ராகம் – 16.2
காலை பந்தக்கால் நட்டதுமே விஷ்ணு பேக்டரிக்கு கிளம்ப யாழியோ கலங்கிய விழிகளுடன்,
‘விஷ்ணு ப்ளீஸ்டா போகாத.., எப்பவும் என் கூட இருக்க நீ என்னோட முக்கியமான நாள்ல கூட இருக்க மாட்டேங்கிற.., அப்படி என்ன என்னை விட உனக்கு வேலை முக்கியமா..?? என்று கேட்க,
“எனக்கு எப்பவும் நீ தான் யாழி முக்கியம்..!!” என்று மனதினுள் சொல்லிக்கொண்டவன் பதிலின்றி வெறுமையாக அவளை பார்த்தான்.
Advertisement
பின்னே இந்த கல்யாணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்றால் அதிரனின் பேச்சிற்கு அவன் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.
விஷ்ணுவை அன்றே வேலையில் சேர சொன்னவன் அவனிடம் ரிசெப்ஷன் அன்று ஒரு மணி நேரத்திற்கு முன் மண்டபத்திற்கு வந்தால் போதும் திருமணம் முடிந்து பதினோரு மணியளவில் பேக்டரிக்கு சென்று விட வேண்டும் என்ற கட்டளையுடனே அவனுக்கு விடுமுறை அளித்திருந்ததில் விஷ்ணுவிற்கு அதி மீது ஏக கடுப்பு..!!
அதுமட்டுமா..!! டெஸ்டினேஷன் வெட்டிங், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் என்று ஏற்கனவே திருமணத்தை பற்றிய அவள் விருப்பத்தை எல்லாம் வேலையை காரணம் காட்டி புறம் தள்ளி அவன் விருப்பம் போல அதிர்துடியன் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவனது ஒவ்வொரு செயலும் விஷ்ணுவை கோபமுற செய்திருந்தது.
Advertisement
ஆனால் அவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாத நிலையில் அதிர்துடியன் விஷ்ணுவை நிறுத்தியிருக்க அவனுக்கு பணிந்து போக வேண்டிய கட்டாயம்… அதோடு பல்வேறு கனவுகளோடு இருக்கும் யாழி இத்திருமணம் நின்றால் இன்னுமே உடைந்து போவாளே அதை நிச்சயம் விஷ்ணுவால் தாங்க முடியாது.
Advertisement
அதிர்துடியனுக்கு வேண்டுமானால் யாழியின் நேசத்தின் அளவு புரியாமல் இருக்கலாம்.., ஆனால் அதி யாழிக்கு எத்தனை முக்கியம் என்பதை அவளை விட அவன் அதிகம் தெரிந்து வைத்திருகிறான்.., அதனாலேயே தன் சோகத்தை தனக்குள் மறைத்து கொண்டு வேலைக்கு செல்கிறான்.
விஷ்ணுவை இரவு பகலாக பேக்டரியில் இருத்தியதன் மூலம் கல்யாண சடங்குகளை எல்லாம் வ்லாக்காக எடுக்கலாம் என்ற அவர்களின் எண்ணத்தில் சத்தமே இல்லாமல் வண்டி வண்டியாக மண் அள்ளி கொட்டி மூடியிருந்தான் அதிர்துடியன்.
தன் பதிலுக்காக காத்திருந்த யாழியிடம், “முடிஞ்சா நீ ட்ரைபாட்ல போன் பிக்ஸ் பண்ணி வீடியோ எடுத்து வை யாழி நான் அதுல வந்து பார்க்குறேன்” என்று தமக்கையின் திருமண சடங்குகளில் உடனிருக்க முடியாத வேதனையுடன் கிளம்பி சென்றான்.
Advertisement
மாப்பிள்ளை அழைப்பில் அதிக்கு மாலை இட்டு நகர்ந்தவன் மகேஷ் சொன்னதன் பேரில் அவனுக்கு குடிக்க பழச்சாறு கொண்டு வந்து ‘இந்தாங்க சார்’ என்று கொடுக்க,
அருகே இருந்த சுகமதியோ ‘டேய் இது என்ன சார் மோர்ன்னுட்டு ஒழுங்கா மாமான்னு கூப்பிடு’ என்று அதட்ட அவனோ தன் தமக்கையின் விருப்பத்தை மதிக்காத அதியை பார்த்தவாறு பிடிவாதமாக,
‘ம்மா அதெல்லாம் தானா வரணும் இப்போ எனக்கு சார் தான் கம்பார்டபிளா இருக்கு ப்ளீஸ் இப்படியே விடுங்க’ என்றான்.
