Skip to content
Post Views: 871
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 28
கங்கா பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸை ஓபன் செய்து கொடுத்து ஒருமுறை அவர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்களா?என்பதை உறுதி செய்து கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
இரண்டு வாய் எடுத்து வைத்தவள், அதன்பின் உணவு உள்ளே இறங்க மறுத்தது.
நேற்றிரவு அருளின் அக்கா சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள்.
இனி நீ வேறு ஒருவனை திருமணம் செய்தாலும்,அது உனக்கு இரண்டாம் திருமணம்தான்.
உனக்கு இரண்டு கணவன்தான்.இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளுள் எதிரொலித்து கலங்க வைத்தது.
Advertisement
நாம் ஏன் மற்றொரு திருமணம் செய்ய வேன்டும்? இப்படியே இருந்து கொள்ளலாம். இப்படியே இருந்தால் தனக்கு பின் இன்னொருவள் உள்ளாளே. அதுமட்டுமல்ல கழுத்தில் தாலி இல்லாமல் எவ்வளவு நாட்கள் இப்படியே இருக்க முடியும்.
ஊராரை ஏமாற்ற முடியமா?இந்த சமூகம் நம்மை எப்படியெல்லாம் சித்தரிக்கும்.அதை எவ்வாறு எதிர் கொள்ள முடியும்.அந்த அளவு வலிமை எல்லாம் என்னிடம் இல்லை.
இதற்கு அவனோட வாழ்வது எவ்வளவு மேல் என எண்ணினாள்.மீண்டும் அதே தவறான முடிவு. அருளிற்கு ஃபோன் செய்தாள்.
Advertisement
எப்படியும் நீ கூப்பிடுவேனு தெரியும் கங்கா.
Advertisement
நான் செஞ்சது தப்புதான்.நீங்க எங்க அப்பாகிட்ட வந்து பேசி,என்னை கூட்டிட்டு போங்க.
நான் யாருகிட்டயும் வந்து பேசுல.நான் உன்ன தேடி வரலே, நீதான் என்னை தேடி வந்தே.
உனக்கு நான் வேணும்னு இருந்தா இப்பவும் ஒன்னும் கெட்டு போகல கிளம்பி வா.
Advertisement
ஆனா நான் போடறே கண்டிஷன்க்கு எல்லாம் நீ ஓகே சொல்லனும்.
பர்ஸ்ட் உன்னோட டீச்சர் வேலையே விட்றனும்.
அடுத்து உன்னோட பிஎச்டி கனவு அதையும் விட்றனும்.
அப்பறோம் இனிமே என்னோட பெயரைதா நீ இனிஷியலா போடனும்.உங்க அப்பன் பேரை எல்லா இடத்துல இருந்தும் நீக்கிறனும்.
அதெல்லா விட முக்கியமான ஒன்னு உங்க அப்பா தாலியே கழட்டுனது கழட்டுனதாவே இருக்கட்டும்.நாம லிவ்இன் ரிலேசன்ஷிப்ல வாழலாம்.ஒரு குழந்தை பிறக்கட்டும் அப்பறோம் தாலி கட்றேன் என்றான் கூலாக…
அதுவரை கேட்டுக் கொண்டிருந்த கங்கா பொறுமையிழந்து கத்தி விட்டாள்.இதுக்கு மேல எதாச்சு பேசுனே அவ்வளவுதான்.
யாருகிட்ட வந்து லிவ்இன் ரிலேசன்ஷிப்ல வாழலானு சொல்றே. என்கிட்ட சொன்னதே பர்ஸ்ட் உங்க அம்மாகிட்டயும்,உங்க அக்காகிட்டயும் சொல்லு,என்றவள் யோசனையுடன் நிறுத்தி” உன் மானங்கெட்ட குடும்பம் இதையும் ஏத்துக்குவாங்க” என்றாள்
நீயெல்லா ஒரு ஆளு. ச்சீ நீ ஒரு முதுகெலும்பு இல்லாத ஆள்.ஒரு நல்ல ஆம்பிளையா இருந்தா என்ன பண்ணிருக்கனும் எங்க அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசுனவே,ஏன் எங்க அப்பாகிட்ட நேர்ல வந்து பேசலே?
எங்க அப்பாகிட்ட பேசறே அளவுக்கு உனக்கெல்லா தைரியம் இருக்கா. கோழை மாதிரி எங்க அம்மா கிட்ட பேசி, உனக்கு சாதகமா எல்லாத்தையும் மாத்திருக்கே.உன்ன மாதிரி கேவலமான ஜென்மத்தை நான் பாத்தது இல்ல.
