Skip to content
Post Views: 2,566
யாதுமாகி #24
ஐயோ செம…செம… சிஸ்டர், கலக்கல் கல்யாணம் போங்க. இளஞ்சிட்டுகள் மொத்தமாய் கோரஸ் பாடியது.
சார் உங்களை அவ்வளவு லவ் பண்ணி திரில்லிங்க மேரேஜ் பண்ணி இருக்கார், கூட்டத்தில் ஒருத்தி பொறாமையாய் கூறினான்.
மேரேஜ் பண்ணியது தான் இவர்களுக்கு சொல்ல முடியும் அதன் பிறகு நடந்தது அவள் மட்டுமே அறிவாள்.
Advertisement
மௌனத்தில் ஆழ்ந்தவளின் கள்ளம் பற்றிய அனுபமா அண்ணி, “அந்த நாள் ஞாபகமா? “ கண் சிமிட்டினாள்.
அந்த நாள் நினைவு சுகமாக தான் இருந்தது.
மாங்கல்யம் பூட்டும் போது அவன் விழி சுருக்கி சொக்கும் விழியால் விழுங்கியதும், குங்குமம் வைக்கும் போது கன்னத்தை தட்டி சிலிர்க்க வைத்ததும், அக்கினியை வலம் வரும்போது அவள் கரத்தை பற்றி ஓடிப் போகலாமா? என்று ஹாஸ்யமாக பேசியதும் கதை அல்ல காவியம்
Advertisement
பந்தியில் அமர்ந்து முதல் விருந்து உண்ணும் போது கேசரியை ஊட்டுவது போல் அவள் இதழை நிரண்டியதும், சுற்றி நின்ற வானரங்கள் ஹே என்று கூச்சலிட்டு கேலி செய்து வெட்கத்தில் அவள் சிவந்ததும், கேமரா அதையும் உள்வாங்கி கண் சிமிட்டியதும்… நினைத்தாலே இனிக்கும்!
Advertisement
முதன்முதலாய் மகளின் புகுந்த வீட்டைக் கண்டு வாய் பிளந்தார் வேதவள்ளி.
இந்த கிராமத்தில் இத்தனை பெரிய வீடா? என்று நேத்ராவின் சொந்தங்கள் வாய்ப்பிளந்தது அரண்மனை போன்ற மூன்றடுக்கு மாளிகையைக் கண்டு!
மணமக்களாய் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது ஆரத்தி சுற்றிய ஜோதி மருமகள் நெற்றியில் திலகமிடுவதாய் விரல் கொண்டு குத்தியதும்,அதிர்ந்து நிமிர்ந்தவளை தீப்பார்வை பார்த்ததும்… அப்பப்பா அது ஒரு தீ கனா.
Advertisement
பூஜை அறையில் விளக்கேற்றும் போது அவள் சீதனமாய் கொண்டு வந்த வெள்ளி விளக்கை ஜோதி எள்ளி நகையாடிய போது…வேதம் துடிக்க, வெங்கடாசலம் முறைக்க.. கண்கலங்கி நின்றாள் நேத்ரா.
அம்மா இந்தாங்க பாலும், பழமும் கொடுங்க! ஜோதியின் கையில் வாழைப்பழம் கொடுத்தாள் வினிதா.
விஷம் இருந்தா கொடு! நொடித்துக் கொண்டே உள்ளே போனார் ஜோதி.
துக்கிரியாய் பேசும் சம்மந்தி அம்மாவை அச்சத்தோடு நோக்கினார் வேதம்.
இதற்குத் தான் சொன்னேன்! என்பதாய் இருந்தது வெங்கியின் கோபமான பார்வை.
வெட்கத்தில் சிவக்க வேண்டிய நேத்ரா அவமானத்தில் கன்றி சிவந்தாள்.அதுவும் முதல் நாளே, முதன்முதலில் காலடி வைத்து வீட்டிற்குள் வந்த உடனே…
பொறு என்பது போல் அவள் கரம் பற்றி அழுத்தி கண்களால் சாந்தப்படுத்தினான் விஷ்ணு.
வேதா நீ இன்னைக்கு நேத்ரா கூடவே இரு!குழந்தை முகமே சரியில்லை என்றார் வெங்கடாசலம்
இல்லப்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க என்றாள் நேத்ரா.
