Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 17.1

தன் அறையில் இருந்த யாழிக்கு  தோழிகளிடம் இருந்து அழைப்பு மேல அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள் என்று கூட தெரியாது ஆனால்  அவளுக்கு திருமணம் என்றதும் அத்தனை மெசேஜ்கள், அழைப்புகள்.

‘என்ஜாய்மென்ட் இல்லாத லைப் ஒரு லைப்பா ..?? அவசரப்பட்டு குழந்தை பெத்துக்காத…, என் அக்கா கல்யாணம் ஆகி ஏழு வருஷம் அப்புறம் தான் குழந்தை பெத்துகிட்டா.., சொல்றதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டாதே.., யாருக்காகவும் உன்னோட உரிமை விட்டுகொடுக்காத..,  உனக்காக நீ தான் பேசணும், நாளைக்கே ஹனிமூன் கிளம்பு.., பிக்சர்ஸ் இன்ஸ்டா, வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணு அப்புறம் யாழி  மறக்காம பிரஸ்ட் நைட் ரூம் டெக்கரேஷன், உன்னோட மேக் ஓவர் எல்லாம் எங்களுக்கு அனுப்பு’  என்று பலவித ஆலோசனைகளோடு  ஹனிமூன் புகைப்படங்கள் எல்லாம் அனுப்பி இருக்க யாழியும் அதை பார்த்தவாறு ஹனிமூன் செல்ல ஏற்ற இடம்,  உடைகள், மேக்அப், விதவிதமான போஸ்சில்  எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒத்திகை பார்த்து கொண்டிருந்தாள்.

சுகமதிக்கு அழைத்த மகேஷ், ‘மதி யாழியை சீக்கிரம் தயார் பண்ணு மாப்பிள்ளை வந்துட்டு இருக்கார்’ என்று கூறவும் மகளை தயார்படுத்தியவர் தன்னால் இயன்ற வரை புகுந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் குறித்து அறிவுரை சொல்லியவர் இறுதியாக எந்த விதண்டாவாதமும் பண்ணாம நைட் மாப்பிள்ளை சொல் பேச்சு கேட்டு நடந்துக்கோ’ என்று கூறி அனுப்பி வைத்தார்.



Advertisement

*****************************************

மரகதம் மகன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல யாழியோ அவர்கள் வீட்டின் பிரமாண்டத்தை கண்டு அதிசயித்து நின்றாள்.., வீடு அல்ல அதை பங்களா என்று தான் சொல்ல வேண்டும் அத்தனை உட்புற வேலைபாடுகளுடன் அமைந்திருந்த வீட்டின் அழகு அவளை கொள்ளை கொள்ள அவள் மனமோ நம்ம சேனலுக்கு நல்ல இடம் கிடைச்சிடுச்சி என்று ஆர்பரித்தது.

யாழியை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல அவளும் அவ்வாறே செய்து அதியோடு சேர்ந்து வணங்கிட,

Advertisement

‘இப்போ சந்தோஷமாம்மா’ என்று கேட்டுக்கொண்டே அதி யாழியோடு பெற்றோரின் பாதம் பணிந்தான்.

Advertisement

கண்கள் பணிக்க அவனை பார்த்தவர் “ரொம்பவே சந்தோசம் அதி.., இது அண்ணாமலையான் ஏற்படுத்தின பந்தம் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்… ரெண்டு பேரும் எல்லா வளமும் நலமும் பெற்று நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்” என்று அவர்களை ஆசிர்வதித்தவர் அதன் பின் யாழியை தன்னுடனே கூட்டி சென்று வீட்டை சுற்றி காண்பிக்க யாழியும் ‘ஆண்ட்டி’ என்று அவருடன் ஒட்டிக்கொண்டாள்.

ஒரு முறை இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட அதிர்துடியன்  இரவு உணவு அருந்த வந்த போது  அவளிடம்,

‘அது என்ன அம்மாவை ஆன்ட்டின்னு சொல்றது..??’

Advertisement

‘அது அவங்க.., அன்னைக்கு கோவில்ல பார்த்தப்போ இரு…’

‘அது அப்போ இப்போ அப்படி இல்லை அத்தைன்னு கூப்பிடு’

‘சரி’ என்று தலை அசைத்தவள் அவனுக்கு உணவு பரிமாற

‘அதி கூட சேர்ந்து உட்கார் யாழி நான் உங்களுக்கு பரிமாருறேன்’ என்றார்  மரகதம்.

‘இல்ல பரவால்ல அத்தை நானே..’ என்றவள் அவனுக்கு பரிமாறிய பின்பே அமர்வதை கண்டவருக்கு மருமகளின் உரிமையில் உள்ளம் குளிர்ந்து போனது….

