Skip to content
Post Views: 2,437
யாதுமாகி #21
நான் கால் பண்ணா கட் பண்ணுவியா? போடிங்க… நீ எல்லாம் ஒரு ஆளு! உள்ளுக்குள் உறுமியவன் ஒதுக்கி விட்டான் விழி அழகியை.
அவ்வப்போது அவள் நினைவு பிராண்டிக் கொண்டிருந்தாலும் வெற்றிகரமாய் ஒதுக்கி வைக்க கற்றுத் தேர்ந்தான்.
அவள் தான் மெய்யிளைத்து களைத்து சோர்ந்து போனாள்.
Advertisement
வேதம் மகள் போக்கை எண்ணி வருத்தம் கொண்டார். கலகலன்னு சுத்திட்டு இருந்த பொண்ணு இப்படி பாதியாக ஒடுங்கி போய் இருக்காளே… என்ன ஏதுன்னு சொல்லவும் மாட்டேங்கிறா… வயசு புள்ள கண்ட இடத்துல அலையறா காத்து கருப்பு அண்டிடுச்சோ? தாய் மனம் தவித்தது புலம்பியது அரற்றியது.
ஏங்க அவ மனசுல யாரையாவது…?
அடி செருப்பால…பெத்த பொண்ணு பத்தி எவ்வளவு நல்ல நினைப்பு பாரு! நீ பெத்தவளாடி? வெங்கடாசலம் மனைவியை அடிக்க பாய்ந்தார்.
Advertisement
இல்லங்க ஒரு பேச்சுக்கு…
Advertisement
பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதே… என் பொண்ணு அப்படி கிடையாது. மகளை அவ்வளவு உயரத்தில் வைத்து செல்லம் கொஞ்சினார் வெங்கடாசலம்.
“———————”
நேத்ரா வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்வதில்லை. அதிலும் தனது அறையை விட்டு அதிகம் வெளியே வருவதில்லை.
Advertisement
லைப்ரரி,கோயில், ஷாப்பிங், ஸ்கூட்டியில் லாங் டிராவல் என்று துறுதுறுத்து அலைபவள் சோபை இழந்து சுருண்டு கிடக்கிறாள்.
தாயின் வற்புறுத்தலின் பேரில் சங்கடஹர சதுர்த்திக்கு கோயிலுக்கு வந்திருந்தாள்.
தன் சங்கடம் தீரும் என்று இல்லை! தாய் மனம் சங்கடம் கொள்ள வேண்டாம் என்று…
சுரேந்தர் தன் மனைவி தீபிகா குழந்தை வைனேஷ் உடன் கோயிலுக்கு வந்திருந்தான். அங்கு நேத்ராவை கண்டவன் மனம் பதறினான்.
என்னம்மா இப்படி இருக்க? கலக்கத்துடன் கேட்டான்.
எனக்கென்ன நல்லா இருக்கேண்ணா. சிரிக்க முயன்றாள் அதில் ஜீவன் இல்லை.
அவர் நல்லா இருக்காரா? அடக்கிய விழி நீரை தேக்கி கொண்டு தலை குனிந்த படி கேட்டாள்.
ம்ம்ம்ம்… நல்லா இருக்கான். நீ ரொம்ப தைரியமான பொண்ணாச்சே, நீ ஏம்மா…? அவனுக்கு உள்ளுக்குள் அறுத்தது.
இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? இந்த காட்டுப் பய ஏன் இப்படி நடந்துக்கிறான்? உள்ளுக்குள் அவ்வளவு கோபம்.
இப்போவும் தைரியமா தான் இருக்கேன். அம்மா கூப்பிடறாங்க, வரேன் அண்ணா. விடை பெற்று சென்றவளை வலியோடு பார்த்தால் அவனுக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்.
“———————”
ஷூ லேசை இறுக்கி கட்டிக் கொண்டிருந்தவனிடம்” அந்த பொண்ணை நேத்து பார்த்தேன்” என்றான் சுரேந்தர்.
