Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 4

“எனக்கு இந்த லேம் எக்ஸ்கியூஸஸ் சுத்தமா பிடிக்காது மிஸ்டர் மகேஷ்.. ” என்ற அதிர்துடியனின் முகத்தில் கட்டுபடுத்த பட்ட கோபம்.

கிரிவலம் முடித்து அதிகாலையே வீடு வந்து சேர்ந்திருந்தவன் முதல் வேலையாக குவாரிக்கு சென்று பின் பாக்டரிக்கு வந்துவிட்டான்.

அவன் கோபத்தை உணர்ந்திருந்தவர் ‘சார் அது வந்து..’

“மிஸ்டர் மகேஷ் நீங்க எங்க அப்பாக்கிட்ட பலவருஷமா இருக்கீங்க  உங்களோட  டெடிகேஷன், ஹார்ட்வொர்க், லாயல்ட்டி எல்லாம் பார்த்து தான் என்னோட தொழில் ஆரம்பிக்கவும் நம்பகமான ஆள் வேணும்ன்னு சொல்லி உங்களை குவாரிக்கும் பேக்டரிக்கும்  இன்சார்ஜ்ஜா போட்டேன். ஆனா உங்களோட மேற்ப்பார்வையில எப்படி திருநெல்வேலிக்கு அனுப்ப வேண்டிய  சரக்கு மாறிச்சு..??” என்று கண்கள் இடுங்க அவரை பார்க்க,



Advertisement

‘சார் அது என்னோட மிஸ்டேக் இல்ல, அன்னைக்கு மொத்தம் மூணு லோடிங் நடந்தது நான் பக்கம் இருந்து சரியா செக் பண்ணி தான் லோட் பண்ணேன் ஆனா திடீர்ன்னு குவாரில இருந்து அவசரமா போன் வரவும் டிரைவர்  கிட்ட அட்ரெஸ் கொடுக்க சொல்லி ஜெகன் கிட்ட சொல்லிட்டு கிளம்பினேன்’.

‘மூணு லோடிங்கா அப்போ ஜெகன் கிட்ட நீங்க சரியான அட்ரெஸ் கொடுத்தீங்களா இல்ல அவசரத்துல மாத்திட்டு இப்போ..’ என்று நிறுத்தி அவரை ஆழ்ந்து பார்க்க, 

“சார் சார் அப்படி எல்லாம் இல்ல சார் ஒரு முறைக்கு ரெண்டு முறை செக் பண்ணிட்டு சரியா தான் கொடுத்துட்டு கிளம்பினேன்” என்றார் அவசரமாக, 

Advertisement

“நீங்க சரியா கொடுத்த அப்புறம் எப்படி மாறுச்சி” என்றவனின் குரலில் சீற்றம்.

Advertisement

பின்னே லோடிங் , லேபர், ட்ரான்ஸ்போர்ட், எக்ஸ்பென்சஸ் என்று அவர்களின் கவனக்குறைவினால் அவனுக்கு எத்தனை நஷ்டம்.. அதோடு சொன்ன நேரத்திற்கு கிரானைட் கற்கள்  போய் சேராததில்  அவர்களின் மீதான அதிருப்தி வேறு சேர்ந்துகொள்ள அதிர்துடியனின் கோபத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா..??

எப்போதும் அதிர்துடியனுக்கு சொன்ன வார்த்தையும் கொடுத்த வாக்கும்  மிகவும் முக்கியம், அதில் இருந்து பின்வாங்குவது என்பது அவன் அகராதியிலேயே கிடையாது சொந்த வாழ்வில் மட்டுமல்லாமல் தொழிலிலும்  அதை கடுமையாகவே கடைபிடிப்பவன் அதுதான் அவனை குறுகிய காலத்தில் வெற்றி அடைய செய்து தொழில் வட்டத்தில்  நன்மதிப்புடன் இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது.

சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் பொருட்களை தாமதமின்றி, தரமானதாக, சேதாரமின்றி கொடுத்து விடுவான் அதில் எந்த சமரசமும் செய்து கொள்வது கிடையாது. இதுவே அவனது  வாடிக்கையாளர்களின் வட்டம் பெரிதாக செய்து  மற்ற மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் விரிவடைய செய்துள்ளது.

Advertisement

அவர் அமைதியாக இருக்கவும், ‘லிசன் மிஸ்டர் மகேஷ் எனக்கு எப்பவும் வார்த்தை முக்கியம்..!!’

‘சார் எனக்கும் தெரியும்’ என்ற மகேஷ்வரனுமே சிறு வயதில் அவ்வபோது சுந்தரலிங்கத்துடன் அவனை  பார்த்திருந்தாலும் கடந்த நான்கைந்து  வருடங்களாக அதிர்துடியனை அருகே இருந்து பார்ப்பவர் ஆயிற்றே..,  அவனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும்,  அணுகுமுறையும், எத்தனை நேர்த்தியாக இருக்கும் என்பதை அறிந்திருப்பவருக்கு  அவனது நியாயமான கோபமும் அதன் வெளிப்பாடும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. 

“சார் நான் கிளம்பும் போதே அவன் போன்ல ஏதோ பார்த்துட்டு இருந்தான் நான் போனை வச்சிட்டு வேலையை பாரு ஜெகன்னு தெளிவா சொல்லிட்டு தான் போனேன்  அப்புறம் வந்து கேமரால பார்த்தபோது தான் சார் தெரிஞ்சது அவன் போனை ஒரு கையில் வச்சிட்டு இன்னொரு கைல லிஸ்ட் வச்சிட்டு அலட்சியமா இருந்திருக்கான்.., அதுல தான் அடுத்த வாரம் கேட்டிருந்த கம்பனிக்கு சரக்கை மாத்தி அனுப்பிட்டான். ஆனா நான் குவாரில இருந்து திரும்பி வந்து  செக் பண்ணி பாதி வழியிலேயே வண்டியை  திரும்ப சொல்லி சரியான அட்ரெஸ்க்கு அனுப்பிட்டேன்.

‘தப்பை திருத்திடீங்க ஆனா மாத்தி அனுப்பினதும், தாமதம் ஆனதும் , ஏற்பட்ட நஷ்டமும், இழந்த பேரும்  மாறிடாது மிஸ்டர் மகேஷ்’

‘சாரி சார்’

‘நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க ..?? உங்களோட இன்சார்ஜ்ல விட்டிருக்கும் போது வேலை சரியா நடக்குதான்னு பார்க்கிறது மட்டுமில்லை  அதுக்கு இடையூறு வர மாதிரி எந்த விஷயம் இருந்தாலும் அதை கண்டிக்க வேண்டியதும் உங்க கடமை நீங்க அதை செய்யாம விட்டதோட விளைவு தான் இது.., உங்களுக்கு புரியுதா..???

‘புரியுது சார்’

‘ஜெகனை நீங்க முன்னாடியே கண்டிச்சி இருந்தா இந்த தப்பு நடந்திருக்காது.., ஓகே போனது போகட்டும் ஆனா இனி பேக்டரிகுள்ள வரும் போது யாரும் செல்போனே எடுத்துட்டு வர கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க… லேபர்ஸ்க்கு எமேஜென்சிக்கு கூப்பிட லேன்ட்லைன்  நம்பர் கொடுத்து அதுல காண்டாக்ட் பண்ண சொல்லுங்க… இன்கேஸ் யாராவது போன் எடுத்துட்டு வந்தாலும் அதை ஹேன்ட்ஓவர் பண்ணிட்டு தான் கையெழுத்தே போடணும் கிளம்பும் போது வாங்கிட்டு போகலாம்.. வேலை நடக்கிற இடத்துல வேலையில  மட்டும் தான் போகஸ் பண்ணனும் எந்த டைவர்ஷனுக்கும் இங்க இடமில்லை…’ என்று அவன் கண்டிப்புடன் கூற, 

‘சார் நீங்க சொல்றது… என்று தயங்கியவர் எப்படி சார் எல்லாரும் இதுக்கு ஒத்துப்பாங்க நிச்சயம் பிரச்சனை ஆகும் அதனால  நம்ம வேலை பாதிக்காதா..??’

