Skip to content
Post Views: 2,345
யாதுமாகி #19
ஒரு வார காலமாகவே அவள் உறக்கம் பறிபோனது.
மங்கலாவோ நீட்சியாகவோ அன்றி ஸ்திரமாகவே அவன் முகம் ஆழ்மனதில் பதிந்து போனது கண்டு அரண்டு போனாள்.
ஐயையோ என்ன நேத்ரா இது உனக்கு வந்த சோதனை? நீ எவ்வளவு ஸ்ட்ராங். சென்னையை சுற்றி வந்த சூறாவளி இப்படி இந்திரா நகரில் ஓய்ந்து கிடக்கிறதே…! என்று துணு க்குற்றாள்.
Advertisement
அவன் யாரோ எவரோ தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். “சொல்லிக் கொண்டாள்”அவ்வளவுதான்.
நில் என்று சொன்னால் மனம் நின்று விடுமா என்ன?
“——————”
Advertisement
சிவப்பு பலூனும், பஞ்சு மிட்டாய் பாக்கெட்டும் இடது கையில் இருக்க,வலது கையில் பீப்பி வைத்து ஊதிக்கொண்டே நெய்வேலி வில்லுடையான் பட்டு பங்குனி உத்திர தி(பெ)ருவிழாவில் சுற்றிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
Advertisement
பலதரப்பட்ட மக்களின் நடமாட்டமும்,சல சலவென்ற கூச்சலும், கண் கவர் கடை வீதிகளும்,காணும் இடமெங்கும் காவடிகளும், அரோகரா என்ற கோஷமும் நேத்ராவை மெய் மறந்து போக வைத்திருந்தது.
சிறுபிள்ளை போல் ஒவ்வொன்றாய் ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அன்னதானம் வழங்கிய பந்தலில் அப்படியே பிரேக் அடித்து நின்று விட்டாள்.
ஆம்…அவனேதான், அந்த முறுக்கு மீசைக்காரன் தான்! அட இது என்னடா வம்பா இருக்கு? காணும் இடமெல்லாம் காட்சியாய் நிற்கிறானே… சலிப்பாக இருந்தாலும் ரசித்துக் கொண்டே சலித்தாள் கொஞ்சம் லயித்தாள்.
Advertisement
மீசையை நீவி விட்டபடியே நண்பர்களை ஏவிக்கொண்டிருந்தான்.
பாக்கு மட்டை தட்டில் சூடான கலவை சாதமும், குடிநீர் பாட்டிலும் கொடுத்துக் கொண்டிருந்தனர் ஒரே நிறத்தில் டீ ஷர்ட் அணிந்த அவனது நண்பர் பட்டாளத்தினர்.
அன்று சட்டையில் பார்த்ததைவிட என்று டி-ஷர்டில் நன்றாகவே ஜம் என்று இருந்தான்.
கூட்டத்தினர் உணவை மொய்க்க…. அவளது கண்களோ மீசை அழகனை மொய்த்தது.
அற்பமாய் அவனையே பார்க்கிறோம் என்று அவள் புத்திக்கு உரைத்தாலும் கண்கள் கட்டுப்பாட்டை மீறி கட்டவிழ்ந்து நின்றது.
அவன் பார்ப்பதற்குள் விலகி விட வேண்டும் என்று வெகு சிரமப்பட்டு தன் விழியை விலக்கி அவ்விடம் விட்டு மனமே இல்லாமல் நகர்ந்தாள்.
அவளது ஸ்மால் பிரைனும், பிக் ஹாட்டும் அவன் இருக்கும் இடம் நோக்கி போக சொல்லி நச்சரிக்க… ச்ச…வாட் எ பிட்டி… நேத்ரா உன் ரேஞ்ச் என்ன? உன் கெப்பாகுட்டி என்ன? நீயா இப்படி?தன்னை தானே காரி துப்பிக்கொண்டு துரிதமாய் ஓடிப்போனாள். கட்டுப்பாட்டை மீறி விடுவோம் என்ற பயம் தான்.
ஏற்கனவே ஒரு வாரம் தூக்கம் கோவிந்தா இப்போ மறுபடியும் முதலில் இருந்தா? நொந்து கொண்டாள்.
“—————–”
கூர் விழியும் எடுப்பான நாசியும் நாசியின் கீழ் அழகும் கம்பீரமும் சேர்க்கும் அளவெடுத்த மீசையும் தன் மனத்திரையில் வந்து வந்து மோதி அவளை நிலை குலைய வைத்தது.
கொஞ்சம் நல்லவன் தான் போலிருக்கு… சமூக அக்கறை கொஞ்சூண்டு இருக்கும் போல! அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டாள் மனதிற்குள் தான்.
இரண்டு வாரங்களில் அவள் அரை பைத்தியம் ஆகி கொஞ்சம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள்.
