Skip to content
Post Views: 2,488
யாதுமாகி #17
ஜோதியின் பேச்சில் கொலை கண்டானாலும் கணவன் தன் வீட்டு மனிதர்களை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் அவளுக்கு உள்ளூர திருப்தியே.
தாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த முந்திரி பக்கோடா,நெய் உருண்டை இவற்றை மாமனாருக்கு தட்டில் வைத்து கொடுத்தாள்.
வேணு ரசித்து உண்பதை காரி உமிழாத குறையாக பார்த்து சென்றார் ஜோதி.
அன்னம் பாட்டி நெய் உருண்டை அருமை என்று சிலாகித்துக் கொண்டே மூன்றாவது உருண்டையை உள்ளே தள்ளினார்.
மங்களத்திற்கும் ஒரு டப்பாவில் போட்டு கொடுத்து அனுப்பினாள் நேத்ரா.
எந்த திண்பண்டம் ஈ,எறும்பு மொய்த்து கிடந்தாலும் கெட்டு நாறி போனாலும் மனம் வந்து யாருக்கும் கொடுக்க மாட்டார் ஜோதி. அவருக்கு மருமகளாய் வந்து வாய்ந்த நேத்ராவோ வேலைக்காரர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தே உண்பாள்.
சமையல்கார மங்களம், தோட்டக்கார வீரையன் பண்ணையாள் மண்ணாங்கட்டி முதற்கொண்டு அனைவரையும் மரியாதையோடு தான் அழைப்பாள்.
அவர்கள் நினைப்பதுண்டு ஜோதி அம்மாவுக்கு இப்படி ஒரு மருமகளா?!
அன்னத்திற்கும்,வேணுவிற்கும் நேத்ராவை மிகப் பிடிக்க காரணமே அவளது இந்த உயர்ந்த பண்புகள் தான்.
இரவு உணவு நேரம், அப்பா நாளைக்கு நம்ம சுரேந்தர் தங்கச்சி அனுபமாவிற்கு நிச்சயதார்த்தம். நம்ம குடும்பமா போனா நல்லா இருக்கும் என்றான் விஷ்ணு.
இப்போ நிச்சயதார்த்தம் தானே… கல்யாணத்துக்கு குடும்பமா போகலாம்! நீயும் நேத்ராவும் போய் வாங்க என்றார் வேணு.
“——————-”
தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. படுத்தவாரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
நேத்ரா.. நேத்து மா, நேத்து செல்லம்… அடியே குடைமிளகாய்… கோபமாய் புத்தகத்தை பறித்தான்.
என்ன?எதுக்கு இப்படி காயறீங்க?
கூப்பிட்டா என்ன, ஏதுன்னு கேட்கணும்!
சரி இப்போ கேட்கிறேன் என்ன ஏது? இமை கொட்டினாள்.
அடிங்க என் சீனா சிலுக்கு…வேகமாய் இழுத்து தன் மடியில் அமர்த்தினான்.
என்ன? விழிகளால் வினவினாள்.
இல்ல…உங்க வீட்டுல என்னவோ சொன்னியே…அவள் நைட்டியின் கை முனையை திருகினான்.
என்ன சொன்னேன் உண்மையில் புரியாமல் கேட்டாள்.
ஏய் கள்ளி…உங்க வீட்ல வேண்டாம்னு சொன்ன, நம்ம வீட்ல கன்டினியூ பண்ணலாமான்னு கேட்டேனே…
என்ன? உதடு கடித்து கோபம் போல் கேட்டாள்.
இதுக்கு தான்…அவளை ஆவேசமாய் இறுக்கி அணைத்து முகமெங்கும் முத்த சந்தனம் பூசினான்.
எதுக்கு இந்த கொஞ்சல்? அவள் முறுக்கி கொண்டாள்.
எதுக்கு கொஞ்சுவாங்க! அவளையே திருப்பி கேட்டான்.
ம்க்கும்…அவன் விலாவில் இடித்து விலகி படுத்து மீண்டும் புத்தகத்தை எடுத்தாள்.
இவ ஒருத்தி…. வாழ்க்கை பாடத்தை படிக்காமல் புத்தக பாடத்தை படிக்கிறா…
எரிச்சலுடன் பிடுங்கி டீபாய் மீது போட்டான்.
ஏன் இப்படி பண்றீங்க? அவள் சுதி கூடும் முன் வாய் கொண்டு வாய் அடைத்து தன் வயப்படுத்திக் கொண்டான்.
