Skip to content
Post Views: 596
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 27
சிவராமன் கங்கா விருப்பபடி வாழட்டும் என ஒதுங்கி விட்டார்.
லட்சுமி,” கங்கா சம்பளத்தை வாங்கி சீட்டுதான் கட்டிட்டு வந்தேன்.இந்த மாசம் அதை எடுத்து கொடுத்தறேன். கங்காகிட்ட கொடுத்து என்னவேனுமோ வாங்கிக்க சொல்லு என்றார்.
எப்படியோ திருமணம் நடந்து விட்டது. நாங்க இருக்கோம் என்றவர்கள் அவரவர் வாழ்க்கையை பார்த்து நகர்ந்து விட்டனர்.இனி மீதமுள்ள வாழ்வை ஓட்ட வேண்டுமே, திங்கட் கிழமை கங்கா பள்ளி கிளம்பி விட்டாள்.
Advertisement
அருளிடம் இரண்டு நாட்களாக எதுவும் பேச வில்லை. அவனாக ஏதாவது கேட்டு வந்தாலும் எரித்து விடும் பார்வையை பார்க்க அமைதியாக போய்விடுவான்.
பள்ளியில் ஒருவாரம் லீவிற்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல் கொடுத்தனர். பள்ளி முடிந்து மாலை பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள்.இனி என்னவாகும் தன் வாழ்க்கை. அப்பாவிடம் திரும்பி போக கூடாது. இவனை என்ன செய்து மாற்ற போகிறோம்?என்ன செய்தாலும் மாற மாட்டான் எனவும் எதிர்காலம் பயமுறுத்தியது.
சோர்வுடன் வீடு திரும்பியள் லட்சுமியை வீட்டில் பார்த்ததும் அதுவரை அடக்கி இருந்த கண்ணீர் வந்துவிட்டது. முயன்று அடக்கினாள்.
Advertisement
அப்பா சீட்டு பணம் கொடுக்கறேனு சொல்லுச்சு கங்கா என்றார்.கங்கா பேச்சு வாக்கில் அருள் முகத்தை பார்க்க பிரகாசம்.இப்போ என்னமா அவசரம் அப்பாகிட்ட இருக்கட்டும் நா வேணுங்கற அப்போ வாங்கிக்கறேன் என்றாள்.
Advertisement
அம்மா மேம் சம்பளம் பணம் எதுவும் பிடிக்காம கொடுத்துட்டாங்க. நாலாயிரம் தரே அப்பா கிட்ட கொடுத்துரு என மீதமிருந்த மூவாயித்தை சாமி படம் முன்பு வைத்தாள்.
சரி கங்கா, கெளசி வீட்டுக்கு வந்துருவா நா கிளம்பறே என்றார். பேசியபடியே மூவரும் வெளியே வந்தனர். எங்க அம்மாவை ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க என்றாள் அருளிடம்.
கங்கா, ஃபோன் வீட்டுல வெச்சிட்டு வந்துட்டே ஒரு நிமிஷம் என்று எடுக்க சென்றான்.
Advertisement
ஃபோன் என்றவுடன் ரம்யா ஞாபகம் வர லட்சுமியிடம் ‘அம்மா ஒரு நிமிஷம் இங்கயே இரு’ என இவளும் வீட்டிற்குள் சென்றாள்.
சாமிபடம் முன்பு இருந்த பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தான். கங்காவை பார்த்ததும், “நீ எல்லா பணத்தையும் உங்க அம்மாகிட்ட கொடுத்துட்டையோனு நினைச்சேன்” என்றான்.கங்கா முறைத்து பார்க்க
லட்சுமியை பஸ் வைத்து விட்டு உள்ளே வந்தான்.
“எப்போ வேலைக்கு போக போறீங்க?” .
நாளைக்கு எங்க மாமா வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேனு சொல்றாரு நான் போய் பாத்துட்டு வரேன்
காலை அவன் வேலைக்கு கிளம்பி நின்றான்.மெதுவாக கங்காவிடம் ஆரம்பித்தான்.
கங்கா நமக்கு கல்யாணம் ஆகி இன்னையோட அஞ்சு நாளாச்சு.
என்ன சொல்ல வருகின்றான் என அவளும் அவனை பார்த்தாள்.
நமக்குள்ள இன்னமும் எதுவுமே நடக்கல இல்ல.இப்படியே இருந்தா உங்க அப்பா எப்படி நம்மள ஏத்துப்பாரு.ஒரு பேரக் குழந்தை பிறந்ததும், அதுக்காக நம்மள மன்னிச்சுக்குவாரு.
