Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – Final 1

மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் அடுத்த வாரம் இருவருக்கும் மெயின்ஸ் எக்ஸாம் இருப்பதால் கடந்த இருவாரங்களுக்கு முன்பே அவர்களின் போர்ஷனை யாழியும் ஆருவும் நிறைவு செய்திட இனி ஷூட் கிடையாது தொடர்ந்து இருவரும் விவாதித்து, தேர்வுகள் எழுதி தயார் செய்ய சொல்லிவிட்டிருந்தான் அதிர்துடியன்.

ஆனால் இறுதியாக ஒரே ஒரு காணொளி மட்டும் எடுக்க வேண்டும் என்று யாழி அவனிடம் கேட்டிருக்க மனைவியை புரிந்தவனும் அன்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு காத்திருந்தான்.

வழக்கத்திற்கு மாறாக ஆராதனாவும் யாழியும் முதல் முறையாக இணைந்து வந்து கேமரா முன் நிற்ப்பதை கண்டு ஒன்றும் புரியாமல் குடும்ப உறுப்பினர்கள் பார்க்க,



Advertisement

‘அண்ணா இன்னைக்கு நானும் அண்ணியும் சேர்ந்து ஒரு காமன் டாப்பிக் பேசலாம்ன்னு இருக்கோம்..’ என்றிட,

யாழியோ, ‘இது இப்போ ரொம்ப தேவைன்னு தோணுச்சுங்க அதான்’ என்று அவள் முடிக்க..,

‘ஓகே பொசிஷன் எடுங்க’ என்றவன் கேமரா வழியே அவர்களை சரிபார்த்து, 

Advertisement

‘ஸ்டார்ட்’ என்றான் அதிர்துடியன்.

Advertisement

‘ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம்..’ என்று இருவரும் இணைத்து கூறிட அவர்களுக்கு பின்னே இருந்த வெள்ளை திரையில் பேச வேண்டிய தலைப்பு ஒளிபரப்பப்பட்டது… 

‘Need of  the hour’

‘இது என்ன  புதுசா..?? இப்போ எதுக்கு திடீர்ன்னு இந்த டாப்பிக்ன்னு நீங்க யோசிக்கலாம்’ என்று ஆராதனா நிறுத்த,

Advertisement

‘ஆனா இது upsc aspirants க்கு மட்டுமேயான தலைப்பு இல்லை.., தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுரவளர்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் இளைய தலைமுறையும் அதனால் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு கொண்டிருக்கும் குடும்ப அமைப்பும் பத்தின புரிதலை ஏற்படுத்த கூடிய கட்டாயம் இப்போ ஏற்பட்டிருக்கு, அதனாலேயே எங்களால் ஆன சின்ன முயற்சி’ என்று யாழி கூற,

தொடர்ந்த ஆராதனா, “காலங்காலமா பல தலைமுறைகளுக்கு கிடைக்காத பெண் கல்வியும்  சுதந்திரமும் அவங்களை மேம்படுத்தனுமே தவிர சீரழிக்க கூடாது… புதுமைன்னு சொல்லிகிட்டும், புரட்சின்னு சொல்லிக்கிட்டும் ஆணுக்கு பெண் சளைச்சவளில்லைன்னு சொல்லிட்டு அவங்களுக்கு நிகரா தம் அடிக்கிறதும் தண்ணி அடிக்கிறது போதைன்னு அவங்களை அவங்களே தாழ்த்திகிட்டு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க வேண்டிய பெண் இனமே கொஞ்சம் கொஞ்சமா அதன் புனிதத்தை இழந்துட்டு வருது..”