“————–”
அடியேய் என்னடி இது புடவை? தலையில் அடித்துக் கொண்டான்.
பாகல்புரி! அவள் சிரிக்காமல் சொன்னாள்.
சிம்பிலான சாம்பல் பண்ண புடவை.அழகாகத்தான் இருந்தது. பங்ஷனுக்கு தான் பொருந்தாது.
போய் பட்டு, இல்லைன்னா டிசைனர் சாரி ஏதாவது கட்டிட்டு வா!
என் இந்த புடவைக்கு என்ன குறைச்சல்?மாடல் போல் முந்தானையை விரித்து காட்டினாள்.
புடவைக்கு குறைச்சல் இல்லை நம்ம குடும்பத்துக்கு தான் கவுரவ குறைச்சல் ஆகும்.
போய் புடவையை மாத்திட்டு அப்படியே இந்த கம்ம்லையும் மாத்திட்டு வா!
கொஞ்சம் பெருசா கல் வைத்த மாடல் ஜிமிக்கி அந்த மாதிரி ஏதாவது போட்டுட்டு வா! சிம்பிளா வறேன்னு தாலி செயினோட வந்துடாதே…
கழுத்துக்கு டைமண்ட் நெக்லஸ் லாங்காரம் அப்படி ஏதாவது போட்டுட்டு வா!
பல தடவை சொல்லி இருக்கேன் என் ட்ரெஸ்ஸிங் விஷயத்தில் தலையிடாதீங்கன்னு…பல்லை கடித்து நின்றாள்.
இப்போ எதுக்கு டென்ஷன் உனக்கு? பொன்னுசாமி குடும்பத்து கவுண்டர் மருமகளா வா! அதுதான் நல்லது. சற்று முறைப்புடன் தான் சொன்னான்.
அடமாய் நின்றாள்.
என்னை கோபப்படுத்தாம போடி… உன் இஷ்டத்துக்கு நீயும் என் இஷ்டத்துக்கு நானும் வாழறதுக்கு எதற்கு கல்யாணம்?
நீயும் நானும் நாமாகி இருக்கிற இந்த பந்தம் தான் ஸ்பெஷல்.
உனக்கு பிடிக்கலைன்னு தான் நான் தாடி எடுத்துட்டேன். உனக்காகத்தான் ரவுண்டு நெக் டீஷர்ட் போடறேன்.உனக்கு கம்பெனி கொடுக்க தான் அசைவம் சாப்பிட ஆரம்பித்தேன்.பர்ஃபியூமே பிடிக்காத நாள் உனக்காகத்தான் யூஸ் பண்றேன்!
இதுக்கு பெயர் சுயத்தை இழப்பது இல்லை.நமக்கு பிடித்தவர்களுக்காகவே நாமாகவே விரும்பி நம்மை மாத்திக்கிறது.
உன் பாஷையில் இது அடிமைத்தனமா தெரியலாம், என் பாஷையில் இது அதீத அன்பு!
மேற்கொண்டு பேச விரும்பாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு ஹாலுக்கு போய்விட்டான்.
வெளிர் சந்தன வண்ண பட்டு அதில் பொடி கலரில் கோபுரம் போன்ற டிசைன். அதே வண்ண மெல்லிய ஜரிகை கொண்ட பட்டுப் புடவை உடுத்தி,கேரளா டிசைன் பெரிய ஜிமிக்கி போட்டு,கழுத்தை ஊட்டிய வைர நெக்லஸ்,சற்று பெரிய மாங்காய் மாலை என்று அணிந்தாள்.
முதுகை தாண்டி கூந்தல் வளர்ந்து இருந்தது. திருமணத்திற்கு பிறகு ஹேர் கட் செய்யாதது தான் காரணம்.
லூஸ் ஹேர் விட்டு நெருங்கி தொடுத்த குண்டுமல்லி சரம் சூடி ஹேண்ட் பேக் சகிதம் வெளியில் வந்தாள்.
மாலை வேளையில் மெல்ல மலரத் தொடங்கிய மல்லியின் வாசம் அவன் நாசிக்குள் புகுந்து இம்சிக்க….வைத்த விழி அகட்டாது அவளையே பார்த்தான். முதன் முதலாய் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை போல…
கிளம்பலாமா? இல்ல இருக்கிற நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு என்னை பார்!என் அழகைப் பார்! என்று நகைக்கடை மாடலாய் வரவா? மூக்கை சுருக்கி உதட்டை பிதுக்கினாள்.
