Skip to content
Post Views: 10,224
‘எதுவும் தெரியாம எப்படிடி கல்யாணம்…??’
‘எனக்கும் தெரியலடா ஆனா போட்டோலயே ரொம்ப பிடிச்சது இப்போ அவரை விட்டுட்டு இருக்க முடியும்ன்னு தோணலை..,’,
‘ஏய் லூசு இதை ஏன்டி முன்னாடியே சொல்லலை, உனக்கு பிடிக்கும், லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா நான் தடுத்து இருக்க மாட்டேன்டி’
‘என்னடா மாத்தி மாத்தி பேசுற..??’
Advertisement
‘மாத்தி பேசலைடி முதல்ல அவரை ரவுடின்னு நெனச்சு எங்க அவர் கிட்ட நீ மாட்டிப்பியோன்னு தான் வேண்டாம் சொன்னேன் ஆனா உனக்கு பிடிச்சதை என்னைக்கு நான் தடுத்து இருக்கேன் சொல்லு..?’ என்றவனுக்கு இப்போது அதியின் கோபம் தவறாக தெரியவில்லை அவன் அடியும் வலிக்கவில்லை.
‘ஆனாலும் இது சரி வருமா..??’ என்ற யோசனை தான் ..
‘ஆம் எத்தனை தான் கேலி கிண்டல் செய்து அவளை வம்பிழுத்து சண்டை போட்டாலும் என்றுமே விஷ்ணு அவள் ஆசைக்கு குறுக்கே நின்றது இல்லையே அதற்கு இன்றுவரை அவள் சேனலுக்கு அவன் கொடுக்கும் ஆதரவும் மெனக்கெடலுமே சாட்சி.
Advertisement
சில நிமிடங்களுக்கு பின் அவளிடம், “யாழி இது தான் உன் முடிவா..??? இத்தனைக்கும் அவருக்கு உன் மேல லவ் இல்லன்னு சொல்ற அப்புறம் எப்படிடி நல்லா யோசிச்சிக்கோ’
Advertisement
“நல்லா யோசிச்சிட்டு தான்டா சொல்றேன் என்னால அவர் இல்லாம வாழ முடியாது” என்றாள் திடமாக..,
“அவரை கல்யாணம் பண்றதுல எனக்கும் சந்தோஷம் தான் ஆனா அவரை கல்யாணம் பண்ணிகிட்டா உன்னோட யூடியூபர் கனவு என்னாகிறது..??”
“எனக்கு அவர் ஒரு கண் என்னோட லட்சியம் இன்னொரு கண் ஒண்ணுக்காக இன்னொன்னை இழக்கமாட்டேன்”
Advertisement
‘ஆனா இது எப்படிடி சாத்தியம்..?? அவருக்கு தெரிஞ்சா முதல் வேலையா உன் போனை உடைப்பார் அப்புறம்…..’ என்று அவன் நிறுத்த,
‘இல்லடா.., அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்’
‘ஐடியாவா..?? என்னது..??’
“என்னோட கனவு என்னன்னு தெரிஞ்சா தானே அவர் தடுக்க முடியும் அவருக்கு தெரியாம அதை அடைய முயற்சி செய்ய போறேன்டா”
‘என்னடி சொல்ற..?’
‘என்னோட ஆம்பிஷன் என்னன்னு கேட்டாங்க நான் கலெக்டர் ஆகணும்ன்னு சொன்…’ என்று அவள் முடிக்கும் முன்னமே ,
‘என்னடி சொல்ற..??’ என்று பதறி போனான் விஷ்ணு.
‘ஆமாடா அவசரத்துக்கு கண்ணுல பட்ட போர்டை பார்த்து சொல்லிட்டேன் அவரும் அதை உண்மைன்னு நம்பிட்டார், இப்போ என் மேல சந்தேகம் வராது கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அவர் ஆபிஸ் கிளம்பினதும் நாம பழையபடி நம்ம வேலையை பார்க்கலாம்’
‘என்ன உருட்டுடி இது..?? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா..??’
