Skip to content
Post Views: 15,443
“ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் மெல்விண்யாழி..!! எல்லாரும் எப்படி இருக்கீங்க..??” என்று ஒரு கையில் கைபேசியை உயர்த்தி பிடித்து கொண்டு மாலை சூரியனின் கதிர்கள் முகத்தில் பட்டு கண்களை கூச செய்திட மறு கையை நெற்றி மீது வைத்து கொண்டே வந்தவள் கைபேசியை திருப்பி கிரிவல பாதையில் அப்போது தான் நடக்க தொடங்கி இருந்த மக்களை படம் பிடித்து கொண்டே,
‘நான் இப்போ எங்க இருக்கேன் கெஸ் பண்ணுங்க பார்ப்போம் பிரெண்ட்ஸ்’ என்று கேட்க,
‘என்ன யாழி பக்தி பழமா மாறிட்ட..??’
‘ஏதோ கோவில்ன்னு தெரியுது’
Advertisement
‘உன் ட்ரெஸ் சூப்பர்’
‘அதை விட நீ சூப்பர்’
‘கதிரவன் முத்தமிட்ட முகத்தில்…’ என்று தொடங்கி ஒரு கவிதை என்று யூடியுபில் லைவ்வில் இருந்தவர்கள் அடுத்தடுத்து கலவையான கருத்து பதிவிட தொடங்கி இருந்தனர்.
Advertisement
கருத்திட்டவர்களில் பலர் அவள் பள்ளி மற்றும் கல்லூரி தோழர்கள் அதை எல்லாம் படித்து கொண்டு வந்தவள் புன்னகையுடன் அவர்களிடம்,
Advertisement
“இப்போ சின்ன ப்ரேக் எடுக்குறேன் முதல்ல பிள்ளையாருக்கு ஒரு தோப்பு காரணத்தை போட்டுட்டு பிரசாதம் சாப்பிட்டுட்டு இந்த கோவிலை பற்றின வலாக் உடன் நான் சீக்கிரமே வரேன் அதுவரை பை பிரெண்ட்ஸ்” என்று மீண்டும் ஒரு முறை சுற்றுபுறத்தை படம் பிடித்து விட்டு கைபேசியை யாழி அணைத்திட,
“யாழி இந்தா மோர்” என்று விஷ்ணு ,
‘ஒரு நிமிஷம் இருடா’ என்று கைபேசியை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தவள்,
Advertisement
‘மேக்அப் சரியா இருக்காடா விஷ்ணு வீடியோக்கு முன்ன லைட்டா டச்அப் பண்ணினேன் அது இருக்கா இல்லை வெயில்ல கலைஞ்சிடுச்சா எனக்கு சரியா தெரியலை’ என்று கேட்க
“உனக்கென்னடி எப்பவும் போல அட்டகாசமா இருக்க.., எத்தனையோ முறை சொல்லிட்டேன் உனக்கு மேக்அப்பே தேவை இல்ல நேச்சுரல் பியூட்டி நீன்னு ஆனா சொன்னா கேட்டா தானே..??” என்று அவன் கூறவும்,
“தம்பி நேர்ல சரிடா ஆனா வீடியோல கொஞ்சம் ப்ரைட்டா தெரியனும் இல்ல..!! அதுவும் எனக்கு இருக்க பாலோவர்ஸ் எதிர்பார்க்கிறாங்கடா மேக்அப் இல்லாமையே இவ்ளோ அழகுன்னா மேக்அப் போட்டா இன்னுமே வியூஸ் அதிகம் ஆகும் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாவாங்க சொல்றாங்க அதுபோல இந்த வாரத்துல ஆறு பேர் அதிகம் ஆகி இருக்காங்க” என்று அவள் கூறவும்
“அப்போ முன்னூத்தி நாற்பத்தி எட்டு முன்னூத்தி ஐம்பத்தி நாளா மாறிடுச்சாடி சொல்லவே இல்ல” என்று அவன் குறைபட,
‘நேத்து நைட் தான்டா பார்த்தேன்’
‘முதல்ல ட்ரீட் குடுடி’
‘வீட்டுக்கு போற வழில தரேன்டா’ என்றவள் ‘சரி வா’ என்று அங்கிருந்த பிள்ளையார் கோவில் அருகே சென்று,
‘இங்க இருந்து தான் எல்லாரும் ஆரம்பிக்கிறாங்க நாமளும் இதையே முதல்ல கவர் பண்ணுவோம்” என்று கூற சரி என்று தலை அசைத்தவன்,
‘இந்த பொசிஷன்ல நில்லுடி’ என்றான்.