எந்த பொண்ணு? வாசு புரியாமல் கேட்டான்.
அதுதான் இவனை ஃபாலோ பண்ணிட்டு….
அடிங்க,பக்கி,பன்னாடை நான் கேட்டேனாடா உன்னை? நீ எவளை பார்த்தால் எனக்கென்ன? ராக்கெட்டை தூக்கி அவன் மீது வீசியவன் லேசான நடுக்கத்துடன் அருகில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் தலையை இறுக பற்றிய படி அமர்ந்தான்.
பெண் பாவம் பொல்லாததுடா, அந்த புள்ள தன்னையே வருத்திகிட்டு துரும்பா இளைத்து கிடக்கு. பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி பாவமா இருக்குடா.இவன் மைனர் கணக்கா சுத்திகிட்டு திரியிறான்.ரொம்ப சீன் போடுற மச்சி உனக்கு அவ்வளவு ஒர்த் இல்லை.
அந்த புள்ளையை பார்த்த நொடி எனக்கு கண்ணே கலங்கி போச்சுடா!எவ்வளவு அழகா துரு துருனு இருந்த பொண்ணு உண்மையில் சொல்லும் போதே கலங்கியது சுரேந்தரின் விழிகள்.
டேய் விஷ்ணு நீ நியாயஸ்தன்னு அடிக்கடி சொல்வேன். இப்போ அநியாயமா அந்த பொண்ணு உணர்வை தட்டி கழிக்கிற ரொம்ப தப்புடா. இறங்கிய குரலில் மென்மையாக எடுத்து கூறினான் உரிமையுடன் தோளில்கை போட்டு.
டேய் சுரேன் அதெல்லாம் செட் ஆகாதுடா… விடுடா போக போக மனசு மாறிடுவா. திடமாய் காட்டிக்கொண்டு கித்தாய்ப்பாய் பேசினான்.
மனசு மாறுற பிள்ளையா இருந்தா ஏன்டா இப்படி பாதியாக இளைத்து கிடக்கு?
புரியாம பேசாதடா நண்பனிடம் காய்ந்தான்.
உங்க அம்மாவை நினைச்சு யோசிக்கிறியா?அந்த பொண்ணு உன் கூட தானே வாழ போகுது?
என் வீட்டுல தானே வாழ்ந்தாகணும்! ஒற்றை வரியில் அனைத்தும் உணர்த்தினான்.
“——————”
செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தாள் மிஸ்டர் ஹேண்ட்சம்.நடுங்கியது மேனி… வெறித்து பார்த்தாள். அலறி பார்த்துவிட்டு அது அடங்கி போனது.
மீண்டும் சிணுங்கியது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சைலண்டில் போட்டாள்.
வாட்சப் மெசேஜ் வந்து குதித்தது. ஒழுங்கா சாப்பிடு! மேற்கொண்டு படிக்கிற வழியைப் பாரு.
அவள் பதில் அளிக்கவில்லை.
ரொம்ப ரோஷக்காரியா இருக்காளே… தலையில் தட்டிக் கொண்டான.
ஏய் குறிக்காரி சின்ன பிள்ளைத்தனமா இல்லாம நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்கு!
“இடியட்” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவளிடம் இருந்து வந்தது. அடுத்த நொடியே ஆஃப்லைனுக்கு போய்விட்டாள்.
அவளின் குழந்தைத்தனமான செய்கையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
சுரேந்தர் சொன்னதிலிருந்து அவள் நினைவு அரித்து எடுத்தது.
அப்படி என்ன காதல் என் மீது இவளுக்கு?! சிலிர்த்துக் கொண்டான்.
“——————-”
Stanford பல்கலைக்கழகத்தில் படிக்க முடிவு செய்தாள். இங்கிருந்தால் எமோஷனல் பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்ற அச்சம் அவளுக்கு.