நீ இன்னைக்கு ரெடியா இரு கங்கா நானும் சீக்கிரமா வந்தறே என இளித்தவாறே கிளம்பினான்.
அதற்குமேல் கங்காவால் முடியவில்லை. மூச்சு முட்டுவதை போல இருந்தது. மனதை தேற்றி சிவராமனின் ஃபோன் எண்ணை டயல் செய்தாள். கைகள் நடுங்கியது.
இரண்டு ரிங்கில் சிவராமன் எடுத்து விட்டார்.ஹலோ யாருங்க?
அப்பா நா கங்கா என்றாள் அழுது கொண்டே.
அப்பா எனக்கு இங்க இருக்கவே புடிக்கல என்ன வந்து கூட்டிட்டு போய்ருப்பா என்றாள்.
சிவராமன் ஃபோனை கட் செய்து விட்டார். ஒருமணி நேரம் கழித்து லட்சுமியை அழைத்துக் கொண்டு கங்கா வீடு வந்து சேர்ந்தார்.
அவரை பார்த்தும் கங்காவிற்கு உடலெல்லாம் நடுக்கம். இதய துடிப்பின் ஓசை பலமாக கேட்டது.
அப்பா என்னை மன்னிச்சிடு.நான் எந்த தப்பும் பண்ணுலப்பா. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலப்பா.நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருப்பா என காலில் விழுந்து கதறி அழுதாள்.
கங்கா முகத்தை பார்க்க அவருக்கு விருப்பமில்லை.
அவளை தூக்கி விட்டார்.
உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா?
ஆமாப்பா.அங்க என்ன நடந்துச்சுனா என ஆரம்பிக்க போனவளை,இரண்டு காதையும் கை வைத்து அடைத்தவாறே எனக்கு எதை பத்தியும் கேட்க விருப்பமில்லை.அங்க என்ன வேணாலும் நடந்திருக்கட்டும்.
உனக்கு விருப்பமில்லைலே.
அதை பத்தி இனி பேச வேண்டாம்.
அவங்க வீட்டு பெரியவங்க நெம்பர் ஏதாச்சு வச்சிருக்கியா?
அருளின் அப்பா நம்பரை எடுத்து கொடுத்தாள்.’நா அவங்களுக்கு ஃபோன் பண்ணி தரேன்,நீ எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல, எங்க அப்பாவோட போறேன் ரெண்டே வார்த்தை மட்டும் சொல்லிட்டு ஃபோன் என்கிட்ட கொடுக்கனும் மத்ததே நான் பேசிக்கறே’ என்றார்.
தன் ஃபோனில் அந்த நம்பரை டையல் செய்தார் சிவராமன். கங்கா அவர் சொல்லியபடியே சொல்லி முடிக்க, சிவராமன் வாங்கி நான் என்ற புள்ளைய கூட்டிட்டு போறே மிச்சத்தை உங்க ஊருக்கு நானே வந்து பேசறேன் என ஃபோனை கட் செய்தார்.
மீண்டும் ஒரு முறை கங்காவிடம் உறுதிப்படுத்திக் கொண்டார்.இந்த கல்யாணத்துல விருப்பமில்ல தானே.
ஆமாப்பா.
சரி அந்த தாலியே கலட்டிரு.
இந்த அதிரடியை கங்கா எதிர்பார்க்கவில்லை.தாலியின் மகிமையை உணர்த்தியவரே அதை கழற்ற சொல்லியும் கைகளில் நடுக்கம்.
சிவராமன் உணர்ந்து கொண்டார்.எந்த தந்தையும் தன் மகளுக்கு செய்ய விரும்பாததை அவரே செய்தார்.கங்கா கலுத்தில் இருந்து தாலியை கழற்றி அவளுக்கு விடுதலையை தந்தார்.
அங்கிருந்த சாமிபடம் முன்பு நின்று உருக்கமாக வேண்டிக் கொண்டார்.பின் அந்த தாலியை சாமிபடம் முன்பு வைத்துவிட்டு கங்காவின் கையை பிடித்து கொண்டார்.
லட்சுமி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.அவர் அழுகையை சிவராமன் கண்டு கொள்ளாது..
லட்சுமி, நான் கங்காவை உங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறே,நீ வீட்டை பூட்டி சாவியை முன்னாடி கடைலே கொடுத்துட்டு வா என கிளம்பி விட்டார்.
அதுவரை ஒரு பெரிய பாரமாக தன் கலுத்தில் சுமந்திருந்ததை சிவராமன் கழற்றியதும் குளிர் காற்றை உணர்ந்தாள் கங்கா.
