Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமனவீணையின் புதுராகமே

ராகம் – 8.1

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீடு வந்து சேர்ந்த மகனை கண்ட சுகமதி, ‘டேய் எதுக்குடா இந்நேரத்துக்கு காலேஜ்ல இருந்து வந்த’ என்றிட,

‘ம்மா யாழி எங்கம்மா..??’ என்றான் திணறலுடன்

‘அவ இப்ப தான் அப்பா கூட வெளில போனா..?? நீ ஏன் கேட்கிற..?’

‘வெளியேவா எங்க..??’ என்று ஆரம்பித்தவன்,’சரி மாப்பிள்ளை வீட்டார் எங்க..?? யாழி என்ன சொன்னா அவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை தானே…?? என்று பதட்டம் தணியாத குரலில் கேட்க, 



Advertisement

‘இல்லையே அவளுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு’

‘என்னது பிடிச்சி போச்சா மாப்பிள்ளை கிட்ட என்ன சொன்னா..??’ 

‘டேய் அதெல்லாம் உனக்கு எதுக்கு நீ ஏன் கேட்கிற..??’ என்று சந்தேகமாக அவனை பார்க்க, 

Advertisement

‘ம்மா சொல்லும்மா’ 

Advertisement

“இல்லடா மாப்பிள்ளை வரல நாளைக்கு தான் வரார் போட்டோ காட்டினாங்க அதுல உங்க அக்காக்கு பிடிச்சி போச்சு” என்று கூற விஷ்ணுவிற்கு சப்த்த நாடியும்  ஒடுங்கி போக நிலை தடுமாறி அப்படியே கீழே சரிந்து விழுந்தான்.

‘என்னடா ஆச்சு..??’ என்று பல முறை கேட்ட தாயின் வார்த்தைகள் அவன் செவி சென்று சேராமல் போக மூளையும் வேலை நிறுத்தம் செய்ததில் அசைவற்று கிடந்தான்.

கைபேசி ஒலியிலேயே தன்னை மீட்டெடுத்து  எழுந்தமர்ந்தவன் உடனே அழைப்பை துண்டித்து விட்டு மிகத்தீவிரமாக எதையோ தேட தொடங்கினான்.

Advertisement

******************************************

யாழியின் வீட்டில் இருந்து  கிளம்பிய அதிர்துடியனின் பெற்றோர் நேரே ஜோதிடரின் வீட்டிற்கு தான் சென்று கொண்டிருந்தனர்.

மகனின் திருமணம் முடிவாகி விட்டதில் சிறகடித்து வானில் பறக்காத குறையாக மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்த மரகதம் வழி நெடுக யாழியை பற்றியே பேசிக்கொண்டு வந்தார். அதுவும் தன் கேள்வியை கூட உணர முடியாமல் புகைப்படத்தில் இருந்த மகன் மீதிருந்து  பார்வையை விலக்க முடியாமல் தவித்த பெண்ணவளின் முகத்தில் இருந்தே தன் மகன் மீதான அவள் பிடித்தத்தை கண்டு கொண்டவருக்கு அத்தனை பூரிப்பு.

முதலில் அதிர்துடியனுக்கு அழைத்தவர் அதி என்று ஆரவாரத்தோடு ஆரம்பித்து யாழிக்கும் அவனை பிடித்திருப்பதை தெரிவிக்க, அதியால் நம்ப முடியவில்லை.

“ம்மா உங்க கற்பனைக்கு ஒரு அளவில்லையா..?? இன்னும் அவ என்னை நேரில் பார்க்கவே இல்ல ஒரு வார்த்தை பேசல அப்புறம் எப்படிம்மா நீங்க சொன்ன மாதிரி இருக்கும் ..?? எக்ஸ்சாஜிரேட் பண்ணாதீங்க”

‘நிஜமா தான் சொல்றேன் அதி.., இது தான் கடவுள் போடுற முடிச்சின்னு சொல்றது அதுவும் உன் போட்டோவை பார்த்தப்போ மருமகள் முகத்துல இருந்த வெட்கத்தை  பார்த்திருந்தா நீ இப்படி சொல்ல மாட்ட..’ என்றிட, 

