Skip to content
Post Views: 371
ராம் வெட்ஸ் சீதா -11.2
“இந்தா டி ராதா என்ன ரொம்ப பொறுமையா நாயி நடக்கறப்போல சைக்கிளை மெரிக்குற, சீக்கிரமா வாடி, முதல் பாடமே அந்த சிடுமூஞ்சி கிளாஸ் டி இன்னக்கி, இப்போவே மணி எட்டு முப்பது ஆகிடுச்சு, ஆத்தி அடியேய் நான் பேசிட்டே இருக்கேன், நீ இப்போ வேகமா வரபோறியா,இல்லை பக்கத்துல வாய்க்கால் இருக்கு அதுல தள்ளிவுட்டுப்புட்டு நான் போயிடுவேன் சொல்லிட்டேன், ஒழுங்கா வேகமா மெரிச்சிகிட்டு வா டி மாட்டு வண்டி கணக்கா தள்ளிக்கிட்டு வரா “என்று தோழியை வசைபாடி கொண்டே களத்துமேட்டு பக்கம் வரும்போது ராம் நின்று இருப்பதை பார்த்தவள், உடனே ராதாவிடம் திரும்பி
Advertisement
“அடியேய் ராதா, அங்க பாரு டி அவன் நிக்கிறான், ஏன் டி அவன் மறுபடியும் மாங்காய் திருட வந்திருக்குறானோ, “என்றவளை தொடர்ந்து “அது ஒன்னுமில்ல டி அவன் நமக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பான், “என்றாள் ராதா..
“எதே அவன் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பானா, போ டி இவளே அவன் மாங்காய் திருட தான் குறியோடு அங்க நிக்குறான், சரி அவன் பாட்டுக்கு அங்கே நின்னிட்டு கிடக்கட்டும்,நம்ம வேகமா போவோம் வா டி “என்று கூறிக்கொண்டே வேகமாக சைக்கிளை மெரித்து கொண்டே ராமை பார்த்ததும் பார்க்காததும் போல் அவனை தாண்டி சென்ற போது “சீதா நில்லு நான் உங்ககிட்ட கொஞ்ச பேசணும், “என்று கூறிய ராமை பார்த்து திகைத்த முருகேசு அவனிடம் “அடேய் ராமு, அவகிட்ட உனக்கு என்ன பேச்சி வேண்டி கிடக்கு, நீ கூவுறதை கூட அவ காதுல வாங்கிட்டு நிற்காம போறா பாரு, வா டா ஒழுங்கா ஸ்கூலுக்கு போயி சேருவோம்.”என்று நல்ல நண்பனாய் கூறினான் முருகேசு.
Advertisement
Advertisement
நண்பனின் வார்த்தைகள் அவனின் செவியில் விழுந்தா தானே, அவனோ செல்லும் சீதாவை புன்னகையோடு பார்த்தான், சீதாவோ அவனை நொடிக்கொரு முறை திரும்பி பார்த்துக்கொண்டு சென்றாள்.
இப்படியே நாட்களின் விடியல் அழகாகவும், ராமும் சீதாவை பின் தொடர்ந்து முருகேசுவிடம் திட்டுவாங்குவதுமாய் நகர்ந்தது.
Advertisement
இதோ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவைடைத்து கோடை விடுமுறை விடப்பட்டது.
நடுவில் ராதாவின் திருமண ஏற்பாடுகள் விமரிசையாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு திடீரென்று வந்து நின்றார் திருநாவுக்கரசு.
அவரின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை போலும் அனைவரும் அதிர்ச்சி அடைத்தனர்.
ராதாவோ ஒரு படி மேலே சென்று அப்பா என்று அழைக்க, அவரும் அவளின் அப்பா என்ற சொல்லில் ஆனந்த கண்ணீரவிட்டார். ஒரே மகளை இழந்த பிறகு ராமேஸ்வரம் சென்றவர், அங்கு ஒரு கிராமத்தில் பண்ணையாரிடம் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல ஆசை இருந்ததால் உடனே கிளம்பி வந்து விட்டார்.
கணவர் வந்துவிட்டாரென்று செய்தி கோமளத்தில் செவியில் விழ அவரோ அடித்து பிடித்து சேலையை கூட ஒழுங்காக சரி செய்யாதது, ஓடிவர ஊர் ஆண்களின் ஓட்டு மொத்த பார்வையும் கோமளத்தின் மீதே விழுந்தது.
இதை ஏதும் அறியாத கோமளமோ ஓடிவந்து நின்றார் ராதாவின் இல்லத்திற்கு.