சாப்பிட்டு முடித்து அதி அவனறைக்கு சென்று விட  யாழிக்கு பூ வைத்து பூஜை அறையில் வணங்க செய்தவர் அவள் கையில் இருவருக்குமான பாலை கொடுத்து  சாருவுடன் அனுப்பி வைத்தார்.

‘யாழி இது தான் மாமா ரூம் நான் கிளம்புறேன் பை, ஆல் தி பெஸ்ட் குட் நைட்’ என்று அவள் கீழிறங்கி செல்ல யாழிக்கு என்றும் இல்லாத விதமாக இன்று அடிவயிற்றில் பயபந்து உருண்டது.

செல்லும் சாருவை பார்த்தவாறு யாழி நிற்க ‘எவ்ளோ நேரம் இங்கயே நிற்க போற..??’ என்றவாறு அதி அவள் கையில் இருந்த பாலை வாங்கி மேஜையில் வைத்தான்.

அவனை எதிர்பாராதவள் தடதடத்த மனதோடு இமைகளை தாழ்த்த, 

‘உன்னோட போனை கொடு’

கைபேசியை இறுக்கி பிடித்து கொண்டு ‘ஏன்’ என்பதாக யாழி பார்க்க,

‘பெட்ரூம்க்குள்ள போன் எதுக்கு..??’ என்றான்.

‘என்ன பேசுகிறான் இவன்..?? இரவு பதினொன்று வரை கல்லூரி கலாட்டா சீரியல் பார்த்துவிட்டு அதன் பின் ஷின்ஷான், டோரிமான் என்று வரிசையாக அவர்களை ரசித்து பின் இறுதியாக மோடிவேஷன்ல் ஸ்பீச் கேட்க அவளுக்கு போன் வேண்டுமே அதன் பின்பு இரண்டு மணியளவில் உறங்குவது தானே அவள் வழக்கம்..!!’

‘திருமணம் ஆனால் வழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டுமா..?? இது என்ன அராஜகம்..??’ என்று மேலுதட்டை கடித்துகொண்டு கைபேசியை பார்த்தவாறு என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு சட்டென நினைவு வரவும் அவனிடம்,

‘ஏன் பூஜை பண்ண போறீங்களா..??’ என்றாள் மெல்லிய குரலில்.

அவள் அவஸ்த்தைகளை ரசித்து கொண்டிருந்தவன் திடீரென அவள் கேள்வியில், “வாட்..?? கம் அகெயின்” என்று கண்களை சுருக்கிட அவன் குரலே அவளை கலவரபடுத்தியது.

‘இல்.. இல்ல அன்னைக்கு கோவிலுக்கு போறப்போ போன் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொன்னீங்களே அங்க பூஜை நடக்கறப்போ டிஸ்டர்ப் ஆககூடாதுன்னு தானே ஆனா இங்க என்ன பூ.. பூ..??’ என்று அவன் பார்வையை சந்தித்தவளின் வார்த்தை இதழ்களுக்குள் அமிழ்ந்து போனது.

புன்னகையில் துடித்த இதழ்களை அழுந்த மடித்து மீசையை இருவிரலால் நீவிகொண்டே ‘ஆமா பூஜை தான்’ என்றான் விஷமக்குரலில்.

“என்னது பூஜையா..?? அதுவும் பெட்ரூமிலா..??” என்ற திகைப்புடன் பார்த்த யாழியின் மனமோ ‘அப்போ இப்பவும் செல்பி எடுக்க முடியாதா…??’ என்று தவித்து போனது..,

இயலாமையுடன் அவனை பார்த்தவள் கண்களில் நீர் ததும்பியது பின்னே திருமணத்திற்கு வந்த அவள் தோழிகள் எல்லாம் அவளை பரிகாசம் பேசியதில் எப்படியாவது அவனுடன் ஒரு செல்பி எடுக்க காலையில் இருந்து போராடி கொண்டிருகிறாள் ஆனால் முடியவில்லை.

குறைந்தபட்சம் இப்போதாவது எடுக்கலாம் என்றால் அவன் போனையே படுக்கை அறைக்குள் கொண்டு வரக்கூடாது என்கிறான்.

“எத்தனை பேர் திருமண வ்லாக் போட சொல்லி கேட்டிருந்தனர், பிரெண்ட்ஸ் வேறு அவளது இன்ஸ்டா ஸ்டோரிக்காக காத்திருப்பார்களே என்ன செய்வது..??” என்று அவனை பார்த்தவளுக்கு வாழ்க்கை குறித்த அச்சம் ஆழிபேரலையாய் சூழ்ந்தது.