காரை பார்க்கிங்கில்  நிறுத்தி விட்டு அதன் மீது சாய்ந்து நின்று பேசிக்கொண்டு இருந்தவனின் அதரங்களில் அழகிய புன்னகை தவழ்ந்தது யாழியின் வெட்கத்தை அறிந்து..,

‘என்ன ஒன்னும் சொல்லல அமைதியா இருக்க..?? நானே எதிர்பார்க்கலை ஆனா யாழிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அதி ரொம்ப நேரமா உன் முகத்துல இருந்து பார்வையை திருப்பவே இல்ல தெரியுமா..??’ என்று அவர் மீண்டும் கூற, 

மனமெங்கும் மத்தாப்பு சிதறல்கள் சிந்தியதில் ஆறடி ஆண்மகனின் கண்களிலும் சிறு கீற்றாக வெட்க புன்னகை நெளிந்தது, இதழோர மீசையை பற்களால் இழுத்து கடித்து தன் உணர்வை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

‘நீங்க சொன்னதை  நான் நேரில் பார்த்து தெரிஞ்சிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்ம்மா’ என்றான் நெஞ்சை நீவியவாறே,

‘என்ன தெரிஞ்சிக்க போற..??’

‘உங்க மருமகளோட வெட்கத்தை..!! ‘ என்றான் மீசை துடிக்க, 

‘யாழி நம்பர் உனக்கு அனுப்பி இருக்கேன் அதி பேசுறதா இருந்தா பேசிக்கோ’

‘நான் பார்த்துக்குறேன்ம்மா நீங்க சந்தோஷத்துல மாத்திரை எடுக்காம போயிட போறீங்க..’ என்று அவன் நினைவு படுத்த,

“நல்ல வேலை நியாபகபடுத்தின என்றவாறே கைப்பையில் இருந்த மாத்திரையை எடுத்து போட்டவர், சரிப்பா இப்போ ஜோசியர் கிட்ட போயிட்டு இருக்கோம் நல்ல நாள் பார்த்துட்டு உனக்கு கூப்பிடுறேன்” என்று அவர் அழைப்பை துண்டிக்க போக, 

‘ம்மா..’ என்று அழைத்தவன் “ரொம்ப தள்ளி வேண்டாம் முடிந்தவரை இந்த மாசத்துலயே நல்ல நாள் பாருங்க” என்று கைபேசியை அணைத்துவிட்டு எதிரே நகை கடைக்குள் நுழைந்தான்.

**************************************

நேரே ஜோதிடரை பார்த்து திருமண நாளை குறித்தவர்கள் உடனே மகேஷ்வரனுக்கு அழைத்து,

“நாளை மறுநாள் வீடு பார்க்கும் வைபவமும் அதற்கடுத்து வரும்  வெள்ளி அன்று  நிச்சயம் வைத்து கொள்ளலாம் இந்த மாத இறுதியில் திருமணம் என்று கூறியவர்கள் இப்போது நிச்சய பட்டு மற்றும் நகை எடுக்க சென்று கொண்டிருப்பதாக கூறி  உடனே மகேஷ்வரனிடம் யாழியை அழைத்து வர சொல்ல அவரோ, 

‘நாங்க எதுக்கும்மா நீங்களே பாருங்க..’ என்றார்,

“தப்பு சம்மந்தி என்னதான் நாம எடுத்தாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நிச்சய புடவை கல்யாணபுடவை மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது அது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா அவங்களுக்கு கூடுதல் சந்தோசம் தானே எதுவும் யோசிக்காதீங்க நீங்க யாழியை கூட்டிட்டு கடைக்கு வாங்க” என்று வைத்திருந்தார்.

யாழி வரவும் அவளை அழைத்து சென்று அவளுக்கு பிடித்த நிறத்தில்,டிசைனில் புடவை, நகை என்று அனைத்தையும் வாங்கியவர்கள் மனநிறைவுடன் வீடு திரும்பி இருந்தனர். 