ஜஸ்ட் கிரஷ் அவ்வளவு தான் என்று சொல்லி சொல்லி தன்னைத்தானே ஒரு வழியாக தேற்றி வைத்திருந்தாள்.
வேறென்ன செய்ய முடியும்?
“————————”
விதியை நொந்து கொண்டு எரிக்கும் வெயிலில் தனது சிவப்பு நிற ஆக்டிவாவை உருட்டி கொண்டு வந்து மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தியவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது! பஞ்சரான முன் சக்கர டயருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறாள். அரை கிலோமீட்டர் தள்ளிக்கொண்டு வந்தவளுக்கு கண்ணை இருட்டியது.
கத்திரி வெயில் மறந்து காஷ்மீரத்தின் குளிர்ச்சி… ஆம் அவள் உள்ளம் கவர் மீசைக்காரன் அவ்விடம் வீற்றிருந்தான்.
வெயிலில் வந்தது மாயத் தோற்றமோ என்று கண்ணை கசக்கி உற்றுப் பார்த்தாள். அவன் தான் அவனே தான் அவன் பைக்கிலும் ஏதோ பழுது போல…
ஆஹான்…என்னங்கடா எங்கே திரும்பினாலும் நீயே இருக்க? ஏன்டா என்ன வச்சு செய்யுற! சிலுத்துக்கொண்டாள்.
பேசிப் பார்க்கலாமா? உள்ளுக்குள் ஒரு ஆர்வம், என்ன பேச? கொஞ்சம் தயக்கம்! ஆள் பார்க்க முரடு போல இருக்கானே….கொஞ்சம் பயம்! நல்ல ஹைட்டா தெரியுறானே… கொஞ்சம் ரசனை, என்று அவனையே பார்வையால் சுற்றி சுற்றி 360 டிகிரிக்கு படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
மொபைலில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான்.
நல்லவன் தான் போல உதடு எல்லாம் கருக்காமல் இருக்கே!ஆராய்ச்சியாய் உற்றுப் பார்த்தாள்.
அவளுக்கே ஷேம் ஷேம் ஆகிவிட்டது.என்னடா இது பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்க்கிறோமே…சற்று நேரத்தில் அவன் நண்பனாக இருக்கக்கூடும் ஒருவன் பைக்கில் வரவே தனது பைக்கை மெக்கானிக் ஷெட்டில் விட்டு விட்டு பறந்தே போய் விட்டான்.
அவன் பறந்து போனானே என்னை மறந்து போனானே என்று உள்ளுக்குள் பாடி சிரித்துக்கொண்டாள்.
“——————–”
எம் ஏ ஆங்கில இலக்கியம் முடித்து TEFL (Teaching English as Foreign Language) சர்டிபிகேட் கோர்ஸ் படிக்க முடிவு செய்திருந்தாள்.
படிப்பில் அவளுக்கு அதீத நாட்டம் உண்டு ஆங்கில மொழியின் மீது அலாதி மோகம்.ஆங்கிலத்தையே அத்தனை விதம் உச்சரிப்பாள்.
அவள் நாட்டம் படிப்பை விட்டு விலகி ஊர் பெயர் அறியா மீசை அழகனின் மீசை முடியில் சிக்கி கிடக்கிறது.
நேத்ரா நீயாடி இது? த்தூ என்று கண்ணாடியின் முன்நின்று தன்னையே துப்பிக் கொண்டாள்.
எத்தனை பேர் உன் பின்னாடி சுத்தினாங்க நீ கன்சிடர் பண்ணவே இல்ல… இப்ப எவனோ ஒரு மீசைகாரனை நினைச்சு ரகசியமா சிரிக்கிற…தன்னை தானே திட்டி தீர்த்தாள்.
“———————–”
லைப்ரரிக்கு சென்று புத்தகம் எடுத்துக்கொண்டு வடலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றாள். இந்திரா நகர் டவுன் பஸ் வருகைக்காக நிற்கிறாள்.
பேருந்து நிலையத்தில் எதிர்புறம் அக்ரோ ப்ராடக்ட்ஸ் கடையில் அமர்ந்து யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அதே மீசைக்காரன்…அவனேதான்.
தூணிலும்,துரும்பிலும் இருப்பவன் இறைவன் மட்டுமல்ல இந்த இம்சை அரசனம் தான் போல…
காரணம் இன்றி காரியம் இல்லை,காரியம் இன்றி காரணம் இல்லை எவ்வளவு உண்மை!அவள் மனம் சடுதியில் நம்பியது.
இவனுக்கும் எனக்குமான பந்தம் விட்ட குறை தொட்ட குறை என்பார்களே அப்படியாய் இருக்கலாம் அல்லது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கலாம் அடித்து சொன்னது அலங்காரம் அறியா அவள் ஆழ்மனம்.