“ஆணுக்கு பெண் நிகரானவள்ன்னு இப்படி தான் நிருபிக்கனுமா..?? இது தான் நாகரீக வளர்ச்சியா..?? பெண் விடுதலையா…?? சம உரிமை கோட்பாடு இதை தான் வலியுருத்துதான்னு  நாம யோசிக்க வேண்டிய தருணம்..!! தண்ணி, சிகரெட், போதை பொருட்கள் எல்லாம் ஆண்கள் உபயோகிப்பதே தவறு இதனால குடும்பங்கள் சீரழியுதுன்னு சொல்லிட்டு இருந்த பெண்களே இப்போ அவங்களுக்கு நிகரா அதே தப்பை செய்யறது எந்த விதத்துல சரி ஆகும்..?? யார் செய்தாலும் தப்பு தப்பு தான் அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.., தனி மனித சுதந்திரம்ன்னு சொல்லிக்கிட்டு பெண்களை அழிவு பாதையை நோக்கி செலுத்த கூடாது” என்று குரல் உயர்த்தி யாழி ஆவேசமாக பேச,

‘கட்..’ என்ற அதி கேமராவில் இருந்து பார்வையை திருப்பி அவளிடம்,   

‘என்ன பண்ணிட்டு இருக்க யாழி நீ..??’ என்றான்.

‘நான் என்ன பண்ணேன்..??’ என்று அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க,

“பலமுறை சொல்லிட்டேன் எமோஷனல் பாலன்சிங் தெரிஞ்சிருக்கணும் நாளைக்கு கலெக்டர் ஆன பிறகு வறுமை தலைவிரிச்சு ஆடுற மாநிலத்துல உன்னை அப்பாயின்ட் பண்ணினா அங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கிறவங்க கூட சேர்ந்து அழறது புத்திசாலிதனமா இல்ல அதை தடுப்பதற்க்கான நடவடிக்கை எடுப்பது புத்திசாலிதனமா..?” என்று கேட்க,

தன் தவறை உணர்ந்தவள், “சா…சாரிங்க எனக்கு.., என்னையும் அறியாம எமோஷனல் ஆகிடுறேன்”

“லிசன் யாழி என் பொண்டாட்டி எமோஷனல் ஆகலாம் ஆனா கலெக்டர் ஆக கூடாது புரியுதா..?? என்று கேட்க,

‘ஹ்ம்ம்’ என்ற தலை அசைப்பு அவளிடம், 

‘எமோஷனல் இம்பாலன்சிங் (emotional imbalancing) எப்பவும் நம்மளை சரியா சிந்திக்க விடாது.. யு பெட்டெர் லேர்ன் ப்ரம் ஆரு’ என்றவன் தங்கையிடமும் அதையே கூற,

‘சரிண்ணா’ என்ற தலையசைத்தாள்.   

‘சாரி ஆரு..’ என்று அவளிடமும் மன்னிப்பு வேண்டி இருந்தாள் யாழி.

ஆம் இத்தனை மாதங்களில் அண்ணி நாத்தனார் என்ற உறவை தாண்டி இருவருக்கும் இடையில் அழகிய நட்பு உருவாகி இருந்ததில் யாழி அவளிடம் தான் எவ்வாறு அறியாமையின் பிடியில் சிக்கி இருந்ததையும் இப்போது மீண்டு தன் தவறை உணர்ந்து திருந்தி இருப்பதை பற்றியும் பகிர்ந்திருந்தாள்.

‘என்ன அண்ணி இது..?? எதுக்கு சாரி எல்லாம் கேட்டுக்கிட்டு, உங்களுக்கு இதெல்லாம் புதுசு ஆனா அண்ணா எனக்கு ஸ்கூல்  டேஸ்ல இருந்தே இது பத்தின அவேர்னஸ் கொடுத்ததால என்னால ஈசியா பேலன்ஸ் பண்ண முடியுது உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் இந்த பாலன்சிங் வந்துடும் ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆகுங்க’ என்றவள் யாழிக்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுக்க அவள் குடித்து முடித்து ஆசுவாசபடுத்தி கேமரா முன் வந்து நிற்கவும், 

‘ஸ்டார்ட்’ என்றான் மீண்டும் அதிர்துடியன்.

