ராகம் – 25
யாழியின் தோழிகள் வெளியேறவும் அறையினுள் வந்த அதிர்துடியன் , ‘என்னடி இது பாரபட்சமே இல்லாம எல்லாரையும் வச்சு விளாசிட்ட பாவம் ஒரு பொண்ணு அழுதுட்டே போச்சு’
‘அழுதா அழுதுட்டு போகட்டும் அது பத்தி எனக்கென்ன கவலை’ என்று யாழி இதழ்களை சுழிக்க, அதில் சிக்கி திளைக்க துடித்த மனதை கட்டுபடுத்தி கொண்டு அவளிடம்..,
‘என்னடி பேசுற அவங்க உன்னோட பிரெண்ட்ஸ்…’,
Advertisement
“பிரெண்ட்ஸா இருந்தா அதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா…?? அது எப்படி அவ என் புருஷனை சைட் அடிப்பேன் உங்களை நெனச்சு தூக்கம் வரலைன்னு என்கிட்டேயே சொல்லுவா..?? இது என்ன மாதிரி மனநிலை..?? இப்படியே போனா உறவுகளுக்கான வரைமுறையும், மரியாதையும் இல்லாம போயிடுமேங்க.., இப்படி பட்ட மனகட்டுப்பாடு இல்லாத ஆட்களால தான் ஒவ்வொரு உறவுக்கும் இடையிலான அழகியல் குறைஞ்சு இல்லீகல் அப்பேர், எக்ஸ்ட்ரா மேரிட்டல் அப்பேர் அது சார்ந்த குற்றங்கள் எல்லாம் அதிகரிக்குது”
‘எங்க இல்லன்னு நீங்க சொல்லுங்களேன் பார்ப்போம்” என்று அவனை கேட்க,
‘நான் என்னடி சொல்ல..?? வருங்கால கலெக்டர் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும் நீ சொல்லு நான் கேட்கிறேன்…’
Advertisement
யாழியோ உடனே அவனை கட்டிக்கொண்டு, ‘நீங்க எனக்கு மட்டும் தான் யாரும் உங்களை பார்க்கிறதை என்னால அனுமதிக்க முடியாது’ என்றிட விரிந்த புன்னகையோடு அவனும் அவளை கட்டிக்கொள்ள,
Advertisement
மெல்லிய குரலில் யாழி ‘சாரிங்க’ என்றாள்,
‘எதுக்குடி சாரி’ என்று அவள் தலையில் நாடி பதித்து அவன் கேட்க,
‘எல்லாத்துக்கும்…’ என்று அவள் கூறும் போதே கதவு தட்டப்பட வெளியில் சுகமதி தான் இருவருக்குமான சிற்றுண்டியும் காபியுமாக நின்றிருந்தார்.
Advertisement
‘தேங்க்ஸ்ம்மா’ என்று வாங்கி கொண்டு வந்தவள் அவனிடம் கொடுக்கவும் வாங்கி கொண்டு ‘எதுக்குடி சாரி’ என்றான் மீண்டும்,
‘இது வரை நான் பண்ணின தப்பு எல்லாத்துக்கும் தான் ஆனா அதை விட முக்கியமா..’ என்றவளின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க யாழியோ பதிலின்றி தயக்கத்துடன் கோப்பையை வருடி கொடுத்து கொண்டிருந்தாள்.
‘சொல்லு யாழி அப்படி என்ன முக்கியமா..??’ என்றான் கட்லெட்டை அவளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே,
‘அது.. அது வந்து அன்னிக்கு சாருக்கா ஒரு விஷயம் சொன்னாங்க ..??’
‘சாருவா..?? என்றவனின் புருவ மத்தி முடிச்சிட,
‘என்ன..??’
‘அன்னைக்கு பேசிட்டு இருந்தப்போ நான் நல்ல மருமகள் மட்டும் இல்லை நல்ல வைப்பும் தான்னு சொன்னாங்க ஆனா அ..து… நிஜமில்..லை தானே..??’ என்று குனிந்து கோப்பையை பார்த்துக்கொண்டே அவள் கேட்க,
‘என்னடி இது..?? ஏன் அப்படி சொல்ற..??’ என்று யாழி என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் அவளை பார்த்தான்.