எந்த வித சூடு சொரனையும் இல்லாத வாறு எல்லாத்தையும் கேட்டுவிட்டு,நான் வீட்டுல இருந்த என்னோட பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டே. ஃபேன் மட்டும் கழட்ட முடிலே, அதுக்கு நீ வெச்ச மூவாயிரம் பணத்தை எடுத்துட்டே,நீ பேசறே ஃபோன் என்னுடையது.உங்க அப்பன் பேச்சு வார்த்தை நடத்த வரும்போது அதை கொடுத்து விட்டுரு என்றான்.
சரி கூடவே ரெண்டு புடவையும் கொடுத்து விடறே கட்டிக்கே என ஃபோனை வைத்து விட்டாள்.
என்னதான் தைரியத்தை வரவழைத்து இவ்வளவு பேசி விட்டாலும்,உடலில் நடுக்கம்.இப்படி பேசுவது அவள் இயல்பில்லை.எதிரில் இருப்பவர்கள் மனம் நோக வைக்க அவளுக்கு பிடிக்காது. ரொம்ப சென்சிடிவ் அதே சமயம் உணர்ச்சிகளில் முதர்ச்சி பெற்றவள். ஆனால் இந்த மாதிரி ஆட்களுக்குதான் விதி தனது கோர முகத்தை காட்டி விடும்.
கண்ணீர் விழிகளில் வழிந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு குழந்தை எழுந்து வந்து ஏங்க மேம் அழுகறீங்க?சாப்பாடு காரமா?என்றது.
அதை பார்த்த இன்னொரு குழந்தை தண்ணீர் பாட்டிலோடு வந்து, மேம் கொஞ்சம் தண்ணி குடிங்க சரியாயிடும் என்றது.
இன்னொன்று,மேம் இந்த பிஸ்கட் சாப்பிடுங்க காரம் போயிடும் என்றது.
தீபன் குமார், தான் அழுத போது கங்கா கைகளை தட்ட சொன்னது நினைவில் வர,எல்லாரையும் கைகளை தட்ட வைத்தான்.சாப்பிடுவதை விட்டுவிட்டு அந்த சின்ன சிட்டுகள் கங்காவை சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளை தட்டி அவளது அழுகையை நிறுத்த தங்களால் முடிந்ததை செய்தனர்.
அவர்களுக்கு கல்யாணம் பற்றியோ, கங்காவின் நிலை பற்றியோ, அருள் அவனின் சூழ்ச்சி பற்றியோ எதையும் அறிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. வயதும் இல்லை.
அவர்களுக்கு தேவை எல்லாம் தங்கள் ஆசிரியை அழுக கூடாது என்பது மட்டுமே.உணர்வு குவியலின் உச்சத்தில் இருந்த கங்காவால் தன் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அந்நேரம் ரவுண்ட்ஸ் வந்த சுதா சத்தம் கேட்டு உள்ளே வந்தார். குழந்தைகளை சாப்பிட அமர சொல்லி, கங்காவையும் சாப்பிட்டு தனது கேபின் வர சொன்னார்.
ஏற்கனவே தன் மேல் அதிருப்தியில் உள்ளார்.மேலும் இவ்வளவு லீவு எடுத்ததற்கு கோபமாக வேறு உள்ளார்.
இப்போது தன் பிரச்சினையால் குழந்தைகளை சாப்பிட விடாமல் செய்ததற்கு என்ன சொல்ல போகிறாரோ? என எண்ணியவாரே கேபினுள் சென்றார்.
எக்ஸ்க்யூஸ்மீ மேம்
வாங்க கங்கா.என்ன நடக்குது உங்க க்ளாஸ்ல?
கங்கா எதையும் மறைக்காமல் எல்லாத்தையும் கூறி விட்டாள். கல்யாணம் முதல்.. மதியம் குழந்தைகள் கைதட்டல் வரை..
சொல்லும் போது அவ்வளவு வலி.அந்த வலி அவள் கண்களை குளமாக்கியது.
ரிலாக்ஸ் கங்கா. உட்காருங்க என தன்னுடைய வாட்டர் பாட்டில் தண்ணீரை குடிக்க கொடுத்தார்.
தண்ணீரை குடித்து தன்னை சமநிலை படுத்திக் கொண்டாள்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா கங்கா
இருக்கு மேம்.
எந்த கடவுள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?
முருகர்.
அப்போ அவர் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டு சரணாகதி அடைஞ்சிடுங்க கங்கா. எல்லாத்தையும் அவன் பாத்துப்பா.
இது உங்கள விட்டுட்டு போனது சந்தோசம்தான்.மேலும் மேலும் கூட வெச்சு கஷ்டப்படாதீங்க கங்கா.
ஒரு பெண் படிச்சு எவ்வளவு அந்தஸ்துல இருந்தாலும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கனும்.இது நம்ம சமூகத்தால கட்டமைக்கப்பட்ட ஒன்னு.இதுல நீங்களோ, நானோ விதிவிலக்காக முடியாது கங்கா.