***************************************** 

ஆடை சுதந்திரம் பற்றின தப்பான புரிதல் இங்க இருக்கு. முக்கியமா ஆடை குறைப்பு தான் ஆடை சுதந்திரம் என்ற கருத்து பரவலாக இருந்துட்டு இருக்கு இது பத்தின புரிதல் இல்லாம சின்ன சின்ன ஸ்கூல் பிள்ளைகள் எல்லாம் குறைந்த ஆடைகளோடு அங்கங்களை வெளிபடுத்தி போட்டோஸ் போடுறது, டான்ஸ் ஆடுறது, ரீல்ஸ் பண்றது தான் ட்ரென்ட்ன்னு நினைச்சிட்டு படிப்பை கோட்டை விட்டுட்டு இருக்காங்க, இதே நிலை நீடித்தா என்னவாகும்ன்னு யோசிச்சி பாருங்க, அதை விட அடுத்த சந்ததியினருக்கு நாம எதை கடத்துறோம் என்பது ரொம்ப முக்கியம்’ என்று ஆராதனா நிறுத்த,

தொடர்ந்த யாழி, “பீ ரோமன் வென் யு ஆர் இன் ரோம்”ன்னு ஒரு பழமொழி இருக்கு… வேற நாட்டுக்கு போறப்போ அது குறித்த சட்டங்களுக்கு உட்பட்டு அங்கிருக்கும் சூழலோடு இணைந்து வாழ கத்துக்கனும் என்பதற்காக சொல்லபட்ட பழமொழி அது … ஆனா சொந்த நாட்டுலேயே எப்படி வாழணும்ன்னு தெரியாம பலர் இங்க இருக்காங்க…”

“ஒவ்வொரு இடத்திற்க்கும் அதற்குண்டான கட்டமைப்பு இருக்கும் அதுக்குள்ள பொருந்தி வாழும் போது எந்த பிரச்னையும் இல்லை அனா நீங்க குடும்ப கட்டமைப்பை உடைச்சிட்டு போகும் போது தான் பிரச்சனைகள் அதிகரிக்குது… நம்ம கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் காலமாற்றம், புதுமை, சுதந்திரம்ங்கிற பேருல அழிஞ்சிட்டு வருது இதை அதிகமா செய்யறதும் பெண்கள் தான் என்பது இங்க வேதைனையான விஷயம்…”

“நம்ம கலாச்சாரத்துக்கு ஏற்ப அந்த காலத்துல பெண்களுக்கான உடைகள்ன்னு  பாவாடை சட்டை, தாவணி, புடவையா தான் இருந்தது….ஆனால் அதன் பின் காலப்போக்கில்  மிடி, சுடிதார், நைட்டின்னு வந்தது … வீட்டில் புடவையை கட்டிட்டு வேலை செய்யறது நம்ம அம்மா பாட்டிகளுக்கு வேணும்ன்னா ஈசியா இருக்கலாம் ஆனா எல்லாருக்கும் அது சாத்தியம் இல்ல.. புகுந்த வீட்டில் சில பெண்கள் வீட்டு வேலையின் போது எங்கே ஆடை விலகி இருக்குமோ என்ற பயத்துடனே  வேலை செய்துட்டு இருப்பாங்க ஆனா நைட்டியும், சுடிதாரும் அணியும் போது பெரிதா அப்படி ஒரு அச்சம் இருப்பதில்லை…”

‘நம்ம வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதற்கு பெயர் தான் ஆடை சுதந்திரமே தவிர நம் அங்கங்களை வெளிபடுத்தி மற்றவர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில் அணிவதற்கு பேர் புரட்சியோ சுதந்திரமோ இல்லை.. ஜீன்ஸ் டாப்ஸ்ல் தொடங்கி நம் வசதிக்கு ஏற்ப ப்ராக் வரையிலும் அணியலாம் ஆனால் அதில் கண்ணியம் வேண்டும்…’

‘எங்கு, எதை, எப்படி  உடுத்த வேண்டும் என்ற அடிப்படை புரிதல் இருத்தல் வேண்டும்.. ஆனால் இங்க பலருக்கு அந்த தெளிவு இல்லை.. நிச்சயம் ஆடையை கொண்டு மட்டுமே குற்றங்கள் தீர்மானிக்க படுவதில்லை ஆனால் self dignity is must !!‘ என்று யாழி முடிக்க, 

