன் பேரோட முழு அர்த்தத்தை காளியப்பா சொன்னதும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
மருமகளா சம்மந்தம் பேசின வீட்ல என் அம்மா உன்னை வேலைக்காரியா நடத்தியும், நீ நடந்தத பத்தி வீட்ல யார்கிட்டயும் சொல்லாதது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நான் உன்னை நெருங்கி வரும் போதெல்லாம் நீ விலகி ஓடினத பாக்கும் போது எனக்கு உன்னை இன்னும் நெருங்கணும்னு தோணுச்சு. அதே நேரம் அம்மா ஏதோ சொல்லி உன்னை மிரட்டி இருக்கணும், அவங்களுக்கு நீ நேர்மையா இருக்க நினைக்கிறேங்கிறதும் நல்லாவே தெரிஞ்சது. 
நான் உன்னை டிராப் பண்றேன்னு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். அப்பவாவது என்மனசுல இருக்கறத உன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். ஆனா நீ என்னை கண்டுக்கவே இல்ல.  உன்னோட சுயமரியாதையும், நேர்மையும், பயந்த சுபாவமும் இப்படி உன்னோட ஒவ்வொரு அசைவும் காந்தம் போல உன்கிட்ட என்னை ஈர்த்துட்டே இருந்துச்சு சின்னு.
உன் அப்பா என்கிட்ட உன்னோட போட்டோவ காட்டினப்போ, நீ க்யூட்டா இருந்தே, எனக்கும் உன்னை பிடிச்சிருந்துச்சு, அத்தோட நீ அம்மா எனக்காக பாத்த பொண்ணு அதனால உன் அப்பாகிட்ட என்னோட சம்மதத்தை சொன்னேன். அப்போ பெரிசா என் மனசுல காதல் இல்ல.
அதுக்கப்புறம் உன் அப்பா என்கிட்ட கடைசியா விரக்தியோட பேசினத கேட்டதும் உன்னை கைவிட்றாம அவர் ஆசைப்பட்டபடி எப்படியாவது என் அம்மாகிட்ட பேசி எந்த பிரச்சனைனாலும் சரிசெஞ்சு உன்னையே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்.
உன் ஊருக்கு வந்தப்போ, உன் அப்பா இறந்து போய் நீ நிர்கதியா நிக்கறேன்னு கேள்விப்பட்டதும் அதுக்கு என் அம்மா ஒருவகையில காரணம்ங்கிறது தெரிஞ்சதும் உள்ளுக்குள்ள நொறுங்கிட்டேன் சின்னு, அவங்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கணும்னு யோசிச்சேன். நீயும் நானும் நல்ல நிலைமைக்கு வந்ததும் யார் தடுத்தாலும் உன்னை தான் கல்யாணம் பண்றதுனு முடிவெடுத்தேன். 
ஆனா உன்னை இந்த வீட்ல நேர்ல பாத்த நொடியில இருந்து உன்னை தீவிரமாக காதலிக்க தொடங்கிட்டேன். நான் யார்னு தெரிஞ்சும் நீ விலகி போறது எனக்கு பொறுக்கல. உன்னோட படிப்பு, என் தொழில்னு நான் மனசுக்குள்ள வச்சிருந்த கட்டுப்பாடு எல்லாம் எனக்கு மறந்தே போச்சு. என் கட்டுப்பாட்டையும் மீறி உன்னை சீண்டி விளையாடி என்னை பாக்க வைக்கணும்னு தோணிட்டே இருந்துச்சு. 
நீ அண்ணிக்கிட் டிரஸ் எடுக்க பணம் கேட்டத பாத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. உனக்கு டிரஸ் எடுக்க நான் பணம் கொடுத்தா நீ வாங்கல. நான் எடுத்த டிரஸ்ஸை உன்னை போட வைச்சே ஆகணும்னு நினைச்சு டிரஸ் வாங்கிட்டு வந்தேன். அதுல தான் அண்ணி என்னை கண்டுக்கிட்டாங்க. 
கடைசியா உன் அப்பாகிட்ட நான் பேசும்போது  எங்க குடும்ப போட்டோவோட நான் கொடுத்த போட்டோவையும் சேர்த்து கவர்ல உன் பெட்டியில வச்சதா சொன்னாரு. ஆனா நீ அத பிரிச்சு கூட பாக்கலனு அன்னைக்கு வீட்ல நடந்த பிரச்சனைல தான் தெரிஞ்சது . போட்டோவுல கையெழுத்து போட்டது நான் தான், ஆனா  நான் அத பெட்டியில வைக்கலனு அதனால தான் சொன்னேன்.
அன்னைக்கு நடந்த பிரச்சனைனால நீ வீட்ல இருக்க முடியாதுனு கெஸ் பண்ணேன். காலேஜ் பிரின்சிபால்கிட்ட உனக்கு ஹாஸ்டல் ப்ரீயா ஏற்பாடு செஞ்சு கொடுத்தா நீங்க கேட்டுக்கிட்ட மாதிரி கெஸ்ட் புரபசரா வரேன்னு அவர்கிட்ட சொன்னேன், அவரும் ஒத்துக்கிட்டாரு”
இதுல எனக்கு ரெட்டை சந்தோசம். உனக்கு தெரியாம ஹாஸ்டலை ஏற்பாடு பண்ண மாதிரியும் ஆச்சு. தினமும் கெஸ்ட் புரபசரா வந்து உன்னை சைட் அடிச்ச மாதிரியும் ஆச்சு” என்று அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
“நீங்க சிவில் இன்ஜினியருக்கு படிச்சதுக்கு பதிலா கிரிமினல் லாயருக்கு படிச்சிருக்கலாம். என்ன ஒரு வில்லத்தனம்?” என்றாள் சீண்டலாக
“இந்த வேண்டாவ எனக்கு வேண்டியவளாக்க எவ்வளவு பாடுபட்டிருக்கேன், வில்லத்தனம்னா சொல்றே” என்று அவளின் இதழ்களை வன்மையாக கொய்திருந்தான்.
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவும் சுவர் கடிகாரத்தை பார்த்தான். மணி ஏழாகியிருந்தது. வேறு வழியின்றி அவளிலிருந்து விலகியவன் “சின்னு சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகி வா. காத்திட்டு இருப்பேன்” என்று கண்சிமிட்டினான்.
நாணத்துடன் சின்னபொண்ணு கதவை திறந்த போது வெளியே லதா நின்றிருந்தாள். 
(தொடரும்)

2 thoughts on “மெளனம் 20

  • Vaigaiveni Mahesh

    Super super super

    Reply
  • Buvana Buvana

    Vasi ne greatda

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!