வாசலில் நின்று கணவர் எங்கிருக்கிறார் என்று உள்ளே எட்டி பார்த்து விட்டு “ஏனுங்க வெளிய வாங்க, கட்டுன பொண்டாட்டி இருக்கும் போது நீங்க ஏன் இங்க வரணும், வெளிய வாங்க, நான் கோமள வந்திருக்கேன், “என்று குரல் உள்ளே உணவு அருந்தி கொண்டிருந்த திருநாவுக்கரசின் செவியின் விழ அவரோ சாப்பாட்டிலே கண்ணாக இருந்தார். அவர் மனைவி கூவிய கூச்சலில் அக்கம் பக்கத்தினர் ராதாவின் வீட்டையே வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, கோமளமோ இது தான் சமயமென நினைத்து ” இந்தா டி சிவகாமி, உனக்கு தான் கட்டுனவன் இல்லைன்னு என் வூட்டுக்காரரை வளைச்சு மயங்கி முத்தனையில முடுச்சு வைச்சிட்டியா டி போசக்கெட்டவளே துத்து, நீயெல்லாம் ஒரு பொம்பள “என்று வார்த்தைகளால் மென்று துப்பியவரின் முதுகை பதம் பார்த்தது ஒரு சிறிய செங்கல்.
கோமளமும் முதுகில் எதோ ஒன்று விழுகிறதே என்று கையை முதுகில் வைத்து தேய்க்க அவரின் புடவையில் சிக்கியது அந்த கல், உடனே திரும்பி பார்க்க அங்கே கண்கள் சிவக்க நெற்றி புருவமெல்லாம் மேலோங்கி இருக்க, தாவணி பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகியும்,இரண்டு கைகளில் இன்னும் ரெண்டு செங்கல்களோடு கோவத்தின் காளி அவதாரமாக நின்றிருந்தாள் ராதா.
“அடிச்சேன் வையேன் பல்லெல்லாம் கழட்டி கீழ கொட்டிக்கும், என்ன நானும் வயசுக்கு மரியாதை கொடுக்கணும் ன்னு நினைச்சா, இப்படி கேவலமா பேசுவியா, இந்தா இங்க பாரு, வந்த வழியாவே ஓடி போயி மென்டலா இருக்கற உன் பையனுக்கு நல்ல வைத்தியம் பார்த்து நல்ல புத்தி சொல்லி கொடுக்கற வழியை பாரு, இனி ஒரு தரம் என் வூட்டு வாசல் படிய மெரிச்ச நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன், என்ன சொன்ன என் அம்மாவை, எங்க அம்மா அவங்களுக்கு தங்கச்சி முறை, அண்ணே அண்ணே ன்னு தான் கூப்பிடுவாங்க, ஆமா நீ ஏன் இப்போ அவங்களை தேடி வர, உனக்குத்தேன் கள்ளு விக்கிற ராசப்பன் கூட தகாத உறவு இருக்குனு ஊரே பேசிட்டு கிடக்கு, நீ என்னன்னே இங்க வந்து கத்தி கூச்சல் போட்டுக்கிட்டு கிடக்குற, உனக்கு ஊருல இருக்கறவங்களை வம்புக்கு இழுக்கலைன்னா ஒறக்கம் வராதோ, ப்பே “என்று அவரை நோக்கி கையை நீட்டி பேசிய ராதாவை ஆவென பார்த்து நின்றது ஊர் ஜனங்கள்.
ஊர் பார்வை முழுவதும் தன் பேத்தியின் மீதே இருக்க, பேச்சி கிழவியோ ராதாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாலும் இன்னும் வாசலிலே அதிர்ச்சி கலந்த கோவத்தோடு நின்றிருந்தார் கோமளம்.
“ஏங்க வெளிய வாங்க நான் உங்களை ஒரு தரம் பார்த்துட்டு போயிடறே, ஒரு சின்ன பொண்ணு என்னைய எதிர்த்து அசிங்கமா பேசிட்டு போறா, நீங்க உள்ள இருந்துகிட்டு அவ கூட கூத்தடிக்கறீங்க, இது உங்களுக்கே அசிங்கமா இல்லை, யோவ் ஒழுங்கா மரியாதையா வெளிய வா இல்லை நான் உள்ள வரவேண்டிருக்கும், வாயா வெளிய, கட்டுன பொண்டாட்டி ஒருத்தி குத்துக்கல்லாடம் இருக்குறா, உங்களுக்கு அடுத்தவ வூட்டு பொம்பளை கேட்குதோ “என்றதும் உள்ளே இருந்து தட்டு தடுமாறி ஆவேசமாக வெளியே ஓடிவந்தவர் கத்திக்கொண்டு இருந்த கோமளத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
கணவரது இந்த செயல் கோமளத்தை நிலை குனிய வைக்க, கன்னத்தை பிடித்து கொண்டு அவரருகில் நின்றுந்த சிவகாமியை முறைத்து பார்த்தார் கோமளம்.