‘லிசன் மிஸ்டர் மகேஷ் இதுக்கு ஒத்து வரவங்களுக்கு டென் பர்சென்ட் ஹைக் கொடுங்க வராதவங்க கணக்கை முடிச்சி அனுப்பிடுங்க.. சிம்பிள்..!! எத்தனை பேர் தேவைபடுதுன்னு பார்த்த புது ஆளுங்களை எடுங்க மறக்காம எனக்கு அவங்க ப்ரோபைல் அனுப்பிடுங்க.., வர  ஆர்டர்ஸ்க்கு அவங்க கேட்கிற தேதியில் இருந்து டைம் பத்து நாள் ஆகும்ன்னு சொல்லி ஆர்டர் வாங்குங்க..,  டெட் டேட்க்குள்ள இருக்கிற ஆட்களை வச்சி ஆர்டாரை முடிங்க எந்த சிக்கலும் வரகூடாது‘ என்று அதிரடியாக தெளிவாக  தன் முடிவை அவரிடம் கூறியவன் பேச்சு முடிந்தது என்பதாக  கணினியில் பார்வையை பதிக்க ,

அதுநேரம் வரை அவனை பிரமிப்புடன் பார்த்திருந்தவர், ‘சரி சார் நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடுறேன்’ என்றார்.

தலை திருப்பி அவரை பார்த்தவன், ‘அப்புறம் மிஸ்டர் மகேஷ் முதல்ல அந்த ஜெகன் கணக்கை முடிச்சு அனுப்பிடுங்க ‘ என்று அழுத்தமாக கூற, 

‘சார்’ என்று அதிர்வுடன் மகேஷ்வரன்.

“எஸ் இனியும் அவனுக்கு இங்க வேலை இல்ல வேற ஆள் அப்பாயின்ட் பண்ணுங்க மொபைல் இங்க அனுமதி கிடையாது என்ற கண்டிஷனோட..” என்று கடினக்குரலில் கூற,

மகேஷ்வரன் தயக்கத்தோடு அவனை பார்க்க, அதிர்துடியனோ ஒரு புறம் ஏறிய புருவத்துடன் மீசையை நீவியவாறே  ‘கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேரை அவனுங்களை  மாதிரி ஆட்களால இழக்க முடியாது சொன்னதை செய்ங்க’ என்று கட்டளை இட்டிருந்தான். 

அவன் தீர்க்கமான முடிவுகளை என்றுமே மாற்ற முடியாது என்பதை அறிந்திருந்தவர் ‘ஒகே சார்’ என்று அறையில் இருந்து  கிளம்ப,

‘ஒரு நிமிஷம் மிஸ்டர் மகேஷ்’

‘சொல்லுங்க சார்’

‘இன்னொருமுறை இந்த தப்பு நடக்காம பார்த்துக்கிறதும் உங்க பொறுப்பு மீறினா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு புரியும்ன்னு நம்புறேன்’ என்றவனின் குரலில் இருந்த எச்சரிக்கையை உணர்ந்தவரும் புரிந்தது என்பதாக தலை அசைத்து வெளியேறினார்.

***********************************************

‘என்னங்க நான் சொல்றது கேட்குதா…??’

‘வந்ததுல இருந்து நீ சொல்லிட்டு தான் இருக்க நானும் கேட்டுட்டு தான் இருக்கேன் ‘ என்றார் சுந்தரலிங்கம் கோப்பை பார்த்தவாறே..,

‘நீங்க மருமகளை நேரில் பார்த்திருந்தா இப்படி அலட்சியமா இருக்க மாட்டீங்க..’

கோப்பில் இருந்து பார்வையை திருப்பி ‘அப்போ முடிவே பண்ணிட்டியா..??’

