Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா – 12 (2)

ராம் வெட்ஸ் சீதா 12{2}

 அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் வழக்கம் போல் கூட்டம் கூடி இருக்க, மண்டபத்தின் மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரத்தை அப்படியே வாயில் வராததை ஏதோ ஏதோ முணங்கி கொண்டு இருந்தான் மாப்பிள்ளை வெற்றி.



Advertisement

“பெண்ணை அழைத்து கொண்டு வாங்கோ “என்று ஐயர் கூறவும் சீதாவும் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

அங்கு மாறுவேடத்தில் நின்று இருந்த கோமளத்தின் முகத்தில் வில்லங்கமான ஒரு புன்னகை பார்க்க முடிந்தது.

Advertisement

Advertisement

அவரோ “ஹக்கும், அவ வரவே மாட்டா, இந்த கல்யாணம் நடக்காது, பாவம் இந்த மாப்பிள்ளை, ஆனா அந்த சிறுக்கி பண்ண வேலைக்கு இன்னக்கி என் மவனே மெண்டலா இருக்க காரணமே, இதோ நிக்கிறாளே நல்லா நகை நட்டு போட்டு மேனாமினிக்கிட்டு,

இந்த போசகெட்டவ  பெத்த அந்த சிறுக்கி தான் முழுகாரணம், நான் விட்டுடுவேணா அவளை நிம்மதியா வாழ, அதான் அவளை ஒரு வழி பண்ண தான் யாருக்கும் தெரியாம இப்படி ஒரு வேஷத்துல வர வேண்டியதா போச்சி, “என்று மனதின் ஓரத்தில் வஞ்சத்தை கொண்டு க்கும் க்கும் எச்சிலை முழுக்கி இருந்தவரை பக்கத்தில் இருந்த பெண்மணி ஒரு மார்க்கமாக பார்க்க, கோமளமோ ஈஈஈஈ ன்னு இளித்து வைத்தார்.

Advertisement

சீதாவும், ஹரிணியும் சென்று அறையில் பார்த்த போது காணவில்லை, பாத்ரூமில் பார்த்துவிட்டார்கள் அங்கும் காணவில்லை, சுற்றும் முற்றும் நடந்து பார்க்கும் போது ஹரிணியின் காலில் ஏதோ ஒன்று குத்த, அவளும் ஆவென அலற, என்னவென்று பார்த்தாள் சீதா.

கீழ சாவிக்கொத்து ஒன்று கிடக்க, அதை குனிந்து எடுக்கும் போது எதேர்சையாக மஞ்சத்தின் கீழ சீதாவின் பார்வை சென்றது.

“ஹரிணி, கீழ பெட்ல இருந்த போர்வை கடக்குது, அது எப்படி கட்டில்க்கு அடில போச்சு, சரி இரு அதை எடுத்து வச்சிட்டு வரேன், நீ கொஞ்சம் வெளிய போயி தேடு ராதா எங்க இருக்கா ன்னு “என்று கூறி கொண்டு கீழே குனிந்து அந்த போர்வையை இழுக்க அது கணமாக இருந்தது சீதாவிற்கு.

திரும்பவும் இழுக்க இழுக்க ராதாவின் முனங்கல் சத்தம் கேட்டது.

“ஹரிணி ஹரிணி…… “என்று கத்த பக்கத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஹரிணி “என்ன அக்கா என்னாச்சு ” என கேட்க,

“இங்க வா கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு, கட்டிலுக்கு அடில ராதா இருக்கா,  நீ கொஞ்சம் குள்ளமா இருக்க, அதனால நீ உள்ள குனிஞ்சி ராதா கையை புடிச்சி இழுத்து வெளிய கொண்டு வா சீக்கிரம், யாராவது வந்து பார்த்துட்டா, பொறவு பிரச்சனை ஆயிடும், “என்று கூற ஹரிணியும் தலையை ஆட்டி ‘சரிங்க அக்கா ‘என்றதும் இருவரும் ராதாவின் கையை பிடித்து இழுத்து அவளை வெளியேக்கொண்டு வந்தார்கள்.

வெளியே வந்தவளின் கன்னத்தில் மாறி மாறி தட்டிய சீதா “அடியேய் ராதா என்ன காரியம் பண்ணிருக்க நீயி, இந்தா டி ஹரிணி போயி மொதல்ல கதவை சாத்திட்டு வா, “என்றதும் ஹரிணி ஓடி சென்று அறையின் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்த, பிறகு சீதாவும் பாத்ரூமுக்கு சென்று இருக்கைகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து ராதாவின் முகத்தில் தெளிக்க, ராதாவுக்கோ விழிகள் திறக்க சிரமமாக இருக்க, எப்படியோ விழிகள் திறந்து பார்த்தாள் நாத்தனாரையும், தோழியையும்.

அவள் கண்களை திறந்து பார்த்த பிறகு தான் இருவருக்கும் மூச்சே வந்தது.

ஹரிணி சீக்கிரம் இவளை ரெடி பண்ணு, என்றதும் அவளின் சேலையை சரி செய்து, மீண்டும் ஒரு முறை முகத்தை நீரில் அலுப்பிய பிறகும் ராதாவுக்கு தூக்கம் வரத்தான் செய்தது.