இரு வாரங்களுக்கு பிறகு வெளியில் சென்று வரலாம் என்று ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பினாள்.
என்எல்சி ஆபீஸர் நகர் லைப்ரரியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த விஷ்ணு டர் என்ற நாசகரமான ஒலியில் தன் அருகில் நாற்காலி இழு படும் சத்தம் கேட்டு தலை நிமிர்த்தினான். ஆம் எதிரில் அவளே தான். கோபம் மறந்து சுற்றம் மறந்து ஒருவரை ஒருவர் பார்வையால் வருடிக் கொண்டனர். (அத்தியாயம் 9 பார்க்க)
அடுத்த மூன்றாவது நாளே எதிர்பாராத விதமாக லிக்னைட் ஹால் புத்தக கண்காட்சியில் சந்தித்தனர்.
அங்கு மனம் விட்டு பேசி தன் குடும்ப சூழலை எடுத்துக் கூறினான்.
விஷ்ணுவிற்கு கேம்பிரிட்ஜில் எம்பிஏ படித்து பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசை.
பொன்னுசாமி கவுண்டருக்கு பேரன் தங்களை பிரிந்து கடல் கடந்து சென்று படிப்பதில் விருப்பமில்லை.
விஷ்ணு, தாத்தா பாட்டி செல்லம்.அதிலும் பொன்னுசாமி கவுண்டரின் வார்ப்பு அவன்.
தாத்தா அடிக்கடி பேரனிடம் சொல்வதுண்டு நம்ப பரம்பரை இங்கேதான் வேரூன்றி தழைத்து நிற்கணும்! தலைமுறை தலைமுறையா வரும் பெயரையும் புகழையும் கட்டி காபந்து பண்ணனும்.
அன்னத்திற்கு பேரன் தான் உயிர். கணவனின் நகல் போன்ற தோற்றம் ஒரு காரணமாய் இருக்கலாம்.
கல்லூரி பருவத்தில் கூட அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடுவார்.
பொன்னுசாமி இதய நோயில் இறக்கும் தருவாயில் மூச்சு வாங்க பேசினார்.
நம்ம மண்ணுல, நம்ம மனுஷன் மக்களோட வாழறது தான் சந்தோஷம். அன்னம் உன் பொறுப்பு! அவளுக்கு நான்தான் தெய்வம். இந்த வீடுதான் கோயில். அப்படியே வாழ்ந்திட்டா. அவளை சந்தோஷமா பார்த்துக்கோ! நம்ம வம்ச பெருமைக்கு குந்தகம் வராமல் நடந்துக்கோ. என்று அவன் கரம் பற்றிய படியே உயிர் நீத்தார்.
உனக்கு கிராமத்து வாழ்க்கை சரிவராது நேத்ரா. ஒன்றுக்கு நூறு முறை கூறினான்.
உன் மேல் உள்ள காதலுக்காக என்னால் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்திட முடியாது.
நான் எனக்காக உங்களை ஓடி வர சொல்லலையே…
அவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்தது.
உங்களுக்கு என்னை பிடிக்கும் இல்லையா?அதுவே போதும்!
என்னால ஓவர் நைட்டில் கண்டாங்கி புடவை கட்டிக்கிட்டு மஞ்சள் பூசி குங்குமம் வச்சிக்கிட்டு, ஜல் ஜல் ஜால்ரா கொலுசு போட்டுகிட்டு கிராமத்து பொண்ணா மாற முடியாது.
கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா மாத்திப்பேன்.
அவனுக்கு நம்பிக்கை அளித்தாள்.
நான் நெக்ஸ்ட் மந்த் லண்டன் போகனும்!
போய் படி!நிதானமாகவே சொன்னான்.
மாட்டேன்… நான் படித்துட்டு வருவதற்குள்ள உங்களுக்கு மேரேஜ் ஆகிடும்.பயத்துடன் சொன்னாள்.
உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க?சின்ன பிள்ளை மாதிரி அடம்பிடிக்கிற.சோர்ந்து போனான்.
அவள் அசராது அவன் எழில் முகம் கண்டாள.
இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ! நல்லா யோசித்து முடிவு பண்ணு.
யோசிச்சுகிட்டே இருந்தா உங்களுக்கு 60 ஆகிடும். புன்னகை முகமாய் கேலி பேசினாள்.
எனக்கு மட்டும் தான் ஆகுமா?
ஆமா! நான் சின்ன பொண்ணு!சிலுப்பிக் கொண்டாள்.
சின்ன பொண்ணுக்கு என்ன லவ் வேண்டி கிடக்கு?
அது… அது… பதில் பேசாது விழித்தாள்அவள் அழகு முகம் கண்டவன் சற்று தடுமாறினான். உனக்கு டைம் ஆச்சு கிளம்பு!விரட்டினான்.
இருவரும் நெடுநேரம் சீரியஸாய் பேசிக்கொண்டிருந்ததை யாரோ எப்படியோ நேத்ரா வீட்டில் பற்ற வைத்து விட்டனர்.
தாய், தந்தை பார்வை மகள் மீது புதியதாய் விழுந்தது. கண்காணிக்கப்பட்டால் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டாள்.
பையன் யார் என்று கேட்கவில்லை அவளிடம் சண்டை போடவில்லை இயல்பாகவே இருந்தனர் பெற்றவர்கள்.
தன் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள் நேத்ரா.
உடனடியாக விஷ்ணுவிற்கு அழைத்து வீட்டு நிலவரத்தை கூறினாள்.
கண்டிப்பா வெங்கி ஒத்துக்க மாட்டார் சலிப்பாய் முனுமுனுத்தான்.
எங்க அப்பா பெயர் தெரியுமா? ஆச்சரியமாய் கேட்டாள்.
உன் பாட்டன் நடேசன், சேலத்தில் இருக்கும் உன் அங்காளி பங்காளி வரைக்கும் ஆல் டீடெயில்ஸ் ஐ நோ என்றான்.
அவளுக்குள் சொல்லொண்ணா மகிழ்ச்சி. இவன் கண்டிப்பாக தன்னை கைவிட மாட்டான் என்பதில் அவளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை பிறந்தது.
ஏய் குறிக்காரி… உங்க கீழ் வீட்ல ரெண்டலுக்கு இருக்கிற நாலு குடும்பம் கூட தெரியும். என்று சிரித்தான்.
தன்னை பற்றி இவ்வளவு தகவல் அறிந்து வைத்திருக்கிறானா? அவளுக்கு புல்லரிப்பாய் இருந்தது.
எங்க அப்பா ஒத்துக்க மாட்டாரா? பாவமாய் கேட்டாள்.
எஸ், நைண்டி பர்சென்ட் சான்ஸ் இல்லை,அவன் கடகடவென்று சிரித்தான்.
லூசு…என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?வெடித்து சிதறினாள்.
அழவா சொல்ற?
எங்கப்பா நம்ம லவ்வை அக்செப்ட் பண்ணலைனா?
ஓடி போவோம்! மீண்டும் சத்தமாய் சிரித்தான்.
இடியட்…பல்லை கடித்தாள்.
கரெக்ட்டா சொன்ன, இடியட்டா இருக்க போய் தான் இவ்வளவு காலம் விவரமா சுத்திகிட்டு இருந்தவன் இப்போ வசமா உன்கிட்ட மாட்டிகிட்டேன். மீண்டும் சிரித்தான்.
You…idiotic idiot, be a little serious man. This is our life. I am worried about our future but you’re laughing.
அவள் பேச பேச மீண்டும் குலுங்கி சிரித்தான் ஹா ஹா குறிக்காரி இங்கிலீஷில் கத்த ஆரம்பிச்சிட்டா.
