Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 7

 

 

அத்தியாயம்– 7:



Advertisement

 

நூற்றுக்கும் மேற்பட்ட டிரெய்னீஸ் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் …எல்லா சேவைகளும்.ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரே கேள்வி.. இங்கே நான் யாரை விடச் சிறந்தவன்/சிறந்தவள்?

டைரக்டர் ஆஃப் டிரெய்னிங், சுக்லா சார், மேடையில் நின்றார்.

Advertisement

“நாளை முதல் உங்கள் பிஸிக்கல் டிரெய்னிங். காலை ஐந்து மணிக்கு கிரவுண்டில் இருக்க வேண்டும். பங்ச்சுவாலிட்டி இங்கே மதிக்கப்படுகிறது… ரேங்கை விட அதிகமாக.”

Advertisement

ஒரு நொடி இடைவெளி.
“இந்த பேட்ச்சில் ஒருவர் மட்டும் தாமதமாக ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். மிஸ் மீரா ராஜன்,ஐ.ஏ.எஸ் .”
“கிவ் மீ எ ரிட்டன் எக்ஸ்பிளனேஷன் அண்ட் அப்பாலஜி ஃபார் தட்.”

Advertisement

நூறு தலைகள் திரும்பின. மீராவின் கன்னங்கள் சிவந்தன. ஆனால் முகம் கல்லானது. அவள் நிமிர்ந்து நின்றாள்.
“நோட்டட், சார்.”
வர்மன் அவளுக்கு அருகில் நின்றான். அவன் பேசவில்லை. ஆனால் அவன் இதழோரம் ஒரு மெல்லிய வளைவு …புன்னகையா? கிண்டலா?
“என்ன?” மீரா கீழ்க்குரலில் கேட்டாள்.
“ஒண்ணுல்ல..”அவன் முன்னே பார்த்தான்.
மீராவின் உள்ளே ஒரு நெருப்பு பற்றிக்கொண்டது!
“மிஸ்டர் வி.ஆர். வர்மன்.”
“சார்.”
“நேரம் என்ன?”
“ஐந்து மணி பத்து நிமிடம், சார்.”
“குதிரை ஏற்றப் பயிற்சி முடிந்து ஐந்து மணிக்கு நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும். பத்து நிமிடம் தாமதம். கம் ஆன்…இருபது புஷ்-அப்.”
“ஆமாம். பங்ச்சுவாலிட்டி ரேங்க்-ஐ விட முக்கியம்” அடிக்குரலில் கிசுகிசுத்தாள்.
வர்மன் ஒரு நொடி கூட தயங்கவில்லை. “யெஸ்,சார்”
முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
வரிசையில் நின்று நகர்ந்து, அந்த இருபது புஷ்-அப்களைக் கடகடவென எடுத்தான் வர்மன். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு விதமான கட்டுக்கோப்பான வேகம் இருந்தது.
தரையைத் தொட்டு எழும் ஒவ்வொரு முறையும், அவனது தோள்களில் இருந்த தசைகள் இறுகி, ஒரு சிலையினுடையது போல அசைவற்ற உறுதித்தன்மையைக் காட்டின.
நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகள், அவன் கண்ணிமைக்காமல் மேற்கொண்ட அந்தத் தீவிரத்தைக் கூட்டிக்காட்டின. அவனது அந்த ஒரு கொத்து முன்நெற்றி முடி வேறு அழகாய் வந்து வந்து விழுந்தது.
அவன் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு எழுந்தான். காதருகே மெல்லிய குரலில்….
“என்னோட இருபது புஷ்-அப்ஸை என்ஜாய் பண்ணதுக்கு நன்றி.”