தோழி கண்கள் மூடி திறந்ததை பார்த்து புரிந்து கொண்ட சீதா, அவளுக்கு முகஅலங்காரம் மற்றும் நகைகளை சரி செய்த சீதா அவளை நோக்கி ” ராதா ப்ச் ராதா இங்க பாரு டி, “என்றவளை நோக்கிய ராதா ” என்ன சீதா, எனக்கு என்னாச்சி, உடம்புலாம் நோவுது, செத்த நாழி படுத்து

தூங்கிட்டு வரேன் டி, ஆமா பொழுது விடிஞ்சிடுத்தா, மணி என்னாகுது “என்று விடாமல் கேள்விகளை அடுக்கினாள் ராதா..

“அடியேய் அப்படியே ஒன்னு போட்டேனா, தூக்கம் போயி ஓட ஆரம்பிச்சிடுவ,  ஏண்டி நான் கேட்க வேண்டிய கேள்விய என்னையே கேட்கறியே, ஆமா என்ன நடந்தது இங்க, என்னாச்சு உனக்கு  “என்று கேட்டு கொண்டு இருக்கும் போது கதவு தட்டுமோசை கேட்டது.

உடனே சீதா ராதாவிடம், ராதா நடந்தது எதுவும் வெளிய காட்டிக்காத சரியா சிரித்த முகமா வா, எதுவா இருந்தாலும் கல்யாணம் நடந்து முடிஞ்சதும் பேசி முடிவுக்கு வரலாம் “என்றதும் தோழியின் வார்த்தைக்கு சரியன்று சிரித்து கொண்டே தலையை ஆட்டினாள் ராதா.

ஹரிணி ஓடி சென்று கதவை திறக்க அங்கு கமலம் நின்றுகொண்டிருந்தார்.

“அடியேய் என்ன டி பண்றவ, பொண்ணை அழைச்சி எவ்ளோ நாழி ஆகுதும்ல, இங்கன என்னலே பண்ணிட்டு இருக்கறவ, வெரசா வாம்லே, ஆமா மருமவ எதுக்கு உம்முனு மூஞ்சை வச்சிட்டு இருக்கறவ, அங்க ஐயர் வேற கத்திட்டு கிடக்குறாரு, வெரசா வா “என்று கூறிக்கொண்டு ராதாவின் கையை பிடித்து கொண்டு செல்ல, அவரின் பின்னாலே சென்றார்கள் சீதாவும் ஹரிணியும்.

“என்னெங்கோ பொண்ணை அலங்காரம் பண்ணி அழைச்சிட்டு வரவா அம்புட்டு நாழி ஆகுது நோக்கு ” என்று ஐயரும் அவர் பாட்டுக்கு சீதாவையும் ராதாவும் வைய்ய, அவர்கள் ஈஈஈஈ ன்னு இளிக்க, வெற்றியும் ராதாவின் வருகையை நோக்கி எதிர்பார்த்து கொண்டிருந்தான் போலும்.

இதோ வந்து விட்டாள் வான்மகள் நிலவு மங்கையாக முகூர்த்ததுக்கே ஊறியதான இலைபச்சை நிறத்தில் ஆங்காங்கே தங்கஜரிகைகளால் ஆனா மயிலின் தோகைகள் கொண்ட பட்டு சேலை அழகாக இருந்தது  சீதாவிற்கு.

அவள் வந்ததை பார்த்த கோமளத்தின் விழிகள் அதிர்ச்சியும், கொலைவெறியும் கலந்து இருந்தது..

“இவ இவ இவ எப்படி, நான் இவளுக்கு கொடுத்த மயக்க மருந்து மூணு மணிநேரம் தாங்கிக்கும்ன்னு தானே அந்த சித்தர் சொன்னாரு, எப்படி இவ கட்டில்ல இருந்து வெளியே  வந்தா “என்ற பலகோணங்களில் யோசித்தவருக்கு  பதில் தான் கிடைக்க வில்லை.

இதோ வெற்றியோடு அமர்ந்து கொண்டு இருந்தவளின் முகத்தை கவனித்த சிவகாமி “என்னாச்சு இவளுக்கு உம்ம்ன்னு இருக்கா, நல்லாத்தானே சிரிச்சிட்டு இருந்தா, ” என்று நினைத்து கொண்டு பக்கத்தில் இருந்த பேச்சி கிழவிடம் கூற அவரோ “அடி, என் பேத்திக்கு நம்மளை விட்டுட்டு போறோம் ன்னு கவலை டி அதான் உம்முனு இருக்கா, நீ ஏதும் ஏடாக்கூடாம கற்பனை பண்ணி தொலைச்சிப்புடாத “என்றதும் வாயை மூடிகொண்டார் சிவகாமி.

இதோ கெட்டு மேளம் கெட்டி மேளம் என்று ஐயர் கூவ மங்கள வாத்தியார்கள் தங்களது பணியை செய்ய, வந்தவர்கள் அனைவரும் அட்சதை தூவி மணமகளை ஆசிர்வதிக்க,வெற்றியின் கரங்களால் ராதாவின் சங்கு கழுத்தில் மூணுமுடுச்சு போட்டு, தன் தாய்மாமன் பெற்ற தேவதையை தன்னில் முழுமையாக்கி கொண்டான் அந்த காளையவன்.

இவையெல்லாம் அங்கு இருந்த கூட்டதோடு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள் ராமும் முருகேசுவும், அவங்களில் குடும்பமும்.

திருமணம் நல்லப்படியாக முடிந்தது, ஆனால் சீதாவின் முகத்தில் மட்டும் சந்தோஷம் இல்லை, மாறாக அங்கு ஒருவர் மட்டும் அவளின் சந்தேகத்துக்கு ஆளாகி போனார்…

யார் அவர், கோமளத்தின் அடுத்த திட்டமென்ன?

மீண்டும் ராமும் சீதாவும் சந்திப்பாங்களா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!