இங்கு மகேஷ்வரனுடன்  வீடு திரும்பிய யாழியை எதிர்கொண்ட விஷ்ணு, 

‘எங்கடி போன எவ்ளோ நேரம் காத்திருக்கிறது..??’ என்றவாறே அவளை மொட்டைமாடிக்கு அழைத்து சென்று அதி பற்றிய செய்தியை இடியென அவள் தலையில் இறக்கி இருந்தான்..

கொண்ட திகைப்பில் இருந்து மீளாமல் யாழி அவனையே பார்த்திருக்க தொடர்ந்தவன் , 

“போச்சு போச்சு உன்னோட கனவு, லட்சியம், ஆசை இவ்ளோ ஏன் உன்னோட வாழ்க்கையே போச்சு..!! தப்பான ஆளுக்கு ஓகே சொல்லி மொத்தமா நீயே அதை குழி தோண்டி புதைச்சு சமாதி கட்டிட்ட” என்று கூற நிலை குத்திய விழிகளுடன் தம்பியை பார்த்திருந்த யாழிக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது. 

‘ஏன்டா இப்படி பயமுறுத்துற..??’,

‘பயமுறுத்தலடி நடக்க போறதை சொல்றேன்’

“எந்த ஒரு முடிவெடுக்கும் முன்ன யோசிக்கவே மாட்டியாடி நீ..!! போட்டோ பார்த்து எப்படிடி ஓகே சொன்ன எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப அவசரபடர யாழி.., நான் தான் அத்தனை முறை சொல்லிட்டு போனேனே நான் சொல்லாம ஓகே சொல்ல கூடாதுன்னு அப்புறம் ஏன் யாழி அவசரப்பட்ட..!!” என்று உள்ளிறங்கிய குரலில் கேட்க அவளிடம் பதிலில்லை 

‘வாயை திற..!! இப்படி பேசாம இருந்தா நீ எனக்கு பண்ணின துரோகம் இல்லன்னு ஆகாது..’, 

“சாரிடா நான் வேணும்ன்னு பண்ணலை.., எனக்கே தெரியலை எப்படி நான் சம்…” என்றவளின் மனக்கண்ணில் மீண்டும் அதிரனின் முகம் மின்னி மறைய என்ன பதில் சொல்வதென புரியாத தடுமாற்றம்.

‘அந்த ஆள் ரவுடி மட்டும் இல்லடி வசியம் தெரிஞ்சவனாவும் இருப்பான் போல ஒருவேளை உனக்கு முட்டை மந்திரிச்சி விட்டிருப்பாரோ இல்லன்னா போட்டோல பார்த்தே உன்னோட எக்ஸ்பெக்டேஷன் பத்தி கூட கவலை படாம ஓகே சொல்ல வச்சிட்டானே அப்போ அதானே அர்த்தம்..??

‘யாழி நான் என்ன எனக்காகவா பேசிட்டு இருக்கேன் உனக்காக தான் பேசுறேன் அது கூட உனக்கு புரியலையா..,  ஏய் நான் தான் அன்னைக்கே அந்த ஆள் சரியான ரவுடியா இருக்கான் பார்வையே மிரட்டலா இருக்குன்னு சொன்னேனே எப்படிடி ஓகே சொன்ன..?? அப்போ உன் தம்பி மூக்கு உடைஞ்சதை பத்தி உனக்கு கவலை இல்லையா..’,

‘சாரி விஷ்ணு எனக்கு அவர் தான் இவர்ன்னு தெரியாதுடா..’, 

‘ஏய் தெரியுது தெரியலை இப்போ பிரச்சனை இல்ல உன் வாழ்க்கை பத்தின பெரிய முடிவு யாழி அதுல என்னை கேட்காம நீ எப்படி ஓகே சொல்லுவ..?? அப்போ உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா..?? அப்பா அம்மாவை விட உன் மேல அதிகமான அக்கறை எனக்கு இருக்கு என்னை பத்தி கூட கொஞ்சமும் யோசிக்க மாட்டியா..??’