“ஆமாங்க, அழகுன்னா அழகு அப்படி ஒரு பேரழகு..!! அழகு மட்டும் இல்ல அந்த பெண்ணோட குணம், பொறுமை, நிதானம், பேச்சு எல்லாமே அழகு..!! நம்ம அதிக்குன்னே பிறந்த மாதிரி இருக்கா அதான் ஈசனே அவனோட சன்னிதில எங்களை சந்திக்க வச்சிருக்கார் போல “

‘உன் பையன் கிட்ட அந்த பெண்ணை காட்டினியா ..??’

“எங்கங்க அவன் வரதுக்குள்ள அந்த பொண்ணு அவசரமா கிளம்பிட்டா.., எனக்கு பேர் மட்டும் தான் தெரியும் வேற எதுவும் தெரியாம அவன் கிட்ட என்ன பேச முடியும்…?? அதான் யார் என்னனு தெரிஞ்சிட்டு அவனுக்கு சொல்லிக்கலாம்ன்னு உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்”

‘எந்த ஊர்ன்னு தெரியுமா…??’

‘இல்லங்க ஆனா அவளை போலவே அவ பேர் கூட ரொம்ப அழகு’

‘அப்படி என்ன பேரு மரகதம்..??’

‘மெல்விண்யாழி’  புதுசா இருக்கு இல்லைங்க..!!

“ஆமாம்மா யாழின்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனா இது புதுசா இருக்கு இதுவரை கேள்வி பட்டதில்ல” என்றவர் மகள் புறம் திரும்பி,

“ஏன் ஆரும்மா நீ கூட தானே இருந்த  உங்க அம்மா மருமகளாவே முடிவு பண்ணின பெண்ணை ஒரு போட்டோ எடுத்துட்டு வந்திருக்கலாமே கண்டுபிடிக்க ஈசியா இருந்திருக்குமே..”

‘அப்பா ஒருத்தங்க பர்மிஷன் இல்லாம அவங்களை எப்படிப்பா போட்டோ எடுக்கிறது அது தப்பில்லையா..?? அண்ணாக்குமே பிடிக்காது  அப்படி செய்திருந்தா அண்ணா என்னை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பாரு”

“அதுவும் சரி தான் ஆனா இப்போ பேரை மட்டுமே வச்சி அந்த பெண்ணை எப்படி தேடி கண்டு பிடிக்கிறது” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார் தரகர்.

‘வணக்கம் ஐயா’

‘வா சிங்காரம் என்ன இந்த நேரத்துக்கு வந்திருக்க’

“ஒன்னுமில்லைங்க ஐயா தம்பிக்கு செட்டாகிற மாதிரி புதுசா ஒரு ஜாதகம் வந்திருக்கு அதான் காட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன் நேத்தே உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணேன் நீங்க பார்க்கலை போல”,

‘அப்படியா..?? எப்படி கவனிக்காம விட்டேன்’ என்றவர் கைபேசியை எடுத்து ஆராய அவரது மெசேஜ் இருந்தது,

“எப்படி மிஸ் பண்ணேன் தெரியலை சிங்காரம் ஆனா இனி உனக்கு வேலை இருக்காது போல” என்று அவர் நிறுத்த,

‘என்னய்யா சொல்றீங்க..?? அப்போ தம்பிக்கு பொண்ணு அமைஞ்சிடுச்சா..??’

‘கிட்டத்தட்ட அப்படி தான்’ என்றவர் கைபேசியை அணைத்து வைக்க,

‘முடிவே ஆகிடுச்சா எந்த ஊரு..??’ என்று சுரத்தே இல்லாத குரலில் ஆரம்பித்தவருக்கு தன் கமிஷன் பறிபோன வருத்தம் மனதை குடைய சுந்தரலிங்கம் பெண்ணை பார்க்காமலே கைபேசியை கீழே வைப்பதை கண்டவர், 

“பொண்ணோட போட்டோவை கூட பார்க்காம போனா எப்படிங்க ஐயா..?? எதுக்கும் இந்த பெண்ணை ஒரு முறை பார்த்துடுங்களேன் உங்களுக்கு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு” என்று கூற சுந்தரலிங்கமும்  கைபேசியை எடுத்து பெண்ணின் புகைபடத்தை தான் பார்த்தார்..,

பெண்ணின் முகத்தை  பார்த்தவருக்கு எங்கேயோ பார்த்தது போல இருக்கவும் மீண்டும் உற்று பார்த்தார்.

