யாழியை படம் பிடித்து கொண்டிருந்த விஷ்ணு எதிர்பாரா விதமாக அவன் காலின் மீது ஊர்ந்த சர்ப்பம் கண்டு அச்சத்தில் கைபேசியை நழுவவிட்டவன் பதட்டத்துடன் ‘பா..பா.. பாம்பூஊஊஊஊஉ’ என்ற கதறலுடன் காலை உதற அதே நேரம் பூமியில் ஊன்றி இருந்த மற்றொரு காலின் மீது வேறொரு சர்ப்பம் ஏற முற்ப்பட்டது.
ஆம் இரண்டுமே காதல் ஜோடிகள் போலும், ஒன்றை ஒன்று துரத்தி பிடித்து காதல் ஆட்டம் போட்டுக்கொண்டு வந்திருக்கும் போல விஷ்ணு அவர்களின் பாதையை தடை செய்யும் வகையில் நிற்கவும் அவனை தாண்டி செல்ல முற்ப்பட்டனர்.
அதற்குள் தன் கால்களை உதறி விஷ்ணு அவர்களின் ஆட்டத்தை கலைத்துவிட்டிருந்தான்.
அதிலும் தன் முன் சீறி நின்ற இருவரையும் ஒன்றாக கண்டவனுக்கு சர்வமும் ஒடுங்கி போக மறுநொடியே தலை தெறிக்க ஓட்டம் எடுத்திருந்தான். புது இடம் என்பதால் எந்த திசையில் செல்கிறோம் என்ற அனுமானமே இல்லாமல் உயிர் பிழைக்க வேண்டி கண்மூடிதனமாக ஓடினான்.
Advertisement
அவன் ஓடிய வேகத்தில் நேற்று பெய்த மழையில் ஆங்காங்கே கால்கள் சேற்றில் சிக்கி பல முறை விழுந்து எழுந்தவனுக்கு கைகால்களில் சிராய்ப்பு ஏற்பட ஒரு கட்டத்தில் கால்கள் பலமாக வழுக்கிவிட நிலைதடுமாறி கீழே விழுந்தவன் குன்றின் விளிம்பில் இருந்ததால் சரிந்து உருள தொடங்கினான்.
கூர்மையான கற்களும் சிறு பாறைகளும் நிறைந்திருந்த குன்றில் இருந்து உருண்டவன் குறைந்தது இருபது அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் விழுந்து அடுத்த சில நிமிடங்களில் மூர்ச்சையாகி போயிருந்தான்.
அதிர்ச்சியில் மயங்கி விட்டவனிடம் அசைவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் அதிர்துடியனின் கட்டளைப்படி அவன் புகைப்படத்தை வைத்து கொண்டு கோவில் சுற்றுபுறத்தில் அவனை தேடி திரிந்த குழுவினர் பலரிடம் விசாரித்து அதன் பின் மேலும் ஒரு மணி நேரத்திற்கு பின் விஷ்ணுவை தேடி குன்றின் மீது ஏறி இருந்தனர்.
Advertisement
ஆம் கோவிலில் யாழியை காப்பாற்றி உடை மாற்ற செய்து முன்னே அமர்த்தி விட்டு மகேஷிற்கு தகவல் தெரிவிப்பதற்காக அவருக்கு அவன் அழைப்பதற்குள் சுந்தரம் அழைத்து விட்டிருந்தார்.
Advertisement
திருமணத்தை தள்ளி போட சொல்லி அவர் சொன்னதாக கூறவும் மகேஷிடம் கொடுக்க சொல்லியன் ‘ஹலோ சார்..’ என்று ஆரம்பித்து அவர் பேசியதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தவன் அவர் முடிக்கவும் அவரிடம் முதலில் கேட்டது, ‘யாழி யாருடன் கோவிலுக்கு வந்தாள்..??’ என்பது தான்.
அதை கேட்ட மகேஷிடம் சிறு அதிர்வு ..!!