ஷட்டப் மேன் கத்த ஆரம்பித்தாள்.
ஹே…ரிலாக்ஸ், ரிலாக்ஸ்! இப்போ எதுக்கு இவ்வளவு ரியாக் பண்ற?ஓடிப்போக முடியாதுன்னா கார்ல போகலாம்.அவன் மீண்டும் ஊசி வெடி பட்டாசை கொளுத்தி போட…
Rubbish, I’ll kill you. கத்தியபடி டிஸ்கனெக்ட் செய்தாள்.
சற்று நேரம் பொறுத்து மீண்டும் அழைப்பு வந்தது. எஸ் அவளது ஹேன்ட்சம்தான்.
இப்போ எதுக்கு கால் பண்றீங்க? இன்னும் மொக்கை போடவா.
கூல் கூல் குடை மிளகாய் மூக்கு சிவந்திட போகுது! அவன் வெறுப்பேற்ற…அவள் வாழ்க்கையே வெறுத்து போனாள்.
சரி சரி சீரியஸ் நவ். நான் நாளைக்கு கொல்கத்தா போறேன்.
எதுக்கு?
பார் கவுன்சில் மெம்பர்ஸ் அட்டென்ட் பண்ற” New legal amendments and its subtle clauses “ என்ற தலைப்பில் கான்ஃபரன்ஸ் கொல்கத்தாவில் நடக்குது. ஹைகோர்ட் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜஸ் எல்லாம் கலந்துக்குறாங்க.
நான் தர்ஸ்டே ரிட்டன் ஆகிறேன்.
அவள் புறமிருந்து பதில் ஏதும் இல்லை.
நேத்து லைன்ல இருக்கியா?
ம்ம்ம்ம் மட்டுமே பதிலாக வந்தது.
எதுக்குடி இவ்வளவு டென்ஷன் உனக்கு? உங்க வீட்ல தெரிந்ததுக்கே இப்படி டென்ஷன் ஆகுறியே… இன்னும் எங்க வீட்டுல தெரிந்தால் என்ன ரணகளம் ஆகுமோ? அதை எப்படி அக்செப்ட் பண்ணிப்ப?
இப்போ ஏன் பயமுறுத்துறீங்க?
லூசு.. இதெல்லாம் யோசித்துதான் இந்த லவ் வேண்டாம்னு சொன்னேன்.
சரி சரி மறுபடி பழைய பல்லவி வேண்டாம்.
பின்ன இப்போ ஜெர்க் ஆகி நின்னா என்ன பண்ண?
நான் கொல்கத்தா போயிட்டு வந்த உடனே எங்க வீட்ல பேசுறேன். அங்க என்ன ரியாக்ஷன் என்று பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்!
எனக்கு பயமாயிருக்கு.ஏதோ தவறாக நடக்க போகுதுன்னு உறுத்தலா இருக்கு. அவள் மனம் தெளியாது பிதற்றினாள்.
லூசு என்னை மீறி ஒன்னும் நடக்காதுடி. இரண்டு சைடும் ஏத்துக்கலைன்னா கூட உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்ட எனக்கு தெம்பிருக்கு.
மனசை குழப்பிக்காமல் நல்லா சாப்பிட்டு நிம்மதியா இருடி செல்லம். நான் வந்ததும் சுபம் சுபம் தான். அவளுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தான்.
“—————”
காலையிலேயே வீடு தேடி வந்த வாசு சோகமாய் சொல்லி முடித்தான்.
என்னடா சொல்ற?கை நரம்பை கட் பண்ணிகிட்டாளா? நடுங்கி போனான் விஷ்ணு.
ஆமா மச்சி மீனாக்ஷி ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கோம்.நேத்து முழுக்க ஐ சி யூ வில் இருந்துச்சு. இன்னைக்கு மார்னிங் தான் அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறதா டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க.