அதை கண்ட சிங்காரம், ‘பொண்ணு பிடிச்சிருக்குங்களா..?? தூரமெல்லாம் இல்லைங்கையா நமக்கு பக்கம் தான்’ என்றிட

‘எந்த ஊர்..??’

‘சூளகிரி ஐயா, ஒரு பொண்ணு பையன்னு அளவான குடும்பம்.., பொண்ணு இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு வீட்ல இருக்கு பையன் படிச்சிட்டு இருக்கான் மிடில் கிளாஸ் குடும்பம் தான் ஆனா தங்கமான மனுஷங்க உங்க தகுதிக்கு கொஞ்சம் கம்மியான இடம் தான் ஆனா ஒரே பொண்ணுங்கிறதால உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி செய்வாங்க.., ஒரே  ஒரு முறை பார்த்து பேசினா உங்களுக்கும் பிடிக்க வாய்ப்பு இருக்கு..’ என்று அவரை சம்மதிக்க வைக்கும் தவிப்புடன் அவர் பேசி முடிக்க, 

‘உன் கவலை உனக்கு..!!’ என்று சிங்காரத்தை அறிந்தவராக புன்னகையுடன் சுந்தரலிங்கம் தலை திருப்பி பார்க்க,

“என் கமிஷனுக்காக சொல்லலைங்கயா நிஜமாவே நல்ல குடும்பம் , ப்ரித்வி தம்பிக்கு கல்யாணம் ஆனதை பத்தி கூட பெருசு படுத்த மாட்டாங்க”

‘அதை நீயாவே எப்படி முடிவு பண்ணுவ..??’

“அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லைங்கையா  பெண்ணை பத்தி மட்டும் இல்ல பெண்ணோட அப்பாவை பத்தி ஊருக்குள்ள விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.., ஒரு முறை நேரில் வந்து பார்த்தீங்கன்னா…” என்று இழுத்தவாறே சுந்தரலிங்கத்தை பார்த்தவர்,

‘சொல்ல மறந்துட்டேனே பொண்ணோட பேர் கூட வித்யாசமானது’

‘அப்படி என்ன பேர்..??’

‘மெல்விண்யாழிங்க ஐயா’ என்று கூறவும் ,

அதே நேரம் சமையலறையில் இருந்து காபியோடு அங்கு வந்த மரகதம் முகத்தில் எல்லை இல்லா மகிழ்ச்சியோடு, ‘என்ன பேர் சொன்னீங்க..??’ என்றவாறே   தட்டை டீபாயில் வைத்தவர் உடனே கணவரிடம் இருந்து கைபேசியை வாங்கி பார்க்க அதில் இருந்தது சாட்சாத் நம் யாழியே தான்..!!

பழம் நழுவி பாலில் விழுந்த பூரிப்பில் சுந்தரத்திடம் ‘என்னங்க நான் சொன்ன பொண்ணும் இதே தான்ங்க’ என்று ஆரவார குரலில் ஆர்பரித்தார் மரகதம்.