அடுத்து.. என்று தொடர்ந்த ஆராதனா, ” இங்கு சுதந்திரம்ங்கிறது ஆண் பெண்ணை அடிமைபடுத்துவதோ பெண் ஆணை அடிமைபடுத்துவதோ இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து சமமாக மதித்து நடப்பது… ஆனால் அதை பத்தின சரியான புரிதலும் இங்க பலருக்கு இல்லை என்பது தான் வேதனையான விஷயம்”

“இங்க யாரும் யாரையும் அடிமை படுத்துறதுக்காக பிறக்கலை… இருக்கிறது ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கையில் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து, மதிப்போடும்  மரியாதையோடும் நடத்தி அன்பு செலுத்தி வாழறது தான் புத்திசாலிதனமே தவிர்த்து எப்பவோ முடிஞ்சி போன பெண்ணடிமைத்தனத்தை  இப்ப வரையிலும் தூக்கி சுமக்கிறது அடிமுட்டாள் தனம்..”

“இப்பவும் பெண்கள் மீதான ஆதிக்கம் இருக்கு மறுக்கலை ஆனால் நம்ம அம்மா, பாட்டி, முப்பாட்டி இவங்க எல்லாம் சந்திச்ச கொடுமையை நாம அனுபவிக்கல அவங்களுக்கு எல்லாம் சின்ன சின்ன அடிப்படை உரிமைகள் கூட மறுக்கபட்டிருக்கு… பேச்சு உரிமை இல்ல சுதந்திரமா முடிவு எடுக்கும் அதிகாரம் பல நேரம் வழங்கபடலை… இப்போ நமக்கு பேச்சு சுதந்திரம் தொடங்கி எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கு… ஆனால் சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்று யாருக்கும் அடங்காமல் திரியறது இல்லை… நமக்கான சுதந்திரத்தை ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டு நம்மோடு சேர்ந்து மற்றவர்களையும் உயர்த்த தான் படிப்பும், சுதந்திரமும் உதவனுமே தவிர்த்து, சீரழிஞ்சு போகறதுக்காக இல்லை”

“பெண்கள் வீட்டுவேலை செய்யறது அடிமைதனம்னு எப்ப பார்க்கப்பட்டதோ அப்போ அங்க ஆரம்பிச்சது பிரச்சனை.., இப்போ இருக்க பெண்களுக்கு தன் வீட்டு வேலை அடிமை தனம்ன்னா அதையே ஆண்களை செய்ய சொல்றது அவங்களை அடிமை படுத்தும் எண்ணத்தோடன்னு தானே அர்த்தம்.. அப்போ இது மட்டும் சரியா..?? இது என்ன மாதிரியான மனோபாவம்… ?? கிட்டத்தட்ட பழி தீர்த்தல் என்பது போல ஆகிடாதா..?? இத்தனை காலமாக இருந்த ஆண் வர்கத்தின் தவறுகளுக்கு தப்பான புரிதலுக்கு ஒட்டுமொத்தமா பழி தீர்க்கும் வடிகாலாகவா தற்போதைய நம் வாழ்க்கை துணையை பார்க்கின்றனர் பெண்கள்…?? என்ற கேள்வி எழாமல் இல்லை.

************************************************************

“சுயமரியாதை வேற அகம்பாவம் வேற இங்க பலர் இதுக்கு வித்யாசம் தெரியாமல் திண்டாடிட்டு இருக்காங்க…

‘ஆண் பெண் இருவருமே எல்லா விஷயத்தையும் செய்திட முடியாது..’, 

‘என்னமோ இப்பதான்  பெண்களுக்கு பொறுப்பு என்ற ஒன்று புதிதாக உருவாக்க பட்டது போல பார்க்குறீங்களே நிஜத்துல பெண்களுக்கு  மட்டும் இல்ல ஆண்களுக்கும் பொறுப்பு என்பது காலம்காலமாக உண்டு.., வேலை இடத்தில் ஏற்படக்கூடிய அழுத்தம், போட்டி, தகுதி நிர்ணயம், தன்னை தக்க வைத்து கொள்ளும் முனைப்பு, மனைவி தேவைகளை பூர்த்தி செய்வது, பெற்றோரை கவனித்து கொள்ளுதல்,  குழந்தைகளுக்கான கடமைகள்ன்னு அவங்களுக்கு பொறுப்பு உண்டு அதை ஏற்று குடும்பத்தை நடத்திய ஆண்களும் அவர்களுக்கு துணை நின்ற பெண்களும் இங்கு ஏராளம்’.