இறைவன் ஏன் இவனை என் கண் முன்னே அடிக்கடி காட்ட வேண்டும்? இவன்தான் எனக்காக படைக்கப்பட்ட ராஜகுமாரனோ? தவித்தாள், துடித்தாள் ஆனாலும் அதை கொஞ்சம் ரசித்தாள்.
அவளுள் விவரிக்க இயலா உணர்வு அலைகள் அடித்து அலை கழித்து அவளை ஓய்ந்து போக செய்தது.
“——————–”
மறுமுறை லைப்ரரி செல்லும்போது அவளுக்குள் ஒரு எதிர்பார்ப்பு,ஒரு குறுகுறுப்பு.அவள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை மீசையழகன் அவ்விடமே அமர்ந்து தரிசனம் வழங்கினான்.
அடாது மழை விடாது பொழியும் பார்வையாக எதிர்கடையை துளைத்துக் கொண்டிருந்தது அவள் பார்வை.
டேய் மச்சி உன்னையே ஒரு பொண்ணு பருக்கு பருக்குதுன்னு பாத்துட்டு இருக்குடா…சுரேந்தர் சொல்ல விஷ்ணு முறைதான்.
அடேய் ஐயனாரப்பா நிஜமாதாண்டா சொல்றேன் அந்த பொண்ணு அன்னைக்கு ஒரு நாள் இதே மாதிரி நின்னுட்டு உன்னையே தான் பார்த்துட்டு இருந்துச்சு.!
“அடிங்க… “ விஷ்ணு அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான்.
அடேய் பக்கி பயலே அன்னைக்கு மெக்கானிக் ஷாப்புக்கு உன்னை பிக்கப் பண்ண வந்தேனே அன்னைக்கும் இந்த புள்ள உன்னையே ‘பேன்னு பார்த்துட்டு நின்னச்சு” முதுகை நெளித்துக் கொண்டு வலியில் புலம்பினான்.
பெண் பிள்ளைகளை பார்ப்பதோ பெண் பிள்ளைகளை பற்றி பேசுவதோ விஷ்ணுவுக்கு பழக்கம் இல்லாத காரியம்.
தன்னை பற்றி தான் எதிர் கடையில் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்ட நேத்ரா மினி பஸ் ஒன்று எதிரில் வரவே சட்டென்று ஏறிக்கொண்டாள்.
“—————”
இனி தானே நினைத்தாலும் தன்னால் அவன் நினைவை அழித்து விட இயலாது என்பதை ஆணித்தரமாய் உணர்ந்து கொண்டாள்.
அவன் என்ன சாதி குலமோ தன் வீட்டில் ஒப்புக்கொள்வார்களா?எது பற்றியும் சிந்திக்க மறுத்தது அவளது முழுங்கிய மூளை.
இதே குழப்பத்தில் ஏன் தத்தளிக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவுடன் கிளம்பினாள்.
லைப்ரரிக்கு சென்று திரும்பியவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் கடைக்கு சென்றாள் .
ஹலோ அண்ணா என் பெயர் நேத்ரா.இங்கே பக்கத்தில் இந்திரா நகர் தான் வீடு. சுரேந்தரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
சுரேந்தர் “ஆவென” வாய் பிளந்து நின்றான்.
அண்ணா இங்கே அடிக்கடி ஒருத்தர் வந்து உங்க கூட பேசிட்டு இருப்பாரே அவர் பெயர் என்ன?
எது… அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது.
துளியும் தடுமாற்றம் இன்றி சர்வசாதாரணமாக நெஞ்சை நிமிர்த்தி கேட்டவளை கண்டு அரண்டு போனான் சுரேந்தர்.
ஹலோ அண்ணா என்ன பதிலை காணோம்?அவன் முகத்திற்கு எதிரே கையை அசைத்தாள்.
பாருடா… இதுதான் கலிகாலாங்கிறது! சத்தமாகவே சொன்னவனால் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.
என்ன கலிகாலம்?அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அது ஒன்னும் இல்ல நீ யாரை கேட்கிறேன்னு புரியலைம்மா. டெய்லி என் கடைக்கு 100 பேர் வராங்க போறாங்க…ஒன்றும் அறியாதவன் போல் போட்டு வாங்கினான்.
அது…அண்ணா, அவங்க அழகா வச்சிக்கிட்டு.. ஹேன்சமா…நேத்து கூட ப்ளூ ஜீன் மெரூன் ஷட்டில் இருந்தாரே… அவள் வாய் பேசியதை விட கண்கள் பேசியதே அழகு!
தெரியலையேமா.. அவரை ஏம்மா தேடறீங்க? உங்களுக்கு தெரிந்தவரா?