இல்லடா நான் இங்கே உன் கூட…. கலங்கிய விழியோடு வேதம் மகளை ஏறிட்டார்.
ஒன்னும் பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கிறேன் என்றாள் தாயின் தோள் சாய்ந்து.
மனமின்றி தன் ஒற்றை மகளை விட்டுச் சென்றார் வேதம்.
வீடு தான் விசாலம், வீட்டில் உள்ளவர்கள் மனம் குறுகல் என்று உணர்ந்தவரால் நிம்மதியாய் கிளம்ப முடியவில்லை.
கண்கள் தளும்பி திரும்பி, திரும்பி மகளை பார்த்து தயங்கி நிற்கும் மாமியார் முகம் கண்டு விதிர் விதித்தவன் அத்தை நேத்ரா என் பொறுப்பு என்றான் வாக்களிக்கும் முகமாக.
ஜோதியின் குத்தல் மொழியில் தன்னை பெற்றவர்களின் தன்மானம் அடிபட்டு நசுங்குவதை அவள் விரும்பவில்லை.எனவே தாய் தகப்பனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.
“———————–”
மற்ற சடங்குக்கு நேரம் குறிச்சிட்டியா வேணு?அன்னம் மகனை கேட்டார்.
அது ஒன்னு தான் குறைச்சல்! நாம தேடித்தேடி வந்த தேவதை என் குடும்பத்தை விளங்க வைக்க போறா… மீண்டும் சொல்லால் அடித்து சென்றார் ஜோதி.
மாமியாரின் கோர முகம் கண்டு அஞ்சி நின்றாள் கபடமற்ற நேத்ரா.
ஜோதியைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தாள்,ஆனால் இவ்வளவு கொடூரமாய் பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அவள் தாய் தகப்பனால் கொண்டாடப்பட்டவள்.
தேவதை பெண்ணாக வளர்க்கப்பட்டவள்,வஞ்சகம் சூழ்ச்சி தெரியாதவள். அவளுக்கு இந்த குத்தல் மொழி புதிது!
அவள் ஏதோ மாமியார் என்னும் போஸ்டிங்கை விளையாட்டாக எண்ணிவிட்டாள். அது பவர்ஃபுல்லான ஐநா சபை தலைவர் பதவி போல் என்று அவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஜோதி மட்டுமல்ல,ஜோதியின் சொந்த பந்தம் அனைத்தும் நேத்ராவை ஒரு மாதிரியாகவே பார்த்தது.
ஏதோ நேத்ரா வெறுங்கையை வீசிக்கொண்டு புறவாசல் வழியாக வந்தது போல் அவ்வளவு நக்கல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.
என் பொண்ணு வதனியை கட்டி இருந்தா ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்திருக்கும். கோடிக்கணக்கான சொத்தோட என் பொண்ணு வந்திருப்பா அதுக்கு உனக்கு கொடுப்பினை இல்லை.ஜோதிக்குள் புகைந்த நெருப்பை மேலும் விசிறி விட்டுப் போனார் வதனியின் அம்மா.
என்னதான் இது தனக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை என்று ஒதுங்கிப் போனாலும்,தன் அத்தான் பக்கத்தில் வேறொருத்தி நிற்பது கண்டு வதனிக்கு வயிறு எரிந்தது. பார்வையால் பஸ்பம் ஆக்கிவிட்டு உதட்டை சுழித்து ஏளன புன்னகை சிந்தி சென்றவளை இயலாமையோடு பார்த்தாள் நேத்ரா.
“——————”
வினிதாவும் அவள் நாத்தனார் ஷர்மியும் நேத்ராவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
கலங்கி தவித்து மருண்டு இருக்கும் நேத்ராவை கண்டு “என் ராசாத்தி “கன்னம் வழித்து நெட்டை உடைத்தார் அன்னம்.
சாந்தமாய் புன்னகை புரிந்த பாட்டியை அவளுக்கு உடனே பிடித்து விட்டது.பாட்டியை கண்டு லேசாக இதழ் விரித்தாள்.
இது உன் வீடு! நீ எதுக்கும் அஞ்சாத தங்கம்.உனக்கு குணமான புருஷன் தான் அமைந்திருக்கான்.என்ன ஒன்னு கோவத்துல அவன் ஆத்தா போல,ஆனா குணத்துல பாட்டனை போல.
