ராகம் – 12.2
‘அண்ணா நீங்க சொன்ன பையனை கண்டுபிடிச்சிட்டோம்’
‘எங்க இருக்கான்..??’
‘இங்க கோவில்ல இருந்து என்று குறிப்பிட்ட இடத்தை கூறியவன் அங்க பள்ளத்துல விழுந்து கிடந்தான்’
‘எத்தனை அடி ஆழம் தூக்கிடீங்களா..??’
Advertisement
“இருக்கும்ன்னா இருபது அடிக்கு மேல இங்க பக்கத்து கிராமத்துல இருக்கவங்களை துணைக்கு கூட்டிட்டு வந்து நம்ம பசங்க தூக்கிட்டு வந்துட்டாங்க’
‘சரி அடி பட்டிருக்கா பார்த்தியா..? காயம் ஏதாவது பலமா இருக்கா கீழ விழுந்தான்னு சொன்னியே முதல்ல அவன் தலையை செக் பண்ணியா..??’ என்று கேட்க,
‘இல்லன்னா இதோ இருங்க பார்க்கிறேன்’ என்று அலைபேசியை மற்றொருவனிடம் கொடுத்தவன் விஷ்ணுவை ஆராய்ந்து அவன் காயங்களை உறுதி செய்தான்.
Advertisement
‘கான்ஷியஸா இருக்கானா..??’
Advertisement
“இல்லண்ணா மயக்கமா தான் இருக்கான்.. இப்போ என்ன பண்ணட்டும்..??” என்று ப்ரித்வி அதியின் பதிலை வேண்டி நிற்க,
‘இது என்னடா கேள்வி..?? முதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ அதுக்கு முன்ன அந்த பையன் மயக்கம் தெளியவச்சு குடிக்க ஏதாவது கொடு, மறக்காம எக்ஸ்ரே எடுத்து கை, கால்ல எங்கயாவது முறிவு இருக்கா பாரு முக்கியமா ஹெட் இஞ்சுரி இருக்கான்னு பார்த்திடு ‘ என்று மேலும் பேசிகொண்டே செல்ல இப்போது மகேஷிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.
“ப்ரித்வி நீ அவனை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு எனக்கு கூப்பிடு” என்று துண்டித்து மகேஷின் அழைப்பை ஏற்க,
Advertisement
“சார் இப்போ நான் என் பிரெண்டோட அந்த கோவிலுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன், விஷ்.. விஷ்ணு என்ன ஆனான் உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சதா..?” என்று பதட்டத்துடன் கேட்க,
“ரிலாக்ஸ் மிஸ்டர் மகேஷ் நான் தான் சொன்னேனே ஏற்கனவே ப்ரித்வியை அனுப்பிட்டேன்னு.., இப்போதான் பேசினேன் நீங்க பயப்படற அளவு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல விஷ்ணு கிடைச்சிட்டான் ஹீ இஸ் சேப்..!!”
‘என் பெண்ணை தனியா விட்டுட்டு எங்க பொறுக்க போச்சு அந்த நாய்..??’ என்று ஆரம்பிக்கவும்,
‘இல்ல மிஸ்டர் மகேஷ் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை அவன் பள்ளத்துல விழுந்து மயங்கி இருக்கான் ப்ரித்வி இப்போ அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு இருக்கான் நீங்க பொறுமையா வாங்க அதுக்கு முன்ன யாழிகிட்ட பேசிடுறீங்களா கொடுக்கட்டுமா..?’
“ஐயோ சார் என் வைப்க்கு இன்னும் விஷயம் தெரியாது அவளுக்கு ப்ரெஷர் அதிகமாகி மயங்கிட்டா அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போன டென்ஷன்ல கையும் ஓடலை காலும் ஓடலை ஆனா யாழி உங்க கூட இருக்கிறதால தைரியமா இருந்துட்டேன் ” என்றிட,
‘யாழி அம்மா இப்போ எப்படி இருக்காங்க ..??’
‘இப்போ பரவால்ல சார், நீங்க யாழி கிட்ட கொடுங்க” என்றவரின் குரலில் அத்தனை சோர்வு..!!
“கொடுக்குறேன் ஆனா யாழிகிட்ட அவங்க அம்மா இல்ல விஷ்ணு பத்தி பேச வேண்டாம் அவளே கேட்டா அவன் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டதா சொல்லிடுங்க என்றவன் ஒரு நொடி நிறுத்தி நான் ஏன் சொல்றேன்னு புரியும்ன்னு நம்புறேன்” என்றிட,
பின்னே ஆற்றில் விழுந்து புனர்ஜென்மம் எடுத்து வந்திருக்கும் மகளுக்கு எந்த அதிர்ச்சி அளிக்க கூடாது என்பது அவருக்கு தெரியாதா என்ன..?? உடனே ‘சரிங்க சார்’ என்றார்.
இங்கு யாழியோ அதிரன் அவளை நீங்கி செல்லவும் கண்களை துடைத்து கொண்டு ஆசுவாச மூச்சு விட்டவள் பின்புற கதவை திறந்து ஏறி உடனே ஜன்னலை ஏற்றி விட்டு கையில் இருந்த பெட்டியை திறக்க அதில் அணிவதற்கு இலகுவாக இருக்க வேண்டி அழகான ப்ராக் வாங்கி இருந்தான்.
புன்னகையுடன் அதை வருடி கொடுத்தவள் ஜன்னல் வழியே அவனை பார்க்க அவனோ பார்க்கிங்கின் சற்று தூரத்தில் நின்று யாரிடமோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான்.
