Skip to content
Post Views: 9,440
“ஒன்னு தெரிஞ்சிக்கோ யாழி எங்கயும் என் மரியாதை குறையாம, என்னை யார்கிட்டயும் விட்டு கொடுக்காம என்னோட தப்பை மத்தவங்க எதிர்ல வெளிச்சம் போட்டு காட்டாம தனியா கூப்பிட்டு சுட்டி காட்டுறது தான் அவரோட காதல்.., அதை எங்களுக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்ன வரை குறையாம எனக்கு கொடுக்குறார் நானும் அதை உணர்ந்துட்டு இருக்கேன் இதை எல்லாம் நாங்க யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை”
‘ஆ.. ஆனா அப்பா சமைச்சு உங்களுக்கு ஊட்டி விட்டது கூட இல்லையேம்மா அப்புறம் எப்படி..??’
“ஏன்டி நீங்க நினைக்கிற மாதிரி எந்நேரமும் புருஷன் நம்ம பக்கத்துலயே உட்காந்து கொஞ்சிகிட்டு இருந்தா சாப்பாட்டுக்கு சிங்கி தான் அடிக்கணும்… அதோடு பக்கத்துலயே உட்காந்து எந்நேரமும் பூசிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் யாழி… தேடலும், ஏக்கமும், காத்திருப்பும் காதலை இன்னும் அழகாக்கும், ஆழமாக்கும் ஆனா இந்த காலத்து பசங்களுக்கு அதெல்லாம் புரியறதில்லை எல்லாத்திலும் அவசரம்..!! வாழ்க்கையை தொடங்குற வேகத்துலயே முடிச்சிக்கிறீங்க..”.
‘என்னம்மா பேசுற..??’
Advertisement
“ஆமாடி அதான் நிஜம் எல்லா காலத்துலயும் விவாகரத்து இருந்துட்டு தான் இருக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன் அப்போ எல்லாம் அதுக்கான காரணம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் அந்த பெண்ணால நிச்சயம் முடியவே முடியாதுன்னு போகும் போது தான் அந்த முடிவுக்கு வருவா அது தப்பே இல்ல ஆனா இப்போ அப்படியா இருக்கீங்க..??”
எப்போதும் குறை சொல்லும் தாய் இன்றும் குறை சொல்ல அதை ஏற்க முடியாமல் ‘நாங்க என்னம்மா பண்ணோம்..’ என்று ஆதங்கத்துடன் அவள் கேட்க,
‘என்ன பண்ணலை நீங்க ..?? ஏன்டி வாழ்க்கைன்னா என்ன அதனோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்றது இல்லை கண்டதே காட்சி கொண்டதே கோலம்ன்னு இருக்கீங்க…, கேட்டா என் வாழ்க்கை என் கையில, சுதந்திரம் இல்லையான்னு சொல்லறது.., சரி எப்படியோ நல்லா இருந்தா சரின்னு நாங்க கல்யாணம் பண்ணி வச்சா..”, என்று ஒரு நொடி நிறுத்தியவர்,
Advertisement
“எங்க இப்போ எல்லாம் முக்கால் வாசி பேர் நீங்களே பண்ணிக்கிறீங்க ஏதோ நானும் என் புருஷனும் செஞ்ச புண்ணியம் எங்களுக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற பாக்கியம் கிடைச்சது..’ என்று அவர் கண்களை துடைக்க,
Advertisement
“ம்மா என்ன கேட்டேன்னு இப்போ நீ இப்படி பேசுற, எதுக்கு அழற..??”
‘யாழி பலர் இங்க உன்னை மாதிரி தான் கல்யாணத்துக்கு அர்த்தம் தெரியாம பண்ணிக்க வேண்டியது…, பண்ணின பிறகு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கும் முன்னாடியே, சின்ன சின்ன விஷயத்தை கூட பொறுத்துக்காது பூதாகரமாக்கி குறை சொல்லி இந்த உறவுல இருக்கிறதுக்கு டிவோர்ஸ் மேல்ன்னு சொல்லி பிரியறீங்க… ‘
ஏன்ன்னு கேட்டா… அதுக்கு கூட உரிமை இல்லையான்னு வசனம் பேசுறீங்க.