‘சரி என்னை கூட விட்டுடு ஆனா அவரை கல்யாணம் பண்ணிகிட்டா இனி நீ நீயா இருக்க முடியாது போன் மட்டும் இல்ல, நீ என்ன சாப்பிடனும், என்ன ட்ரெஸ் போடணும், என்ன பண்ணனும், எல்லாமே வேற ஒருத்தங்க தான் தீர்மானிப்பாங்க நீ அவங்க சொல்றதை மட்டுமே செய்ய போற உனக்குன்னு சுயஅடையாளமே இருக்காது கொஞ்சம் கொஞ்சமா சுயம் இழந்து உன்னையே தொலைச்சிடுவ தெரியுமா..??’ 

‘ஒரு பெண்ணுக்கு சுயமரியாதையும் சுய அடையாளமும் எவ்ளோ முக்கியம் தெரியுமா..?? கல்யாணம் பண்ணா அதெல்லாம் காணாம போயிடும் அது மட்டுமா உன்னோட ஆசை கனவு லட்சியம் எல்லாம் தூக்கி கிடாசிட்டு அன்னைக்கு fb ல பார்த்தோமே அதுல அந்த மேம் சொல்ற மாதிரி நீ சமையல் ரூம்ல முடங்க வேண்டியது தான்’, என்று கூற யாழி முகத்தில் குழப்ப ரேகைகள் வெகு தீவிரமாக படர்ந்தது.

“இன்னும் உலகம் தெரியாம இருக்க யாழி நீ..!!  நீயே  பாரு” என்று லேட்டஸ்ட்டாக கல்லூரி மாணவர்கள் இடையே எடுக்க பட்ட சர்வே குறித்த வீடியோவை காட்டியவன்,

‘பார்த்தியா இப்போல்லாம் சிங்கிள்லா கெத்தா சுத்துறது தான் ட்ரென்ட் ஆனா  நீ தான் பழைய பஞ்சாங்கமா கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துட்ட அப்புறம் குழந்தை குட்டின்னு  இன்னும் நாலு வருஷத்துலயே ஆன்ட்டி ஆகிடுவ நாளைக்கு என் பசங்க வந்து உன்னை பாட்டின்னு கூப்பிடும்’ என்று கூற யாழிக்கு தூக்கி வாரிபோட்டது .

‘டேய் அப்போ நான் அவசரபட்டுட்டேனா..??’ என்றாள் குழப்பத்துடன்.

‘ஆமாடி அப்படி உனக்கு சிங்கிள்லா இருக்க பிடிக்காட்டி பின்னாடி யாராவது உன்னை லவ் பண்ணினா அவங்க லிவிங் டூகெதர்ல இருக்கலாம் அது தான் இப்போ ட்ரென்ட் தெரியுமா…??’

‘லிவிங் டூ ஈத்தாரா ..?? அப்படின்னா என்னடா..??’

‘அடிப்பாவி இன்னுமா நீ அப்டேட் ஆகாம இருக்க..?? அது ஈத்தர் இல்லடி டூகெதர்.., லிவிங் டுகெதர்’

‘ஏதோ ஒன்னு ஆனா என்னன்னு முதல்ல சொல்லுடா..’

‘அதான்டி போன வருஷம் சுப்ரீம் கோர்ட் கூட ஜட்ஜ்மென்ட் கொடுத்ததே’ 

‘என்னன்னு..??’ 

“நமக்கு யாரையாவது பிடிச்சா கல்யாணம் பண்ணாம அவங்க கூட ஒரே வீட்ல இருக்கலாம், யாரும் யாரையும் டாமினேட் பண்ண முடியாது, யாரும் யாரோட டிசிஷன் எடுக்க முடியாது, யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியது கிடையாது, யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல, யாரும் யாரோட கனவு, லட்சியத்துக்கு நடுவுல நுழைய முடியாது, சுதந்திரமா நாம நினைச்சபடி இருக்கலாம் இப்படி நிறைய இருக்கு”

‘இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்..??’