‘அப்போ உங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்காம்மா..??’ என்று சிங்காரம் அவர் மகிழ்ச்சியை கண்டு கேட்கவும், 

“பிடிச்சிருக்காவா..?? என்ன கேள்வி கேட்கிற சிங்காரம்” என்றவர்,

‘அந்த அண்ணாமலையானே உன்னை இங்க அனுப்பி வச்சி இருக்காரு’ என்றவர் இந்தா முதல்ல இந்த காபியை குடி என்று அவர் கையில் கோப்பையை கொடுத்து,

‘உனக்கு தான் நாங்க நன்றி சொல்லணும் இந்த பெண்ணை தேடி எங்கெல்லாமோ அலைய வேண்டிய எங்களுக்கு நீ வேலையை ரொம்ப சுலபமாக்கிட்ட’ என்றவர் உடனே சாருவை அழைத்து பாயசம் செய்ய சொல்லி விட்டு கணவர் புறம் திரும்பி, 

“பார்த்தீங்களா நான் சொன்னேனே யாழி தான் நம்ம மருமகள்..!! ஈசனே நம்ம மகனுக்காக அனுப்பினவன்னு ஜாதகமும் பொருந்தி இருக்கு  இப்போ என்ன சொல்றீங்க..??’ என்று கர்வத்தோடு கேட்க சுந்தரலிங்கத்திர்க்கும் மகிழ்ச்சி தான்,

ஆனால் பெண்ணின் புகைப்படம் வந்து  ஜாதகம் பொருந்தி இருந்தால் போதுமா..?? அந்த பெண்ணை மகனுக்கு பிடிக்க வேண்டுமே..!! அதை  விட பெண்ணுக்கு தன் மகனை பிடிக்க வேண்டுமே, அவர்கள் குடும்பம் ஒத்து கொள்ள வேண்டுமே இத்தனையும் பார்க்காமல் ஆர்பரிக்கும் மனைவியிடம் திரும்பியவர் 

“கொஞ்சம் பொறுமையா இரு மரகதம், யார் என்னன்னு விசாரிப்போம் அவங்களுக்கும் பிடிக்கணும்” என்றவர் மற்ற விவரங்களை சேகரிக்க தொடங்கினார்.

************************************

“ம்மா எதுக்கும்மா அப்பா கிட்ட சேனல் பத்தின விஷயத்தை சொன்ன..?? நீ சொல்ல மாட்டேன்னு நம்பி தானே உன்கிட்ட சொன்னோம் அப்புறம் எப்படி நீ சொல்லுவ..?? என்று விஷ்ணு கேட்க,

“விஷ்ணு உங்க அப்பாவை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே ..?? ஸ்கூல்ல சொன்னாங்கன்னு தான் உங்களுக்கு படிக்கிறதுக்காக போன் வாங்கி கொடுத்தாரு ஆனா அதை வச்சிட்டு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு தினமும் என்னை கண்காணிக்க சொல்லுவாரு.., முடிச்சதும் வாங்கி வச்சிட சொல்லுவாரு ஆனா நீங்க எங்க என் பேச்சை கேட்டீங்க…?? எனக்கே தெரியாம எவ்ளோ வேலை காட்டி கடைசில உங்களோட மாரடிக்க முடியாம என்னமோ பண்ணி தொலைங்கன்னு விட்டுட்டேன்”

‘ம்மா நான் என்ன கேள்வி கேட்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க..??’

“டேய் அதான் சொன்னேனே உங்க அப்பாவே உங்களோட வீடியோவை பார்த்துட்டாருன்னு அதுக்கு அப்புறமும் எப்படிடா மறைக்க முடியும் ..??இத்தனை நாளா இந்த விஷயத்தை அவர் கிட்ட இருந்து மறைச்சதுக்கே அவர் கடைசியா கிளம்பும் முன்ன என்னை பார்த்த பார்வையே இந்த ஆயுசுக்கு போதும், மறக்காது..!!! இனி எப்பிடி அவரோட நம்பிக்கையை மீட்க போறேன் தெரியலை” என்றவரின் கண்களில் நீர் திரண்டு விட்டது..,

“ம்மா எதுக்கு இப்ப அழறீங்க.., ஒரு விஷயத்தை மறைக்கிறது என்ன அவ்ளோ பெரிய தேசிய குற்றமா..??”