மீராவுக்கு அய்யோ என்றிருந்தது… “நான் பார்க்கிறத எப்போ பார்த்தான்?”
அந்த கிசுகிசு … அந்த குரல் … காதில் இன்னும் தங்கியிருந்தது. அவள் அதை உதறிவிட முயன்றாள். “ஜாக்கிரதையாக இருக்கணும். இந்த ஆளு வேற மாதிரி.”
பிரேக் டைம்.
“டேய்!”
திடீரென்று ஒரு குரல். தமிழில். உரக்க!
மீரா திரும்பினாள்.
ஒரு பெண் நேராக அவளை நோக்கி வந்து, எதிர்பாராதவிதமாக அவளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.
மீரா பதற்றத்துடன் விலகினாள்.”என்ன… என்ன பண்றீங்க?!”
“தமிழ் பொண்ண பார்த்தா கட்டிப்பிடிக்கணும். அது என்  ரூல்.. நான் ரஞ்சனா ஐ.எஃப்.எஸ். சேலம்.”
அப்போது தூரத்தில் இருந்து ஒரு கம்பீரமான குரல் கேட்டது “ரஞ்சனா! எங்க  இருக்க?!”
ரஞ்சனா சட்டென்று திரும்பி, “இங்க!”என்று சத்தமாகப் பதிலளித்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு உயரமான பையன் கையில் இரண்டு கப்புகளுடன் நடந்து வந்தான். அவன் முகத்தில் ஒரு அப்பாவித்தனமான பாவம்.
“இவன் அர்ஜுன், ஐஆர்எஸ். கோவை. என் பேட்ச்-மேட். பாவம், இவனும் நம்ம ஆளு தான்,” என்று அவனை அறிமுகப்படுத்தினாள் ரஞ்சனா.
அர்ஜுன் மீராவிடம் கை நீட்டினான். “வணக்கம். இவளோட ரூல் என்னன்னு தெரியுமா … தமிழ் பொண்ணா இருந்தா கட்டிப்பிடிப்பாள், தமிழ் பையனா இருந்தா காபி வாங்கிட்டு வரச் சொல்வாள்.”
“நீ கம்ப்ளைன்ட் பண்றியா?” “இல்லம்மா.” அர்ஜுன் வளர்ந்த குழந்தை போல தெரிந்தான்… ரஞ்சனா கலகல பட்டாசாக இருந்தாள். மீராவுக்கு அவ்வளவு இலகுவாக இருந்தது அவர்களுடன் இருக்க.
அடுத்த நாள். மார்னிங் ரன். ஐந்து கிலோமீட்டர். அர்ஜுன் வேகம் குறைத்தான். “கோவையில இவ்வளவு ஏற்றம் இல்லை…” ரஞ்சனா அவனை தாண்டி ஓடினாள். “சேலத்துல மலையே இல்லை. ஆனா நான் ஓடுறேன்!”
“நீ ஓடல, பறக்கிற!”
மீரா அவர்களை கடக்க
“இந்தா போறா பாரு ரன்னிங் ரோபோட்”
“ஏய் பேசிட்டே ஓடுனா எக்ஸாஸ்ட் ஆயிடுவோம்.. வாங்க சீக்கிரம் முடிச்சிரலாம்…”. இப்படி அவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள் மீரா. வர்மனை எங்கும் காணவில்லை.. அப்பாடா என்று இருந்தது மீராவுக்கு. அவன் அருகில் வரும் போதெல்லாம் மூச்சில் ஏதோ கலப்பது போல … அவளுள் எதுவோ நிகழ்வதாக உணர்ந்தாள்.
அன்று அகாடமியின் பிரதான அரங்கில் கிரைசிஸ் மேனேஜ்மென்ட் சிமுலேஷன்’ (நெருக்கடி கால மேலாண்மை) வகுப்பு நடந்து கொண்டிருந்தது.ரஞ்சனா, மீரா, அர்ஜுன் நன்றாக ஒன்றி ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர்.
 நூற்றுக்கணக்கான டிரெய்னிகள் அமர்ந்திருந்த அந்தப்பெரிய ஹாலில், வர்மன் கடைசி வரிசைக்குச் சற்று முன்னால், யாருடைய கண்ணிலும் படாதவாறு அமர்ந்திருந்தான்.