ஆம் பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு உடனே மகேஷிற்க்கு அழைத்த சுகமதி, ‘என்னங்க நம்ம பெண்ணை மருமகளாக்கணும்ன்னு உங்க முதலாளி விட மரகதம் அம்மா தான் ரொம்ப ஆசையா இருந்தாங்க அதனால அவசரபடாம பார்த்து பக்குவமா பேசுங்க, உங்க பொண்ணு நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிட்டு இருக்கா அவளை நம்பினா மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கின மாதிரி தான், முதல்ல வேணும் சொன்னா இப்போ வேண்டாம் சொல்றா யார் கண்டா கோவிலுக்கு போயிருக்கவ திரும்ப வந்து வேணும்ன்னு சொல்லவும் வாய்ப்பு இருக்கு” என்று அவர் கூற,
Advertisement
“எனக்கும் அதே யோசனை தான் மதி, இன்னும் குழந்தையாவே இருக்கா பார்க்கிறது கேட்கிறது எதையும் புரிஞ்சிக்காம எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிட்டு இருக்கா, நான் ஒரு கணக்கு போட்டு ஜாதகம் கொடுத்தா அது வேற மாதிரி ஆகிடுச்சி அதான் இப்போதைக்கு சார்கிட்ட தள்ளி போட சொல்லி தான் கேட்க போறேன் இன்னொருமுறை யாழி கிட்ட நிதானமா பேசி புரிய வைக்க பார்க்கிறேன் அப்பவும் இப்படியே இருந்தா இந்த கல்யானத்தை நிறுத்தி தான் ஆகணும் வேற வழி இல்ல” என்று அவர் தளர்ந்த குரலில் கூற,
“அந்த அளவு போகாதுன்னு நம்புங்க என்னமோ தெரியலை என்னைக்கும் இல்லாத திருநாளா பசங்களும் இப்பதான் கோவிலுக்கு போறேன்னு என்கிட்டே சொல்லிட்டு போயிருக்காங்க… இதுவே எனக்கு நல்ல சகுனமா படுது ஆண்டவனாவது நல்ல புத்தி கொடுப்பான்னு நம்புவோம்.., நேத்து நைட்டே சரியான தூக்கம் இல்ல நீங்க ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க, அவங்க இன்னும் விளையாட்டு தனமாவே இருக்காங்க முதல்ல அவங்க கிட்ட இருந்து போனை வாங்கினாலே பல பிரச்சனை தீரும்” என்றிட,
“ஆமா நீ சொல்றதும் சரிதான் இன்னைக்கு முதல் வேலையா அதை செய்றேன் மதி என்றவர் வாசலை பார்த்தவாறே சார் இன்னும் வரலை அவரை பார்க்க தான் வைட் பண்ணிட்டு இருக்கேன் பேசிட்டு பாக்டரிக்கு போகணும் நீ டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு சாயந்திரம் ஒரு முறை டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம்” என்று வைத்தார்.
அவர் நினைவில் மூழ்கி இருக்க சற்று உரத்த குரலில், “மிஸ்டர் மகேஷ் உங்களை தான் கேட்கிறேன் யாழி யார்கூட வந்தா..??” என்று மீண்டும் அழுத்தமாக அதிர்துடியன் கேட்க,
‘என் பையன் கூட தான் சார்’, என்றவருக்கு அப்போதுதான் யாழி கோவிலுக்கு சென்றது அதிர்ரனுக்கு எப்படி தெரியும்..?? என்ற கேள்வி பிறக்க சட்டென அச்சம் சூழ,
‘சா.. சார் உங்களுக்கு எப்படி..?? யாழி விஷ்ணுக்கு என்னாச்சு..??’ என்று பதட்டத்துடன் கேட்க அவருக்கு சுருக்கமாக நடந்ததை கூறியவன்,
“பயப்பட வேண்டாம் யாழி இப்போ என் கூட தான் இருக்கா, எந்த ப்ராப்ளமும் இல்ல”
‘யாழி கிட்ட கொடுங்க..’ என்றார் அவசரமாக,
‘அவ விழுந்த அதிர்ச்சியில பயந்து போயிருக்கா..?? சரியா பேசமுடியலை கொஞ்சம் நார்மல் ஆனதுமே பேச வைக்கிறேனே உங்களுக்கு ஓகேவா..??’
‘அது..’ என்று ஒரு நொடி தயங்கியவருக்கு பெண் பிள்ளையை எப்படி தனியாக என்ற சிந்தனை தோன்றினாலும் அதிர்துடியனை பற்றி பெண்களிடமான அவன் அணுகுமுறை பற்றி அறிந்திருப்பவருக்கு கொண்ட சஞ்சலமும் வந்த சுவடே தெரியாமல் நீங்கிட,
‘இட்ஸ் ஓகே சார் ஆனா என் பையன் விஷ்ணு என்னானான்..’ என்றிட,
‘விஷ்ணு கோவில் கிட்ட எங்கயும் இல்ல போல இருந்திருந்தா நிச்சயம் அவளை தேடி வந்திருப்பான் நான் ஏற்கனவே விசாரிக்க சொல்லி ப்ரித்விகிட்ட சொல்லிட்டேன்.., நீங்க உங்க பையன் போட்டோ அப்புறம் நம்பர் எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க அவனை கண்டுபிடிக்க ஈசியா இருக்கும்” என்று கூற,
‘சரி சார்’ என்றவர் உடனே விஷ்ணுவின் புகைப்படத்தை அவனுக்கு அனுப்பி விட்டு விஷ்ணுவிற்கு அழைக்க அவன் எடுக்க வில்லை.., அதற்கு மேல் அங்கிருக்காமல் உடனே கோவிலை நோக்கி அவர் கிளம்ப அதற்குள் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது கூடவே சுகமதி ரத்த அழுத்தம் அதிகரித்ததில் மயங்கி விழுந்துவிட்டார் என்ற செய்தியும்.