அதியும், “அத்தை சாருக்கு என்னை எப்படி கூப்பிட பிடிக்குதோ அப்படியே கூப்பிடட்டும் நோ இஷுஸ் ” என்றான் மீசைக்கடியில் பதுக்கிய புன்னகையுடன்.
*******************************
கிருஷ்ணகிரியின் மையத்தில் அமைந்திருந்த அவர்களின் திருமண மண்டபமே தொழிலதிபர்கள், காவல் துறையை அதிகாரிகள், கரைவேட்டிகள் என்று ஊரின் முக்கிய புள்ளிகளால் நிறைந்திருந்தது…, மண்டபத்தினுள் நுழைந்த யாழி ஆங்காங்கே நின்றிருந்த கரைவேட்டிகள், பந்தோபஸ்திற்கு வந்திருந்த காக்கிகளை எல்லாம் கண்டு மிரண்டு போனவள் பதட்டத்துடன் அதியை ஒட்டி நின்று ‘என்னங்க’ என்று அவனை பார்க்கவும்,
அவளை உணர்ந்த அதிர்துடியன் மென்மையான குரலில், ‘எல்லாரும் அப்பாக்கு பழக்கம் யாழி, சிலர் எனக்கும்.., இன்பாக்ட் நம்ம கல்யாணத்தை சி.எம் தலைமையில நடத்த தான் அப்பா முடிவு பண்ணி இருந்தார் ஆனா சி. எம் கிட்ட கேட்டு டேட் பிக்ஸ் பண்ற அளவு நமக்கு நேரமில்லை’ என்று கூற யாழி ஆச்சர்யத்தில் விரிந்த விழிகளோடு அவனை பார்த்தாள்.
‘நிஜமா தான்..!! நான் நம்ம கல்யாணத்தை சீக்கிரமே வைக்க சொல்லவும் அப்பா அதை ப்ளானை டிராப் பண்ணிட்டார்’ என்று மேலும் பேச்சு கொடுத்து அவள் பதட்டத்தை தனித்தவன் மேடையில் அவளுடன் இணைந்து நின்றான்.
மெல்லிசை ஒலிக்க, இருவரும் மாலை மாற்றி கொள்ள முன்னாள் எம்எல்ஏ வில் தொடங்கி இந்நாள் எம்எல்ஏ, மாநில அமைச்சர்கள் சிலர், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று அவள் போஸ்டரிலும் அவ்வப்போது கல்லூரி விழாக்களிலும் எப்போதேனும் டிவியிலும் கண்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவளருகே அணிவகுப்பதை கண்டவளுக்கு என்ன செய்வது என்று புரியாத நிலையில் அதிர்துடியனை பார்க்க,
அவனோ நான் இருக்கிறேன் எனும் விதமாக தன் கரத்தை அவளோடு கோர்த்து கொள்ள யாழியின் நடுக்கம் சற்று குறைந்தது.
அவர்களுடன் சகஜமாக உரையாடிகொண்டிருந்த அதியும் அவன் தந்தையும் யாழிக்கு அவர்களை அறிமுகபடுத்த அமைதியாக கைகூப்பி புன்னகைத்தவளுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் விழித்தாள்.
பின்னே இது நாள் வரை அவள் கண்ட திருமண வரவேற்ப்பு போல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அதகளபடுத்தி ஆர்பரிக்காமல் சொல்லபோனால் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அத்தனை நேர்த்தியாக அவர்கள் வரவேற்ப்பை அதிர்துடியன் நடத்தி கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில் டாக்டர் பிரஷாந்தி உட்பட அவன் நண்பர்களின் வரவில் அதியின் விரல்கள் அவள் கை நழுவ சுகமதியை துணைக்கு அழைத்து நிறுத்தி கொண்டவள் அவர் சொன்னதை கேட்டு அதன்படி வாழ்த்த வந்தவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசியிருந்தாள்.
ஓரளவு கூட்டம் குறையவும் இருவருக்கும் பழச்சாரு கொடுக்க அதை பருகியவளின் விழிகளும் மனமும் வெட்கமே இல்லாமல் அவள் தேர்ந்தெடுத்த உடையில் பூமாலை சகிதம் வசீகர புன்னகையுடன் அவளருகே நின்றிருந்தவனையே சுற்றி கொண்டிருந்தது.