‘நீ பண்ணின முட்டாள்தனமான காரியத்தினால உன் வாழ்க்கையே அதளபாதாளத்துக்கு போறதை பார்த்துட்டு ஒரு தம்பியா நான் எப்படிடி சும்மா இருக்க முடியும்..?? உன்னை எப்படி காப்பாத்துறதுன்னு இவ்ளோ நேரமா பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்ட்டால எல்லாம் தேடி கண்டுபிடிச்சேன்’ 

‘அப்போ நீ கல்யாணம் பண்ணிப்பேன் சொன்னது..??’

‘அப்போ சொன்னேன்டி இப்போ பார்த்தா எனக்கு ஒன்னு சிங்கிள்லா சுத்துறது இல்ல லிவிங் இது தான் பெஸ்ட்டா இருக்கு அப்போ தான் லைப்பை என்ஜாய் பண்ண முடியும் நம்ம வாழ்க்கையை யார் என்னன்னே தெரியாதவங்க கையில தூக்கி கொடுத்து சிக்கி சின்னாபின்னம் ஆகாம மை லைப் மை ரூல்ஸ்ன்னு  சந்தோஷமா அனுபவிச்சி ரசிச்சி நம்ம வாழ்கையை நாம வாழலாம்’ என்று முடிக்க வாழ்க்கை குறித்த பயம் முதல் முறை தோன்றியதில் யாழி முகத்தில் தீவிர சிந்தனை படர்ந்து இறுதியில் எதிர்காலமே இருண்டு போனது போல்  தோன்ற அசைவற்று அமர்ந்திருந்தாள்.

யாழி என்று விஷ்ணு அவளை உலுக்கவும், ‘இப்போ என்னடா பண்றது..??’ என்றாள் மிக மெல்லிய குரலில் 

‘கல்யாணத்தை நிறுத்துறதை தவிர வேற வழி இல்ல’

‘டேய் என்னடா சொல்ற’ என்றவளின் குரலில் அத்தனை அச்சம் அதைவிட அதிரனை இழக்க போகும் வலி, 

“அன்னைக்கு போன்ல உன் சேனலுக்கு வீடியோ எடுத்ததுக்கே என் மூக்கை உடைச்சவரு இப்போ நான் உன் தம்பின்னும் அந்த வீடியோ  உன் சேனலுக்காகனும் தெரிஞ்சா உன்னை மட்டும் சும்மா விடுவார்னு நினைக்கிறியா..?? நமக்கு வேற வழி இல்ல யாழி, கண்டிப்பா என்னால அந்த ஆள் கூட காலம் தள்ள முடியாது, சொந்த வீட்டுலே நிம்மதியா நடமாட விட மாட்டார் நீ வேணும்ன்னா எழுதி வச்சிக்கோ, நம்ம சுதந்திரமே போயிடும் வாழ்க்கை முழுக்க நீயும் நானும் ஆயுள் கைதி தான்..”

‘ஆனா புடவை எல்லாம் எடுத்துட்டு இப்போ வேண்டாம் சொன்னா ஏத்துப்பாங்களாடா..??’

‘அப்பாக்கு உன் மேல பாசம் இருக்கு நீ சொன்னா கேட்டுப்பாரு’

‘எனக்கு பயமா இருக்குடா’

‘ஏன்டி..??’

‘இல்லடா முதல்ல ஓகே சொல்லிட்டு இப்போ வேண்டாம் சொன்னா என்ன நினைப்பாங்க..??’

“ஏய் யார் என்ன நெனச்சா நமக்கென்னா..?? வாழபோறது நீ இதுல அடுத்தவங்க நினைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தா உன் நிம்மதி போயிடும் பரவால்லையா..??”  என்று கேட்க ‘இல்லை’ என்ற தலை அசைப்பு பெண்ணவளிடம்.

கடைசியா கேட்கிறேன் ‘உனக்கு தம்பி முக்கியமா இல்ல அந்த ஆள் முக்கியமா..?? நீயே முடிவெடு’ என்று அவளெதிரே அமர்ந்தான்.

இருதலை கொல்லி எறும்பாக தவித்து மூளைக்கும் மனதிற்கு இடையில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி கொண்டிருந்தது பெண் மனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!