Advertisement
“அதோட நின்னா பரவாலயே உடனே அடுத்த கல்யாணமோ காதலோ அதுக்கு தயார் ஆகிடுறீங்க… ஒரு வாழ்க்கை தோத்துட்டா இன்னொன்னு தப்புன்னு சொல்லலை, அதே நேரம் கால மாற்றத்திற்கு ஏற்ப பிரச்சனைகளின் வடிவமும் வீரியமும் அதிகமாகிட்டு தான் இருக்கு அப்படி அதுல தெரியாம சிக்கிக்கிற பொண்ணுங்க டிவோர்ஸ்ன்னு போறது தப்பில்லை ஆனா நல்ல குடும்பம் கணவன் அமைஞ்சும் அதுல தன்னை பொருத்திக்க தயாரா இல்லாம பெண்ணியம், அடிமைத்தனம், ஆணாதிக்கம் அச்சு பிச்சுன்னு உளறிகிட்டு அதிமேதாவிதனமா நீங்களா ஒரு முடிவுக்கு வந்து எல்லாருக்கும் மனஉளைச்சல் கொடுக்குறீங்க… அது தான் தப்புன்னு சொல்றேன்”
‘ம்மா நான் அப்படி பண்ண மாட்டேன்ம்மா என்னால டிவோர்ஸ் எல்லாம் முடியவும் முடியாது, நம்புங்க..’
‘உன்னை கட்டி கொடுத்துட்டேனே தவிர ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடக்குமோன்னு எனக்கு ஒரு படபடப்பு இருந்துட்டே இருக்கு..’
‘என்னம்மா இப்படி பேசுற..?’ தவிப்புடன் யாழி ,
‘வேற என்ன பேச சொல்ற..?? கல்யாணத்துக்கு முன்ன எவ்ளோ பேச்சு பேசின..? இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் உங்களுக்கு எல்லாம் புருஷன்னா கேவலமா…?? ஏன் அதே இடத்துல உன் அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ உன்னை எதிர்பார்த்து உன் கையாள சாப்பிட காத்திருந்தா எவ்ளோ சந்தோஷமா பரிமாருவீங்க ஏன் அதே சந்தோஷத்தோட பாசத்தோட புருஷனுக்கும் செய்ங்க, அப்போ மட்டும் உங்களுக்கு ஆதிக்கம், அவரைக்கா புடலங்காய்ன்னு புது புதுசா முளைக்கும் என்று ஆற்றாமையில் பொரிந்து கொண்டே சென்றவர் சற்று நிதானித்து,
“ஒன்னு தெரிஞ்சிக்கோ யாழி எப்பவும் நாம என்ன கொடுக்குறமோ அதை விட ரெண்டு மடங்கா நமக்கு கிடைக்கும்.. முதல்ல கொடுங்க அப்புறம் எதிர்பாருங்க…,”
‘ம்மா…’
‘ஆமாடி முதல்ல மனசார செய்ங்க அப்புறம் பெண்ணியம், அடிமைத்தனம் எல்லாம் பேசலாம்…. உடனே இதுக்கும் எல்லாம் முதல்ல பொண்ணுங்க தானான்னு பேசிட்டு வராத எரிச்சலா இருக்கு”
“இல்லம்மா நான் அப்படி பேசலை நா.. நான் செய்ய தான் போனேன் ஆனா…” என்றவள் இதற்கு மேலும் முடியாது என்பது போல நெஞ்சை அழுத்தி கொண்டிருந்த பாரம் அனைத்தையும் தாயிடம் இறக்கி வைத்து,
” எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கும்மா ” என்றவளுக்கு தொண்டையை அடைத்து கொண்டு வந்தது.
இதை எல்லாம் எதிர்பார்த்த சுகமதிக்கும் மனம் கலங்கிட, ‘யாழி கண்டதையும் யோசிக்காம மனசு சொல்றதை கேளுடா…’ என்ற போதும் யாழியின் விசும்பல் குறையாமல் இருக்க,
‘இதே நிலை தொடர்ந்து எதுக்குமே அவர் உன்னை எதிர்பார்க்காம போயிட்டா அப்போ நீ யார் அவருக்கு..??’ என்றார்.
யாழிக்கோ அவர் கேள்வியில் அச்சம் அதிகரிக்க சிறு நடுக்கத்துடனே, ‘எனக்கும் அது தான்ம்மா தோணுது ஆனா அவர் தான் அப்படி.. எது.. வும் செய்ய வேண்டாம் உன் வீட்ல இருக்க மாதிரி சுதந்திரமா இருக்க சொன்னார்..??’
‘ஏன் சொன்னார்..??’
‘அத.. அது அன்னைக்கு நான் சர்ப்ரைஸ், அப்புறம் பிடிச்ச…’ என்றவளுக்கு தாயிடம் அதற்கு மேல் தொடர்ந்து டிவோர்ஸ் என்ற வார்த்தையை எடுக்க தயக்கம் அதிகரிக்க அமைதியாக இருந்தாள்.