நீங்க திரும்ப அருளை உங்க வாழ்க்கையில கொண்டுவர நினைச்சா உங்களவிட முட்டாள் இந்த உலகத்துல இருக்க மாட்டாங்க. என்னை உங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சுங்கோங்க.
வாழ்க்கைத்துணைகறது உங்களோட முடியறது இல்ல கங்கா.உங்க குழந்தைகள்,அவங்க குழந்தைகளுன்னு ஒரு ஜெனரேஷன் முழுக்க தொடர போற ஒன்னு. இப்படிப்பட்ட அயோக்கியனே நீங்க திரும்ப உங்க வாழ்க்கையில கொண்டு வந்து உங்க ஜெனரேஷனை அழிச்சுகாதீங்க.
உங்க க்ளாஸ் பசங்கள நினைச்சு பாருங்க. நீங்க அவங்களுக்கு பாடம் நடத்தறதோட முடிஞ்சு போகல. அவங்க உங்கள தங்க வீட்டுல ஒருத்தர நினைக்கறாங்க.அவங்களுக்கு தேவை தங்கள் டீச்சரோட சிரிச்ச முகம் மட்டும்தான்.அவங்களுக்காக இதையெல்லாம் விட்டுட்டு வெளியே வாங்க கங்கா.
எப்போதும் கடவுள், ஒருத்தரே வலிமையான ஆளா ஆக்கனும்னு நினைச்சா அவங்களுக்கு நிறைய சோதனைகள தருவாங்க.நம்ம வனிதா மேம் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த பள்ளியை இந்த அளவுக்கு கொண்டு வந்துருக்காங்க.
நான் அந்த அளவுக்கு எல்லா வலிமையான பெண் இல்லை மேம். சாதாரண குடும்ப பெண்ணாதா இருக்க ஆசைபடுறேன்.
உங்களுக்கு இப்ப புரியாது கங்கா. நீங்க ஏதாச்சு பெரிசா சாதிச்சிட்டு நிக்கும் போது நான் சொன்னது உங்க நினைவுல வரும் கங்கா.
உங்களுக்கு இங்லீஸ் ஃப்ளூயன்சி இல்லைனு ரிஜக்ட் பண்ணுனே.ஆனா நீங்க ஒவ்வொரு நாளும் உங்கள அதுக்காக ட்ரெயின் பண்ணி எவ்ளோ இம்ப்ரூவ் செஞ்சிகிட்டீங்க.எங்களுக்கு தேவை அந்த கங்காதான்.
உங்களோட பர்சனல் லைப்ல எவ்ளோ கஷ்டம் வேணா இருக்கட்டும். உங்களோட கரியர்ல நீங்க பெஸ்ட்.எனக்கு தேவை அந்த கங்காதான்.
இது உங்களுக்கு வலிதான் இல்லைனு சொல்லுல சீக்கிரமா இதுல இருந்து வெளியே வாங்க.உங்க சக்ஸஸ்காக நான் வெயிட் பண்றே கங்கா என தெம்பூட்டி அனுப்பினார் சுதா.
மாலையில் பள்ளி முடிந்தவுடன் சிவராமன் மீண்டும் லட்சுமி வீட்டிலேயே கொண்டு சென்று விட்டார்.
இன்னைக்கு ஒருநாள் மட்டும் இங்க இரு கங்கா நான் நாளைக்கு உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என சொல்லி விட்டுச் சென்றார்.
மாலையில் கஸ்தூரி மகள் திவ்யா கங்காவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திடீரென பழனியம்மாள் வந்து, திவ்யா உனக்கு இப்போதா கல்யாணம் நிச்சயமாகி இருக்கு, கங்காவை நீ பாக்க வேண்டா.உங்க வீட்டுக்கு போ என அனுப்பி விட்டார்.
இப்படிபட்ட வார்த்தைகளை கேட்ட பின் கங்காவால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை.சிவராமனுக்கு ஃபோன் செய்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கூப்பிடாள்.
லட்சுமியிடமும் கெளசியிடமும் கங்கா முகம் கொடுத்து கூட பேசாமல் இருக்க, இன்று வீடு வருவதாக சொல்ல இருவருமே சென்று அவளை அழைத்து வந்தனர்.
கங்கா, நீ இன்னைக்கு வரேனு சொன்ன உடனே நான் உனக்கு புடிச்ச பேல் பூரி செஞ்சு வெச்சுருக்கே என்றாள் கெளசி. குழப்பங்கள் நிறைந்த உலகில் அக்கா தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தனர்.மீண்டும் சின்ன சிரிப்பு, செல்ல சண்டைகள் அந்த வீட்டில் கேட்டது.லட்சுமி எவ்வளவோ பேசியும் அவரிடம் பேச மறுத்து விட்டாள் கங்கா.