விம்மும் மனதுடன் மேலிதழை பற்களால் கடித்து தன் கண்ணீரை கட்டுபடுத்தி, “இல்.. இல்லைங்க நிஜமாவே நான் நல்.. நல்ல வைப் இல்ல, என.. எனக்கு இப்போ அது புரியுது நமக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகபோகுது ஆனா ஒரு… ஒரு.. வைப்பா நான்…” என்று ஆரம்பித்தவளுக்கு காதலிக்கும் போதே அல்லது திருமணத்திற்கு முன்பே அத்துமீறும் ஆண்களுக்கிடையில் கொள்ளை காதலையும் உயிர் நேசத்தை கொண்டிருப்பவனின் விலகல் தனக்காகவே என்பது புரியாமல் போகுமா என்ன…??
‘ஆனால் தனக்காகவே தான் பொய்யாக கொண்ட ஒரு லட்சியத்தை மெய்பிக்க வேண்டி தள்ளி நிற்ப்பவனுக்கு அவள் நியாயம் செய்யவில்லையோ என்ற உறுத்தல் சில நாட்களாகவே எழுந்து அவளை வதைத்து கொண்டிருந்தது..’,
அவனை சந்தித்த நாளில் இருந்தே அவள் மீதான காதலை அவன் வெளிபடுத்திய தருணங்கள் எல்லாம் பெண் மனதில் அவ்வப்போது ஊர்கோலம் நடத்துகையில் எப்படி அவனிடம் இதை பற்றி கேட்பது என்று நிஜமாகவே அலமலந்து போனாள் பாவையவள்.
அதே சமயம் இனியும் அவள் கொள்ளும் தாமதமே இருவருக்கிடையில் நிரந்தர இடைவெளியை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சத்தை ஒருபுறம் அதிகரித்து இருந்தது என்றால் இல்லை அப்படி கிடையாது என்று அதற்கு நிகரான உறுதியை, தைரியத்தை அவள் உணர்ந்திருந்த அவன் காதலே அவளுக்கு கொடுத்திருந்தது.
அதிர்துடியன் அவளை நெற்றி சுருங்க பார்த்து கொண்டிருப்பதை கண்டவள் கோப்பையை கீழே வைத்துவிட்டு சட்டென பாய்ந்து அவனை அணைத்துக்கொண்டு, ‘சொல்லுங்க உங்களை நான் ரொம்ப கஷ்டபடுத்துறேனா..??’ என்று கேட்ட மனைவியின் அணைப்பு இறுகிக்கொண்டே போக,
அதிர்துடியனும் மனைவியை புரிந்தவனாக, ‘யாழி’ என்று அவள் முகம் நிமிர்த்தி, ‘இன்னும் மூணு நாள் தான் இருக்கு ப்ரிலிம்ஸ்க்கு கண்டதையும் யோசிக்காம அமைதியா போய் ப்ரிபேர் பண்ணு’ என்றான்.
‘இல்லங்க எனக்கே என்னை பிடிக்கலை..நான் உங்களுக்கு…’ என்று தவிப்போடு அவனை பார்க்க,
நொடியும் தாமதிக்காமல் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், ‘உனக்கே உன்னை பிடிக்காம போனாலும் எனக்கு உன்னை எப்பவுமே பிடிக்கும்டி’ என்று படபடத்த அவள் இமைகளில் முத்தமிட்டவன் விழிகளோ நாசியை அலங்கரித்த மூக்குத்தியில் நிலைக்க அதனோடு சேர்ந்து முன்னேற துடித்த மனதையும் கட்டுபடுத்தி கொண்டு மனைவியிடம்,
‘இதோ பார் இத்தனை நாள் நான் மட்டும் தான் என் பொண்டாட்டியை தேடினேன் ஆனா இப்போ அவளும் என்னை தேடுறதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் அதையெல்லாம் விட இப்போ எக்ஸாம் முக்கியம் எந்த டீவியேஷனும் இருக்க கூடாது.., சோ இதுக்கு மேல எதுவும் பேசாம அமைதியா போய் படி’ என்றிட,
அவன் வார்த்தைகளில் ஏனோ யாழிக்கு அவனை சீண்ட தோன்றிட ‘படிக்காட்டி என்ன பண்ணுவீங்களாம்..??’ என்று சுழிந்த புருவங்களுடன் அவனை பார்க்க..,
அதிர்துடியனோ துடித்து கொண்டிருந்த அவள் இதழ்களை இருவிரல்களால் பற்றியவன் ‘இப்படியே பேசிட்டு இருந்த கடிச்சி வச்சிடுவேன் போடி’ என்று எச்சரிக்கையுடன் இதழ்களை விடுவித்தான்.
புன்னகையுடன் எக்கி அவன் புருவதழும்பில் முத்தமிட்ட யாழி அவன் முகத்தை பற்றி இரு கன்னங்களிலும் மாறி மாறி அழுத்தமாக இதழ் பதித்து அவன் திகைத்து நிற்கும் போதே புத்தகத்தோடு வேகமாக வெளியேறி இருந்தாள்.