“டேய் நமக்கு ஒன்னு தேவைன்னா அதுல ஸ்ட்ராங்கா போகஸ்ட்டா இருக்கனும் யாருக்காவும் கிவ் அப் பண்ணாம எல்லா வழிலயும் போராடனும்ன்னு கடைசியா நாம பார்த்த மோட்டிவேஷனால் ஸ்பீச்ல கோபி சார் சொல்லி இருந்தாரே மறந்துட்டியா…??
‘ஆனாலும் கலெக்டர் ரொம்ப ஓவர்டி..’ என்று அதிர்ச்சியில் இருந்து மீளாதவனின் குரல் இறங்கி ஒலிக்க,
“அப்போ கண்ணுல அந்த போர்ட் தான்டா பட்டுச்சு அதுக்கு நான் என்ன பண்ண..??” என்று அவள் தோள்களை குலுக்கியவள் ‘சரி சொல்லு உனக்கு ஓகேவா..??’
“நீ சொல்றது ஓகேடி ஆனா மாட்டிக்கிட்டா….?? “
‘அப்பா கிட்ட மாட்டாம எத்தனை வீடியோஸ் எடுத்தோம்’ என்று அவள் கெத்தாக பார்க்க,
‘ஆனா கடைசில மாட்டிகிட்டோமேடி, அப்பா பரவால்ல ஒரு அடியோட விட்டார் ஆனா அவர் கிட்ட மாட்டிக்கிட்டா தொலைஞ்சோம்..’ என்றவனின் கண்களில் அத்தனை மிரட்சி..,
“டேய் அபசகுனமா பேசாத.., ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ்ன்னு சொல்லி எத்தனை ஷார்ட்ஸ்ல நாம பார்த்திருப்போம் அதே கான்பிடன்சோட தானே ஒவ்வொரு வீடியோ எடுக்க கிளம்புவோம் இப்பவும் அப்படியே நம்புடா..” என்று தைரியமூட்டினாள்.
“இன்னொன்னு இத்தனை நாள் இல்லாம அப்பாகிட்ட நாம மாட்டிகிட்டது எப்படின்னு நிதானமா உட்காந்து டீகோட் பண்ணினா இன்னொரு முறை மாட்டாம நம்ம லட்சியத்தை அடையற தெளிவு கிடைக்கும் அதுக்கான பாதையும் பிரகாசமா இருக்கும்டா”
விஷ்ணு அவளை நம்பாத பார்வை பார்க்க, அவன் தலையில் கொட்டியவள்,
“என்னடா இது நீயும் அவர் மாதிரியே இருக்க”
‘என்னடி உளருற..??’
‘பின்னே உனக்கும் ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரலடா..’ என்றவள்
‘சரி நான் அப்பா அம்மாகிட்ட போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்றேன்’ என்று கிளம்பினாள்.
******************************************
அடுத்த நாள் காலையே அதிர்துடியனை தேடி வந்த மகேஷ் அவனிடம் ‘கொஞ்சம் பர்சனலா பேசணும்’ என்றார்.
‘சொல்லுங்க’ என்றான் தன் கைபேசியை சைலன்ட்டில் போட்டுவிட்டு,
எப்படி பேச்சை ஆரம்பிப்பது..?? என்ற தயக்கத்தோடு அவர் அமர்ந்திருக்க அதிர்துடியனோ அவருக்கு காபி வரவழைத்து கொடுத்தவன் ‘எடுத்துக்கோங்க’ என்றான்.
மகேஷை பார்த்தவாறே காபியை பருகி கொண்டிருந்த அதியின் மனதிலோ நேற்று அக்கா தம்பி இடையே நடந்த பார்வை பரிமாற்றத்தின் பொருள் குறித்த அலசல்…
அவர் குடித்து முடிக்கவும், ‘இப்போ சொல்லுங்க’
‘சார் அது.. அது வந்து நேத்து கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளி போடலாம்ன்னு சொன்னேன் ஆனா இப்போ இந்த கல்யாணத்தை நடத்துறது சரியா வரும்ன்னு தோணலை இதோட இந்த பேச்சை விட்டுடறது எல்லாருக்கும் நல்லாதா இருக்கும்’ என்று எடுத்ததும் அவர் கூற
இருகரங்களையும் மேஜை மீது கோர்த்து மெளனமாக அவருக்கு செவிமடுத்து கொண்டு இருந்தவன் சில நிமிடங்களுக்கு பின் ‘ஏன் ..??’ என்றான்.