பிள்ளைகளா..?? மனைவியா..?? என்ற நிலை வர தத்தளித்து போனார் மகேஸ்வரன். என்ன செய்வது என்று புரியாமல் சில கணங்கள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார் ஆனால் அவர்கள் இருவரும் அதிர்துடியனின் பாதுகாப்பில் இருப்பதை உணரவும் தான் அவரால் நிம்மதி மூச்சு எடுக்க முடிந்தது.
இருக்காத பின்னே..!! எத்தனை அசாதாரணமான சூழலையும் கடினமான சிக்கல்களையும் அனாயசமாக கையாண்டு வெற்றி காண்பவன் அல்லவா அவன்..!! அதனால் பிள்ளைகளை நிச்சயம் அவன் பத்திரமாக மீட்டு கொணர்வான் என்ற நம்பிக்கையுடன் வண்டியை திருப்பிக்கொண்டு வேகமாக தன் வீட்டிற்கு சென்றார்.
கண்கள் இடுங்க விஷ்ணுவின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்த அதர்துடியனின் முகம் இறுகி போனது.
அடுத்த சில நொடிகளில் என்ன நடந்திருக்கும் என்று கணித்துவிட்டான்..!!
‘ஆம் நிச்சயம் எங்கோ வீடியோ எடுக்க சென்றதினாலேயே யாழியை தனித்து விட்டு சென்று அவளை ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறான்’ என்று புரிய அதிர்துடியனின் விழிகள் சிவந்து போனது.
உயிரானவளை அவன் கண் முன்னேயே உயிருக்கு போராட வைத்து அதிர்துடியனையே உயிரோடு மரண வாயிலில் நிற்க வைத்து நடுங்க செய்த விஷ்ணு மட்டும் அந்த நொடி அவன் கையில் சிக்கி இருந்தால் சுக்கு நூறாக அவனை கிழித்து தோரணம் கட்டியிருப்பான் என்பது நிச்சயம்.
சில கணங்கள் அங்கிருந்த மரத்தில் கரத்தை பதித்து நின்று தன்னை மட்டுபடுத்த முயன்று தோற்றவன் கட்டுகடங்கா ஆவேசத்துடன் மகேஷ் அனுப்பிய எண்ணிற்கு உடனே அழைத்து விட்டான்.
ஆனால் பல நிமிடங்களுக்கு அழைப்பு சென்று கொண்டே இருந்ததே தவிர ஏற்கபடவில்லை. அதன் பின் மீண்டும் தம்பிக்கு அழைத்து அத்தனை துரிதமாக செயல்பட்டிருந்தான் .
அதிலும் அவன் முத்தமிட்ட நாசியில் இன்னுமே அவன் அதரங்களின் வெம்மை அவளை தகிக்க செய்திட நடுங்கும் விரல்களால் நாசியை அழுந்த பற்றி உதடுகள் துடிக்க அவனை பார்த்தவளுக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது.
அதை கண்டு ‘என்னடா பண்ணிட்டு இருக்க அதி..??’ என்று தன்னையே கடிந்து கொண்டவன், ‘ஹே யாழி எனக்கு உன்…’ என்று அவளுக்கு புரிய வைக்க முயல அவளோ மௌனக்கண்ணீருடன் அவனை பார்த்திருந்தாள்.
அவள் கண்ணீரை கண்டு ‘ப்ச்’ என்று வலக்கர முஷ்ட்டியை ஓங்கி காரில் அறைந்திருந்தான்.
அதில் அவள் இன்னுமே உடல் தூக்கி வாரி போட அச்சத்துடன் அவனை பார்க்கவும் ‘ஸ்டாப் க்ரையிங் ‘ என்று சீறியவன் சில கணங்களுக்கு பின் நெற்றியை இருவிரல்களால் அழுத்தி விட்டுக்கொண்டே நடந்தவன் மீண்டும் அவளிடம் வந்து,
‘ஹே ரிலாக்ஸ் சும்மா சொன்னேன் டோன்ட் பீ பேனிக் ஜஸ்ட் சில் (don’t be panic just chill)’ என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு அழைப்பு வந்தது.
‘ஒன் செக் பேசிட்டு வரேன் அதுக்குள்ள நீ சேன்ஜ் பண்ணு’ என்றவன் அழைப்பை ஏற்று ‘சொல்லு ப்ரித்வி’ என்றவாறே நகர்ந்தான்.