‘அதே சமயம் இப்போ இருக்க ஆண்கள் பொறுப்பு இல்லாமல் இருக்க பல நேரம் காரணமாகி போவதும் பெண்கள் தான் .., பொருளாதார சுதந்திரத்தில் தொடங்கி எல்லாவிதமான சுதந்திரமும் கிடைக்க பெற்றிருக்கும் காலகட்டத்தில் என்னை பார்த்து கொள்ள எனக்கு தெரியும், நீ என்ன என்னை பாதுகாப்பது..??” என்ற பெண்களின் கேள்வியில் ஆண்களின் பொறுப்பு அடிபட்டு போகிறது.., பொறுப்பும் கடமையும் இல்லாத உறவு எப்படி நீடிக்கும்..?? என்றாள் ஆராதனா.

‘நமக்கு பிடிச்சவங்க கிட்ட யார் நமக்கு நெருக்கம்ன்னு நினைக்கிறோமோ அங்க நம்மையும் அறியாம ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும்… சரியா சொல்லனும்ன்னா ஒரு தாய்க்கு தன் குழந்தை மீதான ஆதிக்கம் எப்படி அதன் நலனை, நன்மையை மட்டுமே பிரதானபடுத்த கூடியதோ அதுபோல தான் ஒரு கணவன் தன் மனைவி மீதோ அல்லது மனைவி கணவன் மீதோ செலுத்தும் ஆதிக்கம்… இங்கு அது ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ கிடையாது அன்பின் மிகுதியால் ஏற்ப்படும் ஆதிக்கம்’.

“அன்பின் ஆதிக்கம் வேறு அடிமைத்தனம் வேறு இந்த வித்யாசம் பலருக்கு இங்க புரியறதில்லை”.

‘எப்போ நம் துணையை தாண்டி மத்தவங்க நம்ம அழகை புகழனும்ன்னு நினைக்கிறோமோ எப்போ சோஷியில் மீடியா லைக்ஸ் நோக்கி நம்ம மனம் செல்லுதோ அப்போ கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் உண்டாகுது.. பொறுப்பு கடமை இல்லாத கணவன் மனைவிக்கு நடுவுல ஒருவிதமான வெறுமை உண்டாகுது அதனால் மனசிக்கல்கள்,அழுத்தம் அதிகரித்து குடும்பத்தின் ஒற்றுமை சீர்குலைந்து என்று எப்படி பார்த்தாலும் அதிகமான பாதிப்பு மனஉளைச்சல் பெண்களுக்கு தான் …’

இப்படி கணவன் மனைவியின் இணக்கமற்ற நிலையால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளே..!!

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் அதனால் புதிது புதிதாக முளைத்திருக்கும் ஆப்ஸ்களும் பெரும்பான்மையான நம் நேரத்தை விரையமாக்குவதோடு விழுங்கவும் செய்து விடுகிறது… படிக்கும் பிள்ளைகளின் கைகளில் தவழும் கைபேசி அவர்களின் நேரத்தை, திறனை, ஆக்கசக்தியை, ஆளுமையை திருடி சத்தமே இல்லாமல் அவர்களை அடிமையாக்கி கொண்டிருக்கிறது இந்நிலை நீடித்தால்  நிச்சயம் ஆரோக்கியமான சமூகம் உருவாகாது.