இதுவே போதும் செதுக்கி வைத்த சிலை மாதிரி அம்சமா இருக்கடி என் அம்சவேணி.
இப்போ ஃபங்ஷனுக்கு போகணும்னு இருக்கு அவள் மல்லி சரத்தில் நாசியை புதைத்து ஆழ்ந்து சுகித்தான் மலரின் சுகந்தத்தோடு மனையாளின் சுகந்தமும் அவனுக்கு வேண்டும் வேண்டும் என்று கிளர்ச்சியூட்டியது.
டேய் இன்னுமா கிளம்புறீங்க? சுரேந்தர் அழைத்து கோபித்துக் கொள்ள….
ரொமான்ஸை வந்து வைத்துக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக ஒத்திவைத்து பெரிய மனதோடு கிளம்பினான்.
கார் பயணத்தில் கூட அவன் விழிகள் அவ்வப்போது சாலையையும், பெரும்பாலும் அவன் தேவதையையும் ரசித்துக் கொண்டே வந்தது.
ஹலோ ரோடு பார்த்து டிரைவ் பண்ணுங்க மேன். அடக்க மாட்டாத வெட்கத்துடன் சிணுங்கினாள்.
உன்னை யாரு இவ்வளவு அழகா இருக்க சொன்னது? இடது கரத்தால் அவள் இடை வருடினான்.
இம்சை அரசா…. இப்போ தான் பதினாறுன்னு நினைப்பா?
முப்பத்தொன்னு பெரிய வயசு இல்லையே…கன்னாபின்னாவென் று அவள் தேகம் தீண்டியது அவன் கட்டுக்கட்டங்கா விரல்கள்.
யூ…. நெளிந்தவள் ரிட்டர்ன் வரும்போது பேக் சீட் தான். அவள் சிணுங்கினாள்.
விட்டாதானே…அவன் கண்சிமிட்டினான்.
“—————”
என்னடா மச்சான் உள்ளூர்காரன், உயிர் நண்பன் இப்போது தான் வருகிற நேரமா? உரிமையாய் தோளில் கை போட்டு கோபித்துக் கொண்டான் சுரேந்தர்.
இல்லடா மச்சி நான் எப்போவோ கிளம்பிட்டேன். உன் தங்கச்சி தான் பட்டி டிங்கரிங் பார்த்து மேக்கப் பண்ண லேட் பண்ணிட்டா மொத்த பழியையும் அவள் மேல் தூக்கி சுமத்தினான்.
குழந்தையை வச்சுக்கோங்க! நான் போய் அனுபமாவை கவனிக்கிறேன் என்று குழந்தையை அவன் கையில் திணித்து நறுக்கென்று கிள்ளி விட்டு போனாள்.
அடியேய் செம்ம பிகரெல்லாம் என்னை கண்ணால் மொய்க்குது, நீ…பொறாமையில் என்கிட்ட குழந்தையை கொடுத்துட்டு போற…வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
ரொம்ப நேரமா அந்த பிளாக் டி-ஷர்ட் என்னையே குறுகுறுன்னு பார்க்கிறார் என்னை பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது? அதுதான் குழந்தையை உங்க தலையில் கட்டிட்டேன்.
அடியே எவன்டி அவன் என் பொண்டாட்டியை பார்க்கிறவன்? விஷ்ணு மீசையை முறுக்க…சோணமுத்தா அங்கிட்டு போய் புலம்பு என்று தள்ளி விட்டு போனாள்.
“————-”
ஹாய் அண்ணி முகம் மலர ஓடிவந்து அழைத்துக்கொண்டாள் விழாவில் நாயகி சுரேந்தரின் தங்கை அனுபமா.
ஹே… கல்யாண பொண்ணு எப்படி இருக்க?நேத்ரா சகஜமாகி ஒன்றி போனாள்.
அனுபமா அவளது தோழிகளை அறிமுகம் செய்து வைத்தாள். இளவட்ட பெண்கள் கூடிய இடம் கல கலத்தது.
மாப்பிள்ளையோட டெய்லி போனில் கடலை வறுக்குறியாமே? சுரேன் அண்ணா சொன்னாங்க! அனுவை வம்புக்கு இழுத்தாள்.
எங்க விஷ்ணு அண்ணாவோட நீங்க பண்ணாத ரவுசா?அனுவின் கேலியில் நாண சிவப்பில் சிலையாகி நின்றுவிட்டாள் நேத்ரா.
error: Content is protected !!