**********************************************
அன்று யாழி ஆரு இருவரும் ப்ரீலிம்ஸ் தேர்வுகளை மிக சிறப்பாக முடித்து அடுத்து மெயின்ஸ்க்கான தயாரிப்பை வீடு வரும் வழியிலேயே விவாதித்து கொண்டு வர, வழியில் உணவு விடுதியில் நிறுத்தி அவர்களோடு உணவை முடித்தவன் வீடு வந்து சேர்ந்திருந்தான்.
முக்கியமான ஆர்டர் அனுப்ப வேண்டி உடனே பேக்டரிக்கு கிளம்பி சென்ற அதிர்துடியன் முன்பு வந்து நின்றான் விஷ்ணு.
என்னோட எக்ஸாம் ரிசல்ட் என்று அவனிடம் தன்னுடைய தேர்வு முடிவுகளை கொடுத்தவன் ‘சொன்ன மாதிரியே எல்லா பேப்பர்ஸும் க்ளியர் பண்ணிட்டேன் சார்’ என்றான்.
அவன் மார்க்ஷீட்டை பார்த்தவன், ‘அடுத்து என்ன பண்ண போ..??’ என்று தன் கேள்வியின் முடிக்கும் முன்னமே,
“எங்க அப்பாவை ரிலீப் பண்ணிடுங்க சார் இனி நான் அவரோட இடத்துல இருந்து வேலை பார்க்கிறேன்….” என்றான்.
‘வாட் …?? என்ன உளர்ற..??’
‘உளறலை நிஜமா தான் சொல்றேன்.., நீங்க தானே அன்னைக்கு எனக்கு விருப்பம் இருந்தா இங்கேயே கண்டினியு பண்ணலாம் சொன்னீங்க..?? இப்போ எனக்கு இங்க இருக்றதுல எந்த பிரச்னையும் இல்ல ஆனா எங்க அப்பா இங்க இருக்க வேண்டாம் அவருக்கு ரெஸ்ட் வேணும் அவரை விட்டுடுங்க’ என்று தெளிவாக கூற,
‘இது என்னடா புது சிக்கல்’ என்பதாக அவனை பார்த்த அதிர்த்துடியன்,
‘இதோ பார் விஷ்ணு என்னைக்கும் நான் என்னோட முடிவுகளை அடுத்தவங்களை தீர்மானிக்க விட்டதில்லை எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கு தெரியும் அதை நீ சொல்ல கூடாது, உங்க அப்பா எக்ஸ்பீரியன்ஸ்ட் பர்சன் அவர் தான் வேணும்ன்னு கேட்டு எங்க அப்பா கிட்ட இருந்து கூட்டிட்டு வந்திருக்கேன் நீ சொல்லி உனக்காக எல்லாம் அப்படி ஈசியா அவரை அனுப்ப முடியாது போ.., போய் படிக்கிற வேலையை பாரு நாளையில இருந்து நீ இங்க வரவேண்டாம்’ என்றான் கடுமையான குரலில்.
‘முடியாது சார் எங்க அப்பா…’
‘டேய் அதான் சொல்றேன்ல கிளம்புடா..’ என்று அவன் குரல் உயர்த்த
‘அப்போ என்னோட முடிவுகளை எடுக்க நீங்க யார்..?? அப்படி எல்லாம் நீங்க சொல்லி நான் கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை’
‘ஓஒ..’ என்ற புருவதூக்கல் மட்டுமே அவனிடம்
‘ஆமா சார் நீங்க சொல்றதை கேட்கலைன்னா அதிகபட்சம் எங்க அக்காவை டிவோர்ஸ் பண்றேன் சொல்லுவீங்க அதானே..??’ என்றிட,
‘இல்ல’ என்றான் அதிர்துடியன்
‘இல்.. இல்லையா..?? அப்…’
‘டிவோர்ஸ் பண்ண மாட்டேன் ஆனா…’ என்று தன் கைபேசியை எடுத்து குறிப்பிட்ட காணொளியை திறந்தவன் அதை விஷ்ணுவிடம் காட்டி ‘இதை பார்’ என்றான்.
ஆனால் கைபேசியை வாங்கி பார்த்த மறுநொடியே விழிகள் தெறிக்க பதறிப்போய் அதை விஷ்ணு தவறவிட அதிர் தான் பத்திரமாக பிடித்து பக்கம் வைத்திருந்தான்..