‘டேய் எல்லாம் முன்னாடி வந்துட்டு இருக்காங்க நீ என்னை பின்னாடி பார்த்த மாதிரி நிற்க சொல்ற ‘ என்று தலையை திருத்தி கொண்டே அவள் கேட்க,
“லைட்டிங்டி உனக்கு தெரியுமா எனக்கு தெரியுமா..?? சொன்னதை செய்” என்று அவன் கட்டளை இட,
“எல்லாம் என் நேரம்டா.., மவனே நீ வேணும்ன்னா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல நான் எடிட்டிங்கும் கத்துக்கிட்டு நீ இல்லாமையே வ்லாக் பண்ணி *** என்று குறிப்பிட்ட யூடியூபர் பெயரை கூறியவள் அவரை போலவே நானும் லட்சகணக்கான பாலோவர்ஸ்சுடன் பெரிய இன்ப்ளுயன்சர் ஆகி சோஷியல் மீடியா முழுக்க ட்ரென்ட் ஆகி காலேஜ்க்கு எல்லாம் போய் ஸ்பீச் கொடுத்து கடைசியா பார்லிமென்ட் “
‘ஏய் ஏய் நிறுத்துடி கொஞ்சம் விட்டா ஏரோப்ளேன் ஏறி போய் வெள்ளை மாளிகையிலயே ஸ்பீச் கொடுப்பேன்னு சொல்லுவ போல’
‘ஏன்டா கொடுக்க மாட்டேனா..??’ என்று அவள் தன் டாப்ஸ்ஸின் காலரை தூக்கி விட்டு கொண்டு கூறியவள்,
“தம்பி பெருசா யோசிக்கணும் அப்போதான் நாம அதுல பாதியாவது தொட முடியும்”
‘ஏன்டி அதுக்கு இங்க’ என்று அவள் தலையை சுட்டி காட்டியவன்,
‘ஏதாவது சரக்கு இருக்கணும்டி நீயே யுஜி யோட படிப்பு ஏறாம தானே…’ என்று நமட்டு சிரிப்பு சிரிக்கவும்,
“டேய் அடங்குடா இந்த யாழியை நீ கம்மியா எடை போடாத தம்பி.., டெண்டுல்கர் பத்தாவது தான் படிச்சிருக்கார் அது தெரியுமா உனக்கு..?? நம்ம தல அவர் மட்டும் என்ன..? என்று புருவம் உயர்த்தியவள் அவர்கூட தான் டென்த்தோட மெக்கானிக் ஷாப்ல..”
‘ஏன்டி அதுக்காக எல்லாரும் டெண்டுல்கர், அஜித்குமார் ஆகிட முடியுமா..??’ என்று அவள் தலையில் குட்ட,
யாழியோ தன் கைபேசியை எடுத்து ஆராய்ந்தவள், “விஷ்ணு இன்னும் ஒரு கே சப்ச்க்ரைபர்ஸ் வரலன்னு நீ என்னை இளக்காரமா பார்க்கிரன்னு தெரியுது ஆனா இன்னைக்கு இல்லனாலும் நாளைக்கு எல்லாரும் யாழி யாழின்னு சொல்ல வைக்கலை என் பேரு யாழி இல்லை இவ்ளோ ஏன் நீயே நாளைக்கு இந்த அக்கா கிட்ட ஒரு செல்பின்னு வந்து நிற்க தான்டா போற….”என்று அவள் கூறி கொண்டிருக்கும் போதே,
“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற பாடல் ஒலிக்க கைபேசியை எடுத்து காதில் வைத்தாள் யாழி.
“ஏன்டி கூறுகெட்டவளே எங்க போறன்னு கூட சொல்லாம போவியா..?? வர வர உன் அட்டூழியம் தாங்கல யாழி, உங்க அப்பா கேட்கவும் பதறி போச்சுடி எனக்கு..”,
“தாயே உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி சலங்கை கட்டி விட்ட மாதிரி இந்த குதி குதிக்கிற”
“உன்கிட்ட எல்லாம் பேச முடியாது என்று பெருமூச்சு விட்டவர் எங்க அந்த எடுபட்ட பய அவன் கிட்ட கொடுடி ” என்று எடுத்ததுமே சுகமதி எண்ணையில் இட்ட கடுகாக பொரிய,,
‘இரு தாயே கொடுக்குறேன்’ என்றவள் விஷ்ணுவிடம் ,
“விஷ்ணு அறிவு இருக்காடா உனக்கு வயசு பொண்ணை எங்க கூட்டிட்டு போறன்னு கூட சொல்லாம எங்கடா போனீங்க நான் கூட பக்கத்துல இருப்பீங்கன்னு நெனச்சி உங்க அப்பாவை சமாளிச்சா இப்பதான் லைவ் பார்த்தேன் திருவண்ணாமலை மாதிரி தெரியுதே எதுக்குடா அவ்ளோ தூரம் போனீங்க..??
“ம்மா ஒவ்வொண்ணுத்துக்கும் உங்க கிட்ட சொல்லிட்டு போறதுக்கு நாங்க என்ன ஸ்கூல் படிக்கிற சின்ன பசங்களா..?? அவளுக்கு இருபத்தி இரண்டு எனக்கு இருபத்தி ஒன்னு வீ ஆர் அடல்ட்ஸ் எங்களை எங்களுக்கு பார்த்துக்க தெரியும் இப்படி வரும் போது எவ்ளோ த்ரில் தெரியுமா….??”