“விஷ்ணு இது வரைக்கும் உங்க அப்பா கிட்ட நான் எதையும் மறைச்சது இல்ல தெரியுமாடா உங்களுக்கு..?? அவருக்கு என்னை பிடிக்க காரணமே என்னோட வெளிப்படையான குணம் தான் அவ்ளோ நம்பிக்கை என்மேல  நான் எதாவது தெரியாம சின்ன தப்பு செஞ்சா கூட அதை பெருசுபடுத்தி என்னை திட்றதோ கோபபட்டதோ கிடையாது ஆனா  உங்களை பெத்துட்டு தினமும் இப்போ அந்த  மனுஷன் என்னை எப்ப அம்மா வீட்டுக்கு தொறத்திடுவாரோன்னு பயந்து பயந்து வாழ்ந்துட்டு இருக்கேன்டா, ஏன் அவர் வேண்டாம்ன்னு சொல்றதை செய்றீங்க..?? அப்பா உங்க நல்லதுக்கு தான் சொல்வார்ன்னு புரிஞ்சிக்க மாட்டீங்களா..??” என்று கண்ணீருடன் அவர்களை பார்க்க, 

‘ஏன்ம்மா இவ்ளோ பீல் பண்ற ..?? நாங்க எல்லாம் கிளாஸ் ரூம் விட்டு துரத்திட்டா ஜாலியா கேன்டீன், கிரவுண்ட்ன்னு பிரெண்ட்ஸ் கூட மாஸா சுத்துறது இல்லையா..?? சொல்லபோனா கிளாஸ்ல இருந்து கிளாஸ் டைம்ல வெளியே சுத்துறது தான் கெத்து தெரியுமா..??  என்று விஷ்ணு கூற,

யாழியோ, “அப்படி அப்பா துரத்தினா நீயும் பாட்டி வீட்டுக்கு போக வேண்டியது தானே..?? போயி நல்லா ஜாலியா இருந்துட்டு ரெஸ்ட் எடுத்துட்டு  வர வேண்டியது தானே..?? ஏன் பாட்டி வீட்ல உன்னை சேர்க்க மாட்டாங்களா என்ன..?? 

‘டேய் அறிவுகெட்டவனே கிளாஸ்ல இருந்து வெளில வரது கெத்தா..?? யார்டா உங்களுக்கு இப்படி சொல்லி கொடுக்குறா..??’ என்று நொந்து போய் மகனை பார்த்தவர் மகள் புறம் திரும்பி,

‘ஏன்டி வாழ்க்கையை பத்தி பேசுறேன் நீ ரெஸ்ட் எடுக்குறதை பத்தி பேசுற..?? கொஞ்சமும் யோசிக்கவே மாட்டிங்களா நான் போயிட்டா நீங்க ரெண்டு பேரும் சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியது தான்’ என்று அவர் முறைக்க

‘எந்த காலத்துல இருக்கம்மா நீ ..??’ என்று விஷ்ணு பார்க்க, 

‘தாயே அப்டேட் ஆகு தாயே..!!’ என்றாள் யாழி கைபேசியை பார்த்தவாறே,

அப்போதும் அவர் முறைத்து கொண்டு நிற்ப்பதை கண்டவர்கள், ‘ம்மா அதெல்லாம் நாங்க ஸ்விகி , ஸோமாட்டோல ஆர்டர் பண்ணிபோம் நீ கிளம்பு’ என்று இருவரும் சேர்ந்து கூற, 

செல்போனில் வாழ்க்கையை அடக்கி கொள்ளும் பிள்ளைகளை ஆற்றாமையுடன் பார்த்தவர் மெல்ல மகள் அருகே அமர்ந்து, ‘யாழிமா இங்க பாருடா’ என்றார்.

‘சொல்லு தாயே’

‘கொஞ்சம் இந்த போனை வச்சிட்டு அம்மா  சொல்றதை கேளேன்’

என்ன நினைத்தாளோ ஒரு நொடி அவர் புறம் திரும்பியவள்,

“ரெண்டே நிமிஷம் தாயே இப்போ என்னோட பேவேரைட்  போட்டோ அப்லோட் பண்ணிடுவாங்க முதல் லைக் கம்மென்ட் போட்டுட்டு வந்துடுறேன்” என்றவள் சொன்னது போலவே செய்த பின்னரே அவர் புறம் திரும்பி அமர்ந்தாள்.