‘என்ன பார்த்துட்டியா..?? இல்ல இன்னொரு முறை போட்டு காட்டட்டா’
‘சா… சார்…’ என்றவனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
‘அழாம பேசு’ என்றவன் தண்ணீரை அவன் முன் நீட்ட,
அதை கூட உணர முடியாதளவு திகைத்திருந்தவன், ‘சார் ப்ளீஸ் என்.. என் அக்கா அப்படி இல்ல இது… இது யாரோ தப்ப.. தப்பா சார்’ என்றவன் உடைந்து போய் இன்னுமே கதற தொடங்கி இருந்தான்.
‘ஸ்டாப் க்ரையிங் விஷ்ணு’ என்று அதிர் அதட்ட அவன் அழுகை மெல்ல மெல்ல குறைந்தது, அவன் தன்னிலை திரும்பவும் மீண்டும் தண்ணீரை அவன் முன் நீட்ட இப்போது மறுக்காமல் வாங்கி குடித்தவன், ‘ப்ளீஸ் சார் நீங்க எது சொன்னாலும் செய்யறேன் ஆனா என் அக்காவை…அவ… அவ இப்படி இல்… இத்.. இது யா..’
‘ஷட் அப் விஷ்ணு’ என்று அவன் கர்ஜிக்கவும் தான் தன் உளறலை நிறுத்தி இருந்தான் விஷ்ணு.
‘அதில்லை சார் …’
‘உன்னை வாயை மூட சொன்னேன்’ என்றவன் சீறவும் தான் விஷ்ணு அமைதியானான்.
‘ஏன்டா என் பொண்டாட்டிக்கு சர்டிபிகேட் கொடுக்க நீ யாரு..?? என்று விழிகள் சிவந்தவன் உனக்கு நிஜமாவே இப்போ நீ பார்த்த வீடியோ எங்க எப்ப எடுத்ததுன்னு நியாபகம் இல்லையா..?? என்று அதிர் கேட்க, ‘இல்லை’ என்று தலையசைத்தான்.
இது அன்னைக்கு ஆத்துல யாழி தவறி விழுந்தப்போ அவளோட நான் கரை சேர்ந்த சில நிமிஷத்துக்குள்ள எடுக்கப்பட்ட வீடியோ அண்ட் போட்டோஸ் என்றான்.
‘என்…னது’ என்று அதை கேட்டு மேலும் திகைத்து தான் போனான் விஷ்ணு.
பின்னே அன்று உயிருக்கு போராடி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தன் தமக்கை மயக்கத்தில் இருந்த வீடியோவை அசிங்கமான பிஜிஎம் சேர்த்து தவறாக உலவ விட்டிருக்கும் கேடு கெட்ட ஜென்மங்களை என்னவென்று சொல்ல..??
‘அப்…புறம் எப்படி’ என்று இன்னுமே படபடப்பு குறையாமல் அவன் கேட்க,
பணம், கன்டென்ட், வைரல், விளம்பரம் இதெல்லாம் தான் உயிருக்கு போராடி, ஆபத்தான நிலையில மயங்கி போய் சுயநினைவு இல்லாத பெண்ணோட நிலையை கூட வியாபாரம் ஆக்கும் அவலம் நடக்கும் யுகத்தில் தான் நாம இருக்கோம் விஷ்ணு என்றிட அவனோ,
‘சார்.. ஆ.. ஆனா என் அக்..கா..’
‘ஏய் இடியட் அன்னைக்கு அவளை காப்பாத்தி கைக்கு கிடைச்ச போன் வரை தூக்கி எறிஞ்சவன் நான் என்கிட்டேயே நீ …’ என்று ஆரம்பித்தவன் தன்னை கட்டுபடுத்தி,
‘இதோ பார் இப்போ நான் இந்த வீடியோ உன்கிட்ட காட்டினது உன்னை மிரட்டவோ அடிபணிய வைக்கவோ இல்ல, உன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை உன்னோட அஜாக்கிரதை எங்க கொண்டு போய் நிறுத்தி இருக்குன்னு உனக்கு புரிய வைக்கவும் அடுத்து நீ என்ன பண்ண போற உன்னோட வாழ்க்கையை எதை நோக்கி நகர்த்த போறன்னு தெரிஞ்சிக்கவும் தான்’.
‘அப்போ உங்களு… உங்களுக்கு என் அக்காவை …’ என்று ஆரம்பிக்கவுமே,
‘அடிச்சேன்னா பல்லு மொத்தமும் உதிர்ந்திடும் வாயை மூடு..’ என்ற அவன் அதட்டலில் விஷ்ணுவின் வாய் அன்னிச்சையாக மூடிக்கொண்டது.
***************************************