‘விஷ்ணு நீங்க பண்றதுக்கு பேர் வடிகட்டின முட்டாள்தனம், உங்க அப்பாக்கு மட்டும் தெரிஞ்சது’ என்றவர்,
‘ஸ்பீக்கர்ல போடு’ என்றார்.
‘என்னவாம்டா உங்க அம்மாக்கு’ என்று யாழி தம்பியை பார்க்க,
‘உன்கிட்ட தான் பேசணுமாம்டி’
‘சொல்லுங்க தாயே..!!’
‘யாழி உங்க அப்பா உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டார் இனியும் இந்த மாதிரி …’ என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே
‘வாவ்’ என்று சந்தோஷத்தில் ஆர்பரித்தாள் யாழி
அவள் கத்தியதில் சிலர் அவளை திரும்பி பார்க்க,
‘ஏன்டி லூசு இப்படி கத்துற..??’ என்று விஷ்ணு காதை குடைந்துகொண்டே அவளை பார்க்க,
“டேய் எனக்கு கல்யாணம் பண்ண போறாங்கடா” என்றாள் அவன் தோள் சாய்ந்து,
“ஹே அப்படியாடி நிஜமாவா சொல்ற..??” என்று மீண்டும் கேட்டு தெளிவு படுத்தி கொண்டவன்,
“அப்போ இனி மேல் நான் நெட் ஷேர் பண்ண தேவை இல்லயாடி, நைட் பூரா உட்காந்து சும்மாவே ஓசில எடிட் பண்ண வேண்டியது இல்லையா..?? உனக்கு சப்ஸ்க்ரைப் பண்ண சொல்லி என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்ல வேண்டியது இல்லையா..??உனக்கு டிரைவர் வேலை பாடிகார்ட் வேலை பார்க்க வேண்டியது இல்லயா..?? என்று பல இல்லையாவை அவன் அடுக்க,
‘ஆமாடா எருமை எனக்கும் இனி உங்க தொந்தரவு இருக்காது எப்படியும் என் புருஷரே எனக்கு இதெல்லாம் செஞ்சி கொடுத்துடுவாரு அதுவும் செய்றதுக்கு எந்த ட்ரீட்டும் கேட்காம, என்னை ப்ளாக்மெயில் பண்ணாம.. கேட்கும் போது எல்லாம் ப்ரீயாவே செஞ்சிடுவாரு” என்று கண் சிமிட்டியவள்,
“உங்க மத்தியில ஒரு வீடியோ எடுக்க முடியுதா..?? எப்ப பாரு நைநைன்னுட்டு.., அதுவும் உங்க அம்மா இதை செய் அதை செய் இவ்ளோ நேரம் எதுக்கு முழிச்சிருக்க, நேரத்துக்கு தூங்கு.., எங்க போற எங்க வர அப்பப்பா எவ்ளோ டார்ச்சர் இந்த டாரச்சர்ல இருந்து தப்பிக்கவே நாளைக்கே கல்யாணம் வைக்க சொல்லுடா உங்க அம்மாகிட்ட”
‘யாழி’ என்று மறுபுறம் கத்தி கொண்டு இருந்த சுகமதியிடம் பேசிய விஷ்ணு அவரை சமாதானப்படுத்தி,
“நாளை மதியம் வந்துடுவோம்மா” என்று கூறி இருந்தான்.
“சரிடா நேரா கோவில் கிட்ட போயிட்டு அங்க இருந்து ஆரம்பிப்போமா..??” என்று அவள் கேட்க,
“எதுக்குடி எப்படியும் நாம கிரிவலம் அங்க தானே முடிக்க போறோம் அப்புறம் எதுக்கு இங்க இருந்து அங்க வரை போயிகிட்டு இப்படியே கவர் பண்ணுவோம் முடிக்கிறப்போ கோவிலை எடுத்துடுவோம்” என்றான்.
“இதுவும் நல்ல ஐடியாதான்டா சரி” என்றவள் விஷ்ணுவுடன் இணைந்து செல்ல தொடங்கினாள்.
மீண்டும் ஒரு முறை தன் ஒப்பனையை திருத்தியவள் வழி நெடுக ஒவ்வொரு லிங்கமாக தரிசித்து அதையும் கானொளியில் பதிவு செய்து ஆங்காங்கே மக்கள் கூட்டத்தையும் படம் பிடித்து கொண்டு சென்றவர்களுக்கு ஒருகட்டத்தில் பசி வயிறை கிள்ள தூரத்தில் அதிர்துடியன் அன்னதானம் செய்து கொண்டிருப்பதை கண்டு அங்கே சென்றனர்.
error: Content is protected !!