அதியின் பார்வை அவள் மீதிருப்பதை உணர்ந்தவள் இமை மீற துடித்த கண்ணீரை முயன்று உள்ளிழுத்து அவனை பார்க்க, அவனோ இருகரங்களையும் கோர்த்து ஒற்றை காலை மடித்து சுவரில் சாய்ந்திருக்க அவன் பார்வையில் சிறு இளக்கமில்லை..

ஆனால் ‘போனா..?? நானா..??’ என்ற கேள்வியை தாங்கி இருக்க கனத்த மனதுடன் கைபேசியை அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி அங்கே இருந்த மேஜை டிராயரில் வைத்தவன் தன் கைபேசியையும் வைத்து பூட்டி சாவியை எடுத்துகொண்டான்.

‘என்ன இது..??’ என்பதாக யாழி பார்க்க,

‘இது எங்க வீட்டு வழக்கம் நைட்ல பெட்ரூம் குள்ள யாருமே போன் எடுத்துட்டு போகமாட்டோம் சைலென்ட்ல போட்டு இங்க வச்சிடுவோம் எமெர்ஜென்சிக்கு உள்ள லேண்ட்லைன் இருக்கு’  என்றவன் யாழியை அழைத்து கொண்டு தன்னறையினுள் சென்றான்.

அவன் அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது என்னவோ கிட்டத்தட்ட ஒரு பக்க சுவரில் பாதியை நிறைத்திருந்த  இருவரின் திருமண புகைப்படம் தான்.

சுகமதியின் அத்தனை அறிவுரையையும் மீறி அதி அவளுக்கு திருமாங்கலயத்தை அணிவித்து முடிச்சிட்டு கொண்டிருக்க தலை குனிந்திருந்த யாழியோ ஓரவிழியால் அவனை பார்க்க அதே நேரம் அவன் பார்வையும் அவள் மீது மையலாக படிந்திருந்தது.

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க அவனை  கண்டதும் பெண்ணவள்  முகத்தில் நாணம் படர்ந்து இதழ்கள் மலர்ந்திட அதை தவறவிடாமல் அத்தனை அழகாக படம் பிடித்திருந்தனர்.

சொல்லபோனால் போட்டோஷூட் வைத்து எத்தனை விதமாக போஸ் கொடுத்திருந்தாலும் இருவரின் காதலை இதை விட ஆழமாக அழகாக படம் பிடித்து விட முடியாது…, அதி அதை பெரிது படுத்தி  உடனே தன் அறையில் மாட்டி இருந்தான்.

***********************************

‘எப்படி இருக்கு..??’ என்ற அதியின் கேள்வி எங்கே அவள் காதில் விழுந்தது புகைப்படத்தில் காதல் ததும்ப அவளை பார்த்த துடியனின் இதழ்களில் மின்னல் கீற்றாய் விளைந்த புன்னகையும் அவள் பார்வையை கண்டு  உயர்ந்திருந்த அவன் இடப்புருவமும் அதில் இருந்த தழும்பும் அவன் வசீகரத்தை கூட்டியதில் விழிகளை மூடாமல்  பார்த்து கொண்டிருந்தாள்.

‘பக்கத்துல தான் இருக்கேன்’ என்றவாறு அவளை தன்புறம் திருப்பி,

‘பிடிச்சிருக்கா..??’ 

‘ம்ம்ம்..’  என்றவளை அமரவைத்து விட்டு ‘டோர் லாக் பண்ணிட்டு வரேன்’ என்று சென்றான்.

‘சரி’ என்றவளுக்கு  தன் வழக்கம் மாறியதில் கொண்ட வருத்தத்தோடு புதிதான அவன் அறையில் அவனுடனான முதல் தனிமை குறித்த அச்சமும்  சேர்ந்து கொண்டது.

அறையை சுற்றி பார்த்த யாழிக்கு அது எவ்வித அலங்காரமும் இன்றி  இருப்பதை கண்டு முகம் சுருங்கியது.

தோழிகள் கூறியது போல ப்ரஸ்ட் நைட்டின் போது அறையை அலங்கரிக்காமல் ஏன் இப்படி வைத்திருக்கிறான்.., என்ற கேள்வி தோன்ற அதே சமயம்  அதி  பூஜை நடக்க இருப்பதாக கூறியது நினைவு வர மீண்டும் அறையில் பார்வையை சுழற்றினாள்.

அங்கு அவர்கள் புகைப்படம் தவிர வேறு சாமி படங்கள் எதுவும் இல்லை அதேபோல பூஜைக்கு தேவையான எந்த பொருட்களும் அறையில் தென்படவில்லை…

‘என்ன யோசனை..??’ என்று அவள் எதிரே வந்து நின்ற அதியிடம்,

‘பூஜைன்னு சொன்னீங்க ஆனா  பூஜைக்கு தேவையான எதுவும் இங்க இல்லையே..??’ என்றிட,

கண்களில் வழிந்த புன்னகையுடன், ‘இருக்கு’ என்றான்.