இல்ல சும்மா… சும்மா கேட்கலாமேன்னு… சாரி அண்ணா! இதுவரை இருந்த அசட்டு தைரியம் அடிபட்டு நசுங்கி போக…பெண்மையின் அடிமன அறிவுறுத்தலின்படி இந்த வேகம் தவறு என புரிபட “சாரி அகைன்”என்றவாரே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியேறினாள்.
துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டு மீண்டும் லைப்ரரிக்குள் நுழைந்து” சீ நாம் ஏன் இப்படி வெட்கம் கட்டு போனேன்? “என்று வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்தும் பொருட்டு கிடைத்த புத்தகத்திற்குள் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
தன் நடத்தை எண்ணி அவமானம், வெறுப்பு, அழுகை எல்லாம் சேர்ந்து மண்டைக்குள் சம்மட்டி கொண்டு அடித்தது. உடலும்,உள்ளமும் துவண்டு போனது.
அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரை குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
இனி அவனை நினைக்க கூடாது என்று எஃகு போன்ற திடமான உறுதியுடன் வெளியே வந்தாள்.
டேய் விஷ்ணு நான் சொன்னேனே நீ நம்பலை தானே?அந்த பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து உன்னை பத்தி கேட்டுச்சுடா!
என்னடா சொல்ற?வாய் பிளந்து நின்றான் வாசு.
ஆமாண்டா வாசு கொஞ்ச நாளாவே அந்த பொண்ணு இவனை ஃபாலோ பண்ணுது!
என்னது… ஒரு பொண்ணு இவனை ஃபாலோ பண்ணுதா? என்னடா அசிங்கமா சொல்ற! வாசு முகம் சுழித்தான்.
டேய் இதில் என்ன அசிங்கம் கண்ட? பையன் மட்டும் பொண்ணு பின்னாடி ரூட் விட்டுட்டு வந்தா அது ஹீரோயிசமா? எகிறினான் சுரேந்தர்.
எதுவும் பேசாது அமைதியா அமர்ந்திருந்தான் விஷ்ணு.
டேய் மச்சி அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி தெரியுதுடா! அந்த பொண்ணோட கண்களில் பொய்யில்லை. கன்சிடர் பண்ணு மச்சி . எடுத்து கூறினான் சுரேந்தர்.
நாங்க எல்லாரும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துகிட்டு செட்டில் ஆயிட்டோம். இன்னும் நீ மட்டும் தான் சிங்கிள் பீசா அலைகிற,அந்த பொண்ணையே… சுரேந்தர் சொல்லி முடிக்கவில்லை.
அட பொறுக்கி ராஸ்கல். எவடா அவ என்னை பாலோ பண்றவ? அவளுக்கு நீ புரோக்கர் வேலை பார்க்கிற? ஆவேசமாய் அவன் சட்டையை பற்றி, தலை முடியை பிடித்து ஆட்டினான்.
டேய் மச்சி அந்த பொண்ணுடா! அதோ பாருடா… பஸ் ஸ்டாப்பில் நிக்குது. சுரேந்தர் எதிர் திசையில் கை காட்ட விஷ்ணுவும் வாசுவும் ஒரே நேரத்தில் அங்கே பார்த்தனர்.
எளிமையாக ஒடிசலாக அழகாக இருந்த அவளை ஆச்சரியமாய் பார்த்தான் வாசு.
டேய் சுரேனே நிஜமாத்தான் சொல்றியா? பொண்ணு மாடர்னா அழகா இருக்கு.இந்த காட்டானை பார்க்குதா? நம்ப முடியலையே… வாசு விழி விரிக்க விஷ்ணு அவன் வாயில் குத்தினான்…
இனி அவனை நினைக்க கூடாது என்று எண்ணியிருந்த அவள் சபதம் சுக்கல் சுக்கலாய் உதிர்ந்து போனது எதிர் கடையில் அவனது திவ்ய தரிசனம் கண்டவுடன்.
அடர் சந்தன வண்ணம், கொஞ்சம் மஞ்சள் வண்ணம் போலவும் தெரியும். கருப்பு கட்டம் மெலிதாய் போட்ட முழுக்கை சட்டை. அந்த கையை ஏற்றி விட்டபடி பேசிக் கொண்டிருந்த அந்த மாயாவி மாரிசனை கொய்து கொண்டிருந்தது அவள் நீள் விழி பார்வை.
டேய் மச்சி அந்த பொண்ணு சின்ன புள்ளத்தனமா இருக்கு. ரொம்ப சாப்ட் நேச்சரா தெரியுதுடா! பிரச்சனை பண்ணாத ப்ளீஸ்.சுரேந்தர் விஷ்ணுவின் கரம் பற்றி தடுக்க முனைந்தான்.
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து பாயும் நதி போல் சீற்றத்துடன் அவனை தள்ளி விட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான் அந்த மீசை அழகு சுந்தரன்.
error: Content is protected !!