ஒரு கற்பனையான மாவட்டத்தின் வரைபடம் திரையில் காட்டப்பட்டது.
இது ஒரு ‘சிங்கிள் வில்லேஜ்’. கிராமத்தைச் சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் முக்கிய இடங்கள் உள்ளன. வடக்கில்ஒரு பெரிய அரசு மருத்துவமனை, தெற்கில் ஒரு பழமையான மாரியம்மன் கோவில் – இன்று அங்கு திருவிழா, ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். கிழக்கில்  ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் மற்றும் சினிமா தியேட்டர் – வார இறுதி என்பதால் கூட்டம் அதிகம். மேற்கில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி – நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கே தங்கியுள்ளனர்.
ஒரு பக்கமிருந்து திடீரென  பெருவெள்ளம். கிராமத்தை நோக்கி வருகிறது வெள்ள நீர்.. உங்களிடம் இருப்பது குறைந்தபட்ச வளங்கள் மட்டுமே. இரண்டு மீட்புப் படகுகள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே. யாரை முதலில் காப்பாற்றுவீர்கள்? உங்கள் முன்னுரிமை என்ன?”
அரங்கமே நிசப்தமானது. ரஞ்சனா மெதுவாக அர்ஜுனிடம் முணுமுணுத்தாள், “இது என்னடா தர்மசங்கடமான கேள்வி? எல்லாரும் மனுஷங்க தானே!”
முதலில் அர்ஜுன் எழுந்து நின்றான். அவனது கண்கள் எண்களைக் கணக்கிட்டன. “சார், நான் ‘காஸ்ட்-பெனிபிட் அனாலிசிஸ்’படி பார்ப்பேன். மாலில் 2000 பேர், தியேட்டரில் 500 பேர், பள்ளியில் 300 பேர், கோவிலில் 1000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்… அதிக எண்ணிக்கையிலான மக்களைக் ககாப்பாற்றுவது தான் லாபம். அதனால், இரண்டு படகுகளையும் மாலுக்கு அனுப்பி ஒரே நேரத்தில் 100 பேரை ஏற்றலாம். ஹெலிகாப்டரை தியேட்டர் மொட்டை மாடிக்கு அனுப்பலாம். குறைந்த நேரத்தில் அதிக உயிர்களைக் காக்க இதுவே சிறந்த வழி.”
அடுத்து ரஞ்சனா (IFS) தன் கருத்தை கூறினாள். “சார், மாலில் இருப்பவர்கள் படித்தவர்கள், வசதியுள்ளவர்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு முறைகள் தெரியும். ஆனால் கோவிலில் இருப்பவர்கள் கிராமத்து மக்கள். வெள்ளத்தைக் கண்டால் அவர்கள் பீதியில் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொள்வார்கள். அதனால் படகுகளைக் கோவிலுக்கு அனுப்பி அந்தப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். ஹெலிகாப்டரை பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம். குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்கால வளம்.
மீரா மேடைக்குச் சென்று வரைபடத்தை ஒருமுறை பெரிதுபடுத்தினாள்.
