Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 44.1

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 44.1

மாலதியும் சல்மானும் எடுத்த ஃபோட்டோவில் சல்மான் சட்டை இல்லாமல் இருப்பதாக நித்யா கூற… கங்காவிற்கு சல்மான் அப்படிப்பட்டவன் இல்லை என்று நித்யாவிடம் நிருபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.

நிச்சயமாக அவன் அப்படிபட்டவன் இல்லை.ஆண்,பெண் பேதமில்லாமல் இயல்பாக பேசுவான், பழகுவான்.ஆனால் ஒருபோதும் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையை அவன் செய்ய மாட்டான். தனிமனித ஒழுக்கமுள்ளவன்.

“சரி இப்போவே சுமந்த்க்கு கூப்பிடறே” என டையல் செய்தவளின் எண்ணங்களில்….
தற்போதெல்லாம் அவனது வளர்ச்சி சுமந்துக்கும், நித்யாவிற்கும் பிடிக்க வில்லை. அவனை எதாவது சொல்லி எள்ளி நகையாடி வருகின்றனர்.



Advertisement

இந்த உயரங்களை சல்மான் சாதாரணமாக அடையவில்லையே… எவ்வளவோ கடின உழைப்பை போட்டு உள்ளான்.அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு தெரியாது.அவன் வளர்ச்சியால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் சட்டென ‘ஆம்’ என சொல்லி விட்டால், என்ன செய்வது? இது ஒரு அக்னி பரிட்சையாகவே கங்காவிற்கு தோன்றியது.

ஃபோனை எடுத்த சுமந்த்,கங்காவின் நேரடியான கேள்விகளால்…வேறு எந்த கதையையும் கட்டாது.உங்களுக்கு யாருக்கா இந்த மாதிரி பொய் எல்லாம் சொன்னது?அப்படி எல்லாம் இல்லை என்றான்.

கங்காவிற்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. அதோடு சரி,இனி நித்யாவிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முழுதாக விலகி விட்டாள்.

Advertisement

அன்று வழக்கமான ஞாயிறு.எப்போதும் கங்காவிடம் சிக்கனா?மீனா?என கேட்டே எடுத்து வருவார் சிவராமன்.இன்று என்னவோ ஏதும் கேட்காது அவரே சென்று சிக்கனையும் மட்டனையும் எடுத்து வந்து கொடுத்தார்.

Advertisement

காலை லட்சுமி தோசை சுட உண்டு விட்டு கடைக்கு சென்றுவிட்டார். கங்காவும் கெளசியும் எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு உறங்கினர்.மதியம் கறி விருந்து ரெடியானது.தற்போது காலை இழந்ததால் சிவராமன் சமைப்பது இல்லை.

ப்ரோக்கர் மீண்டும் கங்காவிற்கு வரனோடு வந்துவிட்டார்.லட்சுமி, “சிவராமன் வீட்டில் இல்லை,வந்ததும் விவரம் சொல்லி ஜாதகம் பார்த்து பொருத்தம் இருந்தால்.. கூப்பிடுகிறோம்” என அனுப்பி வைத்தார்.

சிவராமனுக்கு இளையராஜா இசையில் எஸ்பிபி குரலில் பாடல்களை கேட்பது பிடித்த ஒன்று. கடையில் சிறிது நேரம் அமர்ந்து பாடல்களை கேட்டுவிட்டு… ரேடியோவை ஒரு துணியில் மூடி.. அதன்மீது ஒரு மரத்துண்டை வைத்துவிட்டு வீடு நோக்கி கிளம்பினார்.

Advertisement

வரும்வழியில் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மூட்டை. பருப்பு, காய்கறிகள் என அனைத்தையும் வாங்கி வந்து வண்டியில் இருந்தவாறே கூப்பிட யாரும் வெளியில் வரவில்லை. பின் லட்சுமியின் ஃபோனுக்கு கால் செய்து வெளியே வரச் சொல்லி அனைத்தையும் கொடுத்தார்.

‘கங்கா,கெளசி ரெண்டு பேருக்கும் கூப்பிட்டது கூட காதுல விழலே. அப்படி ஒரு தூக்கம் என்றவாறே ஃபேனை ஆஃப் செய்ய…’கங்கா எழுந்து பாத்ரூம் சென்றாள்.

“சிரா!நீ அடங்கவே மாட்டே…”என மீண்டும் ஃபேனை போட்டுவிட்டு தூங்க போனாள்.

கங்கா மீண்டும் படுக்க வர…வாசலை நோக்கி திரும்பி அமர்ந்தவாறு ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருந்தார்.