பல மணி நேரத்திற்கு பின் கூட்டம் நன்கு குறைந்து ஓரிருவர் மட்டுமே மேடை ஏறிக்கொண்டு இருந்த நிலையில் அதியிடம் போட்டோஷூட் எடுக்க வேண்டி இருவரையும் நெருக்கமாக நிற்க சொல்லி போட்டோக்ராபரின் உதவியாளர் வந்து அவனிடம் கூற மறுகணமே அதி ப்ரித்வியை தான் பார்த்தான்.
அவன் பார்வையின் கடுமை புரிந்தவனும் உடனே ஓடி வந்து, ‘நான் ஏற்கனவே சொல்லிட்டேண்ணா அப்புறம் ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியலை’ என்றிட,
யாழியோ அதியின் கோபத்தை கண்டு, ‘எ… என்..ன்ன’ என்று கேட்க,
அதற்குள் அவன் அருகே வந்த போட்டோகிராபர், “சா.. சார்.. சாரி சார்… தப்பு எங்க மேல தான் உங்க தம்பி ஏற்கனவே சொன்னார் என் அசிஸ்டென்ட் தெரியாம பழக்க தோஷத்துல மத்தவங்களது போல உங்களுக்கு போட்டோஷூட்க்கு சொல்லிட்டான் மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்று கூற,
அதியோ ‘இதுவே கடைசியா இருக்கணும்’ என்று கடுமையான குரலில் எச்சரித்து இருந்தான்.
அதை கேட்டு கொண்டிருந்த யாழிக்கோ என்ன இவன் போட்டோ எடுப்பதில் கூட கொஞ்சமும் அப்டேட் ஆகாமல் இருக்கிறான்.., இவனுக்கு என்ன சொல்லி எப்படி புரியவைத்து திருத்துவது என்று யோசனையில் யாழி நிற்க..,
அதே நேரம் அவள் தோழியர் பட்டாளம் மேடை ஏறி கூச்சலிட்டு கலாட்டா செய்து ஒரு கேண்டிட் பிக் எடுக்கலாமா..?? என்று தங்களுக்கு கேட்டவாறே அவளருகே நின்றிருந்தவர்கள் யாழியை அதி புறம் இடித்து தள்ளினர்.
அதை எதிர்பாராமல் தடுமாறிய யாழி பின்னே சாய போக அதற்குள் அதி அவள் விழாமல் அவசரமாக அவளை பிடித்து நிறுத்தியிருந்தான்.
**********************************************
உடனே இருவரின் நெருக்கத்தை கண்டு பெரும் கூச்சலுடன் ஆர்பரித்து கூடி இருந்த அனைவரும் அதை தங்கள் கைபேசியில் புகைப்படம் எடுக்க யாழியோ வெற்றிடையில் அழுந்த பற்றியிருந்த அவன் கரத்தை உணர்ந்து திகைத்து போய் அவனை பார்த்தாள்.
‘பத்திரமா நில்லுடி’ என்றவாறு அவன் தன் கையை எடுக்க முயல ஆனால் அது அவளிடையை விட்டு வருவேனா..?? என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.
ஆம் அவளை விழாமல் இருக்க வேண்டி அவன் பிடித்த வேகத்தில் துரதிரஷ்டவசமாக அவன் கைசங்கிலி அவள் இடை சங்கிலியின் கொக்கியில் சிக்கிகொண்டது.
இது புரியாமல் அதி அவன் கரத்தை எடுக்க முயன்றதில் ஒவ்வொருமுறையும் அவளிடையை அழுத்தமாக தீண்டிட யாழிக்கோ புதிதான அவன் கரத்தின் வெம்மை நடுக்கத்தை கொடுத்து இருதயத்துடிப்பும் எக்குதப்பாக எகிறி இருந்தது.
சீரற்ற மூச்சுக்களில் திணறி, ‘கக்… கை.. எடுங்..’ என்றவளுக்கு உதடுகளும் பற்களும் கிடுகிடுவென ஆடியது.
சுற்றி இருப்பவர்களின் பார்வை அவர்கள் மீதிருக்க அதியும் தன் கரத்தை எடுக்க முயன்று தோற்று போனவன்,
‘என் ப்ரேஸ்லெட் உன்னோட செயின்ல மாட்டிட்டு இருக்கு யாழி இங்க எடுக்க முடியாது இவங்க போகட்டும் எடுக்குறேன்’ என்று அதிர் கூற அவன் நெருக்கத்தில் தத்தளித்து கொண்டிருந்தவளுக்கு எங்கே அவன் வார்த்தைகள் கேட்டது..??