“சார், நான் இந்த இடத்தின் ‘நிலவியல் அமைப்பு’ மற்றும் ‘நீர் உந்து விசை’ இரண்டையும் கவனிக்கிறேன்.”
“இந்த மேப்பில் ஆற்றின் வளைவு வடக்கு  நோக்கித் திரும்புகிறது. புவியியல் விதிப்படி, ஆற்று வளைவின் வெளிப்பகுதியில் தான் நீரின் வேகம் மற்றும் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். இங்கேதான் மருத்துவமனை இருக்கிறது.  கட்டிடம் இடியும் வாய்ப்பு 90%. அதனால் படகுகளை அங்கே அனுப்பி அசைய முடியாத நோயாளிகளை மீட்பது தான் முதல் கடமை.”
அடுத்து, பள்ளி இருக்கும் மேற்குப்பகுதி உண்மையில் ஒரு ‘ரிட்ஜ்’ (Ridge) போன்ற மேடான பகுதி.. வெள்ள நீர் அங்கே ஏற இன்னும் 8 மணி நேரமாகும். அதனால் ஹெலிகாப்டரை அங்கே வீணாக்காமல், கோவிலில் சிக்கியுள்ள மக்களுக்காகப் பயன்படுத்தலாம். ஏனெனில் அங்கே மக்கள் அதிகம், இடம் குறுகியது. மேலிருந்து கயிறு மூலம் மீட்பது அல்லது உணவுப் பொட்டலங்கள் வழங்குவது அங்கிருக்கும் பீதியைக் குறைக்கும்.”
அவள் சொல்லச் சொல்ல, அங்கே வர்மனின் மனதிற்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. அவன் தன் டைரியில் ஏற்கனவே குறித்து வைத்திருந்த அதே பாயிண்ட்டுகள்! அதே லாஜிக்! அதே புவியியல் ஆய்வு!
வர்மன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அவனது இதழின் ஓரத்தில் ஒரு மெல்லிய வளைவு தோன்றியது.
“என்னடா இது… இவ என்ன நான் நினைச்சதையே கஅப்படியே அணுவணுவா பிடிச்சு ஆன்சரா சொல்றா? ஒருவேளை ‘வேவ் லென்த்’ இப்படித்தான் மேட்ச் ஆகுமோ?”
“கடைசியாக மால். இது தாழ்வான பகுதிதான், ஆனால் இது ஒரு கான்கிரீட் கட்டிடம். மக்கள் மேல் தளத்திற்குச் சென்றால் 24 மணி நேரம் கதாக்குப்பிடிக்க முடியும். மீட்புப் படகுகள் மருத்துவமனைப் பணியை முடித்த பிறகு இங்கேவரலாம். இதுதான் உயிர்ப்பலியைப் பூஜ்யமாககும் ‘ஸ்டிரேட்டஜிக் டிப்ளாய்மென்ட்’.”
மேடையில் மீரா தன் விளக்கத்தை முடித்ததும், அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. சுக்லா சார் அவளைப் வெகுவாகப் பாராட்டினார். “பென்டாஸ்டிக் அனாலிசிஸ், மீரா! புவியியல் அறிவை ஒரு நெருக்கடி காலத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நீயே உதாரணம்.”
வர்மன்? அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“புத்தியும், அழகும், மின்னல் வேகக் கராத்தேயும்னு…மொத்தமா கலந்து கட்டி ஒரு கலவையா வந்து நிக்கிறாளே! வர்மா… ஜாக்கிரதை… நீ விழ மாட்டேன்னு சபதம் எடுத்தவன், இப்போ அவளோட ஒவ்வொரு வார்த்தையிலயும் மெல்ல மெல்ல சரிஞ்சுட்டு இருக்கடா!”
மேடையிலிருந்து கீழே இறங்கிய மீராவை ரஞ்சனா  தழுவிக்கொண்டாள். “மீரா! நீ கெத்துடி!”