என்ன யோசனையோ?என்ற கேள்வியோடு கங்கா மீண்டும் தூங்க போனாள்.

மாலை நேரம்,” கங்கா நீயும் அம்மாவும் ரேசன் கடைக்கு மட்டும் போய்ட்டு வந்துருங்க. அது மட்டும் விட்டு போச்சு.ரொம்ப வெயில் இல்லைனா நானே போய்ட்டு வந்துருப்பே.

அப்பா ஞாயிற்று கிழமை கூட்டமா இருக்கும்.இடைலே போய் வாங்கிக்கலாம்.

ப்ரோக்கர் வந்த விஷயம் சிவராமனிடம் சொல்ல..”சரி காலைலே போய் பொருத்தம் பாக்கறே” என்றார்.

“கடவுளே இந்த ஜாதகம் செட் ஆக கூடாது” என வேண்டிக் கொண்டாள் கங்கா.

இரவு கலா ஃபோன் செய்து, ‘இன்னைக்கு சந்திர கிரகணம். சீக்கிரமா சாப்பிட்டுட்டு தூங்குங்க’ என்றார்.

நால்வரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். கெளசி தனது தட்டில் இருந்து சப்பாத்தியை எடுத்து, சிவராமன் தட்டில் போட்டாள்.

சிரா!என்னால சாப்பிட முடிலே.நீ சாப்பிடு.

‘சரி’ என வாங்கி சாப்பிட்டு…நால்வரும் பேசி சிரித்தவாறே உறங்க சென்றனர்.

கங்காவிற்கு தூக்கமே வரவில்லை. இந்த வரன் செட் ஆகி விட்டால்,என்ன செய்வது?சல்மானிடமும் இதை பற்றி பேச முடியாத நிலையில் உள்ளோம். அவனிடம் இதைப்பற்றி என்ன சொல்வது?அப்படியே சொன்னாலும்… கல்யாணத்திற்கு வந்து பந்தல் முதல்… பந்தி வரை… ஓடி ஓடி வேலை செய்வானே தவிர…நம் மனதில் இருப்பதை சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டான். இவ்வளவு நாள் சிவராமன் மட்டுமே ஏற்றுக் கொள்ள மாட்டார் என எண்ணிக் கொண்டிருந்தோம்..
ஆனால் அவன் அம்மா ஏன் இப்படி நடந்து கொண்டார்?

இந்த பிரச்சனைகளுக்கு நடுவில்.. மாலதி வேறு…சரி எப்படியோ ஏதோ ஒரு அதிசயம் நடந்து திருமணம் நடந்து விட்டால்… வீட்டையும்,அப்பா,
அம்மா,தங்கையை விட்டு போக வேண்டும்.

தற்போது வீட்டின் நிதிப் பிரச்சனை பெரும் பிரச்சினையாக உள்ளது.இந்த நிலையில் மூவரையும் எப்படி விட்டுபோவது?என்ற யோசனைகளோடு மணியை பார்க்க பத்து என காட்டியது.

‘விடிந்தால் பள்ளிக்கு கிளம்ப வேண்டும் தூங்குவோம்’ என உறங்க செல்லும் முன் லட்சுமியையும் கெளசியையும் பார்க்க நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
சிவராமனை பார்க்க..மீண்டும் யோசனையோடு விட்டத்தை பார்த்து படுத்திருந்தார்.

காலையில் இருந்து தீவிர யோசனையில் உள்ளாரே என்னவாக இருக்கும்? என நினைத்தவாறே “கடவுளே எல்லார் சம்மதத்தோடும் எந்த பிரச்சனையும் இல்லாமல் என் விருப்பபடி திருமணம் நடக்க வேண்டும்” என வழக்கம் போல வேண்டிக் கொண்டே உறங்க சென்றாள்.

இரவு பதினொன்றரை மணி சிவராமன் இரும்பும் சத்தம் கேட்க, கங்கா எழுந்து என்னாச்சுப்பா?என்றாள்.

வலது மார்பில் கை வைத்தவாறே,இங்க வலிக்குது கங்கா.

கங்கா எழுந்து லைட்டை ஆன் செய்து உடம்பை தொட்டு பார்க்க…வியர்த்து இருந்தது. கெளசியையும், லட்சுமியையும் எழுப்பி விட்டாள்.

கங்கா,சுகர் கம்மியா இருக்கும்.அதான் வியர்த்து இருக்கு.. என கெளசி செக் செய்ய அது நார்மலாக இருந்தது.

லட்சுமி,”குடிக்க தண்ணி கொண்டு வா” என்றதும்,அவர் அடுப்படியை நோக்கி விரைந்தார்.