வேதனையுடன் கைபேசியை பார்த்த சுகமதிக்கு முடிந்த வரை மகள் மனதில் விதைத்து விட்டோம் இனி அவளாக தெளிய வேண்டும் என்ற முடிவோடு சரி நான் வைக்கிறேன் என்றிட,
யாழியோ குரலை செருமியவள் “ம்மா ஆனா நீ எம்ஏ, பிஎட் படிச்சும் வேலைக்கு போகலை உன்னோட தனித்தன்மை தெரியலை.. அப்போ..’ என்று தன்னுள் அரித்து கொண்டிருந்த மற்றொரு சந்தேகத்தையும் கேட்க முயல,
‘நிறுத்துடி நான் ஏன் வேலைக்கு போகலைன்னு தெரியுமா…?’
யாழி ‘இல்லை.. ஆனா அப்பா தானே உன்னை போக வேண்டாம் சொல்லி இருப்பார்… அதனால தானே நீ போகலை’
‘யாழி உன் கற்பனைக்கு அளவில்லையா..??’ என்று கேட்க அவளுக்கோ காணொளிகளில் சிலர் கூறியது போல தான் தாய்க்கும் நடந்திருக்கும் என்ற எண்ணத்தில் கேட்டாள்.
“யாழி விஷ்ணு பிறக்கும் போதே எனக்கு பிரசவத்துல ஏகப்பட்ட சிக்கல் அதனால என்னோட உடல்நிலை மோசமாகி நான் பிழைச்சி வந்ததே தெய்வ புண்ணியம்… ஆனா அதுக்கு அப்புறமும் ரெண்டு வருஷம் மேல ஆச்சு நான் பழைய நிலைக்கு திரும்ப,
அப்போ எங்களோட பொருளாதார சூழல் சொல்லிக்கிற அளவு இல்லை அதனால வேலைக்கு போற முடிவுல இருந்த என்னை என்னோட உடல் நலனுக்காக அதிக ட்ராவல் ஒத்துக்காதுன்னு சொல்லி உனக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கிறேன் நீ வீட்டை பார்த்துட்டு ரெஸ்ட் எடு அதிகமா கஷ்டபடுத்திக்காதன்னு சொன்னவர் உங்க அப்பா..!!
‘இங்க நான் நிழல்ல சுகமா இருக்க வேண்டி வெயில்ல கஷ்டபட்டுட்டு இருக்கார், அந்த மனுஷனை ஏதாவது சொன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்று கோபத்தோடு அவர் முடிக்க,
தாயின் கோபத்தில் யாழி அரண்டு போனாள், தந்தையை அவள் தவறாக சொல்லவில்லை ஆனால் பெண்களை அவர்கள் திறமையை முடக்கி போடுவதே ஆண்கள் தான் என்று அவள் மனதில் பதிந்து போயிருக்கும் கருத்தினை தெளிவு படுத்தி கொள்ள தான் கேட்டாள்,
“ம்மா…ம்மா சாரிம்மா நா… நான் அப்பாவை எதுவும் சொல்லலை உனக்காக தான் கேட்டேன்”
“நிறுத்துடி எனக்காக யோசிக்க என் புருஷன் இருக்கார் அவரை தாண்டி நீ என்ன பெருசா எனக்காக யோசிச்சிட போற..?? போ போய் உன் புருஷனுக்காக யோசிக்க ஆரம்பி உருப்படுவ” என்று அவர் அழைப்பை துண்டிக்க யாழிக்கு கண்கள் கலங்கி விட்டது ..,
அவர்களின் தந்தையாக மகேஷ்வரன் என்றுமே சிறப்பானவர் தான் சந்தேகமில்லை ஆனால் சுகமதியின் கணவனாக சமூக வலைதள கருத்துக்களின் தாக்கத்தில் கொண்ட அரைகுறை அறிவினால் அவள் ஒரு பிம்பம் வைத்திருக்க அவள் தாயோ இப்போது அதை சுக்குநூறாக உடைத்து,
‘என் கணவர் தான் சிறந்தவர்’ என்ற கூற யாழியோ தாயின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
*************************************************
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர்… அதிகாலையே எழுந்த அதிர்துடியன் அவளை எழுப்பி படிக்க சொல்லி பின் குளித்து விட்டு கீழே சென்றவன் இன்னுமே அறைக்கு திரும்பவில்லை.., எத்தனை நேரம் தான் புத்தகத்தை வெறித்து பார்ப்பது என்று யாழி கீழிறங்கி வர அங்கே அதிர் துடியனும், ப்ரித்வியும் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
‘என்ன இது..?? இவர்கள் ஏன் செய்கிறார்கள்’ என்று பார்த்தால் கூடவே ஆராதனாவும் செய்து கொண்டிருந்தாள். சில நிமிடம் கழித்து அதி ஆராதனாவிடம் ஏதோ கூற ‘சரிண்ணா’ என்று தலை அசைத்தவள் மீண்டும் தன்னறைக்கு திரும்பினாள்.