அர்ஜுன் சிரித்துக்கொண்டே, ” ஐஆர்எஸ்-காரன் நான் கூட இவ்வளவு துல்லியமா கணக்கு போடல, ஆனா மீரா… நீ ‘ஜியாகிரபி’யை வச்சு ‘எகனாமிக்ஸ்’ஸையே காலி பண்ணிட்ட!”
மீரா கூட்டத்தைப் பார்த்தாள். வர்மன் அப்போதுதான் எழுந்து மெதுவாகப் பின்வாசல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்.
அன்று முழுவதும் மீரா வர்மனைப் பார்க்கவில்லை…வர்மனும்..!  வாயாடி ரஞ்சனாவும் கல்மிஷம் இல்லா அர்ஜுனும் மீராவுக்கு மிக பிடித்த நண்பர்களாயினர்.
இன்னும் இரண்டு நாட்கள் கடக்க, மசூரியின் அந்தப் பனி படர்ந்த விடியல், அகாடமியின் குதிரையேற்ற மைதானத்தில் ஒருவித பதற்றத்துடன் விடிந்தது.
மீராவுக்கு ஒதுக்கப்பட்ட குதிரையின் பெயர் ‘ஜுவாலா’. பெயருக்கேற்றார் போல அது ஒரு கட்டுக்கடங்காத நெருப்புப் பிழம்பு. அதன் கண்கள் மிரட்சியுடனும், கால்கள் தரையை உதைத்துக்கொண்டும் இருந்தன. மீரா ஜுவாலாவை நெருங்க முயன்றபோது, அது பலமாகப் கனைத்துவிட்டுத் தலையை உதறியது.
மீரா சட்டென்று இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள். அவளது நெற்றியில் வியர்வை அரும்பியது.
“என்ன ஐ.ஏ.எஸ் மேடம்… கராத்தே பிளாக் எல்லாம் இங்க வேலை செய்யாதோ?” – பின்னாலிருந்து வர்மனின் குரல்.
அவன் தன் குதிரையான ‘பிருத்வி’யை லாவகமாகத் தட்டிக்கொடுத்துக் ககொண்டே அவளருகில் வந்தான். வர்மன் ஏற்கனவே குதிரையேற்றத்தில் கைதேர்ந்தவன் போலத் தெரிந்தான்.
“இங்க பாரு மீரா… குதிரை உன் பயத்தை மோப்பம் பிடிக்கும். நீ பதற்றமானா அது உன்னை விட அதிகமா பயப்படும்,” என்றான் வர்மன், இம்முறை கிண்டல் இல்லாமல்.
“எனக்கு இது செட் ஆகாதுன்னு தோணுது வர்மன். இது ரொம்ப முரடா இருக்கு,” – மீரா முணுமுணுத்தாள்.
“முரட்டுத்தனத்தை அன்பால தான் ஜெயிக்கணும்.வா…” வர்மன் குதிரையிலிருந்து இறங்கி அவளருகில் வந்தான்.
வர்மனின் அருகாமையும், அவனது நிதானமான குரலும் மீராவின் பதற்றத்தைக் குறைத்தது. வேறு ஏதோ ஒன்றை கிளர்த்தியது… அவள் அதை ஆராயவில்லை!
மைதானத்தின் மறுமுனையில் ரஞ்சனாவும் அர்ஜுனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குதிரைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர்.
“டேய் அர்ஜுன்! குதிரை மேல ஏறுடான்னா…ஏன் அது காதுல போய் ஏதோ ஓதுற?” ரஞ்சனா கத்தினாள்.
அர்ஜுன் பயந்து போய் குதிரையின் கடிவாளத்தைப்பிடித்தபடி, “இல்ல ரஞ்சனா இந்த குதிரைக்கு ஹிந்தில சொன்னா தான் புரியும் போல.’சலோ… சலோ…’ன்னு சொல்லிப் பார்க்கிறேன், அசையவே மாட்டேங்குது!”
ரஞ்சனா நக்கலாகச் சிரித்தாள். “நீ ஐ.ஆர்.எஸ்-காரன் தானே? அதுக்கு எவ்வளவு வரி கட்டணும்னு ஒரு கணக்கு போட்டுச் சொல்லு…பயந்து போய் ஓடும் பாரு!”