ஊரே கோமளத்தை வாய் சாடையாக திட்ட, சிவகாமியோ “அண்ணி இங்க பாருங்க அண்ணனை நான் உங்க வூட்டுக்கு அனுப்பலாம்ன்னுதேன் இருந்தேன் ஆனா அதுக்குள்ள நீங்களே வந்து இப்படி சண்டை போடறீங்க, இருங்க நான் அண்ணே துணி பையை கொண்டாறேன் நீங்க அவரை கையை புடிச்சி கூட்டுட்டு போங்க “என்று உள்ளே சென்று அவரின் துணிமணிகள் அடங்கிய ஒரு பையை எடுத்து கொண்டுவந்து வெளியே வைக்க, திருநாவுக்கரசுவின் பார்வை ராதா மீதே இருந்தது.
ஒரே மகள் இழந்த பிறகு, தனக்கு மகள் இல்லையே என்ற வருத்தம் அவரை நொடிக்கொரு நாள் தினமும் வாட்டி வதைக்க தான் செய்தது.
ராதாவின் திருமண பேச்சு ஊரில் இருப்பவர்களின் வார்த்தையால் வந்தார். ராதாவை மணக்கோலத்தில் பார்த்தாவது தனது ஆசை மகளுக்கு எடுத்து வைத்திருந்த பொன்முடி பையை இளவரசியாய் நினைத்து கொடுத்துவிட்டு திரும்ப ராமேஸ்வரம் சென்று விடலாம் என திட்டமிட்டிருந்தார் , ஆனால் அவரின் திட்டம் இப்பொது அவரின் மனைவி கோமளத்தால் கைநழுவி சென்று விடுமோ என்று பயத்தில் பேச்சி இல்லாமல் அமைதியாக நின்றிருந்தார்.
எப்படியோ சிவகாமி அவரை வலுக்கட்டமாய் கோமளதோடு அனுப்பினார், போகும் போது கலங்கிய கண்களோடு ராதாவையே பார்த்துக்கொண்டு சென்றார்.
அவர்கள் சென்ற பிறகு ஊர் ஜனங்கள் ஒவ்வொருவிதமாக பேசினார்கள்.
“ஏண்டி, அந்த மனுஷனுக்கு தான் பொண்டாட்டி மேல கோவம், ஆனாலும் இப்படியா அடுத்தவா வூட்டுக்கு வந்து கும்மியடிக்கறது, இந்த புள்ள ராதா என்னமோ வாயி பேசுது, காது வரைக்கும் நீளுது அதுக்கு வாயி, பெரியவா கூட பார்க்காம கையை ஓங்குறா, என்ன தான் பொண்ணு வளர்ந்து வச்சிருக்கிறாளோ அந்த சிவகாமி,”என்று ஊரில் இருக்கும் பெண்கள் ஒருசிலர் இன்னும் சுட சொற்களால் சிவகாமியை குற்றம் சாட்டி பேச, அவரோ தேம்பியப்படியே புடவையில் தலைப்பால் வாயை பொத்தி கொண்டு உள்ளே சென்றார்.
கோமளத்தின் இந்த ஊர் கூட்டலில் கழித்தது இரண்டு மணிநேரம்.
இவையெல்லாம் ஊர்ந்து வேடிக்கை பார்த்தது நாகம்.
மகளின் திருமணம் நாளை விடியலில் நடைபெறும், என்பதற்காகவே முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டாலும், மனதின் உள்ளுக்குள்ளே கோமளத்தின் வார்த்தைகள் நெருப்பாய் கொதித்து கொண்டிருந்தது சிவகாமிக்கு.
இரவு நேரம் நெருங்கி விட்டது, ராதாவின் வாசலின் ஹாரன் சத்ததோடு வந்து நின்றது, இரண்டு மினிபஸ் மற்றும் ஒரு மகிழுந்து எல்லாமே வெற்றியின் ஏற்பாடு தான்.
சீதாவும் அழகான மெரூன் வண்ணத்தின் தாவணி பாவாடையில் ஜோலிக்க, அவளோடு அவளின் தந்தை பார்த்தசாரதி, தாய் காமாட்சி, அண்ணன் சேதுபதி அனைவரும் கிளம்பி ராதாவின் இல்லத்திற்கு வந்தார்கள்.