என்னடா ஆச்சு? அவன் சட்டையை பற்றி உலுக்கினான்.
அவங்க அப்பா சைலன்ட்டா இருந்து வில்லனா மாறியிருக்காரு.
என்னடா சொல்ற? கழுத்து நரம்புகள் புடைத்தது.
நீ ஊரில் இல்லை என்று தெரிந்து சொந்தக்கார மாப்பிள்ளையை பெண் பார்க்க வரவழைத்துட்டார் அவங்க அப்பா.
இந்த பொண்ண எவ்வளவோ அழுது கெஞ்சி இருக்கு.
உங்க ஜோதி அம்மா பற்றி ஊருக்குள்ள நல்ல அபிப்பிராயம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
நம்ம தகுதிக்கு மீறின இடத்தில் அடிமையா வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
உடனே உனக்கு போன் பண்ணி பார்த்து இருக்கு.உனக்கு நாட் ரீச்சபிள்… எனக்கு போன் பண்ணி அழுதுச்சு! நானும் நரேனும் போறதுக்குள்ள இப்படி பண்ணிடுச்சு.
எனக்கு அங்கே ரோமிங் ப்ராப்ளம்டா. இன்கமிங் இல்லை.நேத்து ஈவினிங் அவளுக்கு கால் பண்ணினேன் நாட் ரீச்சபிள்.
ஏன்டா பொண்ணு பார்க்க தானே வந்தாங்க.. அதுக்கு போய் இந்த பைத்தியக்காரி துடியாய் துடித்தான்.
இல்லை மச்சி கையோட ஒப்புத்தாம்பூலம் மாத்த ஏற்பாடு பண்ணி இருக்காங்க.
என்ன பண்ணி அந்த நிச்சயத்தை நிறுத்தன்னு தெரியாம மணிக்கட்டை அறுத்துக்கிட்டு இருக்கு.
பயங்கர பிளட் லாஸ் மச்சி. சுரேன் கூட பிளட் டொனேட் பண்ணினான்.
நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. மரியாதையா அந்த புள்ள கழுத்தில் தாலி கட்டு அவ்வளவுதான் சொல்வேன்.
மனம் உடைந்து போனான் வாசு.
சரி நான் போய் அவளை ஹாஸ்பிடலில் இருந்து இப்பவே தூக்கிட்டு வந்துடறேன்.
டேய் தேவையில்லாம பிரச்சனை பண்ணாத… அந்த பொண்ணை பெத்தவங்க ரொம்ப உடைத்து போய் இருக்காங்க.
அதுக்கு…?
கொஞ்சம் பொறுமையா இரு. நிலைமை கொஞ்சம் ஸ்மூத்தா மாறட்டும்.
இன்னும் என்ன மாறனும்? இப்படியே அவ சாகணும் அப்படித்தானே?
வாயை மூடுடா! நல்ல பேச்சு பேசாம… வாயில் ஒன்று போட்டான்.
இப்போதைக்கு நீ உங்க வீட்ல பேசு!
அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. தெளிவாய் சொன்னான்.
அப்பாட்ட பேசுடா அவர் புரிஞ்சுக்குவார்.பாட்டி கண்டிப்பா உனக்கு ஆதரவா இருப்பாங்க.
எனக்கு அவ கிட்ட பேசணும், அவளை பார்க்கணும்.
ஹாஸ்பிடலில் வைத்து பிரச்சினை வேண்டாம் மச்சி ப்ளீஸ் நான் வேணும்னா நேத்ராவை பார்த்து உன்னோட போன்ல பேச சொல்றேன்.
“———————”
நேத்ரா விஷ்ணு வந்துட்டான் உன்னை பார்க்க துடிச்சிட்டு இருக்கான்.
அவள் கண்களில் நீர் அருவியாக பொங்கியது.
அவன் கூட பேசு!மொபைலை கொடுத்துவிட்டு வெளியேறினான்.