அவன் பார்வையே நேற்றைய நிகழ்வை குறித்தா..?? என்ற கேள்வியை தாங்கி இருக்க,
அதை உணர்ந்தவரும் ‘இல்ல சார் என் பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிச்சி போய் உடனே உங்களை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டதால தான் இது சரி வராதுன்னு சொல்றேன்’ என்றார்,
‘வாட்’ என்று அதிர்வுடன் நிமிர்ந்து அமர்ந்த அதிர்..,
‘பொதுவா பெண்ணுக்கு பிடிக்கலைன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்தி கேள்வி பட்டிருக்கேன் ஆனா உங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன அப்புறம் வேண்டாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?’ என்றவனிடம் அடக்கப்பட்ட சீற்றம்,
‘என் பொண்ணு உங்களுக்கு செட் ஆக மாட்டான்னு அர்த்தம் சார்’
“என்ன உளறல் இது..?? எனக்கு வார்த்தை ரொம்ப முக்கியம் மிஸ்டர் மகேஷ்” என்றவனுக்கோ நேற்று முன்தினம் நிச்சயத்திற்கு புடவை, நகை எல்லாம் வாங்குவதற்கு மகளை அழைத்து வந்தவர் இப்போது காரணம் இன்றி இப்படி பேசினால் கோபம் எழுவது நியாயம் தானே..!!
‘ஒரே நாளில் எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க..??’ என்றான் ஆழ்ந்த குரலில்.
‘ஏன்னா நேத்து என் பொண்ணு உங்களை வேண்டாம்ன்னு சொல்லி கல்யானத்தை நிறுத்த சொன்னா’ என்று அவர் சுற்றி வளைக்காமல் போட்டு உடைக்க,
‘வாட்’ என்று எழுந்து நின்ற அதியிடம் அதிர்ச்சியை விஞ்சிய சினம்,
ஆனால் அவர் முகத்தில் இருந்த பரிதவிப்பை கண்டவன்,
‘என்ன குழப்புறீங்க மிஸ்டர் மகேஷ்’
“நாங்களே குழம்பி தான் போயிருக்கோம் ஆனா எப்போ என் பொண்ணு நீங்க தான் வேணும்ன்னு திடமா முடிவேடுத்துட்டாளோ அப்பவே உங்களை பத்தி உங்க உயரத்தை பத்தி நல்லா தெரிஞ்ச என் முன்னாடி ரெண்டே ஆப்ஷன் தான் இருக்கு” என்றார்.
‘என்ன..??’
‘ஒன்னு இந்த கல்யாணத்தை நிறுத்தனும் இல்ல நடந்ததை உங்ககிட்ட மறைக்காம சொல்லிடனும் ஏன்னா பொய் மட்டும் இல்ல உண்மையை மறைச்சு ஆரம்பிக்கும் எந்த உறவும் நிலைக்காது சார்” என்றார்.
‘அப்படி என்ன மறைச்சீங்க..??’ என்று அவன் கேட்கவும் நேற்று முன்தினம் பெண் பார்க்க வந்ததில் தொடங்கி ஆதியந்தமாக மகள் பேசியதை அவனிடம் கூறியவர் கூடவே மகளும் மகனும் எதனால் தனியாக திருவண்ணாமலை வந்திருந்தனர் என்றும் கூற அசைவின்றி கேட்டுகொண்டிருந்த அதிர்துடியனின் முகத்தில் உணர்வுகள் துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அதை கண்டவர், ‘இப்போ நான் நடந்ததை மறைச்சி கட்டி கொடுத்தா அது உங்களை ஏமாத்தின மாதிரி நாளைக்கே இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் இந்த விஷயம் எல்லாம் விஸ்வரூபம் எடுத்து அவளோட வாழ்வை பாதிக்கவும் வாய்ப்பு இருக்கு அதான் உங்க அப்பா அம்மாகிட்ட பேசுறதை விட இதை உங்க கிட்ட பேசுறது சரியா இருக்கும்ன்னு வந்தேன் ஏன்னா என் பொண்ணு இவ்ளோ பேசுவான்னு நானே எதிர்பார்க்கலை’ என்று கூற அதியின் பார்வையும் அதை தான் எதிரொலித்தது.
“ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறமும் இது தொடர்ந்தா அது எந்த இடத்துல கொண்டு நிருத்தும்ன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை அப்போ உங்களுக்கு பதில் சொல்ல முடியாம நான் நிற்ப்பேன்.., வேண்டாமே உங்களை பத்தி நல்லா தெரிஞ்சும் நான் அந்த ரிஸ்க் எடுக்க விரும்பலை”
‘இது தான் என் பொண்ணு..!! நான் இப்படி சொன்னதால அவ மொத்தமும் தப்புன்னு அர்த்தம் கிடையாது ஆனா அவளோட பேச்சு, சிந்தனை, செயல்பாடு உங்களோட ஒத்து போகாதுன்னு சொல்ல வரேன் , ஒருவேளை அவளை மாதிரியே வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியாத, உலகம் புரியாத, சுத்தமா பொறுப்பே இல்லாத எல்லாமே ஈசியா எடுக்குற ஒருத்தர் கூட அவளுக்கு வாழ்க்கை அமையலாம் ஆனா அது நிலைக்குமான்னு தெரியாது, யாராலையும் அதுக்கு உத்திரவாதமும் கொடுக்க முடியாது..’ என்றவர் மூச்சை ஆழமாக எடுத்து விட்டார்.
“ஆனா உங்க கூட இருந்தா என் பொண்ணோட வாழ்க்கை நிச்சயம் நல்லா இருக்கும்ன்னு தெரியும் ஆனா உங்க வாழ்க்கை பத்தின கேள்வி எனக்குள்ள எழுந்ததால தான் நடந்த எல்லாமே உங்ககிட்ட சொல்லிட்டேன் இனி நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்” என்றார்.
அதி அவரை கூர்மையாக பார்க்க,
‘கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் என் பொண்ணு லிவிங் பத்தி பேசினது அவளா பேசினது இல்ல சார் எனக்கு என் பெண்ணை பத்தி தெரியும்.., நிச்சயம் அதுக்கு அர்த்தம் தெரியாம தான் பேசினா.., அதுவரை விளையாட்டு தனமா இருக்கான்னு நினைச்சேனே தவிர இப்படி சோஷியல் மீடியாவால தன்னோட வாழ்க்கையை கெடுத்துக்குற அளவு இன்ப்லுயன்ஸ் ஆகி இருப்பான்னு எனக்கு தெரியாது…’
“உங்க அப்பா அம்மா மட்டும் இல்ல உங்களுக்கும் இந்த கல்யாணம் எத்தனை பிடித்தம்ன்னு தெரிஞ்சதால தான் சொல்றேன் என் பொண்ணு உங்களுக்கு தகுதியா இருப்பான்னு என்னாலேயே உத்திரவாதம் கொடுக்க முடியாது நேரத்துக்கு ஒண்ணுன்னு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க அவளால் உங்களுக்கு ஒரு அவமானமோ, கஷ்டமோ வேண்டாம்ன்னு தான் சொல்றேன்….”
அதிர்துடியனின் மௌன பார்வையை உணர்ந்தவர், “நடந்ததை நான் சொல்லிட்டேன் இனி என் பொண்ணு உங்களுக்கு தகுதியா இல்லையா.., வேணுமா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க” என்று பந்தை அவன் புறம் தள்ளிவிட்டு அவர் கிளம்ப,
அவன் அறைகதவை திறந்தவரிடம், ‘உங்க பொண்ணு சேனல் லிங்க் எனக்கு அனுப்புங்க’ என்று கூறி விட்டு கண்களை மூடி அமர்ந்தான்.
error: Content is protected !!