முன்னாடி காலத்துல பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் இப்படி பேச, இதை செய்ய என்ற கட்டுபாடுகளும் நாலு பேர் என்ன சொல்வாங்க என் வாழ்க்கையை நான் வாழாம நாலு பேருக்காக பயந்து வாழனுமா அடுத்தவங்க என்ன சொல்லன்னு சொல்லிட்டு தனி மனித சுதந்திரம் பத்தி பேசினோம் ஆனா கொஞ்சம் சிந்திச்சி பார்த்தா இப்பவும் பெண்கள் எப்படி இருக்கணும் என்பதை நாலு பேர் தான் தீர்மானிக்கிறாங்க என்ன ஒன்னு முன்ன நம்ம அக்கம் பக்கம், சொந்தபந்தமா இருந்தது ஆனா இப்போ அது சமூக வலைதளமா உருமாறி இருக்கு அதை நாம புரிஞ்சிக்கணும்”

‘பெண் இப்படி தான்  இருக்கணும், ஆண் துணை தேவை இல்ல, போல்டா இரு, சுதந்திரமா இரு   சுயமா சிந்திக்கனும்ன்னு சொல்லிட்டு யாரையும் சிந்திக்க விடாமல் சமூக வலைத்தளங்கள் அவங்க மேல ஆதிக்கம் செலுத்துது… புரிதலும் பக்குவமும் இல்லாத பெண்கள் இதனால் கவரப்பட்டு தங்கள் வாழ்வை சிக்கலாக்கி குடும்பத்தினருக்கும் நிம்மதி இல்லாமல் செய்து அதிகமாக பாதிக்கப்பட்டு இறுதியில் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறாங்க’.

இது எல்லாம் விட அதிகமாக கவனிக்க வேண்டிய விஷயம் மனித உணர்வு..!! அது அன்போ அரவணைப்போ, சிரிப்போ அழுகையோ , கோபமோ தாபமோ எல்லாமே இயற்கையா இருக்கணும் ஆனா கொஞ்சம் உற்று பார்த்தா அவையாவும் செயற்கையாகிட்டு வருது… அதற்கு காரணமும் சமூக வலைதளமே..!!

இது நாம் விழித்து கொள்ள வேண்டிய தருணம்..!!

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, மாமான்னு எல்லா உறவுகளுடனும் மனம் விட்டு பேசி சிரிக்கனுமே தவிர கைபேசியை ஓட விட்டு செய்ய கூடாது.

‘மெல்ல மெல்ல நிஜமும் நடிப்பாகி கொண்டிருக்கிறது சிந்தித்து செயலாற்றுங்கள்..’, என்று ஆராதனா வேதனையுடன் முடிக்க,

அவளை தொடர்ந்த யாழி, பெண் என்பவள் மாபெரும் சக்தி..!! ஆக்கவும் அழிக்கவும் வல்லவள்..!! ஆனால் இங்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில் பெருகிவரும் ஆண்களின் வக்கிர மனோபாவத்தில் சிறுக சிறுக பெண் சக்தி தன் பலம் குறித்த புரிதல் இல்லாமல் அழிவு பாதையில் பயணிக்கிறதோ..’ என்ற கேள்வி எழாமல் இல்லை என்று வலி மிகுந்த குரலில் கூறியவள் தொடர்ந்து, 

 இந்த தலைப்பில் பேசினால் பேசிக்கொண்டே போகலாம், முடிவென்பதே இல்லை அந்த அளவிற்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியா மாற்றங்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டே செல்கிறது இறுதியாக நாம் உணர வேண்டியது இது தான்..,

‘The girls are getting exploited in the name of freedom day by day and its high time to self analyse and evaluate ourself… kindly give importance to education..!! fun and entertainment is not the only life…  social media is the place to share informations for the needy and not to expose your personal stuffs… personal is always personal and should be treasured…  value your family first !! trust your parents  more than anyone else…’ என்று யாழி கூற,

அவளை தொடர்ந்த ஆராதனா, ‘அதை விட முக்கியமா கேரியர்ல ஜெயிக்கிறோம்ன்னு சொல்லிட்டு வாழ்க்கையை கோட்டை விடுற முட்டாள்தனத்தை யாரும் செய்திடாதீங்க’ என்று கூறி வீடியோவை முடித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!