அதே நேரம் ஏற்கனவே பேக்டரியில் ஜெகனால் ஏற்ப்பட குளறுபடியில் கொண்ட ஆதங்கத்தோடு  மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த மகேஷ்வரன் மகள் கையில் செல்போனை பார்க்கவும்  உடனே அதை பிடுங்கி இருந்தார்.

‘அப்பா’ என்று இருவருமே அதிர்ந்து எழுந்து நின்றனர்.

யாழி அப்போது தான் சாத்தனூர் அணையில் அவர்கள் எடுத்த காணொளியை பார்த்து கொண்டிருந்தாள். கைபேசியை எடுத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்த மகேஷ்வரன் சில நிமிடங்களுக்கு பின் பிள்ளைகளிடம்,

“எனக்கு தெரியாம எத்தனை நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குது..??” என்றார் கைபேசியில் அவர்கள் காணொளியை பார்த்தவாறே,

விஷ்ணு யாழி இருவரும் ஒருவர் கையை மற்றவர் பிடித்து கொண்டு நிற்க, ‘அப்பா அது ஒன்னும் திருட்டுத்தனம் இல்ல நாங்க எங்களோட பேஷன் ..’ என்று விஷ்ணு ஆரம்பிக்கவுமே, 

‘அடி செருப்பால எப்ப பாரு யூடியூப், பேஸ்புக்ன்னு இருந்தது இல்லாம இன்னும் குட்டிசுவரா போறதுக்கு சேனல் ஆரம்பிச்சு வச்சுட்டு அதை பேஷன்ன்னு என்கிட்டேயே சொல்லுவியா..?? ஏன்டா இது தான் வாழ்க்கையா..?? இது தான் உங்ககூட கடைசி வரை  வருமா ..??’ என்று அவர் விழிகள் சிவக்க,

‘ப்பா நாங்க ஏதாவது பெருசா அச்சீவ் பண்ண நினைக்கிறோம் ஆனா நீங்க..’ என்று யாழி ஆரம்பிக்கும் முன் ,

“நாளைக்கு கல்யாணம் ஆகி போக போற பொண்ணு அதனால நீ பேசாம இருக்கிறது உனக்கு நல்லது” என்று கடுமையான குரலில் அவர் எச்சரிக்க, 

அதே நேரம் விஷ்ணு ஏதோ பேசவும், ‘ஒழுங்கா படிக்காம பன்னிரண்டு அரியர் வச்சிட்டு  கொஞ்சமும் வாழ்க்கை பத்தின பயமே இல்லாம செய்யறது எல்லாம் சரின்னு என்கிட்டேயே சட்டம்  பேசுவியா..?? உன்னை யார்டா எங்களை கேட்காம  இவளை கூட்டிட்டு போக சொன்னா..??’ என்று கேட்க,

அப்பா நான்.. என்ற யாழியின் வாய் அவர் பார்வையிலேயே அன்னிச்சையாக மூடிக்கொள்ள,

‘சொல்லுடா போறவர வழியில ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன ஏதுன்னு கூட எங்களுக்கு தெரியாம போயிருக்கும் ஏன் இப்படின்னு கேட்டா அது தான் த்ரில்ன்னு எங்க கிட்டே..’ என்று ஆத்திரத்தோடு  எழுந்த மகேஷ்வரன் விஷ்ணுவை அறைய செல்ல சுகமதி அவரை தடுத்து பிடித்து நிறுத்திட மகேஷ்வரனின் கோபம் மனைவியின் புறம் திரும்பியது, 

தந்தையின் உச்சபட்ச கோபத்தை முதல் முறையா நேரில் பார்க்கும் யாழியும் விஷ்ணுவும் செய்வதறியாது நிற்க அதேநேரம் சிங்காரத்திடம் இருந்து மகேஷ்வரனுக்கு  அழைப்பு வந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!