‘எல்லாமே நார்மலாதான் இருக்கு… உனக்கு முடியலேனா ஹாஸ்பிடல் போலாம்ப்பா’ என கெளசி கூற..

மறுத்த விட்டு…சாமி படங்களை பார்த்து.. “விநாயகா! எனக்கு ரெண்டு புள்ளைங்க.. இன்னும் கரை சேத்துல..எப்படியாச்சு என்னை காப்பாத்திரு” என இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டார்.

அப்பாவின் நிலைமை மோசமாவதை கங்கா உணர்ந்து கொண்டாள்.கெளசி, “சுதா அண்ணியை கூப்பிட்டு வா” என அவளையும் அனுப்பி வைத்தாள்.

லட்சுமி தண்ணீர் கொண்டு வர..கங்கா அவரை மார்போடு அணைத்துக் கொண்டாள்…’அப்பா உனக்கு ஒன்னும் ஆகாது…நான் இருக்கேப்பா’ என்றாள்.

சுதா ஓடி வர…அவரை பார்த்து கையை உயர்த்தி சிவராமன் கூப்பிட்டார்.. ‘அண்ணி பாத்துக்கோங்க’என அவரை விட்டுவிட்டு வெளியே வந்து ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து வரச் சொன்னாள் கங்கா.

‘கங்கா இங்க வாடி’என லட்சுமி கத்தும் சத்தம் கேட்டு உள்ளே செல்ல…

‘ஏய்…ஏய்… கண்ணை திற…என்னைய பாரு… எந்திரி…’என லட்சுமி சிவராமனை எழுப்பிக் கொண்டிருக்க…’அப்பா எந்திரிப்பா’ என கெளசியும் கத்தினாள்.

“கங்கா அப்பாவ பாருடி…தண்ணி கொடுத்தே..ரெண்டு வாய் குடிச்சிட்டு.. என்னையேவே பார்த்துட்டு கண்ணை மூடி என் தோள் மேலே சாய்சிருச்சுடி” என இரு கரங்களிலும் அவர் முகத்தை ஏந்தினார்.

‘பெளர்ணமி வானத்திலா?சிவராமன் முகத்திலா?’என தெரியவில்லை. அவ்வளவு தேஜஸ்… அந்த முகத்தில்..

சுதா, சிவராமன் முகத்தில் தண்ணியை அடிக்க…அவரிடம் எந்த அசைவும் இல்லை… கங்காவிற்கு புரிந்தது… இதுவரை கண்ணின் மணி போல தன்னை அரணாக தாங்கி வளர்த்த தந்தை இனி நம்மோடு இல்லை என…

ஆம்புலன்ஸ் வர,ஒரு நப்பாசை அங்கே போனால் வீடு திரும்பி விடுவார் என ஹாஸ்பிடல் கூட்டி சென்றனர்.

லட்சுமியும்,கெளசியும் அழுக.. அவர்களை சமாளிக்க சுதாவையும் ஹாஸ்பிடல் அழைத்து சென்றாள்…

தன் வீட்டு எல்லை மாரியம்மன் கோவிலை தாண்டும் போது,”அம்மா தாயே! ஹாஸ்பிடல்லே என்ன சொன்னாலும்,அதை தாங்கிகறே சக்தியே எனக்கு தா.எனக்கு வலிமையே கொடு. திடமா இருக்கனும்” என வேண்டிக் கொண்டாள்.

இரவு பனிரெண்டு மணி… கெளசியையும், லட்சுமியையும் வெளியே அமர வைத்து ,சுதாவை பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐசியுவினுள் சென்றாள் கங்கா. ஈசிஜி பார்க்க நேரே கோடு வந்தது.முடிந்து விட்டது என்றனர்.

கெளசியிடமும் லட்சுமியிடமும் சொல்ல.. ஹாஸ்பிடலிலேயே கதறி அழுதனர்.

‘கங்கா, இவங்க பொய் சொல்றாங்க. நம்ம வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாடி’ என்றாள் கெளசி.

இன்னொரு டைம் நல்லா செக் பண்ணுங்க…என டாக்டரிடம் முறையிட்டார் லட்சுமி.

இருவரையும் சமாதானப்படுத்தி, அழைத்து வர பெரும் பாடாகி போனது கங்காவிற்கு…

எந்த ஹாஸ்பிடலில் இருந்து கங்கா பிறந்தவுடன்…ஆசையாக வீட்டிற்கு அழைத்து வந்தாரோ…அதே ஹாஸ்பிடலில் இருந்து…உயிரற்ற உடலாக கனத்த இதயத்தோடு சிவராமனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் கங்கா.

—தலைவன் மறைந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!