‘எங்க..??’

‘என் முன்னே’

‘உங்க முன்னாடியா..??’ என்று அவள் தன்னை சுற்றி பார்வையை சுழலவிட,

‘தேடாத உன் கண்ணுக்கு தெரியாது நான் பூஜை செய்யறப்போ உனக்கே புரியும்’

கோவில் கோவிலாக வலாக் எடுத்து கொண்டிருந்தவளுக்கு  இரவில் நடக்கும் புதிதான பூஜையில் கலந்து கொள்ள வேண்டி பயபக்தியுடன்..,

‘பூஜைக்கு யாரெல்லாம் வர்றாங்க’ என்றிட,

‘யாரும் வரமாட்டாங்க இது  நாம மட்டும் செய்ய வேண்டிய பூஜை’ என்றான் மீசைதுடிக்க,

‘அவளுமா..?? அவள் என்ன செய்யவேண்டும்..??’ என்று புரியாமல் அவனிடம்

‘எனக்கு தெரியாதே’ 

‘தெரியும்’ என்றான் இதழோரம் துடிக்க, 

‘ஹான்.., இல்..ல்ல’ என்று அவள் விழிக்க,

‘ப்ச் உனக்கு தெரியாதுங்கிறது எனக்கு தெரியும்ன்னு சொன்னேன்டி’

‘அப்போ எப்படி நான்… என்ன பண்ண…??’ என்றவளுக்கு தன்னால் பூஜையில் எந்த குறைபாடும் வந்துவிடக்கூடாது என்ற தவிப்பு.

‘கவலைபடாத நான் சொல்லி தரேன்’

‘ஓ..ஒ.. ஓகே.., எப்போ ஆரம்பிப்பீங்க..??’

அவள் கேள்வியை எதிர்பாராதவன் தலையை அழுந்த கோதிவிட்டு நெஞ்சை நீவிட,

அவளோ ‘எப்போ ஆரம்பிப்பீங்க..??’ என்றாள் மீண்டும்.

இதழ்களை குவித்து காற்றை வெளியேற்றி மீசையை இரு விரலால் நீவிக்கொண்டே அவளை பார்த்தவனின் மனம், ‘அதி நீயே கண்ட்ரோல்ல இருக்க நெனச்சாலும் இன்னைக்கு விடமாட்டா போலயே’ என்று பரிகாசம் செய்ய,

‘ஷ்ஷ்..’ என்று அதை அடக்கியவன் தன் குரலை செருமிகொண்டு, ‘என்னடி இது, நீ இவ்ளோ கேள்வி கேட்கிற..??’ என்று அதட்ட,

அவன் கோபத்தில், ‘இல்ல அத… அது வந்து எப்போ முடியும்ன்னு கேட்க வந்தேன்’

‘எப்போ முடியுமாவா ..??’ என்று அவளை பார்க்க அவளோ அவன் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

பின்னே இரவு இரண்டு மணிக்கு மேல் விழித்து அவளுக்கு பழக்கம் இல்லையே சுகமதி வேறு இன்று இரவு அவன் சொல் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று அத்தனை அறிவுரை சொல்லியதில் விடியும் வரை விழிக்க வேண்டுமோ..?? என்று அவள் கவலை அவளுக்கு.

‘எப்போ முடியும்..’ என்று அவள் நிறுத்த,

‘அது உன்னோட கோஆபரேஷன் பொறுத்து..’ என்று தொடங்கியவன்  எப்படியும் அவளுக்கு புரியபோவதில்லை என்பதால் பேச்சை மாற்றி அவள் கேள்விக்கு நேரடியாக, 

‘அது தொடங்கின பிறகு தான் சொல்ல முடியும்.., ஆனா எப்படியும் விடியும் வரை நடக்கலாம் இல்ல விடிஞ்ச பிறகும் தொடரலாம் இல்ல அடுத்த நாளும் நீளலாம் சரியா சொல்ல முடியாது யாழி’ என்றான்.

யாழியோ ‘அப்படி என்ன பூஜை அடுத்த நாள் வரை செய்யும் அளவிற்கு ..??’ என்று யோசித்தவள் உடனே,

‘உங்களுக்கு சாமி பக்தி அதிகமா..??’ என்று கேட்க,

இதற்கு மேலும் முடியாது என்பது போல வலக்கரத்தை குவித்து அதரங்கள் மீது வைத்தவன் பொங்கிய சிரிப்பை மென்றுக்கொண்டே அவளை தலை முதல் கால் வரை பார்வையால் வருடி ‘ஆம்’ என்று தலையை மேலும் கீழும் பலமாக அசைத்து உடனே உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!