அடுத்த ஒரு அரை மணி நேரத்தில் முகம் கைகால் கழுவி வந்த அதியும் ப்ரித்வியும் சமைக்க சென்று விட்டனர்..
யாழிக்கோ ஒன்றும் புரியவில்லை ‘என்ன பண்றாங்க அத்தை..??’ என்று மரகதத்தை கேட்க,
‘இன்னிக்கு சண்டே எப்பவும் என் பசங்க சமையல் தான்மா டிபன், லஞ்ச் அவங்க தான் பண்ணுவாங்க…’
‘அப்படியா..?? என்று ஆச்சர்யமாக அவள் விழிகள் விரிய,
“ஆமாடா ரெண்டு பேருக்குமே சமைக்க கத்து கொடுத்தேன்.., அதிக்கு என் பக்குவம் அப்படியே இருக்கும் ஆனா ப்ரிதிவி கொஞ்சம் சுமாராதான் செய்வான்… அவங்க வீட்ல இருக்கிற நேரம் குறைவு சண்டேலயும் மதியம் வரை தான் இருப்பாங்க…”
‘ஏன் அத்தை ..?? சண்டே எல்லாருக்கும் லீவ் தானே..??’ என்று அவள் கேட்டு கொண்டிருக்கும் போதே இட்லி, தோசை, கறிக்குழம்பு என்று ஒவ்வொன்றையும் ஆராதனாவும் சாருவும் அடுக்க ஆண்களும் வந்து அமர காலை உணவை முடித்திருந்தனர்.
மீண்டும் அதியும் ப்ரித்வியும் சமையலறைக்கு செல்ல உடன் செல்ல முயன்ற யாழியை ‘அவங்க பார்த்துப்பாங்க நீ வாம்மா’ என்று மரகதம் தன்னருகே அமர்த்திட,
யாழியோ பார்வையை அதி மீது வைத்து செவியை மரதத்திடம் கொடுத்திருந்தாள்.
“சண்டே பேக்டரி லீவ் ஆனா ஷோரூம் சண்டேல தானே கூட்டம் இருக்கும் அதனால மதியம் கிளம்பிடுவாங்க ..,என்ன தான் ஆள் போட்டு பார்த்துகிட்டாலும் உடையவன் பார்க்காமல் போனால் ஒரு முழம் கட்டை தானேம்மா” என்று அவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே பாட்டி என்று ஆர்பரித்தவாறு அக்ஷரா உள்ளே நுழைய அவள் பின்னே முரளியும் டாக்டர் ப்ரஷாந்தியும்.
‘ஹாய் டாக்டர்’ என்று அவள் எழுந்து நிற்க அவரோ இலகுவான ப்ரேக்னென்சி கவுனில் இருந்தார்.
அவளிடம் ஓரிரு வார்த்தை பேசியவர் அக்ஷரா மரகதத்திடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு, ‘ஆன்ட்டி நம்பாதீங்க கஞ்சி குடிச்சதை ப்ரேக்பாஸ்ட்ல சேர்த்துட்டா, அவ இன்னும் சாப்பிடலை’ என்றிட,
‘எனக்கு தெரியாதா ப்ரஷா இவளுக்காகவே அதி காரம் குறைவா செஞ்சிருக்கான் நீ போ நான் ஆரூவை ஊட்டிவிட சொல்றேன்’ என்றிட அவரிடம் தலை அசைத்த ப்ரஷா சமையலறைக்குள் செல்ல,
“என்னைக்கும் இல்லாம இன்னிக்கு உன் சமையல் வாசம் ஆளை தூக்குது எல்லாம் யாழி செய்த மாயமா..??’ என்று வம்பிழுத்து கொண்டே வர,
‘இன்னும் வரலையேன்னு நெனச்சிட்டே இருந்தேன்.. இவ்ளோ லேட்டாவா குழந்தைக்கு ப்ரேக்பாஸ்ட் கொடுப்ப.. இன்னும் பொறுப்பு இல்லை உனக்கு’ என்று ப்ரஷாவை கடிந்தவன் சூப்பை ஊற்றி அவளிடம் கொடுக்கவும் அதை வாங்கி குடித்தவள்,
‘எல்லா பருப்பும் இருக்கு.., உனக்கு வேணும்ன்னா கேளு வேக வச்சு கொடுக்குறேன்’ என்று சிரிக்க,
“வந்ததும் ஆரம்பிச்சிட்டியா, புரைக்கேற போகுது அமைதியா குடிடி” என்ற முரளி அதிர்துடியனின் தோளில் கைபோட்டு ‘இன்னைக்கு என்ன மெனு மச்சி ‘ என்றவாறு எட்டி பார்க்க,
‘சிக்கன் பிரியாணி, ரைத்தா..’ என்று ப்ரித்வி மெனுவை கூற ஆரம்பிக்க அதே நேரம் முரளி வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்திருந்தான்.