அன்பாய் அவள் கன்னம் வருடி முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
டேய் மச்சி நேத்ரா பாவம்டா! இங்கே யாருமே அந்த பொண்ணு கூட முகம் கொடுத்து பேசல… இந்த வீட்டில எப்படி குப்பை கொட்ட போகுதோ? சுரேந்தர் உண்மையில் வருந்தினான்.
சரி அதை நான் பார்த்துக்கிறேன்! நீ போய் மண்டபத்தில் மீதி இருக்கும் மளிகை,தேங்காய், பழம் எல்லாம் ஏத்திக்கிட்டுவா! என்று நண்பனை விரட்டி அனுப்பினான்.
விஷ்ணுவைப் பொறுத்தவரை அவனும் யார் குடும்ப விஷயத்திலும் தலையிட மாட்டான் அவன் குடும்ப விவகாரத்தை மூன்றாம் நபர் பேசுவதையும் விரும்ப மாட்டான்.
“——————–”
கையில் பால் சொம்புடன் வந்தவளை புதிதாய் பார்த்தான் அன்று தான் முதன்முதலாய் பார்ப்பது போல.
அவளுக்கு வெட்கம் வரவில்லை… பயமும், அழுகையும்,அவ நம்பிக்கையும் ஒருசேர வந்துவிட்டது.
திருமண விஷயத்தில் அவசரப்பட்டு விட்டோமோ? தனக்குள் கேட்டுக் கொண்டவள் திகைத்துப் போனாள்.நேத்ரா இதுதானா உனது காதல்? அவள் மனசாட்சி முள்ளாய் கீறியது.
திருமணமாகி முழுதாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் தனக்குள் இப்படி ஒரு எண்ணமா?
அவள் வெட்டத்தில் தயங்கி நிற்பதாய் எண்ணிக் கொண்டு, ஹே நேத்ரா ஏன் அங்கேயே நிற்கிற? வா!விழியால் உள்ளே வர அழைப்பு விடுத்தான்.
இத்தனை நாள் காதல் பொங்கிய அவன் மீது இப்போது கோபமே பொங்கியது.
அவன் என்னவோ துரத்தி துரத்தி காதல் சொல்லி, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கல்யாணம் செய்தது போல் அர்த்தமற்ற ஒரு கோபம் அவன் மீது.
என்ன தயக்கம்,வா!அவள் கரம் பற்றி அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.
பாலை அவன் கையில் கொடுத்துவிட்டு சட்டென்று படுத்து விட்டாள்.
நேத்ரா என்ன ஆச்சு? வாஞ்சையுடன் அவள் தோள் பற்றினான்.
கோபமாய் தட்டி விட்டு கண்களை மூடிக்கொண்டாள்.
நேத்ரா டயர்டா இருக்கா? அக்கறையாய் கேட்டான்.
அவள் பதில் கூறவில்லை. அவள் மனதில் அச்சம் ஆழிப் பேரலையாய் அழைக்கழித்தது.
நேத்ரா இங்கே உனக்கு அன் ஈஸியா இருக்குன்னு நினைக்கிறேன். அவள் பக்கத்தில் படுத்தவன் அவளை தன் புறமாய் திருப்பி, காலையிலிருந்து நடக்கிற எல்லாத்தையும் நான் பார்த்துட்டு தான் இருக்கேன். எல்லாம் போக போக சரியாகிவிடும் கவலைப்படாதே!
அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன் அவள் பிறை நெற்றியில் இதழ் பதித்தான்.
ஏதோ மனக்குழப்பத்தில் இருந்தவள் அவன் ஈசியாக ஆறுதல் படுத்தவும் வெகுண்டுவிட்டாள்.
ஓ…இதுக்கு பேர்தான் சமாதானப்படுத்துறதா?இளப்பமாய்க் கேட்டாள்.
அவன் தாடை இறுக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
நீங்க கொஞ்சி குழாவினா நான் வெட்கமே இல்லாம பல்லை காட்டிக்கிட்டு கிறங்கி நிற்கணுமா?ஆவேசமாய் கேட்டவளை வேகமாய் இழுத்து கீழே தள்ளினான்.
கட்டிலில் இருந்து விழுந்தவன் இடுப்பு வலி உயிர் போக அவனை கலவரத்துடன் பார்த்தாள்.
error: Content is protected !!