அவிநாசியப்பன் வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி.இப்படி ஒரு நிலையை அந்த வீடு எதிர் கொண்டது இல்லை.
அனைத்து குற்றம் சுமத்தும் பார்வைகளும், கைகளும் சிவராமனை நோக்கினர்.
அவ ஓடி போன அப்பவே அவளை நீ தலைமுழுகி இருக்கனும்.சரி பெத்த பாசம் விடலே.அவ சொன்னா உனக்கு எங்க போச்சு அறிவு யாராவது இப்படி தாலியே கழற்றி கூட்டிட்டு வருவாங்களா?
இனி உம்புள்ள வாழ்க்கையே என்ன பண்ண போறே?இப்படியே வாழா வெட்டியா வீட்டுல வெச்சுக்க போறியா?
நான் எம்புள்ளைக்கு நல்ல வாழ்க்கையே அமைச்சி கொடுப்பே
இப்படி அஞ்சுநாள் தாலி கட்டி வாழ்ந்துட்டு வந்தவளே யாரு கட்டுவா?அந்த பையன் வீட்டுல பேசி அவன்கூடவே வாழ வைக்கலாம்.
கங்காவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்கல.
சரி நீ இன்னொரு கல்யாணம் செஞ்சு வைப்பே அதுவும் புடிக்கலனு உம்புள்ள சொன்னா.மறுபடியும் இப்படியே பண்ணுவையா?
இங்க பாருங்க.எனக்கு எம்புள்ளைய பத்தி தெரியும்.புடிக்கலனா கூட எப்படியாச்சு சமாளிச்சு இருக்கனும்னு தான் நான் வளர்திருக்கேன்.
அங்கே சொல்ல முடியாத அளவுக்கு கங்காவுக்கு கஷ்டம் இருந்திருக்கும். மூச்சு கூட விடமுடியாத அளவுக்கு நெருக்கடி இருந்து இருக்கும்.
எல்லா சமாளிச்சு பாத்துட்டு முடியாம போகதான் என்னை கூப்பிட்டு இருக்கும் கங்கா.
நீங்க எல்லா நினைக்கற மாதிரி வயசு கோளாறுலே கல்யாணம் பண்ணி, அங்க புடிக்கலனு வரே ஆளு எம்புள்ளை இல்ல.அங்க அதுக்கு ஏதோ சொல்ல முடியாத வலி இருக்கு அதான் எனக்கு கூப்பிட்டு இருக்கு.
நான் எம்புள்ளைக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்கதான் போறேன். யாரு எம்புள்ளைய கல்யாணம் செய்ய வாராங்களோ வரட்டும்.வரலையா என் வீட்டுல ராணி மாதிரி கடைசி வரைக்கும் இருக்கட்டும்.ஆனா நான் அப்படி விட மாட்டேன் ஒரு நல்ல வாழ்க்கைதுணையே கங்காவிற்கு அமைச்சு தருவேன்.ரெண்டு நாள் கங்கா இங்க இருக்கட்டும்.அவனுக ஏதாச்சு பிரச்சனை பண்ண என் வீட்டுக்கு வந்தாலும் வருவானுங்க என கங்காவை லட்சுமியின் வீட்டில் விட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் ஒருவர் பின் ஒருவராக வந்து கங்காவை பார்த்து தங்கள் ஆதங்கத்தை கொட்டிச் சென்றனர்.
இரவு கலா வந்தார். எதுவும் அவளிடம் கேட்க வில்லை. கங்காவை சாப்பிட வைத்து உறங்க சொன்னார்.
கங்காவும் வெண்ணிலாவும் கட்டிலில் படுத்துக் கொள்ள,கீழே கலா படுத்துக் கொண்டார்.
பத்துமணி மீண்டும் அருளின் அக்கா ஃபோன் செய்தார். இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என கேட்டார் எதுவும் தெரியாதது போல..
உனக்கு அறிவு இருக்கா கங்கா ஒரு பொண்ணுக்கு தாலிங்கறது எவ்வளவு முக்கியமான ஒன்னு. உனக்கு அதோட மதிப்பு தெரியலே.நீ எல்லாம் ஒரு நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணா இருந்திருந்தா என்ன பண்ணிருக்கனும்,
உங்க அப்பா தாலியே கழட்ட வரும் போது , அவரே தள்ளி விட்டுட்டு வெளியே வந்து கத்தி பக்கத்துல இருக்கறவங்கள உதவிக்கு கூப்பிட்டு இருக்கனும்.