அவள் சட்டென்று தன் குதிரை மேல் ஏறி அமர்ந்தாள்.”பாருடா சேலம் சிங்கம் எப்படிப் போகுதுன்னு!” என்று அவள் தட்டிவிட, குதிரை வேகமாக ஓடத் தொடங்கியது.
இங்கு வர்மன் டிப்ஸ் தந்து கொண்டிருந்தான்… “மூன்று விஷயம் தான் மீரா….முதல்ல அது கண்ணைப் பார்க்காதே. அதுக்கு உன் மேல நம்பிக்கை வரணும்.” அடுத்து வர்மன் மீராவின் கையைப் பற்றி மெதுவாக ஜுவாலாவின் கழுத்துப் பகுதிக்குக் கொண்டு சென்றான். “மெதுவா தடவிக் கொடு. உன் உள்ளங்கையோட சூடு அதுக்குத் தெரியணும். நீ அதுக்கு எதிரி இல்லைன்னு அது புரியணும். அப்புறம் “நீ மூச்சை இழுத்துப் பிடிச்சுட்டு நிக்காதே. ரிலாக்ஸா இரு. நீ நிதானமா இருந்தா அதுவும் அமைதியாகும்.”
மீரா மெதுவாக ஜுவாலாவின் பிடரியைத் தடவினாள். ஆச்சரியமாக, அந்த முரட்டுக் குதிரை அமைதியானது. வர்மன் அவளுக்கு அருகில் நின்று, அவள் குதிரை மீது ஏறுவதற்கு உதவி செய்தான்.
“இப்போ கடிவாளத்தை இறுக்கமா பிடிக்காதே…மென்மையா, அதே சமயம் உறுதியா இருக்கட்டும். ஜுவாலா இப்போ உன்னோட தோழி,” என்று அவன் சொல்ல, மீரா முதன்முறையாகக் குதிரையின் மேல் நிமிர்ந்து அமர்ந்தாள்.
பயிற்சி தொடங்கியது. மைதானத்தைச் சுற்றிமெதுவாக நடக்கத் தொடங்கிய ஜுவாலா, திடீரென்று வேகம் எடுத்தது. மீரா நிலைகுலைய, வர்மன் தன் குதிரையைத் தட்டிவிட்டு அவளுக்கு இணையாக ஓடி வந்தான்.
“பயப்படாதே மீரா! உன் உடலை குதிரையோட அசைவுக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கோ. ‘ரைஸ் அண்ட் ஃபால்’  – அந்த ரிதத்தை கவனி!”
வர்மனின் குரல் அவளுக்கு ஒரு மந்திரம்போல வேலை செய்தது. சில நிமிடங்களில் மீரா ஜுவாலாவுடன் ஒரு லயத்தைப் பிடித்தாள். காற்றின் வேகம் அவள் முகத்தில் அறைய, ஜுவாலாவின் முதுகில் அமர்ந்து பனிப்பாதையில் பறப்பது போல ஒரு உணர்வு!
பிருத்வியின் மேல் அமர்ந்து மீராவைக் கண்காணித்துக் கொண்டிருந்த வர்மனுக்குள் ஏதோ ஒன்று தாளம் தப்பியது. ஜுவாலாவை அடக்கி, அதன் வேகத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து மீரா ஓட்டிச் சென்ற விதம், அவளை ஒரு சாதாரணப்பெண்ணாக மட்டும் காட்டவில்லை… ஒரு சங்க கால தலைவியாகக் காட்டியது.
அவளது நீண்ட கூந்தல் பனிக்காற்றில் அலைபாய்ந்து, அவளது முகத்தை அவ்வப்போது மறைத்து விளையாடியது. அந்தப் பயிற்சி உடையில், குதிரையின் வேகத்திற்கு ஏற்ப அவளது உடல் அசைந்த விதம் வர்மனின் நெஞ்சுக்குள் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வீரமும் அழகும் ததும்பி திமிறுவதை அவன் கண்டான். அவளைத் தூரத்திலிருந்து பார்த்தபடியே,”அழகு டீ நீ…” என்று தனக்குள்ளேயே கொஞ்சிக் கொண்டான்.