இரண்டு நாட்கள் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது. சிவராமனும் அருள் வீட்டிற்கு சென்று இனி கங்காவிற்கு எந்த தொந்தரவும் தரக் கூடாது என எழுதி வாங்கி வந்து விட்டார்.
பாவம் லட்சுமி கங்காவிடம் எவ்வளவோ இறங்கி போய் சலித்து விட்டு விட்டார். மாலை பள்ளி முடிந்து வந்தவள் லட்சுமியை தேட வீட்டில் இல்லை. எப்போதும் அவள் வீடு திரும்பும் போது லட்சுமி வீட்டில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவளுக்கு எதுவும் செய்ய தோணாது.
வெகுநேரம் கழித்தே வீடு திரும்பினார் லட்சுமி.கையில் கங்காவின் குளியல் சோப்பு. வீட்டருகே உள்ள கடைகளில் ஸ்டாக் தீர்ந்து விட்டது என கூற,பக்கத்து ஊர் சென்று வாங்கி வந்திருக்கிறார்.
சோர்வுடன் பாத்திரம் கழுவி கொண்டிருந்தவர் முகத்தை கங்கா உற்றுப் பார்த்தாள். தினமும் அழுவார் போல முகம் களையிழந்து வீங்கி இருந்தது.எந்த தாயும் தன் மகள் வாழ்வை பாதாள குழியில் தள்ள விரும்ப மாட்டார்களே.
அவரது அறியாமை, கணவரிடம் எதையும் மறைக்க தெரியாத இயல்பு. வெளியுலக அனுபவம் இல்லாத வெகுளிதனம் எல்லாம் அவரது மகள் வாழ்வை பாழாக்கி விட்டது.
அம்மா என்மேல உனக்கு கோபமா?
உன் மேல எனக்கு என்ன கோபம் கங்கா
நான் இப்படி பண்ணிட்டு வந்துட்டனேமா
நான் தான் உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் கங்கா என்றார்.
இல்லமா உன்மேல எந்த தப்பும் இல்ல. எனக்குதா முடிவு எடுக்க தெரியலே.
அங்க இருக்கும் போது நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேமா. எவ்வளவு தடவை நீ செய்றே சாப்பாடு நல்லா இல்லைனு சொல்லிருக்கே,அங்கே இருந்தப்போ உன்னோட சமையல் அருமை எனக்கு புரிஞ்சதுமா.
அப்போ நீ அங்க சரியா சாப்பிடலயா கங்கா.
இல்லம்மா.
எந்த அம்மாவும் தன் குழந்தையின் பசியை தாங்க மாட்டார்கள் அல்லவா.நீ அங்கே ரொம்ப கஷ்டப்பட்டியா கங்கா
ஆமாம்மா,மேலும் அங்கு நடந்ததை சொல்ல விருப்பமில்லை கங்காவிற்கு, லட்சுமியை பொருத்தவரை அவரை போலவே எல்லாரும் நல்லவர்கள் என்ற எண்ணம் கொண்டவர். தன் வீட்டு ஆட்கள்,தன் புகுந்த வீட்டு ஆட்கள், அக்கம்பக்கத்து ஆட்களை தவிர வேறு யாருடனும் பழக்கமில்லாதவர். எல்லோரும் அவரை போலவே வெகுளியாக இருக்க, லட்சுமி எல்லாரையும் அப்படியே எண்ணிக்கொண்டார்.
பாவம் கங்காதான் மனிதர்களின் உண்மை முகத்தை அறிய இவ்வளவு பெரிய களங்கத்தை சுமக்க வேண்டியுள்ளாள்.
எல்லாரும் உனக்கு ரெண்டுமே புள்ளைங்க கடைசி காலத்துல யாரு உங்கள பாத்துக்குவாங்க.ஒரு பையன் இருந்து இருக்கலானு சொல்லுவாங்க. ஆனா நான் எப்பவுமே நம்ம வீட்டுக்கு பையன் இல்லைனு நினைச்சது இல்ல கங்கா.
நீ இருக்கையேனு நான் சந்தோச பட்டுக்குவேன்.
இனி நீ திரும்ப வரமாட்டையோனு பயமா கூட இருந்துச்சு. ஆனா நீ திரும்ப என்கிட்டையே வந்துட்டே.என்ன விட்டு எங்கையும் போக மாட்டைல கங்கா.
இல்லம்மா இனிமே உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன்.இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர்.
சிவராமன் கங்காவின் மனநிம்மதிக்காக அவளது பள்ளியின் அருகே ஒரு வீடு பார்த்து அழைத்துச் சென்று விட்டார்.
அடுத்த மாதமே அருளும் வேறு திருமணம் செய்து கொண்டான்.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!