‘என்ன ப்ரித்வி இன்னைக்கு மெனுல ஏதோ வித்யாசமா இருக்கு..??’
‘என்னதுக்கா..??’
‘இல்ல வழக்கமா இருக்கிறதை விட ஏதோ சம்திங் சம்திங்… ‘ என்று எள்ளலாக அதிரை பார்க்க அவனோ குக்கரின் மூடியை போட்டுவிட்டவாறே,
‘ஏன் இருக்க கூடாதா..??’ என்றிட,
“ஏன் இல்லாம..?? இருக்கலாமே லாமே மே…” என்று சிரிக்க,
மனைவியின் கேலியை கண்டவன், ‘டேய் இன்னைக்கு யாழி ஸ்பெஷலா..?’ என்றிட,
அதிரனும் புன்னகையோடு ‘ஆம்’ என்று தலை அசைத்தான்.
“நீ நடத்து மேன் நாங்க எதுவும் கேட்கலை” என்றவள்,
“என்ன ஒன்னு யாழியை இடுப்புல தூக்கி வச்சிட்டு சமைச்சிட்டு இருப்பேன்னு நெனச்சேன், என்ன அதிசயம் எப்படியோ சமைக்கும் போது அவளை தனியா விட்டுட்டு இருக்க..??” என்று நக்கலாக அதிர்துடியனை பார்க்க,
அவளை முறைத்த அதிர் ‘நீ கூட தான்..’ என்று ஆரம்பித்து அவள் முரளியிடம் அவனை தூது போக சொன்னதை கேலி பேச ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை மற்றவர் வாரிக்கொண்டு இருக்க,
‘என்னடா இது ஒரு சண்டேவாவது ரெண்டு பேரும் சண்டை போடாம என்னை லஞ்ச சாப்பிட விட்டு இருக்கீங்களா..?? என்று முரளி அலுத்து கொள்ள,
“அதை உன் பொண்டாட்டிக்கு சொல்லுடா சண்டேன்னா சண்டை போடுற டேன்னு நெனச்சிட்டு எப்பவும் என்னை வம்பிழுக்குறதே அவளுக்கு வேலை” என்று அதிர்.
‘டேய் டேய் நிறுத்து, திரும்ப ஆரம்பிக்காத’
‘அவளை ஒரு வார்த்தை சொல்லிட கூடாது உடனே என்னை கண்ட்ரோல் பண்ண வந்துடுவ.. அந்த அளவுக்கு உன்னை மிரட்டி வச்சி இருக்கா நீ அவளுக்கு சப்போர்ட்டா..??’ என்று அதி நண்பனை குறைபட,
‘ஏன்டி நீயும் வாயை வச்சிட்டு அமைதியா இருக்க மாட்டேங்கிற’,
“ஏன்..?? ஏன் அமைதியா இருக்கணும்..?? அன்னைக்கு க்ளினிக் தூக்கிட்டு வந்து ட்ரீட் பண்றதுக்கு கூட என்னை நம்பி யாழியை இறக்கியே விடல தெரியுமா..?? அதான் கேட்டேன் இது ஒரு தப்பா..??” என்று தோள்களை குலுக்கியவள்,
‘முதல்ல என்னை டாக்டர்ன்னு ஒத்துக்க சொல்லுங்க அப்புறம் அமைதியா இருக்கிறதை பத்தி யோசிக்கிறேன், ஊரே நம்பினாலும் உங்க பிரெண்ட் நம்பறது இல்லை’ என்று ப்ரஷா முரளியிடம் புகார் வாசிக்க,
“டேய் துடி நீயும் ஏன்டா இப்படி பண்ற..?? என் பொண்டாட்டி ஸ்பெஷலிஸ்ட்ன்னு ஒத்துக்கோ” என்று அவர்களின் பேச்சு சிரிப்பும் கேலியுமாக நீண்டு கொண்டே செல்ல சமையலறை வாசலில் இருந்து இதை பார்த்து கொண்டிருந்தாள் யாழி.
error: Content is protected !!