ரஞ்சனா தன் குதிரையைத் தட்டி மெதுவாக வர்மன் அருகே வந்தாள். வர்மன் மீராவையே உறைந்து போய் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை.
“என்ன வர்மன் சார்… பார்வை எங்கேயோ’ஃபிக்ஸ்’ ஆகியிருக்கு போல? குதிரையைச் சொல்லல… ஜுவாலா மேல இருக்கிற உன்னோடஉஜாலாவைச் சொல்றேன்!” வர்மன் சமாளித்துக்கொண்டு சிரித்தான், “இதெல்லாம் ஜஸ்ட் மைக்ரோ அப்சர்வேஷன் தான், நம்ம ஃபீல்டுக்கு ரொம்ப தேவை பார்த்தீங்களா” என “ஆமாமா” என ரஞ்சனா சிரித்து நகர்ந்தாள்.
பயிற்சி முடிந்ததும், மீரா ஜுவாலாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். “தேங்க்ஸ் வர்மன். இன்னைக்கு நீ சொல்லிக்கொடுத்தது வெறும் குதிரையேற்றம் இல்லை… ஒரு அதிகாரியா எப்படிச் சூழ்நிலைகளைக் கையாளணும்னு சொல்லிக்கொடுத்திருக்க.”
வர்மன் ஒரு கள்ளச் சிரிப்புடன் சொன்னான்,”சரி… சரி… அடுத்து என்ன… ஒரு காபி…??. ஓகே ஓகே உங்க சமோசா கேங் கூடத்தான் போவீங்களோ….?? அந்த ஐ.ஆர்.எஸ் அர்ஜுன் வந்து உனக்குக் காபி கொடுப்பான். அதானே? அதை குடிச்சிட்டு ரோபோ மாதிரி கிளம்பு, பை!!” என்றபடி சென்று விட்டான்.
அன்று இரவு. லைப்ரரி படிகள்.
“ஏய் மீரா… அந்த ஐ.பி.எஸ் வர்மன் உன்னையே பார்க்கிறான்னு தெரியுமா?” “இல்லையே நான் பார்க்கவே இல்லையே.”
“நான் பார்த்தேன். டைனிங் ஹால்ல பார்த்தான். கிரவுண்டில் பார்த்தான். நீ கிளாஸ்ல அந்த கிரைசிஸ் மேனேஜ்மென்ட் ஆன்சர் பண்ணப்போ அவ்வளவு ஆர்வமா கிளாப் பண்ணான்… . இப்போ ஜுவாலால நீ பறக்கறப்போ அப்படியே அவன் கண்ல ஒரு 100 வாட்ஸ் பவர பார்த்தேன்… என்னடி நடக்குது..? சொல்லு டி சொல்லு”
மீரா எழுந்தாள். “குட் நைட்!” மீரா இருட்டில் மறைந்தாள்.
“அவன் பேர எடுத்தவுடனே…முகம் சிவந்துச்சு பார்த்தியா?” அர்ஜுன் யோசித்தான்.
 “குளிர்ல சிவக்கும்ல…” ரஞ்சனா அவன் தலையில் ஒரு மெல்லிய குட்டுகொடுத்தாள். “டேய் லூசு!
நீயெல்லாம் ஒரு ….! ஐ.ஆர்.எஸ்-காரன். எல்லாத்தையும் கால்குலேட் பண்ணுவான். இதை மட்டும் பபுரிஞ்சுக்க மாட்டான், தத்தி.”
அறை வந்து சேர்ந்து, தலை முதல் கால் வரை போர்வையை முழுதாய் போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள் மீரா. அப்போது, முகம் முழுதும் நிறைந்த புன்னகையுடன் அவள் முன் வந்து நின்றான் வர்மன். அப்பொழுது… திடீரென அவளறியாமலேயே அவளது முகத்தாடையைத் நிமிர்த்தி, அவள் விழிகளுக்குள் ஒரு கலப்பாய் வந்து நின்றது வேறொரு பால் முகம்! அந்தச் சின்னஞ்
சிறியவனின் முகத்தை அவள் தன் இரு கைகளாலும் ஏந்திக் கொண்டாள். அந்தப் பிம்பத்துடனேயே அவள் உறங்கியும் போனாள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!