ப்ராக்கை பக்கம் வைத்து விட்டு முதலில் டீஷர்ட்டை கழற்ற போனவள் சற்று நிதானித்து அதை தன் நாசி அருகே கொண்டு செல்ல அதில் இருந்த அவள் அறியாத அவன் வாசம் அவளை ஈர்க்க நிதானமாக ஆழ்ந்து சுவாசித்தாள்.
கண்களை மூடி அவன் டிஷர்ட்டை அழுத்தி பிடித்து அவன் வாசத்தை தன்னில் நிரப்பிக்கொண்டிருந்தவள் பல நிமிடங்களுக்கு பின் தன் முடிவை மாற்றி டீஷர்ட்டின் கைகளை தோள்பட்டை வரை மடித்து விட்டு அதன் மீதே பராக்கை அணிந்து கொண்டு கீழே இறங்கினாள்.
அவளை கண்டதும் மகேஷிடம், ‘நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல கூப்பிடுறேன்’ என்றவன் கைபேசியை அணைத்து விட்டு அவளை நோக்கி சென்றான்.
அருகே வந்து காரில் சாய்ந்து கொண்டு அவளை பார்த்தவனின் பார்வை விரித்து விடப்பட்டிருந்த அவள் கூந்தலில் தொடங்கி மெல்ல முகத்தில் படிந்து பின் நிதானமாக அவளுடையில் நிலைத்தது.
அவன் பார்வையின் மாற்றம் உணர்ந்த யாழிக்கோ முதல் முறையாக தன்னை ஒருவன் பார்வையாலேயே பரிதவிக்க செய்கிறானே என்று நெஞ்சம் படபடத்தது.
ஆம் இதுவரை யாரும் உரிமையாய் அவளை பார்த்ததும் இல்லை அதற்கு அவள் அனுமதித்ததும் இல்லை ஆனால் இப்போது உரிமையுடன் படியும் அவன் பார்வையை அவளால் தடுக்க முடியவில்லை.., ஏன் இப்படி பார்க்கிறாய்..?? என்று கேட்க தோன்றவில்லை, என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்..?? என்று தன்னுடனே அல்லாடிக்கொண்டு இருந்தவளுக்கு எப்படி தன் உணர்வுகளை கையாள்வது என்று புரியாமல் மெளனமாக இருகரங்களையும் கோர்த்து நெரித்து கொண்டிருந்தாள்.
அவள் அவஸ்த்தைகளை ரசித்து கொண்டிருந்தவன் திடிரென அவள் புறம் குனிந்து ‘நாட் பேட்’ என்றான்.
அதை எதிர்பாராது ‘எதுக்கு..??’ என்பதான பார்வை மட்டுமே பெண்ணவளிடம்.
‘இல்ல உன் வயசை சொல்லி உனக்கு சரியா இருக்குமான்னு சந்தேகத்தோட தான் வாங்கினேன் பட் ஓரளவு சரியான சைஸ் தான் வாங்கி இருக்கேன், சிம்பிள் அண்ட் எலிகன்ட் பட் யு லுக் பெண்டாபுலஸ் இன் திஸ் அவுட்பிட் (simple and elegant but you look fantabulous in this outfit)’ என்றிட,
அவன் குறித்த பயத்திலேயே நேரத்தை கடத்தி வந்தவளுக்கு முதல் முறையாக அவளை வர்ணித்தவனின் வார்த்தைகள் பெண்ணிற்குள் வானவில்லின் வர்ணஜாலத்தை நிகழ்த்த இதழ்களை கடித்து தலை குனிந்தவளிடம் வெட்க புன்னகை அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிகொண்டு அழகியான அவளை பேரழகியாக்கி இருந்தது.
அவள் சிவந்த முகத்தை கண்டு தன் போக்கில் உயர்ந்த கரத்தை கண்டு ‘அதி கண்ட்ரோல்’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன், உடனே கையை கீழிறக்கி கைபேசியை எடுத்து மகேஷிற்கு அழைத்து ‘உங்க அப்பா பேசுறார் நீ பேசு நான் வந்துடுறேன்’ என்றான்.
‘அப்பாவா..??’ என்று கேட்டபோது தான் அவளுக்கு பெற்றவர்களின் நினைவே வந்தது.
ஆம் அவன் அருகாமையில் சுற்றம் மட்டுமல்ல தன்னையும் மறந்திருப்பவளுக்கு மற்றவர்களின் நினைவு மட்டும் எங்கிருந்து வரும்..?? இப்போது தந்தையின் குரல் கேட்கவுமே குற்ற உணர்வு மேலோங்க மெல்லிய குரலில் ‘அப்பா..’ என்றாள்.
யாழி பேச தொடங்கவுமே அவர்களுக்கான இடைவெளியை கொடுத்து விட்டு சற்று ஒதுங்கி வந்து நின்றான்.., ஆனால் அப்போதும் பார்வை அவள் மீதே..!!
நீரில் விழுந்த அதிர்ச்சி அவனுடனான, எதிர்பாரா சந்திப்பு என்று ஏற்கனவே பரிதவித்து கொண்டிருப்பவளிடம் மேலும் விசாரித்து அவளை பீதி அடைய செய்யக்கூடாது அன்னையின் நிலையை சொல்லி கலவரபடுத்த கூடாது என்பதாலேயே அவளிடம் எதையும் கேட்காமல் சகஜமாக பேச்சு வளர்த்து அவளை திசை திருப்பி இயல்பு நிலைக்கு திரும்ப செய்திருந்தான்.
******************************************************