அனைவரும் கிளம்பி ஒவ்வொருத்தராய் வண்டியில் ஏற,ஊர் மக்களும் தங்கள் பங்குக்கு ஜன்னல்வழி இருக்கையை இடம் பிடிப்பதற்காக வாதம் நடத்தி கொண்டிருக்கையில் பேச்சி கிழவியின் ஊன்று கோலால் அடியை பரிசாக பெற்று கொண்டு அமைதியாக கிடைத்த இருக்கையில் வாயை முறுக்கி கொண்டு அமர, இதோ வண்டியும் கிளம்பியது.
அந்த இரண்டு மினிபஸ் பக்கத்திலே பயணித்தார்கள் ராதாவும் சீதாவும்… பழனி மலையை நோக்கி.
மதுரையை தாண்டி தேசிய நெஞ்சாலையில் புழுதி பறக்க கிளம்பியது ஒரு விபரீதம்..
ராமின் இல்லம்
“ஏண்டீ அபி, உனக்கு வேற துணியே இல்லையா, எப்போ பாரு இந்த கிழிச்ச கை இல்லாத டாப்ஸ் எடுத்து மாட்டிட்டு வர, எதோ புள்ளைங்களுக்கு லீவு விட்டுப்புட்டாங்களே, பழனிக்கு போயி அப்படியே கொடைக்கானலுக்கு இட்டுன்னு போயி ஒரு சுத்தி காட்டிட்டு வரும் ன்னு பார்த்தா, ஓவரா சீன்காட்டுறியா, இந்தா டி ஒழுங்கா அந்த பட்டு பாவாடை சட்டையை போட்டு கிட்டு வா சீக்கிரமா, நானே கிளம்பிட்டேன் வண்டியும் வந்துடுச்சி, உன் அண்ணக்காரன் வேற கூவிட்டு கிடக்குறான் போ டி, இன்னா மொறைப்பு போ நீ நான் சொன்ன பட்டு பாவாடை சட்டையை போட்டுக்கிட்டு வந்தா தான் உன்னையும் கூப்பிட்டு போவேன், இல்லைன்னா ஆச்சி கூடயே இங்கேயே கிட “என்று அவளின் அன்னை கோவமாக பேச, அபிநயாவோ “ஏம்மா இது இப்போ ட்ரெண்டிங்ல இருக்குற டிரஸ் ம்மா, பேஷன் ன்னு சொல்லுவாங்க “என்ற மகளை
“ஏய் ஒருக்கா சொன்ன விளங்காது உனக்கு, ஒழுங்கா போயி நான் சொன்ன துணியை மாத்திக்கிட்டு வா, பேஷன்னாம் பேஷன், சோறு கிண்டுற பாஷன் ன்னு தான் நினைச்சேன், இவ என்னமோ துணியை போயி பேஷன் ன்னு சொல்ற, எல்லாம் படிக்குற திமிரு, அடியேய் இன்னும் நீ போவலியா, சரி நீ இங்கே இரு நானும் அப்பா அண்ணா முருகேசு, அவன் அம்மா எல்லாரும் போயி ஒரு வாரம் கழித்து வறோம் “என்றதும் தான் தாமதம் அறையின் உள்ளே ஓடி சென்று தாய் சொன்ன பட்டு பாவாடையை வேண்டா வெறுப்பாக மாட்டி கொண்டு இரட்டை சடையில் மல்லிகை பூவை சுற்றி கொண்டு ஓடிவந்தாள் அபிநயா.
மானை போல் துள்ளி ஓடி வரும் மகளை பார்த்து சிரித்த அவள் தாய் தேவகி “இப்போ தான் டி அழகா அம்சமா இருக்க “என்று மகளுக்கு திருஷ்டி வைத்துவிட்டு தனது மாமியாரிடம் விடை பெற்று மினிவேனில் கிளம்பினார்கள் பழனி முருகன் கோவிலை நோக்கி.
சிறிது மணித்தியாலங்களில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் செல்ல வண்டியும் பூழுதி காற்றை கிழித்து சென்றது.
இதோ விடியலும் அழகாக விடிந்தது, நிலவு பெண்ணவள் தனது பணியை முடித்து கொண்டு ஓய்வுக்கு செல்ல, கதிரவனோ தனது பணியை செய்வதற்கு புவிக்கு வருவதும் சரியாக இருந்தது.
ராதாவின் திருமணமும் தடை இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுமா?
சீதாவிற்கு ராம் செய்ய போகும் அதிர்ச்சி செயல் என்ன?
என்ற கேள்விக்கு பதிலை காத்திருந்து காண்போம்….
error: Content is protected !!