அவள் தோழிகளின் கூட்டம் கலையவும் அருகே இருந்த அவன் அன்னையிடம்,
‘ம்மா நானும் யாழியும் கொஞ்ச நேரத்துல வந்துடறோம் நீங்க பார்த்துக்கோங்க’ என்றவன் அவளிடையோடு கோர்த்த கரம் மற்றவர்கள் பார்வையில் படாதவாறு அருகே இருந்த அறைக்கு சென்று கதவை சாற்றினான்.
‘என்..னா..ச்சு’ என்று அவள் பதட்டத்தோடு கேட்க,
“உன் பிரெண்ட்ஸ் தள்ளி விட்ட வேகத்துல நான் பிடிக்கவும் என் பிரேஸ்லெட் உன் இடுப்புல இருக்க செயின்ல சிக்கிருச்சி” என்ற அதி அவள் லேஹெங்காவை ஒரு கையால் ஒதுக்கி,
‘இதை பிடி நான் எடுக்குறேன்’ என்றவன் அவள் தாவணியை பிடித்து கொள்ளவும்,
இடக்கரத்தால் கொக்கியை விடுவிக்க முற்ப்பட யாழிக்கோ ஏற்கனவே அவளிடையை பிடித்திருந்த கரத்தின் அழுத்தமும், வெம்மையும் தகிக்க செய்தது என்றால் இப்போது இடைசங்கிலியை விடுவிக்க வேண்டி மற்றோடு கரமும் அவளிடையோடு உறவாட நெஞ்சில் நீர் வற்றிய நிலை தான்.
அதிலும் இடையில் நர்த்தனம் ஆடிய அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் சிறுக சிறுக வீழ்ந்து கொண்டிருந்தவளின் கரமும் தன் போக்கில் தாவணியை நழுவ விட ‘சீக்..கி..ரம்… எட..எடு…ங்க ‘ என்று அவனை திரும்பி பார்த்தவள் விதர்விதிர்த்து போனாள்.
பின்னே அவளிடையில் சிக்கி கொண்ட அதியின் கரம் மட்டுமல்ல விழிகளும் அசைய மறுத்து சண்டித்தனம் செய்ய அவளருகாமையில் தன் கட்டுபாடுகளை இழந்து கொண்டிருந்தவன் இப்போது கொக்கியை அகற்றும் பணியை விடுத்து அவளிடையை சுற்றி தன் மற்றொரு கரத்தையும் படரவிட்டு அவள் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தான்.
ஏற்கனவே அவனால் அறியப்பட்ட புதுவித உணர்வுகளின் கனம் தாளாமல் தத்தளித்து கொண்டிருந்தவள் தன் கழுத்தை உரசிய அவன் மீசை ரோமங்களும் அதனூடே தெறித்த அனல் மூச்சுக்களும் அவளை பொசுக்கிட பெண்ணவள் விழிகளில் அத்தனை மிரட்சி.
கழுத்தில் புதைந்திருந்தவனின் வாசம் அவள் நாசியை நிறைத்து அவளிடம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்த கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இப்போது அவன் மீதே மொத்தமாக சாய்ந்திருந்தாள் யாழி.
வெளியில் யாழியை தேடி வந்து மரகதத்துடன் பேசிக்கொண்டு இருந்த விஷ்ணுவிற்க்கோ வியர்த்து வழிந்தது…
இருக்காதா பின்னே..!! அதிர்துடியனின் உயரம் அறிந்திருந்தாலும் இன்று அவன் செல்வாக்கை நேரில் கண்டவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருந்தது.
அதேநேரம் அதி யாழியை தனியே அழைத்து சென்று பத்து நிமிடங்கள் ஆகியும் இன்னும் வெளியில் வரவில்லை என்பதை அறிந்தவனுக்கு ஒருவேளை அவர்கள் குடும்பமும் யாழியும் அவன் செல்வ நிலைக்கு ஈடு இல்லை என்று கூறி யாழியை மிரட்டி அவளை கொண்டே கல்யாணத்தை நிறுத்தி விடுவானோ..?? என்ற அச்சம் கவ்வி பிடிக்க நிலைகொள்ளாது பதட்டத்தோடு யாழியின் வரவிற்காக காத்திருந்தான்.
***************************************