அதெல்லாம் செய்யாம அப்பா பின்னாடி அமைதியா போய்ருக்கே உனக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம், வாழ்க்கை.
நாங்க என் தம்பிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வெக்க போறோம். அவன் ஆம்பளை எத்தனை கல்யாணம் வேணா செஞ்சிக்குவா ஆனா உன் நிலைமையே யோசிச்சு பாரு.
இனி நீ வாழா வெட்டியா உங்க வீட்டுல இருக்க போறே.அப்படியே உங்க அப்பா உனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் அது உனக்கு ரெண்டாவது கல்யாணம் தான். உன்னை கல்யாணம் செய்ய போறவன் ரெண்டாவது புருஷன்தான். இனி உனக்கு ரெண்டு புருஷனுதான் பேசுவாங்க பாரு என நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
கங்காவிற்கு இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அவரை எதிர்த்து பேசவும் துணிவில்லாத கோழை ஆனாள் கங்கா.அவர் கூறுவது உண்மைதானே என்று நினைத்துக் கொண்டாள்.
கலாவும், வெண்ணிலாவும் அனைத்தையும் கேட்டு கொண்டுதான் இருந்தனர்.
இதற்குமேல் கலாவால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஃபோனை வாங்கி அவளை இரண்டு வாங்கு வாங்கி விட்டார்.இனி எங்காது கங்காக்கு ஃபோன் செஞ்சா நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருவேன் என மிரட்டினார். அதற்குமேல் அருளின் அக்கா எதுவும் பேசாது ஃபோனை வைத்துவிட்டார்.
கங்கா நீ இதெல்லா நெனச்சு வருத்தப்படாதே.நீ உங்க அப்பாவை மட்டும் நம்பு.உங்க அப்பா என்ன சொல்லுதோ அதே மட்டும் கேளு.
வேற எதாச்சு கஷ்டம்னா என்கிட்ட சொல்லு நான் இருக்கே உனக்கு. உங்க அம்மாவுக்கு எது நல்லது கெட்டதுனு தெரியாமே எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவரா ஆக்கி வெச்சிடுவா என சில அறிவுரையை வழங்கினார்.இரவு முழுவதும் தூங்காமல் கங்காவை தூங்க வைத்தார் கலா.
கங்கா காலை பள்ளி கிளம்பி விட்டாள். வீட்டில் இருந்தால் பிரச்சினைகளை நினைத்து மண்டையே வெடித்து விடும் போல இருந்தது.அங்கு சென்றால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என கிளம்பினாள்.
ஆனால் எப்படி போவாள்?முதல் நாள் கலுத்தில் தாலி,மெட்டி உடன் போனவள் இன்று எதுவும் இல்லாமல் எப்படி? கலுத்திற்கு கலாவின் ஜெயினை அணிந்து கொண்டாள்.அது பார்ப்பதற்கு தங்க கொடி பொல இருந்தது.காலுக்கு வெண்ணிலா சாக்ஸ் கொடுக்க அணிந்து கொண்டாள்.சிவராமனுக்கு ஃபோன் செய்ய,கங்காவை பள்ளி அழைத்து செல்ல வந்து விட்டார்.
வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவளை இறக்கி விட்டவர்,’கங்கா சாயங்காலம் ஃபோன் பண்ணு அப்பா வந்து கூட்டிட்டு போறேன்’ என்றார்.
சரி என தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்க, சிவராமன் கங்காவை பார்த்த படியே நின்றிருந்தார்.தன் குழந்தை பருவம் நினைவிற்கு வந்தது.அப்படியே வாழ்க்கை இருந்திருக்க கூடாதா என எண்ணியவாறே கண்களில் நீருடன் உள்ளே சென்றாள்.
பிரேக் டைமில் தனியாக அமர்ந்தவள் அருளின் அக்கா சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள். இனி வேறு ஒருவனை எப்படி திருமணம் செய்ய முடியும்?நிச்சயமாக தன்னால் அது முடியாது. இப்படியே இருந்தால் தனக்கு பின் இன்னொருவள் உள்ளாளே. அதுமட்டுமல்ல கழுத்தில் தாலி இல்லாமல் எவ்வளவு நாட்கள் இப்படியே இருக்க முடியும்.
ஊராரை ஏமாற்ற முடியமா?இதற்கு அவனோட வாழ்வது எவ்வளவு மேல் என எண்ணினாள்.மீண்டும் அதே தவறான முடிவு.அருளிற்கு ஃபோன் செய்தாள்.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!