ஹலோ…அவன் குரல் கேட்டு உடைந்து அழுதாள்.
ஏன்டி இப்படி பண்ணின?பைத்தியக்காரி…
என் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே இப்படி பண்ணின?
இல்லை நிச்சயமாகிட்டாலே பாதி கல்யாணம் முடிந்ததுன்னு பேசிக்கிட்டாங்க.
வேறொருத்தனுக்கு நிச்சயமாகி விஷ்ணுவுக்கு மனைவியாகிறதை நான் விரும்பல.
அதுக்கு…உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் என்னடி பண்ணுவேன்?
எதுவும் ஆகாது. நான் என் விஷ்ணுவோட நூறு வருஷம் வாழனும்.உங்க அம்மாவோட சண்டை போடணும். அவள் வலி மறைத்து சிரிக்க முயன்றாள்.
அந்த நொடி முடிவு செய்தான் அவள் இல்லாமல் என் வாழ்வு இல்லை.யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் அவளை இழப்பதற்கு இல்லை என்று தெளிவாக முடிவு செய்தான்.
“——————”
விஷ்ணு தன் தந்தையிடம் அனைத்தையும் கூறினான்.
வேணுகோபாலன் அதிர்ந்து நின்றார்.
அன்னமோ,விஷ்ணுவிற்காக உயிரை விட துணிந்த அவளின் நேசத்தை புரிந்து கொண்டார்.
உங்க ஆத்தா சம்மதிக்க மாட்டா, அதுக்காக அந்த பிள்ளையை கை விட்டுடாத சாமி என்றார்.
பாட்டியின் ஆதரவு கிடைத்ததில் நிம்மதிய அடைந்தான்.
வேணு மனைவியை எண்ணி கவலை கொண்டார்.மகனும் மனைவியும் மோதிக்கொள்ளும் நிலை எண்ணி நொந்து போனார். அவரால் வேறென்ன செய்ய இயலும்? அவருக்கு மனைவியின் கோபத்தை விடவும் மகனின் ஆசையே முக்கியமாய் பட்டது.
“—————–”
வாசு எனக்கு நேத்ராவை பார்க்கணும்டா கெஞ்சினான்.
எப்படிடா நேத்து தான் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்திருக்காங்க.
எனக்கு தெரியாது. அவளை பார்க்கணும். ஏதாவது பண்ணுடா ப்ளீஸ். எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.
சரி நான் ஏதாவது பிளான் பண்றேன். நேத்ராவிற்கு மருத்துவமனையில் உதவி செய்தது,ரத்தம் கொடுத்தது எல்லாம் இவனும் சுரேனும் தான். அவளது நண்பன் என்ற வகையில் அவர்கள் குடும்பத்தோடு நான்கு நாட்களாக பழக்கம் இருந்தது.
நேத்ராவை பக்கத்தில் கோயிலுக்கு அழைத்து சென்று நேர்த்திகடன் செய்வதாய் அவன் தந்தையிடம் அனுமதி வாங்கினான்.
நானும் வரேன் என்று வேதம் கிளம்ப….
கிழிஞ்சுது போ…அது அம்மா இங்கே பக்கத்தில் வில்லுடையான்பட்டு முருகன் கோயில் தான். என் வைப் அம்மா எல்லாம் இருக்காங்க. நாங்க பார்த்துக்கறோம். ரொம்ப டயர்டா இருக்கீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!
ஒரு வழியாய் அவரைப் பேசி சரிகட்டி நேத்ராவை அழைத்து கொண்டு வந்தான்.
காருக்குள் இருந்த விஷ்ணுவை கண்டவள் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
விஷ்ணுவிற்கு கண்கள் கலங்கியது.காற்றுக்கும் இடம் கொடுக்க மாட்டேன் என்பதாய் ஆரத்தழுவி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
error: Content is protected !!